admin

Author Archives

  • FFC – 152-வினா விடை 4

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    வினா விடை 4

    FFC – 152

    06-01-2016–புதன்

    சிந்திக்க வினாக்கள்-127
    (23-11-2015 – திங்கள்)

    ஆன்மீகத்தில் ‘கண்டவர் விண்டதில்லை’ என்றிருக்கும்போது மகரிஷி அவர்கள் தான் அறிந்ததை அறிந்தவாறு எவ்வாறு கூற முடிகின்றது?

    விடை: பொதுவாக, ‘Bhramam cannot be comprehended’ எனப்படுகின்றது. ஆனால் ஆன்மீகத்தில் ‘கண்டவர் விண்டதில்லை’ என்றிருக்கும்போது மகரிஷி அவர்கள் தான் அறிந்ததை அறிந்தவாறு எவ்வாறு கூற முடிந்தது என்கின்ற காரணத்தை அவர் இயற்றியுள்ள கவியினிலே காணலாம்.

    FFC-152-5-NEW-கண்டவர் ஏன் விண்டதில்லை

     

    சிந்திக்க வினாக்கள்-128
    26-11-2015 – வியாழன்

    இறை எவ்வாறாக இருந்தால், ‘தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான்’ என்பது சாத்தியமாகின்றது? சற்று விளக்கவும்.

    விடை :-
    இங்கு, அங்கு என்றில்லாமல், இறை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்கின்றனர் இறையை அறிந்தவர்கள். எங்கும் இறைந்து கிடப்பதால் இறைக்கு இறைவன் என்கின்ற காரணப் பெயர் உள்ளது. அப்படியிருக்கும்போது இறை தூணிலும், துரும்பிலும் இருந்துதானே ஆகவேண்டும். ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்றும் சொல்வதுண்டு. அணுவும் இறைதான், அதனை இயக்குகின்ற ஆற்றலும் இறையேதான். இவ்வாறிருக்கும் போது இறை எவ்வாறு இருந்தால் இது இறைக்கு சாத்தியமாகின்றது? இறை வெளியாக இருந்தால்மட்டுமே இது சாத்தியமாகும், இறையின் ஆதிநிலை வெளியாக உள்ளது. அந்த ஆதிநிலையில் தான் துகள்கள் தோன்றி விண்ணாகி, பஞ்சபூதங்களாகி, இன்று நாம் காணும் பிரபஞ்சம் மிதந்து கொண்டிருக்கின்றது. எனவே வெளிக்குள் தானே அனைத்தும் உள்ளது. ஆகவே இறைவெளியில்லாத இடம் கிடையாது.

    சிந்திக்க அமுத மொழிகள்- 129
    27-11-2015—வெள்ளி

    “நான் யார்?” என்ற கேள்விக்கு விடை கண்டு அந்த விடையின் வெளிச்சத்திலே தூய்மை பெற்று
    பிறருக்கு வழி காட்டும் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொண்டு வாழ்தலே யோக வாழ்க்கையாகும்.”

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) யோக வாழ்க்கை என்பது இதுதானா?
    2) ‘நான் யார்?’ என்கின்ற கேள்விக்கு விடைகிடைப்பது வெளிச்சம் என்றால் அதற்கு முன்னர் அறிவு இருட்டில் இருப்பதாக அல்லவா அா்த்தமாகின்றது?!

    விடை :-
    1) ஆம் யோக வாழ்க்கை என்பது இதுதான். வேறு எது யோக வாழ்க்கையாக இருக்க முடியும்? எதனை யோக வாழ்க்கை எனலாம் என்பதனை முடிவுசெய்தால் இதுதான் யோக வாழ்க்கை என்கின்ற முடிவிற்கு வந்துவிடலாம். ‘யோகம்’ என்றால் இணைதல் என்று பொருள். எதனுடன் இணைதல்? ஆன்மா தன்னுடைய பூர்வீகத்தை மறந்துவிட்ட நிலையில் இறையுடன் இணைதல் என்பதே யோகம். ‘யோகம் என்பதற்கு’ எல்லோரும் அறிந்த ஒரு பொருள் உள்ளது. அது ‘அதிர்ஷ்டம்’ என்பது. ஆன்மாவிலுள்ள மும்மலங்கள் நீங்கினால் தான் இறையுடன் இணைய முடியும். மும்மலங்கள்தான் எல்லாப்பிறவிகளிலும் பாவப்பதிவுகளாகியுள்ளன. பாவப்பதிவுகள் அவ்வப்போது துன்பங்களாக வருகின்றன. துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பதனை காணமுடியாது. அதிர்ஷ்டமில்லா வாழ்க்கை வாழ்பவனை ‘யோக வாழ்க்கை வாழ்கிறான்’ என சொல்ல முடியுமா? முடியாது, ஆகவே ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு செயல்முறை விடை(practical understanding of Who is this I ?), மும்மலங்கள் நீங்கினால்தான் கிடைக்கும். மும்மலங்கள் நீங்கினால் வாழ்க்கை துன்பமிலா இறைவாழ்க்கையாக இருக்கும். அந்த வாழ்க்கையினை யோக வாழ்க்கை என்கிறார் மகரிஷி அவர்கள்.
    2) இரண்டாவது வினாவிற்கு வருவோம். விடை கிடைத்தலை வெளிச்சம் என்கிறார். அந்த வெளிச்சத்திலே தூய்மை செய்து கொண்டு பிறருக்கு வழிகாட்டும் தன்னை உயர்த்திக் கொண்டு வாழ்தலே யோக வாழ்க்கை என்கிறார். ஆம். விடை கிடைத்தல் வெளிச்சம்தான். ஏனெனில் அதற்கு முன்னர் அறிவின் இருப்பிடம் அறியாமல் இருக்கிறான். அதனால் அதற்கு அறிவின் இருப்பிடம் அறிவது என்பது ஆறாம் அறிவின் கடமையாகும், தர்மமாகும். அறிவு தன் கடமையை செய்யாதிருந்தால் அது இருட்டில் இருப்பதாகத்தானே அர்த்தம்? நான் அறிதலில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று கருத்தியல் புரிதல்(theoretical knowledge). மற்றொன்று செயல்முறை புரிதல்(practical understanding) கருத்தியல் புரிதலுக்கு பிறகு செயல்முறை புரிதல்தான் மனிதகுலத்திற்கு அவசியம். அப்போது கருத்தியல் புரிதலில் ஏற்பட்டுள்ள வெளிச்சத்தை அறிவு பயன்படுத்தி தன்னை தூய்மை செய்து கொள்ள முடியும். பிறருக்கு வழிகாட்டும் அளவிற்கு தன் அறிவை உயர்த்த வேண்டும். அதாவது ஒவ்வொரு மனவளக்கலைஞரும் இறைத்தூதுவராக வேண்டும் என்பதே இயற்கையின்/இறையின் விருப்பம் என்பதால் அதனை நிறைவேற்ற வேண்டும். எனவே இப்படிப்பட்ட வாழ்க்கையை மனவளக்கலையோகப்பயிற்சியினால் அடைந்து வாழ்வதே யோகவாழ்க்கையாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். இது தற்செயல் நிகழ்ச்சியன்று. இறை ஆட்சியில் எதுவும் தற்செயல் இல்லை. எல்லாம் ஆன்மாவின் கருமையப்பதிவுகளின்படி திட்டமிட்டதுபோல் நடக்கும். ஆகவே மனவளக்கலைஞர்கள் அனைவரும் குருவை அடைந்த பயனாகிய பிறவிப்பயனை அடைவோம். வாழ்க மனவளக்கலை. வளர்க மனவளக்கலை.

    சிந்திக்க அமுத மொழிகள்- 130
    28-11-2015—சனி

    உழைப்பு மூவகைத் தீமைகளைப் போக்குகிறது. அவையாவன, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை.
    …… அனுபவமொழி
    பயிற்சி—
    1) ‘பொழுது போகாமை’ அவ்வளவு கொடுமையானதா? எப்படி? நன்மை இழக்கப்படுகின்றதா?
    2) பொழுது போகாமைக்கும் கெட்டபழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
    3) இதனாலன்றோ ‘An idle mind is devil’s paradise’ என்கின்றனர்?

    விடை :-
    ‘பொழுது போகாமை’ என்பது என்ன? பொழுது எவ்வாறு அதுவே போகும். நாம் ஏதாவது பணியில் ஈடுபட்டால் இந்த ‘அலுத்துக் கொள்ளுதலுக்கே’ இடம் இல்லை. நேரம் எதற்காக உள்ளது? மனிதன் தன் அறநெறிகளில் இரண்டாவதான கடமையை ஆற்றுவதற்கே உள்ளது. ஆகவே நேரம் நமக்கு கிடைத்திருக்கின்றது. அதனை நாம் பயன்படுத்தாமல் நேரத்தை வீணாக்குகிறோம். அதாவது அறத்தை கைவிட்டுவிடுகிறோம். என்றுதானே பொருள்?! மேலும் காலம் என்பது என்ன? இறைவெளியின் தன்மைகளில் ஒன்று. அப்படியானால் பொழுது போகவில்லை என்றால் இறையை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதானே பொருள்?! இறையை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் எவ்வாறு இறையின் அருள் கிட்டும்? கடமை என்றால் உடலுழைப்பு மட்டுமல்ல. மன உழைப்பும் சேர்ந்ததே அறநெறி கூறும் கடமையாகும். உடலுழைப்பிற்கு ஏதும் பணிஇல்லாத போது மனஉழைப்பாகிய சிந்தனை செய்யலாமே! ‘சிவகாமி மகனை சிந்தனை செய் மனமே’ என்கின்றனர் பக்திமான்கள். ஆகவே சிவகாமி மகன் யார் என திருவேதாத்திரியத்தால் தெளிவு பெற்ற நிலையில் இறையைப்பற்றியும், அதன் இயங்கங்கள் பற்றியும் சிந்தனை செய்யலாமே. சிந்தனை செய்ய ஆரம்பித்தால் இயற்கையே/இறையே நம்முடன் பேசுமே! சிந்தனை என்பதே இயற்கையுடன்/இறையுடன் சத்சங்கம் நடத்துவதுதானே.

    நேரத்தை உன்னதமாக பயன் படுத்தாமலிருந்தால் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் சீவனான மனிதன் விளக்க வழி செயல்களை செய்யாமல பழக்க வழி செயல்களில் ஈடுபட்டு விடுவான். பழக்க வழிக்கு விளக்க வழி கிடைக்கின்றது என்றாலே பழக்க வழி சரியில்லை என்றுதான் பொருள். ஆகவே பழக்க வழி நல்வழியில்லாமல் கெட்ட வழியாக இருக்கும். ஆகவே நேரம் போகவில்லை எனில் அறிவு கெட்டவழிகளில் செல்லும். மனித மனம் ஒரு நொடிக்கு ஆயிரமாயிரம் எண்ணங்களை எண்ணும் வலிமை உடையது. ஆகவே ஆயிரமாயிரம் தேவையற்ற எண்ணங்கள் வழியே மனம் ஒடிக் கொண்டிருக்கும். அது அறிவிற்கு தொந்திரவாக இருக்கும்.

    வறுமை என்பது என்ன? மனிதனுக்கு மூன்று இன்றியமையாத் தேவைகள் உள்ளன. உணவு, உடை, உறைவிடம் ஆகியன. இந்த மூன்றும் கிடைக்காத நிலையே வறுமை எனப்படுகின்றது. இந்த மூன்றினையும் பொருள் கொடுத்து தான் பெறமுடியும். உழைத்துதான் பொருள் ஈட்டமுடியும். எனவே உழைப்புதான் வறுமை என்கின்ற தீமையினை போக்க முடியும். மனிதனைத் தவிர விலங்கினங்கள் அதற்கு வேண்டிய உணவை உழைத்துத்தான் தேடுகின்றன. இருந்த இடத்திலேயே அவற்றிற்கு உணவு கிடைப்பதில்லை. உழைப்பே உயர்வைத் தரும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-139

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

          04-01-2016 – திங்கள்

     ஒழுக்கத்தில்–

                 கடமை, ஈகை இரண்டும் உள்ளடங்கியுள்ளது என்பது எவ்வாறு சரியாக உள்ளது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 151-வினா விடை 3

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    வினா விடை 3

    FFC – 151

    03-01-2016 — ஞாயிறு

     சிந்திக்க வினாக்கள்-119

    (26-10-2015 – திங்கள்)

    (அ) ‘சிறிய நான்’, ‘பெரிய நான்’ என்றால் என்ன பொருள்?
    (ஆ) எந்நிலையில் ‘சிறிய நான்’ அற்றுப்போகும் என்கிறார் மகரிஷி அவர்கள்?
    விடை
    (அ) மனிதன் தன்னை உடலோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் நான் ‘சிறிய நான்’. உலக மக்களில் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுறுவர்களைத் தவிர பெரும்பாலோர் இந்நிலையில் தான் உள்ளனர்.

    ‘பெரிய நான்’ என்பது யார்? ‘பெரிய நான்’ என்பது எல்லாம்வல்ல பேரறிவேதான். அல்லது இயற்கையின் ஆதிநிலை. அல்லது பேரறிவே எங்கும் நீக்கமற இறைந்து கிடப்பதால் காரணப்பெயராக அழைக்கப்படும் ‘இறை’. ஆகவேதான் நம்முடைய சத்சங்கத்தில் ஆதிநிலையாகிய வெளியை, பேரறிவை இயற்கை/இறை என அழைத்து வருகிறோம். அந்தப் பேரறிவிலிருந்து பின்னப்பட்டவர்கள்தான்(FRACTIONATED) இந்த உலகமக்கள் அனைவரும். எனவே தான் மனிதர்கள் சின்ன நான்கள்.
    எனினும் ‘‘பேரறிவே நானாக’ இருக்கிறேன் என்று அறிந்து அந்த வெளிச்சத்தில் வாழ்க்கை நடத்த முடியும். அப்போது . “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அது முக்தி” என்கின்ற மகரிஷி அவர்களின் பொன்மொழி உறுதிபடுத்தப்படும்.
    இஃதன்றி ‘அவனை (பெரிய நானை) மறந்தால் நீ சிறியோன்(சின்ன நான்), அவனை(பெரிய நானை) அறிந்தால் நீ பெரியோன்.’ என்று மகரிஷி அவர்கள் கூறும் நிலைக்கும் மனிதன் உயரமுடியும். இந்த நிலைக்கு உயர்வதற்கு, உலகமக்கள் அனைவரும் அல்லலுராமல் பூர்வீகசொத்தான அமைதியினை அனுபவிக்க இயற்கை அளித்துள்ள அருமருந்தான மனவளக்கலை செய்து வருகின்றது.
    (ஆ) தன்முனைப்பு அற்ற நிலையில் ‘சிறிய நான்’ அற்றுப் போகும்.
    “தன்முனைப்பு கரையும். காணும் தெய்வம்” என்கிறர் ஒரு கவியில்.

    சிந்திக்க வினாக்கள்-120
    (29-10-2015 – வியாழன்)

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!

    ஞாலத்தை அறிவது விஞ்ஞானம் . மூலத்தை உணர்வது மெய்ஞ்ஞானம் .

     …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    சிந்திக்க அமுத மொழிகள்- 121
    (30-10-2015—வெள்ளி)

    எதன்மீது ஆசை இல்லையோ அவற்றால் துன்பமில்லை.
    … பழமொழி
    பயிற்சி—
    1) இப்பழமொழியில் உள்ள விஞ்ஞானம் என்ன?
    2) திருவள்ளுவர் இக்கருத்தை எந்த அதிகாரத்தில் என்ன குறள் அருளியுள்ளார்?

    விடை

    1) தேவை வேறு ஆசை வேறு. தேவை இருந்தால், வசதி வாய்ப்பு இருந்தால், அதனை அடைவதற்கு முயற்சி செய்யலாம். தேவையில்லாமல் ஆசையிருந்தால் அவற்றால் துன்பம் வரும். தேவையின் அடிப்படையில் ஆசை இருக்க வேண்டும். தேவையில்லாமல் ஆசைப்படும் பொருள் மீது எண்ணம் செல்லும். அதனை அடைய முயற்சி செய்தாக வேண்டும். அதனை அடையலாம். அல்லது அடையமுடியாமலும் போகலாம். எஞ்சி நிற்பது கவலை.
    2) ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.’

    பொருள்:- ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தப்பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. பொருட்கள் நிலையற்றவை. நிலையற்ற பொருட்களை அடைவதற்காக பிறவி எடுக்கவில்லை. நிலையான பொருளோடு ஆன்மாவை இணைத்துக் கொள்ளவே மனிதப்பிறவி.

    மனவளக்கலை பாகம் 1 என்கின்ற நூலில் ’கவலை ஒழித்தல்’ பாடத்தில் ஆரம்பத்திலேயே இக்குறளை மகரிஷி அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுதந்திரம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். அனுபோகப் பொருட்கள் அதிகமாக உடல் நலம் கெடும். சொத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக மனஅமைதி கெடும். பாதுகாக்கப்படவேண்டிய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்க அதிகரிக்க சுதந்திரம் கெடும்.

    சிந்திக்க அமுத மொழிகள்- 122
    (31-10-2015—சனி)

    கண்பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றங்களை உணராமல் இருப்பவனே சரியான குருடன்.
    ….. ஓர் அறிஞர்.
    பயிற்சி—
    1) தன்குற்றங்களை அறிந்து கொள்வது பற்றி காந்திஜி கூறுவது என்ன?
    2) எதனால் தன்குற்றங்களை உணர முடிவதில்லை?

    விடை

    1) தன்குற்றங்களை அறிவது ஞானம் என்கிறார் காந்திஜி. (Hyper link) ஞானம் என்பது தெளிவு. ஞானத்திற்கு சிறப்பான விளக்கம் அறிவை அறிந்த தெளிவு என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே குற்றம், குறையற்ற அந்த பேரறிவை அறிய வேண்டுமெனில், மனிதன் தன்னிடமுள்ள குற்றம், குறைகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். அறிவை அறிகின்ற பயிற்சியில் இருப்பவர் தன் குற்றங்களை அறிந்து தற்சோதனையின் வாயிலாகவும், சத்சங்கத்தில் கலந்து கொண்டு சரி செய்து கொண்டு வருவார். தன்னிடமுள்ள குற்றம், குறைகளை நீக்கிக்கொள்ள முயற்சிப்பதே ஞானத்தின் பலபடிகளைக் கடப்பதற்கு முதற்படி(First step). எனவே தான், தன்குற்றங்களை அறிந்து கொள்வது ஞானம் என்கிறார் காந்திஜி. தன் குற்றம் குறைகளை பிறர் கூறி ஒருவர் அதனை எடுத்துக் கொண்டு(அறிவுரையாக) தன்னை திருத்திக் கொள்ள ஒவ்வொருவரின் தன்முனைப்பு தடையாக இருக்கும். ஒருசிலரே இதற்கு விதிவிலக்கு.

    2) தன்முனைப்பால் தன்குற்றங்களை உணர முடிவதில்லை. பெரும்பாலும் ஒருவர் செய்கின்ற குற்றங்களால் பிறருக்கு துன்பம் ஏற்படும். அவ்வாறு இருக்கும் போது, பிறா் உணர்வை தன் உணர்வு போல் மதிக்கத் தெரியும் மனிதம் மறைந்து, விலங்கினப்பண்பு தலைதூக்கிவிடுகின்றது. அல்லது தெரிந்து அலட்சியம் செய்வது தன்முனைப்பின் விளைவாக இருக்கின்றது.
    மனித இன பரிணாமத்தில் மனிதம் ஆரம்பித்த முதல் நாளை, அறம் தோன்றிய முதல் நாள் என அறுதியிட்டு கூறுகின்றார் மகரிஷி அவர்கள். இக்கவியினை ஞானக் களஞ்சியம் – கவி எண் 494 ல் காணலாம். வாசித்து மனனம் செய்து பயன்பெறவும். வாழ்க வளமுடன்.

    FFC-151-பிறஉயிர் உணர்தலாகி

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading