குறிக்கோள்

இந்த இணைய தளத்தின் குறிக்கோள்:

  1. இந்த இணையதளத்தைச் சத்சங்கமாகப் பயன்படுத்துதல்.
  2. ஆன்மிகத்தின் மீது தவறாக கொண்டுள்ள வெறுப்பையும், அச்சத்தையும் நீக்கி ஆன்மிகத்தை வாழ்வியலாக்குதல்.
  3. மனிதஅறிவின் சிந்தனையைத் தூண்டுதல்.
  4. மனிதஅறிவை வளரச் செய்தல்.
  5. மனிதஅறிவினை முதன்மைச் செல்வமாக்குதல்.
  6. ஏற்கனவே மேற்கொண்டு வரும் ஆன்மிகப் பயிற்சிக்கு மேலும் வலிவு சேர்த்தல்.
  7. ஆன்மிகப் பயிற்சியில் எல்லோருக்கும் ஏற்படும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வெற்றி பெறச் செய்தல்.
  8. அத்வைதத் தத்துவத்தின் நுட்பங்களைத் (subtleties of Advaida Philosophy) தெரிவித்து, ஆன்ம தேடுதலையும், தாகத்தையும் (spiritual quest /spiritual thirst) அதிகப்படுத்துதல்.
  9. சமுதாய நல அக்கறையை ஏற்படுத்துதல்.
  10. மொத்தத்தில் மகா கவி பாரதியார் கூறும் ‘தெளிந்த நல்லறிவை’ ஏற்படுத்துதல்.