admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 176

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    07-05-2016 — சனி

    தேவைகள் குறையும் அளவிற்கே தெய்வத்தன்மை அடைவோம்.

     . . . அறிஞர் சாக்ரடீஸ்.

    பயிற்சி:–
    1) மகரிஷி அவர்கள், அறிஞர் சாக்ரடீஸ் அவர்களையும் அறிஞர் திருவள்ளுவரையும் தொடர்பு படுத்திக் கூறியுள்ளது  என்ன?
    2) ‘தேவைகள் குறைவதற்கும்’ ‘தெய்வத்தன்மை அடைவதற்கும்’ உள்ள தொடர்பு ஆன்மீகமா? அல்லது அறிவியலா?
    3) விரக்தியால் கூறுவதா?
    4) இந்தக் கூற்றுடன் தொடர்புடைய குறள் ஏதேனும் உள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 175

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     

    06-05-2016 — வெள்ளி

    இறைநிலையான மன அலை விரிந்த சுத்த வெளியுடன் அபூர்வமாக ஒன்றிணைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக் காணும்போது, அது இன்பமும், திருப்தியும், கலந்த உணர்வாக அமைவது பேரின்பம்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ஏன் அபூர்வமாக என்கிறார் மகரிஷி அவர்கள்?
    2) ‘தனது சொந்த ஆற்றல்’ என்பதன் பொருள் என்ன?
    3) ஒவ்வொரு இடத்திலும், பொருளிலும் என்பதன் பொருள் என்ன?
    4) ‘செயல் ஒழுங்காக’ என்பதன் பொருள் என்ன?
    5) ‘மெய்யுருவாக்கிக் காணும்போது’ என்பதற்குப் பொருள் என்ன?
    6) மகரிஷி அவர்கள் சுருங்கச் சொல்வதென்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்            வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-174

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    05-05-2016 – வியாழன்

    இயற்கையின்/இறையின் இரகசியங்களை அறிவதால் பயன்கள் என்னென்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்             வளர்க அறிவுச் செல்வம்

    Loading