admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 299(244)


    சிந்திக்க அமுத மொழிகள்- 299(244)

    27-05-2020  — புதன்

    இறைவனை நேசித்தால் விவேகமும், வைராக்கியமும் தானாக வரும்”.  

                                                               . . .  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

     பயிற்சி—

    1. நேசிப்பது என்பது என்ன?
    2. இறைவனை நேசிப்பது என்பது என்ன?
    3. இறைவனை எவ்வாறு நேசிப்பது?
    4. விவேகம் என்பது என்ன?  அதன் அவசியம் என்ன?
    5. வைராக்கியம் என்பது என்ன? எதற்கு வைராக்கியம் அவசியமாகின்றது?
    6. இறைவன் உருவமாக இருந்தால்தான் நேசிக்கவும், ரசிக்கவும் முடியுமா?
    7. இறைவன் அரூபி எனத்தெரிந்து விட்டதால் அவனை நேசிக்க முடியாதா?  ரசிக்க முடியாதா?
    8. இறைவனை நேசித்தலுக்கும், விவேகம் மற்றும் வைராக்கியம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன?
    9. மேற்கொண்டு சிந்திக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-298

    வாழ்க மனித அறிவு!                                                            வளர்க மனித அறிவு!!

     

    சிந்திக்க வினாக்கள்-298

                                                                                          25-05-2020 – திங்கள்.

     

    1. இந்திரியங்கள் என்றால் என்ன?
    2. ‘இந்திரியங்கள்’ என்பதோடு  ‘ஞானம்’ என்பதனையும் சேர்த்து ஏன் ஞானேந்திரியங்கள் எனஅழைக்கப்படுகின்றது?
    3. அப்படி அழைக்கப்படுவதன் நோக்கம் என்ன?
    4. இந்திரியங்கள் ஞானத்திற்கு வழிகோலுகின்றதா?
    5. இறைஉணர் ஆன்ம சாதகர்கள் அறிய வேண்டியது ஏதேனும் உள்ளதா இதில்? வாழ்க வளமுடன்!
    6. உள்ளது எனில் என்ன அது?

     

        அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                             வளர்க அறிவுச் செல்வம்!!          

     

                

     

        

     

       

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 298(241)

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 298(241)

     

    24-05-2020 — ஞாயிறு

    தோணியில் ஏறிக்கொள்; வாழ்வாகிய கடல் ஆழமானது; கடக்கக் கஷ்டமானது; சான்றோருடன்  உறைவதே அதனின்று கரையேற்றும் தோணியாகும்.”

    . . . குருநானக்

    பயிற்சி—
    1) அவ்வையார் இதேபோன்று கூறும் வரிகள் என்ன?
    2) திருவள்ளுவர் எந்தக் குறளில் இதுபோன்று கூறுகிறார்?
    3) இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
    4) இதுபோன்று அறவோர்களின் அறிவுரை இருந்தும் அதனை அலட்சியம் செய்த சமுதாயத்திற்கு இருபதாம் நூற்றாண்டிற்கு பிறகாவது செயல்படுத்தக் கூடிய அறிவுரைகள் கிடைத்துள்ளது அல்லவா? மகரிஷி அவர்களின் அறிவுநிலைக்கு உயர்ந்து நெஞ்சார வேதாத்திரியத்தைப் போற்றி வாழ்த்துவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்


    Loading