July 2024

Monthly Archives

  • குருபூர்ணிமா-அறிவிற்கு விருந்து-FFC – 295

    வாழ்க வையகம்!                                        வாழ்க வளமுடன்!!

    அறிவிற்கு விருந்து
    FFC – C295

    05.07.2020 – ஞாயிறு

    குருபூர்ணிமா

    vysa_maharishi_and_vethathiri_maharishi

    வாழ்கவளமுடன்

    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியவர்கள் அனைவரையும் குருபூர்ணிமா கொண்டாடும் இந்த தினத்தில் நினைவு கூர்வோம்.

    வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமா விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழா வியாசமுனிவரை நினைவுகூர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விழாவாகும். வியாச முனிவர் நான்கு வேதங்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். பதினெட்டு புராணங்களை வழங்கியுள்ளார். மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத்பாகவதம் அருளியுள்ளார். வியாசமுனிவரை நினைவு கூறும் இவ்வேளையில் ஆன்மீக சாதகர்கள் அவரவர்களுடைய நேரிடை குருவினையும் நினைவு கூர்தல் நலம் பயக்கும்.


    எனவே இத்தருணத்தில் நமது குருவாகிய அருட்தந்தை அவர்களை நினைவு கூர்வோம். அப்படியென்றால் மற்ற நாட்களில் நமது குருவை மறந்து விட்டிருக்கிறோம் என்று பொருளல்ல. என்றைக்கு அவருடைய உயிராற்றல் நம்முடன் கலப்புற்றதோ அன்றைய தினத்திலிருந்து அவருடன் நாம் இணைந்தேதான் உள்ளோம்.

    எப்படியெனில் அருட்தந்தை அவர்கள் நமக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்து, அதற்கான பொருளையும், நமக்கு அறிமுகப்படுத்தி விட்டார். மூச்சு விடுவதுபோல் சிந்திப்பதும் நமக்கு சகஜமாகிவிட்டதால் சிந்திக்கும் போதெல்லாம் நம்முடைய குருவின் அறிவாற்றலுடன் தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது, சிந்திப்பதற்கு அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த பொருளுடனும்(மெய்ப்பொருளுடனும்) தொடர்பு கொண்டு இணைந்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் மூச்சு விடுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது போல், சகஜ நிஷ்டை போல் எப்போதுமே சிந்தனையோடு இருப்பதால் எப்போதுமே குருவின் நினைவோடும் அதே நேரத்தில் அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த சிந்தனைக்குரிய பொருளுடனே(மெய்ப்பொருள்) இணைந்தேதான் வாழ்கிறோம்.

    குருவோடு தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது அவரையும்(எப்பொருளை), அவரது செயலையும்(எச்செயலை), அவரது குணத்தையும்(எக்குணத்தை) அவரது உயிரையும்(எவ்வுயிரை) எப்போதும் (அடிக்கடி) நினைந்து கொண்டேதான் இருக்கிறோம். விளைவு இயல்பூக்க நியதிப்படி நம்முடைய அறிவினிலும் உடலினும் மாற்றங்கள் ஏற்பட்டு நம்முடைய மனிதப் பண்பேற்றம் நடை பெற்றுக் கொண்டு வருவதை நாம் உணர்ந்து கொண்டு வருவதில் ஆனந்தம் அடைகிறோம்.பிறவிப்பயனாகிய லட்சியம் நிறை வேற அந்த லட்சிய நாளுக்கு ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
    அவரது செயலாலும் குணத்தாலும் அடைந்த உயர் புகழையும் நாம் மேலும் மேலும் நினைக்கிறோம். அறிந்து மகிழ்கிறோம். அவருடைய சூக்கும உடலுக்கு உளம் கனிந்த நன்றியினையும் அவரது அறிவாற்றலை சிரம் தாழ்த்தி வணங்கி போற்றுகிறோம். பாராட்டுகிறோம்.

    அருட்தந்தை அவர்கள் அருளுவதாவது:

    வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது
    தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளேயே பேராற்றல் புதையல் கண்டோர்
    தக்கவழி அருட்குருவின் தாள் பணிந்து தவம் பயின்று தனை உணர்தல்”

    என்றும்

    எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
    தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்”

    என்றும் அருள்கூர்ந்து தெரிவிக்கிறார் நமக்கு.

    அருள் துறையில் நுழைவதற்கே ஆர்வமில்லாமலும் வாய்ப்பில்லாமலும் இருக்கும் இச்சமுதாயத்தில், நாம் விரும்பி வாய்ப்புக் கிடைத்து, அருட்தந்தையின் சீடர்களாக வந்துள்ள நமக்கு, பயிற்சியின் வெற்றி தள்ளிப்போகும் போது நம்பிக்கை இழந்து பயிற்சியில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நம்பிக்கை ஊட்டும் வகையில் அருட்தந்தை அவர்கள் மேலும் அருளுவதாவது

    “பலஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்”என்கிறார்.

    இந்த தெய்வீக வரிகள் வாயிலாக நமக்கு உற்சாகத்தையும் உறுதியையும் அளிக்கின்றார். அதற்கு வழி கருமையத்தூய்மையாகும் என்கிறார். அதற்கு தவமும் அறமும் தேவை என்கிறார். மேலும் இறையுணர் பாதையிலே என்றும் விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி என்கிறார்.

    மேலும் “உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது”என்கின்ற அவரது கருணை மொழி ‘பயணம் முடியாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றதே, எப்போது வரும் அந்தநாள்’ என்கின்ற தீரா ஆன்மீக தாகத்திற்கு தெய்வீக நீரை அளிப்பது போல் உள்ளது.மேலும் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது.

    மேலும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. தரம் உயர்த்துவது என்பது:– விலங்கினத்திலிருந்து சடுதிமாற்றமாக வந்த ஆதிமனிதனின் கருத்தொடர்தான் இன்றுள்ள நாமும்.

          எனவே

        நம்மிடம் உள்ள விலங்கினப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்து,

      பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்தி மனதை புண்ணாக்கிக் கொள்ளாமல்  .

     எப்போதும் அயராவிழிப்பிலே(Awareness is God) இருந்து கொண்டு,

     மனிதப் பண்பான  அன்பிற்கும், கருணைக்கும் பாத்திரமாக திகழ்ந்து அறிவுத் தொண்டினை  செய்து வருதலே, கோடான கோடி மக்கள் வாழ்கின்ற இச்சமுதாயத்தில் நமக்கு மட்டும் குரு-சீடர் உறவு கிடைத்திருப்பதை நாள்தே்ாறும் நினைவு கொண்டு சுயதிருத்தம் பெற்று வருவதே நாம் நம் குருவிற்கும், அவர் வழியாக இறைக்கும் செலுத்தும் நன்றியாகும்.

    “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”என்று அருளிய தெய்வத்தாய் அவ்வையை மதித்து தந்தைகளுக்கெல்லாம் தந்தையாக விளங்கும் நம்முடைய அறிவுக் கண்களையெல்லாம், திறந்து அறிவொளி வீசச் செய்துள்ள அருட்தந்தை அவர்களின் சொற்களையெல்லாம் மந்திரங்களாகக் கொண்டு எப்போதும் நினைந்து மதித்து நடந்து இப்பிறவியிலேயே பிறவிப்பயனை எய்துவோம். நம்முடன் வாழும் சக மனிதர்களையும் உய்விக்க அறிவுத் தொண்டாற்றி மகிழ்ந்து குருவின் சூக்கும சரீரத்திற்கு நன்றியினை செலுத்திப் பூரிப்படைவோம். அவரது கனவான ஓர் உலக ஆட்சியும், உலக அமைதியும் விரைவில் நிஜமாக, உறுதியான  எண்ண அலைகளை அழுத்தமாக பரப்புவோம். இதுவல்லவோ பிறவிப்பயன். மனிதப்பிறவியின் பயனில் இரண்டு அங்கங்கள் உள்ளன.

