admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 200

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

    30-07-2016—சனி

    ‘ பேசப்போவது எல்லாவற்றையும் நன்றாக யோசி. ஆனால் யோசித்ததை எல்லாம் பேசிவிடாதே?

     ….. டெலானி.

    பயிற்சி—
    1) யோசிக்கவும் சொல்கிறார் அறிஞர் டெலானி, அதே நேரத்தில் எச்சரிக்கையையும் விடுக்கிறார். ஏன்?
    2) மனவளக்கலையின் எந்தப் பயனை வளர்க்கக் கூடியது அறிஞர் டெலானியின் இவ்வறிவுரை?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 199

    வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

                         29-07-2016—வெள்ளி

    ‘தன் குறை எது என கண்டுபிடித்தலே அறிவின் சிகரமாகும்’

    ….. இங்கிலாந்துப் பழமொழி.

    பயிற்சி—
    1) ‘இவ்வுண்மையை மகாத்மா காந்தி எவ்வாறு கூறி இருக்கிறார்?
    2) மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
    3) ஏன் தன்குறையை அறிவது, அறிவின் சிகரம் என்கிறது இங்கிலாந்துப் பழமொழி?
    4) அறிவு அரூபமாயிற்றே! அறிவிற்கு சிகரம் உண்டா? பழமொழி கூறும் சிகரம் எது?

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-198

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    28-07-2016 – வியாழன்

    எண்ணம், இயற்கை, இறை இவையெல்லாம் வெவ்வேறானவை அல்ல என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் எண்ணத்தை இயற்கையின் சிகரம் என்கிறார். எவ்வாறு அவ்வாறு கூறுகிறார்? எண்ணமே இயற்கையின் சிகரமாக இருப்பினும், எண்ணத்தை உடைய மனிதன் ஏன் அல்லலுறுகிறான்? விரிவாக ஆழ்ந்து தெளிவு பெறவும். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading