சிந்திக்க அமுத மொழிகள்- 315(269)

வாழ்க மனித அறிவு!                       வளர்க மனித அறிவு!!

lotus

 

சிந்திக்க அமுத மொழிகள்- 315 (269)

04-07-2020 — சனி

 

  எப்போது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்?

 

நான் யார்? எதற்காக இங்கு வந்துள்ளேன்? என்பதை அறியாத வரை வாழ்க்கை என்பது சாத்தியமில்லை!”

…. லியோ டால்ஸ்டாய்

பயிற்சி:

  1. என்ன கூறுகிறார் அறிஞர் லியோ டால்ஸ்டாய்?
  2. வாழ்க்கை என்பது என்ன?
  3. சாத்தியம் என்றால் என்ன பொருள்?  சாத்தியமில்லாதது சாத்தியமாகாது.  சாத்தியமில்லாத ஒன்றினால் பலன் உண்டா? 
  4. ‘சாத்தியம்’ என்றால்  ஆங்கிலத்தில் ‘feasibility, possibility’ என்று பொருளாகின்றது.   ‘வாழ்க்கை என்பது சாத்தியமில்லை’ என்றால் ‘Life is not feasible or not possible’ என்றுதானே பொருள்?   ‘நான் யார்?’ என்று அறியாத மனிதன் வாழ முடியாது அல்லது வாழ்வதில்லை என்றுதானே பொருள்?  நடைமுறையில் சமுதாயத்தில் ‘நான் யார்?’ என்று அறியாத மனிதர்கள் தானே பெரும்பாலும் உள்ளனர்!  அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?  அவர்கள் வாழ்வது வாழ்க்கையில்லையா?   ‘நான் யார்? எதற்காக இங்கு வந்துள்ளேன்? என்பதை அறியாத வரை வாழ்க்கை என்பது சாத்தியமில்லை!’ என்பதனை என்ன பொருளில் கூறுகிறார் அறிஞர் லியோ டால்ஸ்டாய்? 
  5. எதற்காக நாம் இப்பூவுலகிற்கு வந்துள்ளோம்?
  6. ‘நான் யார்?’ என  அறியாதவரை  வாழ்க்கை சாத்தியமில்லை  எனில் இதுவரை வாழ்ந்தது???   என்னவாகும்?  என்னவாகும்!!!
  7. ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்கின்ற முதுமொழிப்படி நிகழ்வுகள் தற்பொழுது நடைமுறையில் இல்லாத சமுதாயத்தில் வாழ்ந்து  கொண்டிருக்கின்ற நிலையில் மாதா பிதா செய்த புண்ணியத்தால்  வேதாத்திரி மகரிஷி அவர்களைத் தரிசிக்கவைத்து குருவாக அடையச் செய்த இயற்கையின்/இறையின் நோக்கம்தான் என்னவோ!?  வள்ளலார் கடைசியாக அருளியுள்ள  புனிதச் செய்தியினை  நினைவிற்கொள்வோமாக!   இப்பிறவியிலேயே பயணத்தை  புனிதமாக்குவோம்.  புனிதமாக்குவதோடு, அருட்பிரகாச வள்ளலாருடனும், அவரது நேரிடை ஆன்மத் தொடர்புகொண்ட நம் குருநாதரான வேதாத்திரி மகரிஷி அவர்களுடனும் இணைந்து கொண்டு உயர்தொண்டாற்றி இன்பம் காண்போம்.

வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

   அருட்பிரகாச வள்ளலாரின் கடைசிச் செய்தி

குறிப்பு: 

     அன்பர்களே வாழ்க வளமுடன்! 

இந்தப் பயிற்சியில் இதுவரை 7 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.  இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும் நொடி தோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள்.  வாழ்க வளமுடன்!

வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!