இன்றைய விருந்து

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 8/?

     வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    FEAST FOR CONSCIOUSNESS – FFC –  192
    அறிவிற்கு விருந்து – அ.வி. – 192

    25-05-2016—புதன்

    பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவை விட மிகவும் வலுப்பெற்றவைகள்
     

     

    இன்று மனம் இயங்கும் பத்துப்படிகளை ஆராய்வோம். மனதின் பத்து படிகளாவன—

    10 stages of mind functioning

    Thanks : www.facebook.com/vethathirimaharishis.quotes             (இப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாக இருக்கும்)

    Thanks : www.facebook.com/vethathirimaharishis.quotes
    (இப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாக இருக்கும்)

    மனதிற்கான இத்தகையக் கண்டுபிடிப்புகள், இதுவரை வெளிவராத நிலையில் மகரிஷி அவர்கள் மனதை பற்றி வெகு நாள் ஆராய்ச்சி செய்து தந்துள்ளது இயற்கையின்/இறையின் அருட்கொடை. சென்னையில், ஆங்கிலத்தில் ஆசிரியர் பயிற்சி(Master course in English) நடத்துகின்றபோது, அருளுரையின் துவக்கத்தில் அவர் திருவாய் உதிர்த்த முத்தினை இப்போது நினைவிற்கு கொண்டு வந்து மகிழ்வோம், “I am not telling out of ego. Nobody else except myself has given explanation about mind”, என்பதே அம்முத்தாகும்.

    உண்மைதானே! தன்முனைப்பின் அறிவியலைக் கூறி, சுத்த அத்வைதத்திற்கு மேலும் சிறப்பூட்டிய மனஇயல் வல்லுனருக்கு தன்முனைப்பு இருக்க வாய்ப்பேது? ‘தன்முனைப்பு கரைந்துபோம், காணும் தெய்வம்’ என்றும் கூறியிருக்கிறார் மகரிஷி அவர்கள். ‘I am not telling out of ego – தன்முனைப்பின்றி நான் கூறுகிறேன்’ என்று மகரிஷி அவர்கள் கூறியிருப்பது அப்போதும் சரி, இப்போதும் சரி, அதே மகிழ்வைக் கொடுக்கின்றது. நீங்களும் அந்த மகிழ்வை அனுபவிக்கலாமே! குருவின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டும். குருவின் உயர்வை புரிந்து கொண்டு ரசித்து, மதிக்க மதிக்க மனிதனின் தரமாற்றத்திற்கு இயல்பூக்க நியதியும் உறுதுணையாக இருக்கும். ரசித்தலும், மதித்தலும் இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றத்தின்(corollary) நிரூபணமாக இருக்கும்.
    மனதைப் பற்றிய, தெளிந்த, தெளிவு இருந்ததால்தான், மகரிஷி அவர்கள் மனதைப் பற்றி ஆங்கிலத்திலும், தமிழிலும் நூல்கள் இயற்ற முடிந்தது. மூன்று மறைந்து இருந்த மறைபொருட்களான இறை, உயிர், மனம் ஆகியவற்றை எளிமையாக, அறிவுப்பூர்வமாக வெளிப்படுத்தி வெட்டவெளிச்சமாக்கிவிட்டார் மகரிஷி அவர்கள்.

    மேலே உள்ள புகைப்படத்தில் மகரிஷி அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்குள்ள சீடர்களுக்கு வகுப்பு எடுப்பதை காண்பதற்கு உள்ளம் மகிழ்ச்சி அடைகின்றது. மனதை பற்றிய பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றார் மகரிஷி அவர்கள். மனதின் பத்துப்படிகளை கரும்பலகையில் எழுதியிருக்கிறார்கள். 1980 களில் மகரிஷி அவர்களே பாடம் நடத்துவார்களாம். அப்போதெல்லாம் ஐந்து நாள் சிறப்புப் பயிற்சியாக நடத்துவாராம். பொதுவாக ஆன்மீக நிலையங்களில் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கரும்பலகை, மற்றும் chart ஆகியவற்றை வைத்து கல்லூரியிலே பாடம் நடத்துவதுபோல் மனவளக்கலையில் கருத்தியல் பாடங்கள் விரிவாக நடத்தப்படுகின்றது. செய்முறை பயிற்சிகளுக்குக் கூட கருத்தியல் விளங்கங்கள் உள்ளன. ஏன், எதற்காக செய்கிறோம் என்கின்ற விளக்கத்தோடுதான் ஒவ்வொரு பயிற்சியாளரும் செய்முறைப் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

    மகரிஷி அவர்கள் பிரபஞ்ச பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள்:

    மகரிஷி அவர்கள் மூன்றாம் வகுப்பு வரைதான் பள்ளிப்படிப்பு படித்திருக்கிறார். பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, பிறகு திண்ணைப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். அந்த திண்ணைப்பள்ளிப்படிப்பு, பள்ளிப்படிப்பின் எட்டாம் வகுப்பு வரை சமம் என்று கூறுகிறார். ஆனால் அவரது மறைபொருள் கண்டுபிடிப்புகள், வாழ்வியல் உண்மைகள், சமுதாய அக்கறை சார்ந்த நலத்திட்டங்கள். உரைநடைகள், கவிகள் ஆகியவற்றை பாடங்களாக்கி பள்ளியிலிருந்து கல்லூரிகள் வரை முதுகலைப்பட்டப்படிப்புகளாக நடத்தப்படுகின்றன. மேலும் அவரது சிந்தனைகள் முனைவர் பட்டப்படிப்புக்கும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

    மகரிஷி அவர்கள் பிரபஞ்ச பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள். அமெரிக்காவில், ஒரு நிகழ்ச்சியில் அன்பர்களால் கேட்கப்பட்ட எல்லா வினாக்களுக்கும் பதில்கள் அளித்த மகரிஷி அவர்களின் அருமையையும் பெருமையும் அறிந்து அதிசயத்தில் ஆழ்ந்துவிட்ட ஒரு அன்பர் மகரிஷி அவர்களை ‘In which University did you study Swamiji?| என்று கேட்டதற்கு ” I studied in the city of Universe) என்று பதிலளித்திருக்கிறார். உண்மைதானே அவர் கூறியது?! ‘அவனே அதுவானால் எல்லா உண்மைகளையும் அது சொல்லும்’ என்று கூறியுள்ளவராயிற்றே மகரிஷி அவர்கள். ஆகவே இத்தகைய மாமனிதரை நாம் குருவாக பெற்றது நம் ஆன்மா செய்த பூர்வபுண்ணியம்தான்.

    மனம் இயங்கும், இந்த பத்துப் படிகளில் முதல் ஏழு படிகள், அதாவது உணர்ச்சி முதல் அனுபவம் வரையில் நடைபெறுவற்கு உடற்கருவிகள் தேவைப்படுகின்றன. இந்த ஏழும், செயல்களால் நடைபெறுவதால் செயல் பதிவுகள் எனப்படுகின்றன. ஆராய்ச்சி, தெளிவு, முடிவு ஆகிய மற்ற மூன்றாலும் விளக்கங்கள் கிடைப்பதால் விளக்கப்பதிவுகள் எனப்படுகின்றது. எனவே பத்துப் படிகளில் முதல் ஏழு படிகள் பழக்கப்பதிவுகளாகவும், கடைசி மூன்று படிகள் விளக்கப்பதிவுகளாகவும் எடுத்துக் கொள்கிறோம்.

    இன்றைய மனிதகுலம் எங்கிருந்து வந்தது? ஆதி மனிதனிலிருந்து தொடங்கி பல லட்சம் தலைமுறைகளாகி இன்று வாழ்ந்து கொண்டிருப்பதுதான் இன்றைய தலைமுறை. ஆகவே ஆதிமனிதனிலிருந்து கருத்தொடர் வழியாக வந்த பழக்கப்பதிவுகள் மிகவும் வலுப்பெற்றவைகளாக உள்ளன. ஆதிமனிதனுக்கு சிந்தனை கிடையாது. சிந்தனையில்லாமல் பல தலைமுறைகள் மனிதகுலம் வாழ்ந்திருக்கின்றது. பிறகுதான் மனிதன் சிந்தனை செய்ய ஆரம்பித்துள்ளான். ஆகவே சிந்தனை ஆற்றல் பெற்ற பிறகு, வந்த தலைமுறைகளைக் கணக்கில் கொண்டு சிந்தனையில்லாமல் மனிதன் வாழ்ந்த தலைமுறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மிகவும் குறைவான எண்ணிக்கையாகவே இருக்கும்.

    ஆகவே இதிலிருந்து அறிய வேண்டியது என்னவெனில் ஒவ்வொருவரிடமும் இயற்கையாகவே விளக்கப்பதிவைவிட பழக்கப்பதிவுகள் வலுப்பெற்றுள்ளதனை அறிய முடிகின்றது.

    மேலும் ஒரு தனிமனிதவாழ்க்கையை ஆராய்ச்சி செய்யும்போது, அவன் குழந்தையாகப் பிறந்தது முதல் விளக்கப் பதிவுகளை வெளியே கொண்டு வர வாய்ப்பில்லை. குழந்தையிடம், புலன்கள் மூலமும், உடலுறுப்புகள் மூலமும் தான் பழக்கப்பதிவுகள் செயல்படுகின்றன. அவனது சஞ்சித கா்மம் முடிந்து பிராரப்தம் ஆரம்பிக்கின்ற வயதான 12 லிருந்துதான் சிறிது சிறிதாக விளக்கப் பதிவுகள் செயல்பட ஆரம்பிக்கின்றன.

    இந்த இரண்டு பதிவுகளுமே செயலாவது என்பது சீவகாந்த ஆற்றலால்தான்.
    ஆகவே, புலன்கள் அல்லது உடல் உறுப்புகள் இயங்கும்போது, அவற்றிலுள்ள செல்கள்(cells) வழியாக சீவகாந்த ஆற்றல் ஓடி செல்களுடைய இணைப்பை சீரமைக்கின்றது. இவ்வாறு, ஒவ்வொரு அசைவிலும்(movement), செயலிலும்(action) சீவகாந்தம் ஓடி ஒரு வழித்தடம் அமைகின்றது. உடலில் சீவகாந்தம் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றது. அவ்வாறாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும் சீவகாந்தம், எவ்வாறு மழைநீர் முன்னர் ஓடிய பாதையிலேயே ஓடுகின்றதோ, அதுபோல் முன்னர் ஓடிய அதே பாதையிலேயே ஓடும். அவ்வாறு ஓடுகின்றபோது, அதே செயலைச் செய்ய மனதுக்கு செயலார்வம் ஏற்படுகின்றது. செயலில் ஆர்வம் ஏற்படுவதால், பழைய செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து வருகிறான். இதுதான் பழக்கப்பதிவு.
    மீண்டும் மீண்டும் அச்செயல் எந்த அளவிற்கு ஆர்வமிகுதியோடு செய்யப்பட்டு வருகின்றதோ, அந்த அளவிற்கு, அச்செயல்பதிவின் அழுத்தம் மிகவும் வலிமையாகிவிடும். அச்செயல் நற்செயலாக இருந்தால் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அச்செயல் புலன்மயக்கத்தால் தூண்டப்பட்டதாக இருந்தால் அது தீயசெயலாகத்தான் இருக்கும். அவ்வாறிருக்கும் போது, விளக்கம் கிடைத்த பிறகு அத்தீயசெயலிருந்து விடுபட வேண்டும் என அறிவு விரும்பினாலும் மனதுடன் போராட வேண்டியிருக்கும்.
    மனதிற்கு மீண்டும், மீண்டும் சமாதானம் சொல்லித்தான்–தீவிர அகத்தாய்வு பயிற்சியால்தான் மெல்ல மெல்ல அத்தீயபழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும். அதுவரை மனதுடன் போராடத்தான் வேண்டியிருக்கும். தீயபழக்கத்திலிருந்து இவ்வாறாக வெளிவருவதில் 51 சதவிகிதம் வெற்றி பெற்றுவிட்டால்(மனதளவில் தெரிகின்ற அளவு) பிறகு 100 சதவிகிதம் வெற்றி என்பது நிச்சயம். தீயபழக்கத்திலிருந்து நற்பழக்கத்திற்கு மாற்றம் பெற்று வரும்போது சறுக்காமல் இருக்க மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    சறுக்கல்கள் ஒரு முறை அல்லது இரண்டு முறை என்றாலும் பரவாயில்லை. அதற்கு மேலும், மூன்று அல்லது அதற்கு மேல் சறுக்கி விழுவது நடந்துவிட்டால் பிறகு நற்பழக்கத்திற்கு மாற்றம் என்பது மிக மிக கடினமாகவே இருக்கும். இது எதிர்மறையாகக் கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது, நெருப்பு என்பதால் நாக்கு சுட்டுவிடாது. எனவே நற்பழக்கத்திற்கான மனப்போராட்டத்தில் முனைப்பாக ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு கடமையோடும் கருணையோடும் கூறும் வாழ்வியல் உண்மையாகும் இது. ஜாண் ஏறி முழம் சறுக்கினால் முன்னேற்றமே கிடையாது என்கிற எச்சரிக்கையுணர்வு எப்பொழுதும் இருக்கவேண்டும்.
    பழக்கப்பதிவு மிகவும் வலிமையாகி விட்டால் விளக்க வழியே வாழவேண்டும் என மனம் விரும்பினாலும், அதனால் முடிவதில்லை. மனம் போராடுகின்றது. தளர்வுறுகின்றது. விளக்கவழியே செல்வதற்கோ, வாழ்வதற்கோ, உடல்செல்களும், மனமும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பதில்லை. முடிவில் பழக்க வழியே சென்று செயலாற்றுகிறான் மனிதன். இந்த பழக்கப்பதிவு, விளக்கப்பதிவை வெல்வதுதான் போராட்டம் என்கின்றனர் அறிஞர்கள். அதனால் தான் ஆன்மீக பயிற்சியினை தொடர முடியாமல் பலா் கைவிட்டு விடுகின்றனா்.
    மனிதனால், விளக்கப்பதிவை விட்டுவிடவும் முடிவதில்லை. அதுவும் குறிப்பாக ஆன்மீக பயிற்சியில் ஆர்வம் கொண்டு, விளக்கங்கள் பெற்று வரும்போது. அவ்விளக்கங்களை விட்டு விடுவது என்பது முடியாது. ஏன்?
    காரணம், அறிவு தன்னை அறிவதற்காகவே மனித உடல் எடுத்து வந்துள்ளது. நல்ல கருமையப்பதிவுகளின் விளைவாக இந்த பிறவியில் தன்னை தூய்மை செய்துகொள்வதற்காகவே ஆன்மீக பயிற்சி செய்வதற்கு வந்துள்ளது.

     ஆகவே தூயவாழ்வு வாழ்வதற்கான விளக்கங்களை விட்டு விடவும் முடிவதில்லை. இருப்பினும் பழைய–விளக்கமில்லாப் பழக்கப்பதிவுகளே பெரும்பாலோர்களிடம் வெற்றி பெறுகின்றன. சிலரே போராட்டத்தில் வெற்றி பெறுகின்றனர். பழைய விளக்கமிலாப்–பழக்கப் பதிவுகளை தோல்வி அடையச்செய்து விளக்கப்பதிவில் வெற்றியடையதலே ஞானம் பெறுதலாகும்.
    விளக்க வழியே வாழ்வதற்கான பயிற்சியில், ஆரம்பத்தில் ஏற்படும் சிரமங்களைத்தான் போராட்டம் என்கின்றனர் அறிஞர்கள். போராட்டம் என்பதில் வெற்றியும், தோல்வியும் உண்டு என்பதால், விளக்கப்பதிவு தோல்வி அடைகின்றது. பழக்கப்பதிவு வெற்றி கொள்கின்றது.
    மூளையிலுள்ள செல்களில், விளக்கப்பதிவுகள் ஏற்பட்டாலும் அது தொடர்ந்து செயல்படுவதற்கும் நிலைக்கவும் மன அலை நுண்ணியதாக அமைய வேண்டும். அது எப்போது, எவ்வாறு சாத்தியமாகும்?
    விளக்கப்பதிவுகளுக்கு வலுவேற்ற வேண்டும். அதுவரை உடல்செல்களின் இயக்கத்திற்கு மூளையில் உள்ள செல்களின் ஆற்றல் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் உடல் மற்றும் புலன்களிலுள்ள செல்களின் இயக்கங்களை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறாக மாற்றியமைக்கும் பயிற்சிதான் தவம் எனப்படுகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள். தவத்தின் வழியாக, இறை உணர்வும், அறநெறியும் வாழ்வில் செயலாகும்போது விளக்கத்தின் வழியே பழக்கத்தைக் கொண்டு வந்து உய்வு பெறலாம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    திளைக்கும் விளைகடல் தீர்வுறு தோணி
    இளைப்பினை நீக்க இருவழி உண்டு
    கிளைக்கும் தனக்கும் அக்கேடில் முதல்வன்
    விளைக்கும் தவம், அறம் மேற்றுணையாமே
                           என்பது திருமூலர் வாக்கு.

         எனவே இதனை நினைவில் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, தவம், அகத்தாய்வு, குணநலப்பேறு ஆகியவற்றால் தவமும், அறமும் சித்தியாகும் என்கிறார் மகரிஷி அவா்கள். விழிப்பும், சிந்தனையும், முயற்சியும், திட்டமும், இவற்றிற்கேற்ப செயலும் பின்பற்றி ‘பழக்கத்தை வெல்வோம். விளக்கத்தில் வாழ்வோம்’ என்று 21-12-1988 அன்று மௌனத்தில் மகரிஷி அவர்கள் கூறியதை, இப்போது நமக்குள் இருந்து சொல்வதுபோல் ஏற்றுக் கொண்டு ‘விளங்கிய வாழ்வில் செயல்படுவோம்.’ என உறுதி எடுத்துக் கொள்வோம்.

    அடுத்த விருந்தில், ஆன்மா எடுத்துள்ள பல்லாயிரம் பிறவிகளில், குறைந்தபட்சம், தன்னையும் சேர்த்து முந்தைய ஏழு பிறவிகளில், மனிதன் எத்தனை ஆயிரம் ஆன்மாக்களுடன் தொடர்பு கொண்டுள்ளான் என்பதனை அட்டவணையின் வாயிலாக அறிய இருக்கிறோம். அதனை அறிவதன் மூலம் அறிவின் முழுமைக்காக, முழு-ஒழுக்க வாழ்க்கை வாழ்வதில் ஏற்படும் போராட்டத்திற்குக் காரணமான பழக்கப்பதிவின் அழுத்தத்தை உணர்ந்து கொண்டு அதனை வெற்றி கொள்வதற்கு மகரிஷி அவர்கள் கூறும் வழியில் சத்சங்கம் உள்பட பயிற்சிகளை செய்து வெற்றி பெறுவோம். அதற்கு குருவருளும் திருவருளும் துணை நிற்குமாக.

    வாழ்க வளமுடன்.   தொடரும் 29-05-2016.

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? – 7/?

     வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு

    FFC_185-திருவள்ளுவர் படம்-Untitled

                “பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்;தெரிந்துஓம்பித்

    தேரினும் அஃதே துணை ” குறள் எண். 132.

    FEAST FOR CONSCIOUSNESS – FFC –  191
    அறிவிற்கு விருந்து – அ.வி. – 191

     22-05-2016—ஞாயிறு

    வருந்தியும் ஒழுக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

         தற்போது சத்சங்கத்தில் ஒழுக்கம் பற்றி சிந்தித்து வருவதால், திருவள்ளுவர், ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் அருளியுள்ள பத்துக் குறட்பாக்களில் ஒன்றினை சத்சங்கத்தில் நினைவு கூர்ந்து வருகிறோம். அறிஞர் திருவள்ளுவர். இதுவரை ஒழுக்கம் உடமை அதிகாரத்தில் 131, 132, 136, 137,138 ஆகிய ஐந்து குறட்பாக்களை நினைவு படுத்திக் கொண்டோம். இன்று குறள் எண் 132-ஐ மீண்டும் எடுத்திக் கொண்டு, விரிவாக அதன் உட்பொருளை அறிவோம்.

    “பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்;தெரிந்துஓம்பித்
    தேரினும் அஃதே துணை ” குறள் எண். 132.

    பொருள்: வருந்தியும் ஒழுக்கத்தைப் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும்; அறங்கள் பலவற்றையும்(32 அறங்கள்) ஆராய்ந்து, இஃது இல்லாமல் முடியுமாவென்று கழித்துக் கழித்துப் பார்த்தாலும் ஒழுக்கமானது இன்றியமையாத துணையாகவே தெரிகின்றது.

    ஒழுக்கம் பற்றிய கண்டுபிடிப்பு சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒழுக்கம், ‘ஒ, ழு, க், க, ம்’ என்கின்ற ஐந்தெழுத்தைக் கொண்டதாகவே மட்டும் உள்ளது. இந்த ஒழுக்கத்திலிருந்து சிறிதளவில் கூடத் (‘நூல் பிடித்துப் பார்க்க வேண்டுமா?) தவறிவிடக்கூடாதா என ஐயம் எழலாம்? நடைமுறையில் சாத்தியமா என்றும் மேலும் ஒரு ஐயமும் இருக்கலாம்! ஒழுக்கம் அவ்வளவு அவசியமா? இந்த ‘ஒழுக்கம்’ என்பது என்பது என்ன?
        ஒழுக்கம் என்பது வேறு ஒன்று அல்ல; மனிதனுக்கு அது புதிதும் அல்ல. ஒழுங்காற்றலாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற இயற்கையின்/இறையின் அம்சமாகவே மனிதன் இருப்பதால், இயற்கையின்/இறையின் நீதியை மதித்து நடத்தலே ஒழுக்கம் ஆகும்.

         இயற்கையின்/இறையின் தன்மாற்ற பூங்காவிலே கடைசியாக மலர்ந்த ‘பூ’ தான் மனிதன். இனிமேல் வேறு எந்தப் பூவும் மலர்வதற்கில்லை. எனவே எந்தப்பொருளிலிருந்து வந்தானோ மனிதன் அந்தப் பொருளின் தன்மையை வெளிப்படுத்துவதுதானே சரியாக இருக்கும்! இல்லை எனில் அது குறைதானே!

         ஒழுங்காற்றலாய் திகழ்கின்ற .இயற்கையின்/இறையின் கடைசி அம்சமான மனிதனிடம் ஒழுக்கம் வெளிப்படவில்லை எனில் இயற்கையின்/இறையின் தன்மாற்ற சுழற்சி முடிவுபெறாமல் தேக்கம்தான் ஏற்படும். அந்த தேக்கமேதான் இன்று உலகெங்கிலும் உள்ள மனிதகுலத்தின் அமைதியற்ற நிலை.

    செயலுக்கேற்ற விளைவு உண்டு என்பது இயற்கை/இறை நீதி. எனவே சிறிதளவு ஒழுக்கம் தவறிவிட்டால் கூட அதற்கேற்ற விளைவு துன்பமாக வரத்தானே செய்யும்! இந்த சிறிதளவு துன்பத்தையும் ஏற்கத் தயாரா மனிதன்? சில நேரங்களில் இப்போது செய்யும் சிறு தவறுகூட பெரிய விளைவுகளைத் தந்துவிடுகின்றது. ஏற்கனவே மனிதனுக்குத் தெரியாமல், அறியாமையிலோ, உணர்ச்சிவசத்தாலோ, அலட்சியத்தாலோ பல்வேறு சமயங்களில் இந்தப் பிறவியிலோ முற்பிறவிகளிலோ செய்துள்ள சிறு சிறு தவறுகளுக்கு, ஒட்டுமொத்தமாக விளைவைக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கின்ற தீயவினைப்பதிவுகள், இப்போது செய்யும் சிறு தவற்றால் அப்பதிவு தூண்டப்பட்டு(trigger) வாழ்க்கையையே பாதிக்கக் கூடிய பெரிய விளைவுகளை கூட ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் வாழ்க்கை முழுவதுமே பாதிப்பு நீடிப்பதாகக் கூட இருக்கலாம். எனவே  வாழ்க்கைப் பயணம் எனும் தொடர்வண்டி(Rail-–Life train) தடத்தைவிட்டு புரண்டு விடாமல் சீராக ஓடுவதற்கு ஒழுக்கம் எனும் தண்டவாளம்(rail track) எப்போதும் அவசியமே.

    வருந்தியும் ஒழுக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கின்றது குறளின் பொருள். மேலும் அறங்கள் பலவற்றுள்ளும் இருமைக்குந் துணையாவது ஒழுக்கமே என்பதால், அவ்வொழுக்கத்தை விருப்பம் கொண்டு வருந்தியுங் காக்க வேண்டும் என்கின்றது குறளின் பொருள்.
    ‘அறங்கள் பலவற்றுள்’ எனப்படுகின்றது? ‘அறங்கள் பலவற்றுள்’ என்றால் என்னென்ன அவை என்கின்ற அவா எழுகின்றது. அறம் மனித வாழ்க்கைக்கு அவசியமாக உள்ளது என்றாலும், அறம் இதுவரை என்ன என்பதனை திட்டவட்டமாக சுருக்கமாக மனதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் எளிமையாக வரையறுக்கப்படவில்லை என்பதால் ‘அறங்கள் பலவற்றுள்’ எனப்படுகின்றது.

    ஆனால் ஆதிமனிதனிலிருந்து வளர்ந்து வருகின்ற மனிதஇனப் பரிணாமத்தில், முதன்முதலில் அறம் தோன்றிய அந்த நாளில், தான் அந்நிகழ்ச்சியினை நேரில் கண்டதுபோல் மனக்கண்களால் கண்டு அதனை வெளிப்படுத்த ஒரு கவியையே (ஞா.க. பாடல் எண். 494) இயற்றியுள்ளார் அருட்பாகவிஞரும் நமது அருட்குருவான வேதாத்திரி மகரிஷி அவர்கள். அதோடு அறத்தைப்பற்றித் தெரிவிப்பதனை நிறுத்திவிடவில்லை. மேலும் உரைநடையில் தொடர்கிறார். அறம் என்பதனை உரைநடையில் இறை உணர்வுடன் இணைத்து வரையறுக்கிறார். “அறத்தின் மாண்பு உணர்ந்து அறம் ஊக்கி அறம் காக்கும் தகைமையே இறை உணர்வு” என்கிறார். அறம் ஒழுகுதல் என்பது மனிதனுக்கு அவசியமாகின்றது. பிறஉயிர் படும் இன்பதுன்ப உணர்வுகளை தன்னுணர்வுபோல் உணர்ந்து இரக்கத்தோடு உதவி செய்தலே அறம் என்கிறார் வேதாத்திரிய அறவியல் ஏற்படுத்திய மகரிஷி அவர்கள்.

    அவ்வாறிருக்கும் போது அவ் இரக்கச்செயலில் என்னென்ன அடங்கியுள்ளன?
    அன்பும் கருணையும் அடங்கியுள்ளது.
    அன்பும், கருணையும் என்பவை எதனைச்சார்ந்தது? ஒழுக்கத்தைச் சார்ந்தது.
    மேலும் உதவி செய்வது எதனைச் சார்ந்தது? ஈகையை சார்ந்தது.
    அவ்வாறு ஈகை புரிவது எதனைச் சார்ந்தது? கடமையைச் சார்ந்தது.

    மனிதஇன அறம்தோன்றிய முதல் நாளைக் கண்டுபிடித்து, பலலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த நிகழ்ச்சியினை. நம்மையும் மனக்கண்களால் பார்க்கச் செய்த அறவியலாளர் எம்பெருமான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறத்தை வரையறுத்தபோது, ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று செம்மைகளையும் இணைத்து அறம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    ஒழுக்கமே கடமையாகவும், ஈகையாகவும் மலர்கின்றதைக் கவனிக்க வேண்டும். ஒழுக்கமில்லையானால் கடமையும் மலராது. ஈகையும் மலராது.

    மனிதகுலத்தில் அறம் தழைக்க வேண்டும். அதற்கு இறைஉணர்வு அவசியம். இறை உணர்வு என்பது ஆறாம் அறிவின் பேறு. எனவே இறை உணர்வு பேற்றினை விளக்குவதற்காக இறைஉணர்வும் அறநெறியும் என்கின்ற நூலை இயற்றியுள்ளார். இப்போது இன்றைய தலைப்பிற்குள் செல்வோம்.

    ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம். பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம் இருப்பதில் உள்ள அறிவியல் உண்மையை அறிந்து கொள்வதற்கு தொடர்ந்து சிந்திப்போம்.
    மகரிஷி அவர்கள் நவம்பா்-டிசம்பர் மாதங்களில் ஒரு மாதகாலம் அறிவுத்திருக்கோயில் ஆழியாரில் மௌன விரதம் அனுஷ்டிப்பது வழக்கம். அப்போது அவரது சீடர்களும் அதில் பங்கு கொள்ளலாம். மகரிஷி அவர்கள், மௌன நோன்பு ஏற்றுக்கொண்ட சீடர்களின் நன்மையைக் கருதி, தினந்தோறும் சிந்தனை விருந்திற்காக ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, ஒரு பக்க அளவிலே, சிந்திக்க வேண்டியதை எழுதி, அதனை சீடர்களிடம் வழங்குவது வழக்கம். அவ்வாறாக தந்த ஞானமுத்துக்களில் ஒன்றுதான் 21-12-1988 அன்று (21-12-03 –உ.ச.ஆ) அருளிய “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமேன்?” என்பது.
    இதனைக் கூறுவதற்கானக் காரணம் இந்த தலைப்பில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், மற்றும் மௌன காலத்தில் சிந்திப்பதற்கு மகரிஷி அவர்கள் அத்தகையதொரு தலைப்பை சிந்திக்க அருளியதுமாகும். ஆன்மீக சாதனையாளர்களுக்கு ஏற்படுகின்ற சங்கடத்தைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். அதே நேரத்தில், சங்கடமாக வரும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான உறுதியையும் அளிக்கிறார் மகரிஷி அவர்கள். அவ்வுறுதி யாதெனில்—

    வெற்றி பெறுவதற்கான மூன்று உறுதிகள்

    “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது”         . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    “பல ஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவி   காலத்திலே மாற்றலாம், நலமடைந்து மனிதனாகி தெய்வமாக  உயரலாம்.”                                                             .  . .   வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    “எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும், தப்பாது குருஉயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்”                          . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    என்பதேயாகும்.

    “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டம் ஏன்” என்கின்ற ஆய்விற்கு, மனம் போராட்டம் செய்வதால் மனதை பற்றி ஏற்கனவே அறிந்து வைத்துள்ள உண்மையினை நினைவு படுத்திக் கொள்வோம். மனம் என்பது என்ன? மனம் என்பதனை உயிரின் படர்க்கை நிலை-–mind is the extended activity of life force என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே மனதை விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால். உயிரைப்பற்றியும், அது படர்க்கை(extended activity) எய்துதல் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

    மனம் என்பது என்ன? படர்க்கைநிலை என்றால் என்ன?

