என்ன கூறுகிறார் உலக நல தொண்டரான நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
வாழ்வு என்பது என்ன?
வாழ்வில் வளம் என்பது என்ன?
வினை, உயிர், மெய், அறிவதால் வளம் கிடைக்கின்றதா? இவற்றை அறிவதால் எவ்வாறு வளம் கிடைக்கும்?
பஞ்சதன்மாற்றங்களின் வகை தெரிவான் கட்டே உலகு என்று 20 நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் உரைத்தது போல அவரது 20 ஆம் நூற்றாண்டின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வினை, உயிர், மெய் ஆகியவற்றின் வகை அறிய என்ன செய்தார்?
பகலிரவாய் எண்ணி எண்ணி என்றால் என்ன?
ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்தேன் என்பதற்கு என்ன பொருள்? உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது என்கின்ற உறுதியை நினைவில் கொண்டு மற்ற பணிகளுக்கும்-கடமைகளுக்கும் குந்தகம் ஏற்படாமல் சிந்தித்து ஆன்மபலன் பெறலாமே?
விடாமல் தொடர்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்ததால் அவர் அடைந்த பலன்கள் என்ன? நாமும் அவ்வாறே பலன்களை அடையலாமே!
வினாக்கள் எல்லாம் விடையாயிற்று என்றால் என்ன பொருள்?
ஊழ் உணர்ந்தேன் என்றால் என்ன பொருள்?
ஊழ், உயிர், வினை உணர்ந்தால் வாழ்வில் வளம் பெருகும் என்கிறாரே! இது எளிமையாக உள்ளது அல்லவா?
உயர் தொண்டு என்றால் என்ன? என்ன வகையான தொண்டு மகரிஷி அவர்களுடையது?
தொண்டால் எப்படி மனநிறைவு உண்டாகும்? அந்த மனநிறைவை வரையறுக்க முடியுமா?
சென்ற அறிவிற்கு விருந்தில் (24.06.2020) வள்ளலாரின் திருக்காப்பிட்டுச் செய்தியினை அறிந்தோம். ‘திருத்திடுவோம், அஞ்ச வேண்டாம்’ என்கின்ற சத்திய வாக்கு கொடுத்துவிட்டு ஜோதிமயமானார் வள்ளலார் அவர்கள். ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என ஆதங்கத்துடன் சென்றிருக்கிறார். ஆனால், மகரிஷி அவர்கள், ‘வள்ளலார் கடை விரித்தது விரித்ததுதான். மூடவில்லை. அவரவர்கள் வேண்டும் அளவிற்கு எடுத்துக் கொண்டு செல்கின்றனர்’ என்கிறார். மகரிஷி அவர்கள் இவ்வாறு கூறியது இப்போது திருவேதாத்திரியத்தால் நடந்து கொண்டு வருகின்றது என்பது கண்கூடாகப் பார்க்கிறோம்.
எல்லா அருளாளர்களுமே தான் பெற்ற பேரின்பத்தை இவ்வையகத்தில் உள்ள அனைவருமே அனுபவிக்கவேண்டும் என்றுதான் எண்ணுவர். தங்களது கண்டுபிடிப்புகளை அறநூல்களாக அருளியுள்ளனர். வள்ளலார் அவர்கள் ஏறக்குறைய ஆறாயிரம் பாடல்களை அருளியிருந்தாலும் அவர் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது கடைசியாக திருவாய் மலர்ந்து சொன்ன வாக்குகள் நம்மை மிகவும் ஈர்த்து, நாம் என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வைக்கின்றன. அவர் பூதவுடலைவிட்டுச் சென்றாலும் ஆன்ம உலகில் இருந்துகொண்டு பூவுலகிலுள்ளவர்களுக்கு அருளுவதாக வாக்கு கொடுத்துள்ளார்.
எனவே அவரே நம்மைத் தேடி வந்து அருளுவதற்கு முன்னர் அவரிடம் நாமே அருள் வேண்டி தயாராக இருக்கிறோம் என்பதனை தெரிவிக்கவே இந்த மடலை வரைந்து அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.
அருட்பிரகாச வள்ளலார் அவர்களிடம் இறைமையை வேண்டி அருள் விண்ணப்பம்.
சுவாமி!! தங்களுடைய பாதங்களை வணங்கி, அருள் வேண்டி எழுதும் மடல். கோடி கோடி வணக்கங்கள்.
1) பிறந்த நோக்கத்தை அறிந்து, அதனை இப்பிறவியிலேயே அடைய வேண்டும் என்கின்ற பேரார்வத்துடனும், ஆன்மீகத் துறையிலே மேலும் மேலும் ஈடுபட்டு அறிவுத்தொண்டு செய்து வரவேண்டும் என்பதற்காகவும் தங்களால் அருள்பாலிக்கப்பட்ட வேதாத்திரி மகரிஷி அவர்களின் சிந்தானப்பள்ளியிலே மாணவர்களாக இருந்து வருகிறோம் ஐயா.
2) தாங்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தருளியதை இந்நன்னாளில் நினைவு படுத்திக் கொள்கிறோம். அந்த அருட்செய்தி கூறுவதாவது:- “இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம். கேட்டு திருந்தி எழுச்சி பெற்று திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ஆனால் அச்சில் வார்ப்போம். ஆகாவிடில் மிடாவில் வார்ப்போம். – – – – – இப்போது இந்தவுடம்பில் இருக்கின்றோம், இனி எல்லாவுடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்திவிடுவோம். அஞ்சவேண்டா. சுத்தப்பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம். – – – – – அகவினாத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும் அளிப்போம்.”
வடலூர் சித்தி வளாகத்தில் இன்றும் நாங்கள், தங்களின் திருகாப்பிட்டு அருட்செய்தியினை கண்ணுறும்போது எங்களுக்கு தோன்றிய மகிழ்ச்சியினையும் சிந்தனையையும் மனம் திறந்து தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் ஐயா.
இது வரை எண்ணிலடங்கா அருளாளர்கள் அவ்வப்போது தோன்றி இந்த சமுதாயம் உய்ய அறநெறிகளைக்கொண்ட அறிவுரைகளை அளித்துள்ளனர். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று ஒரு அருளாளா் வாய்விட்டு கூறியிருந்தாலும், அனைத்து அருளாளர்களின் எண்ணமும் இதுதான். அந்த வகையில் வாழையடி வாழையாக வரும் திருக்கூட்ட மரபினில் தாங்களும் வந்துள்ளீர்கள். எனவே ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கின்ற அருளாளர்களின் அருள் நிறைந்த ஆதங்க எண்ணத்தில் இணைந்துள்ளீர்கள். தாங்கள் திருக்காப்பிட்டுக்கொள்ளும்பொழுது திருவாய் மலர்ந்தருளிய செய்தி எங்களையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. ஆன்மாவை நாடும் புத்துணர்ச்சியை அதிகரிக்கின்றது. (The words You have uttered are most merciful, willful and powerful.) காரணம் தங்களின் செய்தி விசித்திரமாக உள்ளது. அந்த அருட்செய்தி மந்திரமாக உள்ளது. எடுத்துக்காட்டாக அதில் வருகின்ற ஆற்றலுடைய அழுத்தம் கொடுக்கின்ற வார்த்தைகளைக் கவனிக்கின்றோம் ‘
1) இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம். 2) இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். 3) எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும் இருப்போம். 4) திருத்தி விடுவோம். 5) அஞ்ச வேண்டாம். ’
3) இந்த அருட்செய்தியின்படி எங்கள் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் தங்கி அருள்பாலித்தீர்கள் என்பதனை அறிகிறோம். இது போல், தாங்கள் திருகாப்பிட்டு இந்த 142 ஆண்டுகளில்(24-01-2016 – 31-1-1874= சுமார் 142 வருடங்கள்) வேறு யார் யாருக்கு அருள்பாலித்தீர்கள் என எங்களுக்குத் தெரியவில்லை ஐயா. ஆனால் ‘திருத்திடுவோம், அஞ்ச வேண்டாம்” என தாங்கள் உறுதியாக மொழிந்துள்ளது போல் தாங்கள் அருட்பாலித்த மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் அணுக்கச் சீடர்களாக இருந்து அறிவுத் தொண்டாற்றி வருகிறோம் என்பதனை நினைக்கும்போது எங்களுக்கு ஆனந்தமோ, ஆனந்தம்.
4) தங்களுடைய நேரிடை அருளாற்றல், மற்றும் தங்களின் அருளாற்றல் கலந்த வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருளாற்றல், மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களின் துணையோடு, தெய்வீகத்தை முழுமையாக மலரச்செய்ய பழக்கப்பதிவுகளுடன் அறிவுப்போர்(தன்னைத் திருத்திக் கொள்ளும் தற்சோதனைப் பயிற்சியினை மகரிஷி அவர்கள் அறிவுப்போர் என்றும் தெய்வீகப்போர் என்றும் கூறுகிறார்) நடத்தி வருகிறோம். அதே நேரத்தில் எங்கள் குருபிரானும் தாங்கள் அருள்பாலித்தவருமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க அருட்தொண்டாகிய அறிவுத் தொண்டு செய்தும் வருகின்றோம் ஐயா.
5) தாங்கள் எல்லாவுடம்பிலும், புகுந்து கொண்டு, எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும் இருந்து கொண்டு திருத்திடுவோம் என அருள் வாக்கு அளித்துள்ளீர்கள். ஆகவே ‘திருத்திடுவோம்’ என்பது வேதாத்திரியத்தின் தற்சோதனைப் பயிற்சியால் நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை அறிய மகிழ்ச்சியாக உள்ளது. ஆகவே வேதாத்திரியத்தின் தற்சோதனைப் பயிற்சியில் மென்மேலும் நாங்கள் முன்னேறி இறுதிப்பயனாகிய பிறவிப்பயனை அடைய இந்நன்னாளில் தங்களின் அருளாசி வேண்டி நிற்கிறோம்.
6) அடுத்ததாக ‘திருத்திடுவோம்’ என பன்மையில் கூறியுள்ளீர்கள். அதாவது எங்களையும், உங்கள் திருச்செல்வர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, உங்களுடன் உலகம் உய்ய–திருத்தும் திருப்பணியில் சேர்த்துக் கொண்டீர்கள் என நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இதனை எங்களுக்கு கொடுத்த நல்வாய்ப்பு எனக்கருதி நாங்கள் மகிழ்ச்சியோடும், பணிவோடும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது போல் அவரது மாணவர்களாகிய எங்களுக்கும் வழிகாட்டியாக இருந்து உதவுமாறு இறைஞ்சி நிற்கிறோம் ஐயா.
7) அடுத்ததாக ‘அஞ்ச வேண்டா’ என்கின்ற ஆறுதலையும், உறுதியினையும் கூறியுள்ளீர்கள். இதனை இரண்டு கோணங்களில்/கண்ணோட்டங்களில் நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒன்று தனிப்பட்ட ஒரு நபருக்கு சொன்னதாகவும், மற்றொன்று ‘உலகம் உய்வதற்குத் திருத்திடுவோம்’ என்கின்ற அருட்தொண்டில் எங்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டமையால் எங்களுக்கெல்லாம், இந்த அருட்தொண்டில் தொய்வு வராமல், நம்பிக்கையுடன் இருந்து பணியாற்றிட, ஆறுதலையும், உறுதியினையும் தெரிவிப்பதாகவே எடுத்துக் கொள்கிறோம்.
8) மேலும் “அகவினத்தார்க்கு சாகா வரமும், ஏனையோர்க்குப் பரிபாக நிலையும் அளிப்போம்” என உறுதியினையும் அளித்துள்ளீர்கள். அகத்தை ‘நான் யார்?’ என ஏற்கனவே வினவியருக்கு சாகா வரமும்,அவ்வாறு வினவுவதற்கு தெரியாமல் தவிக்கும் மற்றவர்களுக்கு ‘அகத்தை நான் யார்?’ என வினவுகின்ற பரிபக்குவ நிலையையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள். இதன் மூலம் வாழ்வின் நோக்கத்தை உங்கள் திருச்செல்வர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிந்தது போல்(ஞா.க. பாடல் எண். 1849 -தலைப்பு இன்பம் இன்பம், இன்பம், இன்பம்) நாங்களும் அறிய, உற்சாக தாகத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் சுவாமி! ஏற்படுத்தி விட்டீர்கள் சுவாமி!
தாங்கள் விரித்த அருட்கடையில், தங்களின் திருச்செல்வரும், எங்களுடைய பூர்வபுண்ணியத்தால் நாங்கள் தரிசித்து வருகின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக அருட்செல்வங்களை பெற்றுக்கொண்டுதான் வருகிறோம் என்பதனை எங்களின் கடமையாக தங்களுக்கு பணிவுடனும் நன்றியுடனும் தெரிவித்துக் கொள்கிறோம். அருட்செல்வத்தை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மிகுதியாக உயர்ந்து வருவதனை தாங்களே அறிவீர்கள் ஐயா. அதற்கு அன்று இருந்த அறிவுத்திருக்கோயில்களின் எண்ணிக்கையை விட இன்று எண்ணிக்கை அதிகரித்துவிட்டதே சான்று. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழியாக தங்கள் அருட்செல்வம் கல்வியில் இணைக்கப்பட்டு விட்டதால் வருங்கால சந்ததிகளுக்கும் இந்த அருட்செல்வம் போய்ச் சேரும்.
9) திருக்காப்பிட்டுக் கொள்ளும்போது,
1) இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். 2) எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும் இருப்போம். 3) திருத்தி விடுவோம். 4) அஞ்ச வேண்டாம். ’
ஆகிய நான்கு அருட்தீர்மானங்களை வலிமையாக சத்திய வாக்காக வெளிப்படுத்திவிட்டு அருளார்களின் ஆன்ம உலகிற்கு சென்றுள்ளீர்கள். அங்கிருந்து கொண்டே இப்பூவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாகாவரம் பெற்ற அருளாளர்களைத் தேடி (உ.ம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்) அவர்களுக்கு மேலும் அருளவும், மற்றவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப சாகா வரமும், பரிபக்குவநிலையை வழங்கவும் முடிவு செய்துள்ளீர்கள். எங்களுக்கு தெரிந்த வரை அந்த முதல் தீர்மானத்தின்படி எங்களது குருதேவரை தேடிவந்து அவருக்கு அருள் பாலித்திருக்கிறீர்கள்.
உங்களது தீர்மானங்களை உற்று நோக்கினால் அருட்துறையில் 1) அருள் துறையில் வெற்றி(இறை உணர்வு) பெற்றவர்கள், 2) அருள் துறையில் பரிபக்குவ நிலையினை அடைந்தவர்கள் (வாழ்வின் நோக்கத்தை முடிவு செய்தவர்கள்), 3) அருள் துறையில் பரிபக்குவ நிலைக்குத் தயாராகின்றவர்கள்,
ஆகிய மூன்று நிலைகளில், இருப்பவர்களுக்கு பொறுப்பும், கடமையும் வைத்துள்ளீர்கள் என அறியலாகின்றது.
