இன்றைய விருந்து

  • FFC-211-அருளாளர்கள் உலகம் 4/?

    வாழ்க மனித அறிவு                                                           வளர்க மனித அறிவு

    அருளாளர்கள் உலகம் 4/?

    அறிவிற்கு விருந்து — 211

    27.07.2016—புதன்

    Bhogar_appears

        கடந்த மூன்று அறிவிற்கு விருந்துகளில், அருளாளர் உலகம் பற்றி சிந்தித்து வருகிறோம். இதன் நோக்கம் என்ன? அருளாளர்கள் எவ்வாறு தங்களுக்கு பின்னர் வரும் ஆன்மசாதகர்களுக்கு துணை நிற்கிறார்கள்/உதவிபுரிந்து வருகிறார்கள் என்று  ‘அருளார் உலகம்’ தலைப்பில் ஆராய்ந்து வருகிறோம்.  மேலும் மகரிஷி அவர்கள் அறிவுறுத்தியபடி அறிவின் இருப்பிடம் அறிந்து, பேரறிவில் அறிவாய் நிலைத்து, அதன் பயனாக/வெளிப்பாடாக அறத்தை வகுத்து, அவ்வாறே வாழ்ந்து காட்டியஅனைத்து அருளாளர்களையும் நினைவுகூர்வது என்பது என்ன என்றும், மகரிஷி அவர்கள்,  அந்த அருளாளர்களை எந்தப் பொருளில்/நோக்கத்தில் ‘நினைவுகூர்வோம்’  என்றாரோ அந்த பொருளை/நோக்கத்தினை அடைவதற்காக அருளாளர்கள் உலகம் என்கின்ற தலைப்பில் அறிவிற்கு விருந்து படைத்து சிந்தித்து வருகிறோம்.  இன்றைய சிந்தனையை மகரிஷியின் அவர்களின்  கனவில் அருளாளர்  வந்து உறுதி அளித்த அருட்சம்பவத்துடன் தொடங்குவோம். 

    மகரிஷி அவர்களுக்கு கனவில் உறுதி அளித்த அருளாளர்:

        மேலும், மகரிஷி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அருளார்கள்கள் சூக்குமமாக இருந்து கொண்டு ஆன்மீக சாதகர்களுக்கு உதவியாக இருந்து வருகின்றனர் என்பதற்கு சான்றாக உள்ளது.  தனக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை தனது  சீடர்களுக்கு எடுத்துக் கூறவிரும்பி ஒரு கவியினை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள்.

    கனவில் ஒரு சித்தர்(18-12-1985)

    தூக்கமில்லை, விழிப்பில்லை, துரிய தவம் ஆழ்ந்திருந்தேன்;

      தோன்றினார் ஒருசித்தர்; ‘தெரியுமா! நான் யார்?’ என்றார்

    நாக்கு எழவில்லை; இவர்! போகரோ? என நினைந்தேன்;

     ‘ஆக்க வாழ்க்கைநெறியாம் கர்மயோகம்*பரவவிடல்’

    அறிவுத் திருக்கோயில் முடித்து, உன்வயிற்றுப்புண் ஆறவிடல்

     ஊக்கமுடன் தொண்டாற்றும் உனக்குலகப் பரிசுவர

      உதவிடுவேன் எனச் சொல்லி  ஒரு நொடியில் மறைந்துவிட்டார்.’

                                  . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

         இச்சம்பவத்திலிருந்து என்ன தெரிய வருகின்றது?  மகரிஷி  அவர்கள் தனது 35 வது வயதில்(1911+35=1946)வயதில் இறைஉணர்வில் தெளிவு பெற்றுவிட்டார் என்பது தெரிந்ததே. அவ்வாறிருக்க, கனவில் ஒரு சித்தர் வந்து ஆசீர்வதித்தச் சம்பவம் 1985 இல் நடைபெற்றிருக்கிறது. அதாவது 74 வது வயதில் நடந்திருக்கின்றது.  அப்போது ஊக்கமுடன் அறிவுத்தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார் மகரிஷி அவர்கள்.  இதனை அறிந்த அச்சித்தர் மகிழ்ந்து, கருணை கொண்டு இரங்கி தானாகவே முன்வந்து மகரிஷி அவர்களுக்கு, இதுவரை *ஆக்க வாழ்க்கை(purposeful life/constructive way of living) வாழத் தெரியாத மனிதகுலத்திற்கு,

         ஆக்க வாழ்க்கை வாழ்வதற்கான நெறியான கர்மயோகம்  பரவுவதற்கும்,

         கட்டப்பட்டுக் கொண்டிருந்த அறிவுத்திருக்கோயில் முடிவு பெறுவதற்கும்

         மற்றும் அவரது வயிற்றுப்புண் ஆறுவதற்கும் உதவுவதாக சொல்லி மறைந்துவிட்டார்.

     அச்சித்தர் தனது பூதவுடலை உதிர்த்துவிட்டு இப்பூவுலகை விட்டு புறப்பட்டுவிட்டார்.  எப்போது புறப்பட்டார் என்பது தெரியாது? மீண்டும் மாந்தர்கள் வாழ்கின்ற இப்பூவுலகிற்கு அவரது சூக்கும சரீரத்தால் வருகை தந்து மகரிஷி அவர்களுக்கு உதவிட இயற்கை/இறை விரும்பியிருக்கிறது.  இப்பூவுலகை விட்டுவிட்டு சென்ற சித்தா் மீண்டும் இப்பூலகிற்கு வரும் வரை எங்கிருந்திருப்பார்?  வான்காந்த களத்திலே சூக்குமாக பயணம் செய்து கொண்டிருந்திருப்பார்.   ஒத்ததை ஒத்தது ஈர்க்கும் – உதாரணம்: ஒரு குறிப்பிட்ட அலை வரிசையை நம் வானொலிப் பெட்டியில் தேர்ந்தெடுத்தால்(Tuning) அக்குறிப்பிட்ட அலை வரிசையில் வான்காந்தத்தில் உள்ள ரேடியோ சமிக்ஞைகள் ஈர்க்கப்படும்

    Vethathiri_Maharishi_and_Annai_Logambal_

     மேலும் ஒரு சம்பவம்—அன்னை லோகாம்பாளுக்கு அருள்பாலித்தது:

       அருட்சோதி வள்ளலார் அருள்பாலித்தது தவிர, மேலும் ஒரு சம்பவத்தை மகரிஷி அவர்கள் தனது வாழ்க்கை விளக்கத்தில் குறிப்பிடுகிறார்.  தனது மனைவி அன்னை லோகாம்பாள் மூலமும் அருளே குணமாகக் கொண்ட  மகானுடைய ஆவி தொடர்பு கொண்டதாகவும் குறிப்பிடுகின்றார்.  அந்த பெயர் தெரியாத மகானுடைய ஆன்மாவால் அவரது குடும்பத்திற்கு எவ்வளவோ நன்மைகளும், பாதுகாப்பும் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார் மகரிஷி அவர்கள்.  அந்த மகானின் ஆன்மாவோடு பலமுறை உரையாடியதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  இது,  பல உண்மை கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்கு (தத்துவ ஆராய்ச்சி) மகரிஷி அவர்களுக்கு உதவியதாகக் கூறுகிறார்,  இதனைக் கூறிவிட்டு மகரிஷி அவர்கள் தெரிவிப்பதாவது—‘உடலைவிட்டு பிரிந்த உயிரின் நிலை என்ன என்று பலகூட்டங்களில் உரை நிகழ்த்தி இருக்கிறேன்’ என்கிறார்.  எனவே அந்த மகானுடன் உரையாடியதிலிருந்து பெற்ற விளக்கங்கள்தானோ மகரிஷி அவர்கள் ‘உடலைவிட்டு பிரிந்த  உயிரின் நிலை என்பது’?!  புவியைவிட்டுச் மேலே செல்கின்ற அனுபவம் மரணத்தின்போதுதான்  ஆன்மாவிற்குத் தெரியும் ஆனால் அந்த மரணசம்பவ அனுபவத்தை யாருக்கும் தெரிவிக்க இயலாது.  ஆனால் அதனை இந்த மகான் ஆவி மகரிஷி அவர்களுக்கு தெரிவித்துள்ளதோ?! சுத்த அத்வைத உண்மையின் (தத்துவம்) படி இறைநிலை எய்திய ஆன்மாவும் இறையும் ஒன்றுதானே.  இறை நிலை கடல்நீர் என்றால், இறைநிலை எய்திய இறையின் சிறுதுளியான ஆன்மா கொட்டாங்குச்சியில் உள்ள கடல் நீர் போன்றது என்பார் மகரிஷி அவர்கள்.  ஆகவே உலகைஉய்விக்க   வேதாத்திரி மகரிஷி அவர்களை அவதாரம் எடுக்கச் செய்து அவரை விடிவெள்ளி ஆக்கிட இயற்கை/இறை எல்லாவற்றையும் செய்திருக்கின்றது.    

     ‘கனவில் ஒரு சித்தர் சம்பவம்’ என்ன தெரிவிக்கின்றது?

        இச்சம்பவத்திலிருந்து  ஒரு உண்மை தெரியவருகின்றது. என்ன உண்மை அது? கருமையத்தூய்மை பெற்ற ஆன்மா பூதஉடலைவிட்டு பிரிந்த பின்னர் எங்கே இருந்தது? பூதஉடலில் வாழ்ந்து கொண்டிருந்தபோது தான் கொண்டிருந்த  வலுவான நல்லெண்ணத்தை நிறைவேற்ற  முடியாதபோது, வேறொரு உடல் வழியாக நிறைவேற்றிக்கொள்கின்றது. வேறொரு உடல் வழியாக நிறைவேற்றிக்கொள்கின்றது. இது மேலே கூறப்பட்டுள்ளது போல் இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடு என்றும் வைத்துக்  கொள்ளலாம். அல்லது இயற்கையின்/இறையின் தன்மை என்றும் வைத்துக் கொள்ளலாம். இது பற்றி தெளிவு பெற உயிரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.  உயிரைப்பற்றி தெரிந்து கொள்வது என்பது வேதாத்திரிய உயிரியல் படிக்க வேண்டும். அதனை இப்போது முழுவதுமாக இந்த சிந்தனையிலேயே படிப்பது என்பது, சிந்தனையின் திசை திரும்பியது போல் இருக்கலாம்.  இருப்பினும் அருளாளர் உலகம் என்கின்ற தலைப்பில் சிந்தித்துக் கொண்டு வருவதால், பூதவுடலை உதிர்த்த அருளாளர்கள் எவ்வாறு அவர்கள் (அருளாளர்களின்) உலகத்தில் உடம்பில்லாமல், சூக்குமஉடலை மட்டுமே வைத்துக் கொண்டு எவ்வாறு அங்கு வாழ்ந்து கொண்டு என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதனை அறிய இருப்பதால்  இப்போது, வேதாத்திரிய உயிரியியலில் கடைசிப்பகுதியான ‘இறந்தபின் உயிரின் நிலை என்ன?’  என்ன என்கின்ற பகுதிக்குள் மட்டும் செல்வோம். பிறிதொரு சமயத்தில் ‘உயிரறிவு’ பற்றி முழுமையாகச் சிந்திப்போம்.

     இறந்தபின் உயிரின் நிலை என்ன?

            இறந்த பின் உயிரின் நிலையை அறிவது என்பது உயிரறிவின் ஒரு பகுதியாகும்.  பூதஉடலைவிட்டு பிரிந்த பின்னர் உயிர் எங்கே செல்கின்றது  என்பதனை அறிய,  இறந்த பின் உயிரின் நிலையை அறிய வேண்டும். மரணத்தின் பிறகு உடல்தான் அழிகின்றதே தவிர உயிர் அழிவதில்லை என்பது எல்லோராலும்   அறியக்கூடியதுதான்/அறிந்த ஒன்றுதான்.   அப்படி அறியவில்லையாயினும் இனிமேலாவது சமுதாயம் அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்பது மனவளக்கலைஞர்களின் ஆதங்க எண்ணம்.   உயிர் அழிவதில்லை என்றும் ஏன் அழிவதில்லை என்றும் கேள்விகள் எழுந்தால்தான் அறிவைக் கொண்ட உயிர்  உயிரறிவு பெற முடியும்.

           ‘உடலே  நான்’ என மனிதன் நினைத்துக் கொண்டு வாழும் காலத்தில்(ஆயுள்பரியந்தம்) அவனுடனே வாழ்ந்து கொண்டிருக்கின்ற  உயிர் பற்றிய சிந்தனை மனித அறிவிற்கு  வருவதில்லை. இதனை இப்போது நினைக்கும்போது அறிவு .இச்சிந்தனையில்லாமலே இதுவரை வாழ்ந்து வருகின்றது என்பது மிகுந்த வருத்தத்துடன் தெரியவருகின்றது.  இருப்பினும் வேதாத்திரிய தோற்றத்திற்கு பிறகாவது, அதாவது இப்போதாவது அறிவிற்கு இச்சிந்தனை ஏற்பட்டுள்ளது என்பது மனநிறைவைக் கொடுக்கின்றது. மரணத்தின்போது உயிர் எங்கே செல்கின்றது/செல்லப்போகின்றது என்பதனை வாழும்போதே அறிந்து கொள்ள வேண்டாம் மனிதன்?! உயிர் போன உடலுக்கு ஏது அந்தஸ்த்து? மனிதன் சடப்பொருளாகின்றான்.  பெயரை இழக்கின்றான். தனக்கெனத் தனிப்பெயர் கொண்டிருந்த மனிதன் பிணம் என்கின்ற பொதுப் பெயர் சூட்டப்படுகிறான்.  மரணம் சம்பவித்த பிறகு உயிர், மேலே எங்கே செல்லவேண்டுமோ அந்த இடத்திற்கு தானாகவே சென்றுவிடும்.    

     எனவே உயிர் உடலில் இருக்கும்போதே, அதாவது வாழும்போதே இந்த உயிரைப்பற்றிய அறிவினை அறிவு அறிந்து கொள்ள வேண்டும். பலபிறவிகளாக சேர்த்துவைத்த  பழிச்செயல்பதிவுகளுக்குக் காரணம் உயிரறிவைப்பற்றிய அறிவினை பெறாமையே.   உயிரறிவைப்பற்றி கருத்தியலாகவும், செயல்முறையிலும்(Both theoretical and practical realisation) அறிந்து கொள்ள வேண்டும்.  மனிதனிடம் அன்பும், கருணையும் மலர வேண்டும்.  உயிரறிவு பெறும்போது ‘சீவனில் சிவனைக் காணலாம்’ என்று அருளாளர்கள் சொன்னது சாத்தியமாகும்.

         உயிரைப்பற்றி அறிந்து கொள்வது  உயிரறிவு எனப்படுகின்றது.  மனிதனுக்கு எத்தனையோ ஆசைகள் உள்ளன?  அவற்றில் முதலில் முக்கியமாக இடம் பெறுவது உயிர்மீது ஆசை.  ஏனெனில் உயிர் இருந்தால்தானே மற்ற ஆசைகள் நிறைவேறும்போது அதனை அனுபவிக்க முடியும்? அப்படிப்பட்ட உயிரை பற்றி அறிய வேண்டாம் இந்த விஞ்ஞான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன்?

         உயிரைப்பற்றிய அறிவினைப் பெறுவதினால் என்ன நன்மை மனிதகுலத்திற்கு என மனிதமனம் நினைக்கும்/நினைக்கலாம்.  ‘நினைக்கும்/நினைக்கலாம்’ என்பதில்லை நினைக்க வேண்டும் ஆறாம் அறிவு. 

    உயிரறிவு பெறுவதினால்

         மனிதகுலம் எல்லாச் சிக்கல்களிலிருந்தும் விடுதலையாகலாம்.

         பண்பேற்றத்தில் உயரமுடியும். 

         இன்று மனிதகுல வாழ்வில் மனிதகுலமே ஏற்படுத்திக் கொண்ட பல செயற்கையான சிக்கல்களுக்கு தீர்வுகள் தெரிய வரும்.

         தனிமனித வாழ்விற்கு வேண்டிய தீர்வுகளை தனிமனிதன் என்கின்ற அளவில், தான் தீர்த்துக் கொண்டதுபோக,

         பெரும்பாலான மற்ற சிக்கல்களுக்குத் தீர்வுகண்டு அவற்றை சரிசெய்ய  சமுதாயத்தை  சிந்திக்க வைக்க தனிமனிதர்கள் ஒவ்வொருவரும்   தங்களது  மௌன ஊடகமான எண்ணங்களை பயன் படுத்த முடியும்.

          இறந்த பின் உயிரின் நிலையை அறிவதற்கு இறப்பை மூன்று விதமாக பிரித்துக் கொண்டு சிந்திக்க வேண்டும்.

    1)   இயற்கை மரணம்.

     2)   திடீர் மரணம்

     3)   முழுமைப் பேறு அடைந்த நிலை

          இதற்கான விளக்கம் யாவரும் அறிந்ததே.  குறிப்பாக மனவளக்கலைஞர்கள் முன்றாவது இறப்பு நிலையைப் பற்றிய தெளிவு பெற்றவர்கள்.  எனவே இந்த மூன்று வகையில் மரணம் சம்பவிக்கும்போது உயிர் எங்கே செல்கின்றது என்பதற்கான விடை தெரிந்து கொள்ள வேண்டும்.

       புவி மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.  உடல் மண்ணிற்கு சென்று விடுகின்றது.  பிறகு உயிர் எங்கே செல்ல முடியும்? மேல் நோக்கித்தான் செல்ல வேண்டும். ஏனெனில் உடலில் உயிர் இருக்கும்போதே, உடலில் உள்ள மற்ற உறுப்புகள்  புலன்களால் தெரிந்து கொள்ளப்படுவது போன்று  தெரிந்து கொள்ளப்படமுடியாத ஒன்று எந்தநிலையில்(in what form)  இருக்க முடியும்?  மற்ற உறுப்புக்கள் பருப்பொருள்(physical existance) நிலையில் இருப்பது போன்று இருக்க முடியாது. அரூபா-ரூப நிலையில் தான் இருக்க முடியும். எனவே அது பருப்பொருளைவிட அதாவது லேசானதாக   இருக்க முடியும்.

    எனவே அது பூமியைவிட்டு மேல்நோக்கிச் சென்று விடுகின்றது.  எல்லா மனிதர்களுக்கும் இறப்பில் நடக்கின்ற பொதுவான நிகழ்வுதான் இது.  எனினும்  மேல்நோக்கிச் செல்கின்ற எல்லா உயிர்களும் ஒரே இடத்திற்காக செல்கின்றது என்பது அடுத்த அறிகின்ற-ஆர்வத்தை எழுப்புகின்ற வினா.  இல்லை. எல்லா உயிர்களும்(ஆன்மாக்களும்) ஒரே இடத்திற்குச் செல்வதில்லை. 

       ஏன் இயற்கையில் இந்த பாகுபாடு? பிறகு எந்தெந்த இடத்திற்கு எந்தெந்த ஆன்மா  செல்லும்?  ஆன்மாவில் பதிந்துள்ள பதிவுகளுக்கு ஏற்ப  அது புவியைவிட்டு அது அதற்குரிய  இடத்திற்கு செல்லும்.      அடுத்த அறிவிற்கு விருந்தில் (31-07-2016 ஞாயிறு) சந்திப்போம்.


     வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.
    அன்பு வேண்டுகோள்
    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய,  ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய:  click here.

    https://www.prosperspiritually.com/category/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

                                                  அல்லது

    நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல click here

    https://www.prosperspiritually.com/contact-us/  

    நன்றி,

    வாழ்க வளமுடன்


     

     

     

    Loading

  • FFC-210-அருளாளர்கள் உலகம் 3/?

     

    வாழ்க மனித அறிவு                                       வளர்க மனித அறிவு

                                                                         அருளாளர்கள் உலகம் 3/?

    அறிவிற்கு விருந்து—210

    24.07.2016—ஞாயிறு

    வள்ளலார் அளித்த திருக்காப்பிட்டுச் செய்தி:

    vallalar_thirukkappu-PNG_Thai

     வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்டு நூற்று நாற்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன. சிரம் தாழ்த்தி உடலாலும், உள்ளத்தாலும் ஆர்வத்தோடும் அருட்பிரகாச வள்ளலாரை வணங்குவோம். ‘அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும்’ வழங்கிக் கொண்டிருக்கின்ற அருட்பிராகாச வள்ளலாரின் அருளால் சாகா வரம் பெறுவோம். வள்ளலார் அவர்கள் சத்ய வாக்கு கொடுத்துள்ளதால், இந்நன்னாளில் அருட்பிரகாச வள்ளாரிடம் இறைமையை/அருளை இறைஞ்சி வேண்டி நிற்போம்.

           வள்ளலாரின் திரு எய்திய ஆன்மா, சுமார் எண்பது ஆண்டுகள் சென்ற பிறகு நம்முடைய நேரிடை குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சுமார் நாற்பத்திரண்டு வயது இருக்கும்போது, அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதனை அறிய முடிகின்றது. வேதாத்திரி மகரிஷியின் உடலில் பத்து வருடங்கள் இருந்து கொண்டு, வள்ளலாரின் ஆன்மா மகரிஷி அவா்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. இதனை மகரிஷி அவர்களே தனது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலில் கூறியுள்ளார்கள்.

    மகரிஷி அவர்களுக்குள் இருந்து கொண்டு வள்ளலார் அவர்கள் வழிகாட்டியாக அருள்புரிந்த புனிதநிகழ்வால், வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட அன்று தமது திருவாயால் மலர்ந்தருளிய சத்தியவாக்கு ஒருவரிடம்(மகரிஷியிடம்) நிறைவேறியதை நாம் அறிய முடிகின்றது. இன்னும் எத்தனை அருள்துறை அன்பர்களுக்கு இதுபோன்று அருள்பாலித்தார் என்பது தெரியவில்லை.

       வேறு எந்த அருளாளரின் பூதஉடலுக்குள் இருந்து கொண்டு செயல்பட்டாரோ அல்லது இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாரோ என்பது தெரியாது. எனினும் இன்று நாம் வள்ளலார் அவர்களிடமிருந்து அருள் பெறத் தயாராக உள்ளோம்.

    அருட் பிரகாச வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும்போது திருவாய் மலர்ந்தருளியது என்ன என்பதனை நினைவு கூர்வோம்.

       30-01-1874 ம் ஆண்டு ஸ்ரீமுக   வருடம், தை மாதம் 19 ம் நாள்   வெள்ளிக்   கிழமை இரவு 12 மணிக்கு திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்டார். அப்போது அவர் அளித்த அருட்செய்தியினை கூர்ந்து கவனிப்போம். (வடலூர் சித்தி வளாகத்தில் இன்றும் அந்த அருட்செய்தியினைக் காணலாம்.) அந்த அருட்செய்தி கூறுவது என்ன?

    • இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம்?கேட்டு, திருந்தி எழுச்சி பெற்று, திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்.
    • இப்போது இந்தவுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லாவுடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்பொம், திருத்திவிடுவோம். அஞ்சவேண்டா.
    • சுத்தப்பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம். அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும் அளிப்போம்.”

                                                    –வள்ளலார் அவர்கள்.

    வள்ளலார் அவர்களின் மற்றொரு ஆதங்கம் என்ன?      

                                           “கடைவிரித்தேன். கொள்வாரில்லை”

    அவர் பூதவுடலில் இருந்து கொண்டு நேரிடையாகவே அருட்செய்திகளையெல்லாம் சொல்லியும், அதனைக் கேட்டு, எழுச்சி பெற்று, திருந்தி பிறவிப்பயனை அடைகின்ற திறமையில் ஒருவா்கூடத் திகழவில்லை என்கிறார்.

    எனவே அவர் பூதவுடலை விட்டுப் பிரிந்தாலும், அவரது சூக்கும உடல் எல்லோரிடமும் புகுந்து கொண்டு திருத்திவிடும் என்கிறார். அகவினத்தார்க்கு சாகா வரமும், ஏனையோர்க்கு பரிபக்குவ நிலையையும் அளிப்பதாக வாக்களித்துள்ளார். இது ‘உடலே நான்’ என பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல், வள்ளலார் என்கின்ற பூதவுடல் சொன்னதா? இல்லை!

    ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற திருமூலர் வாக்கிற்கிணங்க,

    வள்ளலாரின் பூதஉடலில் பேரறிவாகிய இறையே, ஆலயம் கொண்டு,

    வேதங்கள் இறைவனால் சொல்லப்பட்டன’ என்று சொல்லப்படுவதுபோல், சாட்சாத் இறைவனே வள்ளலாரின் திருவாய் வழியாக அருளிய திருவார்த்தைகளாகும்.

    பின்னர் வேறு எந்த வழியில் அரூபமான இறையால் மனித சமுதாயத்திற்கு சொல்ல முடியும்? இறை அரூபமாக உள்ளது என்று விளங்கிய பிறகு, ஐயப்படாது அகத்தை உணா்ந்தவர் வழியாக இறை சொல்கின்றது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்காது. அதனால்தான் மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் எனப்படுகின்றது. மூத்தோர் என்பது அறிவை அறிந்த பெரியவர்கள் என்று கொள்ளலாம். வயதில் மூத்தவர்கள் அனுபவத்தால் சொல்வதனையும் கேட்க வேண்டும். அறிவை அறிந்த பெரியோர்கள் வழியாக சொல்வது இறையே என்பதால் அது அமிர்தமாகத்தானே இருக்கும். இயற்கை–இறை/இறைவன் ஆனந்தமயமானது/ஆனந்தமயமானவன் என்பதால் இயற்கையால்–இறையால்/இறைவனால் சொல்வது ஆனந்தமாகத்தானே இருக்கும்!

    வள்ளலார் திருவாக்களித்தபடி, ஓயாமல் அவரது திரு எய்திய ஆன்மாவே (இறைவனே), ஆன்மீகத் துறையில் பயிற்சி செய்யும் சாதகர்களுடனே இருந்து கொண்டு உறுதுணையாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. ஆன்மீக சாதகர்களுக்கு இரண்டு வழிகளில் துணைபுரிவேன் என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளலார் அவர்கள். முதல்தர சாதகர்களுக்கு ‘சாகா வரமே தருவேன்’ என்கிறார். மற்றவா்களுக்கு  ‘பரிபக்குவ நிலையைத் தருவேன்’ என்கிறார்.

    ஆன்மீகத்தில் ’பரிபக்குவ நிலை’ என்பது மிக மிக முக்கியமானது. பரிபக்குவ நிலையில் பிறவி எடுத்தவர்களே, கருவில் திருவுடையவர்களாவார்கள். பகவத் கீதையில் கண்ணபரமாத்மா கூறியவாறு கோடியில் ஒருவரே கருவில் திருவுடையவா்களாக  இருப்பர். அவர்களே தன்னை வந்து அடைவதாக கூறுகிறார் கண்ணபரமாத்மா. மற்றவர்கள் வழுக்கி விழுந்து, விழுந்து, முயற்சி மேல் முயற்சி செய்து, ஆன்மீக இலக்கை அடைய வேண்டும். எனவே ‘சாகா வரம்’ வாங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு பரிபக்குவ நிலையைத் தருவதாகக் கூறுகிறார் வள்ளலார் அவர்கள். பரிபக்குவ நிலை வந்த பிறகுதான் குரு-சீடர் உறவில் அலை இயக்க ஐந்து பண்புகளும் முழுவதுமாக வேலை செய்து, குறிப்பாக அலை இயக்கப்பண்பில் கடைசியும், அதிமுக்கியதுமானதுமான ‘ஒன்றோடு ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல்–inter-action’ என்பது குரு-சீடா் உறவின் முழுப்பயனையும் தரும்.

                      இயற்கையின்/இறையின், மனிதர்களாகிய—தன்மாற்ற(self–transformation into human beings) சரித்திரத்தில், மனிதர்களை திருத்தும் படலம் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது அருட்பிரகாச வள்ளலாரின் கடைசி திருவாய் மொழியிலிருந்து.

    வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொள்ளும்போது அறிவித்த அருட்செய்தியின்படி, நமக்குத் தெரிந்த வரை, வள்ளலாரின் திரு எய்திய ஆன்மா, சுமார் எண்பது (1911-1874) + 42= 37+42= 79 or 80) ஆண்டுகள் சென்ற பிறகு நம்முடைய நேரிடை குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சுமார் நாற்பத்திரண்டு வயது இருக்கும்போது, அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதனை அறிய முடிகின்றது. வள்ளலார் அருட்பாலித்ததிலிருந்து பத்து ஆண்டு காலத்துக்குள் மகரிஷி அவர்கள், தான் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயம் என்கிறார். மேலும், இராமலிங்க வள்ளலார் அவர்கள் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம் தன் வழியாக முடித்தார் என எண்ணுவதாகவும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    வள்ளலாரின் அருள் தனக்கு கிடைத்த பாக்கியத்தை, நம்குருதேவர், பேரருளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பயன்படுத்திக் கொண்டதை, அவரே கூறுவதை அறிந்து மகிழ்வோம்.ஏனெனில் நம் தாய், தந்தையர் செய்த புண்ணியத்தால் நமக்கு குருவாக குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களை இயற்கை/இறை அருளியுள்ளது. மகரிஷி அவர்களின் பூதஉடலில்   வள்ளலார் அவர்கள் பத்துவருடங்கள் தங்கியிருந்து அருள்பாலித்திலிருக்கிறார். அது நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதுதாக உள்ளது என்கிறோம். காரணம்,   வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு தெரிவித்த உண்மைகளுக்கு பலமும், தெளிவும், எளிமையும் கிடைத்திருக்கிறது அல்லவா? மகிழ்ச்சி மட்டுமல்ல, அது நமக்கு கூடுதல் பயன்தானே(additional benefit) உண்மையைப்பற்றி அறிந்து கொள்வதில். வள்ளலார் அவர்கள், பல சந்தா்ப்பங்களில் தன்னோடு இருந்து வழிகாட்டி செயலாற்றுவதை அனுபவமாகக் கண்டதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    FFC-65-வள்ளலார்-என்று-15-03-2015

     மகரிஷி அல்லாது இன்னும் எத்தனை அருளாளர்களுக்கு வள்ளலார் அவர்கள் சாகா வரம் தந்துள்ளார் என்பது தெரியாது. வெளியே தெரியவில்லை. ஆனால் பரிபக்குவ நிலையைத் தந்து கொண்டிருக்கும் பணியினைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதனை மட்டும் அறிய முடிகின்றது. ‘வேதாத்திரியம்’ கல்வி நிலையங்களுக்குச் சென்று மாணவர்களை ஒழுக்கத்திற்கு திருத்தி ஒழுங்கு படுத்தும் சீரிய பணியைத் துவங்கி விட்டதே இதற்குச் சான்றாகக் கொள்ள முடிகின்றது. பேரறிவின் தன்மாற்றத்தில் அவ்வப்போது   மகான்கள்   தோன்றுவதென்பது முடிவில்லா   ஆன்மீகத்   தொடா்   ஓட்டம் (Never ending–Continuous Divine Relay Race).

    அதனால்தான்மகரிஷி அவர்கள்   “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்” எனத்துவங்கும் குருவணக்கப் பாடலில், தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கர் என பெயரிட்டு நான்கு அருளாளர்களை நினைவு கூர்வதோடுமட்டுமல்லாமல், இது வரை இறைவெளியின் தன்மாற்றத்தில், ஆன்மீக வரலாற்றில் தொடராக வந்துள்ள அனைத்து அருளாளர்களையும் நினைவு கூர்கிறார் மகரிஷி அவர்கள். அப்படியானால் மகான்கள் தோன்றுவதென்பது முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டம் தானே!

     வள்ளலார் “திருத்திடுவோம்” என்று கூறியது இப்போது வேதாத்திரியத்தின் வாயிலாக நடைபெறவில்லையா? மனவளக்கலை ஒரு சாதனை மார்க்கம் என்பதே, திருந்துவதைத்தானே குறிக்கின்றது. சாதனை என்பது என்ன? பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் மனிதன், பழைய தீய பழக்கங்களுக்கும் இப்போது கிடைக்கும் நல்விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வெற்றி பெறுவதுதான் சாதனை என்பது. எனவேதான் தற்சோதனைப் பயிற்சியை தெய்வீகப் பயிற்சி என்கிறார் மகரிஷி அவர்கள்.

    மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். தன் பிணக்குகளை முறையாகக் களைவதும் ஒரு போராட்டம்தான் என்கிறார். எனவே தன் பிணக்குகளை முறையாகக் களைவதற்கு   மகரிஷி அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், உயர்வையும் கவனிக்க வேண்டும். தன் பிணக்குகளை முறையாகக் களைவதை, உயிரைத் தூய்மையாக்கவல்ல ‘அறிவுப்போர்’ என்கிறார். ஆகவே வாழ்வில், மகிழ்ச்சியும், நிறைவும். அமைதியும் அளிக்கும் அந்த அறிவுப்போர் ஒரு தெய்வீகப் போர் என்கிறார்.

