admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 130

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    28-11-2015—சனி

    உழைப்பு மூவகைத் தீமைகளைப் போக்குகிறது. அவையாவன, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை.

    …… அனுபவமொழி

    பயிற்சி—
    1) ‘பொழுது போகாமை’ அவ்வளவு கொடுமையானதா? எப்படி? நன்மை இழக்கப்படுகின்றதா?
    2) பொழுது போகாமைக்கும் கெட்டபழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
    3) இதனாலன்றோ ‘An idle mind is devil’s paradise’ என்கின்றனர்?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 129

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    27-11-2015—வெள்ளி

    “நான் யார்?” என்ற கேள்விக்கு விடை கண்டு அந்த விடையின் வெளிச்சத்திலே தூய்மை பெற்று
    பிறருக்கு வழி காட்டும் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொண்டு வாழ்தலே யோக வாழ்க்கையாகும்.”

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) யோக வாழ்க்கை என்பது இதுதானா?
    2) ‘நான் யார்?’ என்கின்ற கேள்விக்கு விடைகிடைப்பது வெளிச்சம் என்றால் அதற்கு முன்னர் அறிவு இருட்டில் இருப்பதாக அல்லவா அா்த்தமாகின்றது?!

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-128

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

    26-11-2015 – வியாழன்

    இறை எவ்வாறாக இருந்தால், ‘தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான்’  என்பது சாத்தியமாகின்றது? சற்று விளக்கவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                வளர்க அறிவுச் செல்வம்

    Loading