சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 45

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

                                             06-02-2015

     

      பாவப் பதிவுகளைப் போக்கி அறிவில் மேலோங்க வேண்டியதே பிறவியின் நோக்கம்.

                                                                                                                                          ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்

     

    பயிற்சி:  1) இந்த அமுத மொழி  எந்த வகையில் பிடித்திருக்கின்றது?

               2) இந்த அமுத மொழி   ஆத்ம உணர்ச்சியை எவ்வாறு தூண்டுகின்றது?

               3) பாவப்பதிவை போக்குவதன் அவசியம் தெரியும். அதே வேளையில், ‘அறிவில் மேலோங்க’ என்று கூறுவதன் பொருள் என்ன?

               4) எவ்வாறெல்லாம் அறிவில் மேலோங்க வேண்டும்?

               5) எட்டு வார்த்தைகளை கொண்ட இந்த அமுத மொழியினை மகரிஷி அவர்கள் கூறிய நிலையிலிருந்து விளங்கிக் கொள்ளவதற்கு,  ஐந்து வினாக்கள் எழுப்பிவிட்ட நிலையில்  வேறு ஏதேனும் வினாக்கள் எழுப்ப வேண்டியுள்ளதா?  வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 43

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    30-01-2015 வெள்ளி

    மனிதனின் மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. அந்தப் பொட்டலம் கிழிந்து கடுகு நாலாபுறங்களிலும் ஓடிவிட்டால் அதை ஒன்று சோ்ப்பது சிரமம். அது போல் மனம் உலக விஷயங்களில் சிதறத் தொடங்கினால் அதைக்குவித்து ஒருமுகப்படுத்துவது சுலபமானதல்ல.

    ….. பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

     

    பயிற்சி : இந்த பொன் மொழியிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 42

     வாழ்க மனித அறிவு   வளர்க மனித அறிவு

     

    24-01-2015

     

    ஆன்மா தன்னுடன் பேசிக் கொள்வதே சிந்தனை.
                                                                                         …. பிளேட்டோ
    பயிற்சி:

                       1) எப்படி?

    வாழ்க அறிவுச் செல்வம்  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 41

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    23-01-2015

     

    புகழ்ச்சியைவிடக் கண்டனம் ஆபத்து இல்லாதது.

                                                                                                          ….. எமர்ஸன்
    பயிற்சி:
    1) ஏன்?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 40

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    17-01-2015

    எதிர்காலத்தைக் கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவதே.

    …. மின்ஸ்டர் ஃபுல்லர்.

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 39

    16-01-2015

     

    amudhamozhi_38

    ஞானமில்லாதவனுக்குத் தியானம் கைகூடுவதில்லை.

                                                                        ….. புத்தர்.  அ.மொ.ப.17-56

     

    பயிற்சி:

    1) ஏன்?

    2) தியானம் கைகூடுவது என்றால் என்ன?

     3) ஞானத்திற்காகத்தானே தியானம்?  அப்படியிருக்கும்போது ஞானமில்லாதவனுக்குத் தியானம் கைகூடுவதில்லை என்கிறாரே புத்தர். என்ன பொருள்?

    4)  புத்தர் கூறும் ஞானம் என்பது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                 வளா்க அறிவுச் செல்வம்

     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 38

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    10-01-2015

    அரை குறையாக ஆண்டவனை நம்புவதால் ஒரு பயனும் இல்லை. முழுமையாக சரணாகதி அடைந்தால் மட்டுமே அவன் பார்வை நம்மீது விழும்.
    ……ஸ்ரீ ரமண பகவான்.
    பயிற்சி: 1) அரை குறை யாக ஆண்டவனை நம்புவது என்றால் என்ன?
    2) முழுமையாக சரணாகதி அடைவது என்பது என்ன?

    3) இறைவன் பார்வை நம்மீது விழும் என்றால் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 37

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    09-01-2015

     

    ”உலகின் அடக்க முடியாத அசுரன் அலட்சியம்.”
    ……ஒயிடர்.
    பயிற்சி:
    சிந்திக்கவும்: 1) அலட்சியம் என்றால் என்ன?
    2) ஏன் ‘அலட்சியத்தை ‘ அடக்க முடியாத அசுரனுக்கு ஒப்பிடுகிறார்?
    3) அலட்சியம் மனித அறிவின் குறைபாடுகளில் ஒன்று. மனித அறிவோ தெய்வஅறிவின் ஒரு துளி. அவ்வாறு இருக்கும் போது அலட்சியத்தை நீக்க முயற்சி செய்யவில்லை எனில், அறிஞர் ஒயிடர் அலட்சியத்தை அசுரனுடன் ஒப்பிடும் கண்ணோட்டத்தில் சிந்தித்தால் அலட்சியம் ஏற்படுத்தும் தீங்குகள் என்னென்ன?
    4) அலட்சியம் தன்முனைப்பின் வெளிப்பாடு. தன்முனைப்போ வேண்டாத அறுகுணங்களின் வாயில். விளைவு துன்பம் தான்.
    5) எனவே அலட்சியமாகிய தன்முனைப்பு இறைக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள திரை. இறையுணர் பாதையில் பயணிப்பதற்கு அலட்சியம் ஒவ்வாது.

    வாழ்க வேதாத்திரியம் வளர்க வேதாத்திரியம்

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 36

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    03-01-2015

    நல்லார் இணக்கமும் அடியார்களோடு உறவாடுதலும் தெய்வத்தை உணரவேண்டும் என்கின்ற ஆர்வமும் இந்த மனிதப் பிறவிக்கு உகந்த விஷயங்கள்.

    ….ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்

    குறிப்பு:- 1) ”நல்லார் இணக்கம்” பற்றி வேறு அறிஞர்கள் சொன்னவைகளுடன் இணைத்துப் பார்க்கவும்,
                      2) ”அடியார்களோடு உறவாடுதல்” பற்றி வேறு அறிஞர்கள் சொன்னவைகளுடன் இணைத்துப் பார்க்கவும்.

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading