சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 57

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    20-03-2015— வெள்ளி

    நீ உலகிற்குச் செய்யும் முதல்தரமான சேவை உன்னை நீ அறிந்து விடுவது ஒன்றுதான்.

    …ஸ்ரீ சாந்தானந்தர்

    பயிற்சி—
    1) இந்த அமுத மொழி கூறுவதென்ன?
    2) தன்னை அறிவது உலகிற்குச் செய்யும் சேவை என்கிறாரே ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள். எவ்வாறு?
    3) அந்த சேவை முதல்தரம் என்கிறாரே. எப்படி?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 56

    வாழ்க மனித அறிவு        வளர்க மனித அறிவு

    14-03-2015— சனி

    ஆடம்பரம் அதிகரிக்க, அதிகரிக்க ஒழுக்கம் மறைய ஆரம்பிக்கின்றது?

    … ரூஸோ

    பயிற்சி—
    1) ஆடம்பரம் என்றால் என்ன?
    2) ஒழுக்கம் என்றால் என்ன?
    3) ஆடம்பரமும் ஒழுக்கமும் ஒன்றுக்கொன்று எதிரானதா?
    4) ஆடம்பரம் அதிகரிக்க, அதிகரிக்க ஒழுக்கம் எப்படி மறைகிறது?
    5) ஆடம்பரத்தின் எதிர்ச்சொல் என்ன? அதனைத் தெரிந்து கொண்டு, கடைபிடிக்கலாமன்றோ, ஒழுக்கம் அதிகரிப்பதற்கும், நிலைப்பதற்கும்!

    வாழ்க அறிவுச் செல்வம்       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 55

    வாழ்க மனித அறிவு                                       வளர்க மனித அறிவு

                                                                                                                                  13-03-2015— வெள்ளி

    அகந்தை இருக்குமிடத்தில் ஆண்டவன் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டான். ‘நான்’ ‘எனது’ என்று எண்ணிக் கொண்டு செயலாற்றுபவர்கள் எந்தக் காலத்திலும் ஆண்டவனை அடைய முடியாது.

                                                                         … இரமண மகரிஷி அவர்கள்

     பயிற்சி—

    1)   தெய்வமே எல்லா மனிதர்களாக இருக்கும் போது, இரமண மகரிஷி அவர்கள் ஏன் இவ்வாறு கூறுகிறார்?

    2)   ‘நான்’ ‘எனது’ என்று சொல்லாமல் எவ்வாறு இருக்க முடியும்?  ‘நான்’ ‘எனது’ என்று சொல்வதே தவறா அல்லது எண்ணுவது தவறா?

    3)   எவ்வாறு இந்த இரண்டும் ஆண்டவனை அடையத் தடையாக உள்ளது?  இதிலுள்ள எதார்த்தமும், விஞ்ஞானமும் என்ன?

    4)   ‘தன்முனைப்பு கரைந்து போம்,  காணும் தெய்வம்’ என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதும் இதனைத்தானே?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                   வளா்க அறிவுச் செல்வம்

     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 54

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    07-03-2015—சனி

    வாழ்க்கை என்ற சிறிய தோணியைப் பற்றிக் கொண்டு கடல் போன்ற வினையைக் கடக்க முடியாமல் தத்தளித்துத் தவிக்கும் மனிதன் அதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தவம்; மற்றது அறம்.

    …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    பயிற்சி—
    1) வினைக்கடலிலிருந்தும், மனக் கவலையிலிருந்தும் வெளிவர திருவள்ளுவர் கூறும் அறிவுரைகளை எடுத்துக் கூறும் இரண்டு குறட்பாக்கள் என்ன? 
    2) வினைக்கடலிலிருந்து வெளிவர தவம், அறம் ஆகிய இரண்டும் அவசியம் என்பதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 53

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

     

    06-03-2015—வெள்ளி

    வாழ்க்கைத் தேவைகள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கின்றனவோ அந்த அளவுக்குத்தான் நிம்மதியும் சாத்தியமாகின்றது. ஒரு தேவை இன்னொரு தேவைக்கு வழி வகுக்கிறது. முடிவில் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதிலேயே வாழ்நாள் வேகமாக கழிந்து விடுகிறது.

    …. பெர்னாட்ஷா

    பயிற்சி—
    1) இதனை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா?
    2) எல்லோருமேதான் வாழ்கின்றனர். இந்த உண்மையை எல்லோரும் அறிவதில்லை என்பதால் இந்த உண்மையை அறிஞர் பொ்னாட்ஷா கூறுகின்றாரா?
    3) இதே பொருளில் வள்ளுவம் கூறும் குறளை நினைவு படுத்திக் கொள்ளவும்
    4) இதே பொருளில் மகரிஷி அவர்கள் கூறும் அமுத மொழியினை நினைவு படுத்திக் கொள்ளவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 52

    வாழ்க மனித அறிவு    வளர்க மனித அறிவு

    28-02-2015—சனி

    புகழ் கள்ளைவிடக் கொடியதாகும். கள்ளைக் குடித்தால்தான் போதை வரும். ஒருவனைப் புகழ்ந்தவுடனேயே அவன் தலை சுற்ற ஆரம்பித்துவிடும். புகழ் கொடிய சத்துருவாகும்.

    …. ஸ்ரீ சாந்தானந்தர்.

    பயிற்சி—
    1) இதனை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா?
    2) புகழ் பற்றிய கெடுதலை எல்லா அறிஞர்களும் கூறுகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள் புகழ் பற்றிக் கூறுவதென்ன?
    3) புகழ் பற்றி அறிஞர்கள் கூறுவது அவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதா? அல்லது மனித குலத்திற்கே பொருந்தக் கூடியதா?
    4) புகழ் பற்றி கூறுவது அறிவு பூர்வமானதுதானா என்று கண்டுபிடிக்க முடியுமா?
    5) புகழுக்கும் பேரின்பத்திற்கும் உள்ள உறவு என்ன? விளக்க முடியுமா? விளக்கவும்.
    6) புகழில் சிக்காமல் இருக்க எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது?

    வாழ்க அறிவுச் செல்வம்    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 51

    வாழ்க மனித அறிவு      வளர்க மனித அறிவு

     

    21-02-2015—வெள்ளி

    ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லாது, அந்தப் பதார்த்தத்தின் ருசி தெரியாது.
    ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் ஆசை ஏற்படாது.
    அதுபோல் தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லாது அதன் மேல் பிரியம் வராது.
    ஆதலால் தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லட்சியத்தைதக் கொண்டிருங்கள்.

    …அருட்பிரகாச வள்ளலார்.

    பயிற்சி— 1) வள்ளலார் கூறும் அருட்செய்தி என்ன?
    2) “தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தல்” என்றால் என்ன?
    3) தெய்வத்தை உணரும் பயிற்சிகளை மட்டுமே செய்து வந்தால் போதாதா?
    4) தெய்வத்தின் மேல் பிரியம் வர என்ன செய்ய வேண்டும்?
    5) தெய்வத்தை உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது?
    6) வள்ளலார் கூறும் இந்த அறிவுரையைச் செயல்படுத்த வேதாத்திரியம் எவ்வாறு பேருதவியாக இருக்கும்?  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 50

    வாழ்க மனித அறிவு     வளர்க மனித அறிவு

    21-02-2015—சனி

    பணம் செய்வதை எல்லாம் எழுதி வை. செலவழித்தது அவசியம்தானா என்று சிந்தித்துப் பார். சிக்கனம் தானாக வரும்.

    ….. மகாத்மா காந்தி அவர்கள்

    பயிற்சி—1) சிக்கனம் என்பது என்ன?
    2) சிக்கனம் என்பது அவசியமா? ஏன்?
    3) சிக்கனம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?
    4) சிக்கனத்திற்கும் இறை உணர்விற்கும் தொடர்புள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 49

    வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

    20-02-2015–வெள்ளி

     

    ஒழுக்கம் போர்க்களம் போன்றது.   அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம்மனதோடு போராட வேண்டும்.

                                                                                                                                 … ரூஸோ

    பயிற்சி—

             1) என்ன சொல்கிறார் அறிஞர் ரூஸோ?  ஒழுக்கம் உயிரைவிட மேலானது. அப்டியிருக்கும்போது ஏன்    ‘‘ஒழுக்கம் போர்க்களம் போன்றது’ என்கிறார்?

            2) இதே கருத்தை ஒட்டி மகரிஷி அவர்கள் கூறும் அமுத மொழி என்ன?

            3) பழக்கப் பதிவுகள், விளக்கப் பதிவுகள் என்றால் என்ன?
           4) இவ்விரண்டிற்கும் உள்ள உறவு என்ன?
           5) இவ்விரண்டில் எது வலிது? ஏன்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 48

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    14-02-2015–சனி

    மிருக இயல்பு. மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்று விதமான இயல்புகளால்

    மனிதன் உருவாக்கப்படுகிறான். இதில் தெய்வீக இயல்பை வளர்ப்பது ஒழுக்கமாகும்.

    ….. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—1) இந்த அமுத மொழி என்னென்ன புரிதல்களை ஏற்படுத்துகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 47

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

                     13-02-2015–வெள்ளி

     

    தீமை இல்லாத புகழ் இறைவன் ஒருவனுக்குத்தான் உண்டு.

     

                                                  …… அருட் பிரகாச வள்ளலார்.

     

    பயிற்சி:  1 ) புகழ் என்பது இறைவனுக்கு மட்டும் தானா?   ஏன் அப்படி?

      

                       2)  அப்படியானால் தீமை இருக்கின்ற புகழ் யாருக்கு?

     

                       3)  புகழால் ஏன், எந்த வழியில் மனிதனுக்கு  தீமை வருகின்றது?

                      

                          வாழ்க அறிவுச் செல்வம்                                      வளா்க அறிவுச் செல்வம்

     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 46

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    07-02-2015–சனி

    பாம்பும் அதன் மேற்சட்டையும் வெவ்வேறானவை; அதுபோலவே ஆத்மாவும் சரீரமும்
    வெவ்வேறானவை.

    … ஸ்ரீராமகிருஷ்ணர்.

    பயிற்சி: 1) இதனைக் கேட்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வு என்ன?

    2) எதற்காக இதனை ஸ்ரீராமகிருஷ்ணர் நமக்குத் தெரிவிக்கிறார்?

    3) “ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை“ என்று கருத்தியலாகவும்
    (theoretically), செய்முறையாகவும்(practically) அறிவதால் என்ன பயன்?

    4) ஆன்மீகத்தில் வெற்றியைப்பற்றிக் கூறும் போது “முதலில்
    புளியங்காயாக இருந்தது பிறகு புளியம் பழமாகிவிட வேண்டும்” என்று
    கூறுவதற்கும் ”ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை என்று கூறுவதற்கும்” ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

     

    வாழ்க அறிவுச் செல்வம்            வளா்க அறிவுச் செல்வம்

    Loading