admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 128

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     21-11-2015—சனி

    எவனொருவன் ஒரு ஆன்மாவை அறிகிறானோ அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான்.

    ….. மகாவீரர்

    பயிற்சி—
    1) எல்லாவற்றையும் என்பது என்ன?  திருவேதாத்திரியம் அதற்கு உதவுகின்றது அல்லவா?
    2) இது எப்படி சாத்தியமாகின்றது?
    3) இதனை மகாவீரர் எவ்வாறு கண்டுபிடித்திருப்பார்?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 127

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    20-11-2015—வெள்ளி

     

    இறந்தவர்களை கடல் தன்னுள் வைத்துக் கொள்வதில்லை. கரையோரம் ஒதுக்கி விடும். அதுபோல ஒழுக்கமற்றவர்களுடனான நட்பை நீங்கள் ஒதுக்கிவிடுங்கள்.

    ….. புத்தர்

    பயிற்சி—
    1) இந்த உண்மையை, தக்க உவமானம், உவமேயத்தைக் கொண்டு கூறியுள்ளதை ரசிக்கவும். மகிழவும். வாழ்வியல் உண்மைகளை நீங்கள் புரிந்து கொண்டு உங்களுக்கே எடுத்துக்கூறவும், ஏன், மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி விளங்க வைக்க எளிமையாக இருக்கும்.

    2) ‘பெரியாரைத் துணைக் கொள்’, ‘அறிவினரைச் சேர்ந்திருத்தல் இனிது’ என்பனவற்றை நினைவில் கொண்டு வந்து மகிழவும்.

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-126

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

     

    19-11-2015 – வியாழன்

    அருள்நெறியின் உறுப்புகள் எவை?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading