அறிமுகம்

அன்பு உலக சகோதரிகளே! சகோதரா்களே!

வணக்கம். வாழ்க வளமுடன். இயற்கையின் அருளால், உலக நல விருப்பத்தால், உங்கள் அனைவரின் நல்லெண்ண ஆதரவுடன் இந்த இணையதளம் ஆரம்பிக்கப்படுகின்றது.

என்னுடைய முதல் ஆசான் ஆதிசங்கரா், இரண்டாம் நேரிடை ஆசான் சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்கள், மற்றும் இறையை அறிந்து, ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறத்தை வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அறிஞர்களின் ஆசிகளுடனும் இந்த இணைய தளம் அமைந்துள்ளது,இன்று தனி மனிதனிடத்தில், குடும்பத்தில், ஊரில், நாட்டில், மற்றும் உலகத்தில் அமைதி இல்லை. உத்திரவாதமில்லாத(insecured life) வாழ்க்கைதான் உலகில் நடந்து கொண்டிருக்கின்றது. சண்டை, சச்சரவு, போர், பிணக்கு, வறுமை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம், ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உணர்வைத் தன்னுணர்வு போல் மதிப்பதில்லை இந்த அவலநிலையை சமுதாயத்தில் மாற்றி அமைப்பதற்கு,

1) நான் எனது வாழ்நாளில், யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.
2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்”

என்கின்ற இரண்டொழுக்கப் பண்பாட்டினைச் (அன்பும், கருணையும்) சங்கல்பமாக(auto suggestion) அகத்தவப் பயிற்சியில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

மேலும்…

Loading