சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 210

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    03-09-2016 — சனி

    ‘மெய்யை மெய்யாகவும், பொய்யைப் பொய்யாகவும் காணும் தெளிவுடையார் மெய்ப்பொருளை அடைவார்கள். அவர்களே மெய்யான வேட்கை உடையவர்கள்.’

    . . . புத்தரின் போதனைகள்.

    பயிற்சி—
    1) புத்தருடன் திருவள்ளுவர் எவ்வாறு ஒத்துப்போகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்            வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 209

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

     

    02-09-2016—வெள்ளி

    ‘நிலையான பாறையால் புயல்காற்றுக்கும்  அசையாமலிருக்க முடிவதுபோல்  ஞானிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசைவதில்லை.

    . . . புத்தரின் போதனைகள்.

    பயிற்சி—
    1) எது ஞானிகளை புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசையாமல் இருக்கச் செய்கின்றது?
    2) புத்தர் கூறுவது ஞானிக்கு மட்டுமேவா பொருந்தும் ?
    3) இந்நிலை அவசியமா வாழ்வில்?
    4) மனவளக்கலையில் எது புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசையாமல் இருக்கச் செய்கின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 208

    வாழ்க மனித அறிவு                                                          வளர்க மனித அறிவு

     

    27-08-2016—சனி

    “சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகாக் கோழைத்தனம்.”

    . . . கன்பூசியஸ்.

    பயிற்சி—
    1) கோழைத்தனம் என்பது என்ன?
    2) ஏன் கோழைத்தனத்தை சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுடன் ஒப்பிடுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 207

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

       26-08-2016—வெள்ளி

     

    “ஒருவரிடம் உள்ள அறியாமையே அவர் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் காரணமாக உள்ளது.

    . . . பிளேட்டோ.

     

    பயிற்சி—

    1)   எந்த துன்பத்திற்கும் காரணம் அறியாமைதானா?

    2)   துன்பத்திற்குப் பொதுப்படைக் காரணம் அறியாமைதானா?

    3)   இது முற்றிலும் சரி என எடுத்துக் கொள்ள முடியுமா?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                 வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 206

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

     

    20-08-2016 — சனி

    “ நம் செயல்களுக்காக நம் குழந்தைகள் பழியேற்றுத் தண்டிக்கப்படாதவாறு நாம் அனைவரும் வாழ வேண்டும்”

    . . . ஆனந்தே உபிட்ஸ்

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர்?
    2) ஏற்கனவே நாம் அறிந்திருந்தது உறுதிப்படுகின்றதா?
    3) இந்தப் பொருளில் தமிழில் உள்ள ஆன்றோர் மொழி என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 205

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

    19-08-2016 — வெள்ளி

    பாவத்திற்கு பல துணைகள் உண்டு. முக்கியமானது பொய்.

                                                                                                                   . . . ஹோர்ம்ஸ்

    பயிற்சி—
    1) பொய் என்பது பாவத்தை ஏற்படுத்துமா?
    2) எப்படி? பொய் சொல்வதற்கு அச்சப்படவேண்டுமா?
    3) பொய் பற்றி புத்தர் என்ன கூறுகிறார்?
    4) எதார்த்தத்தில் பொய் எந்த நிலையில் உள்ளது? காரணம் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

    13-08-2016 — சனி

    பணம், பதவி, பட்டம், புகழ் இவை எவற்றாலும் ஒரு அறிவாளி மயங்குவதில்லை? உயர்ந்த எண்ணங்களும், நல்லொழுங்கங்களே அவனை ஆட்கொள்கின்றன.

                                                                                                  . . .  எடிசன்.

    பயிற்சி—

    1)   எடிசன் கூறும் அறிவாளி யார்?

    2)   இங்கே மயங்குவது என்றால் என்ன?

    3)   ஏன் பணம், பதவி, பட்டம், புகழ் இவை எவற்றாலும் அறிவாளி மயங்குவதில்லை?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 203

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    12-08-2016 — வெள்ளி

    இறைவன் நம்முடையவன். கடவுளுக்கும் நமக்கும் உள்ள இந்த உறவு காலங்காலமாக தொடர்ந்து வருவது. இறைவன் அனைவருக்கும் சொந்தமானவன், இறைவனிடம் நாம் பூணும் ஆழத்தைப் பொறுத்தே நாம் இறைவனை அறிகிறோம்.

    . . . அன்னை சாரதா தேவி

    பயிற்சி—
    1) இது அத்வைதமா அல்லது துவைதமா?
    2) ‘பூணும் ஆழத்தைப் பொறுத்து’ என்றால் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 202

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    06-08-2016 — சனி

    தோல்வியில் இருவிதம். ஒன்று சிந்தித்தும் செயல் புரியாதவர்கள். மற்றொன்று சிந்திக்காமலே செயல்புரிபவர்கள்.

    . . . சான்றோர் வாக்கு

    பயிற்சி:–
    1) தோல்விக்கும் சிந்தனைக்கும் தொடர்புள்ளதா? எவ்வாறு தொடர்புள்ளது?
    2) தோல்வி அடையும்போதேல்லாம் சிந்திக்க வில்லைஎன்று பொருளா?
    3) சிந்தித்தும் செயல் புரியாமை பற்றியும், சிந்திக்காமலே செயல் புரிவது பற்றியும் என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
    நன்றி,
    வாழ்க வளமுடன்

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 201

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     

    05-08-2016 — வெள்ளி

    வாழ்க்கை எனும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றிவீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்குத் தேவை.

    . . . சுவாமி விவேகானந்தர்.

     .
    பயிற்சி—
    1) வாழ்க்கையை ஏன் போர்க்களத்தோடு ஒப்பிடுகிறார் சுவாமி விவேகானந்தர்?
    2) அஞ்சாது எதிர்த்து நிற்க வேண்டும் என்று சொல்வதன் மூலம் என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
    3) வேறு எந்த அருளாளர்கள் என்ன கூறுகின்றனர் இது பற்றி?

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 200

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

    30-07-2016—சனி

    ‘ பேசப்போவது எல்லாவற்றையும் நன்றாக யோசி. ஆனால் யோசித்ததை எல்லாம் பேசிவிடாதே?

     ….. டெலானி.

    பயிற்சி—
    1) யோசிக்கவும் சொல்கிறார் அறிஞர் டெலானி, அதே நேரத்தில் எச்சரிக்கையையும் விடுக்கிறார். ஏன்?
    2) மனவளக்கலையின் எந்தப் பயனை வளர்க்கக் கூடியது அறிஞர் டெலானியின் இவ்வறிவுரை?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 199

    வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

                         29-07-2016—வெள்ளி

    ‘தன் குறை எது என கண்டுபிடித்தலே அறிவின் சிகரமாகும்’

    ….. இங்கிலாந்துப் பழமொழி.

    பயிற்சி—
    1) ‘இவ்வுண்மையை மகாத்மா காந்தி எவ்வாறு கூறி இருக்கிறார்?
    2) மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
    3) ஏன் தன்குறையை அறிவது, அறிவின் சிகரம் என்கிறது இங்கிலாந்துப் பழமொழி?
    4) அறிவு அரூபமாயிற்றே! அறிவிற்கு சிகரம் உண்டா? பழமொழி கூறும் சிகரம் எது?

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளா்க அறிவுச் செல்வம்

    Loading