2020

Yearly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 292(183)

    வாழ்க மனித அறிவு!              வளர்க மனித அறிவு!!

    09-05-2020 — சனி

    சிந்திக்க அமுத மொழிகள்- 292(183)

    நான் யார்? என்ற கேள்வியைக் கேளுங்கள். பதிலை உங்களுக்குள்ளே தேடுங்கள். பிறவியைத் தவிர்க்கும் உபாயம் இதுவே”.

     …. ஸ்ரீ ரமணர்

    பயிற்சி:
    1) பிறவியைத் தவிர்ப்பது என்றால் என்ன? பிறவியை ஏன் தவிர்க்க வேண்டும்?

    2) ‘நான் யார்?’ என்பதற்கான விடை எவ்வாறு பிறவியைத் தவிர்க்கச் செய்யும்?

    3) இதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

    4)  ஸ்ரீ இரமண பகவானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களின்  துன்பங்கள் நீங்க ஆசி வழங்குமாறு வேண்டி நிற்கும்போது,  “நீ யார் என உணர்ந்துகொள் — Find out who you are.” என்பதே அவரது ஆசிர்வாதம்.  எனவே இதிலிருந்து நான் யார் என அறிந்துகொள்வதால் லாபமும்(பயன்) நான் யார் என அறிந்து கொள்ளாமையால் விளையும் நஷ்டமும்(துன்பமும்) என்ன என்று ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாத மூன்றாவது தேவைக்கு அடுத்த நான்காவது தேவையாக  உள்ளதல்லவா?! 

         அதற்கு கட்டாய ஒழுக்கவியல்கல்வி பள்ளியிலும், மாண்பியல் கல்வி கல்லூரியிலும் உருவாக வேண்டாமா அன்பர்களே?! வாழ்த்துவோம்.  கட்டாய  ஒழுக்கவியல் பாடம் பள்ளிகளில் ஏற்படவேண்டும்.

    கட்டாய  ஒழுக்கவியல் பாடம்(கல்வி) வாழ்க வளமுடன்! 

    வளர்க கட்டாய ஒழுக்கவியல் பாடம்(கல்வி)

    வாழ்க அறிவுச் செல்வம்!                        வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 291(175)

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    08-05-2020— வெள்ளி

    சிந்திக்க அமுத மொழிகள்- 291(175)

    பேரின்பம்

    இறைநிலையான மன அலை விரிந்த சுத்த வெளியுடன் அபூர்வமாக ஒன்றிணைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக் காணும்போது, அது இன்பமும், திருப்தியும், கலந்த உணர்வாக அமைவது பேரின்பம்”.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி:
    1) ஏன் அபூர்வமாக என்கிறார் மகரிஷி அவர்கள்?

    2) ‘தனது சொந்த ஆற்றல்’ என்பதன் பொருள் என்ன?

    3) ஒவ்வொரு இடத்திலும், பொருளிலும் என்பதன் பொருள் என்ன?

    4) ‘செயல் ஒழுங்காக’ என்பதன் பொருள் என்ன?

    5) ‘மெய்யுருவாக்கிக் காணும்போது’ என்பதற்குப் பொருள் என்ன?

    6) மகரிஷி அவர்கள் சுருங்கச் சொல்வதென்ன?

    7). பேரின்பத்திற்கான மேற்கண்ட வரையரையை மகரிஷி அவர்கள் தமது எந்த நூலில் அருளியுள்ளார்?

    வாழ்க அறிவுச் செல்வம்            வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க கவிகள்-8

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    பழக்கமும் விளக்கமும்

    சிந்திக்க கவிகள்-8

    07-05-2020-வியாழன்

         நற்பழக்கம் (22.12.1959)

    பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே

    பாருலகில் மனிதரெல்லாம் போராடு கின்றார்:

    பழக்கத்தை வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்.

    பாலர்களின் நற்பழக்கம்  பலன்விளைக்கும் எளிது.   ஞா.க.க.எண். 634

                                                             . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  

               

     பயிற்சி:

    1. என்ன கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?
    2. நற்பழக்கம் ஏற்படவேண்டும் என்று கருதியே அருளப்படுகின்ற அறநெறிநூல்கள்   இனி  அவசியம் இல்லை என்றவர் நற்பழக்கம் எவ்வாறு மனிதர்களிடம் ஏற்படும் என்கிறார்?
    3. பழக்கம் என்பது என்ன? வழக்கம் என்பது என்ன? 
    4. பழக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது?
    5. விளக்கம் என்றால் என்ன? அதிலும் கூர்ந்த விளக்கம் என்பது என்ன?
    6. நற்பழக்கத்திற்கு மனிதரெல்லாம் உலகில் ஏன் போராடுகின்றனர்?  ஏற்கனவே 01-05-2016 அன்று நமது இணையதள சத்சங்கத்தில் ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன் என்று சிந்தித்தை இப்போது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள  Click here
    7. ஏன் வளர்ந்த மக்களுக்கு பழக்கத்தை மாற்றுவது கடினமாக உள்ளது?

     

     

    படம் -1.2. எண்ணிலடங்கா பிறவிகளில் பெற்ற பழக்கப்பதிவுகள் இப்பிறவியில் மட்டுமே பெற்ற விளக்கப்பதிவை வெற்றிகொள்கின்றது. பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவைத் தன்பக்கம் சாய்த்து விடுகின்றது.

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம்

    1. இது தொடர்பாக மகரிஷி அவர்கள் அருளியுள்ள மனிதனுக்கான வரையறைகளில் ஒன்றாகவும் அமைந்த வைர மொழி என்ன?
    2. பாலர்களிடம் நற்பழக்கம் எளிதில் பயன் கிட்டும் என்கிறார்?  எப்படி?
    3. மார்கழி மாதத்தில் அவரது துணைவியார் மாக்கோலம் இடும் போது அதைச்சுற்றிலும் அருளுரை எழுதுவது வழக்கம். அவ்வாறே 22.12.1959 அன்று எழுதிய அருளுரையில் இடம் பெற்றது இப்பாடல்.  60 ஆண்டுகள் கடந்துவிட்டன.  அவரது புனித எண்ணம் எவ்வாறு நிறைவேறிவருகின்றது?

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

    Loading