admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 198

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    23-07-2016—சனி

    ‘மனிதன் நல்ல எண்ணத்தோடும், முயற்சியோடும் ஒரு அடி எடுத்து வைத்தால், இறைவன் பத்து அடி எடுத்து வைப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது’

    …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) இதன் பொருளாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?
    2) மனிதனின் ஒரு அடிக்கு இறைவன் பத்து அடி எடுத்து வைப்பான் என்பது எல்லோருக்கும் தானே?! சோதித்துப் பார்க்கலாமே! அடிகளை எடுத்து வைக்கலாமே!!
    3) இது இயற்கையியலில்/இறையியலில் எவ்வாறு சாத்தியமாகின்றது? அறிவுப் பூர்வமான தெளிவு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 197

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

     

    22-07-2016 — வெள்ளி

    ‘புகழ் பூவைப் போன்றது. பூவின் வாசனையை நுகரலாம். பூவையே சாப்பிடக் கூடாது.’

    …. ஸ்பேக் கேட்டல்

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர் ஸ்பேக் கேட்டல்?
    2) ஏன் புகழை பூவோடு இணைத்துக் கூறுகிறார்?
    3) ‘வாசனையை நுகரலாம்’ என்பதற்கான பொருள் என்ன?
    4) ‘பூவையே சாப்பிடக்கூடாது’ என்பதன் உட்பொருள் என்ன?
    5) உட்பொருளை நேரிடையாகச் சொல்லாமல் ஏன் அறிஞர்கள் புதிராகவும், இலை மறை காய் மறையாகவும் இயம்புகின்றனர்?

    வாழ்க அறிவுச் செல்வம்             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-196

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     21-07-2016 – வியாழன்

    விஞ்ஞானம்

     

    (அ) விஞ்ஞானம் என்பது என்ன?
    (ஆ) அறிவுப்பூர்வமாக உள்ளது விஞ்ஞானமா?
    (இ) ‘ I exist- நான் இருக்கிறேன்’ என்பது விஞ்ஞானமா. அறிவு பூர்வமானதா?
    (ஈ) ‘எனக்கு அறிவு இருக்கின்றது’ என்பதில் விஞ்ஞானம் உள்ளதா?
    (உ) விஞ்ஞானம் என்பதற்கு வேறு ஏதாவது புதிய வரையறை தேவையாக உள்ளதா?
    (ஊ) எதற்காகத் தேவையாக உள்ளது? தேவையாக இருந்தால் அந்த புதிய வரையறை என்னவாக
    இருக்கும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading