அறிஞர் சாக்ரடீஸை ‘உண்மைக்கே உயிரளித்தவர் என்கிறார் மகரிஷி அவர்கள். ஏன்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
அறிவிப்பு:-
வாழ்க வளமுடன்.
அடுத்த அடுத்த அறிவிற்கு விருந்து சத்சங்கத்தில்
(17-01-2016 ஞாயிறு)
1) சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது? என்கின்ற வினாவிற்கான விடையும்,
2) ‘முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.’ என்கின்ற…ஸ்பானியப் பழமொழியின்கீழ் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கானவிடைகள் பகிர்ந்து கொள்ளப்படும்.
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!
சொல்லாத முன் இருந்த ——— ப்போல சொரூபமெல்லாம் பூரிக்குமுன் ——– .
….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
விடை:-
குறிப்பு:-
சிந்திக்க வினாக்கள் பகுதியில், நேரடி வினாவாக மட்டும் இல்லாமல் , ‘கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!’ என்கின்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை சற்று அறிந்து கொள்ளலாமே.
பெரும்பாலும் ‘கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!’ என்கின்ற பகுதியில், உள்ள வினாக்கள் மகரிஷி அவர்களின் சிந்தனாப் பள்ளியிலிருந்துதான் கேட்கப்படுகின்றன. மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில் மாணவர்களாக இருப்பவர்கள் அவருடைய வரையறைகள்(definitions) மற்றும் பொன்மொழிகளை நினைவில் வைத்திருப்பது அவசியமாகின்றது. அவற்றை நினைவில் கொள்வதோ அல்லது சொல்லிப்பார்ப்பதோ மனதிற்கு இதமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும். மேலும் மனவளக்கலைஞர்கள் இறைத்தூதுவர்களாக இருப்பதால் அதனை மற்றவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பில் உள்ளதால் மகரிஷி அவர்களின் வரையறைகள், மற்றும் பொன் மொழிகளை நினைவில் வைத்துக்கொள்ளுதல் அவசியமாகின்றது. உதாரணத்திற்கு மனதிற்கான வரையறை — ‘உயிரின் படர்க்கை நிலையே மனம்’ இதனை அவ்வாறே நினைவில் கொண்டிருத்தல் வேண்டும். ‘மாறாக உயிரிலிருந்து வெளிவருவது மனம்’ என்று சொல்வது மனதின் சரியான வரையறை கிடையாது. ஏனெனில் ‘படர்க்கை நிலை’ என்பதில் பொருள் மிகுந்துள்ளது. எனவே படர்க்கை நிலை என்று கூறும்போதே மனதைப் பற்றிய விளக்கம் மனதில் படம்போட்டுக் காட்டும். ஏனெனில் Definition is to be said as defined by the Inventor. Who is the inventor and why is he called as inventor? MAHARISHI is the Inventor of Mind, which so far has no definition. Definitions cannot be said by using one’s words or jumbling the words found in the definition given by the Inventor. விஞ்ஞானத்திலும் சரி கணிதத்திலும் சரி வரையறைகள் அவை உருவாக்கப்பட்ட சொற்களாலேயே, சொற்களை இடம் மாற்றி அமைக்காமலும் கூறப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டுதான் ‘கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!’ என்கின்ற முறை சிந்திக்க வினாக்கள் பகுதியில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இப்போது விடைக்கு வருவோம்.
சொல்லாத முன் இருந்த சொல்லைப்போல
சொரூபமெல்லாம் பூரிக்குமுன் அரூபம்.
….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
இப்போது மேலே குறிப்பில் சொல்லப்பட்டுள்ளதற்கும், பூர்த்தி செய்த பிறகு வாசிப்பதில் வரும் ஆனந்தத்திற்கும் உள்ள தொடர்பினை உணர்ந்து கொள்ள வேண்டும். இப்பிரபஞ்சமே தோன்றா முன்னர், என்னவாக இருந்திருக்கும் இயற்கையின் நிலை என்பதனை உவமானத்துடன் கூறுகின்றது இந்த அமுதமொழி.. உருவம் ஒன்றிருந்தால் அது இல்லாத நிலையும் உண்டு. அதுபோல் துகள்களால் உருவாவதற்கு(manifested) முன்னர் இருந்த நிலை unmanifested. Unmanifested என்பது அரூபமாகத்தான் இருக்கும். ஒன்றுமில்லாதது இல்லை. இருக்கும் என்றாலே அது இருக்கின்றது என்றுதானே பொருளாகின்றது. ஒரு சொல்லை சொல்லும்போது அது ஒலியாக காதுகளில் ஒலிக்கின்றது. அதற்கு முன்னர் அது என்னவாக இருந்தது? Unmanifested காந்தமாக இருந்தது. ஒரு சொல்லை சொல்லும்போது அரூபமாக இருந்து காந்தம் சொல்லின் ஒலியாக வருகின்றது. அது போல் உருவங்கள் தோன்றாமுன்னர் அதன் மூலநிலை அரூபம். இந்த முதல் நிலை உண்மை எந்த அளவிற்கு ஐயமின்றி விளங்கிக் கொள்ளப்படுகின்றதோ அந்த அளவிற்கு வேதாத்திரிய இயற்கையியல்/இறையியல் நாளடைவில் மிக மிகத் தெளிவாகிவிடும்.
சிந்திக்க வினாக்கள்-118 (22-10-2015 – வியாழன்)
(அ) நிறை மனம் என்றால் என்ன? (ஆ) அது எப்போது வரும்?
விடை:-
மனமோ அரூபம். உருவமில்லாதது. உருவமில்லாததில் எதனைக் கொண்டு எவ்வாறு நிரப்புவது? உருவமில்லாததை உருவமில்லாததைக் கொண்டுதான் நிரப்ப முடியும் அல்லவா!
இயற்கையின்/இறையின் ஆதிநிலையே அறிவாகவும், மனமாகவும் இருப்பதால் அதனைக் கொண்டு நிரப்புவதுதான் எளிதாக இருக்க முடியும். இந்த நுட்பத்தை கைக் கொள்ளும் பயிற்சியினை மனவளக்கலைஞர்கள் நன்கு அறிவர். மனதை துரீயாதீத தவத்தில் கொண்டு நிறுத்தி நிறுத்தி பழகப்பழக மனம் அதோடு ஒன்றி இரண்டறக்கலந்துவிடும் நுட்பம் தான் அது.
இவ்வாறு பழக்கப்பட்ட மனம் தான் நிறை மனம் எனக் கொள்ளப்படும்.
இஃதல்லாது நீள்சக்தியுடைய மனம்(mind is an elastic bag) எல்லையுடைய, தேவைக்கு மிஞ்சிய வேறு உலகியல் பொருட்களை போட்டுக் கொண்டே இருந்தால் மனம் நிறைவு பெறாது. மனதின் ஆசைகள் பெருகிக் கொண்டேதான் போகும். ஆசைகள் பெருகுவது என்பது, அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய மூன்று வழிகளில் அறிவைக் குறைவுடையதாக்கிக் கொள்கின்ற செயலாகும். இறையே நமக்குள்ளே அகமாக இருந்தும் அதனை அறியமுடியாமல், இரு பொருட்கள் தள்ளி இருந்தால் தூரம் வந்து விடுவதுபோல் அதற்கும் நமக்கும் உள்ள தூரத்தை அதிகரித்துக் கொண்டே போவது விந்தையிலும் விந்தையாகத்தான் இருக்கும். இதுவரை விந்தையாக இருந்துவந்த இறை மிக மிக எளிதான(Truth is Simple) ஒன்றாக விளங்கியபிறகு அதனை நம்முள் வைத்தும்; ஏற்றியும்; போற்றியும், வர, நம்மை அவன் இணைத்துக் கொள்ளும் அருள் வாய்ப்பை பெறுவோம். இதற்கு திருவருளும், நம் நேரிடை குருஉள்பட, அறிவை அறிந்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்களின் அறிவாற்றலும் துணை நிற்குமாக. வாழ்க திருவேதாத்திரியம் வளர்க திருவேதாத்திரியம்.
மகரிஷி அவர்களின் நிறை மனதை நாம் அவர் கூற அறிவோம்.
இந்நிலையை தனது எழுபத்தைந்தாவது வயதில், அதாவது 1986 இல் (World Peace Year-1) அவர் கூறினாலும்,
அவரை முடிவில்லா தெய்வீக தொடர் ஒட்டத்தில்(Endless Divine Relay Race),
இருபது வருடங்கள் கழித்தே அவரின் வயது மூப்பின் காரணமாகவும்,
மனவளக்கலை-இறைத்தூதுவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க எண்ணி,
அவரை மீண்டும் அவரின் 95 வது வயதில் தன்னிடம் இணைத்துக் கொண்டது.
அந்த இருபது ஆண்டுகளில் இயற்கை/இறை நிர்குணமானது என்று கருதப்பட்டாலும், ‘இச்சை இன்றி ஏது இப்பிரபஞ்சம்’ என்பதுபோல் தன்னுடைய நோக்கமான ‘தன்னைப் பற்றி தன் மக்களுக்கு விரைவில் விளங்க வைப்பதற்கு’ மனவளக்கலை மன்றங்களின் அதீத வளர்ச்சியின் வாயிலாக சாதித்துக் கொண்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
1) சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது? என்கின்ற வினாவிற்கான விடையும்,
2) ‘முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.’ என்கின்ற…ஸ்பானியப் பழமொழியின்கீழ் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கானவிடைகள் பகிர்ந்து கொள்ளப்படும்.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.