இன்று ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தைக்கான மூன்று பொருட்களை(meaning) அறிய இருக்கிறோம். அந்த மூன்று பொருட்களை(அர்த்தங்கள்) மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம்.
‘பொறுப்பு’ என்பதற்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. அவையாவன:
1) விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை என்று பொருள்.
2) இரண்டாவது பொருள்—விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ள பதவி.
3) மூன்றாவது பொருள்—ஒப்படைக்கப்பட்டிருப்பதை நிறைவேற்றுதல்; கடமை(duty, responsibility).
‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தைக்கான முதல் பொருளான-
1) விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை என்பதனை எடுத்துக் கொள்வோம்.
மனிதனின் துன்பங்களுக்கான காரணம் விளைவுகளை அறிந்து செயல் புரியாமையே. எனவே செயல் செய்த பிறகு விளைவு வரும்போது இரண்டு விதமாகவும் வரலாம். அதாவது இன்பமாகவும் இருக்கலாம். அல்லது துன்பமாகவும் இருக்கலாம். பெரும்பாலும் மனிதன் உணாச்சிவயப்பட்ட நிலையிலேயே (மனஅலைச் சுழல் அதிகமாக உள்ள நிலையில்) செயல்களைச் செய்கிறான். மனிதன் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே, சிந்திக்காமலேயே செய்கின்ற செயல்களின் விளைவு துன்பமாகவேதான் இருக்கும். அறிவு நுண்மாண் நுழைபுலன் நிலையினை அடையாமல் இருப்பதுவே இதற்குக் காரணம். நுண்மாண் நுழைபுலன் நிலை என்பது உணர்ச்சிவயப்பட்ட, மனஅலைச் சுழல் அதிகமாக இருக்கும்போது எவ்வாறு கிட்டும்? எனவே விளைவுகளை அறிந்து செயல்படுவது மனிதனின் பொறுப்பாகும்.
பொறுப்பு என்பதற்கு இரண்டாவது பொருள்—
2) விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ள பதவி. விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ள பதவி என்பது என்ன? உதாரணத்திற்கு அலுவலகத்தை எடுத்துக் கொள்வோம். அதில் பலர் பணிபுரிகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்கள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப பொறுப்புகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொருவரும் பொறுப்புகளை உணர்ந்து அவரவர் பதவிக்குரிய கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதனை அலுவலக நிர்வாகம் எதிர்பார்க்கின்றது. யாராவது ஒருவர் பொறுப்பை உணர்ந்து தனது கடமையைச் சரிவரச் செய்யவில்லை எனில் அவர் முதலில் எச்சரிக்கை செய்யப்படுவார். அப்போதும் அவர் பொறுப்பை உணர்ந்து கடமையை சரிவர ஆற்றவில்லை எனில் அவ்வலுவலகச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவருக்கு தண்டனை(punishment) வழங்கப்படும்.
அதேபோன்றுதான் கோடிக்கான உயிர்கள் இருக்கும்போது, இயற்கையின்/இறையின் தன்மாற்றத் தொழிற்சாலையில், இந்த உயிருக்கு(மனிதனுக்கு) பொறுப்பான மனிதப்பிறவி கிடைத்துள்ளது. அதனால்தான் அவ்வைத்தாய் மானுடப்பிறவியினை ‘அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது’ என்கிறாள். எனவே இந்த ஆன்மாவிற்கு(individual concerned) மனிதப்பிறவி கிடைத்தது என்பது இயற்கை/இறை கொடுத்துள்ள உயர் பதவியாகும். நிர்வாகத்தில் எதற்காக ஒரு பதவி ஏற்படுத்தப்படுகின்றது? பொறுப்பையும் கொடுத்து கடமையை சீராகச் செய்ய(Duties and responsibilities) நிர்வாகத்தில் பதவி ஏற்படுத்தப்படுகின்றது. அதுபோல் தன்னுடையத் தன்மாற்ற தொழிற்சாலையில்(self transformation industry) இயற்கை/இறை கொடுத்துள்ள உயர்பதவிதான் மனிதப்பிறவி என்பது. மனிதப்பிறவி என்பது மிக மிகப் பொறுப்புள்ள பதவி. இறைவனுக்கு அடுத்த பதவி மனிதப் பதவி(பிறவி). எனவே இறைவனுக்கு அடுத்த மனிதப்பதவியின்(பிறவியின்) மிகுந்த பொறுப்புகளை சரிவர அறிந்து ( just like knowing the fundamental and conduct rules Framed By the office in which he serves)கடமைகளை ஆற்றவேண்டும் மனிதன்.
மூன்றாவது பொருள் — ஒப்படைக்கப்பட்டிருப்பதை நிறைவேற்றுதல்; கடமை(duty, responsibility):
அலுவலகத்தில் ஒவ்வொரு பதவிக்கும் கடமை ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அப்பதவியை வகிப்பவர் அப்பதவிக்கான கடமையைச் செவ்வனே ஆற்ற நிர்வாகம் எதிர்பார்க்கும். பதவியில் இருப்பவர், கடமையை சரிவரச் செய்யவில்லை என்றாலும் கடமையைச் செய்யாமல் இருந்தாலும் நிர்வாகம் அதற்குரிய தண்டனையை அவருக்கு அளிப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கின்றது என்றும் பார்த்தோம். அதுபோல், இயற்கையின்/இறையின்/பேரறிவின் மனிதஇனத் தன்மாற்ற தொழிற்சாலையில் மனிதப்பதவிக்கு(மனிதப்பிறவிக்கு) அளிக்கப்பட்டுள்ள கடமையை தெரிந்து கொள்ளாமல் இருந்தாலும்(கல்லார்), தெரிந்து கொண்டுச்(கற்றார்) செய்யாமல் இருந்தாலும் அதற்குரிய விளைவை துன்பமாக மனிதன் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
கடமை என்பது என்ன? கடமையை எவ்வாறு ஆற்றமுடியும்? செயலைச் செய்துதான் கடமையை ஆற்றமுடியும். எனவே செயலாற்றுவது கடமை. ஒப்படைக்கப்பட்ட கடமையை நிறைவேற்றாமல் இருப்பதும் குற்றம். எனவே கடமையை உணர்ந்து சரிவரச் செய்ய வேண்டும். இல்லை எனில் விளைவு துன்பம்தான். கடமையை(செயலை) உணர்ந்து சரியாக ஆற்றாமல் போனாலும் அல்லது கடமையை உணராமல் போனாலும் விளைவு துன்பமே. இதனை யார் அனுபவிப்பது? நேரிடையாகச் சொல்வதென்றால் கடமையை ஆற்றத் தவறியவர் எனலாம். ஆனால் நிர்வாகத்தின் உறுப்பினரான ஒருவருக்கு நிர்வாகத்தால் கடமை ஒப்படைக்கப்பட்டு, அதனை அவர் உணர்ந்து சரியாகச் செய்யவில்லை எனில் அதனால் வரும் நட்டம் நிர்வாகத்திற்கேதான் போய்ச்சேரும். எனவே மனிதன் விளைவை உணர்ந்து செயல்புரிய வேண்டும் வாழ்க்கையில். இவ்வுண்மையினை இறைவணக்க முதல்பாடலிலேயே ‘கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பம் துன்பமவன்’ என்று சுத்த அத்வைதத்தில் வலியுறுத்தி இயம்புகின்றார் மகரிஷி அவர்கள். காணும் இன்பம் துன்பமவன் யார்? எவ்வாறு மனிதன் ஏற்படுத்திய தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் கடமையைச் சரிவரச் செய்யவில்லை எனில், அதனால் ஏற்படும் நட்டம் நிர்வாகத்திற்கே போய்ச் சேர்வதுபோல், இயற்கையின்/இறையின் மனித இனத் தன்மாற்றத் தொழிற்சாலையின்பங்குதாரர்களான மனிதர்கள் தங்களின் கடமையைச்(செயலை) சரிவரச் செய்யவில்லை எனில் அதனால் வருகின்ற துன்பத்தை அதிபரான இறைவனே(இறையே) ஏற்க நேரிடுகின்றது.
என்ன கடமை இயற்கை/இறை மனிதனுக்கு அளித்துள்ளது?
தானும் இன்பமாக வாழ்ந்து அதேபோல் தன்னுடன் வாழ்கின்ற சமுதாயத்தில் உள்ள பிறரும் இன்பமாக வாழ்வதற்கு இடையூறு செய்யாமலும், தேவையிருந்தால், தன்னால் முடிந்தால், அவர்களும் இன்பமாக வாழ்வதற்கு, உதவிசெய்யக்கூடியக் கடமையை இயற்கை/இறை வைத்துள்ளது, மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ற விளைவைத் தருவது இயற்கை/இறை நீதி. மனிதன் விளைவுகளைத்தான் இன்பமாகவோ, துன்பமாகவோ அனுபவிக்கிறான். இன்பமே விரும்பும் மனிதன், அதற்கேற்ற செயல்களைக் கடமையாகச் செய்ய வேண்டும். இல்லை எனில் மனிதன் துன்பங்களைத்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். பிறரையும் வாழவைத்து தானும் இன்பமாக வாழ மனிதன் செய்ய வேண்டியது என்ன? இரண்டே இரண்டுதான்.
சுருங்கச் சொல்வதென்றால் இயற்கை/இறை மனிதனுக்கு வைத்துள்ள கடமைகள் இரண்டு. என்ன அவை? தன்னிலிருந்த(இறையிலிருந்து) தன்மாற்றடைந்து வந்துள்ள மனிதன் தனது(இறையின்) தன்மையை அவனில்(மனிதனில்) ஒளிரச் செய்ய வேண்டிய பொறுப்பை மனிதனுக்கு வைத்துள்ளது இயற்கை/இறை. அதற்கு இரண்டு கடமைகளை ஆற்றவேண்டியுள்ளது. ஒன்று இயற்கையின்/இறையின் தன்மையான அன்பை வெளிப்படுத்த வேண்டும். மற்றொன்று கருணையோடு இருக்க வேண்டும். அதனை வெளிக் கொண்டுவர மகரிஷி அவர்கள் மனவளக்கலையை வடிவமைத்து சீரமைக்கும்போது ஒருயுக்தியினைக் கையாண்டிருக்கிறார். அதுதான் இரண்டொழுக்க பண்பாட்டுச் சங்கல்பம்.
ஒன்று, தான் வாழ்கின்ற வரை யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரக்கூடாது.
மற்றொன்று துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
முதலாமது அன்பை வெளிப்படுத்துவது. சீவனில் சிவனைக் காண்கின்ற அன்பு மனம் எவ்வாறு பிறருக்கு துன்பம் விளைவிக்கும்?
இரண்டாமது கருணையை வெளிப்படுத்துவது. சிவத்தை அறிந்ததால்(துரியாதீத நிலையில் வெற்றி கொள்வது) அன்பு மலர்கின்றது. அப்பேறு பெற்ற அறிவு கருணையைத்தான் வெளிப்படுத்தும். தவமுறையை இயற்றும்போது, ஆரம்பத்தில் மனிதனுக்கு வேண்டிய ஐந்து வள சங்கல்பத்தை(உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம்) தவத்தின் முடிவில் இயற்றச் சொன்ன மகரிஷி அவர்கள், பிறகு இரண்டொழுக்க பண்பாட்டினையும் சங்கல்பமாக சேர்த்துள்ளார். காரணம் என்ன?
இரண்டொழுக்கப் பண்பாடில்லாமல் வாழ்க்கை வள சங்கல்பத்தில் உள்ள நான்காவதான உயர்புகழ் மற்றும் ஐந்தாவதான மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டும் சாத்தியமில்லை.உயர்புகழ் மற்றும் மெய்ஞ்ஞானம் ஆகிய வளங்களை விரும்பும் சாதகன் வெளியிலிருந்து அறிவுறுத்தல் இல்லாமலேயே தானாகவே இரண்டொழுக்கப் பண்பாட்டில் சிறந்தே விளங்குவார். உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டு வளங்களிலும் இரண்டொழுக்க பண்பாடு சங்கல்பம் மறைந்து (Hidden). இருப்பினும், என்ன வேண்டுமோ அதனை சங்கல்பமாக இயற்றுவதில் வார்த்தைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பின்னர் தவமுறையை சீரமைக்கும்போது இரண்டொழுக்கப் பண்பாட்டினையும் தவமுறையில் இணைத்துள்ளார்.
சமுதாயத்திற்கு மனிதர்களால் என்ன தேவை? அன்பும் கருணையுமேதான். முதல் சங்கல்பத்தில் தனிமனிதனுக்கு தேவையானவைகள் உள்ளன. இரண்டாவது சங்கல்பத்தில் தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்திற்கு தேவையானது உள்ளது. எனவே சமுதாயத்தில் மனிதர்களிடம் அன்பும் கருணையும் மலர்வதற்கு இரண்டொழுக்க பண்பாட்டு சங்கல்பத்தை இயற்றச் சொல்லி வான்காந்தத்தில் பரவவிடச் செய்துள்ளார். இது திணிவு பெற பெற ‘when fraction demands, Totality supplies” என்பதற்கிணங்க சமுதாயத்தில் பண்பேற்றத்தில் சிறந்துவிளங்கும் குடிமக்கள் உருவாவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் இயற்கை/இறை.
இறை உணர்வு என்பது இறையின் தன்மை சாதகனில் ஒளிர்தலே:
பிறவியின் நோக்கம் என்பது
இறை உணர்வு பெறுவது என்றும்,
இறை உணர்வு என்பது இறையின் தன்மை சாதகனிடம் ஒளிர்ந்து
சாதகனின் உள்ளம் தூய்மை பெறுவதே
என்பதற்கேற்ப தானும் அவ்வாறே இறை உணர்வு பெறுவதற்கு விழிப்போடு பொறுப்புடன் திட்டமிட்டு
செயல்கள் ஆற்றி பேரின்ப ஊற்றின் அனுபவத்தை அடைந்ததை தனது மாணர்வகளுக்கு தெரிவிக்க மகரிஷி அவர்கள், பின்னாளில் பேரின்ப ஊற்று என்கின்ற பாடலிலே அதனை இயம்பியுள்ளார்,
இதுவரை மகரிஷி அவர்கள் மனம் செயல் ஆகிய இரண்டிலும் தூய்மை பெற எவ்வாறு பொறுப்புடன் செயல்கள் ஆற்றினார் என்பதனை அறிய, ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தை ஏற்கனவே நமக்குத் தெரிந்த வார்த்தையாக இருந்தாலும், நாமும் அவர் கூறும் அந்த பொறுப்புடன் செயல்கள் ஆற்றி மனம், செயல் ஆகிய இரண்டில் தூய்மை பெற்று இன்பமுறுவதில் அழுத்தம் பெற, ‘பொறுப்பு’ என்கின்ற வார்த்தைக்கான பொருளை மூன்று கோணங்களில் அறிந்து கொண்டோம்.
இப்போது பாடல் வரிகளுக்குள் செல்வோம்
அறநெறியில் விழிப்போடு பொறுப் புணர்ந்து,
ஆற்றி மனம் செயல் தூய்மை ஆனபோதும்,
பிறவியின் நோக்கத்தை அறிந்துவிட்டார்.
பிறவியின் நோக்கத்தை அடைவதற்கும் தனக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதனை அளந்து பார்க்கிறார்.
அதாவது பிறவியின் நோக்கத்தை அடைவதற்கும், பிறவியின் நோக்கத்தை அறிகின்றபோது தான் இருந்த நிலைக்கும் உள்ள இடைவெளியைக் கணக்கிடும்போது, அதன் எல்லையினை உணர்கிறார் மகரிஷி அவர்கள்.
அந்த எல்லையினை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்கிறார்.
பிறவியின் நோக்கமான இறை உணர்வு பெறுவதற்கு, பின்னாளில் ‘செயலிலே விளைவாக வருபவன் இறைவன்’ என்கின்ற பொன்னான பொன்மொழியை அருளிய மகரிஷி அவர்கள்,
ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்டு அறநெறிவாழ்க்கை
வாழவேண்டும் என அறிந்து முடிவுசெய்து, அவ்வாறே வாழ்ந்து அறநெறி வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்.
அந்த முடிவுதான் அறநெறியில் விழிப்போடு பொறுப்புணர்ந்து செயல்களை ஆற்றி மனம், செயல் ஆகியவற்றை தூய்மையாக்கிக் கொள்வது. அறநெறியில் விழிப்போடு பொறுப்புடன் செயல்கள் ஆற்றி மனம் தூய்மை ஆன ஆனந்த அனுபவத்தை மற்றொரு பாடலின் வாயிலாக சமுதாயத்திற்கு அறிவிக்கிறார். அப்பாடலை மீண்டும் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
பேரின்ப ஊற்று
உன்னிலே நானடங்க*, என்னுளே நீ விளங்க,
உனது தன்மை ஒளிர,எனதுள்ளம் தூய்மை பெற்றேன்.
இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்?
எடுத்த மனிதப் பிறப் பெய்தியதே முழுமை.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
*நானடங்க – நான் அடங்க. ‘அடங்க’ என்பதற்கான ஆழ்ந்த பொருள் கொண்ட இறை அனுபவத்தை அறிய மகரிஷி அவர்கள் அருளிய திருக்குறள் உட்பொருள் விளக்கம் – பக்கம் 72 இல் காண்க. அப்பக்கத்தில்
பேரின்பப்படிகளில் இரண்டாவது படியான ‘உள்ளம் தூய்மை பெற்று பேரின்பத்தை அனுபவிப்பதற்கு’, சுத்த அத்வைத உண்மைக்கேற்ப, இறைவனுள்ளே(உன்னுள்ளே-பேரறிவில்) ஆத்மசாதகன்(சாதகனின் அறிவு) அடங்க, இறைவனின்(பேரறிவின்) தன்மை ஆத்மசாதகனிடம் ஒளிர, ஆத்மசாதகனின் உள்ளம் தூய்மை பெறும் பேற்றினை பெற்ற பிறகு மனிதனுக்கு வேறு என்ன வேண்டும்? எடுத்த மனிதப் பிறவி முழுமை அடைந்து விடுகின்றது. அதாவது இறைவனுள் ஆத்மசாதகன் அடங்குவது என்பது இறைவனையும் சாதகனையும் பிரித்துவைத்துள்ள தன்முனைப்புத் திறை நீங்குவது என்று பொருள். இறைவனும் மனிதனும் இரண்டறக்கலப்பது என்று பொருள். இரண்டாவது படியுடன் பிறவியின் நோக்கமான இறைஉணர்வு பெறுவது முடிவடைந்து விடுகின்றது. வீடுபேறு கிட்டுகின்றது. அத்துடன் இறைஉணர்வு பெறுவது முடிந்துவிடுகின்றதல்லவா? பின்னர் அதன் தொடர்ச்சியாக மேலும் இரண்டு படிகளைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். ஏன்? சிந்திப்போம்!
மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்திலிருந்து, மகரிஷி அவர்கள் அளித்துள்ள உறுதிமொழியான ‘யாரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும், தப்பாது குருவின் உயர்வு மதிப்பவரைத் தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்’ என்பது பற்றி சிந்தித்து வருகிறோம். உறுதிமொழியின் பிற்பகுதியை முதலில் எடுத்துக்கொண்டு சிந்தித்து வருகிறோம். அச்சிந்தனை இன்னும் முடிவு பெறவில்லை. பிற்பகுதியை சிந்திப்பதன் விளைவால் ஏற்படுகின்றத் தெளிவு
எதற்காக பிறவிப்பயன் அடையவேண்டும் என்றும்,
பிறவிப்பயன் அடைதல் என்பது மீண்டும் பிறப்பு-இறப்பு சுழற்சியிலே சிக்கித் தவித்து, இன்ப-துன்பத்தை அனுபவிக்காமல் இருப்பதற்கே என்று அறியவும்
அதற்கு எவ்வாறு குருவை மதித்து ஒழுகி தரத்தில் உயர்வது பற்றி அறியவும்,
பிறவிப்பயன் என்பது இறையாட்சியில் இறைக்கு அடுத்த பதவி கொடுக்கப்பட்டிருக்கும் மனிதன் அதற்கேற்ற தரத்திற்கு உயர்வது என்பதனை அறியவும் வைக்கும்.
இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். பிறவிப்பயனை அடையும் நான்கு படிகளில் கடைசி இரண்டு படிகளான உறவுகளில் உண்மை நிலை துறவு என்பதனை அறிந்தபோதும், முடிவாகத் அத்துறவு நிலை எய்தியது மகரிஷி அவர்களுக்கு எவ்வாறு பேரின்பத்தை அளித்தது என அறிந்துகொள்ள இனிவரும் விருந்துகளில் சிந்திக்க இருக்கிறோம்.
இன்றையச் சிந்தனையின் சாரம்:
1) பிறவியின் நோக்கமான இறை உணர்வு பெறுவதற்கு எவ்வாறு ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றைக் கொண்ட அறநெறியில்
2) அயரா விழிப்போடு பொறுப்பை உணர்ந்து
3) எண்ணம், சொல், செயல், ஆகியவற்றில் தூய்மை அடைவது பற்றி யும்
4) இறை உணர்வு பெறுவது என்பது மனம் தூய்மை அடைவதே என்றும், அதற்கு பழிச்செயல் பதிவுகளின் ஆணிவேரான இறையையும் மனிதனையும் பிரித்து வைத்திருக்கின்ற தன்முனைப்புத் திரையை விலக்கி ஆத்ம தரிசனம் பெறுவதே என்றும் அறிந்து .கொண்டோம்.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.