வாழ்க திருவேதாத்திரியம் ! வளர்க திருவேதாத்திரியம்!!
சிந்திக்க வினாக்கள் – 337
நாள்– 21-06-2024
உ.ச.ஆ.-21-06-39
பிரதான வினா(Main Question)
இயற்கையின் நிகழ்வை ‘பரிணாமம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுவதை பின்னாளில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஏன் ‘தன்மாற்றம்’ என அழைக்கலானார்?
துணை வினாக்கள் (Sub questions):
1. பரிணாமம், தன்மாற்றம் வெவ்வேறு பொருளைக் குறிக்கின்றதா? அல்லது ஒரே பொருளைக் குறிக்கின்றதா?
2. பரிணாமம் என்பது என்ன?
3.தன்மாற்றம் என்பது என்ன?
4.‘தன்மாற்றம்’ எனும்போது ‘ஒன்றே பலவாகியது’ எனும் அத்வைத தத்துவத்தை நேரிடையாகப் பிரதிபலிப்பதாக உள்ளது காரணமா?
5.‘ஒன்றே பலவாகியது’ என்கின்ற பொருளுக்கு தன்மாற்றம் என்பது பொருத்தமாக உள்ளதா?
6.‘ஒன்றே பலவாகியது’ என்ற பொருளுக்கு பரிணாமம் என்ற சொல்லிற்கான(ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாகுதல்) பொருள் விலகியுள்ளதா/பொருத்தமில்லையா?
7. பிரதான வினாவிலிருந்து அறியப்படவேண்டியது என்ன?
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!