admin

Author Archives

  • சிந்திக்கக் கவிகள் – 16

    வாழ்க திருவேதாத்திரியம் !             வளர்க திருவேதாத்திரியம்!!

    சிந்திக்க கவிகள் – 16

    (இணையதளத்தில் 1009  வது பதிவு)

                                         நாள்– 27-06-2024

                                                        ...-27-06-2024

     

     

     பயிற்சி:

    1)  எண்ணமே இயற்கையின் சிகரம் என்பதனைக் கண்டுபிடித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் எண்ணத்தைப் பற்றி என்ன கூற விரும்புகிறார்?

    2) எண்ணியபடியே நடக்கும் என்கிறாரல்லவா?  எப்போது?

    3.  எல்லோரும் எண்ணுகிறார்கள். எண்ணுகின்ற உரிமையும் உள்ளது. அப்படியிருக்கும்போது வாழ்க்கையில் எல்லோரும் விரும்பிய/எண்ணிய எல்லா எண்ணங்களும் நிறைவேறுகின்றதா? இல்லையே! ’Man proposes God disposes’ என்கின்ற நிலைதானே பெரும்பாலும் நடக்கின்றதல்லவா?

    4) எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் இல்லாததுதான், எண்ணம் நிறைவேறாமைக்குக் காரணங்களா?  எண்ணியது நடக்க சில நிபந்தனைகளையல்லவா கூறுகின்றார்!  எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அவசியம் என்றல்லவா கூறுகின்றார்?

    5) எண்ணத்தில் உறுதி என்றால் என்ன?

    6. எண்ணத்தில் ஒழுங்கு என்றால் என்ன?

    7. எண்ணிய எண்ணம் நிறைவேறவில்லையானால் அந்த எண்ணத்தில்  உறுதியும், ஒழுங்கும் இல்லாமை காரணமாக  இருக்குமோ?

    7) திருவள்ளுவர் வினைத்திட்பம் எனும் அதிகாரத்தில் எண்ணத்தின் வலிமை பற்றி என்ன கூறுகின்றார்?

     8)  மகாகவி பாரதியார் எண்ணியது நிறைவேற எவ்வாறு இறைவியை வேண்டுகிறார்?

     9) இம்மூவரும் ’எண்ணியது நடக்க  எண்ணத்தில் உறுதி வேண்டும்’ என்கின்ற நிபந்தனையில் ஒருமித்த உறுதியாக இருக்கின்றனரல்லவா?

    10) ஆனால் திருவள்ளுவரின் இருபதாம் நூற்றாண்டின் சீடராகிய வேதாத்திரி மகரிஷி அவர்கள் மற்றொரு நிபந்தனையாகிய  ’ஒழுங்கு’   எண்ணத்தில் வேண்டும்என்கிறாரே! என்ன செய்வது?

     a) ஒழுங்கு என்று கூறுவதன் பொருள் என்ன? எண்ணத்தில் ஒழுக்கம் வேண்டும் என்கின்றாரா? மனிதனின் நடத்தையில் ஒழுக்கம் வேண்டும் என்பது சரி. எண்ணத்தில் ஒழுக்கம் என்றால் என்ன பொருள்?  செயலாகிய நடத்தையில் ஒழுக்கம் அவசியம் என்றால் செயலுக்கு வித்தாகிய எண்ணத்தில் ஒழுங்கு இருந்தால்தானே செயலில் ஒழுக்கம் மிளிரும் என்கின்றாரா?

    b அப்படியானால் ஒழுங்கும் ஒழுக்கமும் ஒன்றா?

    c) எண்ணம் என்பது இயற்கையின் சிகரம் என்று மகரிஷி அவர்கள் கூறுவதால் இயற்கையின் ஆதிநிலையில் ஆற்றலும், அறிவும்(ஒழுங்காற்றலும்) உள்ளதால் இயற்கையின் தன்மாற்றமான மனிதனின் எண்ணத்திலும்  ஒழுங்கு இருக்க வேண்டும் என கூறுகின்றாரா?

    d) எண்ணத்திற்கு பின் செயல்-செயலுக்குப் பின் விளைவு. ஆகவே நல் விளைவு ஏற்படவேண்டுமெனில் எண்ணத்தில் ஒழுங்கு இருக்க வேண்டும். அவ்வொழுங்கே ஒழுக்கத்துடன் கூடிய நல்விளைவுகளை ஏற்படுத்தும் வகையில்  எண்ணம் இருந்தால்தான் அந்த எண்ணம் எண்ணியபடியே நிறைவேறும்  என்கிறாரா?  எண்ணிய எண்ணம் நிறைவேறி இன்புறுவது எப்போது என்று அறிய . . .   Please click here

    11)  உறுதி என்பதன் முழுமையான பொருள் என்ன? இங்கே ஆதிநிலையின்(வெளியின்) திறம் பற்றிய ஏதாவது நியதிகள் மறைந்துள்ளனவா?

    a) உறுதியினை எவ்வாறு பெறுவது?  பயிற்சி செய்து பெறவேண்டுமா? உறுதியில் வெற்றி அடைந்தவர்களின் அனுபவம் உதவியாக இருக்குமா? உறுதி என்பது – will power- எனக்கொள்வதா? ஞா.க.கவி எண்- 10 ஐ நினைவிற்கு கொண்டு வந்து அல்லது இப்போது வாசித்து உறுதிக்கான பொருளை புரிந்துகொள்ளலாமல்லவா?

    12) மகரிஷி அவர்கள் எண்ணிய எண்ணங்களில் இதுவரை நிறைவேறிய எண்ணங்கள் என்னென்ன?

    13) இன்னும் நிறைவேற வேண்டிய மகரிஷி அவர்களின்  எண்ணங்கள் என்னென்ன உள்ளன?  அவ்வெண்ணங்கள்  நிறைவேற வலு சேர்க்க நமது  பங்கிற்காக காத்துக்கொண்டிருக்கும் அவர் எண்ணி நிறைவேறாமல் காத்துக்கொண்டிருக்கும்   எண்ணங்கள் என்னென்ன?  அவ்வெண்ணங்கள் நிறைவேற  நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? என்ன செய்யப்போகிறோம்?  வாழ்க வளமுடன்!

    சிந்திப்போம் அன்பர்களே! வாழ்க வளமுடன்!

    Let us all together stand in Maharishi’s  Noble thoughts firmly,  and be behind Our Revered Guru Vethathri Maharishi  to fulfill His remaining Thoughts.

           

    வாழ்க அறிவுச்செல்வம்!                                                வளர்க அறிவுச்செல்வம்!!

    வாழ்க வையகம்!                                வாழ்க வளமுடன்!!


     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Loading

  • சிந்திக்க கவிகள் – 15

    வாழ்க திருவேதாத்திரியம் !             வளர்க திருவேதாத்திரியம்!!

    சிந்திக்க கவிகள் – 15

    (இணையதளத்தில் 1008  வது பதிவு)

                                                                                                                            நாள்– 23-06-2024

                                                                                                                                   ...-23-06-39

    துறவு

                                யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

                                  அதனின் அதனின் இலன்.                      . . . குறள் எண் 341

     பொருள்: யாவரும் அறிந்ததே. எனினும் குறளின்  பொருளை நினைவு படுத்திக் கொள்வோம். எந்தப் பொருள்களிலிருந்து பற்று இல்லையோ அந்தப்பொருளினால் துன்பம் அவனுக்கு இல்லை.

    பயிற்சி:-

    1. என்ன உரைக்கிறார் பொய்யா மொழிப்புலவர் திருவள்ளுவர் அவர்கள்?
    2. வாழ்விற்கு பொருள்கள் அவசியமாயிற்றே! ’பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை’ என்கின்ற திருவள்ளுவரா பொருள்களிலிருந்து விலகி இருந்தால் அந்தப்பொருளிலிருந்து துன்பம் இல்லை என்பார்!
    3.  ஒவ்வொரு பொருளிலிருந்தா ஒவ்வொரு தனித்தனி துன்பம் முளைக்கும்? இதில் உள்ள சூட்சுமம் என்ன?
    4. துறவு என்ற அதிகாரத்தில் முதல் குறளாக வைத்துள்ளதை கருத்தில் கொள்ள  வேண்டியதல்லவா?
    5. மனவளக்கலை பாகம் -1 என்கின்ற நூலில் கவலை ஒழித்தல் பாடத்தை இக்குறளுடன் ஆரம்பிப்பதிலிருந்து என்ன அறிய வேண்டியுள்ளது?  
    6. மனவளக்கலை பாகம் -1 ல் கவலை ஒழித்தல் பாடத்தின் ஆரம்பத்தில் உள்ள இக்குறளின் முழுமையான பொருளை ஏற்கனவே  அறிந்துகொண்டிருந்தால்   அப்பாடத்தில் வருகின்ற  27 பக்கங்களில் கூறப்பட்டுள்ள கவலை ஒழிக்கும் யுக்திகள் படிப்பதற்கு முன்னரே  அறிவிற்கு வெளிச்சமாகிவிடுமன்றோ? 
    7. வாழ்வை  இருவகை வாழ்வாக மாற்றிக்கொண்டு (உலகியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை) சமுதாயத்தில் மானுடம் அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப/சௌகரியத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து வாழ்கின்ற எந்த பிரிவினருக்கு திருவள்ளுவரின் இந்த அறிவுரை?
    8. துறவு என்பதன் சரியான பொருள் என்ன? பற்றற்ற உறவு என்கின்றாரே (detached attachment ) மகரிஷி அவர்கள். அதுவா திருவள்ளுவர் கூறும் இந்த துறவு?
    9. துறவு பற்றி திருவள்ளுவரின் இரண்டாம் நூற்றாண்டின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?(ஞானக்களஞ்சியம் கவி எண் – 1849)
    10. பொருளைத் துய்க்கும்போதோ அல்லது பொருள் மீது பற்றுகொண்டிருக்கும்போதோ ஏன் துன்பம் வருகின்றது
    11. புலன்கள் வழி்யாக இன்பம் துய்க்கும் போது கவனிக்க வேண்டிய சாம்யம் ஏதேனும் உள்ளதா? என்ன  மகரிஷி அவர்கள் கூறுகிறார்? 
    12.  மகரிஷி அவாகள் கூறும் இன்ப-துன்ப சாம்யத்திற்கும் திருவள்ளுவர் கூறுகின்ற இக்குறளின் பொருளுக்கும் தொடர்புள்ளதா?
    13. ஞானியின் அடையாளத்திற்கும் இன்ப-துன்ப சாம்யத்திற்கும் தொடர்பு உள்ளதா? சிந்திப்போம் அன்பர்களே!. 
    14. “LESS LUGGAGE – MORE COMFORT” என்கின்ற ரயில்வே துறையின் ஸ்லோகம் நினைவிற்கு வருகின்றதா?
    15.  வேதாத்திரிய ஆன்மீகத்திற்கு அச்சப்படத் தேவையில்லை அன்பர்களே! வாழ்க வளமுடன்! எல்லோருமே விரும்பும் உலகியல் மற்றும் மெய்ஞ்ஞானிகள் மட்டுமே விரும்புகின்ற, வாழ்கின்ற ஆன்மீக வாழ்வும் இணைந்த, மனிதன் மனிதனாக, மாமனிதனாக  வாழும்  வாழ்க்கை வாழ்வோம் அன்பர்களே! கிடைத்தற்கரிய குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களை பின்பற்றி வாழ்வோம். வாழ்க வளமுடன்! 

    வாழ்க வையகம்!                                வாழ்க வளமுடன்!!

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 337

    வாழ்க திருவேதாத்திரியம் !             வளர்க திருவேதாத்திரியம்!!

    சிந்திக்க வினாக்கள்337

    (1007 வது பதிவு)

                                                                                                                         நாள்– 21-06-2024

                                                                                                                         ...-21-06-39

     பிரதான வினா(Main Question)

     இயற்கையின் நிகழ்வை ‘பரிணாமம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுவதை பின்னாளில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஏன் ‘தன்மாற்றம்’ என அழைக்கலானார்?

     துணை வினாக்கள் (Sub questions):

     1. பரிணாமம், தன்மாற்றம் வெவ்வேறு பொருளைக் குறிக்கின்றதா?  அல்லது ஒரே பொருளைக் குறிக்கின்றதா?

          2. பரிணாமம் என்பது என்ன?

          3.தன்மாற்றம் என்பது என்ன?

         4.‘தன்மாற்றம்’  எனும்போது ‘ஒன்றே பலவாகியது’ எனும் அத்வைத தத்துவத்தை நேரிடையாகப் பிரதிபலிப்பதாக உள்ளது காரணமா? 

        5.‘ஒன்றே பலவாகியது’ என்கின்ற பொருளுக்கு தன்மாற்றம் என்பது பொருத்தமாக உள்ளதா?

        6.‘ஒன்றே பலவாகியது’ என்ற பொருளுக்கு  பரிணாமம் என்ற  சொல்லிற்கான(ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாகுதல்) பொருள் விலகியுள்ளதா/பொருத்தமில்லையா?

      7. பிரதான வினாவிலிருந்து அறியப்படவேண்டியது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                      வளர்க அறிவுச் செல்வம்!!

    வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!