சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 186

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    11-06-2016 — சனி

    மிக்க குறைந்தததைக் கொண்டு திருப்தியடைபவனே முதன்மையான செல்வன். ஏனெனில் இயற்கையின் செல்வம் திருப்திதான்.

     ….. சாக்ரடீஸ் .

    பயிற்சி—
    1) தனக்குப் பொருந்தியதை சமுதாயத்திற்கும் சொல்கிறாரா சாக்ஸ்ரடீஸ்? எப்படி?
    2) முதன்மையான செல்வம் என்கிறாரே‘ இது எப்படி?
    3) இயற்கைக்கு திருப்தி உண்டா?.

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 185

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     10-06-2016 — வெள்ளி

    ”கடவுளை தன்னுள்ளே காணமுடியாதவனுக்கு கடவுள் இல்லை.”

    . . . டால்ஸ்டாய்.

    பயிற்சி—
    1) ‘கடவுள் இல்லை’ என்பதன் மூலம் என்ன சொல்கிறார் டால்ஸ்டாய் அவர்கள்?
    2) தன்னுள் கடவுளைக் காணமுடியாதவன் வேறு வழிகளில் கடவுளைக் காண முடியாதா?

    வாழ்க அறிவுச் செல்வம்                               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 184

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    04-06-2016 — சனி

    நம் இயல்புகளிலேயே அடக்குவதற்குக் கடினமானது அகம்பாவத்தைப் போல வேறெதுவும் இல்லை.

    ….. பிராங்க்ளின்

    பயிற்சி:–
    1) அகம்பாவம் என்று எதனைக் கூறுகிறார் அறிஞர் பிராங்க்ளின்?
    2) ஏன் அதனை அடக்குவது கடினமாக உள்ளது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 183

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    03-06-2016 — வெள்ளி

    ‘நான் யார் என்ற கேள்வியைக் கேளுங்கள். பதிலை உங்களுக்குள்ளே தேடுங்கள். பிறவியைத்
    தவிர்க்கும் உபாயம் இதுவே.

     …. ஸ்ரீ ரமணர்

    பயிற்சி—
    1) பிறவியைத் தவிர்ப்பது என்றால் என்ன?
    2) ‘நான் யார்?’ என்பதற்கான விடை எவ்வாறு பிறவியைத் தவிர்க்கச் செய்யும்?
    3) இதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 182

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

    28-05-2016—சனி.

    “.தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் வாழ்வில் சக்தியுண்டாகும்.”

    . . . மகான் மகா கவி பாரதியார்.

    பயிற்சி—
    1) சக்தி எதற்காக? உடல் இயக்கத்திற்காகவா?
    2) ‘வாழ்வில் சக்தி உண்டாகும்’ என்பதன் பொருள் என்ன?
    3) ‘தெளிந்த அறிவு’ என்பது என்ன?
    4) ‘இடைவிடாத முயற்சிக்கும்’ வாழ்வில் ‘சக்தி உண்டாவதற்கும்’ உள்ள தொடர்பு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                                        வளா்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 181

    வாழ்க மனித அறிவு                                             வளர்க மனித அறிவு

    27-05-2016—வெள்ளி

    சிந்திக்காமல் பேச ஆரம்பிப்பது குறி பார்க்காமல் செலுத்தப்படும் அம்பைப் போன்றது.

    . . . பழமொழி.

    பயிற்சி— 1) சிந்தித்துப் பேசுவதால் என்ன நிகழ்கின்றது?

                         2) சிந்தித்துப் பேசுவதால் என்ன பயன்கள்?
    .

    வாழ்க அறிவுச் செல்வம்                               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 180

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

     

    21-05-2016 — சனி.

    வாழ்க்கையில் கஷ்டங்களைக் காணாதவன் தன்னைப் பெரிய மனிதனாக உயர்த்திக் கொண்டதே கிடையாது!

    . . . தியோடர் ரூஸ்வெல்ட்.

    பயிற்சி—
    1) பெரிய மனிதனாக ஆவதற்கு கஷ்டங்களைக் காணவேண்டும் என்கிறாரே அறிஞர்  தியோடர் ரூஸ்வெல்ட் அவர்கள். ஏன்?
    2) ‘பெரிய மனிதராவது’  என்பதாவது நேர்மறையானது(positive). ஆனால் ‘கஷ்டங்களைக் காணவேண்டும்’ என்பது எதிர்மறையாக உள்ளதே! ஏன்?
    3) இது எதனை அறிவுறுத்துகின்றது?
    4) நம் குருதேவர் அவர்களை இக்கூற்றிற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமா? வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 179

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    20-05-2016 — வெள்ளி.

    எண்ணத்தை தூய்மையில் வைத்திருப்பதோடு, ஆராய்ச்சியிலும் வைத்திருப்பவன் அறிஞன்,  மகான், ஞானி.

     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ஞானி எண்ணத்தை தூய்மையில் வைத்திருப்பதுடன், ஆராய்ச்சியிலும் வைத்திருக்க வேண்டுமா ஞானி?
    2) சிந்திப்பதற்கும் உயர்வதற்கும் உள்ள தொடர்பு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளா்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 178

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

     14-05-2016 — சனி

      தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை?

                                        ….. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—
    1) தூய்மையும் எவ்வாறு வெற்றிக்கு இன்றியமையாததாக உள்ளது?
    2) தூய்மை வெற்றிக்கு இன்றியமையாதது என்பதால், சுவாமி விவேகானந்தர் கூறும் ‘வெற்றி’ என்பது குறிப்பிட்டு ‘ஒன்றைக்’ குறிக்கின்றதா?
    3) அல்லது எல்லா வெற்றிகளையுமே குறிப்பிடுகின்றாரா?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 177

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    13-05-2016 — வெள்ளி

    சமுதாயமாகிய பெரிய மரத்தின் வேர் முதற்கொண்டு உச்சிக்கிளை வரையிலுள்ள முழு அளவிலான சீர்திருத்தமே நான் பெரிதும் விரும்புவது.

     . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—
    1) இன்றைய சமுதாய சூழலில் சுவாமி விவேகானந்தர் கூறுவது எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்று ஆராய்ந்து அவரோடு இணைந்து இன்புறலாமே!
    2) இணைந்து கொண்டு பரப்ப வேண்டிய எண்ண அலைகளை எண்ணலாமே!
    3) சீர்திருத்தம் என்பது என்ன?
    4) சீர்திருத்தம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்              வளா்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 176

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    07-05-2016 — சனி

    தேவைகள் குறையும் அளவிற்கே தெய்வத்தன்மை அடைவோம்.

     . . . அறிஞர் சாக்ரடீஸ்.

    பயிற்சி:–
    1) மகரிஷி அவர்கள், அறிஞர் சாக்ரடீஸ் அவர்களையும் அறிஞர் திருவள்ளுவரையும் தொடர்பு படுத்திக் கூறியுள்ளது  என்ன?
    2) ‘தேவைகள் குறைவதற்கும்’ ‘தெய்வத்தன்மை அடைவதற்கும்’ உள்ள தொடர்பு ஆன்மீகமா? அல்லது அறிவியலா?
    3) விரக்தியால் கூறுவதா?
    4) இந்தக் கூற்றுடன் தொடர்புடைய குறள் ஏதேனும் உள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 175

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     

    06-05-2016 — வெள்ளி

    இறைநிலையான மன அலை விரிந்த சுத்த வெளியுடன் அபூர்வமாக ஒன்றிணைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக் காணும்போது, அது இன்பமும், திருப்தியும், கலந்த உணர்வாக அமைவது பேரின்பம்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ஏன் அபூர்வமாக என்கிறார் மகரிஷி அவர்கள்?
    2) ‘தனது சொந்த ஆற்றல்’ என்பதன் பொருள் என்ன?
    3) ஒவ்வொரு இடத்திலும், பொருளிலும் என்பதன் பொருள் என்ன?
    4) ‘செயல் ஒழுங்காக’ என்பதன் பொருள் என்ன?
    5) ‘மெய்யுருவாக்கிக் காணும்போது’ என்பதற்குப் பொருள் என்ன?
    6) மகரிஷி அவர்கள் சுருங்கச் சொல்வதென்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்            வளா்க அறிவுச் செல்வம்

    Loading