“கடவுளை வணங்குகிறவன் நல்லவனாக நடந்து கொள்ள வேண்டும்” என்ற உங்களின் இறைக்கோட்பாட்டு இலக்கணமும், “கடவுளை நம்புகிறவன் நேர்மையும், ஒழுக்கமும் உடையவனாக இருக்க வேண்டும்” என்ற எமது இறைக்கோட்பாடும் ஒத்துப்போவது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் தன்னலமற்ற இறைப்பணி தொடர இறைநிலை நின்று வாழ்த்துகின்றேன். வாழ்க வளமுடன்.
அன்புள்ள ஐயா, வாழ்க வளமுடன் இந்த இணையதளம் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. படிக்க ஆரம்பித்தால் வேதாத்திரி யத்தில் ஒரு PhD செய்ய தேவையான அளவுக்கு கருத்து சுரங்கமே உள்ளது. தினமும் படித்து குறிப்புகள் எடுத்து வருகிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
1) எண்ணமே இயற்கையின் சிகரம் என்பதனைக் கண்டுபிடித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் எண்ணத்தைப் பற்றி என்ன கூற விரும்புகிறார்?
2) எண்ணியபடியே நடக்கும் என்கிறாரல்லவா? எப்போது?
3. எல்லோரும் எண்ணுகிறார்கள். எண்ணுகின்ற உரிமையும் உள்ளது. அப்படியிருக்கும்போது வாழ்க்கையில் எல்லோரும் விரும்பிய/எண்ணிய எல்லா எண்ணங்களும் நிறைவேறுகின்றதா? இல்லையே! ’Man proposes God disposes’ என்கின்ற நிலைதானே பெரும்பாலும் நடக்கின்றதல்லவா?
4) எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் இல்லாததுதான், எண்ணம் நிறைவேறாமைக்குக் காரணங்களா? எண்ணியது நடக்க சில நிபந்தனைகளையல்லவா கூறுகின்றார்! எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அவசியம் என்றல்லவா கூறுகின்றார்?
5) எண்ணத்தில் உறுதி என்றால் என்ன?
6. எண்ணத்தில் ஒழுங்கு என்றால் என்ன?
7. எண்ணிய எண்ணம் நிறைவேறவில்லையானால் அந்த எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் இல்லாமை காரணமாக இருக்குமோ?
7) திருவள்ளுவர் வினைத்திட்பம் எனும் அதிகாரத்தில் எண்ணத்தின் வலிமை பற்றி என்ன கூறுகின்றார்?
8) மகாகவி பாரதியார் எண்ணியது நிறைவேற எவ்வாறு இறைவியை வேண்டுகிறார்?
9) இம்மூவரும் ’எண்ணியது நடக்க எண்ணத்தில் உறுதி வேண்டும்’ என்கின்ற நிபந்தனையில் ஒருமித்த உறுதியாக இருக்கின்றனரல்லவா?
10) ஆனால் திருவள்ளுவரின் இருபதாம் நூற்றாண்டின் சீடராகிய வேதாத்திரி மகரிஷி அவர்கள் மற்றொரு நிபந்தனையாகிய ’ஒழுங்கு’ எண்ணத்தில் வேண்டும்என்கிறாரே! என்ன செய்வது?
a) ஒழுங்கு என்று கூறுவதன் பொருள் என்ன? எண்ணத்தில் ஒழுக்கம் வேண்டும் என்கின்றாரா? மனிதனின் நடத்தையில் ஒழுக்கம் வேண்டும் என்பது சரி. எண்ணத்தில் ஒழுக்கம் என்றால் என்ன பொருள்? செயலாகிய நடத்தையில் ஒழுக்கம் அவசியம் என்றால் செயலுக்கு வித்தாகிய எண்ணத்தில் ஒழுங்கு இருந்தால்தானே செயலில் ஒழுக்கம் மிளிரும் என்கின்றாரா?
b அப்படியானால் ஒழுங்கும் ஒழுக்கமும் ஒன்றா?
c) எண்ணம் என்பது இயற்கையின் சிகரம் என்று மகரிஷி அவர்கள் கூறுவதால் இயற்கையின் ஆதிநிலையில் ஆற்றலும், அறிவும்(ஒழுங்காற்றலும்) உள்ளதால் இயற்கையின் தன்மாற்றமான மனிதனின் எண்ணத்திலும் ஒழுங்கு இருக்க வேண்டும் என கூறுகின்றாரா?
d) எண்ணத்திற்கு பின் செயல்-செயலுக்குப் பின் விளைவு. ஆகவே நல் விளைவு ஏற்படவேண்டுமெனில் எண்ணத்தில் ஒழுங்கு இருக்க வேண்டும். அவ்வொழுங்கே ஒழுக்கத்துடன் கூடிய நல்விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் எண்ணம் இருந்தால்தான் அந்த எண்ணம் எண்ணியபடியே நிறைவேறும் என்கிறாரா? எண்ணிய எண்ணம் நிறைவேறி இன்புறுவது எப்போது என்று அறிய . . . Please click here
11) உறுதி என்பதன் முழுமையான பொருள் என்ன? இங்கே ஆதிநிலையின்(வெளியின்) திறம் பற்றிய ஏதாவது நியதிகள் மறைந்துள்ளனவா?
a) உறுதியினை எவ்வாறு பெறுவது? பயிற்சி செய்து பெறவேண்டுமா? உறுதியில் வெற்றி அடைந்தவர்களின் அனுபவம் உதவியாக இருக்குமா? உறுதி என்பது – will power- எனக்கொள்வதா? ஞா.க.கவி எண்- 10 ஐ நினைவிற்கு கொண்டு வந்து அல்லது இப்போது வாசித்து உறுதிக்கான பொருளை புரிந்துகொள்ளலாமல்லவா?
12) மகரிஷி அவர்கள் எண்ணிய எண்ணங்களில் இதுவரை நிறைவேறிய எண்ணங்கள் என்னென்ன?
13) இன்னும் நிறைவேற வேண்டிய மகரிஷி அவர்களின் எண்ணங்கள் என்னென்ன உள்ளன? அவ்வெண்ணங்கள் நிறைவேற வலு சேர்க்க நமது பங்கிற்காக காத்துக்கொண்டிருக்கும் அவர் எண்ணி நிறைவேறாமல் காத்துக்கொண்டிருக்கும் எண்ணங்கள் என்னென்ன? அவ்வெண்ணங்கள் நிறைவேற நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? என்ன செய்யப்போகிறோம்? வாழ்க வளமுடன்!
சிந்திப்போம் அன்பர்களே! வாழ்க வளமுடன்!
Let us all together stand in Maharishi’s Noble thoughts firmly, and be behind Our Revered Guru Vethathri Maharishi to fulfill His remaining Thoughts.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.