admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 72

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    09-05-2015— சனி

    வாழ்க்கையின் ஒரே சட்டம் அன்புதான். அன்பின்மைக்கு மறு பெயர் அழிவு.
                                                                                                                                                         …..ஒரு மகான்.

    பயிற்சி—
    1) இந்த அமுத மொழி பற்றி மேலும் கூறவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 71

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

     08-05-2015— வெள்ளி

    ஒன்றை மனதில் எண்ணி அதையே சிந்தனை செய்து கொண்டிருந்தால் அவனது உள்ளம் அதே வழியைச் சென்று அடைந்துவிடும்.

    …..புத்தர்.

    பயிற்சி—
    1) இவ்வுண்மையில், புத்தருடன் மகரிஷி அவர்கள் எவ்வாறு ஒன்று படுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-70

    வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

     

    07-05-2015— வியாழன்

    வாழ்க வளமுடன்!

     

    அறிவாட்சித் தரம் என்பது என்ன?  ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்

    விடை

    சிந்திக்க வினாக்கள்-69

     

    04-05-2015— திங்கள்

    வாழ்க வளமுடன்!

    அறிவின் பருவங்களாக மகரிஷி அவர்கள் கூறும் ஐந்து என்னென்ன?

    1) மனிதனாகப் பிறந்தும் கூட தான் மனிதன் என்று அறிந்து கொள் முடியாத பருவம் முதல் பருவம்.
    2) இரண்டாவது பருவம்: – தான் மனிதன் என்று அறிந்தும், மனிதனாக நடந்து கொள்ளத் தெரியாத பருவம்
    3) மூன்றாவது பருவம்: – மனிதனாக வாழத் தெரிந்தும், அதுவரையில் அறியாமையால் வாழ்ந்த பழக்கங்களிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளத் தெரியாமையால், உணர்ச்சி மற்றும் ஆராய்ச்சி ஆகிய இருவகை போராட்டங்களுக்கிடையே வாழ்வது.
    4) நான்காவது பருவம்: – அறிவும் செயல்களும் ஒன்றுபட்டு மனிதன் மனிதானாகவே வாழ்வது.
    5) ஐந்தாவது பருவம்: – தான் நெறியோடு வாழ்ந்தும், தெளிவற்றவர்களால் தனக்கும், சமுதாயத்திற்கும் விளையும் தீமைகளை நீக்கி, தன்னைப் போல் உலக மக்கள் அனைவரும் நெறியுணர்ந்து வாழும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று முனைந்து செயலாற்றுவது.

     ……..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    குறிப்பு: – உலக மக்களை, அறிவின் ஐந்தாவது பருவத்திற்கு உயர்த்தவே இயற்கை கருணையோடு அளித்துள்ளதுதான் திருவேதாத்திரியம். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

    Loading