    “கடைவிரித்தேன். கொள்வாரில்லை” என்றார் வள்ளலார் அவர்கள். ஆனால் மகரிஷி அவர்களோ, வடலூர் மேட்டுக் குப்பத்தில் ஓங்கார மண்டப திறப்பு விழாவில்(05-02-1985) ஆற்றிய உரையில் முடிவில் கூறுவதனைக் கவனிப்போம் (Ref: அன்பொளி ஜுலை 1985):  “எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாக உள்ள, சேர வேண்டிய இடமாக, கடைத்தேற வேண்டும்என்ற எண்ணத்தோடு ”கடைவிரித்தேன்” என்று சொன்னார் வள்ளலார் அவர்கள். ஆனால் கடையை மூடிவிட்டாரா? இல்லை. திறந்தே வைத்தார். இன்றும் அது திறந்தே உள்ளது.” என்றார். அதற்கு சாட்சியாகக் அவ்விழாவில் குழுமியிருந்த அன்பர்களே எனக் கருதி, “அப்படி இல்லையானால் இவ்வளவு பேர் கூடி அனுபவிக்க முடியாது.” என்று அன்று குழுமியிருந்த அன்பர்களிடமே கூறினார் மகரிஷி அவர்கள்.

    மேலும் மகரிஷி அவர்கள் அன்று கூறியதாவது:–

    “விரித்தது, விரித்ததுதான்.  அவரவர்கள் வேண்டும் அளவுக்கு அள்ளிக் கொண்டு போகலாம். விரித்தது அத்தனையும்* செய்யுட்களாக வந்துவிட்டன. ஒவ்வொரு செய்யுளிலும் வரக்கூடிய ஒரு உண்மைப் பொருள், இறைவனே நேரடியாக எடுத்துக் காட்டியதை, உணர்ந்தது உணர்ந்தவாறு கூறுகின்றார் வள்ளலார்.இதைச் சாதாரண வார்த்தைகளில் கூறும்போது அது விளங்காது. ஆனால் அது அனுபவித்திலே அனுபவித்தவர்கள் கூறும்போது அந்த ஒளிக்கே ஓரு ஆற்றல் உண்டு” (*திருஅருட்பா)

     மனவளக்கலை பயிற்சியில் வெற்றியினை பெற வள்ளலாரை வணங்கி ஆசியினை பெறுவோம்.   மேலும் அருளாளர்கள் உலகம் பற்றிய சிந்தனையை அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-07-2016-புதன்) தொடர்வோம்.


     வாழ்க அறிவுச் செல்வம்                                            வளர்க அறிவுச் செல்வம்.

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்,

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய,‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய:  click here.

    https://www.prosperspiritually.com/category/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

    அல்லது

    நேரிடையாக  ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதிக்கு செல்ல click here

    https://www.prosperspiritually.com/contact-us/

    நன்றி,

    வாழ்க வளமுடன்


     

     

     

     

    Loading

  • FFC-209-அருளாளர்கள் உலகம் 2/?

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவ

     N-அருளாளர்கள் உலகம் 2/?

    அறிவிற்கு விருந்து—209

    20-07-2016—புதன்


    vysa_maharishi_and_vethathiri_maharishi

    வேத வியாசரும் நவயுக  வியாசரும்


    பூதஉடலை உதிர்த்த அருளாளர்களால் பயன்அடைய முடியும் என்பதற்கான சான்று:

    எல்லா அருளார்களையும் நினைந்து வணங்குவதால் ஆன்ம சாதகனுக்கு பயன் ஏற்படுகின்றது. இதற்கான சான்று, ஆன்மீக உயர்வில் வெற்றி பெறுவதற்காக, மானசீகமாக குருமார்களை மகரிஷி அவர்கள் ஏற்றுக் கொண்டும் மற்ற அருளாளர்களை நினைவுகூர்ந்து வெற்றி பெற்றதுமே ஆகும். இதனை யுக்தியாகவும் கொள்ளலாம். சாதுரியமாகவும் கொள்ளலாம். இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடு என்றும் கொள்ளலாம்.

    அருளாளர்கள் யார் ?

    மேலும் மற்ற அருளாளர்களை நினைவுகூர்வதில் அருளாளர்களை, அருளாளருக்கான அடைமொழியோடு குறிப்பிடுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அறிவின் இருப்பிடம் அறிந்தால் அன்றாட வாழ்வினை அறிந்து அனுபவித்து இன்புறமுடியும் எனக் கண்டுபிடித்து, தானும் அவ்வாறே அனுபவித்ததுபோல்,
    உலக மக்கள் அனைவரும் அனுபவிக்க
    இறைஆசையினைக் காட்டி உலக மக்களை அன்புடன் அழைக்கிறார்
    ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’
    என்று எண்ணுகின்ற அருளாளர் வரிசையில் அவதரித்த நம் குருநாதர் அவர்கள்.

       அவர் காட்டிய இறைஆசையில் விழுந்த நாம் தெய்வீகப் போதையில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். எனவேதான் எல்லா அருளாளர்களின் ஆசியினைப் பெறுவதற்காக. ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம் என்கிறார்.’

    இதிலிருந்து ஒன்று புலப்படுகின்றது. எது அது? அறம் வலியுறுத்தப்படுவது தெரிகின்றது, ஒரு மனிதன் இறைஉணர்வு பெறுவதென்பது அவனுக்கு இப்பிறவியில் இயற்கையால்/இறையால் கொடுக்கப்பட்ட வாய்ப்பு. அதனை தனிமனிதன் அறிந்து இப்பிறவியினைப் பயன்படுத்திக் கொண்டு பேரின்ப வாழ்வு வாழ்கிறான் என்பது உண்மையாக இருந்தாலும், அவன் அடைந்த இறைஉணர்வு சமுதாயத்திற்கும் பெரும் உதவியாக உள்ளது. எவ்வாறு எனில் இறைஉணர்வு பெற்றவர் அறவாழ்வு வாழ்வாரன்றோ! அறவாழ்வு தான் அவரை இறைஉணர்விற்கு அடிகோலியது. ‘ஒழுக்கம், கடமை, ஈகை’ ஆகிய மூன்று கண்களைக் கொண்ட அறவாழ்வு இறைஉணர்வாளரின் பண்பாக இருந்தாலும், பெரும் அளவில் பயன்பெறுவது சமுதாயமே. ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று நெறிகளுக்கு வித்தகரானவரால் சமுதயாத்திற்கு நன்மைதானே ஏற்படும். துன்பமில்லையே!
    எனவே எது தேவையோ அது வலியுறுத்தப்படுகின்றது.
    இறைஉணர்வு மனிதனுக்கு எதற்காக அவசியமாக இருக்கின்றது?
    எல்லா உயிர்களிலும் மனிதனுக்கு மட்டுமே இறை உணர்வு பெறுவது பேறாக இருந்தாலும்,
    அதனால் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் என்ன பயன் என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    அருள் என்பது என்ன?

    அருள் என்பது இறை, கருணை நோக்கத்துடன் காப்பது, வழிகாட்டுவது, தருவது. அதே நேரத்தில், இறைநீதி என்பது மனிதனின் செயலுக்கேற்ற விளைவாக வருவது இறை என்கின்ற போது இறையின் அருளுக்கு பாத்திரமாக வேண்டுமெனில், மனிதனின் செயல்கள் நற்செயல்களாக இருக்க வேண்டும். இறையை ஐயமின்றி அறிந்து, இறையாகவே மாறி இருப்பவர்களே அருளாளர்கள். அருள் அவர்களிடம் ததும்பி வழிவதால், அருள் ஒன்றையே நிதியாகக் கொண்டுள்ளதால் அவர்கள் அருள்நிதியாகத் திகழ்பவர்கள். இறைத்தூதுவர்கள் அவர்கள். இறையின் பிரதிநிதி அவர்கள். அருளாளர்களை அருள்நிதி என்று அழைப்பதுபோல், பிரம்மஞானம் மற்றும் ஆசிரியப் பயிற்சி பெற்ற மனவளக்கலைஞர்களை, ‘அருள்நிதி’ என்றே அழைக்கிறார் மகரிஷி அவர்கள். மனவளக்கலைஞர்களை அருள்நிதி என்கின்ற பட்டத்தைச்சூட்டி மகிழ்ந்து, இறைத்தூதுவர் பணி செய்ய ஆசீர்வதிக்கிறார். ஆகவே மனவளக்கலைஞர்களை தெய்வீகப் பொறுப்பை ஏற்கச் சொல்கிறார் மகரிஷி அவர்கள்.

    அருளாளர்கள் உலகம் என்பது என்ன? எங்கே உள்ளது?

    இப்போது அருளாளர்கள் உலகிற்கு வருவோம். எங்கே உள்ளது இந்த அருளாளர்கள் உலகம்? கற்பனையானதா? இறை அரூபம் என்பது, வெட்டவெளி என்பது கற்பனையோ?! வான் காந்தம் கற்பனையானதோ! வான் காந்தப் பதிவுகள் கற்பனையானதோ? எல்லாவற்றிற்கும் இல்லை என்பதே பதிலாக உள்ளது. அதுபோல் அருளாளர்கள் உலகம் என்பது அவரவர்கள் புரிந்து கொண்டது, மற்றும், பயன் பெறுவதைப் பொருத்து இரண்டுவிதமாகவும் வைத்துக் கொள்ளலாம். இருப்பினும் அருளாளர்கள் உலகம் பற்றி சிந்தித்து தெளிவு பெறுவோம்.

    அருளாளர்கள் உலகம் என்றால் என்ன? உலகம் என்றால் தெரியும். உயிரினங்கள் வாழும் இப்புவியை உலகம் என்கிறோம். இதனைத் தவிர்த்து வேறு உலகம் ஏதேனும் உண்டா? அதில் அருளாளர்கள் உலகம் என்று தனியாக உள்ளதா? மனிதன் பாவங்களைச் செய்யக்கூடாது என அச்சுறுத்தி நரகலோகம், சொர்க்கலோகம் என சொல்லி வைத்திருந்தனர். உண்மையில் சுவர்க்கம், நரகம் என்பதெல்லாம் வாழ்கின்ற போதே இப்புவியிலேயே, ஏற்கனவே பலபிறவிகளில் செய்யப்பட்ட/இப்போது செய்கின்ற வினைகளுக்கேற்ப, இன்பதுன்ப அனுபவங்களைப் பெற்றுவிடுதலில்தான் உள்ளது. அருளாளர்கள் உலகம் என்பது என்ன என்கின்ற வினாவிற்கு வருவோம்?

    இன்று உலக மக்கள் தொகை எழுநூற்று நாற்பது கோடியாகும். ஆனால் இது வரை ஆதிமனிதனிலிருந்து இன்று வரை எத்தனைகோடி மக்கள் பிறந்தனர் என்று தெரியுமா? தெரியாது. கடலில் உள்ள நீர்த்துளிகள் எவ்வளவு என்று சொல்ல முடியாதோ, அதுபோல்தான் முதல் மனிதனிலிருந்து இன்றுவரை பிறந்துள்ள மக்களின் எண்ணிக்கையும்.
    இந்த மக்கள் எண்ணிக்கையில், முதல் மனிதனிலிருந்து இதுவரை எத்தனை மனிதர்கள் தோன்றி இறையை ஐயமின்றி உணர்ந்தனரோ அவர்களெல்லாம் இறையருளாளர்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவியில்லை. பின்னர் அவர்கள் எங்கு சென்றிருக்கிறார்கள்? அவர்களின் பூதஉடல் மறைந்தாலும் அவர்கள் சூக்கும உடலால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலக நலத்தின்பால் அக்கறை கொண்டு எண்ணிய எண்ணங்கள் எல்லாம் வான்காந்தத்தில் பதிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்வெண்ணங்கள் தங்களின் பணியான ஊடகவேலையை மௌனமாக செய்துகொண்டிருக்கின்றன. அவர்கள், யார் யார் இறையை நோக்கிய பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்களோ, யார் யாருக்கு என்னென்ன தேவையோ அவற்றை எல்லாம், அவர்களுக்கெல்லாம் ஆன்ம உலகில் இருந்து கொண்டு உதவி புரியக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் மகரிஷி அவர்கள் அளித்துள்ள உறுதி மொழியினை நினைவில் கொள்வோம்.

    மகரிஷி அவர்கள் கொடுத்துள்ள வாக்கு—

    நான் (மகரிஷி) உங்களுடன் இருப்பேன்!

    நான் வான்காந்த அலையில்

    கலந்துள்ளேன்

    உங்களுக்கு நலத்தில்

    எந்த இடர் ஏற்பட்டாலும்

    என்னை நினைத்துக் கொள்ளுங்கள்!

    நினைக்கும் போது நான் உங்களுடன்

    கலந்து விடுவேன்.

    என் கையைப் பிடித்துக் கொண்டே

    நீங்கள் தவத்தில் உயரலாம்.

    உங்களுக்கு வரும் எந்த இடரையும்

    நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    ஆன்மீகத்தில்

    குரு காணிக்கை என்பது ஒன்று உண்டு.

    அதை நான் உங்களிடம் வேண்டுகிறேன்.

    உங்களின் சினத்தை பொறாமையை,

    உணர்ச்சி வயப்பட்ட எண்ணங்களை

    தவறான செயல்களை

    எனக்கு குரு காணிக்கையாக

    இன்றிலிருந்து தந்துவிட வேண்டுகிறேன்.”

    . . .     உலக நல தொண்டன் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    உயிர் அழிவதில்லை என்பதனை யாவருமே அறிவர். எப்படி? மரணமடைந்த பரு உடல்தான் எரிக்கப்படுகின்றதே தவிர உயிர் எரிக்கப்படுவதில்லை. அதாவது உடலைவிட்டு உயிர் வெளியேறி விடுகின்ற சம்பவமே மரணம். ஆகவே மரணம் சம்பவித்த பிறகு புலன்களுக்கு தெரிகின்ற பூதவுடல்தான் எரிக்கப்படுகின்றது. உயிர், ஆற்றல் என்பதால் அது அழியாதது. அதாவது எல்லோருக்குமே ஆன்மா(உயிர்) அழியாதது. எனவே பூதஉடலைவிட்டுப் பிரிந்த ஆன்மா எங்கு செல்கின்றது என்பது அவரவர்கள் செய்துள்ள வினைகள், கொண்டுள்ள நிறைவேறாத ஆசைகள் ஆகியவற்றைப் பொருத்து அமைகின்றது.

    அருளாளர்களைப் பொறுத்த வரையில் வினைகள் முடிந்து விடுகின்றன. இறைவனைக்காண வேண்டும் என்று இருந்த ஒரே ஒரு நிறைவேறாத ஆசையும் அவர்கள் இறைஉணர்வு பெறுவதன் வழியாக நிறைவேறி விடுகின்றது. ஆசை என்கின்ற பெயரிலே வேறு ஏதாவது இருக்குமா என்றால், எண்ணம் என்கின்ற பெயரிலே ஒன்று இருக்கும். அதாவது ‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பது எல்லோருக்குமே இருக்கும். இதனை வாய்மொழியாகவே, திருமூலர் அன்று சொன்னது இன்றும் நாம் நினைவு கூறுகிறோமே அந்த எண்ணம் உயிரோடுதான் வான்காந்த கலத்தில் உலவி வருகின்றது, எனவே தான் குருவணக்கத்தில் எல்லா அருளாளர்களையும் வணங்கி நினைவு கூறச் சொல்கிறார்.

    நம் குருநாதர் போன்றே மானசீகமாக அருளாளர்களை நினைவு கூறுதல் வேண்டும்:

    இருப்பினும் இறை-உணர்-ஆன்மீக சாதகன் உரிய பயிற்சிகளோடு அருளாளர்களின் அருளைப் பெற இறைஞ்ச (invoke) வேண்டும். இறை உணர் ஆன்மீக சாதகனின் பரிபக்குவ நிலைக்கேற்ப அருளாளர்களின் விருப்பப்படியோ, ஆன்மீகசாதகனின் முயற்சிக்கு ஏற்பவோ அருளாளர்கள்–ஆன்மீக சாதகர்கள் இணைப்பு. மகரிஷி அவர்களுக்கு உருவானதுபோல் ஏற்பட்டுவிடும்.

    தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் ஆகிய அருளாளர்கள் அவதரித்த காலத்தில் மகரிஷி அவர்கள் அவதரிக்கவில்லை. எனினும் அம்மூன்று அருளாளர்களின் அடிபற்றியதால், அறிவே தெய்வம், அறிவே அகமாக உள்ளது, அறிவை அறிய உற்ற வழிகளை அறிந்து கொள்வதற்கு, அம்முன்று அருளாளர்களும் அருள் புரிந்திருக்கிறார்கள். எனவே அதேபோன்று, மகரிஷி அவர்களின் சீடர்களும், அவ்வாறே அந்த மூன்று மானசீகக் குருமார்களை நினைவு கூறும் யுக்தியினை பயன்படுத்தி அவர்களின் அருளைப் பெறவேண்டி, குருவணக்கப்பாடலை அருளியுள்ளார்.

    இந்நிகழ்வில் இம்முன்று அருளாளர்களும், மகரிஷி அவர்களின் ஆன்மீக தாகம் மிகுந்து, வாழ்கின்ற பிறவியிலேயே இறையை உணர்ந்திட வேண்டும் என்கின்ற எண்ணம் அழுத்தம் பெற்று, அதற்கேற்ற செயல்கள் புரிந்ததால், அவர்கள் மூவருமே தாங்களாகவே வந்து அருள் புரிந்திருக்கலாம். அல்லது மகரிஷி அவர்கள் இறைஞ்சி நின்றதால் அதற்கு வேண்டியவாறு இறையின் ஏற்பாடாக, அருளாளர்களின் வாயிலாக அருள் புரிந்தது/செய்தது எனவும் கொள்ளலாம். மேலும் அம்மூன்று அருளாளர்களின் அறநூல்களை மதித்து, ரசித்து, நம்பிக்கை கொண்டு, ஆராய்ந்ததாலும் அருளார்களின் புரிதலே இவருடைய புரிதலாகிவிட்டது. அருளாளர்களின் அறிவும், ஆன்மீக சாதகனின் அறிவும் பேரறிவுதானே! எனவே வேண்டியதெல்லாம், ஆர்வமும், தீர்மானமும், முயற்சியும்தான். சுருக்கமாக உண்மையாக சுத்த அத்வைதப்படி பேரறிவே(இயற்கையே/இறையே) இவ்வாறு நடத்துகின்றது.

    இராமலிங்கரையும் குருவாக நினைவு கூறுகிறார். இராமலிங்கர் அவர்களே விரும்பி வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் தங்கி, இராமலிங்கர் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும்போது மொழிந்ததுபோல் அவ்வெண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டார் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக. இராமலிங்கர் அவர்கள் வேதாத்திரி அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் வேதாத்திரி அவர்களின் பரிபக்குவ நிலை இருந்துள்ளது என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டும்.

    இதற்கும் மேலாக வேதாத்திரி மகரிஷி அவர்கள், தனது சாதுரியத்தையும், அறிவுக் கூர்மையையும் ஏனைய அருளாளர்களின் அருளைப் பெறுவதற்குப் பயன்படுத்தியது வெளிப்படையாகவேத் தெரிகின்றது ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைவரையும் நினைவு கூர்வோம்’ என்கின்ற வரிகளிலிருந்து.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(24-07-2016-ஞாயிறு) வள்ளலார் பற்றி அறிந்து கொள்வோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்!
    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய: click here.
    https://www.prosperspiritually.com/category/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
    அல்லது

    நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல  click here

    https://www.prosperspiritually.com/contact-us/

    நன்றி,

    வாழ்க வளமுடன்

    Loading

  • FFC–208-அருளாளர்கள் உலகம் 1/?

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

    அருளாளர்கள் உலகம் 1/?

    FFC–208

    19.07.2016—செவ்வாய்

    guru_poornima

    “அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

    அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.”

    எல்லா  அருளாளர்களின் ஆசிகளைப் பெறுவோம்:

                 இன்று குருபூர்ணிமா தினம். எதற்காக இந்த தினம்  வருடத்தில் ஒரு நாள் கொண்டாடப்படுகின்றது?வாழையடி வாழையாக  திருக்கூட்ட மரபினில் உதிக்கின்ற  குருமார்களை வணங்கிஅருளாளர்களை நினைவுகூர்வதற்காக வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமா தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்மை நல்வழி நடத்துகிற, நாம் இதுவரை அறிந்திராத இறையை நமக்குக் காட்டி அருளிய நேரிடை குருவையும், உறுதுணையாக இருக்கின்ற அனைத்து அருளாளர்கள் திருக்கூட்ட மரபினையே பணிந்து அவர்கள் அனைவரின் ஆசிகளை ஏற்றுக் கொள்வோம். குருபூர்ணிமா கொண்டாடாத மற்ற நாட்களில் என்ன செய்வது? எனவே அருளாளர்களை எப்போதும்  எவ்வாறு நினைவில் கொள்வது என்பது பற்றி சிந்திப்போம். இதே போன்று அருளாளர்களின் ஆசியும், அருளும் எல்லா ஆன்மீக சாதகர்களுக்கும் கிடைத்திட வேண்டிக்கொண்டு  இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம்.

        குருவின் பூரண ஆசியைப்  பெறுவதற்காக இந்நாள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறு குருவிடம் ஆசி பெறவேண்டும் என்பது பற்றி இன்று சிந்திக்கலாம்.  குரு எப்போதும் பாரபட்சமின்றி ஆசியினைத் தந்து கொண்டேதான் இருக்கிறார்.  எந்தவித பாகுபாடுமின்றியும் எல்லோருக்கும் ஒளிவு மறைவின்றி சமமாக ஒரே கல்வியினைத்தான் தந்து கொண்டிருக்கிறார். இது இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடு. ஆனால் அதனைப் பெற்றுக் கொள்ளும் அருட்பாத்திரமாகிய சீடன் எவ்வாறு பெற்றுக் கொள்ள  வேண்டும் என்பது பற்றியதுதான் இன்றைய சிந்தனை. எனவே இந்த புனித நாளிலே, சிந்தனைக்காக,  ‘அருளாளர்கள் உலகம்’ பற்றி சிந்திப்போம்.  வாழ்க வளமுடன். அருளாளர்கள் உலகம் என்று தனியாக உள்ளதா?

       அருளாளர்களை மகரிஷி அவர்கள் கூறியுள்ள முறைப்படி வணங்கி நினைவு கூர்வோம். 

       “அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

       அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.”   என்கிறார்  மகரிஷி அவர்கள்.

      மகரிஷி அவர்கள் அருளியுள்ள குருவணக்கப்பாடல் பற்றிய ஆய்வு:

    FFC-62 -PIC - மகான்களின் படம்

    FFC-62-PNG-குரு வணக்கம்- அறிவே-பாடல்

       மகரிஷி அவர்கள் அருளியுள்ள குருவணக்கப்பாடலில் முதலில் தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கர் ஆகிய அருளாளர்களை, அவர்களின் நாமங்களை செப்பி, நினைந்ததோடுமட்டுமல்லாமல், மனித இன பரிணாமத்தில்(தன்மாற்றம்) முதன் முதலில் தோன்றிய மனிதனை முதல் மனிதன் என்று சொல்வதுபோல், என்றைக்கு மனிதகுலத்தில் ஒருநாள்  முதல் மனிதர் இறையை உணர்ந்தாரோ அந்த அருளாளரிலிருந்து இன்றுவரை இறையை உணர்ந்த அனைத்து  அருளாளர்களையும் வணங்கி ஆசி பெறச் சொல்கிறார் மகரிஷி அவர்கள்.   

        தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராலிங்கர் ஆகிய நான்கு அருளாளர் பெருமக்களும் மகரிஷி அவர்களுக்கு எவ்வாறு குருவாக அமைந்தனர் என்பது மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தும் மற்றும் மகரிஷி அவர்களே கூறியதிலிருந்தும்  அறிய முடிகின்றது.   அந்த நான்கு குருமார்களின் பெயரோடு குருவணக்கப்பாடலை முடித்திருக்கலாம் மகரிஷி அவர்கள்.  இருப்பினும் மேலும்,

     “அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

       அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.” 

    ஆகிய இரண்டு வரிகளையும் சேர்த்து குருவணக்கப் பாடலை இயற்றியுள்ளார்.   அது அருட் கவிஞரின் சுதந்திரம்.  அப்படி நினைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்யாமல் இருக்க முடியவில்லை. இப்பாடல் இயற்றிய நாள் 11-08-1981 ஆகும்.  இதற்கு முன்னரே மகரிஷி அவர்கள் உலக சமுதாய சேவா சங்கத்தை தோற்றுவித்து அதன் மூலமாக மனவளக்கலையை போதிக்க ஆரம்பித்துவிட்டார்.  ஞானக்களஞ்சியத்தில் பகுதி ஒன்றில்  மூன்று குருவணக்கப்பாடல் இடம் பெற்றுள்ளன.  இப்பாடல் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளது.  இப்பாடலுக்கு மட்டும் இயற்றிய நாள் தெரிகின்றது. மற்ற  இரண்டு பாடல்களுக்கு  இயற்றிய நாள் தெரியவில்லை. 

        மூன்றாவது பாடல் இயற்றிய நாள் தெரிவதை, உற்று நோக்கும்போது,  அப்பாடலின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது.  அதாவது முதன் முதலில் மனவளக்கலையை பயிற்றுவிக்கும்போது அப்பாடல் இயற்றப்படவில்லை என்றேதான் தெரிகின்றது.  நாளடைவில் மனவளக்கலை பரவி வருகின்றபோது, இப்பாடலில் உள்ள உண்மையை மனவளக்கலை பயிற்சியாளர்களுக்கு அறிவித்து அவர்கள் எளிதாக பயிற்சியில் வெற்றி பெறவேண்டும்  எனக்கருதி இப்பாடலை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள்.  மகரிஷி அவர்கள் என்ன கருதினாரோ, அதனை நாமும் அறிந்து கொண்டு அவ்வரிகளின் அறிவுறுத்தலுக்கு இணங்க செயல்பட்டு,  மனவளக்கலையின் பயனை விரைவில் அடைந்திடுவோமாக!

        மகரிஷி அவர்கள் பெரும்பாலும் பாடல்களை எட்டுவரிகளில் இயற்றுவது அவருக்குள்ள பழக்கம். அவ்வாறே  முதலில் நான்கு அருளாளர்களின் நாமங்களைச் செப்புவதோடு நிறுத்திவிட்டு, அவர்களை நினைவு கூறச்செய்யும்படி பாடலை முடித்திருக்கலாம்.   ஆனால் எட்டுவரிகள் எழுதுவது பழக்கமாக உள்ளதால், ஆறுவரிகளோடு மேலும் இரண்டு வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.  அவ்வரிகளின் பொருளென்ன?  முக்கியத்துவம் என்ன?  அதனை அறிந்து கொண்டால் அவ்வரிகளில் கூறியதை முழுமையாக செயல்படுத்த முடியும்.  

    பண்பேற்றத்திற்கு  எளிய உறுதியான வழி:

         குருவணக்கத்தில்  மற்ற அருளாளர்களின்  ஆசியினையும் பெற அவர்களையும் நினைவு கூர்வது என்பது வெறும் சம்பிரதாயமாகிவிடக்கூடாது.  உள்ளார்ந்த அன்போடு எல்லா அருளாளர்களையும் நினைத்து, ‘அவர்களது உயர்வை மதித்து, ரசித்து’, போற்றி போற்றி வணங்க வேண்டும்.  இயல்பாகவே,  பிறர் உயர்வை மதித்து, ரசித்தல் என்பது,   நாம் அதில் உயர்ந்து வருவதைக் காண்பிக்கின்றது. இதுவே இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் என நாம் கூறிவருகிறோம்.  எந்த ஒருகலையிலும் சிறந்து விளங்கியவர்கள் தனது வெற்றியைப்பற்றிக் குறிப்பிடும்போது, தனக்கு முந்தையவர்கள் யாராவது சிறந்து விளங்கியவரை  மாதிரியாக ‘Role Model’ வைத்துக் கொண்டதாகக் கூறுவது வழக்கம்.  அதேபோன்று இறை-உணர்-ஆன்மீகத்தில் பண்பேற்றமே அடிப்படையாக உள்ளதால், அப்பண்பேற்றத்தில் உயர்ந்து பண்பாளராக பரிணமிக்க, யாரை ‘மாதிரி புருஷராக’க் கொள்ள முடியும்?   மனவளக்கலைஞர்களுக்கு, அறிவின் இருப்பிடம்(தெய்வத்தின் இருப்பிடம்), அதாவது தெய்வத்தை கருத்தியலாகக் காண்பித்தும் செய்முறையில் அவரவர்களே தெய்வத்தை உணர்ந்து அனுபவிக்க வழிகள் காட்டிய குருதேவரான, நவயுக வியாசரான வேதாத்திரி மகரிஷி அவர்களேதான் இருக்க முடியும்.  மகரிஷி அவர்கள் பண்பேற்றம் எந்த விஞ்ஞான அடிப்படையில் அமைந்துள்ளது என்பதனைக் கண்டுபிடித்து அதனை இயல்பூக்க நியதி என்கிறார். அப்பாடலை இந்நன்னாளில் நினைவு கூர்வது சாலச் சிறந்தது,

    FFC-70-எப்பபொருளை- to post on 28-03-15

        மற்றோர் இடத்தில் உரைநடைப் பகுதியில் “தான்  உயராது, மற்றவர்களின் உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது’  என்கிற பண்பேற்றத்திற்கு தொடர்பான உண்மையினைத் தெரிவிக்கின்றார் கிடைத்தற்கரிய குருவான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  இதனைத்தான், இதன் பயனை அனுபவிக்கின்ற நாம் அவர் கூறிய இயல்பூக்க நியதியின்(தேற்றம்-theorem as in Maths) கிளைத்தேற்றம்(corollary) என்று அழைக்கிறோம். பண்பேற்றத்திற்கான வழியினைக் கூறி அது இயல்பூக்க நியதி என்கிறார்.  பூர்வபுண்ணியத்தால், இறைஅருளால், பண்பேற்றம் பெற, குருவின் சேர்க்கைப் பெற்ற ஆன்ம சாதகனின்  பண்பில் ஏற்றம் பெறுவதற்கு,  மனவளக்கலையில், தற்சோதனைப் பயிற்சி இருந்தாலும், அதற்கு வலிவூட்டுவது இதனைத்தவிர வேறு வழி ஏதுமில்லை/ஏதும் தெரியவில்லை. அவ்வாறு பண்பேற்றம் பெற்று வரும்போது.  பொருள், செயல், குணம், உயிர்(ஆன்மா) ஆகிய நான்கினையும் அடிக்கடி நினைந்து வந்தால் அப்பொருளின் தன்மையாக, அறிவு பண்பில் ஏற்றம் பெற்றுவரும் பெருமையைத்தான்  இயல்பூக்க நியதியாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  அவ்வாறு, இயல்பூக்க நியதியின்படி ஒருவர் ‘தான் பண்பேற்றம் பெற்றுவருவதனை’ எவ்வாறு அவரே அறிந்து கொள்வது என்பதற்கான அளவுகோல்தான் இயல்பூக்க நியதியின் கிறைத்தேற்றம் என்பது. 

    நா சுவை அறியும் கருவி மட்டுமல்ல:

       மகரிஷி அவர்கள் கூறும் இயல்பூக்க நியதியின்படி பண்பேற்றத்தில் உயர்வு அடைந்து வரும்போது, ‘நா’ சும்மா இருக்காது.   ‘நா’, சுவைப்பதற்கு மட்டும் உருவான கருவி அல்ல. மற்ற உயிரினங்களுக்கு ‘நா’, சுவை அறியும் கருவியாக மட்டுமே இருக்கும். ஆனால் அறிவு, ஆறாம் நிலைக்கு வந்தபோது, நாவை சுவை அறியும் கருவியாக மட்டுமின்றி, சொற்களை உதிர்க்கும் கருவியாகவும் செயல்படுத்துகின்றது. ஆகவேதான் ஆன்றோர்கள் ‘நா, எப்போதும் நல்லவற்றையேப் பேச வேண்டும்’ என்று அறிவிற்கு அறிவுருத்துகின்றனர். நன்றி உணர்வை சொல்லாகத் தெரிவிக்க அறிவு நாவைத்தான் பயன்படுத்துகின்றது. எனவே அப்போது ‘நா’ சொற்களை உதிர்க்கும் நல்ல கருவியாக செயல்படுகின்றது.  

        ஆகவே, இயல்பூக்க நியதியின்படி பண்பில் உயர்வு அடைந்து வரும்போது நன்றி உணர்வைத் தெரிவிக்கும் முகத்தான், உணவை சுவைக்க நாவை கருவியாக பயன்படுத்தும் அறிவு, பண்பேற்றத்திலும், எதனை நினைத்து இயல்பூக்க நியதி தன்னிடம் செயலாகிக் கொண்டிருக்கின்றதோ, அப்பொருளின் தன்மையை, அறிவு மதிப்பதோடு நின்று விடாது, ரசிப்பதுடன், அதன் அருமை, பெருமைகளை நாவைக் கொண்டு வார்த்தைகளால் புகழ்ந்து எடுத்து இயம்பும் தன்மையுடையது அறிவு. எனவே பண்பேற்றத்தில் உயர்ந்து வரும்போது இயல்பாகவே நடைபெறுகின்ற ஒன்று இது. எனவேதான் அவ்வைத்தாய் தனது மூதுரையில் ஒர் பாடலில் “நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே” என்கிறார். நல்லார் குணங்களை எது உரைக்க முடியும். அறிவுதான் நாவைக் கருவியாகக் கொண்டு உரைக்க முடியும்?   அப்பாடலையும் இந்நன்னாளில் நினைவு கூர்வவோம்.

     அவ்வையார் இயல்பூக்க நியதிபற்றி ஏதாவது கூறியுள்ளாரா?

        அவ்வைத்தாய் தனது மூதூரையில் ஓர் பாடலில் நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே என்கிறார். அப்பாடலை நினைவுகூர்வோம்.

    moodhurai-ovvaiyar

                  சிறுவயதில் தமிழ்ப்பாடத்தில் படித்திருப்போம்.   ஆனால் அன்று மனிதனின் பண்பேற்றத்தில் உள்ள  இயல்பூக்க நியதி என்கின்ற அறிவியல் இப்பாடலில் இருக்கின்றது என்பதனை அறியவில்லை.  ஆனால் இன்று நாம் அறிகிறோம் கிடைத்தற்கரிய குருவின் தரிசனத்தால்.  இதுவன்றோ இறை-உணர்-ஆன்மீக  முன்னேற்றத்திற்கு திருப்புமுனையை தந்துள்ளது வேதாத்திரியம் என்பது.  வாழ்த்துவோம் வேதாத்திரியத்தை.  இறைவனை போற்றி போற்றி என்று வாழ்த்துவது போன்று வேதாத்திரியத்தை. வாழ்த்தி, வாழ்த்தி,  வேதாத்திரியம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று உலகை உய்விக்க, நம் மௌன ஊடகமான எண்ணத்தை பயன்படுத்துவோம்.    அவ்வையார் பண்பேற்றத்திற்கு இயல்பூக்க நியதி என்று சொல்லி, அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறாமல் பண்பேற்றத்திற்கான வழிகளைக் கூறியுள்ளதும், திரூமூலர், மகரிஷி அவர்கள் கூறியுள்ளதும் ஒன்றே எனத் தெரிகின்றது. உண்மையை சொல்வது என்பது யார் எப்போது சொன்னாலும் ஒன்றாகத்தானே இருக்கும்/இருக்க முடியும்!

     இறை-உணர்-சாதகனிடம் தோன்றும் சமிக்ஞை:   

         இறை-உணர்-சாதகன் பண்பேற்றம் பெற, எப்பொருளை, எக்குணத்தை, எச்செயலை, எவ்வுயிரை நினைக்க வேண்டியிருக்கும்?  நினைக்க வேண்டும்? சாட்சாத் பிரம்மமே குருவாக வந்தவரின் குணத்தையும், செயலையும் அடிக்கடி நினைந்து வருவதுதானே நியாயமும், இயல்பும்.  இந்த சமிக்ஞை ஒரு இறை-உணர்-சாதகனிடம் மேலெழுந்து தெரியுமானால், 

        “எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

    தப்பாது குருஉயர்வு மதிப்போர் தம்மைத்

        தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்,”

    என்கின்ற வேதவாக்கின்படி அச்சாதகன் (மகரிஷி அவர்கள் கூறியுள்ளதுபோல்), இப்பிறவியிலேயே பிறவிப்பயனை எய்துவது திண்ணம் என்கிறார் மகரிஷி அவர்கள். 

         நாளை (20-07-2016—புதன்)  அருளாளர்கள் உலகம் பற்றி மேலும் சிந்திப்போம்.  

    வாழ்க அறிவுச் செல்வம்                                                         வளர்க அறிவுச் செல்வம்



    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்!

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய:  click here.

    https://www.prosperspiritually.com/category/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

    அல்லது

    நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல click here

    https://www.prosperspiritually.com/contact-us/

    நன்றி!

    வாழ்க வளமுடன்!!


    Loading

  • FFC-207-எண்ணியது நிகழ்வதில் கருமையத்தின் பங்கு என்ன? 3/3


    வாழ்க மனித அறிவு                                                                         வளர்க மனித அறிவு

    எண்ணியது  நிகழ்வதில்  கருமையத்தின் பங்கு என்ன? 3/3

    FFC-207

                                                                                                     17-07-2016—ஞாயிறு

    திண்ணிய நெஞ்சத்தால்தான் எண்ணியதை அடையமுடியும்   

    eNNiya mudidhal_FFC-207_17-07-2016

    திண்ணிய நெஞ்சம் வேண்டும்:

        ஞானி மகாகவி பாரதியார் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அன்னையை வேண்டுதல்

    எண்ணிய முடிதல் வேண்டும்

     நல்லவை எண்ணல் வேண்டும்;

    திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

     தெளிந்த நல்லறிவு வேண்டும்;

    பண்ணிய பாவமெல்லாம்

     பரிதிமுன் பனிபோல,

    நண்ணிய நின்முன் இங்கு

     நசித்திடல் வேண்டும் அன்னாய்.

                   …. மகாகவி பாரதியார்.  

    மகாகவி பாரதியாரின் இப்பாடலுக்குள்  புகுவோம்.  இப்பாடலின் பொருளை அவரிடமே கேட்டு தெரிந்து கொண்டால் என்ன அறிவோமோ அவ்வாறே அறிவதற்காக மகாகவி பாரதியாரின் அறிவாற்றலுடன் நம் அறிவாற்றலையும் இணைத்துக்கொள்வோம்.  பெரும்பாலும் இப்பாடலின் முதல் நான்கு வரிகளை மட்டுமே அநேக இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதை அறிவோம்.  கடைசி நான்கு வரிகளை  பயன்படுத்துவது என்பது அரிதாக உள்ளது.  இங்கு நாம் எல்லா வரிகளுக்குமே மகாகவி பாரதியாரிடமிருந்து, பொருளும், விளக்கமும் கேட்டறிவோம்.

        இப்பாடலில், வேண்டுதல்கள் ஐந்து போல் இருந்தாலும் நான்கு வேண்டுதல்களும்(wants),  இரண்டாவது வேண்டுதல் உறுதி மொழியாவும் உள்ளன. இதற்கும் மேலாக  ஒரு ஒப்புக் கொள்ளுதலும்(confession) உள்ளன.

    1)   எண்ணிய முடிதல் வேண்டும்.

    2)   நல்லவை எண்ணல் வேண்டும்.(இது வேண்டுதல் மட்டும் இல்லை. உறுதிமொழி கலந்த வேண்டுதலாக உள்ளது. இறைவிக்கு அளிக்கும் ‘நல்லவை எண்ணுவேன்’ என்கின்ற உறுதி மொழியை அளித்துவிட்டு, அதற்கு விழிப்போடு தான் இருக்க, இறைவி துணையாக இருக்க வேண்டும் என்கின்ற வேண்டுதலும் உள்ளது.)

    3)   திண்ணிய நெஞ்சம் வேண்டும்.(நல்லது என எண்ணியதை முடித்திட மனதிற்கு உறுதியும், தைரியமும் வேண்டும். தளரா விடாமுயற்சி வேண்டும்.)

    4)   தெளிந்த நல்லறிவு வேண்டும். (எல்லோரிடமும் அறிவு இருக்கின்றது.  ஆனால் தெளிந்த நல்லறிவு என்பது அறிவை  அறிந்தவரிடம் மட்டுமே உள்ளது. நல்லறிவு வேண்டும் என்பது சரி. நல்லதையே எண்ணுவதற்கும், நல்லதையே பேசுவதற்கும், நல்லதையே செய்வதற்கும் நல்லறிவு அவசியமாகின்றது என்பது தெரிகின்றது.  ஆனால், அதிலும் தெளிந்த என்கின்ற வார்த்தையை சோ்த்திருக்கிறார் பாரதியார்.  ஏன் எல்லாவற்றிலும் நல்லதே இருக்க வேண்டும்  என்கின்ற விளக்கமாகியத் தெளிவு வேண்டும். மனித சமுதாயத்தில் பெரும்பாலும், தெளிந்த நல்லறிவு இல்லாமையால்தான் இப்பாடலே இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது பாரதியாருக்கு.)

    5)    ஒப்புதல் அளித்தல்:— பண்ணிய பாவமெல்லாம் (அறியாமையில் குற்றவாளி உணர்ச்சி வயத்தில் குற்றம் செய்துவிட்டு, நீதி மன்றத்தில் நீதிபதியிடம்  தான் குற்றம் செய்து விட்டேன் என ஒப்புதல் வாக்குமூலம் (confession statement) கொடுப்பது போல், இறைவியின் சன்னிதானத்தில்— ‘இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் பாவங்கள் செய்து விட்டேன் என்கின்ற ஒப்புதல் வாக்கு மூலம்)

    6)   நசித்திடல் வேண்டும். (செய்த பாவங்களெல்லாம் நீக்கிட வேண்டும்)

     கருத்துரை:– அதாவது ஒவ்வொரு மனிதனும் அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சிவயத்தாலும், செய்த செயல்களின் விளைவுகளாகத் தனிமனிதத் துன்பங்களும், சமுதாயத்துன்பங்களும் மல்கிவிட்டன.  அதுதான் உலகில் அமைதியின்மைக்கு காரணமாக உள்ளது.  ஆகவே ஒரு(இந்த) காலகட்டத்திலாவது, தன்னுடைய பாவங்களை உணர்ந்து, அவை நசிந்திட, இனிமேலாவது, நல்ல எண்ணங்களை எண்ணி, அவ்வாறு எண்ணுகின்ற எண்ணங்கள் நிறைவேற (உலகில்  அமைதி நிலவவேண்டும் என்பது கூட ஓர் உயர்ந்த எண்ணம்) வேண்டும் என இறைவியை வேண்டச்சொல்கிறார்.

         திருவள்ளுவர் மற்றும் ஞானி மகாகவி பாரதியார் கூறும்  வைரவரிகளையும், மகரிஷி அவர்கள் கருமையம் தூய்மையாக இருக்குமானால் எண்ணம் நிறைவேறுவது பற்றி கூறும் வைரவரிகளையும் ஒப்பிட்டால் தெரிய வருவது திருவள்ளுவர் கூறும் ‘செயல் ஆற்றுவதில் வேண்டிய உறுதி, பாரதியார் கூறும் திண்மை, ’ மகரிஷி அவர்கள் கூறும் கருமையத்தூய்மையால் கிடைக்கப் பெறுகின்றது என்பது தெரிகின்றது,  மகரிஷி அவர்கள்  “ஞானி நினைப்பது நடக்கும்.  ஞானி நடக்கக் கூடியதைத்தான் நினைப்பான்” என்பார்.  காரணம்  ஞானி கருமையத்தூய்மை அடைந்தவர்.  எல்லோருமே எண்ணுவது நிகழ வேண்டும் என நினைக்கின்றனா்.  அதற்கு கருமையத்தூய்மை அவசியம் என்பதனை உணர வேண்டும்.

         கருமையத்தூய்மை அடைந்தவரின் மனதில் தேவையற்ற எண்ணங்கள் (ஆசைகள்) இராது.  எண்ணங்கள் மிகக் குறைவாகவே  எழும். எண்ணிக்கையில் குறைவான, நியாயமான எண்ணங்கள்  இருக்கும்போது, மனஆற்றல் அழுத்தத்துடன் ஒவ்வொன்றாக முடித்திட, செயல் ஆற்றுவதற்கு  உறுதி அதிகமாக இருக்கும்.   வாழ்வின் நோக்கம் உறுதி செய்யாத நிலையில்,  தேவையற்ற எண்ணங்கள் அதிகமாக இருப்பதால்,  எல்லாவற்றையும் செய்து முடிக்கும் உறுதிக்கு வலிவு குறைந்துவிடும்.

          ஆகவே தற்சோதனைக்கு உட்படுத்தாத எண்ணங்கள், தேவையற்ற ஆசைகள், வாழ்க்கைக்கு முரணான ஆசைகள் கருமையத்தூய்மையைக் கெடுக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

     வேதாத்திரி மகரிஷி அவர்கள் எண்ணத்தின் வலிமையைப்பற்றிக் கூறும் கவிகளைக் கவனிப்போம்.

