சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-328

    வாழ்க மனித அறிவு!                                                                 வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-328

    ஆசை பேராசையாக  மாறும் நிலை

    31-03-2022-வியாழன்

                               

    வாழ்க வளமுடன்!

                           பிரதான வினா(Main Question): 328

     

    மெய்யுணர்வோடு இணைந்து இயங்காத எந்த ஆசையும் பேராசையாகத்தான் முடியும் என்று  வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதன்  அடிப்படையில்  கூறுகிறார்?

    துணைக் கேள்விகள்(Sub questions)

    1. இக்கூற்றினில் ஐயம் உள்ளதா?     

    2. இதில் எச்சரிக்கை உள்ளதா? என்ன எச்சரிக்கை? 

    3. அவ்வளவு துல்லியமாக வாழ்க்கையை நடத்த வேண்டுமா?  அறிவு அந்த துல்லியத்தை எங்கிருந்து பெறுவது?  அல்லது எவ்வாறு பயிற்சி செய்வது? சிரமமாக இருக்குமே?!  அமைப்பு(pattern), துல்லியம்(precision), ஒழுங்கமைப்பு(regularity) ஆகிய முக்கண்களைக் கொண்ட பேரறிவேதான் மனித அறிவாக இருக்கும்போது சிரமம் இருக்குமோ?

    4. ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வரையறை என்ன?

    5. பேராசை கூடாது என்கின்றபோது இக்கூற்றினை எவ்வாறு ஆராய்ந்து எதனை நடைமுறைக்குக் கொண்டு வருவது?

    6. மெய்யுணர்வு என்றால் என்ன?

    7. ‘மெய்யுணர்வோடு இணைந்து இயங்காத’ என்றால் என்ன பொருள்?

    8. ‘விழிப்புணர்வுடன் இணைந்து இயங்காத’ எனக் கொள்ளலாமா?

    9. விழிப்புணர்வு அயராது எப்போதும் அயராவிழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிறாரா?

    10. ‘சீரமைக்காத ஆசை பேராசையாக முடியும்’ என்கிறாரா?

    11. விழிப்புணர்வு இல்லாது ஆசைப்படும்போது அது  பேராசையாக முடியும் என்கிறாரா?

    12. அயராவிழிப்புணர்வும் மெய்யுணர்வும் ஒன்றா? வேறு வேறா?

    13.  சிந்தனைப் பயிற்சி என்பதால் ஒரு கூற்றினை(information)  உறுதிப்படுத்தி (confirmation) நடைமுறைக்கு கொண்டுவர (transformation)இவ்வளவு துணைக்கேள்விகளுக்கும் விடை காணவேண்டுமா?

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச்செல்வம்!                                        வளர்க அறிவுச்செல்வம்!!


     

     

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்–327

    வாழ்க மனித அறிவு!          வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்–327

    28-03-2022 – திங்கள்

     

    gurudevar

    எதிர்பார்த்தலில் எந்த நான்கும் ஒத்து வராது என்கிறார் மகரிஷி அவர்கள்? எவ்வாறு ஒத்து வருவதில்லை?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                            வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-326-எண்ணமும் பரிணாமமும்

     

    வாழ்க மனித அறிவு!                                                                 வளர்க மனித அறிவு!!

     

    lotus

    சிந்திக்க வினாக்கள்-326

    எண்ணமும் பரிணாமமும்

                                                                                           24-03-2022-வியாழன்                            

    வாழ்க வளமுடன்!

    பிரதான வினா(Main Question): 326 

    எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பது எப்படி?

    துணை வினாக்கள் (Sub questions):

    1) பரிணாமம் அதாவது தன்மாற்றம் என்பது என்ன?

    2) எண்ணம் என்பது என்ன?

    3) எண்ணத்திற்கும்  பரிணாமத்திற்கும் தொடர்பு இருக்க முடியுமா?

    4) எதற்காக இயற்கை இரண்டிற்கும்  தொடர்பு வைத்துள்ளது?  இயற்கை எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு வைத்துள்ளது என்று சொல்வதைவிட ,  எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு இயற்கையிலேயே  உள்ளது. அவ்வாறெனில்   அது  எதற்காக என்று மனித அறிவு கேட்கின்றது?

    5) பரிணாமத்திற்கு  வாகனம்    என்றால் என்ன பொருள்?

    6) பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை என்கிறார்களே, அது சரியா?

    7) பரிணாமத்திற்கு பூர்த்தியாதல் என்பது உண்டா?

    8) பரிணாமத் தோட்டத்தில் கடைசியாக பூத்த மலர் மனிதன் என்கின்றபோது பரிணாமம் பூர்த்தியாகி விட்டதுதானே?!

    9) இயற்கையில் பரிணாமம் பூர்த்தியாக வேண்டுமெனில் எந்த எத்திசையில்(direction) பூர்த்தியாகும்?

    10)  அதனால் மனிதகுலத்திற்கு என்ன நன்மை ஏற்பட  உள்ளது?

    11) பரிணாமத்திற்கு நம் எண்ணம் அவசியமா?

    12) அவசியமெனில் நாம் எவ்வாறு  பரிணாமத்திற்கு உதவலாம்? 

    13) பரிணாமத்திற்கு உதவி புரிவது என்பது இயற்கைக்கே/இறைக்கே துணைபுரிவதாகுமன்றோ?! 

    14) இயற்கையின்/இறையின்  மனிதஇன பரிணாமத்தொழிற்சாலையில்  மனிதனும் பங்குதாரர்தானே(partner)!? இயற்கை, இறை,  மனிதன் வேறா என்ன? சொல்லுங்களேன்!

    15) பரிணாமத்திற்கும் இயல்பூக்கத்திற்கும் தொடர்பு உள்ளதா?  உள்ளது எனில் எவ்வாறு தொடர்பு உள்ளது?

    16) இயல்பூக்கம் தொடர்ந்து நடைபெற்று இயல்பு முழுவதுமாக வெளிப்பட   மனித   எண்ணம் எவ்வாறு துணையாக இருக்கலாம்? 

    17)  “Fraction demands Totality supplies” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை இப்போது இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்குமன்றோ?!  வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

    18) மேலும் ஏதாவது வினாக்கள் உங்களுள் இருந்தால் அவ்வினாக்களையும் எழுப்பி ‌நீங்களே சிந்திக்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                    வளர்க அறிவுச்   செல்வம்!!


     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-325–எண்ணம்

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    எண்ணம்

    சிந்திக்க வினாக்கள்-325

                                                                                              21-03-2022-திங்கள்

                                                                                               உ.ச.ஆ.21-03-2037 

    வாழ்க வளமுடன்!

    பிரதான வினா(Main Question): 325

             எண்ணமே இயற்கையின் சிகரம்,    இயற்கையின் உச்சமே எண்ணம் என்று எப்படிக்  கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    துணை வினாக்கள் (Sub questions):

    1)  எண்ணம் என்பது என்ன?

    2)  எண்ணத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?

    3) எண்ணம் எவ்வாறு தோன்றுகின்றது?

    4)  எண்ணத்தைப் பற்றி  மனிதகுலம் ஏன், என்ன அறிந்துகொள்ள வேண்டும் என நினைத்து 28 கவிகளை(ஞா.க. 6.23. 1525—1552) வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ளார்? நேரம் ஒதுக்கி,  நேரம் கிடைக்கும்போது, அனைத்து கவிகளையும்  வாசித்து பயனடையலாமே!

    5) இன்று மனிதகுலம் வாழ்ந்துகொண்டிருக்கின்ற சூழலில் எண்ணத்தைப் பற்றி மனிதன் அறிந்துகொள்ள வேண்டியது  அவசியமாகின்றதா?  எப்படி?

    6) மனவளக்கலையில்  தற்சோதனைப் பயிற்சியில் எண்ணம் ஆராய்தல் பயிற்சியினை ஏன் முதலாவதாக வைத்துள்ளார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

    7) வேறு ஏதேனும் வினாக்கள் உங்களுள் எழுந்தால் அதனையும் எழுப்பி ஆராய்ந்து விடை காணவும்.

    வாழ்க வளமுடன்!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!               வளர்க அறிவுச்   செல்வம்!!

     

    Loading

  • விழிப்பு நிலை -சிந்திக்க வினாக்கள்-324

    வாழ்க மனித அறிவு!                                       வளர்க மனித அறிவு!!

    விழிப்பு நிலை

    சிந்திக்க வினாக்கள்-324

                                                                           19-03-2022-சனி                            

    வாழ்க வளமுடன்!

     

    பிரதான வினா(Main Question): 324

    ஏன் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஐயுணர்வில் மயங்குவதை வேரறுந்த மரத்திற்கு ஒப்பிடுகிறார்?

    துணை வினாக்கள் (Sub questions):

    1) மயக்க நிலையில் உணர்வு இருக்காது.  ஆனால் இங்கே ஐயுணர்வில் மயங்குதல் என்கின்றாரே வேதாத்திரி மகரிஷி அவர்கள்!? ஐயுணர்வில் மயங்குதல் எனில் உணர்வு இருக்கின்றதே!  அப்படியானால் அவர் கூறும் மயங்குதல் என்றால் என்ன பொருள்? ஐவகை மயக்கமா?

    2) வேரறுந்த செடிக்கு ஒப்பிட்டிருக்கலாம்?  ஏன் வேரறுந்த மரத்திற்கு ஒப்பிடுகிறார்? அவ்வாறு ஒப்பிடுவது கவிஞரின், (அதுவும் அருட்கவிஞரின்)  சுதந்திரமோ?! அவருக்கு இயற்கை/இறை கொடுத்த வார்த்தையோ?!  அல்லது இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது உள்ளதோ!?

    3) வேரறுந்த மரத்தோடு ஒப்பிடுவதில்  என்ன புனிதம்(முக்கியத்துவம்) உள்ளது?(Is there any sanctity in it?)

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                    வளர்க அறிவுச்   செல்வம்!!

    குறிப்பு: நாளை(20.03.2022) சத்சங்க நிகழ்ச்சியில் அறிவிற்கு விருந்து(Feast for Consciousness) நடைபெறும்.  அதில் இடம் பெறும் தலைப்பு ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ மூன்றாம் பகுதி.  பகிர்ந்துகொள்ள கலந்துகொள்ளவும்.  வாழ்க வளமுடன்! 

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 323(255)

    வாழ்க மனித அறிவு!                 வளர்க மனித அறிவு!!

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்- 323(255)

    17-08-2020 – திங்கள்

       கருவில் திருவுடைமை

    ஞானிகளைப்பற்றிக் கூறும்போது அவர் கருவில் திருவுடையவராகப் பிறந்தார் என்று எந்த பொருளில் கூறுகிறோம்? 

    (இந்த பொருள் பற்றி மேலும் ஆழ்ந்தும், அகலமாகவும் சிந்திக்கவும், நடைமுறைப்படுத்த வேண்டியதை அறியவும், இந்த முதன்மை வினாவிற்குரிய  துணை வினாக்களையும் எடுத்துக் கொண்டு சிந்திப்போம்.  வாழ்க வளமுடன்!) 

    துணை வினாக்களுக்குள் செல்வோம்.

    i)  ‘திரு’ என்றால் என்ன?

    ii) ‘கரு’ என்றால் என்ன?

    iii) ‘உடைமை’ என்றால் என்ன?

    iv)   ‘கருவில் திருஉடைமை’ என்றால் என்ன?

    v)   திருஉடைமையின் பயன்கள் என்ன?

    vi) கருவில் திரு உடைமையை  அறிவியல் ரீதியாக எவ்வாறு கொண்டு வருவது?   அல்லது எவ்வாறு கருவில்/கருமையத்தில் ‘திரு’ வை சேர்ப்பது?

     vii) கருவில்/கருமையத்தில் ‘திரு’  வை  சேர்ப்பது என்ன பொருள்?

    viii) கருவில் ‘திரு’  வை  சேர்ப்பது என்றால் அது யாருடைய பொறுப்பு?

     ix)  கருமையத்தில் ‘திரு’  வை  சேர்ப்பது என்றால், அப்போது அது யாருடைய பொறுப்பாகின்றது?  அந்தபொறுப்பு  எப்போது இன்றியமையாததாகின்றது?

    x) இச்சிந்தனை  ஆன்ம சாதகனுக்கு எப்போது  எழும்/எழலாம்? ஆன்ம சாதகர்கள் எல்லோருக்குமே இச்சிந்தனை எழவேண்டியது அவசியமா?

    xi)  ஏன் அவசியமாகின்றது?  ஆழ்ந்து சிந்திக்கலாமே! 

    xii) ‘கருவில் திரு’   பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு படுத்திக்கொள்ளலாமே!

    xiii)  கருவில் திருஉடைமையாகப் பிறந்துவிட்டால் ஆன்ம வெற்றிக்கு சிரமமில்லையோ! 

    xiv) தெய்வீகப் பண்பான முயற்சி மனிதனிடம் உள்ளதால் அதனைக்கொண்டு ஒரு பிறவியிலேயே கருவை திருஉடையதாக்கி பிறவிப்பயனை அடையலாமன்றோ!?   

    xv) பல்லாயிரம் பிறவிகளில் கொண்டு வந்த பழிச்செயல் பதிவுகள் கருமையத்தில் இருந்தாலும் அவற்றை ஒரு பிறவிக்காலத்திலேயே மாற்றி அமைக்கலாம் என்கின்ற உத்திரவாதம் உள்ளதே! அதனை யார்  கொடுத்துள்ளது?

     

    குருநாதர்  வழிகாட்டுதலும், அவரின் அருளாசியும், அவரால் கிடைத்துள்ள  திருவருளும் துணை நிற்கட்டுமாக. வாழ்க வளமுடன்!

    வாழ்க மனிதஅறிவு!  வளர்க மனித அறிவு!!

    வாழ்க அறிவுச் செல்வம்!  வளர்க அறிவுச் செல்வம்!!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க வையகம்!!!!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                              வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 322(161)

    வாழ்க மனித அறிவு!                 வளர்க மனித அறிவு!!

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்- 322(161)

    13-08-2020 – வியாழன்

    பயிற்சி:

    எத்தகைய தடைகள் இருந்தாலும் மெய்ப்பொருளைக் கண்டே தீர்வேன்’ என ஆர்வத்துடன் கூறும் அழகணி சித்தரின் தடங்கல் அனுபவம் இறை உணர் ஆன்மீகப் பயிற்சியாளருக்கு ஏற்பட வேண்டியது அவசியமா?

    இல்லை’ என்றாலும், ‘ஆம்’ என்றாலும் காரணம் கூறவும்.

    வாழ்க வளமுடன்!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                              வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 321

    வாழ்க மனித அறிவு!                 வளர்க மனித அறிவு!!

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்- 321

    10.08-2020 – திங்கள்

     

    அலை இயக்கம்

    பயிற்சி:

    (அ) அலை இயக்கத்திற்கும் மனிதனின் கருமையத்திற்கும் தொடர்பு உள்ளதா?
    (ஆ) உள்ளது எனில் எவ்வாறு தொடர்பு உள்ளது? விளக்கவும்.
    (இ) கோள்களின் அலைவீச்சிலிருந்து ஆக்கமும்,அழுத்தமும் எவ்வாறு வருவதாக மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?

    வாழ்க வளமுடன்!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                              வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 320

    வாழ்க மனித அறிவு!                 வளர்க மனித அறிவு!!

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்- 320

    06.08-2020 – வியாழன்

    பாராட்டு

    பயிற்சி:

    1. பாராட்டு என்றால் என்ன?
    2. மனிதன் அடைய வேண்டிய நன்மதிப்புகளில் ஒன்றா பாராட்டு?
    3. ‘பாராட்டு’ ஒரு சொல்லா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டதா?
    4. பாராட்டு என்பதற்கு நம் குருபிரான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?
    5. பாராட்டு என்பது மனிதனுக்கு அவசியமா? ஏன்?
    6. பாராட்டால் பாராட்டுபவரும் பாராட்டப்படுபவரும் அடையும் நன்மைகள் என்ன?
    7. பாராட்டுதலுக்கும் நன்றியுணர்வுக்கும் தொடர்பு உள்ளதா? எப்படி?
    8. பாராட்டுதலில் இயல்பூக்க நியதிக்கோ அல்லது அதன் கிளைத்தேற்றத்திற்கோ  தொடர்பு இருக்கின்றதா?

    வாழ்க வளமுடன்!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                              வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 319

    வாழ்க மனித அறிவு!                 வளர்க மனித அறிவு!!

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்- 319

    03.08-2020 – திங்கள்

     

     

    பிராயச்சித்தம்

    பயிற்சி:

    1. பிராயச்சித்தம் என்றால் என்ன?
    2. பழிச்செயல் புரியும் மனிதனால்,  பிராயச்சித்தம்   நடைமுறையில் தவறாமல் செய்யப்படுகின்றதா?
    3. இல்லையெனில் ஏன்?  பிராயச்சித்தம் எளிமையாகத் தானே உள்ளது!
    4. பிராயச்சித்தம் எந்தெந்த முறைகளில் செய்யலாம்?
    5. அவற்றில் எந்த முறையில் பிராயச்சித்தம் செய்வதற்கு மனம் ஒத்துழைப்பு தருவதில்லை? ஏன்?  பிராயச்சித்தம் செய்யாதபோது அதுவே மற்றொரு பழிச்செயல் புரிவதாகிவிடாதா?
    6. பிராயச்சித்தம் செய்யவில்லை எனில் அதன் விளைவு என்ன?  செய்தால் அதன் பயன்  என்ன?
    7. ஆறாம் அறிவின் சிறப்புகளில் ஒன்று அதன்  ‘ Logic – ஏரணம்’ – அறிவு அடிப்படையில் ஏற்கும் உண்மை). அப்படியிருக்கும்போது பிராயச்சித்தம் செய்வதில் என்ன தயக்கம் மனிதனுக்கு?   
    8. தனக்கு பிறரால் பழிச்செயல் ஏற்படும்போது அவரிடமிருந்து  பிராயச்சித்தம் எதிர்பார்க்கும் மனிதன்,   தான் பிறர்க்கு பழிச்செயல் புரிந்தபோது மட்டும்  பிராயச்சித்தம் ஏன் செய்வதில்லை/தயங்குகிறான்?  Is it logic for the consciousness?   Is illogical behaviour of consciousness corrcct?  அது மனிதனின் பண்பா?
    9. கர்மாக்கள் எத்தனை வகைப்படுகின்றன? பிராயச்சித்தத்தால் எந்த கர்மாவின் தீய விளைவைப் போக்க முடியும்?  அவ்வளவு துல்லியமாக பிராயச்சித்தங்கள்  செய்ய வேண்டுமா?
    10. முன்னோர்கள் வழியாக வந்த கர்மாவின் தீய விளைவுகளை பிராயச்சித்தத்தால் தவிர்க்க முடியுமா? 
    11. முடியாது என்றால் அதற்கான காரணம் என்ன?
    12. முடியாதபோது முன்னோர்கள் வழியாக வந்த கர்மாவை எவ்வாறு  போக்குவது? 

    வாழ்க வளமுடன்!

    அறிவிப்பு:

    வரும் 06.08.2020 அன்று வியாழக்கிழமை, சிந்திக்க வினாக்கள் பகுதியில் ‘பாராட்டு’ குறித்த வினாக்களை சிந்திக்க இருக்கின்றோம்.

    வாழ்க வளமுடன்!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                              வளர்க அறிவுச் செல்வம்!!

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 318

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்- 318

    30-07-2020 – வியாழன்

    மனிதனின் அடையாளம்

    1. மனிதவாழ்வில் துன்பங்கள் ஏன்?
    2. மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்பதாலா துன்பங்களை அனுபவிக்கிறான்? 
    3. மனிதனுக்குத் தன்னுடைய அடையாளம் தெரியாதா?
    4. வாழ்க்கையில் என்ன வேண்டும்?
    5. எதில் வெற்றி பெற வேண்டும்?
    6. பிறவியின் நோக்கமே தன்னை(self realization)அறிய வேண்டும். அதற்கான வினாதான் “நான் யார்?” என்பது. அதாவது நான் யார் என அறிய வேண்டும் என்கின்றபோதே தான் யார் எனச் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்றாகின்றது அல்லவா?
    7. தன்னை அறிவதுதான் வாழ்வின் நோக்கம் எனில், தன்னைத் தவறாக அடையாளம் காண்பது என்பது பிறவியின் நோக்கத்திற்கு எதிரானது தானே?
    8. இயற்கை/இறைதான் மனிதாக வந்துள்ளது. தன்னுடைய சரியான, உண்மை நிலையை அறியாமல் தவறாகத் தன்னை அடையாளம் காண்பதென்பது இயற்கைக்கு முரணானதுதானே?
    9. ஆகவே, இயற்கை எதற்காக மனிதனாக வந்ததோ, அதற்கு எதிர் மறையாக வாழ்ந்து இயற்கையின் இனிமையைக் கெடுத்தால் விளைவு துன்பம் தானே?
    10. மனிதன் கொண்டிருக்கின்ற தவறான அடையாளம் எது?
    11. மனிதன் தன்னை சரியாக அடையாளம் காணின் என்னென்ன நன்மைகளை அடைகிறான்? அதனால் சமுதாயம் அடையும் நன்மைகள் என்னென்ன?
    12. தன்னை இறையுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? அல்லது அழிகின்ற உடலுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? எது சிறப்பு? நீங்களே சிந்தித்துப் பாருங்களேன்!

    வாழ்க வளமுடன்!

     

    வாழ்க வேதாத்திரியம்! வளர்க வேதாத்திரியம்!!

    Loading