வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-326
எண்ணமும் பரிணாமமும்
24-03-2022-வியாழன்
வாழ்க வளமுடன்!
பிரதான வினா(Main Question): 326
எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பது எப்படி?
துணை வினாக்கள் (Sub questions):
1) பரிணாமம் அதாவது தன்மாற்றம் என்பது என்ன?
2) எண்ணம் என்பது என்ன?
3) எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு இருக்க முடியுமா?
4) எதற்காக இயற்கை இரண்டிற்கும் தொடர்பு வைத்துள்ளது? இயற்கை எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு வைத்துள்ளது என்று சொல்வதைவிட , எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு இயற்கையிலேயே உள்ளது. அவ்வாறெனில் அது எதற்காக என்று மனித அறிவு கேட்கின்றது?
5) பரிணாமத்திற்கு வாகனம் என்றால் என்ன பொருள்?
6) பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை என்கிறார்களே, அது சரியா?
7) பரிணாமத்திற்கு பூர்த்தியாதல் என்பது உண்டா?
8) பரிணாமத் தோட்டத்தில் கடைசியாக பூத்த மலர் மனிதன் என்கின்றபோது பரிணாமம் பூர்த்தியாகி விட்டதுதானே?!
9) இயற்கையில் பரிணாமம் பூர்த்தியாக வேண்டுமெனில் எந்த எத்திசையில்(direction) பூர்த்தியாகும்?
10) அதனால் மனிதகுலத்திற்கு என்ன நன்மை ஏற்பட உள்ளது?
11) பரிணாமத்திற்கு நம் எண்ணம் அவசியமா?
12) அவசியமெனில் நாம் எவ்வாறு பரிணாமத்திற்கு உதவலாம்?
13) பரிணாமத்திற்கு உதவி புரிவது என்பது இயற்கைக்கே/இறைக்கே துணைபுரிவதாகுமன்றோ?!
14) இயற்கையின்/இறையின் மனிதஇன பரிணாமத்தொழிற்சாலையில் மனிதனும் பங்குதாரர்தானே(partner)!? இயற்கை, இறை, மனிதன் வேறா என்ன? சொல்லுங்களேன்!
15) பரிணாமத்திற்கும் இயல்பூக்கத்திற்கும் தொடர்பு உள்ளதா? உள்ளது எனில் எவ்வாறு தொடர்பு உள்ளது?
16) இயல்பூக்கம் தொடர்ந்து நடைபெற்று இயல்பு முழுவதுமாக வெளிப்பட மனித எண்ணம் எவ்வாறு துணையாக இருக்கலாம்?
17) “Fraction demands Totality supplies” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை இப்போது இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்குமன்றோ?! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
18) மேலும் ஏதாவது வினாக்கள் உங்களுள் இருந்தால் அவ்வினாக்களையும் எழுப்பி நீங்களே சிந்திக்கலாமே!
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!