சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 35

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    02-01-2015

    எல்லாக் கலைகளையுமை்விட வாழ்க்கை மிக உயா்ந்தது. எந்த மனிதனின் வாழ்க்கை பூரணத்துவம் அடைகிறதோ அவன்தான் மிகச் சிறந்த கலைஞன் என்று கூற முடியும்.

    …..டால்ஸ்டாய்

    சிந்திக்க:-1) ஏன் எல்லாக் கலைகளையும் விட வாழ்க்கை மிக உயா்ந்தது என்கிறார் டால்ஸ்டாய்?
    2) வாழ்க்கை பூரணத்துவம் அடைதல் என்றால் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 34

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    27-12-2014

    வாய்ப்புகள் சூரியோதயம் போன்றவை; அதிக நேரம் காத்திருந்தால் உதய நேரம் தாண்டி விடும்.

    …… ஓர் அறிஞர்

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 33

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

                                             26-12-2014

     

    காயின் புளிப்பை கனியின் இனிப்பாக மாற்றுவது அந்த மரத்தில் இயங்கும் அறிவுதான்.

     

     அவர்கள்……..வேதாத்திரி மகரிஷி

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                   வளா்க அறிவுச் செல்வம்

     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 22

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    20-12-2014

    தைரியம் உங்கள் தாரக மந்திரமாகட்டும். உலகில் தோன்றியதற்கு அடையாளமாக வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்லதை சாதித்துக் காட்டுங்கள்.

    …….சுவாமி விவேகானந்தர்

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 21

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

                                            19-12-2014

     

    அரை குறையாக ஆண்டவனை நம்புவதால் ஒரு பயனும் இல்லை.  முழுமையான சரணாகதி அடைந்தால் மட்டுமே அவன் பார்வை நம்மீது விழும்.

    ஸ்ரீ ரமணர்

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                      வளா்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 20

    வாழ்க மனித அறிவு                                                                               வளர்க மனித அறிவு

     

    13-12-2014

    சுக போகத்தை நாடி விரும்பி ஓடுகிறோம். ஆனால், அதையும் கடந்து மேலே சென்றால் ஒழிய இறைவனாகிய பேரின்பத்தை அடைய முடியாது.

    …….. அரவிந்தர்

    குறிப்பு:    1)  ”ஓடுகிறோம்” என்று ஏன் அரவிந்தர் அவ்வாறு கூறுகிறார்?
    2) புலனின்பத்தை விட்டொழித்தால் ஒழிய பேரின்பம் அடைய முடியாதா?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 19

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    12-12-2014

    ”பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார்*

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    மேற்கண்ட மகரிஷியின் அமுத மொழியில் உள்ள ஆதங்கம் தெரிகின்றதல்லவா?

    ஆக்கமும், அழிவும் அணுக்கள் கூடுதல் பிரிதலே. நீக்கமற நிறைந்தவனின் நினைக்கும் ரசிக்கும் நிலை அறிவு.
    மேற்கண்ட மகரிஷியின் அமுத மொழியில், சுத்த அத்வைத தத்துவத்தை எளிமையாக்கி உணர வைக்கின்றார் அல்லவா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 18

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

                                            06-12-2014

                       “பிறப்பும் இறப்பும் உருவத்தோற்றமான உடலுக்கே அன்றி உயிருக்கு அல்ல”

     

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்

     

    குறிப்பு:  கருத்தைச் சிந்திக்கவும்.

     

    1)   உடல் அழியக் கூடியது.  அழிந்து விடும் ஒரு நாள்.

     

    2)   உயிர் அழியாதது.  இது, யாவருக்கும் இப்போது தெரிய வருகின்றது.  ஆனால் இதற்கு முன்னர் இப்படி ஒரு சிந்தனை இல்லை. மரணத்திற்கு பின் அதாவது உயிர் உடலை விட்டு வெளியேறிய பிறகு, உடல் தான் எரிக்கப்படுகின்றது அல்லது புதைக்கப்படுகின்றது.   உயிரை எரிப்பதில்லை.  அல்லது உயிரைப் புதைப்பதில்லை. ஆகவே உயிர் அழியாதது எனத் தெளிவாகின்றது.

    3)   இப்படிப்பட்ட உயிரின் நிலை பிறப்பிற்கு முன்னும், இறப்பிற்கும் பின்னும் என்ன?

     

    4)   உயிரறிவு என்பது என்ன?  ஏன் உயிரறிவு பெறவேண்டும் மனிதர்கள்?

     

    5)   அதனால் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் என்னென்ன பயன்கள்?

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

    Loading

  • அறிவிப்பு

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

     

                                                         05-12-2014

      வாழ்க வளமுடன்,

     

    தவிர்க்க முடியாத  காரணங்களைக் கருதி இணையதள சத்சங்கத்தில் சந்திப்பதில் (Meeting in Web Satsang) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    1)     வாரத்தில் ஒரு நாள் விடுமுறை. அது செய்வாய்க் கிழமையாக இருக்கட்டும்.

     

    2)     அறிவிற்கு விருந்திற்காக ஞாயிறு மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் சந்திப்போம்.

     

    3)    சிந்தித்தல் பயிற்சிகளில் ஒன்றான சிந்திக்க வினாவிற்காக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் சந்திப்போம்.

     

    4)    சிந்தித்தல் பயிற்சிகளில் மற்றொன்றான சிந்திக்க அமுத மொழி பகுதியில்; வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களில் சந்திப்போம்.

     

    இந்த தற்காலிக ஏற்பாடு நாளை முதல்(06-12-2014) அமலுக்கு வருகிறது.

     

                                                         வாழ்க Prosper Spiritually இணையதள சத்சங்கம்.

                                                            வளர்க Prosper Spiritually இணையதள சத்சங்கம்.

                                                               வாழ்க இணையதள பார்வையாளர்கள்

                                                                 வளர்க இணையதள பார்வையாளர்கள்

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • அறிவிப்பு

    வாழ்க மனித அறிவு                                                                       வளர்க மனித அறிவு

    28-11-2014

    வாழ்க வளமுடன். தவிர்க்க முடியாத காரணங்களால் 28-11-2014 லிருந்து 01-12-2014 வரை சந்திக்க இயலாமையைத் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. பொருத்தருள்க. வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 17

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

    28-11-2014

    உலகனைத்துக்கும் பொதுவாக பொதுவாயிருப்பது ஒரே வெட்டவெளி. அங்கனம் உயிர் அனைத்துக்கும் பொதுவாக இருப்பது ஒரே அறிவுவெளி — சிதாகாசம்.

    ……..ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                           வளா்க அறிவுச் செல்வம்

    Loading