              எண்ணத்தின் வலிமை

         “எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்.

          எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்.”

     

                  எண்ணத்தில் நிறைந்திடு

        “விண்ணிலும் மண்ணிலும் வியாபக மான நீ

        எண்ணத்தில் நிறைந்திடு! செய்கையில் சிறந்திடு!”

                   தீய எண்ணம்

       “உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில்,

       உள்ளத்தி லெழும் ஒழுங்கற்ற எண்ணமே”.

     ஆகவே எண்ணம் நிறைவேற வேண்டுமெனில் கருமையத்தூய்மை அவசியமாகின்றது என்பதனைக் கவனிக்க வேண்டும்.  எல்லோருக்கும் தான் எண்ணுவதெல்லாம் நிறைவேற வேண்டுமென்கின்ற ஆசை இருப்பதால் கருமையத்தூய்மையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

          உயிர் ஒரு மறைபொருள்.  இருப்பினும்  உயிர் மீது எல்லோருக்குமே அக்கறை உள்ளது போல் கருமையம் மற்றும் அதனைத் தூய்மைப்படுத்துவதன் மீது அக்கறை இருக்க வேண்டும்.  உயிர்  ஒரு மறைபொருளாக இருந்து, கண்களால் பார்க்க முடியாவிட்டாலும், உயிர் இருப்பதை முழு மனதோடு ஒப்புக்கொள்கின்றான் மனிதன்.  காரணம் உயிர் பிரிவதால், மரணம் சம்பவித்து வாழ்க்கையே முடிந்து விடுவதை மற்றவர்களின்  இறப்பிலிருந்து அறிந்து கொள்கின்றான்.  இருப்பினும், மரணத்தால், உடல் வாழமுடியாமல், புலன்இன்பம் அனுபவிக்க முடியாமல் பயனற்றுப்போவதை, உடல் மீதுள்ள பற்றால் அவனால் ஏற்றுக்கொள்ள  முடிவதில்லை.  

           எனவே எளியமுறை குண்டலினியோகம் பயிலாதவர்கள்கூட, மறைபொருளான உயிர் இருப்பதை ஒப்புக் கொள்கின்றனர். யார் ஒப்புக் கொள்கிறார்களோ, இல்லையோ, உயிர் மனித உடலில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. உயிர் இருப்பதுபோல், உயிருடன் தொடர்புடைய கருமையம் அல்லது ஆன்மா (Registry of recorded events taking place while living) ஒன்று மறைபொருளாக மனிதனிடம் இருப்பதனையும் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்.

         ஒப்புக் கொண்ட பிறகு,  பள்ளிப்படிப்பு படித்த மற்றவர்கள், தங்களின் இதயத்தை நேரிடையாகப் பார்க்க முடியாவிட்டாலும், எவ்வாறு இதயம் உடலில் இருக்கின்றது என்று நம்புவதில் உறுதியாக இருக்கின்றார்களோ, மற்றும் இதயத்தின் வடிவம், இயக்கம் பற்றிய விளக்கங்கள் அறிந்தும் இருக்கின்றார்களோ அதுபோல் கருமையம் இருப்பது பற்றியும், அதன் இயக்கம் பற்றிய தெளிவையும் பெற வேண்டும். இதுவரை, ஜீவாத்மா(மனிதன்), பரமாத்மா(கடவுள்) என்றும் ஜீவாத்மா என்றும் அழியாதது என்றும் ஆன்மிக நூல்கள் கூறியிருந்தாலும், அவை மனிதனால்-ஆறாம் அறிவால்  கருத்துருவாக புரிந்து கொள்ள முடியவில்லை.

         ஆனால், இந்த நிலையில், இறை, பரமாத்மாவாகிய தன்னைப் பற்றியும், தான் ஜீவாத்மாவான வரலாற்றையும், தான் எவ்வாறு ஆட்சியின்றி ஆளுகின்ற விதத்தையும், அதனை நவயுக வியாசர், நம் குருதேவர்  உலக சமுதாயத்திற்கு எடுத்து இயம்புகின்ற விதத்தில் விளக்கியுள்ளது. 

            அன்று வேதங்களை எல்லாம் தொகுத்து கொடுத்தவர் வேதவியாசா் எனப்படுகிறார்.  இன்று இறையின் மறைபொருள் விளக்கங்களை, தான் நேரில் பார்த்தவாறே, தன் அனுபவத்திலும், உள்ளுணர்விலும் அறிந்ததை, அதேபோன்று பிறரும் எளிதாக அறியவும், மேலும், மனிதன்  எவ்வாறு எதார்த்தமாக வாழவேண்டும் என்றும் எல்லாவற்றையும் தொகுத்து இணைத்துக் கொடுத்த  நம்அருட்தந்தை அவர்களை, நவயுக வியாசர் என்று கூறாமல்  இருக்க  முடியாதன்றோ! இது பொருத்தத்திலும் பொருத்தமன்றோ!

          ஆகவே, ‘உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது’ என்று நமக்கெல்லாம் நம் குருதேவர் உறுதி அளித்துள்ளதால், நம் குருதேவர், எவ்வாறு கருமைய உண்மைகளை அறிந்து சமுதாயத்திற்கு கூறியுள்ளாரோ, அது போல் நாமும் கருமையத்தைப்பற்றியும், அதன் மதிப்பையும் உணர்ந்து மதித்து அதனைத் தூய்மையாக வைத்துக் கொண்டு பிறர்க்கும் எடுத்துச் சொல்வோம்.  எனவே, நாம்  அதன் இருப்பு, இயக்கம் பற்றி உறுதிப்படுத்தி, அதனைத் தூய்மை செய்வதில் அக்கறையோடு இருக்க வேண்டும்.

          கருவில் திருவுடையவர்களுக்கு   மறைபொருள் விளக்கங்கள்  அதிகமாகத் தேவையில்லை.  அறிவை அறிந்த குருநாதரின் கருணையானப் பார்வை திருவுடையவரின் மீது விழுந்தாலே  போதுமானது; திருவுடையவரிடம் மலர்வதற்காகக் காத்திருந்த ஆன்மீக மொட்டு மலர ஆரம்பித்துவிடும்.  மற்றவர்களுக்கு இயற்கையிலுள்ள மறைபொருட்களின் இரகசியங்கள் விளங்க விளங்கத்தான், தன்முனைப்பு நீங்க ஆரம்பித்து மனம் திண்மை பெறும்.  திண்மை பெற்ற மனம்தான் உறுதியுடன் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும்.  அதனால்தான் ‘திண்ணிய நெஞ்சம் வேண்டும்’ என்று பாரதியாரும், “எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்.  எண்ணத்தில் உறுதியும் (திண்மை) ஒழுங்கும் அமைந்திடில்.” என்று மகரிஷி அவர்களும் கூறுகிறார்கள்.

         கருமையத்தூய்மை என்பது ஏதோ கருமையம் சுத்தமாக இருப்பதற்காக மனிதன், செய்யும் பணி அல்ல.  மனிதனுடைய இன்ப வாழ்விற்கும் அவனுடைய  நல்வம்சாவளிக்காகவும்(good progeny as an asset to the family and society) கருமையத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மனிதனின் முத்தொழில்களையும் பதிவுகளாக ஏற்றம்(upload) செய்யும் கருமையம் ஒன்று இல்லாமல், எவ்வாறு உயிரினம் வாழ முடியும்? ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கையும் கருமையத்தின் பதிவுகளையும், அதன் தரத்தையும் வைத்துதானே அமைகின்றது.

         உயிர் மீது எவ்வளவு அக்கறை உள்ளதோ, அதனைவிட அதிக அக்கறை கருமையத்தின் மீதும்,  அதன் தூய்மையைப் பராமரிப்பதிலும் இருக்க வேண்டும்.  உயிர் இருந்தால் எப்படியும் வாழ முடியும் என்பது உண்மைதான் என்றாலும், கருமையத்தூய்மை இருந்தால்தான் எண்ணிய எண்ணமும் நிறைவேறும்; ராஜவாழ்க்கையும் (liberated life)  வாழ முடியும்.  இங்கே ‘ராஜவாழ்க்கை’ என்பது சொல்லளவில் சொல்லப்படுவதல்ல. புலன்களுக்கும், மனம்போன போக்கிற்கும், அறிவு அடிமையாகி வாழாமல், எப்போதும் துன்பமிலா வாழ்வு வாழ்வதாகும். கருமையம் பற்றிய முழுமையானத் தெளிவினைப் பெறுவது அவசியமாகும்.  அதற்கு திருவேதாத்திரியத்தின் ‘கடவுளும் கருமையமும்’, ‘மனம்” ஆகிய நூல்களை மீண்டும் மீண்டும் படித்து தெளிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

         அந்நூல்களில் உள்ள உண்மைகளை மீண்டும், மீண்டும்  படிக்க, கருமையம், அதன் இருப்பு மற்றும் அதன் நீதிதவறா பணிகளான பதிதல் மற்றும் விளைவுகளை வழங்கும் நுட்ப நிகழ்வுகளை நேரிடையாக காண்பது போன்ற உணர்வு ஏற்பட்டு, நமது மனமானது கருமையத்தூய்மையின் மீது அதிக அக்கறை செலுத்தும்.  கருமையத் தூய்மைக்கேற்பவே மனித வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும் வாய்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

          கருமையத்தூய்மையும் எண்ணம் நிறைவேறுதலும் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்களின் வைர வரிகள் நம்மனதில் எப்போதும் சுழன்று கொண்டே விழிப்புடன் இருக்க, அவ்வரிகளை மீண்டும் ஒரு முறை  நினைவு படுத்திக் கொண்டு இன்றைய சிந்தனையை நிறைவு செய்வோம்.

      “கருமையம் தூய்மையாக இருக்குமானால், என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்யக் கூடாது என்பதும் தெரியும்.  எண்ணுவதைச் செய்வதும், செய்ய முடிந்ததை, செய்யத்தக்கவாறு எண்ணுவதும் மனிதனுக்கும் இயல்பாகிவிடும்.”   வேதாத்திரி மகரிஷி அவா்கள். 

           இதுபோன்ற வாழ்வியல் உண்மைகள் அனைத்தும், மனிதனின் பள்ளிக்கல்வி—மாணவப் பருவத்திலேயே முழுமையாகச் சென்றடையச் செய்து மனிதவளத்தை பெருக்கியும், அதன் உச்சத்திற்கே உயா்த்தியும் வளமிகு மனித சமுதாயத்தை, திருவேதாத்திரியம் உருவாக்கி வருகின்றது என்றால் மிகையாகாது.  போற்றுவோம் திருவேதாத்திரியத்தை.  வாழ்த்துவோம் திருவேதாத்திரியத்தை.   வாழ்க திருவேதாத்திரியம்    வளர்க திருவேதாத்திரியம்.

         வாழ்க அறிவுச் செல்வம்                                             வளர்க அறிவுச் செல்வம்


    அறிவிப்பு  

     வாழ்க வளமுடன்.

                        செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு  இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம். 

            அன்று அருளாளர்கள் உலகம் பற்றி சிந்திப்போம்.

    வாழ்க வளமுடன். 

    www.prosperspiritually.com


     

    Loading