admin

Author Archives

  • சிந்திக்க வினாக்கள்-304

    வாழ்க மனித அறிவு!                                                                                      வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-304

    15-06-2020 – திங்கள்

    மனதைப் பற்றி தெளிவான விளக்கம் இல்லாத நிலையில், மனதை அறிந்தால் உயிரை அறியலாம், உயிரை அறிந்தால் இறையை அறியலாம் என்று கூறும்,   மனதை  அறிந்த மாமேதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனதை  எவ்வாறு விளக்குகிறார்? 

    அவர் எவ்வாறு விளக்குகிறார் என்பதனை நீங்களே நேரிடையாகக் கண்டு இன்புறுவீர்களாக!   

    வாழ்க வளமுடன்!

                                                                                           —————————-

     


        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!                                        வளர்க அறிவுச் செல்வம்!!


     

    Loading

  • சிந்திக்க கவிகள்-10

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்10

    14-06-2020-ஞாயிறு

    “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

    உண்மை யறிவே மிகும்”.

    —குறள்        

     பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் பொய்யாமொழி தெய்வப்புலவர்?
    2. குறள் எந்த பாலில் எந்த அதிகாரத்தில் எந்த அதிகாரத்திற்கு பின் வருகின்றது? அதற்கான காரணங்கள் ஏதேனும் இருக்குமா?
    3.  ‘நுண்ணிய நூல்பல கற்பினும்’ என்றால் என்ன?
    4.  ‘மற்றும் தன் உண்மை அறிவே மிகும்’ என்பதில்   ’ மிகும்’  என்கின்ற சொல்லால் அறிந்துகொள்ள வேண்டியது என்ன ?
    5. பொதுவாக உரையாசிரியர்கள் கூறும் பதவுரை என்னென்ன?
    6. திருவள்ளுரை மானசீக குருவாகக் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் சீடரான பெருமைக்குரிய நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்குறள் பற்றி கூறும் விளக்கம் என்ன?
    7. எந்த நூலில் மகரிஷி அவர்கள் இக்குறளுக்கு விளக்கமளிக்கிறார்?
    8. அதில் இந்த அதிகாரத்தில் மேலும் ஒரு குறளுக்கு விளக்கம் அளித்துள்ளதை நாம் மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்.
    9. திருவள்ளுவரும் அவரது இருபதாம் நூற்றாண்டு சீடரும் சேர்ந்து ஒருமித்துக் கூறும் செய்தி என்ன?
    10.  இறையுணர்வு கருத்தியல் பாடத்தில் மிகுந்த தெளிவையும்(Theoretical understanding) செய்முறை பாடத்தில்(Practical realisation through Meditation-துரியாதீத தவத்தில்) தேர்ச்சியையும் வலியுறுத்துகிறார்களோ  இரு அறிஞர்களும்!?

    வாழ்க வள்ளுவம்! வளர்கவள்ளுவம்!!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 309

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 309

    13.06.2020— சனி

    உழைப்பு மூவகைத் தீமைகளைப் போக்குகிறது. அவையாவன, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை.”

    …… அனுபவமொழி

    பயிற்சி:

    1) ‘பொழுது போகாமை’ அவ்வளவு கொடுமையானதா? எப்படி? நன்மை இழக்கப்படுகின்றதா?

    2) பொழுது போகாமைக்கும் கெட்டபழக்கத்திற்கும் என்ன தொடர்பு?

    3) இதனாலன்றோ ‘An idle mind is devil’s paradise’ என்கின்றனர்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading