admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 308

    வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 308

    12.06.2020— வெள்ளி

    வாழ்வின் லட்சியம் இன்பம் என எண்ணியே நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஞானம் பெறுவது தான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.”

    — சுவாமி விவேகானந்தர்

    பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
    2. வாழ்வு என்பது என்ன? அதில் லட்சியம் என்பது என்ன?
    3. இன்பம் என்பது என்ன?
    4. சுவாமி விவேகானந்தர் கூறுவது உண்மை தானே? அவரின் ஆதங்கம் வேதாத்திரிய தோற்றத்திற்குப் பின் நிறைவேறி வருகின்றதா? எப்படி?
    5. ஞானம் என்றால் என்ன?
    6. அந்த விளக்கப்படி ஞானம் பெறுவது தான் வாழ்வின் லட்சியமா?
    7. மனிதன் இறை உணர்வு பெறுவது  வாழ்வின் நோக்கம் எனப்படுகின்றது. அப்படியானால் இறை உணர்வு பெறுவதும் ஞானம் அடைவதும் எவ்வாறு ஒன்றாகின்றன?
    8. ஞானம் பெறுவதிலும், இறை உணர்வு பெறுவதிலும்  உள்ள அறிவியல் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-303

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-303 

                                                11-06-2020 – வியாழன்

    அன்பர்களே!

    வாழ்க வளமுடன்.

    சென்ற திங்கட்கிழமை 08.06.2020 அன்று சிந்திக்க வினாக்கள் பயிற்சியில் கலந்து கொண்டு கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வேதாத்திரி மகரிஷி அவர்களின் வைரமொழிகளை வாசித்து ஆனந்தம் அடைந்து இருப்பீர்கள். இன்றைய சத்சங்கத்தில் அவ்வினாக்களுக்கு விடைகள் தரப்பட்டுள்ளன. விடைகளை சரிபார்த்து மீண்டும் முழுமையாக மகரிஷி அவர்களின் வைர மொழிகளை வாசித்து, உள்வாங்கி, மீண்டும் ஆனந்தம் அடையலாம். வாழ்க வளமுடன்!

    கோடிட்ட  இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து இன்புறலாமே! 

    அறிவொளியைப் பெருக்கிக்கொள்ளலாமே! வாழ்க வளமுடன்!

    1. கதிரவன் காலத்தே காணாத ___________  , புதிர்போன்ற அறிவுநிலை ___________   இயங்குங்கால் தோன்றா!

    2. எல்லையற்றதை ___________  பார்ப்பது ___________ குறைபாடு.

    3. மனிதனுடைய ___________ பிரபஞ்சத்திற்கு ___________உள்ள ___________.

    விடை:

    1. கதிரவன் காலத்தே காணாத விண்மீன்போல் , புதிர்போன்ற அறிவுநிலை  புலன் இயங்குங்கால் தோன்றா!

    2. எல்லையற்றதை எல்லையுடையதாய் பார்ப்பது அறிவின் குறைபாடு.

    3. மனிதனுடைய அறிவானது பிரபஞ்சத்திற்கு ஆதிப்பொருளாக  உள்ள தெய்வநிலை.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள்

     


     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 307(58)

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 307(58)

    10.06.2020— புதன்

    உண்மையில் கடவுளும், குருவும் வேறல்லர். ஓர் உருவானவரே.

                                                                                                                                 …ஸ்ரீ ரமணா்

    பயிற்சி—

    1) எப்படி?

    2) இந்த அமுத மொழி அறிவுறுத்துவது என்ன?

    3) இதே பொருளை திருவள்ளுவர்  எந்த குறட்பாவில் கூறுகிறார்?

    4) எப்போது, குருவின் சேர்க்கை பிறவிப் பயனை நல்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading