சிந்திக்க வினாக்கள்- 04
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
15-11-2014
1) கடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படாது இருக்கிறார்?
2) ஆட்சியின்றி எவ்வாறு இறை ஆளுகின்றது?
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
15-11-2014
1) கடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படாது இருக்கிறார்?
2) ஆட்சியின்றி எவ்வாறு இறை ஆளுகின்றது?
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
தவறானஅடையாளமும், அதன் துன்பங்களும். (நேற்றையத் தொடர்ச்சி)2/2
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
FFC – 19
15-11-2014.
(Mistaken Identiy and its sufferings)
எனவே இறை உணர் ஆன்மீகப் பயிற்சியில் தன்னை அறிவுடன் (ஆன்மா) சரியாக அடையாளம் கொள்ள வேண்டும். ”பிரக்ஞானம் பிரம்மம்” என்று அறிவே தெய்வம் என்கின்றது வேதம்.
அகநோக்குப் பயிற்சித் தோ்வின் முடிவு (end result of inner travel — meditation) என்னவாக இருக்க வேண்டும்? ஒன்றேயான இறை எங்கும், எல்லாமாகவும், தானுமாகவும், அறிவாகவும் உள்ளது என தானே அறிவதாகும்(understanding practically). எனவே தேர்விற்கு முன்பே வினாத்தாள் வெளியாகிவிட்டதுபோல் அக நோக்குப் பயிற்சித் தேர்வின் முடிவில் என்ன அறியவிருக்கிறோம் என்பதனை முன் கூட்டியே அறிந்த கருத்தியல் செய்தி (theoretical understanding – no it is only theoretical information) தான் ”அறிவே (ஆன்மா) நான்” என்பது.
அக நோக்குப் பயிற்சியினை மேற்கொண்டு வரும்போது முடிவில்தான் இறையே எவ்வாறு எல்லாமாகவும், தானுமாகவும் இருக்கின்றது என அறிந்து மகிழ்கின்ற பழைய நிலை இப்போது மாறிவிட்டது, இப்போது பயிற்சியின் முடிவில் அறியவிருப்பது முன்னரேத் தெளிவாகி பயிற்சியின் முடிவில் அதனை உறுதி செய்கின்ற காலமாகிவிட்டது. இந்த ஆன்மீக முன்னேற்றத்திற்கும், ஆன்மீக அறிவு வளர்ந்து வருவதற்கும் காரணம் வேதாத்திரியத்ததின் தோற்றமே.
அறிவேதான் (ஆன்மா) நான் என சரியென நினைத்துக் கொண்டு வரும்போது, அக நோக்குப் பயிற்சியில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும். தான் உணரவிருப்பதை எளிதாக உறுதி செய்ய முடியும்.
மனிதனின் சரியான அடையாளம் அவனது அறிவு அல்லது ஆன்மா அல்லது தெய்வத்தின் ஒரு சிறு பொறி. . இந்த சரியான அடையாளம்தான்
உலக சகோதரத்துவம் என்பது வெறும் வார்த்தையல்ல, உண்மையென உறுதி படுத்துகின்றது.
வேற்றுமையில் ஒற்றுமை (unity in Diversity)என்பதும் சரி என்கின்ற முடிவுக்கு வரவைக்கின்றது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எவ்வாறு சரி என நிரூபிக்கின்றது.
போரில்லா நல்லுலகம் விரைவில் மலர வேண்டும் என அவா கொள்ள முடிகின்றது.
இன்று உலகமக்கள் தொகை எழுநூற்று இருபது கோடி. இந்த எழுநூற்று இருபது கோடி மக்களுக்கும் அடையாளம் ஒன்றுதான். அதுதான் தெய்வத்தின் சிறு பொறி ஒவ்வொரு மனிதனும். தெய்வம் ஒன்று என்கின்ற போது அந்த தெய்வத்தின் பொறிகளான ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே அடையாளம்தான். பார்த்தசாரதி சதகத்தில் வரும்
”உற்றுப் பார்த்தால் எல்லா உயிர்களும் ஒன்றாமே” என்கின்ற வரி கூறுவது எவ்வளவு உண்மை எனத்தெரிகின்றது. மனிதனின் உயிர் விலங்கினத்திலிருந்து வந்துள்ளதால் எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்பது விஞ்ஞான ரீதியாகவும் சரி என அறிந்தாலும் அதன் பயனை இதுவரை அனுபவிக்க முடியாமல் உள்ளது.
அதுபோல் மகாகவி பாரதியார் கூறுவதனைக் கவனிப்போம்.
”காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்” ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்கிறார் மகாகவி பாரதியார்.
பொதுவாக மனிதனின் அடையாளம் அவனுடைய பெற்றோர்களின் மகன் என்றாலும், அது இந்த உடலைப் பொருத்த வரை சரியாக இருந்தாலும், அதுவே அவனது உண்மையான அடையாளம் அல்ல. அவனது சரியான உண்மையான அடையாளம் அவன் தெய்வமகன் என்பது தான் சரி. பரம பிதாவின் குழந்தைகளே இந்த உலக மக்கள் அனைவரும்.
மக்கள் அனைவரும் அறிவு நிலையைில் ஒன்று. வினைப்பதிவில்தான் வேறு வேறாக இருக்கின்றனர். இந்த மெய்விளக்கத்திற்கான(உண்மையான விளக்கம் என்று பொருள் கொண்டாலும் சரி) வேதாத்திரி மதரிஷி அவர்களின் பாடலோடு இன்றைய விருந்தை நிறைவு செய்கிறோம். அதுவே அவ்வையார் கூறும் நான்கு இனியவைகளில் கடைசியும் அளவில் அதிகமானதுமான “அறிவினரை கனவிலும் நனவிலும் காண்பது இனிது“ என்பதாகும்.
மெய்விளக்கம்
நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே
நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்.
ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில் எல்லை
உண்டாக்கி வரையறுத்து வேறுபடுகி்ன்றோம்;
ஏனெங்கே, எப்போது, எவ்வளவு, எவ்வாறு
என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல
வானறிவோம் உயிர்விளங்கும் வரைகடந்து நிற்கும்
வழிதெரியும் வளம்பெறுவோம் வாழ்வு நிறைவாகும் ……வேதாத்திரி மகரிஷி அவர்கள்
இப்பாடலுக்கான விளக்கத்தை விரிவாக மற்றொரு விருந்தாக வைத்துக் கொள்வோம்.
தன்னை இறையுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா?அல்லது அழிகின்ற உடலுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? எது சிறப்பு? நீங்களே சிந்தித்துப் பாருங்களேன்!
வாழ்க உலக அமைதி. வருக உலக அமைதி விரைவில். வாழ்க வையகம். ,
வாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம். .
*****
வாழ்கமனித அறிவு வளர்கமனிதஅறிவு
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
14-11-2014
1) தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது.
. . . . .வேதாத்திரி மகரிஷி அவர்கள்
2) முழுச் சரணாகதியில் தான் இறையருள் கிடைக்கின்றது.
….. இரமண மகரிஷி அவர்கள்.
3) தீய பழக்கங்களை ஆரம்பத்திலேயே போக்கு. இல்லாவிடில் அது இறுதியில் நீக்க
முடியாத தேவையாகிவிடும்.
. . . . . செயின்ட் அகஸ்டீன்
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.