         ஒன்று, மனிதப் பிறவி எடுத்த நோக்கத்தையும் நிறை வேற்றிக் கொள்ள வேண்டும்.

        மற்றொன்று மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறிய பிறகு,

      நோக்கம் நிறைவேறிய பிறவி சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அறிவுத்தொண்டாற்றுவது.

    இங்குதான் பிறவியின் நோக்கமும் நிறைவேறுகின்றது.

    நோக்கம் அறிந்த பிறவியும் சமுதாயத்திற்கும் பயனாகின்றது.

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    guru_paadham

    வாழ்க திருவேதாத்திரியம்!                              வளர்க திருவேதாத்திரியம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்-339

       வாழ்க மனித அறிவு!                               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்-339

    இணையதள பதிவேற்றம் -1010

    உணர்ச்சிவயத்தின் விளைவு

                                                                                                                                                 08-07-2024

                                                                                                                                        உ.ச.ஆ. 07-07-39

    உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும்போது, அறிவு வெளியே போய்விடும்                                             

                                                                                                                   . . . . .    ஹென்றி ஃபோர்ட்

    பயிற்சி:

     1.என்ன கூறுகிறார் ஹென்றி அவர்கள்? 

    2.இந்த அமுதமொழியை வாசிக்கும் போது நமக்கு என்ன தோன்றுகின்றது?

     3.உணர்ச்சி் என்பது என்ன? உணர்ச்சிவயம் என்பது என்ன?

    4. உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருத்தல் என்றால் என்ன?

    5. உணர்ச்சி அதுவாகவே அரியணையில் அமர்ந்ததா?

    6. யார் உணர்ச்சியை அரியணையில் அமர வைத்தது?

    7. எப்போது உணர்ச்சி் அரியணையில் அமரும்? அரியணையில் உணர்ச்சி  அமராதபோது துன்பம் தராதா?

    8. அறிவின் முதல் அறிவியாளர் உணர்ச்சியுடன் எவ்வாறு அறிவைத் தொடர்பு படுத்திக் கூறுகிறார்? Click here

    9. “அறிவு வெளியே போய்விடும்” என்று ஹென்றி கூறுவதனை அறிவை அறியும் பயிற்சியில் உள்ளவர்கள் எவ்வாறு பொருள் கொள்ள முடிகின்றது?

    10. அறிவே தெய்வமாக இருக்கும்போது, தெய்வமே அறிவாக இருக்கும்போது தெய்வத்தின் அருள் வேண்டும் என பக்தன் அருளை வேண்டுவது எவ்வாறு உள்ளது? அருளை வேண்டித்தான் பெறவேண்டுமா அல்லது அதற்குரிய செயலை செய்து அருளை பெறமுடியுமல்லவா? Click here

    10. வறுமை என்பது என்ன? வறுமையில் பிரிவுகள் உள்ளனவா? அவற்றில் எந்த வறுமை மிகுந்த துன்பத்தை தரும்? துயரத்தை தரும்? பழிக்கு ஆளாக்கிவிடும்?

    11. எப்போது உணர்ச்சி் அரியணையில் அமரும்? அரியணையில் உணர்ச்சி அமராதபோது துன்பம் தராதா?அறிவிற்கு வறுமை உள்ளதா? அதனை எவ்வாறு சரி செய்துகொள்வது?

    12. இரு அறிஞர்களும் ‘உணர்ச்சிவயம்’ என்கின்ற கண்டுபிடிப்பில் ஒன்றிணைந்திருப்பதை அறிய முடிகின்றதல்லவா?

    இன்னும் ஏதேனும் கேள்விகள் இருப்பின் அவற்றையும்  எழுப்பி விடைகாண வேதாத்திரி மகரிஷி அவர்களின் காப்பு இருந்துகொண்டே இருக்கும்.

     வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!

     

     

     

    Loading