யாராக இருந்தாலும் ஒரு நாள் இப்பூவுலகைவிட்டுச் சென்றாக வேண்டும். எனவே இப்பூவுலகை விட்டுச் செல்லும் போது,
அருள்துறையில் வெற்றி பெற்றவர்கள் தங்களைப்போன்ற தீர்மானத்துடன் செல்ல வேண்டும் என்றும்,
பரிபக்குவ நிலையினை அடைந்தவர்கள் இந்த பிறவியிலேயே அருள் துறையில் வெற்றி பெற்றிடுவோம் என்கின்ற மனஉறுதியுடன், தீர்மானமாக வாழ்க்கையை நடத்தி வெற்றிபெற்றிட வேண்டும் என்றும்,
பல்லாயிரம் பிறவிகளில் கொண்டு வந்த பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவியிலே மாற்றி அமைத்து மனிதனாகி தெய்வமாகலாம் என்கின்ற வேதாத்திரிய உறுதிப்பாட்டுடன், முன்பெல்லாம் பள்ளிகளில் மிகச்சிறப்புடைய மாணவருக்கு மேல்வகுப்பிற்குச் செல்வதற்கு இரட்டை பிரமோஷன் (double promotion) தருவதுபோல், அருள்துறையில் இரட்டை நிலைகளான பரிபக்குவ நிலையையும், அதன் பிறகு அருள்துறையில் வெற்றியினையும் ஒரு பிறவி காலத்திலேயே பெறலாம் (உதாரணம் – வழிப்பறி கொள்ளையனே பின்னர் வால்மீகி முனிவராகவில்லையா?) என்கின்ற நம்பிக்கையுடன், அருள்துறையில் பொறுப்புடனும், கடமையுடனும் பாடுபட்டுக் கொண்டுவருபவர்களுக்கு தெய்வமாகும் நல்வாய்ப்பு காத்திருக்கின்றது என்றும்,
சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் என்பது அறியலாகின்றது ஐயா!.
அருள் துறையில்
வெற்றி பெற்றிடுவோம் ஐயா!. வெற்றி பெற்றிடுவோம் ஐயா! வெற்றி பெற்றிடுவோம் ஐயா!.
தங்களது அருட் கண்பார்வை எங்கள் மீது தொடர்ந்து இருக்கட்டும் சுவாமி!
கடைசியாக உங்களிடம் அருள் வேண்டிய விண்ணப்பம்:- சாகாவரமும் தேவைப்படின் பரிபக்குவ நிலையையும் எங்களையும் உள்ளடக்கிய இந்த மனித சமுதாயத்திற்கு வழங்குமாறு சிரம்தாழ்த்தி, அன்புடன் வணங்கி இறைஞ்சுகிறோம்.
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!! வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!! வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
இப்படிக்கு,
தங்கள் அருள் வேண்டும், இறைநேசச் செல்விகள் மற்றும் இறைநேசச் செல்வர்கள்
வாழ்க அறிவுச் செல்வம் ! வளர்க அறிவுச் செல்வம்.!!
திருக்காப்பிட்டுக் கொண்டது –
விளக்கம்:-
திருக்காப்பிட்டுக் கொள்ளுதல் என்றால் என்ன என்று சில சத்சங்க அன்பர்கள் கேட்கின்றனர். வள்ளலார் அவர்கள் 30-01-1874(தைப்பூசம்) வடலூரில் உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகத்தில் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதிமயமானார். 30-01-1874 வெள்ளிக்கிழமை இரவு 12-00 மணிக்கு திருக்காப்பிட்டுக் கொண்டார் (கதவை தாழிட்டுக் கொண்டார்). தாழிட்டுக் கொள்வதற்கு முன் வள்ளலார் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய அருட்செய்தியை இன்றும் சித்தி வளாகம் சுவற்றில் காணலாம். அதனைக் காணும்போது நமக்குள் எழுகின்ற சிந்தனைகள்தாம் எத்தனை, எத்தனை? 24-01-201624-06-2020 மற்றும் 27-01-201628-06-2020 ஆகிய தேதியிட்ட அறிவிற்கு விருந்தில் இடம் பெற்ற அந்த அருட்செய்தி முழுமையாக கீழே தரப்பட்டுள்ளது.
இங்கு அமைதியாகவும், மௌனமாவும் இருக்க வேண்டும்.
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!!
தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி!!
30-1-1874 ம் ஆண்டு ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19 ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு திரு அருட்பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் பொழுது திருவாய் மலர்ந்தருளியது.
“இதுவரை உங்களுக்கு நேரிற் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ஆனால் அச்சில் வார்ப்போம். ஆகாவிடில் மிடாவில் வார்ப்போம். நான் உள்ளே பத்துப் பதினைந்து தினமிருக்கப்போகிறேன் பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது. வெறு வீடாகத்தானிருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்.
இனி இரண்டரை கடிகை நேரம் உங்கள் கண்களுக்குத் தோன்றமாட்டோம். இவ்வுலகத்திலும் மற்றெங்கிலும் இருப்போம். பின்னர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வருவார். அப்போது இவ்வுருவுடன் சித்திகள் பல நிகழ்த்துவோம். திருவருட்செங்கோலாட்சி செய்வோம். அகவினத்தார்க்குச் சாகா வரமும், ஏனையோர்க்குப் பரிபக்குவ நிலையையும் அளிப்போம் நாம் திருக்கதவை மூடியிருக்குங்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் “ஆண்டவர் அருள் செய்வார்”
இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம் இனி எல்லாவுடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்திவிடுவோம். அஞ்ச வேண்டா. சுத்தப்பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம்.“
வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட நாள் 1874 ஆண்டு-தைப்பூசத் திருநாள். திருக்காப்பிட்டுக் கொண்டு 146 ஆண்டுகள் ஆகின்றன. சிரம் தாழ்த்தி உடலாலும், உள்ளத்தாலும் ஆர்வத்தோடும் அருட்பிரகாச வள்ளலாரை வணங்குவோம். ‘அகவினத்தார்க்குச் சாகா வரமும்ஏனையோர்க்குப் பரிபாக நிலையும்’ வழங்கிக் கொண்டிருக்கின்ற அருட்பிராகாச வள்ளலாரின் அருளால் சாகா வரம் பெறுவோம். வள்ளலார் அவர்கள் சத்ய வாக்கு கொடுத்துள்ளதால், இந்நன்னாளில் அருட்பிரகாச வள்ளாரிடம் இறைமையை/அருளை இறைஞ்சி வேண்டி நிற்போம்.
வள்ளலாரின் திரு எய்திய ஆன்மா, சுமார் எண்பது ஆண்டுகள் சென்ற பிறகு நம்முடைய நேரிடை குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சுமார் நாற்பத்திரண்டு வயது இருக்கும்போது, அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதனை அறிய முடிகின்றது. வேதாத்திரி மகரிஷியின் உடலில் பத்து வருடங்கள் இருந்து கொண்டு, வள்ளலாரின் ஆன்மா மகரிஷி அவா்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. இதனை வேதாத்திரி மகரிஷி அவர்களே தனது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலில் கூறியுள்ளார்கள்.
மகரிஷி அவர்களுக்குள் இருந்து கொண்டு வள்ளலார் அவர்கள் வழிகாட்டியாக இருந்து அருள் புரிந்த புனித நிகழ்வால், வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக்கொண்ட அன்று தமது திருவாயால் மலர்ந்தருளிய சத்திய வாக்கு ஒருவரிடம்(மகரிஷியிடம்) நிறைவேறியதை நாம் அறிய முடிகின்றது. இன்னும் எத்தனை அருள்துறை அன்பர்களுக்கு இது போன்று அருள் பாலித்தார் என்பது தெரியவில்லை.
வேறு எந்த அருளாளரின் பூதஉடலுக்குள் இருந்து கொண்டு செயல்பட்டாரோ அல்லது இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாரோ என்பது தெரியாது. எனினும் இன்று நாம் வள்ளலார் அவர்களிடமிருந்து அருள் பெற தயாராக உள்ளோம்.
அருட் பிரகாச வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும்போது திருவாய் மலர்ந்தருளியது என்ன என்பதனை நினைவு கூர்வோம்.
30-01-1874 ம் ஆண்டு ஸ்ரீமுக வருடம், தை மாதம் 19 ம் நாள் வெள்ளிக் கிழமை இரவு 12 மணிக்கு திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்டார். அப்போது அவர் அளித்த அருட்செய்தியினை கூர்ந்து கவனிப்போம். (வடலூர் சித்தி வளாகத்தில் இன்றும் அந்த அருட்செய்தியினைக் காணலாம்) அந்த அருட்செய்தி கூறுவது என்ன?
• இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம்? கேட்டு, திருந்தி எழுச்சி பெற்று, திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். • இப்போது இந்தவுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லாவுடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்பொம், திருத்திவிடுவோம். அஞ்சவேண்டா. • சுத்தப்பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம். அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும் அளிப்போம்.” –வள்ளலார் அவர்கள்.
வள்ளலார் அவர்களின் மற்றொரு ஆதங்கம் என்ன?
“கடைவிரித்தேன்; கொள்வாரில்லை”
அவர் பூதவுடலில் இருந்து கொண்டு நேரிடையாகவே அருட்செய்திகளையெல்லாம் சொல்லியும், அதனைக் கேட்டு, எழுச்சி பெற்று, திருந்தி பிறவிப்பயனை அடைகின்ற திறமையில் ஒருவா்கூடத் திகழவில்லை என்கிறார். எனவே அவர் பூதவுடலை விட்டுப் பிரிந்தாலும், அவரது சூக்கும உடல் எல்லோரிடமும் புகுந்து கொண்டு திருத்திவிடும்” என்கிறார். அகவினத்தார்க்கு சாகா வரமும், ஏனையோர்க்கு பரிபக்குவ நிலையையும் அளிப்பதாக வாக்களித்துள்ளார். இது ‘உடலே நான்’ என பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல், வள்ளலார் என்கின்ற பூதவுடல் சொன்னதா? இல்லை!
“ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற திருமூலர் வாக்கிற்கிணங்க, வள்ளலாரின் பூதஉடலில் பேரறிவாகிய இறையே, ஆலயம் கொண்டு, ‘வேதங்கள் இறைவனால் சொல்லப்பட்டன’ என்று சொல்லப்படுவதுபோல், சாட்சாத் இறைவனே வள்ளலாரின் திருவாய் வழியாக அருளிய திருவார்த்தைகளாகும்.
பின்னர் வேறு எந்த வழியில் அரூபமான இறையால் மனித சமுதாயத்திற்கு சொல்ல முடியும்? இறை அரூபமாக உள்ளது என்று விளங்கிய பிறகு, ஐயப்படாது அகத்தை உணா்ந்தவர் வழியாக இறை சொல்கின்றது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்காது. அதனால்தான் மூத்தோர் வார்த்தை அமிர்தம் என்கிறார் அவ்வையார். மூத்தோர் என்பது அறிவை அறிந்த பெரியவர்கள் என்று கொள்ளலாம். வயதில் மூத்தவர்கள் அனுபவத்தால் சொல்வதனையும் கேட்க வேண்டும். அறிவை அறிந்த பெரியோர்கள் வழியாக சொல்வது இறையே என்பதால் அது அமிர்தமாகத்தானே இருக்கும். இயற்கை–இறை/இறைவன் ஆனந்தமயமானது/ஆனந்தமயமானவன் என்பதால் இயற்கையால்–இறையால்/இறைவனால் சொல்வது ஆனந்தமாகத்தானே இருக்கும்!
வள்ளலார் திருவாக்களித்தபடி, ஓயாமல் அவரது திரு எய்திய ஆன்மாவே (இறைவனே), ஆன்மீகத் துறையில் பயிற்சி செய்யும் சாதகர்களுடனே இருந்து கொண்டு உறுதுணையாக இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. ஆன்மீக சாதகர்களுக்கு இரண்டு வழிகளில் துணைபுரிவேன் என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளலார் அவர்கள். முதல்தர சாதகர்களுக்கு ‘சாகா வரமே தருவேன்’ என்கிறார். மற்றவா்களுக்கு ’பரிபக்குவ நிலையைத் தருவேன்’ என்கிறார்.
ஆன்மீகத்தில் ‘பரிபக்குவ நிலை’ என்பது மிக மிக முக்கியமானது. பரிபக்குவ நிலையில் பிறவி எடுத்தவர்களே, கருவில் திருவுடையவர்களாவார்கள். பகவத் கீதையில் கண்ணபரமாத்மா கூறியவாறு கோடியில் ஒருவரே கருவில் திருவுடையவா்களாக இருப்பர். அவர்களே தன்னை வந்து அடைவதாக கூறுகிறார் கண்ணபரமாத்மா. மற்றவர்கள் வழுக்கி விழுந்து, விழுந்து, முயற்சி மேல் முயற்சி செய்து, ஆன்மீக இலக்கை அடைய வேண்டும். எனவே ‘சாகா வரம்’ வாங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு பரிபக்குவ நிலையைத் தருவதாகக் கூறுகிறார் வள்ளலார் அவர்கள். பரிபக்குவ நிலை வந்த பிறகுதான் குரு-சீடர் உறவில் அலை இயக்க ஐந்து பண்புகளும் முழுவதுமாக வேலை செய்து, குறிப்பாக அலை இயக்கப்பண்பில் கடைசியும், அதிமுக்கியதுமானதுமான ‘ஒன்றோடு ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல்–inter-action’ என்பது குரு-சீடா் உறவின் முழுப்பயனையும் தரும்.
இயற்கையின்/இறையின் மனிதர்களாகிய—தன்மாற்ற(self–transformation into human beings) சரித்திரத்தில் மனிதர்களை திருத்தும் படலம் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது அருட்பிரகாச வள்ளலாரின் கடைசி திருவாய் மொழியிலிருந்து.
வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொள்ளும்போது அறிவித்த அருட்செய்தியின்படி, நமக்குத் தெரிந்த வரை, வள்ளலாரின் திரு எய்திய ஆன்மா, சுமார் எண்பது (1911-1874) + 42 = 37+42= 79 or 80) ஆண்டுகள் சென்ற பிறகு நம்முடைய நேரிடை குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சுமார் நாற்பத்திரண்டு வயது இருக்கும்போது, அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதனை அறிய முடிகின்றது. வள்ளலார் அருட்பாலித்ததிலிருந்து பத்து ஆண்டு காலத்துக்குள் மகரிஷி அவர்கள் தான் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயம் என்கிறார். மேலும், இராமலிங்க வள்ளலார் அவர்கள் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம் தன் வழியாக முடித்தார் என எண்ணுவதாகவும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.
வள்ளலாரின் அருள் தனக்கு கிடைத்த பாக்கியத்தை, நம்குருதேவர், பேரருளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பயன்படுத்திக் கொண்டதை, அவரே கூறுவதை அறிந்து மகிழ்வோம். ஏனெனில் நம் தாய், தந்தையர் செய்த புண்ணியத்தால் நமக்கு குருவாக குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களை இயற்கை/இறை அருளியுள்ளது. மகரிஷி அவர்களின் பூதஉடலில் வள்ளலார் அவர்கள் பத்துவருடங்கள் தங்கியிருந்து அருள்பாலித்திலிருக்கிறார். அது நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதுதாக உள்ளது என்கிறோம். காரணம், வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு தெரிவித்த உண்மைகளுக்கு பலமும், தெளிவும், எளிமையும் கிடைத்திருக்கிறது அல்லவா? மகிழ்ச்சி மட்டுமல்ல, அது நமக்கு கூடுதல் பயன்தானே(additional benefit) உண்மையைப்பற்றி அறிந்து கொள்வதில். வள்ளலார் அவர்கள், பல சந்தா்ப்பங்களில் தன்னோடு இருந்து வழிகாட்டி செயலாற்றுவதை அனுபவமாகக் கண்டதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.
மகரிஷி அல்லாது இன்னும் எத்தனை அருளாளர்களுக்கு வள்ளலார் அவர்கள் சாகா வரம் தந்துள்ளார் என்பது தெரியாது. வெளியே தெரியவில்லை. ஆனால் பரிபக்குவ நிலையைத் தந்து கொண்டிருக்கும் பணியினைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதனை மட்டும் அறிய முடிகின்றது. ‘வேதாத்திரியம்’ கல்வி நிலையங்களுக்குச் சென்று மாணவர்களை ஒழுக்கத்திற்கு திருத்தி ஒழுங்கு படுத்தும் சீரிய பணியைத் துவங்கி விட்டதே இதற்குச் சான்றாகக் கொள்ள முடிகின்றது. பேரறிவின் தன்மாற்றத்தில் அவ்வப்போது மகான்கள் தோன்றுவதென்பது முடிவில்லா ஆன்மீகத் தொடா் ஓட்டம் (Never ending–Continuous Divine Relay Race).
அதனால்தான் மகரிஷி அவர்கள் “அறிவேதான் தெய்வம் என்றார் தாயுமானார்” எனத் துவங்கும் குருவணக்கப் பாடலில், தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கர் என பெயரிட்டு நான்கு அருளாளர்களை நினைவு கூர்வதோடுமட்டுமல்லாமல், இது வரை இறைவெளியின் தன்மாற்றத்தில், ஆன்மீக வரலாற்றில் தொடராக வந்துள்ள அனைத்து அருளாளர்களையும் நினைவு கூர்கிறார் மகரிஷி அவர்கள். அப்படியானால் மகான்கள் தோன்றுவதென்பது முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டம் தானே!
வள்ளலார் “திருத்திடுவோம்” என்று கூறியது இப்போது வேதாத்திரியத்தின் வாயிலாக நடைபெறவில்லையா? மனவளக்கலை ஒரு சாதனை மார்க்கம் என்பதே, திருந்துவதைத்தானே குறிக்கின்றது. சாதனை என்பது என்ன? பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் மனிதன் பழைய தீய பழக்கங்களுக்கும் இப்போது கிடைக்கும் நல்விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வெற்றி பெறுவதுதான் சாதனை என்பது. எனவே தான் தற்சோதனைப் பயிற்சியை தெய்வீகப் பயிற்சி என்கிறார் மகரிஷி அவர்கள்.
மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். தன் பிணக்குகளை முறையாகக் களைவதும் ஒரு போராட்டம்தான் என்கிறார். எனவே தன் பிணக்குகளை முறையாகக் களைவதற்கு மகரிஷி அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், உயர்வையும் கவனிக்க வேண்டும். தன் பிணக்குகளை முறையாகக் களைவதை, உயிரைத் தூய்மையாக்கவல்ல ‘அறிவுப்போர்’ என்கிறார். ஆகவே வாழ்வில், மகிழ்ச்சியும், நிறைவும். அமைதியும் அளிக்கும் அந்த அறிவுப்போர் ஒரு தெய்வீகப் போர் என்கிறார்.
“கடைவிரித்தேன். கொள்வாரில்லை” என்றார் வள்ளலார் அவர்கள். ஆனால் மகரிஷி அவர்களோ, வடலூர் மேட்டுக் குப்பத்தில் ஓங்கார மண்டப திறப்பு விழாவில்(05-02-1985) ஆற்றிய உரையின் முடிவில் கூறியது அன்பொளிஜுலை 1985 இல் ‘வள்ளலார் விரித்த கடை’ என்கின்ற தலைப்பில் வெளிவந்தது. கட்டுரையின் முடிவுப்பகுதியில் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்:
“எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாக உள்ள, சேர வேண்டிய இடமாக, கடைத்தேற வேண்டும் என்ற எண்ணத்தோடு கடைவிரித்தேன்” என்று சொன்னார் வள்ளலார் அவர்கள்.ஆனால் கடையை மூடிவிட்டாரா? இல்லை. திறந்தே வைத்தார். இன்றும் அது திறந்தே உள்ளது.” என்றார். அதற்கு சாட்சியாகக் அவ்விழாவில் குழுமியிருந்த அன்பர்களே எனக் கருதி, “அப்படி இல்லையானால் இவ்வளவு பேர் கூடி அனுபவிக்க முடியாது”. என்று அன்று குழுமியிருந்த அன்பர்களிடமே கூறினார் மகரிஷி அவர்கள்.
மேலும் மகரிஷி அவர்கள் அன்று கூறியதாவது:–
“விரித்தது, விரித்ததுதான்.அவரவர்கள் வேண்டும் அளவுக்கு அள்ளிக் கொண்டு போகலாம். விரித்தது அத்தனையும்* செய்யுட்களாக வந்துவிட்டன. ஒவ்வொரு செய்யுளிலும் வரக்கூடிய ஒரு உண்மைப் பொருள், இறைவனே நேரடியாக எடுத்துக் காட்டியதை, உணர்ந்தது உணர்ந்தவாறு கூறுகின்றார் வள்ளலார்.இதைச் சாதாரண வார்த்தைகளில் கூறும்போது அது விளங்காது. ஆனால் அது அனுபவத்திலே அனுபவித்தவர்கள் கூறும்போது அந்த ஒளிக்கே ஓரு ஆற்றல் உண்டு”
*திருஅருட்பா
ஆகவே தெய்வீகப்போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், நாம் அருட்பிரகாச வள்ளலாராகிய அருட்தாத்தாவை அருளை வேண்டி வணங்கி நிற்போம்.
அடுத்த அறிவிற்கு விருந்தில் (28-06-2020—ஞாயிறு) அருட்பிரகாசவள்ளலார் அவர்களிடம் இறைமையை வேண்டி இறைஞ்சுகின்ற மடலை வரைவோம்.
வாழ்க சர்வதேச யோகா தினம்! வளர்க சர்வதேச யோகா தினம்!
வாழ்க சர்வதேச யோகா தினம்! வளர்க சர்வதேச யோகா தினம்!
வாழ்க சர்வதேச யோகா தினம்! வளர்க சர்வதேச யோகா தினம்!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
வினா: திருவேதாத்திரியம் உலக மக்களுக்கு என்னென்ன அளித்துக்கொண்டிருக்கிறது?
விடை:
1) உடல் நலத்திற்கு, மனவளத்திற்கு, மனிதனுக்கும் இறைக்கும் புனித இணைப்பினை(Yoga is bridging Jeevathma and Paramathma) ஏற்படுத்துவதற்கு மனவளக்கலை யோகாவை அளிக்கின்றது.
2) உடல் நலத்திற்கு எளியமுறை உடற்பயிற்சி அளிக்கின்றது.
27) மனிதனின் அறிவாட்சித்தரத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றது.
இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். திருவேதாத்திரியம், Infinite—எல்லையற்றதைப் பற்றிய விஞ்ஞானத்தைத் தருவதால், திருவேதாத்திரியத்தில் என்னென்ன கூறப்பட்டிருக்கின்றன எனக் கேட்டால் பட்டியல்எல்லையற்று நீண்டு கொண்டே போகும் என்பதால், அதற்கு பதிலாக, ஒன்றைக் குறிப்பிட்டு ‘இது பற்றி ஏதாவது கூறப்பட்டிருக்கின்றதா’எனக் கேட்டால், ‘இருக்கின்றது’ என்கின்ற பதிலைத்தரும் எடுக்க, எடுக்க, அள்ள, அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக திகழ்கின்றது திருவேதாத்திரியம். ஏனெனில் பிரபஞ்ச களத்தில் பிறந்தது திருவேதாத்திரியம். தாய்த்திரு நாட்டின் புகழைக்கூறும் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்’ என்கின்ற திரைப்பாடல் வரியைப் போன்று என்ன வளம் இல்லை, இந்த மனவளத்தைப் பெருக்கும் மனவளக்கலை அருளியுள்ள இந்த திருவேதாத்திரியத்தில்’என மகிழ்ச்சி பொங்கவே கூறுவர், ஐயமின்றி, இறையும்-மனமும் ஒன்றுபட்ட லட்சோப லட்ச பயனாளிகளான மனவளக்கலைஞர்கள்.
‘மனிதத் தேர்வு’ என்கின்ற தலைப்பில் ஏற்கனவே நம் சத்சங்கத்தில் 30-10-2014 அன்று சிந்தித்து இருக்கிறோம். இருப்பினும் மீண்டும் அதே தலைப்பை எடுத்துக் கொண்டு ஆழ்ந்து/விரிவாக இன்று சிந்திக்க இருக்கிறோம். எட்டு மாதங்களுக்கு முன்னர், அதாவது இந்த இணைய தள www.prosperspiritually.com சத்சங்க ஆரம்பித்த இரண்டாம் நாள் இந்த தலைப்பில் சிந்தித்து இருக்கிறோம். அப்போது இணையதளம் ஆரம்பித்து ஒரிரு நாட்களே ஆனதால் இணையதள சத்சங்கத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் மிகமிகக் குறைவு. மீண்டும் அதே தலைப்பில் இன்று சிந்திக்க இருக்கிறோம். இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனிக்கவும்.
முன்பு சிந்தித்ததைவிட இப்போது ஆழ்ந்து கூடுதலாக சிந்திக்க இருக்கிறோம். இது எதனால் சாத்தியமாகியது? இணையதள சத்சங்க அன்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், அவர்களின் எண்ணஅழுத்தத்தாலும், இன்னும் என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம் என்கின்ற அவர்களின் ஆர்வமிகு எதிர்ப்பார்ப்பாகிய அறிவுப்பசியைத் தீர்த்துவைக்கும் முகமாக இயற்கை/இறை நடத்தி வைக்கும் நிகழ்வுதான் இந்த தலைப்பை மீண்டும் விரிவாக சிந்திக்க எடுத்துக் கொண்டது, இதனை மேலும் உறுதிபடுத்துகின்ற நிகழ்வை இச்சிந்தனையின் இறுதியில் அறிவோம்.
தலைப்பு ‘மனிதத் தேர்வு’ என இருக்கின்றது. தேர்வு என்றால் என்ன என்பது யாவருக்கும் தெரியும். தேர்வு என்றால் கல்வி நிறுவனங்களில் அல்லது அலுவலகங்களில் ஒருவருடைய படிப்பு, திறமை முதலியவற்றை சோதித்துப்பார்த்து மதிப்பெண்கள் வழங்கப்படும். உதாரணத்திற்கு கணிதத் தேர்வை எடுத்துக் கொள்வோம். தேர்வு என்பது, குறிப்பிட்ட பாடதிட்டத்திற்குள் (syllabus) மாணவனிடம் வினாக்கள் கேட்டு, மாணவன் விடைகள் அளித்து, அது சரிபார்க்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். மதிப்பெண்களைப் பொருத்து மாணவன் தேர்வில் தேர்ச்சி பெற்றாரா, இல்லையா என்று அறிவிக்கப்படும்.
ஆனால் மனிதத் தோ்வு என்றால் என்ன? யார், யாரை, எதில் தோ்வு செய்வது? இது ஒரு புதுமாதிரியானத் தேர்வாக உள்ளதே! மனிதத் தேர்வு என்பது மனிதத்தை தேர்வு செய்வது. மனிதத் தேர்வில், ‘எதில்’ என்பதற்கு விடைகிடைத்துவிட்டது, மனிதத்தை யார் தேர்வு செய்வது? தங்களுடைய மனிதத்தை தாங்களேதான் தேர்வு செய்து கொள்வது மனிதத் தேர்வு. ஏன் மனிதத் தேர்வு என்கின்ற தலைப்பில் சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன?
உயிரினப்பரிணாமத்தில் விலங்கினமாக வந்தஉயிர்தான், பின்னர், சடுதி மாற்றத்தால்(mutation) மனித உயிராக வந்துள்ளது. ஆகவே விலங்கினத்தின் பண்பாகிய பிறர்வளம் பறித்தல் என்கின்ற குணமும் மனித உயிரில் சேர்ந்து வந்துவிட்டது. மனிதன் என்றால் அவனிடம் அன்பும் கருணையும் இருக்க வேண்டும். இதுதான் மனிதம் எனப்படுகின்றது. மனிதம் இருந்தால் தான் அவன் மனிதன். மனம்+இதம்=மனிதன். இதம் என்றால் அன்பும் கருணையுமாக ஒத்தும் உதவியும் இருப்பது என்று பொருள் என்கிறார் மகரிஷி அவர்கள்.
ஆகவே ஆன்மா தன்பரிணாமச் சுழற்சியை முடித்துக்கொள்ள, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பேரான்மாவாகிய இறைநிலையுடன் இணைந்து விடவேண்டும். இதற்காகவேதான் மனிதப்பிறவி. ஆன்மா, பிறவிஎடுத்தபிறகு, மனிதனின் வாழ்க்கை தொடங்க ஆரம்பிக்கின்றது. மனித வாழ்க்கை என்பது இயற்கை மனிதனைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி எனக்கொள்ளலாம்.
கல்வித்தேர்வில் மாணவர்கள் விடை அளித்ததன் அடிப்படையில் பூச்சியத்திலிருந்து நூறு மதிப்பெண்கள்வரை வழங்கப்படுகின்றன. எல்லோராலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்கமுடிவதில்லை.ஒரு சிலரால் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க முடிகின்றது, ஆகவே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தது நாற்பது மதிப்பெண்களாவது எடுக்கவேண்டும் என்கின்ற கட்டாயம்உள்ளது.
தேர்வில் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர் மீண்டும் மறுமுறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதனையாவரும் அறிவர். தேர்ச்சி பெற்றால்தான் அந்தகல்வித்தகுதியை வைத்து வேலை கிடைத்து, வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை ஈட்டி நிறைவாக வாழ முடியும்.
அதே போன்று தான் இயற்கை நடத்துகின்ற வாழ்க்கை என்கின்ற மனிதத்தேர்வில், அதாவது மனிதம் வெளிப்படுவத்துவதில், தேர்ச்சிபெறவேண்டும். மனிதம் வெளிப்படாததன் காரணமாக, ஏற்பட்டுள்ள வினையின் பயனை அனுபவிக்கத்தான் ஆன்மா மீண்டும் பிறவி எடுத்துள்ளது. மனிதம் வெளிப்படுத்துவதில் நூறு மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கதுதான்(Desirable). நடைமுறையில் அப்படி இல்லை. ஒரு கோடியில் ஒருவர்தான் நூறு மதிப்பெண்கள் எடுத்து மனிதத்தேர்வில் தேர்ச்சி பெற முடிகின்றது. பெரும்பாலோர் குறைந்தது நாற்பது மதிப்பெண்கள் கூட எடுத்து தேர்ச்சி பெறுவதில்லை. தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களான நாற்பது விழுக்காட்டிற்கும் கீழ், பூஜ்ஜியத்திலிருந்து முப்பத்தொன்பது வரை எடுக்கும் நிலைதான் உள்ளது.
இந்த மனிதத் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவர்கள்தான் அறிவின் முழுமை அடைந்த அறிஞர் அல்லது ஞானி எனக் கருதப்படுகிறார்கள். எப்படி கல்வித் தேர்வில் நூறு மதிப்பெண்கள் எடுத்தவருக்கு, அவருக்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களை விட நல்ல வேலை கிடைத்து, பொருளை செழிப்பாக ஈட்டி வாழ முடிகின்றதோ, அதுபோல் வாழ்க்கையில் நூறு மதிப்பெண்கள் எடுத்து, முதன்மையான ஞானி, இன்பத்திற்கெல்லாம் பெரிதான பேரின்ப வாழ்வு வாழமுடிகின்றது.
மனிதத் தேர்வில் தேர்ச்சி பெற்றமற்றவர்கள் அவரவர் மதிப்பெண்களுக்குத் தக்கவாறு இன்பத்தையும் துன்பத்தையும் கலந்துதான் நுகரலாம். நூறு மதிப்பெண்கள் எடுத்தவரைப் போன்று சலிப்பில்லா, துன்பமில்லாப் பேரின்ப வாழ்வு வாழ முடியாது.
மனிதத் தேர்வில் தேர்ச்சியே பெறாதவர்கள் இன்னும் மனித உடலில் விலங்கினமாகவே வாழ்பவர்கள் ஆவர். இங்கே மகரிஷி அவர்கள் மனிதனைப்பற்றி கூறும் கவியினைக் கவனி்ப்போம்
மனிதன் என்கின்ற உருவினிலே மாக்களும், மக்களும் இருக்கிறார்கள் என்கின்றார். விலங்கினப் பண்பை போக்கிக்கொள்ளாத, பிறர்வளம் பறிக்கின்றவர்களை மாக்கள் என்கிறார். விலங்கினப்பண்பை போக்கிக் கொண்டு வாழ்பவர்களை மனிதா்கள் என்கிறார். அதிலும் மனதை அறிந்து மனதை இதமாக வைத்துக் கொண்டு மற்ற உயிரினங்களுக்கும், மக்களுக்கும் மனமுவந்து தொண்டாற்றுபவர்களை முழுமனிதன் என்கிறார்.
மனிதத் தோ்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துன்பத்தையே அனுபவிக்க வேண்டியிருக்கும். கல்வித் தேர்விலாவது மீண்டும் ஒருமுறையோ அல்லது இரண்டு அல்லது மூன்றாவது முறையோ தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது சாத்தியமாகின்றது. ஆனால் மனிதத் தேர்வில் மட்டும் மீண்டும் மீண்டும் பல்லாயிரம் முறை பிறவிகள் எடுத்தாலும் தேர்ச்சி பெற முடிவதில்லை. இந்த அவல நிலைதான் இன்று மனிகுலத்தின் அமைதியின்மைக்குக் காரணம்.
இந்த நிலையை மாற்றியமைக்க, மனிதன் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் தேவையாக இருந்தது இயற்கைக்கு.
இச்சூழ்நிலையில்,
1) மனிதத் தேர்வில் முதலில் மனிதனை மனிதனாக்கி, அதாவது மனிதத்தேர்வில் 40-99 மதிப்பெண்கள் எடுக்கவைப்பது. (வள்ளலார் கூறும் பரிபாக நிலை)
2) பிறகு improvement exam எழுதி அதிக மதிப்பெண்கள் எடுப்பது போல் அந்த மனிதனை இந்தப் பிறவியிலேயே நூறு மதிப்பெண்கள் எடுக்கச் செய்து அறிவை அறிந்த அறிஞராக்குவது; அறிவியலாளராக்குவது.(வள்ளலார் கூறும் சாகாவரம்)
ஆகிய இரண்டு பணிகளைச் செய்து மனித சமுதாய வாழ்க்கையில் புரையோடிக் கிடக்கின்ற மூடப்பழக்கங்களையும், தேவையற்றவைகளையும் அடியோடு நீக்கி, புதிதாக நலம் தரும் அறிவுப் பூர்வமான பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி எந்நிலையிலும் ஒழுக்கவாழ்வு மலர்வதற்கு(revamp) இயற்கை கொண்டு வந்த திட்டம் தான் திருவேதாத்திரியம் என்கின்ற பெயரால் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளது. திருவேதாத்திரியம் கூறும் மந்திரத்தை நினைவில் கொள்வோம். திருவேதாத்திரியம்,
“உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்கின்றது.
மேலும் பல்லாயிரம் பிறவிகளாக ஆன்மா சோ்த்து வந்த பழிச்செயல் பதிவுகளை ஒரு பிறவியிலே நீக்கிக் கொண்டு தூய்மை அடையலாம் என்கின்றார் மகரிஷி அவர்கள்.
பழிச் சுமைப்பதிவுகளை தூய்மை செய்வதால், மீண்டும் அந்தப்பதிவின் விளைவுகளாக துன்பம் வராமல் இருக்குமாதலால். நன்மை கிடைக்கின்றது என்கிறார்.
விலங்கினப் பதிவுகளால்தான் பழிச்செயல்கள் வந்து சேர்ந்துள்ளன ஆன்மாவிற்கு. ஆகவே விலங்கினப்பதிவுகள் நீங்கினால்தான் பழிச்சுமைப்பதிவுகள் நீங்கும். விலங்கினப்பண்புகள் நீங்கிய ஆன்மா மனிதனாகலாம் என்கிறார்.
அதற்கு மேலும் திருவள்ளுவர் கூறுவது போல் ஐயப்படாது அகத்தை உணர்ந்தவர் தெய்வமாகலாம் என்றும் மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்.
இதுதான் இயற்கை மனிதனுக்கு வைத்துள்ள தேர்வு எனக்கொள்கிறோம். யாரும் விரும்பிப் பிறப்பதில்லை. வினைப்பயனை அனுபவிக்கவே மனிதன் பிறக்கிறான். வினைப்பயனை தீர்த்துக் கொண்டு பிறவிக் கடலை நீந்தி மீண்டும் பிறவாது இருக்க வேண்டும் என்பதனை இயற்கை மனிதப்பிறவிக்கு வைத்துள்ள நோக்கம் அல்லது தோ்வாகும்.
எனவே தான் சங்கல்பத்தில் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம் என்கின்ற உலகியல் வாழ்க்கைக்கு வேண்டியத் தேவைகளை மட்டும் வைக்காமல், சாதாரண மனிதன் உலகியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டே மாண்புடையவனாக, மற்ற சங்கல்பங்களாகிய, ‘சிவம் அறியப்படுவதால் மலர்கின்ற அன்பால்’ செய்கின்ற தன்னலமற்றத் தொண்டால் வரும் உயர்புகழ் மற்றும் மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டையும் இணைத்துள்ளார். மகரிஷி அவர்கள். மனவளக்கலைஞர்களை இறைத்தூதுவர்கள் என்று கூறி, அருளை நிதியாகக் கொண்டவர்களாக்கி அருள்நிதி என்கின்ற பட்டத்தையும் சூட்டுகிறார் மகரிஷி அவர்கள்.
மேலும் “யோகமும் மனித மாண்பும் -– Yoga for Human Excellence” என்கின்ற படிப்பை பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது இயற்கை/இறை. ஆகவே ஒவ்வொருவரும் மனித மாண்புத்தேர்வில் EXCELLENT GRADE ஐ பெறுகிறோம் என உறுதி கொள்வோம்.
எனவே இப்போதைய காலத்தின் கட்டாயத்தால்,இயற்கைகருணையோடுஅளித்துள்ள இந்த திருவேதாத்திரியத்தை வாழ்த்துவோம். வணங்குவோம்.
வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.
வாழ்கவையகம்.வாழ்கவளமுடன்.
‘மனிதத் தேர்வு’ என்கின்ற இச்சிந்தனையை பதிவேற்றத்திற்கு (upload) தயார் செய்து வைத்திருந்த வேளையில், 30-06-2015—செவ்வாய், ‘The Hindu’ ஆங்கில நாளிதழில் வந்துள்ள ‘A personality test on Gita values’என்கின்ற தலைப்பின் கீழ் வந்துள்ள செய்தியினை நம் சிந்தனையுடன் இணைத்துக் கொள்வோம். அதனுடன் நகலைக் கீழே காண்கிறீர்கள். இந்து நாளிதழுக்கு நன்றி. நாம் எடுத்துக் கொண்டுள்ள ‘மனிதத் தேர்வு’ என்கின்ற தலைப்பிற்கும், ‘A personality test’ என்கின்ற இந்து நாளிதழில் வந்துள்ள தலைப்பிற்கும் உள்ள பொருத்தத்தைக் காணுங்கள். மனிதனுடைய personality ஐ, பகவத்கீதை போதிக்கின்ற விழுமியங்கள் அடிப்படையில் அளவிடுவதற்கு ஒரு இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என செய்தியிலிருந்து தெரிய வருகின்றது.
முக்குணங்களால் மனித உண்மை நிலையை புரிந்து கொள்ள முடிகின்றது எனப்படுகின்றது. இதுவரை அந்த இணையதளத்தின் வழியாக மாணவர்கள் உள்பட 10000 க்கும் மேல் தங்களை சோதித்துக் கொண்டதாக செய்தி கூறுகின்றது. சத்வ, ரஜ, தமோ ஆகிய மூன்றையும், சோதிக்கின்றது என்கிறார் இணையதளத்தை உருவாக்கிய அன்பர், திரு. சதீஷ் மோத் அவர்கள். அவர் ஒரு பகவத்கீதை ஆராய்ச்சியாளர். அந்த இணையதளம் டாக்டர். மோத் அவா்களின் 20 வருட ஆராய்ச்சியினைக் கொண்டது என்கிறது செய்தி. மீண்டும் ‘The Hindu’ நாளிதழுக்கு நன்றியினை இணையதள சத்சங்க அன்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
இந்த நிகழ்வு தற்செயலானதா அல்லது திட்டமிட்ட தெய்வீக நிகழ்ச்சியா (divine coincidence)? நாம் இந்த தலைப்பின் கீழ் ஏற்கனவே சிந்தித்திருக்கிறோம். மீண்டும் இச்சிந்தனையை ஆழ்ந்து சென்று கருத்துக்களை இன்று பதிவேற்றம் செய்ய விருந்தோம். இதனை, ‘The Hindu’ நாளிதழோ, திரு. சதீஷ் மோத் அவர்களோ அறிய வாய்ப்பில்லை. அதுபோல் நேற்று, ‘தி இந்து’ நாளிதழில் ‘A personality test on Gita values’ என்கின்ற செய்தி வரப்போகின்றது என்று நமக்கும் தெரியாது. இந்நிலையில் நேற்று அந்த நாளிதழில் வந்துள்ள செய்தியும் நாம் எடுத்துக் கொண்ட தலைப்பும் ஒன்றாக இருக்கின்றது. இந்த இருநிகழ்வையும் இணைத்து வைத்தது இயற்கை/இறை/அருட்பேராற்றலேதான். ஆகவே இயற்கைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். இயற்கை நமக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கவும் வேண்டுகிறோம்.
ஆகவே அவரவர்களே தன்னை அறிவாட்சித்தரத்தில் சோதித்து பார்க்க வேண்டிய அவசியத்தை இயற்கை அறிவுறுத்துகின்றது. நாம் எடுத்துக் கொண்ட தலைப்பையும் ஆமோதிக்கின்றது. ஒருவருடைய குணத்தை சோதித்துப்பார்த்துக் கொள்ள ஒரு இணையதளமே உருவாக்கிக் கொடுத்துள்ளது இயற்கை. ஆகவே ஒவ்வொருவரும் தன்னைத் திருத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டு முயற்சி செய்து மனித மாண்பினை உயர்த்திக் கொள்ள வேண்டும். மனிதத் தேர்வில் மதிப்பெண்கள் அளிப்பது என்பது இயலாது. ஏனெனில் இது குணம் சார்ந்தது. மற்ற சோதனைகள் போன்று, எடைஅளவு, உயரம், மார்புச்சுற்றளவு, ஆகியவைகளை எடுத்துக் கூறுவதற்கு அளவு கோல்கள் உள்ளது போல் மனிதத் தேர்வில் மனிதத்தை எடுத்துச் சொல்வதற்கு அளவுகோல்கள் இல்லை. என்றாலும் தனது இயல்பை அடிக்கடி அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துச் சொல்வதற்காகவே மனிதத் தேர்வு என்கின்ற தலைப்பு சிந்தனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
வேதாத்திரியம் அன்பும் கருணையும் மனிதனிடம் இயல்பாக மலர்வதற்கு இரண்டொழுக்க பண்பாட்டினை தவத்தின் முடிவில் ஓதச் சொல்கிறது. இதனுடைய அடுத்த விரிவாக்கம், மனிதன் அன்றாடவாழ்வில் எந்தப்பணியைச் செய்து கொண்டிருந்தாலும் இடையிடையே இதனை ஓதி நினைவில் கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒருமணிநேரத்திற்கு ஒரு முறை 30 வினாடி நேரம் தேவையிருக்கும் இரண்டொழுக்கப் பண்பாட்டின் விரிவாக்கத்தைச் செயல்படுத்துவதற்கு.அதாவது ஒரு மணிநேரத்தில் 30 வினாடி நேரம் செலவு செய்து ‘நான் இந்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக இருந்துள்ளேனா?’ என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். இது போன்ற பழக்கம் வந்துவிட்டால் நாளடைவில் ஒழுக்கத்தில் அயரா விழிப்புணர்வு நிலை வந்துவிடும். மனிதத் தோ்வில் மதிப்பெண்கள் கூடிக்கொண்டே வரும். நம்முடைய மனசாட்சிதான் நமக்கு மதி்ப்பெண்கள் அளிக்க வேண்டும். அதாவது நான் திருந்திக் கொண்டு வருகிறேன். விளக்க வழி வாழ்வதில் நாள்தோறும் முன்னேறி வருகிறேன் என்பதனை உறுதி செய்ய வேண்டும்.
மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், மனதை அறிந்து, மனதை இதமாக வைத்துக் கொண்டு, எந்த உயிர்களுக்கும் துன்பம் அளிக்காமல், மக்களுக்கு மனம் உவந்து தொண்டாற்றி மாமனிதாகி முழுமனிதனாவோம்.
“குருவருள் இன்றேல் திருவருள் இல்லை” என்கின்ற நிதர்சனத்தை மனதில் கொண்டு முதன் அறிவின் அறிவியலாளரும் நமது அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் பொற்பாதங்களை மானசீகமாக வணங்கி ஆசி பெற்று இன்புறுவோம். வாழ்க திரு வேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.