சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-156

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    03-03-2016 – வியாழன்

     

     ————–       ———–      முரணானதைச் செய்யும்போது அதுவேதான்  கருமையத்தில்  ———–     ———–  வருகிறது. மீண்டும் அந்தப்பதிவைப்  போக்கத்தான்  ——————                  ———————–.

    …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                               வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-155

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    29-02-2016 – திங்கள்

     

    தான் பண்பில்–குணத்தில் உயர்ந்து வருவதனை, எதைக் கொண்டு சரியாக, துல்லியமாக தானாகவே கண்டுபிடிக்க முடியும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-154

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    25-02-2016 – வியாழன்

    இறை உணர் ஆன்மீகத்தில் ‘தெளிவு’ என்றால் என்ன?

    அறிஞர் திருமூலர் அந்த தெளிவினை எவ்வாறெல்லாம் பெற வேண்டும் என்கிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு.

                                                                        25-02-2016

    அன்புடையீர்,

                 வணக்கம். வாழ்க வளமுடன். நேற்றைய (24-02-2016- புதன்கிழமை) அறிவிற்கு விருந்து, நேற்று மாலை 5-00PM அளவில் updation செய்யப்பட்டுள்ளது. எனவே நேற்று மாலை 5-00PM முன்னர் இணையதளத்தை பார்வையிட்டவர்களின் நலன் கருதி இங்கே அப்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. வாசித்து பயன் பெறவும். அல்லது முழுவதுமாக மீண்டும் நேற்றைய அறிவிற்கு விருந்தை அருந்த வேண்டும் என நினைக்கின்றவர்கள் தயவு செய்து இங்கே சொடுக்கவும்

     

    (Click here please).

    https://www.prosperspiritually.com/category/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

         

    வாழ்க வளமுடன்.

     

    விடை – 15

    FFC – 166

                                           24-02-2016—புதன்

     

    சிந்திக்க வினாக்கள்-143

    (18-01-2016 – திங்கள்)

     

    மகரிஷி அவர்கள் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? ஏன் அதனை அவ்வாறு கூறுகிறார்?

     

    Updated portion of FFC 166 posted Yesterday(24-02-2016)

     

            இப்போது தெய்வப்புலவர் திருவள்ளுவரை வணங்குவோம். திருவள்ளுவரை உலகமே போற்றுவதாலும், திருக்குறள் உலகப் பொதுமறை நூல் எனப்போற்றப்படுவதாலும், திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதிலிருந்தும் திருவள்ளுவரின் அரிய பெருமைகள் தெரிய வந்தாலும், திருவள்ளுவரின் அறிவாற்றலை நினைத்துப்போற்றுவதாலும், இயல்பூக்க நியதியின் பயனை அடைய முடியும் என்பதற்காக, நம் குருதேவர் வழியாக திருவள்ளுவர் பற்றி அறிவது சிறப்புடையதாகும்.

    திருக்குறளை அறிவுக்கடல் என்கிறார் நம் மகரிஷி அவர்கள். அதனை நாம் ஆராய்ச்சி செய்து அதனை ஏற்றுக்கொள்ளலாமே.

    இறைஉணர் பயிற்சியாளர்கள் பயிற்சியில் எவ்வாறு வெற்றி பெறுவது?

    முதல் படி:

    ஆராய்ச்சியாகும்.

    1)   முதலில் இறை என்பது எது,

    2)   இறை எவ்வாறு இப்பிரபஞ்சமாகியது,

    3)   இறை எவ்வாறு நாமாக ஆகியுள்ளது அல்லது இறைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன,

    4)   கண்களால் காணமுடியாத ஒன்று எவ்வாறு இறையாக இருக்கமுடியும்,

    5)   அப்படியானால் இறையைக் கண்டதாக அருளாளர்கள் கூறுவது என்ன

     

    போன்ற வினாக்களின் மூலமாக ஆராய்ச்சியினைத் தொடங்க வேண்டும்.

     

    இரண்டாவது படி: தெளிவு பெறுதலாகும்.

     

    இவ்வளவு ஆராய்ச்சி செய்ததன் முடிவு என்னவாக இருக்க வேண்டும்? தெளிவு பெறவேண்டும் என்பதேயாகும். என்ன தெளிவு அது?

    1)   இறை என்பது எது,

    2) அதற்கும் நமக்கும் உள்ள உறவு என்ன,

    3) பிறந்து இறக்கப்போகின்ற இவ்வாழ்க்கையின் பொருள் என்ன,

    4) புலன்இன்பங்களில் அளவு மீறி, முறையையும் மாற்றி, மயக்கமுற்று புலன்களுக்கு அடிமையாகிய அறிவை மீட்டு விடுதலை செய்து (Liberation) தன்னையே உணர்வது ஒன்றேதான் என்கின்ற தெளிவுதான் முதற்படியான ஆராய்ச்சியின் முடிவு அது.

     

    5) இதனைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்பதனை உறுதியாக கருத்தில் கொண்டு கடமை ஆற்றுவதே மனித வாழ்க்கையின் பொருள், அர்த்தம், நோக்கம், பயன், பேரின்பம். மரணமிலா பெறுவாழ்வு வாழ்தல் என்கின்ற தெளிவு.

     

    மூன்றாவது படி: பயிற்சியாகும்.

     

    ஆராய்ச்சி செய்து, தெளிவு பெற்ற பிறகு செய்யவேண்டியது பயிற்சியாகும். ‘கற்க கசடறக் கற்பவை; கற்ற பின் நிற்க அதற்குத் தக’ என்பதற்கேற்ப முறையான பயிற்சியாகிய மனவளக்கலையை மேற்கொள்ள வேண்டும்.

     

    நான்காவது படி: வெற்றி பெறுவதாகும்.

     

    வெற்றி பெறுவது. இது கர்மயோக வாழ்வு வாழ்ந்து மரணமிலா பெறுவாழ்வு வாழ்வதாகும்.

       மனித வாழ்வில் முழுப்பயனளிக்கக்கூடிய, எக்காலத்திற்கும், எவ்விடத்திற்கும், பொருத்தமானவையாக இருக்கும் நூல்கள் எது எனக்கூறுகிறார் மகரிஷி அவர்கள். அவை, ஆய்வு, தெளிவு, பயிற்சி, வெற்றி என்கின்ற நான்கு படிகளின் வழியாக திறமை அடைந்த அறிஞர்கள் எழுதும் நூல்களே என்கிறார் மகரிஷி அவர்கள். அத்தகைய நூல்களில் மிகச் சிலவே உள்ளதாகவும் கூறுகிறார். அவற்றில் ஓர் சிறந்த உயர்வைப் பெற்று மிளிர்வதுதான் திருக்குறள் என்கிறார்.

       அத்தகைய நூலாசிரியரின் திறமை எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

     

    1)   மெய்ப்பொருள் விளக்க நிலை பெற்று முழுமை பெற்றிருக்க வேண்டும் அந்த நூலாசிரியர் என்கிறார்.

    2)   மேலும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்:– விரிந்த அறிவோடு வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

    3)   சிறப்புற்று வாழ்வதற்கான நெறிகளை வகுத்திருக்கப்பட வேண்டும் அந்த நூலில் என்கிறார் மகரிஷி அவர்கள்.

     

    அத்தகைய சிறப்புக்களுடைய ஒரு நூல் திருக்குறள் என்கிறார் மகரிஷி அவர்கள். இனிமேல் திருவள்ளுவர் அல்லது திருக்குறள் என்கின்ற பெயரைச் உச்சரிக்கும்போதே இத்தனை சிறப்புக்களும் காதுகளில் வந்து ஒலிக்க வேண்டும். மகரிஷி அவர்கள் தான் அடைந்த பயனின் நன்றி உணர்வாக தன்னுடைய மானசீகக்குருவாகிய திருவள்ளுரை போற்றுகிறார்.

    நம் நம்குருவிடம் பெற்று வருகின்ற கிடைத்தற்கரிய பயனை அடைந்து வருவதால், நாம் போற்ற வேண்டியது, மேற்கண்ட சிறப்புகள் அத்தனையும் பெற்ற ஒரு நூலாசிரியரும், நூலும் முறையே வேதாத்திரி மகரிஷி அவர்களும், அவர் அருளியுள்ள நூலான திருவேதாத்திரியமும் ஆகும் என நினைந்து நினைந்து  பணிவுகலந்த பெருமையினால் மனம் குளிர்ந்து, குளிர்ந்து, குருவின் காணிக்கையாக அறுகுணங்களிலிருந்து விடுதலை பெற்று, நாம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே பெற்று விடுவதேயாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

       ஆகவே ஆன்மீகப் பயிற்சியில் விரைவில் பண்பேற்றம் பெறுவதற்கு மகரிஷி அவர்கள் கூறியபடி இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழியான ‘எப்பொருளை, எச்செயலை, எவ்வுயிரை, எக்குணத்தை அடிக்கடி நினைந்து வந்தால் நினைப்பவரின் ஆற்றல் அப்பொருளினுடைய தன்மையினை அறிவிலும் உடலிலும் மாற்றம் பெறக்காணலாம்’ என்கின்ற சூட்சுமத்தை பயன்படுத்திய வகையில் இன்றைய அறிவிற்கு விருந்து, தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மாக்கள், செயல்கள், குணங்களைப்பற்றியும் ஆழ்ந்து சிந்திப்பதற்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குருவருளும், திருவருளும் என்பதனை நினைக்கும்போது உள்ளம் பூரிக்கின்றது. வாழ்க திரு பொருந்திய திருவேதாத்திரியம், வளர்க திரு பொருந்திய திருவேதாத்திரியம்.

    வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்.

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-153

    வாழ்க மனித அறிவு                                 வளர்க மனித அறிவு

    22-02-2016 – திங்கள்

     

    சமுதாய நலம் எப்போதும் நிறைவாக இருக்க ஒவ்வொருவரும் கைமாறாகத் தொண்டு செய்ய  வேண்டும் என்பதனை திருவள்ளுவர் குறிப்பாக சொல்லும் குறளாக மகரிஷி அவர்கள் எதனைக்  கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-152

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    18-02-2016 – வியாழன்.

    “எதனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம் உண்டாமெனில் கேளீரோ!” எனப்படுவது எவ்வாறு?

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-151

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    15-02-2016 – திங்கள்.

    ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதன் ஆழ்ந்த, விரிந்த பொருள் என்ன? எவ்வாறு அது பண்பாட்டை உயர்த்தக் கூடியது?

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-150

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    11-02-2016 – வியாழன்

    சுருதி, யுக்தி, அனுபவம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதென்ன? எதற்காக இதனைக் கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-149

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    08-02-2016 – திங்கள்

    ஞானத்தை உருவாக்கும் தெளிவு என்று எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-148

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

     

    04-02-2016 – வியாழன்

     

    மகான் என்பவர் யார்? மகானாக்கும் நான்கு கேள்விகள் என்ன?   நான்கு கேள்விகளே போதுமானதா?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-147

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு.

                                                                                                                                  01-02-2016 – திங்கள்

     

    ஏன் அரூபம் ஐம்புலன்களுக்கு எட்டுவதில்லை? வேதாத்திரிய இயற்கையியல்/இறையியல் மூலம்  அரூபம் ஏன் ஐம்புலன்களுக்கு எட்டுவதில்லை என்பதனை எவ்வாறு கூற முடியும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள் -146

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    28-01-2016 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாம்.

    துன்பம் போக்கும் தூய ——— அன்பாம், அறமாம். அறிவின் ————– .

    …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

    திருக்காப்பிட்டுக் கொண்டது –

    விளக்கம்:-

    திருக்காப்பிட்டுக் கொள்ளுதல் என்றால் என்ன என்று சில சத்சங்க அன்பர்கள் கேட்கின்றனர். வள்ளலார் அவர்கள் 30-01-1874(தைப்பூசம்) வடலூரில் உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகத்தில் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதிமயமானார். 30-01-1874 வெள்ளிக்கிழமை இரவு 12-00 மணிக்கு திருக்காப்பிட்டுக் கொண்டார் (கதவை தாழிட்டுக் கொண்டார்). தாழிட்டுக் கொள்வதற்குமுன்வள்ளலார் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய அருட்செய்தியைஇன்றும் சித்தி வளாகம் சுவற்றில் காணலாம். அதனைக் காணும்போது நமக்குள் எழுகின்ற சிந்தனைகள்தாம் எத்தனை, எத்தனை?  24-01-2016 மற்றும் 27-01-2016 ஆகிய நாட்களில் வெளியாகிய அறிவிற்கு விருந்தில் இடம் பெற்றன. அந்த அருட்செய்தி கீழே தரப்பட்டுள்ளது.

    இங்கு அமைதியாகவும், மௌனமாவும் இருக்க வேண்டும்.

                 அருட்பெருஞ் ஜோதி                                அருட்பெருஞ் ஜோதி

                 தனிப்பெருங் கருணை                               அருட்பெருஞ் ஜோதி

     

    30-1-1874 ம் ஆண்டு ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19 ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு திரு அருட்பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் பொழுது திருவாய் மலர்ந்தருளியது.

    “இதுவரை உங்களுக்கு நேரிற் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ஆனால் அச்சில் வார்ப்போம். ஆகாவிடில் மிடாவில் வார்ப்போம். நான் உள்ளே பத்துப் பதினைந்து தினமிருக்கப்போகிறேன் பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது. வெறு வீடாகத்தானிருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்.

       இனி இரண்டரை கடிகை நேரம் உங்கள் கண்களுக்குத் தோன்றமாட்டோம். இவ்வுலகத்திலும் மற்றெங்கிலும் இருப்போம். பின்னர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வருவார். அப்போது இவ்வுருவுடன் சித்திகள் பல நிகழ்த்துவோம். திருவருட்செங்கோலாட்சி செய்வோம். அகவினத்தார்க்குச் சாகா வரமும், ஏனையோர்க்குப் பரிபக்குவ நிலையையும் அளிப்போம் நாம் திருக்கதவை மூடியிருக்குங்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் “ஆண்டவர் அருள் செய்வார்“

    இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம் இனி எல்லாவுடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்திவிடுவோம். அஞ்ச வேண்டா. சுத்தப்பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம்.“

                                                                                                  வள்ளலார்

                                                          திருவருட்பா காரணப்பட்டு கந்தசாமி பதிப்பு(1924)

                                                                     பாலகிருஷ்ணன் பதிப்பு

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 145

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    25-01-2016 – திங்கள்

    பணிவின் பெருமையை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

    Loading