admin

Author Archives

  • C243-எல்லாப் புகழும் இறைக்கே! –3/?

    வாழ்க மனித அறிவு                                                                 வளர்க மனித அறிவு

    lotus

    அ.வி. C243

    13-11-2016 – ஞாயிறு

    FFC-139-குரு ஸ்லோகம்  சென்ற விருந்தில், மகரிஷியின் சிந்தனாப்பள்ளியிலே மாணவா்களாக இருந்து வருபவர்களுக்கு கடமையையும் பொறுப்பையும் இறை அதிகமாக்கிவிட்டது; அப்படியானால் என்ன அர்த்தம் என வினா எழுப்பி இருந்தோம். அப்பொறுப்பும் கடமையும் என்னவென்று இன்றைய விருந்தில் அறிவோம். ஒவ்வொரு மனவளக்கலைஞரும் ஒரு இறைத்தூதுவர் என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே

    வேதாத்திரியத்தை தெளிவாக விளங்கிக் கொண்டு,

     விளங்கிய ஒவ்வொருவரும் விளங்கியதை நடைமுறைக்கு கொண்டு வந்து,

    “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்கின்ற இயற்கையின்/இறையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலே,

    சமுதாயத்திற்கு கொண்டு சோ்க்கின்ற கடமையை உணர்ந்து,

    உடலாலும், அறிவாலும், பொருளாலும், குறிப்பாக எண்ணத்தாலும் (ஏனெனில் எண்ணமே இயற்கையின் சிகரமாக இருப்பதாலும், அதனால் எண்ணம் பரிணாமத்தின் வாகனமாக இருப்பதாலும்) ஒவ்வொருவரையும் தொண்டாற்ற வைக்க இயற்கை/இறை திட்டமிட்டுள்ளதை அறிந்து அதனை நிறைவேற்ற வேண்டும்.

    “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பது எவ்வாறு இயற்கையின்/இறையின் விருப்பம் எவ்வாறு என ஐயம் எழலாம். ஆகவே ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது எவ்வாறு இயற்கையின் எண்ணம் என்கின்ற உண்மையைத் தெரிந்து கொண்டால் இயற்கையின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதில் மிகுந்த ஆர்வம் ஏற்படும். இயல்பாகவே மனிதன் தனக்கு தெரிந்த நல்லவற்றை பிறருக்குத் தெரிவித்து, அவர்களையும் மகிழ்வித்து, தானும் மகிழும் இயல்புடையவன். இவ்வாறாக வளர்ந்ததுதான் மொழியும், கலையும். எனினும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது எவ்வாறு இயற்கையின்/இறையின் விருப்பம் என்பதனையும் அறிந்து கொள்வோம். அவ்வாறு தெரிந்து கொண்டால்,  ‘பிறருக்குத் தெரிவிக்கும் கடமையிலும் பொறுப்பிலும்’(duties and responsibilities) தொடர் ஆர்வமும், அதிக அக்கறையும் ஏற்படும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது அறிஞர் திருமூலரின் விருப்பம்—எண்ணம்– வாழ்த்து. அறிஞர் என்பவர் யார்? அதாவது ஐயமின்றி அறிவை அறிந்தவர் அறிஞர். திருவள்ளுவரின் வாக்குப்படி, ஐயமின்றி அறிவை அறிந்தவரும் தெய்வமும் ஒருவரே.

    ஐயப் படாஅது அகத்து உணர்வானைத்

    தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.”                குறள் 702

    எனவே ஒர் அறிஞரின் விருப்ப—எண்ணம் என்பதும் இயற்கையின்/இறையின் எண்ணம் என்பதும் ஒன்றுதானே! குரு யார் எனக் கூறும் ஸ்லோகம் கூறுவதனையும் கவனத்தில் கொள்வோம்.

    குரு ஸ்லோகத்தில் முதல் இரண்டு வரிகள் குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே தேவன், குருவே மகேஸ்வரன் என கடவுளின் பல பெயர்களைச் சொல்லி, குரு யார் உணர்த்துகின்றது. மேலும் அழுத்தமாக சொல்வதற்கு, மூன்றாவது வரியில் ‘குரு சாட்சாத் பரப்ரம்மா’ என ஐயமின்றி உறுதிபடுத்தப்படுகின்றது. எனவே குரு நிச்சயமாக இறைவனே என்கின்றது இந்த ஸ்லோகம்.

    உலக மக்கள் அனைவரும் இன்புற்றிருப்பதனை இயற்கை/இறையினுடைய விருப்பமாக இருக்காதா? ‘எனவே யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என திருமூலர் விரும்பியதாக இருந்தாலும் அது இயற்கையினுடையத/இறையினுடையதுதானே! இயற்கை/இறை தானே திருமூலர் வழியாக சொல்லியிருக்கின்றது.

    1984 இல் மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள பேரின்ப களிப்பு என்கின்ற தலைப்பில் உள்ள பாடலில் பத்தாவது செய்யுளை நினைவு கூர்வோம். FFC-139- என்னுள் அவனை வைத்தேன்

    ‘இறைவனாகிப் பாடுகின்றேன்’ என்கின்ற வார்த்தைகள் அவர் இறைவனாகிவிட்டதை தெரியப்படுத்துவதற்காக அல்ல. சுத்த அத்வைதத்தால் வெளிவந்த வார்த்தைகள் அவை. அவர் இறைவனாக ஆவதற்கு முன் நடந்த நிகழ்வுகளைக் கவனிக்க வேண்டும்.—1) என்னுள் அவனை வைத்தேன்— 2) ஏற்றி வந்தேன் – 3) போற்றி வந்தேன்— 4) என்னையவனுள் இணைத்தான். சுத்த அத்வைதப்படி இந்த நான்கு நிகழ்வுகளையும் கடந்து வந்த மனிதர் தெய்வமானவர்தானே!

    மேலும் இவ்வாறாக சிந்திப்போம். எண்ணம் என்பது என்ன? எண்ணம் யாருடையது? ‘எண்ணமே இயற்கையின் சிகரம்’ என்பதால் அந்த அறிஞரின் விருப்ப—எண்ணம் என்பதும் இயற்கையின் எண்ணம்தான். இயற்கை, அறிஞரின் வாயிலாக எண்ணமாக தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிஞர் மட்டும் இயற்கை அன்னையின் குழந்தையல்ல. 740 கோடி குழந்தைகள் உள்ளன தற்போது இயற்கை அன்னைக்கு.

     எனவே

    FFC-138- தெளிவை அளிப்பதே இறையின் அருள்தானே

     ஒரு குழந்தைக்கு உணர்த்தப்பட்டது என்றால், மற்ற சகோதர-சகோதரிகளுக்கு தெரிவிக்க வேண்டியதுதானே அந்த மூத்தக்குழந்தையின் கடமையும் பொறுப்பும், நன்றி உணர்வும் ஆகின்றது?! அவ்வாறாக, மூத்தக்குழந்தையின் கடமையிலும், பொறுப்பிலும், நன்றி உணர்விலும் உருவானதுதானே நாம் நுகர்ந்து கொண்டிருக்கும் வேதாத்திரிய பாரிஜாத மலர். வேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண்(Vethathriam is spring-orifice of Wisdom).

    இயற்கையின்/இறையின் திட்டம் நிறைவேற, பொறுப்பையும் கடமையையும் உணர்ந்த பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்  அறிவோம்.

    இன்றைய விருந்தின் சுருக்கம்

    1) மனவளக்கலைஞர்கள் இறைத்தூதுவர்கள் என்றும், அதனால் ஏற்பட்டுள்ள கடமையும், பொறுப்பும்

    2) எவ்வாறு குருவும் கடவுளும் ஒருவரே,

    3) தெளிவை அளிப்பதே இறையின் அருள்,

    4) வேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                            வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 230

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 230

    12-11-2016 — சனி

    “நிலையாமையைப் பற்றிச் சிந்தித்தால் தற்பெருமை அழிந்துவிடும்”

    . . . புத்தர்

    பயிற்சி—
    1) இக்கூற்றிலிருந்து முதலில் அறிய வேண்டியது தற்பெருமை கொள்ளக் கூடாது என்பது. ஏன் தற்பெருமை கொள்ளக் கூடாது?
    2) தற்பெருமை கொள்வது பழக்கமாகிவிட்டதால் என்ன செய்வது?
    3) தற்பெருமை கொள்வதால் என்ன தீமைகள் வரும்?
    4) தற்பெருமைக்கும் நிலையாமையை அறிவதற்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரீதியானதா?
    5) நிலையாமையை அறிவாதால் தற்பெருமை எவ்வாறு நீங்கும்? அதிலுள்ள அறிவியல் என்ன?
    6) இவ்வுண்மையைப்பற்றி மகரிஷி அவர்கள் கூறியுள்ளது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 229

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 229

    11-11-2016 — வெள்ளி

    பகுத்தறிவால் திட்டமிட்டுவதைக் காட்டிலும் தெய்வீகப் பார்வையால் திட்டங்களை வகுத்துக்கொள்வது சிறப்பாகும். ஏனென்றால் மனித முயற்சியைக் காட்டிலும் தெய்வீக சக்தி நம்மை விரைவில் கரை சேர்க்க வல்லாதாகும்.

    . . . அரவிந்தர்

    பயிற்சி—
    1) ‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று திருவள்ளுவர் கூறுவதற்கும் அரவிந்தர் கூறுவதற்கும் ஏதேனும் முரண்பாடுகள் உள்ளதுபோல் தெரிகின்றதா?
    2) அப்படியானால் இக்கூற்றிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading