சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-74

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

     

    21-05-2015— வியாழன்

    தன்முனைப்பிலிருந்து உண்டாகும் இரு எண்ணக் கோடுகள் என்ன? அவற்றைச் சற்று விளக்கவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                    வளர்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்க வினாக்கள்-73

     

    18-05-2015—வியாழன்

     

    ஐவகைக் கடமைகளாவன:
    1) தான் 2) குடும்பம் 3) சுற்றம் 4) ஊர் 5) உலகம்
    …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-73

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    18-05-2015— திங்கள்

    மனிதனுக்குரிய ஐவகைக் கடமைகளாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                                         வளர்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்க வினாக்கள்-72

    14-05-2015—வியாழன்

    எதிர்பார்த்தலில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் நான்கு பரிமாணங்களாவன:
    1) தேவை (need) 2) அளவு (Quantity) 3) தரம் (Quality) 4) காலம் (Time)

                                                                                                  …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                            வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-72

    வாழ்க மனித அறிவு                                                         வளர்க மனித அறிவு

    14-05-2015— வியாழன்

     

    எதிர்பார்த்தல் எப்போதும் ஏமாற்றம் தான் இருக்குமே தவிர, எதிர்பார்த்த அளவிலே கிட்டாது என்கிறார் மகரிஷி அவர்கள். எதிர் பார்த்தலில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் நான்கு பரிமாணங்கள் என்னென்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                               வளர்க அறிவுச் செல்வம்

     

    விடை

    சிந்திக்க வினாக்கள்-71

    11-05-2015— திங்கள்

    1) எப்போதும் விழிப்போடும், சிந்தனை யோடும் ஆற்றும் செயல்களினால் முன் வினையின்
    தீமைகள் தடுக்கப்படும். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    2) மனம், உயிர், மெய்ப்பொருள் என்ற மறைபொருட்களை விளங்கிக் கொள்வதற்கு ஏற்ற ஓர் ஆற்றலை    அறிவு பெற்றிருக்கும் சிறப்பு நிலைக்குத்தான்        ஆறாவது அறிவு          என்று பெயர். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-71

    வாழ்க மனித அறிவு                                                               வளர்க மனித அறிவு

     

    11-05-2015— திங்கள்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்யவும்.

    1) எப்போதும் விழிப்போடும், ———– யோடும் ஆற்றும் செயல்களினால் —– ———– தீமைகள்
    தடுக்கப்படும். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    2) மனம், உயிர், மெய்ப்பொருள் என்ற மறைபொருட்களை விளங்கிக் கொள்வதற்கு ஏற்ற ஓர் ஆற்றலை ——— பெற்றிருக்கும் சிறப்பு நிலைக்குத்தான் ———- ——— என்று பெயர். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    விடை

    சிந்திக்க வினாக்கள்-70

    07-05-2015— வியாழன்

    அறிவாட்சித் தரம் என்பது என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றது?

    விடை:-

    1) மனிதனுடைய ஒட்டுமொத்த தன்மைகள் அறிவாட்சித் தரம் எனப்படுகின்றன. செயல் மற்றும் மனதால் மனிதன் பெறும் தன்மைகள் கருமையத்தில் சுருங்கி பதிவாகின்றன. அது மட்டுமல்லாமல் எண்ணில் அடங்காத தலை முறைகள்தோறும் பெற்ற அனுபவங்கள் கருத்தொடர்பு வழியாகத் தொடா்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கருவின் வழியாக வரும் கருமையப்பதிவுகளான பழவினையும் (சஞ்சித கா்மம்.- சஞ்சி means bag i.e. மூட்டை) தன் செயல்களினால் வரும் பதிவுகளான புகுவினையும் (பிராரப்த கர்மம்). சேர்ந்து ஒரு மனிதனின் தன்மையாக உள்ளது. அதனை அம்மனிதனின் அறிவாட்சித்தரமாகக்(personality) கூறுகிறார் மகரிஷி அவர்கள். பழவினை, புகுவினை ஆகியவற்றிற்கேற்ப மனிதனின் அறிவாட்சித் தரம் உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ இருக்கும்.

    2) ஏன் மனிதனின் தன்மை அறிவாட்சித்தரம் என அழைக்கப்படுகின்றது?

    அறிவு + ஆட்சி + தரம் = அறிவாட்சித்தரம். மனிதன் புலன்களுக்கு அடிமையாகாமல் அறிவை ஆட்சி செய்ய விட வேண்டும். மனம் போன போக்கெல்லாம் அறிவு போகக்கூடாது. எப்போதும் அறிவு ஆட்சி செய்ய வேண்டும். குண்டலினி யோகத்தை இராஜயோகம் என்றும் கூறுவர். இராஜயோகம் பயில்வதே அறிவை ராஜாவாக செயல்பட வைப்பதற்காகத்தான். இத்தகைய திறமையுள்ள தன்மையைக் கொண்ட மனிதனிடம் அறிவு ஆட்சி செய்கின்றது எனலாம்.

    எந்த அளவிற்கு ஒருவரின் அறிவு அயரா விழிப்பு நிலையோடு விளைவறிந்து செயல்புரிகின்றதோ அந்த அளவிற்கு அவருடைய அறிவு ஆட்சி செய்யும் தரம் உயர்ந்திருக்கின்றது என்று பொருள். மயக்க நிலையில் இருந்து கொண்டு புலன்களுக்கு அடிமையாகி விளைவறியாது, அறிவு செயல்கள் புரிந்தால் அந்த அளவிற்கு, அந்த மனிதருடைய அறிவு ஆட்சி செய்யும் தரம் குறைந்திருக்கின்றது என்று கொள்ள வேண்டும். மனிதனின் தன்மை அறிவு ஆட்சி செய்யும் திறத்தைப் பொருத்தது. அதனைக் கருத்தில் கொண்டுதான் மனிதனின் தரத்தையும் திறத்தையும் குறிப்பிட அறிவு ஆட்சி செய்யும் தரத்தைக்குறிப்பிட அறிவாட்சித்தரம் என்று அழைக்கிறார் மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                     வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-70

    வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

     

    07-05-2015— வியாழன்

    வாழ்க வளமுடன்!

     

    அறிவாட்சித் தரம் என்பது என்ன?  ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்க வினாக்கள்-69

     

    04-05-2015— திங்கள்

    வாழ்க வளமுடன்!

    அறிவின் பருவங்களாக மகரிஷி அவர்கள் கூறும் ஐந்து என்னென்ன?

    1) மனிதனாகப் பிறந்தும் கூட தான் மனிதன் என்று அறிந்து கொள் முடியாத பருவம் முதல் பருவம்.
    2) இரண்டாவது பருவம்: – தான் மனிதன் என்று அறிந்தும், மனிதனாக நடந்து கொள்ளத் தெரியாத பருவம்
    3) மூன்றாவது பருவம்: – மனிதனாக வாழத் தெரிந்தும், அதுவரையில் அறியாமையால் வாழ்ந்த பழக்கங்களிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளத் தெரியாமையால், உணர்ச்சி மற்றும் ஆராய்ச்சி ஆகிய இருவகை போராட்டங்களுக்கிடையே வாழ்வது.
    4) நான்காவது பருவம்: – அறிவும் செயல்களும் ஒன்றுபட்டு மனிதன் மனிதானாகவே வாழ்வது.
    5) ஐந்தாவது பருவம்: – தான் நெறியோடு வாழ்ந்தும், தெளிவற்றவர்களால் தனக்கும், சமுதாயத்திற்கும் விளையும் தீமைகளை நீக்கி, தன்னைப் போல் உலக மக்கள் அனைவரும் நெறியுணர்ந்து வாழும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று முனைந்து செயலாற்றுவது.

     ……..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    குறிப்பு: – உலக மக்களை, அறிவின் ஐந்தாவது பருவத்திற்கு உயர்த்தவே இயற்கை கருணையோடு அளித்துள்ளதுதான் திருவேதாத்திரியம். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-69

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    04-05-2015— திங்கள்

    வாழ்க வளமுடன்!

     

    அறிவின் பருவங்களாக மகரிஷி அவர்கள் கூறும் ஐந்து என்னென்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்க வினாக்கள்-68

    30-04-2015— வியாழன்

    தற்சோதனையில்லாத தவம் எதற்குச் சமம் என்கிறார் மகரிஷி அவர்கள்? ஏன்?

    விடை: — கைப்பிடியில்லாத கத்திக்கு ஒப்பிடுகிறார் தற்சோதனையில்லாத தவத்தை, மகரிஷி அவர்கள். தன்னையே தாக்கிவிடும் என்கிறார். தற்சோதனை செய்யாமல் தவம் மட்டும் செய்து வந்தால் தவஆற்றல் கூடும். அவர்கள் நினைக்கும் தீய எண்ணங்கள் நிறைவேறும். சபித்தால் நடந்துவிடும். அதற்கு மன்னிப்பு குணம் வேண்டும். தற்சோதனையால் தான் மன்னிப்பு குணத்தை வளர்க்க முடியும்,

    ……..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-68

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    30-04-2015— வியாழன்

    வாழ்க வளமுடன்!

    தற்சோதனையில்லாத தவம் எதற்குச் சமம் என்கிறார் மகரிஷி அவர்கள்? ஏன்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்க வினாக்கள்-67

    27-04-2015— திங்கள்

    கருமையம் தூய்மையாக- இருக்குமானால், என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்ய க் கூடாது என்பதும் தெரியும். எண்ணுவதைச் செய்வ தும், செய்ய முடிந்ததை, செய்யத் தக்கவாறு  எண்ணுவது ம், மனிதனுக்கு இயல்பாகி விடும்.
    ……..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-67

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

                                                            27-04-2015— திங்கள்

    வாழ்க வளமுடன்!

    குறிப்பு:– கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து இன்புறலாம். பூர்த்தி செய்தால் வருவது எண்ணம் நடந்தேறுவது, நடவாது பற்றிய உண்மை வெளிப்படும்.
    எண்ணம் பற்றிய வினா

    கருமையம் ——– இருக்குமானால், என்ன ———- வேண்டும் என்பதும், என்ன ——- க் கூடாது என்பதும் தெரியும். எண்ணுவதைச் ——— தும், செய்ய முடிந்ததை, செய்யத் தக்கவாறு ——- ம், மனிதனுக்கு ——- விடும். ……..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்         வளா்க அறிவுச் செல்வம்

    சென்ற சிந்திக்க வினாக்கள் பகுதியில் கேட்டிருந்த வினாக்களுக்கான விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. உங்கள் விடைகளுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.

     

     சிந்திக்க வினாக்கள்-66

     

                                                                23-04-2015

     

    விடை

    கல்வியின் நான்கு அங்கங்களாவன:

    1)  எழுத்தறிவு

    2) தொழிலறிவு

    3)  ஒழுக்கப்பழக்க அறிவு

     4) இயற்கைத்தத்துவ அறிவு

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-66

    வாழ்க மனித அறிவு        வளர்க மனித அறிவு

    23-04-2015— வியாழன்

    வாழ்க வளமுடன்

    கல்வியின் அங்கங்களாக, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுபவை என்ன? அவற்றில் நான்காவது அங்கத்தின் முக்கியத்துவம் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்         வளா்க அறிவுச் செல்வம்

    சென்ற சிந்திக்க வினாக்கள் பகுதியில் கேட்டிருந்த வினாக்களுக்கான விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. உங்கள் விடைகளுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.

     

    விடை

    வீட்டைப் பற்றி நினைக்கிறோம்.  அங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பதிந்த பதிவுகள் எண்ணங்களாகவரும்.  ஆனால் இராமாயணத்தையோ அல்லது மகாபாரதத்தையோ நினைத்தால் உயர்ந்த குணங்கள் வரும்.  எனவேதான் சாதாரண மக்களைவிட இலக்கியங்களை வாசித்தவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். ……..(மகரிஷி அவர்கள்)

     

    மொழிக்கு ஒழுக்கம் கூறுவது  இலக்கணம்.  வாழ்க்கைக்கு ஒழுக்கம்  கூறுவது இலக்கியம்.    …மகரிஷி அவர்கள்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-65

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    20-04-2015— திங்கள்

    வாழ்க வளமுடன்.
    1) இலக்கியம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?

    2) மொழிக்கு ———– கூறுவது இலக்கணம். வாழ்க்கைக்கு ——— கூறுவது இலக்கியம்.(மகரிஷி அவர்கள்)

     

    குறிப்பு– (கோடிட்ட இடங்கள் இரண்டிலும் ஒரு சொல்லே பொருந்தும்.)

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    சென்ற சிந்திக்க வினாக்களுக்கான(64)  – 16-04-2015 விடை கீழே

    தரப்பட்டுள்ளது.    உங்கள் விடையுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.

     விடை  

     

        வாழ்க வளமுடன்.

     

    1)   சமமான உணர்ச்சிகளும்,  அதில் ஊக்கிவிடப்பட்ட உணர்ச்சிகளும்  இன்பம் என்று சொல்லலாம்.   ( மகரிஷி அவர்கள் )

    2)   இயற்கையில்  எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக்கொள்ளும் அனுபவமே இன்ப  உணர்வு  ஆகும்.  ( மகரிஷி அவர்கள் ).

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-64

    வாழ்க மனித அறிவு                              வளர்க மனித அறிவு

     

    16-04-2015— வியாழன்

    வாழ்க வளமுடன்.

    கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து  மகிழலாம்.

    1) சமமான உணர்ச்சிகளும், அதில் ஊக்கிவிடப்பட்ட உணர்ச்சிகளும் —————- என்று சொல்லலாம்.(மகரிஷி அவர்கள்)
    2) ———– எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக்கொள்ளும் அனுபவமே ———— ——— ஆகும். (மகரிஷி அவர்கள்).

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                 வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-63

    வாழ்க மனித அறிவு                                         வளர்க மனித அறிவு

     

    13-04-2015— திங்கள்

    வாழ்க வளமுடன்.

     

    இறைவனின் சிறப்புற்ற ஆறு நிலைகளாக மகரிஷி அவர்கள் கூறுவது யாவை?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading