2020

Yearly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 304(281)

    வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 304(281)

    05-06-2020 — வெள்ளி

    மனிதனுடைய சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது உண்டாகும் இன்பம் பேரின்பமாகும்.”

    . . . புளூடார்க்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர் புளூடார்க்?
    2) சிந்தனையும் செயலும் சேர்வது என்பது என்றால் என்ன பொருள்?
    3) சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது இன்பம் உண்டாகுமா? எப்படி?
    4) அந்த இன்பம் எப்படி பேரின்பமாகும்?
    5) மனித மனம் லாபம் பார்த்து (கணக்குப்பார்த்து – human mind is so calculative) செயல் புரியும் தன்மை உடையதால், இன்பத்தைவிட பேரின்பம் அதிகமாக இருக்கும்போது அறிஞர் புளூடார்க் கூறுகின்றபடி சிந்தனையையும் செயலையும் சேர்த்து செய்து பேரின்பம் அடையலாமே!
    6) இதே போன்று சிந்தனையுடன் செயலையும் இணைத்து ஏதாவது கவி அருளியுள்ளாரா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
    7)  இரு அறிஞர்களும் எவ்வாறு இணைகிறார்கள் இவ்வுண்மையின் கண்டுபிடிப்பில்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-301

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-301 

                                                04-06-2020 – வியாழன்

    1. மனிதப்பிறவியின்  முத்தொழில்கள் என்னென்ன?
    2. அவற்றில் பயனுள்ள சொற்களைப் பேசுதல் எதனைச் சார்ந்தது?
    3. திருக்குறளில் இந்தப் பொருள் பற்றி கூறும் அதிகாரம் என்ன?
    4. அந்த அதிகாரம் எந்த அதிகாரத்திற்குப் பின்னரும் எந்த அதிகாரத்திற்கு முன்னரும் வைக்கப்பட்டுள்ளது திருவள்ளுவப் பெருந்தகையால்? அதில் உள்ள முக்கியத்துவம் என்ன?
    5. அந்த அதிகாரம் அறிவுறுத்துகின்ற சுருக்கமான பொருள் என்ன?
    6. செயல் விளைவு தத்துவப்படி பயனற்ற சொற்களைப் பேசுவதால் பாவமா? புண்ணியமா?
    7. பயனற்ற சொற்களை பேசுவது விளைவறிந்த செயலா?
    8. அப்படி பேசுவதன் இழப்புகள் என்னென்ன?
    9. அறிந்தும் அப்படி பேச காரணம் என்ன?

     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க கவிகள்-9

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்9

    03-06-2020புதன்

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்த லரிது.

    —குறள்        

     பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் செந்நாப் புலவர் ?
    2. இக் குறள் எந்த பாலில், எந்த அதிகாரத்தில், எந்த அதிகாரத்திற்கு அடுத்ததாக  வருகின்றது? அதற்கு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?
    3. வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது என்றால் என்ன பொருள்?
    4. ‘கோடி தொகுத்தார்க்கும்’ என்றால் என்ன பொருள்?
    5. பொதுவாக உரையாசிரியர்கள் என்ன பதவுரை வழங்குகின்றனர் இக்குறளுக்கு?
    6. திருக்குறளுக்கு உட்பொருள் விளக்கம் அருளிய நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்குறளுக்கு கூறும் விளக்கம் என்ன?
    7. திருவள்ளுவரும், அவரது இருபதாம் நூற்றாண்டின் சீடருமான பாமர மக்களின் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களும் சேர்ந்து ஒருமித்துக் கூறும் செய்தி என்ன?

    வாழ்க வள்ளுவம்! வளர்கவள்ளுவம்!!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

    Loading