admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 303

    வாழ்க மனித அறிவு!      வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க அமுத மொழிகள்- 303

    02-06-2020—செவ்வாய்

     

    நம்மை நாமே சீர்திருத்தம் செய்துகொண்டால் சமுதாயத்தில் சீர்திருத்தம் தானே வரும்”   

    . . . ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி அவர்கள்

              பயிற்சி:

    1. என்ன கூறுகின்றார் ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி அவர்கள்?
    2. சீர்திருத்தம் என்றால் என்ன?
    3. சீர்திருத்தம் மனிதவாழ்விற்கும், சமுதாயத்திற்கும் அவசியமா?
    4. ஏன் அவசியம்?
    5. தற்போது மனிதசமுதாயம் வாழ்கின்ற சூழலில் எவை எவையெற்றில் சீர்திருத்தம் அவசியம்? அதனை முன்னுரிமை அடிப்படையில்(on priority basis) பட்டியலிடமுடியுமா?
    6. சுயதிருத்தம்/சுயசீர்திருத்தம் போதுமானதாகாதா? சமுதாயத்திலிலும் சீர்திருத்தம் அவசியம்தானா?
    7. சீர்திருத்தம் சமுதாயத்தில் தானாகவே ஏற்படமுடியுமா? அல்லது ஏற்படுத்த முடியுமா?
    8. சுயதிருத்தம்/சுயசீர்திருத்தம் எப்படி சமுதாய சீர்திருத்தத்திற்கு வழிகோலும்?
    9. இருபதாம் நூற்றாண்டின் சீர்திருத்தச் செம்மலான வேதாத்திரி மகரிஷி அவர்கள் சீர்திருத்தம் பற்றி பாடல்கள் வாயிலாகவும் உரைநடை வாயிலாகவும் என்ன கூறியிருக்கிறார்? வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்

    வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-300

    வாழ்க மனித அறிவு                                                                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-300 

                                                01-06-2020 – திங்கள்

    •  இறைவனுக்குத் தெரியாமல் மனிதன் எந்த ஒரு செயலையும் (எண்ணமாக இருந்தாலும் கூட) செய்துவிட முடியாது  என்கிறார் நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  எல்லா அருளாளர்களும் இவ்வாறே கூறியுள்ளனர். அவர்கள் எதனைக்கொண்டு உறுதியாக அவ்வாறு கூறுகின்றனர்? 
    • தனித்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு இவ்வுண்மையினை கூறுகின்றார்?

    ஒரு குறிப்பு: —  உங்கள் சிந்தனையை கருமைய விளக்கத்திற்குள் குவியச் செய்து (Focus your pondering) விடை காண முயலுங்கள். வாழ்க வளமுடன் அன்பர்களே!!

     அன்புடையீர்!  தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப   Click the link below

    https://www.prosperspiritually.com/contact-us/

          வாழ்க அறிவுச் செல்வம்!              வளர்க அறிவுச் செல்வம்!!


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 302(51)

    வாழ்க மனித அறிவு      வளர்க மனித அறிவு

    31-05-2020—ஞாயிறு

     

    • ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லாது, அந்தப் பதார்த்தத்தின் ருசி தெரியாது.
    • ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் ஆசை ஏற்படாது.
    • அதுபோல் தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லாது அதன் மேல் பிரியம் வராது.
    • ஆதலால் தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லட்சியத்தைக் கொண்டிருங்கள்”.

    …அருட்பிரகாச வள்ளலார்.

    பயிற்சி—

    1) வள்ளலார் கூறும் அருட்செய்தி என்ன?
    2) “தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தல்” என்றால் என்ன?
    3) தெய்வத்தை உணரும் பயிற்சிகளை மட்டுமே செய்து வந்தால் போதாதா?
    4) தெய்வத்தின் மேல் பிரியம் வர என்ன செய்ய வேண்டும்?
    5) தெய்வத்தை உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது?
    6) வள்ளலார் கூறும் இந்த அறிவுரையைச் செயல்படுத்த வேதாத்திரியம் எவ்வாறு பேருதவியாக இருக்கும்?  வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்     வளா்க அறிவுச் செல்வம்


    Loading