admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 94

    வாழ்க மனித அறிவு                                                  வளர்க மனித அறிவு

    25-07-2015–சனி

    உன் ஸத்குருநாதன்  சொன்ன  மந்திரத்தை நீ ஓயாது இடைவிடாமல் சொல்லிக் கொண்டிருப்பதில் உனக்கு என்ன கஷ்டம்? குருநாதன் சொன்னபடி செய். சுகப்படுவாய். குருவாகிய பரிபாலனமே  தவத்துள் மிகச் சிறந்த தவமாகும். நம்பு.      …..  ஸ்ரீசாந்தானந்தர்

     

    பயிற்சி—
    1) திருவேதாத்திரியம் அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனவளக்கலைஞர்களுக்கு அன்றாடம் ஓதுவதுவதற்கு சொன்ன மந்திரம்(சங்கல்பம்) என்ன?
    2) சுகப்படுவது என்றால் எவ்விதத்தில்?
    3) “தவத்துள் சிறந்த தவம்” என்கிறாரே. அது என்ன?
    4) ‘சுகப்படுவாய்” என்பது போன்று மகரிஷி அவர்கள், பாடலின் வாயிலாக கூறுவது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 93

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    24-07-2015–வெள்ளி

     

    மனவிரிவு, விளக்கம், விழிப்பு நிலை, இவைகொண்டு கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப்போதல்,  பெருந்தன்மை, ஆக்கச்செயல்களில் ஈடுபாடு ஆகியவைகள் எந்த அளவிற்கு வளர்த்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு மகிழ்ச்சியும், நிறைவும், அமைதியும் பெறலாம்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) மனவிரிவு என்றால் என்ன?
    2) விளக்கம் என்றால் என்ன? எதில் விளக்கம் தேவை?
    3) விழிப்புநிலை என்பது என்ன?
    4) இந்த மூன்றும் நம் இணைய தள சத்சங்கத்தில் கிடைக்கின்றதா?
    5) கிரகித்தல் என்றால் என்ன?
    6) நிறைவு என்பது என்ன?
    7) மகரிஷி அவர்கள் கூறும் எட்டு அம்சங்களின் மூலம் நிறைவு எவ்வாறு கிடைக்கும்? இது அறிவியலைச் சார்ந்ததா?
    8) சிறு கட்டுரை எழுதிப் பாருங்களேன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                 வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-92

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

     

    23-07-2015 – வியாழன்

     

    பெற்றோர்கள், நலம் பயக்கும்  மக்களைப் பெற வேண்டினால் என்ன செய்ய வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்?  இதனைக் கூறும் மகரிஷி அவர்களின் கவியினை நினைவு கூறவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                            வளர்க அறிவுச் செல்வம்

    Loading