    மனதை அறிந்து கொள்ள வேண்டுமெனில் உயிரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உயிருடன் மனம் தொடர்புடையது. உயிர் இருக்கும் வரைதான் மனம் இயங்கும். உயிர் என்பது என்ன? உயிர் என்பது, உடலில், நுண்ணிய துகள்களான விண்கள் சுழன்று ஓடிக் கொண்டிருப்பதேயாகும். சுழன்று கொண்டிருக்கின்ற துகளின் மையத்தில் சுழலா நிலை உள்ளது. அந்த சுழலாநிலையாகிய இருப்பு நிலைதான் அறிவு. அதாவது உயிர்த்துகளின் மையத்தில் இருப்பது அறிவு. உயிர்த்துகள்கள் சுழல்வதால் விரிவலை உருவாகின்றது. அந்த விரிவலைதான் சீவகாந்தம் எனப்படுகின்றது. சீவனிலிருந்து காந்தம் உருவாவதால் அது சீவகாந்தம் எனப்படுகின்றது.

        ஆகவே உயிர்த்துகளின் மையத்தில் இருக்கின்ற அறிவு. உயிர்த்துகளிலிருந்து எழும், விரிகின்ற அலையாகிய சீவகாந்தத்தின் வழியாக, (அவரைச் செடியில், தண்டிலிருந்து கொடி படர்வதுபோல்) படர்க்கைநிலை எய்தி உடலுக்குள்ளாகவும் புலன்களுக்கு வெளியேயும் விரிந்து இயங்கும் நிலையான படர்க்கைநிலையை மனம் என்கிறார் மகரிஷி அவா்கள்.
    இப்படியான மனம் பத்து படிநிலைகளில் இயங்குகின்றது. அவற்றினை அடுத்த அறிவிற்கு விருந்தில்(25-05-2016-புதன்) அறிவோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவச் செல்வம்.

     

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 6/?

    வாழ்க மனித அறிவு                                                                 வளர்க மனித அறிவு
    FEAST FOR CONSCIOUSNESS – FFC – 190
    அறிவிற்கு விருந்து – அ.வி. –   190
                                                               18-05-2016—புதன்
     ffc-190-titlekural_137 

     பொருள்:  ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத்தகாத பெரும் பழியை அடைவர்.

             ‘மேம்பாடு’ மற்றும் ‘பெரும் பழி’ என்பது பற்றி,

             அறிஞர் திருவள்ளுவர் நாமெல்லாம் உய்ய வேண்டும் என்று விரும்பி,

             மீண்டும் பூவுலகிற்கு வந்து, நேரிடையாகவே நமக்கெல்லாம், ‘ஒழுக்கம்’ என்கின்ற பொருள் பற்றி கூற விரும்பினால்,

             எவ்வளவுத் தெளிவாகவும், எவ்வளவு அக்கறையுடனும் இப்போதுள்ள சமுதாயச் சூழலில் விளக்குவாரோ,

             அதில் எள்ளளவும்(சிறிதும்) குறையாமல்,

             இப்போது நாம் அறிந்து கொள்ள திருவள்ளுவர் சூக்குமமாக எழுந்தருளி சத்தசங்கத்தை நடத்தித்தருமாறு அவரை இறைஞ்சுகிறோம்.

            இந்தக் குறளின் பொருளை அறிந்து திருவள்ளுவரை போற்றி மகிழ்வோம். அதே நேரத்தில் திருவள்ளுவரின் கீழ்படிதலுள்ள மாணவர்களாகத் திகழ்ந்து ஒழுக்கச்சீலர்களாக வாழ்ந்து, மகரிஷி அவர்கள் விரும்புகின்றவாறு இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைவோமாக!

        மேம்பாடு என்றால் என்ன? இருக்கும் நிலையிலிருந்து அடையும் உயர்வான நிலை(upliftment; betterment). அப்படியானால் எது மேம்பாடு அடைய வேண்டும்? யாருக்கு மேம்பாடு தேவை? அறிவு மேம்பாடு அடைய வேண்டும். ஆன்மாவிற்கு மேம்பாடு தேவை.   ஆன்மா எதற்காக மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக்கொண்டிருக்கின்றது என்பதனை, அனைவருமே, வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே அறிந்ததன் மூலம் அறிவர். ஆன்மா தன்னைத் தூய்மை செய்துகொண்டு பிறவிப்பயனை அடைய வேண்டும்.

       ஆன்மா, ஆதிமனிதனிலிருந்து பல லட்சம்(3,25,000) பிறவிகளாக ஒழுக்கமின்மையால் வந்துள்ள தன்முனைப்பு, பாவப்பதிவு, மாயை ஆகிய களங்கங்களை ஏற்று பிறவித்துன்பத்தை அனுபவித்து வருகின்றது. எனவே, இப்பிறவியிலாவது, ஆன்மா பல லட்சம் பிறவிகளாக ஏற்றி வந்துள்ள பழிச்செயல் பதிவுகளை நீக்கிக் கொண்டு மனவளக்கலையின் இறுதிப்பயனான ‘அறிவு முழுமை’ அடைதலையே ‘மேம்பாடு’ என்றும் அதனை ஒழுக்கத்தால்தான் அடையலாம் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர்.

           மனிதன் ஒழுக்கம் தவறும்போது, எப்போதுமே விழிப்புடன் ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற  இறைக்கும், மனிதனுக்கும் இடையே, திரையை விரித்துவிடும் தன்முனைப்பு.      

            அடுத்ததாக பொய், களவு, சூது, கற்பழிப்பு, கொலை போன்ற பஞ்சமகா பாதகங்கள் செய்ய நேரிடலாம்.

        அடுத்ததாக, எதனை அறிவதற்காக ஆன்மா பிறவி எடுத்ததோ, அதனை மறந்து மாயையில் சிக்கித் தவிக்கலாம் அன்றோ!

       இதனைத்தான் திருவள்ளுவர் ‘ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் ‘பெரும் பழியை’ அடைவர்’ என்கிறார். ஏனெனில் ஒழுக்கம் என்பது என்பது என்ன? ஒழுக்கம் என்பது ‘ஒ, ழு, க், க, ம்’ என்கின்ற வெறும் ஐந்தெழுத்துக்களால் ஆனதல்லவே! மேலானதான நெறியைப்பின்பற்றி ஒழுகுவதனை, ஒழுக்கம் என்றும், அதனை உயிரைவிட மேலானதாகக் கருதப்படவேண்டும் என்றும் கூறுகிறார் அறிஞர் திருவள்ளுவர்.  எனவே அனைவருமே ஒழுக்க வாழ்வு வாழ்ந்திடல் அவசியம். வேதாத்திரிய உலக சமாதானத் திட்டங்கள் அமுல் படுத்திய நிலையில் எல்லோரையும் ஒழுக்கத்துடன் வாழ இயற்கை/இறை வழி செய்யும்.

       வேதாத்திரிய ‘ஒழுக்கத்தின்’ வரையறையின்படி ஒழுக்கம் என்பது புண்ணியம் என்றும், ஒழுக்கமின்மை புண்ணியத்திற்கு எதிரான பாவம் என்பதனை அறிவோம்.   இருப்பினும் எண்ணிறந்த அருளாளர்களின் வாயிலாகக் இவ்வளவு விளக்கங்கள்  கிடைத்திருந்தாலும், சமுதாயம், ஒழுக்கம் என்கின்ற ரயில் தண்டவாளப் பாதையில்(rail track), வாழ்க்கை எனும் ரயிலை(Life train) ஓட்டமுடியாமல் தவிக்கின்றது.

        ஒழுக்கத்தை உடமை என்று திருவள்ளுவர் இரண்டாயிரத்து நாற்பத்தோரு வருடங்கள் முன்னரே அறிவுறுத்தியும், இன்னமும் ஒழுக்கத்தை தனது சொத்தாக, உடமையாக ஆக்கிக் கொள்ளாமல் ஏழ்மையிலேயே வாழ்ந்து வருகின்றது சமுதாயம். விளைவாக, மனிதகுலம் தனது பூர்வீக சொத்தான அமைதியினை(Peace is the hereditary wealth of entire Humanity. Everyman is the legal heir to enjoy the precious wealth of Peace) அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றது. காரணம், மகரிஷி அவர்கள் கூறுகின்ற ‘மனிதனிடம் உள்ள தீமை பழக்கம்’ என்பதே.   எந்தப் பழக்கத்தையும் மனிதன் பழகி, அது வழக்கமாகி விட்டால், அதனை ஒரு பிறவி காலத்திலே கிடைக்கின்ற விளக்கப்பதிவால் போக்கிக் கொள்வது அரிதாக இருக்கின்றது.

       இருந்தாலும், பல்லாயிரம் பிறவிகளாக ஏற்றப் பழிச்சுமைப் பதிவுகளை, ஒரு பிறவி காலத்திலே மாற்றி அமைக்கலாம், அதற்கு இயற்கை கருணையோடு கொடுத்ததுதான் அகத்தவமும், தற்சோதனையும் என்று கூறி, நமக்கெல்லாம் தைரியத்தையும், உற்சாகத்தையும், அளித்துக் கொண்டு, உற்றதுணையாக மகரிஷி அவர்கள் இருப்பதனை அனுபவப் பூர்வமாக விளங்கிக் கொள்வோமாக!

       ‘வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுதல்’ என்று எல்லா அருளாளர்களும் கூறுகின்றனர். அதனை ஒவ்வொரு இறை உணர் ஆன்மீக சாதகர்களும்  உறுதிபடுத்திக்கொண்டு, வாழ்க்கையை அம்முறையில் செவ்வனே வாழ்வது ஒன்றே இயற்கையின் எதார்த்தத்தை அறிந்த அறிவின் உயர்ந்த நிலையை காட்டுவதாகும்.

       வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே கண்டுபிடிக்க வேண்டும். அறிவின் ஏழாவது செயல்பாடு என்ன என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். ‘தன்னிலை உணர்வது’ என்பது இயற்கையின் வளங்களில் சிகரமானது என்பதனை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். ‘தன்னிலை உணர்வது’ என்பது இயற்கையின் வளங்களில் சிகரமானது என்பதனை ஏற்க அறிவு மறுக்கலாம். சிந்தித்துப்பார்த்தால் தன்னிலை உணர்தல் என்பது ஆறறிவுடன் வாழ்கின்ற மனிதர்களுக்கு ஏற்ப பொருத்தமானப் பேறாகும்.   வாழ்வின் நோக்கம் என்ன என்பதனை மகரிஷி அவர்கள், ‘வாழ்வின் நோக்கம் என்ன’ என்று கண்டுபிடித்த   அனுபவத்தை, அவர் அருளியுள்ள இன்பம், இன்பம், இன்பம், இன்பம்(ஞா.க. எண். 1849 ) என்கின்ற பாடல் வழியாக விளங்கிக்கொள்வது வாழ்வின் நோக்கம் என்ன என்கின்ற ஆராய்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். ஏதாவது ஐயங்கள் இருப்பின், அவை நீங்கி, வாழ்வின் நோக்கம் இறைஉணர்வு பெறுவதன் மனவுரு-மனத்தோற்றம் (mental picture — Concept of Realisation is to be understood first) ஏற்படும். முயற்சி செய்வோம்.

    தெளிவு பிறக்கட்டும்! தெளிவு பிறக்கட்டும்!! தெளிவு பிறக்கட்டும்!!!வாழ்க வளமுடன்.

    எனவே இச்சூழலில்தான் ழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்று அறிஞர் ரூஸோ கூறியதை அறிந்து சத்சங்கத்தில் ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்’ என்கின்ற தலைப்பில் ஆறாவது நாளாக சிந்தித்து வருகிறோம். இப்போது தலைப்பை ஒட்டிய சிந்தனைக்குள் செல்வோம்.

    ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுவதில் உள்ள அறிவியல் விளக்கம் என்ன? முதன் அறிவின்—அறியவியலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே மனிதன் போராட வேண்டியிருக்கின்றது என்கின்ற எதார்த்தத்தை கூறுவதோடு நின்று விடாமல் அதற்கான அறிவியல் விளக்கமும் தருகிறார். எதார்த்தத்தை மட்டும் கூறியிருக்கலாம். ஆனால் அதனுள் மறைந்துள்ள அறிவியல் உண்மையையும் கூறுகிறார். ஏன்? எந்த ஒரு குறைபாட்டையும், அதனை சரி செய்வதில் உள்ள சிரமங்களை கூறுவதோடு மட்டும் இருந்துவிடாமல்,

       அந்தக் குறைபாடுகள் ஏன் வந்தன,

       அதனைச் சரிசெய்வதில் என்னென்ன சிரமங்கள் ஏற்படுகின்றன, ஏன் ஏற்படுகின்றன என்கின்ற விளக்கங்களையும் கூறுவதால், தனிமனிதன் நிலையில், மனிதன் தனது குறைபாட்டினை சரி செய்துகொள்ளும் பயிற்சியில் உறுதியும், வெற்றி அடைவோம் என்கின்ற நம்பிக்கையும் ஏற்பட்டு தன்னைத்திருத்திக் கொள்வதில் தளராது விடாமுயற்சி செய்து வெற்றி கொள்ள முடியும்.

        குறைபாடு என்பது ஒரு தனிமனிதனிடம் மட்டும் இல்லை. பல கோடி தனிமனிதர்களைக் கொண்டதுதான் இந்த சமுதாயம். ஆகவே ஒரு தனிமனிதன் திருந்தியதால் வரும் பயன் மட்டுமே போதாது இந்த சமுதாயத்திற்கு.   சமுதாயத்தில் திருந்திய நல்வாழ்வு வாழாத அனைவருமே திருந்தி, நல்வழியில் வாழ வேண்டும்.

       ஆகவே சமுதாய அளவில் குறைபாடுகளைத் திருத்துவதற்கு, சமுதாயப் பொறுப்பாளர்கள்

    • சரியான நடவடிக்கைகளையும் எடுக்கவும்,
    • அதற்கான சீரான திட்டங்களையும்,
    • எவ்விடத்தில்,
    • எப்போது அத்திட்டங்களை
    • எவ்வாறு கொண்டு வரவேண்டும் என்று முயலும்போது,
    • ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுவதில் உள்ள அறிவியல் விளக்கம்’ கவனத்தில் கொண்டால் சிறப்பாக அமைய உதவியாக இருக்கும்.

        உதாரணத்திற்கு ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ போன்ற ஆன்றோர்கள் மொழிந்துள்ளதை கவனத்தில் கொண்டால், “ஆளும் வளரனும், அறிவும் வளரனும்” என்கின்ற திரைப்படப் பாடல் ஒன்று கூறுவதுபோல் குழந்தையிலிருந்து உடல் வளர்ந்து வருவதுபோல், அறிவும் வளரவேண்டியிருப்பதால், மாணவர்களிடையே ஒழுக்கத்தை இயல்பாக மலரச் செய்வதற்கு, பள்ளிக்கல்வியிலே ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை(ஐந்து வயதிலிருந்து பதினேழாம் வயதிற்குள்) வாழ்க்கையில் மிக மிக அவசியமான, ஒழுக்கத்திற்கு முதல் கவனம் கொடுக்க வேண்டியிருப்பதால், மற்ற பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியம்போல் கூடுதலாகவே  முக்கியத்துவம் கொடுத்து, ஒழுக்கத்தைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும்.

         ஒழுக்கத்தை இயலாக்கிடவேண்டும். மற்ற பாடங்களில் காட்டும் ஆர்வத்தைவிட மாணவர்கள் இளம் வயதில் ஒழுக்கவியல் பாடத்தில் அதிக கவனமும், ஆர்வமும் காட்டுவர். ஏனெனில் ஒழுங்காற்றலாகிய பேரறிவே மனிதனிடம் அறிவாக திகழ்வதால், அது ஒழுக்கத்திற்கு வருவதற்காகத்தான் காத்திருக்கின்றது. அதற்கு, இளம்வயது, பிராரப்த கர்மா சோ்த்துக் கொள்ளாத  பருவம் சரியானது. ஆகவே மற்ற பாடங்களில் உள்ள ஆர்வத்தைவிட ஒழுக்கவியல் பாடம் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர் மாணவர்கள்.

       ஒழுக்கம் என்பது மரபணுவுடன் தொடர்புடையதால், தொடர்ந்த முறையான, பன்னிரண்டு வருட கருத்தியல் மற்றும் செய்முறைப் பயிற்சியாலன்றி ஒழுக்கப்பண்பை, மரபணுவில் பதிய வைக்க இயலாது. மரபணுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கு நூறு ஆண்டுகள் கூட ஆகும் எனக்கூறப்படுகின்றது. ஆகவே மரபணுத் தொடர்புடைய ஒழுக்கப்பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தி, குழந்தைகளுக்கு மாணவப் பருவத்திலேயே ஐந்து வயதிலிருந்து பதினேழாம் வயதிற்குள் ஒழுக்கவியல் கல்வியினைக் கற்றுக் கொடுக்க  வேண்டும்.

         ஐந்து வயதிற்கு முன்னரும் தாய், தந்தையர்கள் குழந்தை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி அடிப்படை ஒழுக்கப்பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு முதல் ஆசிரியா்களான பெற்றோர்களும், ஒழுக்கத்தின் அவசியத்தை நன்கு உணர்ந்து, தங்களின் செராக்ஸ் நகல்களான குழந்தைகளுக்கு ஒழுக்கப்பழக்கங்களை கற்றுக் கொடுக்க, செராக்ஸ் நகலின் மூலமான(original)தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு உதவுவதற்காகவே வேதாத்திரி மகரிஷி என்கின்ற கருணாமூர்த்தி மூலம் இயற்கை/இறை அருளியதுதான் மனவளக்கலை.

    இத்தருணத்தில் தினமலா் 06-02-2011 அன்று வெளிவந்த தினமலர், சென்னை நாளிதழில் வந்துள்ள “நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதை மரபணுதான் தீர்மானிக்கின்றது” என்கின்ற செய்தியினை பகிர்ந்து கொள்வோம். அச் செய்தி வந்ததை ஒட்டி, அன்று, ஆன்ம செழிப்புறு இணையதள ஆசிரியா், 11-02-2011 அன்று அன்பர்களுடன் இ-மெயிலில் பகிர்ந்து கொண்ட சிந்தனை விருந்து இப்போது இணையதள சத்சங்க உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது, வாழ்க வளமுடன்.

    gene_dinamar_news

    dinamalar_news_06.02.2011

        அறிவின்–அறிவியாளர், மனிதகுல விடிவெள்ளியான, சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறையாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள், கல்வி என்பது

    1)   எழுத்தறிவு,

    2)   தொழிலறிவு,

    3)   ஒழுக்கப்பழக்கறிவு,

    4)   இயற்கைத்தத்துவறிவு

    ஆகிய நான்கு அங்கங்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். விவேகானந்தர் கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே உள்ள முழுமையை வெளிக் கொண்டுவரவேண்டும் என்கிறார். ஆகவே கல்வி என்பது ஐந்து வயதிலிருந்து ஆரம்பிப்பதால், முதல் வகுப்புக்குக் கல்வியிலேயே ஒழுக்கவியல் பாடத்தை மற்ற பாடங்களுடன் கட்டாயப்பாடமாக்கி கற்றுத்தரப்பட வேண்டும்.

       வாழ்க திருவேதாத்திரியம், வளர்க திருவேதாத்திரியம், வாழ்க மனிதகுலம். வளர்க மனித குலம். வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம் என்கின்ற எண்ண அலைகளை வான் காந்தத்தில் பரப்பியும், நிரப்பியும் வருவோமாக.  

    அடுத்த விருந்தில் (22-05-2016—ஞாயிறு), பழக்கத்திற்கு விளக்கத்திற்கும் இடையே போராட்டமாக உள்ளதில் உள்ள அறிவியல் உண்மையை மெய்ஞான அறிவியலாளர் கூறுவதனை மேலும் அறிவோம். தொடரும்

     

         வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.

     

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 5/?

     

    வாழ்க மனித அறிவு                                         வளர்க மனித அறிவு

    FEAST FOR CONSCIOUSNESS – FFC –  189
    அறிவிற்கு விருந்து – அ.வி. –  189
     
                                                                                                            15-05-2016—ஞாயிறு

          தற்போது சத்சங்கத்தில் ஒழுக்கம் பற்றி சிந்தித்து வருவதால், திருவள்ளுவர், ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் அருளியுள்ள பத்துக் குறட்பாக்களில் ஒன்றினை சத்சங்கத்தில் நினைவு கூர்ந்து வருகிறோம். அந்த வகையில் இன்று குறள் எண்.136 ஐ நினைவு கூர்வோம்.

    FFC-189-குறள்-ஒழுக்கத்தின் ஒல்கார்-

    பொருள்: அறிஞர் ஒழுக்கக் குறைவினால் துன்பம் வருவதை அறிந்து, செய்யுங் கடமை அரிதாயினும், அதனைச் செவ்வையாகச் செய்யாது சுருக்கமாட்டார்.

    இக்குறள் என்ன தெரிவிக்கின்றது? இது ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் 136 வது குறள். ஒவ்வொரு பொருள் பற்றி கூறும்போதும், அதனை பத்துக் கோணங்களில் கூறுவதனை வழக்கமாகக் கொண்ட திருவள்ளுவர், ஒழுக்கத்தை ஆறாவது கோணத்தில் விளக்குகிறார். ஒழுக்கம் என்பது வெறும் நடத்தையில் மட்டும்(conduct and character) நடந்து கொள்வதல்ல.  ஒரு பணியை(கடமை) அதற்குரிய முறையில் சரியாகச் செய்வதும், நடத்தையில் சேர்ந்ததே.  எனவே பணியை(கடமை) அதற்குரிய முறையில் சரியாகச் செய்யவில்லை என்றாலும் அது ஒழுக்கமின்மையையேச் சாரும்.

    முறையாக, சரியாகச் செய்யவில்லை எனில் விளைவு இடராகத்தானே இருக்கும். எப்போது விளைவு இடராக வருகின்றதோ விளைவின் செயல் தவறானதாக இருக்கும். செயல் தவறானதாக இருக்குமானால் அங்கே ஒழுங்கில்லை என்றுதானே பொருள். எங்கும் ஒழுங்காற்றலாய் திகழும் பேரறிவின் ஆட்சியில் மனிதனுடைய செயலில் ஒழுங்கில்லையானால் அங்கே இடர்தான் வரும்.  செய்யும் கடமை அரிதாயினும் அதனை சுருக்கி சீர்மையின்றி செய்யமாட்டார்கள் அறிஞர்கள் என்கிறார் திருவள்ளுவர்.

    ஏன்?

    அறிஞர்கள் யார்? எந்த ஒரு கலையிலும் மிகச் சிறப்புடன் தேர்ச்சி பெற்று விளங்குபவர் அக்கலையின் கலைஞராகிறார். அக்கலையின் பெயரைச் சொல்லி அக்கலையின் கலைஞர் என்போம். ஆகவே அறிவை அறியும் கலையில் சிறப்புடன் தேர்ச்சி பெற்று விளங்குபவர் அறிவை அறியும் கலையில் கலைஞராகிறார். எனவே ‘அறிவை அறியும் கலை’ மற்றும் அதில் அவர் கலைஞரானதால், ‘கலைஞர்’ ஆகிய இரண்டையும் சேர்த்து சுருக்கி, ‘அறிஞர்’ என்கிறோம். எனவே ஒவ்வொரு பிரம்ம ஞானியும் அறிவை அறிந்த அறிஞரே.
    அறிவை அறியும் கலையில் வெற்றி பெற்றவர்கள், ஒழுங்காற்றலாக திகழும் அறிவின் இருப்பிடம், இயல்பு, இயக்கம் அறிந்து ஒழுகுபவர்களான அறிஞர்கள்! இப்போது அறிஞர்கள் பற்றி திருவள்ளுவரை மானசீகக் குருவாகக் கொண்ட மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு கூர்வோம்.

                அறிஞர்(17-12-1953)

     அறிவின் இருப்பிடம், இயல்பு, இயக்கம்
    அறிந்து, ஒழுகுவோர் அறிஞர்கள் ஆவர்.
                                 …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மேலும் மகரிஷி அவர்கள் கடவுளையும், கடமையையும் இணைத்துச் சொல்வதனை நினைவு கூர்வோம். ஏன் இரண்டையும் இணைத்துச் சொல்கிறார்? இரண்டும் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால், கடமையைச் செய்வது மனிதனின் கடமை என்பதனையும், அதனையும் ஒழுங்குடன் ஒழுக்கத்துடன் செய்ய வேண்டும் என அறிவுருத்த விரும்பி கடவுளையும், கடைமையையும் சமன்பாடாக இணைக்கிறார் அறிவை அறிந்த அறிஞரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எவ்வாறு இரண்டிலும் ஒழுக்கம் சம்பந்தப்பட்டுள்ளது? கடவுள் ஒழுங்காற்றலாய் திகழ்பவர். ஒழுங்குடன், ஒழுக்கத்தோடு மனிதன் ஆற்ற வேண்டிய செயல்களே கடமை ஆவதால், இரண்டிலும் ஒழுக்கம் சம்பந்தப்பட்டிருக்கின்றது என்கிறோம்.

    மேலும் அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில் இறை உணர்வும் அற உணர்வும் ஒன்றோடு ஒன்றுப் பின்னிப் பிணைந்துள்ளது. இறை உணர்வில்லாமல் அற உணர்வு இல்லை, அற உணர்வு இல்லாமல் இறை உணர்வில்லை என்பதால் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களில் ஒன்றான கடமையைப் பொறுப்புடனும் தன்முனைப்பின்றியும்மிகச்சிறப்பாகப் செய்வது இறைஉணர்வு ஓங்கி ஒளிதர்லாகவேக் கொள்ள வேண்டும். அதுவே மிகச்சிறப்பு.

    ஆகவே

    ஒழுக்கமே  எங்கும் எப்போதும் காப்பாக அமையும்.
    ஒழுக்கமே மனிதனையும் இறையையும் இணைக்கும் பாலம்.

    ஒழுங்கோ, ஒழுக்கமோ தவறும்போது, செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற நியதியே கடவுளாக இருக்கும்போது, அந்தக் கடவுளிடமிருந்து விலகிச் செல்கிறோம் என்று பொருள். செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்பதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

       ஒழுங்கோ, ஒழுக்கமோ தவறும்போது, கடவுள் நம் உள்ளத்திலேயே வீற்றிருந்தாலும், கடவுளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி அதிகரிகத்துக் கொண்டிருக்கின்ற விந்தையான ஆபத்தினை, ஒவ்வொரு இறை உணர் ஆன்மீக சாதனையாளர்கள் அவசியமாகக் கவனிக்க வேண்டும்.

    எனவே அயரா விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அயரா விழிப்பாகிய பேரறிவு(Awareness) அறிய இருக்கின்ற பயிற்சியில் சாதனை செய்கின்றவரும் அயரா விழிப்போடுதான் இருக்கப் பழக வேண்டும். அயரா விழிப்போடு இருக்கும்போது ஒழுக்கமின்மைக்கே இடமே இல்லை.

    கடவுளும் கடமையும்(17-12-1954)

    கடவுளை உணர்ந்தோர்,
    கடவுளை நாடுவார்
    கடவுளை அறிந்தோர்
    கடமையில் வாழுவார்.

    … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    கடவுளை உணர்ந்தோர் கடவுளை நாடுவதுபோல, கடவுளை அறிந்த அறிஞர்(அறிவின் இருப்பிடம்) கடமையில் வாழ்வார் என்பதால், அவர்கள் கடமையைச் செவ்வனே செய்வர்.  அறஉணர்வை வரையறுக்கும்போது இறைஉணர்வின் மலர்ச்சியின் வெளிப்பாடாக விளங்குகின்ற  அறஉணர்வில் ஒழுக்கத்திற்கு, அடுத்ததாக கடமைக்கு இரண்டாவது இடம் வழங்கியுள்ளார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எனவே ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில், ஆறாவது கோணத்தில் ஒழுக்கத்தைப் பற்றி கூறிய திருவள்ளுவர் கடவுளை(அறிவு) அறிவது மற்றும் அறிவை(கடவுளை) அறிந்த அறிஞரைப்பற்றியும், கூறியுள்ளதனையும் அறிந்து மகிழ்வோம்.

    ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்று சிந்தித்து வருகிறோம். இதுவரை கடந்த அத்தியாயங்களில் சிந்தித்ததை சுருக்கமாகச் சற்று நினைவு படுத்திக் கொள்வோம்.
    1) ஒழுங்காற்றலாகிய இயற்கை/இறை மனித உடலில் ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டு, உடலை சீராக இயக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், மனித மனதிலும், சீராக ஒழுங்குடன் இயங்கி வாழ்வில் ஒழுக்கம் மலர்வதற்கு, மனிதன் எவ்வாறு இறைக்கு வழிவிட வேண்டும் என்பது பற்றியும்,
    2) வள்ளுவர் கூறும் ஒழுக்கமுடைமையாகிய ஒழுக்கச்செல்வம் பூா்த்தி செய்யும் மனிதனின் தேவை என்பது, மனிதன் மனிதனாக வாழ்வதுதான் என்றும்,

    3) எவ்வளவு சீக்கிரம், ஒழுக்க வாழ்க்கை வாழ்வது, பழக்கத்திற்கு வந்து வழக்கமாகி விடுகிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் மனதுடன் போராட்டம் நடப்பது நின்று விடும். விளைவு — ஒழுக்க வாழ்வு அமைதியைத் தரும் என்றும் அறிந்தோம்.

    4) கருவில் திருஉடையவர்கள் தவிர, மற்றவர்கள் ஏன் ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டியிருக்கின்றது,

    என்றும் அறிந்து கொண்டோம். மேலும் சிந்திப்போம்.

    ஔவையார், மூதுரையில் நான்கு நல்லவைகளைக் கூறுவதனைக் கவனிப்போம். மற்றும் கல்வியின் நான்கு அங்கங்களையும், நம் கருமையத்தின் அறிவியலையும் அறிவோம்.
    ஒழுக்கமின்மையில் பல காலம் பழகிவிட்டு, ஒழுக்கம் கடைபிடிப்பிடிக்கும் மாற்றத்திற்கு திடீரென வருவதென்பது போராட்டமாக இருக்கும் என்பதால், ஒழுக்கம் கடைபிடிப்பதை விட்டுவிடலாம் என்று சௌகரியமாக எடுத்துக் எடுத்துக்கொள்ளமுடியாது. ஒழுக்கமற்ற வாழ்க்கை ஒரு வேளை, ஆரம்பத்தில் சுகமாக இருப்பதுபோல் தோன்றினாலும், முடிவில் துன்பத்தையே நிச்சயமாக, தனக்கோ, அல்லது தன் வம்சாவளிக்கோ கொடுக்கும். அப்போது யார் அந்த துன்பத்தை அனுபவிப்பது? முதலில் இன்பம் அனுபவித்த அறிவுதான் அந்த துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அல்லது தனது வம்சாவளியான மகனோ அல்லது மகளோ, அல்லது அவர்களையும் கடந்து, பேரனோ, பேத்தியோ அனுபவிக்க வேண்டியிருக்கும். அல்லது அவரது ஏழாவது தலைமுறையிலும் அனுபவிக்கலாம்.
    ஒழுக்கமின்மையின் விளைவாகத் துன்பம் வரும்போது ‘ஒழுக்க வாழ்வில் இருந்து பிறழாமல் இருந்திருந்திருந்தால் இப்போது இத்துன்பம் வந்திருக்காதே’ என்று வருந்தி என்ன பயன்? ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்’ என்பது போல்தான் அது. நல்லொழுக்கம் கடைபிடிப்பதில் உள்ள எதார்த்த–சிரமத்தை எடுத்துக் கூறுவது எதற்காகவெனில்,
    1) உலகநாதர் உலக நீதியில் அறிவுறுத்தியதுபோல் மனம் போன போக்கெல்லாம் போகாமல் இருக்கவும்,
    2) ஒழுக்கம் கெட்ட பிறகு திருந்துவதற்கு முயற்சி செய்வதில் உள்ள சிரமத்தை எடுத்துக் கூறி எச்சரிக்கவும்,
    3) மனிதன் ஒழுக்கம் கடைபிடிப்பதில் ஓயாது, தளரா விடா முயற்சியுடன் தற்சோதனைப் பயிற்சியினை செய்து வருவதற்கும்,
    4) ஒழுக்கத்தின் அவசியம் மனப்பூர்வமாக அறிந்து. அதனை கடைபிடித்து வரும் வேளையில் எதிர்பாராமல் வரும் சிரமங்களை கையாள்வதற்குத் தைரியத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து மனம் தளராமல் இருந்து பிறவிப்பயனை எய்துவதற்காகவும்,
    5) ஒழுக்கம் என்பது உயிரைவிட சிறந்தது என்பதால், உயிர் வாழ்வதற்கு, மூச்சுக்காற்றை சுவாசிப்பது போல், ஒழுக்கம் என்கின்ற காற்றினை, எப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்க, நல்லோர்களின் இணைப்பைத் தேடி அவா்களுடன் சத்சங்கம் வைத்துக் கொள்ளவேண்டும்.
    என்று அறிவுறுத்துவதற்காகவேதான்.
    இப்போதும் ஔவையார் கூறும் மூதுரையைக் கவனத்தில் கொள்வோம்.

    moodhurai-ovvaiyar

     நான்கு ‘நன்றுகளை’க் கூறுகிறார் அவ்வையார். ‘நன்று’ என்பது என்ன?
     நல்லது என்று பொருள். பாராட்டைத் தெரிவிக்கும் சொல்.
     எது நல்லதாக அமையும்? எதற்காக நல்லோரைக் காண விழைகிறோமே அது நல்லதாக அமையும் என்று பொருள்.
     அதாவது அடிப்படையில் நல்லொழுக்கத்தை கற்று அதன் வழி நிற்பதற்காகவே நல்லாரைக் காண விழைவதால் அது நல்லதாகவே அமையும் என்று பொருள்.
     ‘நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே’ என்பது எதற்காக?
     நல்லார் குணங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே!
     எப்போது நல்லவருடைய குணங்களை ஒரு மனிதன் பாராட்டுவான்? எடுத்துரைப்பான்?
     அவனுக்கு நல்லாரின் குணங்கள் மிகவும் பிடித்திருந்தால் அக்குணங்களின் தன்மை தானாகவே, மீண்டும், மீண்டும் நினைவிற்கு அடிக்கடி வந்துபோகும். இவனும் விரும்பி நினைவிற்கு கொண்டு வருவதோடு, அதனை பிறர்க்கும் எடுத்துச் சொல்வான்.
     அவ்வையார் கூறுவதில் உள்ள அறிவியல் என்ன?
     திருவேதாத்திரிய மந்திரம் 10 உரைப்பதுபோல், இயல்பூக்க நியதிதான் அந்த அறிவியல்.
     ‘தான் உயராது – மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது. ரசிக்கவும் முடியாது.’ என்பது இயல்பூக்கத் தேற்றத்தின்(theorem) கிளைத்தேற்றம்(Corollary). என்பதால், நல்லாரின் குணத்தைப் பெறுவதற்காக, நல்லாரைச்சந்தித்து அவரது குணங்களில் உயர்ந்து வருகிறான் என்று பொருள்.
     ஆகவே ‘நன்று’ என்று அவ்வையார் கூறுவது, நல்லொழுக்கனாக மாறுவதேயாகும்.

    சிறப்புக்களையும், பெருமையையும் உடைய ஒழுக்கம் கடைபிடிப்பதை மனிதன் ஏன் விரும்புவதில்லை? பழக்கப்பதிவிடம், விளக்கப்பதிவு தோற்பதேயாகும். அதாவது நல்லொழுக்க விளக்கப்பதிவு, நல்லொழுக்கமில்லாப் பழக்கப்பதிவிடம்(தீயொழுக்கப்பதிவு), தோற்கின்றது. இந்நிகழ்விற்குப் பின்னால் உள்ள அறிவியலை(Science hidden in the defeat of Wisdom by the habits) ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்கின்ற பொன் மொழியை உதிர்த்து, அதற்கான அறிவியல் விளக்கமும் அளித்துள்ளார் முதன் அறிவியல்-அறிவியலாளர். அதுதான் திருவேதாத்திரியத்தின் மகிமையிலும் மகிமை. நேர சுருக்கம் கருதி இன்றைய சிந்தனையை இத்துடன் நிறைவு செய்து கொள்வோம்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்18-05-2016 புதன்கிழமையன்று தொடர்வோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                         வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 4/?

    FEAST FOR CONSCIOUSNESS – FFC –  188

    அறிவிற்கு விருந்து – அ.வி. – 188

     11-05-2016—புதன்

    kuRal-138_naRikku_viththaagum

    ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் உள்ள, எட்டாவது கோணத்தில் ஒழுக்கத்தைப் பற்றி அருளியுள்ள குறளை நினைவு கூர்ந்து திருவள்ளுவரை சூக்குமமாக எழுந்தருளி இச்சத்சங்கத்தை நடத்திடவும், ஒழுக்கத்தை உடைமையாக்கிக் கொள்ள துணை நிற்குமாறும் இறைஞ்சுவோம்.

     பொருள்: நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக்/அறத்திற்குக் காரணமாகும்.  தீய ஒழுக்கம் என்றும் துன்பத்தைத் தரும். 

        ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்கிறார் திருவள்ளுவர்.  குறளுக்குப் பொருள் கூறும் அறிஞர்கள், ‘இன்பத்திற்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்கின்றனர்.  அப்படியானால் நன்றியும், இன்பமும் ஒன்றா.  நன்றிக்குப் பொருள் இன்பமா? 

       எப்போது நன்றி கூறப்படுகின்றது? நன்றி உணர்வை வெளிப்படுத்தி மகிழ்வதற்கு நன்றி கூறப்படுகின்றது.  எப்போது நன்றி உணர்வு வருகின்றது? ஒருவர் நல்லதைச்  செய்யும்போது, அந்த நல்லதால் பயன்(இன்பமுறும்போது) பெறுபவர் பண்பாடாக நன்றி உணர்வைத் தெரிவித்து மகிழ நன்றி கூறுகிறார்.  எனவே செய்த நல்லதால் வருவது நன்றி உணர்வு.  நல்லது என்பது நல்ஒழுக்கத்தின் விளைவு.  ஆகவே நன்றி உணர்விற்குக் காரணமான செய்யப்படும் நல்லதற்கு வித்து ஒழுக்கம் என்கிறார் திருவள்ளுவர். 

    சென்ற மூன்று விருந்துகளில் ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்று சிந்தித்து வருகிறோம். இதுவரை சிந்தித்ததை சுருக்கமாகச் சற்று நினைவு படுத்திக் கொள்வோம்.

    1)   ஒழுங்காற்றலாகிய  இயற்கை/இறை மனித உடலில்  ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டு, உடலை சீராக இயக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில்,   மனித மனதிலும்,   சீராக ஒழுங்குடன் இயங்கி வாழ்வில் ஒழுக்கம் மலர்வதற்கு, மனிதன் எவ்வாறு இறைக்கு  வழிவிட வேண்டும் என்பது  பற்றியும்,

    2)   வள்ளுவர் கூறும் ஒழுக்கமுடைமையாகிய ஒழுக்கச்செல்வம் பூா்த்தி செய்யும்  மனிதனின் தேவை என்பது, மனிதன் மனிதனாக வாழ்வதுதான் என்றும்,

    3)   எவ்வளவு சீக்கிரம், ஒழுக்க வாழ்க்கை வாழ்வது, பழக்கத்திற்கு வந்து வழக்கமாகி விடுகிறதோ        அவ்வளவு சீக்கிரத்தில் மனதுடன் போராட்டம் நடப்பது நின்று விடும்.  விளைவு — ஒழுக்க வாழ்வு அமைதியைத் தரும்  என்றும் அறிந்தோம்.

    இன்றைய விருந்தில்,

            கருவில் திருஉடையவர்கள் தவிர, மற்றவர்கள் ஏன் ஒழுக்க வாழ்விற்கு  போராட வேண்டியிருக்கின்றது என்று அறிய இருக்கிறோம்.,

    ஆதிமனிதனிடமிருந்து, கருத்தொடராக மனிதகுலம் வந்துள்ளதால்,  விலங்கினப்பண்பாகிய பிறர் வளம் பறித்தல்  கருமையப்பதிவுகளாக  வந்துள்ளன, ஆதிமனிதனுக்குப் பிறகு வந்த பல  தலைமுறைகளில், அவ்விலங்கினப்பண்பு செயலற்றுப் போகாமல்(மறையாமல்),  மனிதனிடம் ஒழுக்கமின்மையாக வடிவெடுத்துள்ளது  எவ்வாறு என்று பார்ப்போம்.  விலங்கினப்பண்பு என்பது பிறர் வளம் பறித்தல் ஆகும். பிறருடைய வளத்தை பறித்தலாகும். அது விலங்கினங்களுக்குரியது. விலங்கினங்களில், பிறர் வளம் பறித்தல் என்பது உணவைப் பெறுவதற்காக நடைபெறுகின்றது. விலங்கினங்களுக்கு  ஆறு அறிவைவிட குறைவாக உள்ளதால் அவற்றிடம் அன்பையும், கருணையையும் கொண்ட பண்பு என்பதனை எதிர்பார்க்க முடியாது.

    ஆனால், ஆறாம் அறிவு மலர வேண்டிய மனிதனாக  வரும்போது, பிறர்வளம் பறித்தல் என்பது பிறருக்கு துன்பமளித்தலாகிவிடுகின்றது. மனிதனைப் பொருத்த வரை,

    பிறருக்கு துன்பமளித்தல் என்பது,

    தெளிவாக, சரியாக, அறிவுப்பூர்வமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேதாத்திரியத்திய,

    ஒழுக்க வரையறையின் படி,  

    ஒழுக்கமில்லாததே ஆகும். 

    ozukkam-ozukkaminmai

    இவ்வாறாக, விலங்கினப்பண்பாகிய பிறர்வளம் பறித்தலே ஒழுக்கமின்மையாக மாறி, பல தலைமுறைகளில் வாழ்ந்துவிட்டது ஆன்மா.  எனவே விலங்கினப் பண்பாகிய பிறர்வளம் பறித்தலே ஒழுக்கமின்மையாக–தீயொழுக்கமாகமாறி, அது ஆன்மாவிற்குப் அழுத்தமான பழக்கமாகிவிட்டது.  இந்நிலையில்—

    pazhakkap padhvu

    எதார்த்தம் என்பதால் அதன் போக்கிற்கு விட்டு விட முடியாது.

          எதார்த்தம் நல்லதாக இருந்தால் பரவாயில்லை.  எதார்த்தம் தீமையை அளிப்பதாக இருந்தால் அதனை கடும்முயற்சியுடன் பயிற்சி  செய்து மாற்றியே ஆகவேண்டும்.  அதற்கு தவம், தற்சோதனை அடங்கிய  மனவளக்கலை சிறந்த பயிற்சியாக உள்ளது.  இதுவரை ஆன்மீகம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது உலகியல் வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டாலும் சரி, தவத்துடன் கூடிய தன்னைத்திருத்திக் கொள்ளும் தெய்வீகப் பயிற்சியான தற்சோதனைப் பயிற்சி  இல்லை.

    ‘நல்லதையே எண்ணுதல் வேண்டும்’, ஆறுவது சினம்’, ‘பேரராசை பெருநஷ்டம்’ என்று அறிவுரைகள் இருந்ததே தவிர அதற்கான பயிற்சிகள் இல்லை.  இப்போது மனவளக்கலை அதனை கருத்தியலாகவும், செய்முறை பயற்சியாகவும் அளித்து வருகின்றது.  எனவேதான் மனவளக்கலை என்பது ஒரு சாதனை மார்க்கம் எனப்படுகின்றது.

    aindhil_valaiyaadhadhu

    தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்று ஆன்றோர்கள், எதார்த்தத்தை கூறியுள்ளார்கள்.  இதன் பொருள் குழந்தைப்பருவத்தில்/இளமையில் ஏற்படுத்திக் கொண்ட பழக்கமே இறக்கும் வரை தொடரும் என்பதாகும்.  பழைய பழக்கத்தை மாற்றுவது கடினம் என்பதால் இளமையிலே நற்பழக்கங்களைக் பழகிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது அறிஞர்களால்.  அப்படியில்லாத காரணத்தால், ஒழுக்க வாழ்க்கை  வாழ்வதற்கு அறிஞர் ரூஸோ கூறியுள்ளது போல் மனதுடன் போராட வேண்டியிருக்கின்றது.

    ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே மனிதன் போராடிக் கொண்டிருக்கிறான்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

    போராட்டம் என்பது என்ன?– கயிறு இழுக்கும் போட்டி (tug of war)

    ஒழுக்கமின்மை–பழக்கத்திற்கும், ஒழுக்கவாழ்வு—விளக்கத்திற்கும்(between habit and wisdom) இடையே கயிறு இழுக்கும் போட்டிபோல் (tug of war) போராட்டம் நடைபெறுகின்றது. 

        எண்ணிலடங்கா தலைமுறைகளில் ஏற்பட்டுள்ள ஆன்மாவின் பழக்கப்பதிவுகளின் அழுத்தத்தை, இப்பிறவிக்கு கொண்டு வந்துள்ள மனிதன், இப்பிறவியில்  விளக்கம் கிடைத்த பிறகு, ‘ஒழுக்க வாழ்வு வாழவேண்டும்’ என்கின்ற முடிவு எடுத்தாலும்,  விளக்கப்பதிவுகளின் அழுத்தம் மிக மிகக் குறைவாக இருப்பதால்  பழக்கப்பதிவை வெற்றி கொள்வதில் அதிக சிரமம் உள்ளதாக இருக்கின்றது.  இதனைத்தான் போராட்டம் என்கின்றனர் அறிஞர்கள்.  இதனை கயிறு இழுக்கும் போட்டியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

    கயிறு இழுக்கும் விளையாட்டுப் போட்டி என்பது, இரு குழுக்கள்(teams) எதிர் எதிராக நின்று கொண்டு  கயிற்றை, இழுக்கும்  விளையாட்டு.  அந்த விளையாட்டில் எந்தக்குழுவால் அதிக வலிமையுடன், கயிறு இழுக்கப்படுகின்றதோ, அந்த பக்கம் வலிமை குன்றிய குழுவிலுள்ளவர்கள் சாய்ந்து விடுவர்.  அவர்கள் தோற்றவர்களாகிவிடுவர்.

    பழக்கப்பதிவிற்கும், விளக்கப்பதிவிற்கும் இடையே நடக்கும் கயிறு இழுக்கும் போட்டியில்,

    •   பழக்கப்பதிவின் அழுத்தம் அதிகமாக உள்ளதால்,
    •   விளக்கப்பதிவின் அழுத்தம் குறைவாக இருப்பதால்,
    •  பழக்கப்பதிவு விளக்கப்பதிவை, தன்பக்கம் இழுத்து  சாய்த்துக் கொள்கின்றது.

    இதனைத்தான் இரண்டு அறிஞர்களும் ஒழுக்கம் கடைபிடிப்பதில் உள்ள போராட்டமாக எடுத்துக் கூறுகின்றனர்.  ஒழுக்கம் கடைபிடிப்பதில் உள்ள சிரமங்களை அறிஞர்கள் போராட்டம் என்பதனை  கீழே காட்டியுள்ள சுருக்கமாக விளக்கும் படங்கள் (Schematic Diagrams)மூலம் அறிந்து கொள்வோம்.

    FFC-124-படம் 1-1-பழக்கத்திற்கும் வினக்கத்திற்கும்

    FFC-124-படம் 1-2 பழக்கப்பதிவு விளக்கப்பதிவு

    FFC-124-படம்-2 பழக்கதிற்கும் விளக்கத்திற்கும்

     படம்-1.1&1.2  கருவில் திருவில்லாதவர்கள் ஒழுக்கவாழ்வு வாழ்வதில் சந்திக்கும் போராட்டத்தினை எடுத்துக் காட்டும்  படம்.  ஒழுக்க வாழ்வு வாழ்வதில் உள்ள போராட்டத்தினை கயிறு இழுக்கும் போட்டியுடன் ஒப்பிடலாம். கயிறு இழுக்கும் போட்டி என்பதால், ஒரு குழுதான் வெற்றி பெறமுடியும்.  போட்டியில் இருகுழுக்களிலும்  சமமான எண்ணிக்கையில் போட்டியாளர்கள் இருந்தாலும், மிகுந்த வலிமையுடன் கயிற்றை இழுக்கும் குழுதான் வெற்றி பெறமுடியும். இரண்டு குழுவிலும் சமமான எண்ணிக்கையில் போட்டியாளர்கள் இருந்தாலும் ஒரு குழுவிற்குத்தான், அதிக வலிமையுடன் இழுக்கும் திறமை உள்ளது என்றிருக்கும் போது,  பழக்கப்பதிவிற்கும், விளக்கப்பதிவிற்கும் இடையே நடக்கும் மனப்போராட்டத்தில், பழக்கப்பதிவின் குழுவில் எண்ணிலடங்கா பிறவிகளின் பதிவுகள் இருப்பதால், விளக்கப்பதிவின் குழுவில், இந்த ஒரு பிறவியின் விளக்கப்பதிவு மட்டுமே உள்ளதால் பழக்கப்பதிவு வெற்றி பெறுவது எளிதாக உள்ளது.  எனவேதான் ஒழக்க வாழ்விற்கான கயிறு இழுக்கும் போட்டியில் பழக்கப்பதிவே வெற்றி பெற முடிகின்றது. காரணம் பழக்கப் பதிவு இன்று நேற்று ஏற்பட்டதன்று.  தொன்றுதொட்டு, காலங்காலமாக பழக்கப்பதிவின் ஒவ்வொரு பிறவியிலும் மீ்ண்டும் மீண்டும்,  மீண்டும் (மீண்டும்infinite — to the power infinite)அழுத்தம் பெற்றுள்ளதால் பழக்கப்பதிவு விளக்கப்பதிவை வெற்றி கொள்கின்றது. 

       அப்படியானால், விளக்கப்பதிவின் அழுத்தம் அதிகரிக்க எத்தனை தலைமுறை காத்திருக்க வேண்டுமோ என ஐயமும், அச்சமும் எழலாம்.   இப்பிறவியிலே மட்டும், பெற்ற  விளக்கப்பதிவுகளைக் கொண்டே, பழக்கப்பதிவை இப்பிறவியிலேயே வெற்றிக் கொள்வதற்காக இயற்கை கருணையோடு கொடுத்ததுதான் கருத்தியல், செய்முறைப் பாடங்கள் அடங்கிய திருவேதாத்திரியமாகும். எனவே கருவில் திருஉடையவர்களல்லாதவர்கள்கூட இப்பிறவியிலே திரு எய்த முடியும் என்கின்ற  உறுதியினை அருளுகிறார்  அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    படம்-2-  கருவில் திரு உடையவர்களுக்கு  ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் என்பது எழ வாய்ப்பில்லை.  அப்படி ஏதேனும் போராட்டம் எழுந்தாலும் அவர்கள் எளிதில் பழக்கப்பதிவை வெற்றி கொள்வர்.  அவர்கள் முந்தைய பிறவிகளில் தீய வினைகளை சமன்படுத்தியவர்கள்.  மேலும் முற்பிறவியிலேயே, வாழ்வின் நோக்கம் என்பது என்ன என்று அவர்களின் ஆழ்மனது சிந்திருக்கலாம்.  அவர்கள் பண்பாளர்களாக, அல்லது பண்பாளராக ஆவதற்காகக் கருமையப் பதிவுகளை பிறக்கும் போது சொத்தாக கொண்டு வந்தவர்களாக இருப்பர்.

     அடுத்த விருந்தில் பழக்கப்பதிவிடம், விளக்கப்பதிவு தோற்பதற்குப் பின்னால் உள்ள அறிவியலை(hidden Science behind  the defeat of wisdom imprints (understanding) by imprints of  habits) வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளவாறு அறிவோம்.  தொடரும் 15-05-2016 ஞாயிறு.

     

    Loading