கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
கவி
——– ———– க்குதவாத உடல்வலிவும் அறிவும்,
பெற்ற பிறவியும் மதிப்பும் ———————த்த தாகும்;
——– உழைப்பின் விளைவாலும் ——— உதவியாலும்,
பிழைக்கின்றோம். என்ற உண்மை ————— மனிதன்;
————க்கு எவ்விதத்தும் வருத்தம் ——– முறையில்,
பெருஞ்செல்வம் சோ்த்திடினும் ———————-; அதனால்,
———— மகிழ, பல மக்கள் வாழ்வில் ——– ஓங்கப்
————-தவி புரிந்தவரே, ——– ——– பெற்றார்.
சென்ற அறிவிற்கு விருந்தில் அறிவின் ஏழு செயல்பாடுகள் என்னென்ன என்றும், அதில் உணர்வு தொடர்பான 4, 5, 6, 7 ஆம் நிலைகளை சிந்தனைக்கு எடுத்துக் கொண்டோம். அவற்றில் 4, 5, 6 ஆம் நிலைகளான உணர்தல், அனுபவம், பிரித்துணர்தல் ஆகிய ஐயுணர்வைப்பற்றி சிந்தித்தோம். ஐயுணர்வே பகுத்துணர்வும் என்றும் அறிந்து கொண்டோம். இன்று அறிவின் கடைசியும், 7 ஆம் நிலையுமான ‘அறிவு தன்னை உணர்வது’ பற்றி சிந்திக்க இருக்கிறோம். ‘அறிவு தன்னை உணர்வதும், அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்’ என்பது எவ்வாறு இயற்கையின் நிகழ்வு என அறிந்து விட்டு, பண்பாட்டை உயர்த்தும் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு, மனிதகுலத்தின் பூர்விக சொத்தான அமைதியினை அனுபவிக்கச் செய்து, பேரின்பநிலையை அனுபவிக்கச் செய்கின்றது/செய்ய முடியும் என்பதனை அறிவோம். வாழ்க வளமுடன்.
ஆறாம் அறிவிற்கும் ஐந்தாம் அறிவிற்கும் உள்ள வித்தியாசமே ஆறாம் அறிவு சிந்தனை செய்வதுதான். எதனைப்பற்றி சிந்தனை செய்வது?வாழ்க்கையை பற்றி நினைத்துப் பார்த்து எதார்த்தத்தை அறிவது. இந்த உலக வாழ்க்கை நிலையானதல்ல. நிலையில்லாத வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்கின்ற தெளிவுதான் சிந்திப்பதன் பலன்.
யாரும் விரும்பிப் பிறப்பதில்லை. மனிதன் பிறக்கிறான். ஒரு நாள் இறக்கப்போகிறான். அதுவும் ஆறிலும் நடக்கலாம். அறுபதிலும் நடக்கலாம். பிறப்பதும், இறப்பதும் இயற்கையின் நிகழ்வுகள். இந்த இடைப்பட்ட காலத்தில் இன்பம், துன்பம் ஆகிய இரண்டை மாறி, மாறி அனுபவிப்பதே வாழ்க்கையாகின்றது. அதிலும் ஒரு சிலருக்கு இன்பம் அதிகமாக இருக்கலாம். துன்பம் குறைவாக இருக்கலாம். வேறு சிலருக்கோ இன்பம் குறைவாக இருக்கலாம், துன்பம் மிகுதியாக இருக்கலாம். ஏன் இந்த வேறுபாடுகள்? இதற்கெல்லாம் காரணங்கள் என்ன? பிறக்கும்போது என்ன கொண்டுவந்தோம், போகும்போது என்ன கொண்டு போகப்போகிறோம் என சிந்திக்கின்றானா மனிதன்? இவ்வாறாக அறிவின் 7 ஆம் செயல்பாடான சிந்தனைக்கு ஆறாம் அறிவு வருவதில்லை.
உடல்வளர்ச்சியில் முழுமை அடைவதுபோல். அறிவு தனது வளர்ச்சியில் முழுமை அடைவதில்லை. உடல் பருப்பொருள் என்பதால் அது வளர்ச்சி அடைந்து முழுமை அடைகின்றது தெரிகின்றது. ஆனால் உருவமில்லா அறிவு என்பது வளர்ச்சி அடைய வேண்டும் எனில் அது பண்பேற்றத்தில் உயரவேண்டும் என்பது பொருளாகின்றது. எனவேதான் வாழ்வியல் கலையான மனவளக்கலை பயிற்சியின் இறுதிப் பயன் (End Result) அறிவின் முழுமை(Perfection of Consciousness) என்கிறார் மகரிஷி அவர்கள்.
எதற்காக ஆன்மா மனிதனாக பிறந்துள்ளது என்பதனை, அவ்வையார் எவ்வாறு கூறுகிறார் என்பதனை நினைவு கூர்வோம். அவ்வையார் மானுடனாக பிறப்பதே அரிது என்கிறார். அதிலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது என்கிறார். ஆம். உயிரினங்களிலே மானுடப்பிறவி உயர்ந்தது, சிறந்தது. எல்லா உயிரினங்களுக்கு அடிப்படையாகவும், பொதுவாகவும் இருப்பது உயிர். உயிர் பலகோடி விலங்கினப் பிறவிகளாக வாழ்ந்துவிட்ட பிறகே மனித உயிராக பிறவி எடுத்துள்ளது. எனவே தான் அரிது அரிது மானிடனாய்ப் பிறத்தல் அரிது என்கிறார். இவ்வாறாக அரிய பிறவி எடுத்துப் பிறந்தாலும் ஞானத்தைப் பெறுவது அரிது என்கிறார்.
அவ்வையாரின் இந்த ஆதங்கத்தை,
இப்போது, மனவளக்கலை, தனது பயிற்சியாளர்களை பிறவியின் நோக்கம் எது என
திருவள்ளுவர் காட்டிய வழியில் சிந்திக்க வைத்து,
ஞானம் பெறுவதற்கு பயிற்சியினை தொடரச் செய்து நிறைவு செய்கிறது.
வாழ்வின் நோக்கம் அறிய திருவள்ளுவர் காட்டிய வழி என்ன?
அறிவு, ஐயுணர்வாக, ‘அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை மட்டுமே உணர்ந்து கொண்டிருந்தபோது, அறிவிற்கு சிந்தனை மலரவில்லை. ஆனால் அறிவு, ஆறாம் அறிவாக மனிதனிடம் வந்தபோது அதன் சிந்தனைத்திறன் மலர வேண்டும்/மலர்ந்திருக்க வேண்டும் என்பதுதானே இயற்கையின் நிகழ்வாக இருக்க வேண்டும். அவ்வாறு மலர்ந்து என்ன செய்ய வேண்டும் ஆறாம் அறிவு? ‘ஐவகை நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை உணர்ந்து கொண்டிருக்கின்றோமே, இவை என்ன? இவை ஏன், எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன, இவற்றை உணர்ந்து கொண்டிருக்கின்ற நான் யார்?’ என்கின்ற வினாக்களால் உந்தப்பட்டு, தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளியுள்ள குறளான
“சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை* தெரிவான் கட்டே உலகு” …. குறள் எண்: 27
என்பதற்கேற்ப அறிவு அவ்வினாக்களுக்கான விடைகளைக் கண்டுபிடித்து உலக வாழ்க்கையை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஓரறிவிலிருந்து ஆறாம் அறிவு சீவன்கள் வரை, ஒவ்வொன்றிற்கும் உள்ள உணர்வுகளைத் தெரிந்து கொள்வோம்
ஒவ்வொரு அறிவிற்கும் ஒரு உணர்வு என்கின்றபடி ஐந்து சமன்பாடுகள் பூர்த்தியாகி உள்ளன. ஆறாவது சமன்பாட்டில் கோடிட்ட இடத்தில் ஒரு விடையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அது என்ன? சற்று சிந்திப்போம்.
திருவள்ளுவர் கூறும் ‘வகை* தெரிவான் கட்டே உலகு’ என்பதற்கேற்ப பிரபஞ்ச நிகழ்ச்சிகளான, புலன்களுக்கு புலப்படுகின்ற ஐந்து நிகழ்ச்சிகள் ஏற்படுகின்ற வகையினை அறிந்து கொள்வதேயாகும். புலன்களால் உணரப்படுகின்ற ஐந்து நிகழ்ச்சிகளாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றால் (தெரிந்தவை) ஏற்படுகின்ற வழியினை(வகையினை) அறிந்து கொள்வதன் மூலம் இதுவரை புலன்களால் அறியமுடியாததாக இருந்து வருகின்ற(தெரியாமல்) இறையையேக் கண்டுபிடித்துவிடலாம். அதாவது தெரிந்ததை வைத்து தெரியாததைக் கண்டுபிடிப்பது எளிதல்லவா?! இப்போது ஆறாவது சமன்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற முடிவிற்கு வருவோம். ஆறாவது சமன்பாடு
என்றிருக்க வேண்டும்.
திருவள்ளுவர் கூறுவதுபோல், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்கின்ற ஐந்தின் வகை அறியும் வகையில்,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, திருவள்ளுவரை மானசீக குருவாக வணங்கி ஏற்றுக் கொண்டு,
தெய்வப்புலவரான திருவள்ளுவரின் இறையைப்பற்றிய எண்ணங்களை அப்படியே உள்வாங்கி,
தன்னுடைய இறையியலுக்குச் சான்றாக ஐம்பது குறட்பாக்களுக்கு உட்பொருள் விளக்கத்தினை,
திருவள்ளுவரே வந்து இப்போது சொல்லியிருந்தால் எவ்வாறு சொல்லியிருப்பாரோ, அதுபோல்
நூல் எழுதி, வெற்றி பெற்றவரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான் அருளியுள்ள
திருவேதாத்திரியத்தில், ஐவகை நிகழ்ச்சிகள் என்ன, அவை எவ்வாறு ஏற்படுகின்றன,
அவற்றின் மூலம் என்ன, அவற்றின் முடிவு என்ன என்பதனை அறிவித்து. ஆதியிலிருந்து முடிவுவரை பிரபஞ்சத்தையும் அறிவையும் எளிதில் புரிந்து கொள்ள முடிகின்றவாறு விளக்கங்கள் கூறியுள்ளார்.
வேண்டியதெல்லாம் செய்முறைத் தேர்வில் வெற்றி(துரியாதீத தவத்தில் வெற்றி பெறுவது/ success in Thuriyatheeth meditation) பெறுவது. தேர்வில் வெற்றி பெற்றால் சான்றிதழ் தருவதுபோல் இந்தத் தோ்வில் வெற்றி பெற்றதற்கு ஏதாவது சான்றிதழ் உண்டா? உண்டு. அதனை நாமே அளித்துக் கொள்ள வேண்டியதுதான். அறிவிற்கு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற நிலை கைவல்யமாகிவிட்டால் அதுவேதான் அதற்கு சான்றிதழ்.அறிவிற்கு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ கைவல்யமாகிவிட்டால் இயற்கையாகிய புவிமேல் எல்லாம் இன்பமயம்தான்.
இத்துடன் இன்றைய அறிவிற்கு விருந்தை நிறைவு செய்து கொள்வோம். அறிவித்துள்ளபடி, அடுத்த அறிவிற்கு விருந்து, மகரிஷி அவர்களின் மகாசமாதி தினமான 28-03-3016 திங்களன்று நடைபெறும். அச்சமயம் ‘தெளிவு’ பற்றி சிந்திக்க இருக்கிறாம். ‘தெளிவு’ பற்றிய சிந்தனை முடிந்த பிறகு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருவது தொடங்கும் என அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.