May 2020

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 295(194)

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 295(194)

    17-05-2020 — சனி

    முயற்சி வெறும் உந்து சக்தி மட்டுமல்ல. ஆற்றலை வெளிக்கொணரும் கருவி”.

    ….. இரவீந்திரநாத் தாகூர்.

    பயிற்சி:

    1) என்ன கூறுகிறார் அறிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள்?

    2) முயற்சி என்பது தெய்வீகப்பண்பு என்று சொல்லமா? சரியா? சரியானால் எவ்வாறு?

    3) முயற்சி பற்றி திருவள்ளுவர் எந்த அதிகாரத்தில் விளக்கியுள்ளார்?

    4) முயற்சி பற்றி கூறும் அதிகாரத்திற்கு ஏன் அவ்வாறு பெயர் வைத்துள்ளார்?

    5) அந்த அதிகாரம் எந்த அதிகாரத்திற்கு அடுத்ததாக வைக்கப்பட்டுள்ளது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 294(191)

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 294(191)

    16-05-2020—சனி

     

    எந்த உயிரிடத்திலும் பேதமின்றி தம் உயிர் போன்று காண்பவன் உள்ளத்தில் இறைவனும் நடனமாடுகிறார்.”

    . . . இராமலிங்க அடிகள்.

    பயிற்சி:

    1) மற்றவர்கள் உள்ளத்தில் …. ?

    2) இந்த அருள் மொழியை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?

    3) இறைவன் நடனமாடுகிறார் என்பது அவரது பேரின்ப அனுபவம்! இது எல்லோருக்கும் உரியதுதானே?

    4) இந்த உண்மையினை மகான் மகாகவி பாரதியார் எவ்வாறு கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்


     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 293(187)

    வாழ்க மனித அறிவு!               வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 293(187)

    15-05-2020 — வெள்ளி

    நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் உழைக்கும் திறன் இல்லை. வேதாந்தக் கோட்பாடு உள்ளது.   ஆனால் நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லை”

     
    . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி:

    1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?

    2) எதனை வலியுறுத்த அறிவையும் உழைக்காத  திறனையும் இணைத்து ஆதங்கப்படுகிறார்?

    3) அதேபோல் எதனை வலியுறுத்த வேதாந்த கோட்பாட்டையும் அதனை நடைமுறைபடுத்தும் ஆற்றல் இன்மையையும்   இணைத்து ஆதங்கப்படுகிறார்?

    4) இக்கூற்று ஆன்ம சாதகர்களுக்கு அறிவுறுத்துவது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


    Loading