இன்றைய விருந்து

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?   3/?

    FEAST FOR CONSCIOUSNESS – FFC – 187

    அறிவிற்கு விருந்து – அ.வி. – 187

     08-05-2016—ஞாயிறு

    ffc-187

    kuRal-132_parithombi

    என்கின்ற குறளை நினைவுகூர்ந்து  திருவள்ளுவர் சூக்குமமாக நம் சத்சங்கத்தில் எழுந்தருள வேண்டுகிறோம். திருவள்ளுவரின் அருளை பெற்று இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம்.

        இக்குறளுக்கான பொருள், ஒழுக்கத்தைக் காத்து வாழ்ந்தால், அவ்வொழுக்கமே துணையாக விளங்கும் என்பதாகும். பக்தியில் இறை அருளை வேண்டுகிறான் மனிதன். இறை அருள் என்பது என்ன? எப்போதும் துணையாக, காப்பாக இருந்து தன்னை வழிநடத்திச் செல்வதற்கு இறை அருளை வேண்டுகிறான்.  துணையாகவும், காப்பாகவும் இருந்து அயராவிழிப்புணர்வோடு நல்வழியில் நடத்திச் செல்ல இறையருள் வேண்டும்.

       நல்வழியில் செயல்கள் அமைந்தால் விளைவு நல்லதாகத்தானே வரும்! நல்வழிச் செயல்கள்தானே ஒழுக்கம் என்பது. ஒழுங்காற்றலான இயற்கையினோடு/இறையோடு இணைந்து அருளைப் பெற ஒழுக்கந்தானே துணைசெய்யும்? செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்பதால் ஒழுக்கச் செயலிலேதான் இறைவன் மனிதனுக்குத் துணையாக வரமுடியும். அப்படி வந்தவர்தான் நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். மதா, பிதா செய்த புண்ணியத்தால் மனிதன் குருவை வந்தடைகிறான். மதா, பிதா செய்த புண்ணியம் என்பது என்ன? அவர்களின் ஒழுக்கச் செயல்களே புண்ணியப்பதிவுகளாகின்றன. அந்த கருமையத்தின் செராக்ஸ் நகல்களாக வந்துள்ள நமக்கு மகா புருஷர் குருதேவராகக் கிடைத்துள்ளார் என்பது இப்பிறவியிலேயே வீடுபேறு பெறுவதற்குக் கிடைத்த பேறாகும்.

        இன்றைய துணைத் தலைப்பு வினாவாக உள்ளது. யார் இந்த சீவன்? விடை மனிதனே தான் அந்த சீவன் என்கிறார் மகரிஷி அவர்கள். ஏன் அவ்வாறு கூறுகிறார்? ஏன் எனில் மனிதன் அவ்வாறுதானே இருக்கின்றான்? எனவே அவ்வாறு கூறுகிறார்! எவ்வாறு இக்கூற்று சரியாக இருக்கின்றது? ஆறாம் அறிவுடையவன் மனிதன். ஆகவே அறிய வேண்டியதை அறிந்து கொள்வது ஆறாம் அறிவின் சிறப்பு, இயல்பு என்பதால் மனிதன் அறிஞர்களிடமிருந்து விளக்கத்தைப் பெற ஆவல் கொள்கிறான். விளக்கத்தையும் பெறுகிறான். விளக்கத்தைப் பெறுவதோடு மட்டும் நின்று விடாமல் அதனை பயிற்சி செய்து . வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டியுள்ளது. அதாவது விளங்கியவாறு வாழவேண்டும். அப்போதுதான் அறிவிற்கு பயன் ஏற்படும். இங்கேதான் மனிதனுக்கு சிக்கல் வருகின்றது.

         என்ன சிக்கல் அது? விளங்கியவாறு வாழ முயற்சி செய்ய ஆரம்பிக்கும்போது, இதுவரை பலலட்சம் பிறவிகளில் விளக்கமில்லாமல், பெற்ற கருத்தொடராக வந்துள்ள விளங்காப் பழக்கப் பதிவுகள்தான் சிக்கல்களைத் தருகின்றன. மனிதனுடையது ஆறாம் அறிவு என்பதால், கிடைத்த விளக்கத்தை விடவும் முடியவில்லை. பழக்கப்பதிவுகள் தடுக்கின்றன. எனவே இந்த நிலையைத்தான் மகரிஷி அவர்கள் ‘போராடிக் கொண்டிருக்கும் நிலை’ என்கிறார்.

    உயிரினங்களில் வேறு எந்த சீவனுக்கும் இந்த நிலை என்பது கிடையாது.

       ஐந்தறிவு சீவன்களுக்கு புதியதாக விளக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஐயுணர்வு சீவ இனத்திலிருந்து வந்ததுதான், அறியும் திறனுள்ள ஆறறிவு சீவ இனம் என்பதால், விலங்கினத்தன்மையை நீக்கி, மனிதம் தழைக்க, அன்பும், கருணையுமான மனிதத் தன்மையோடு வாழ வேண்டியிருப்பதால் அறிஞர்களின் அறவுரைகளைத் தாங்கிய அறிவுரைகளை அறிந்து கொண்டு அதுபோல் ஒழுக்க வாழ்வு வாழ வேண்டியுள்ளது.

    இதுவரை ‘Science’ எனும் அறிவியலில் அறிவைப்பற்றிய(Consciousness) எளிமையான விளக்கங்கள் இல்லாத நிலையில்,சென்ற விருந்தில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவை, தான் அனுபவத்தில் அறிந்ததோடு மட்டுமல்லாது, அதனை இயலாக்கி, உலகசமுதாயம் அறிவை தன் அனுபவமாக அறிந்து கொள்ளும் வகையில் அறிவுப்பூர்வமாக தெரிவித்துள்ளதால் அறிவைப்பற்றிய இயல், அறிவின்—இயல் என்றும், அதனை முதன் முதலில் தெரிவித்ததால், வேதாத்திரி மகரிஷி அவர்களை முதல் அறிவின் –அறிவியலாளர் என்றும் அறிந்து கொண்டோம். ஏற்கனவே ‘science’ என்கின்ற ஆங்கில வார்த்தை, தமிழில் அறிவியல் என்று சொல்லப்படுவதால், ‘the Science of Consciousness’ ஐ அறிவியல் என்று சொல்லாமல், அறிவின்—அறிவியல் என்கிறோம்.

      

         இன்றைய விருந்தில் ‘What is Science?, விஞ்ஞானம், மற்றும் அறிவியல் ஆகிய சொற்களின் பொருள் பற்றியும், போராட்டம் என்பது என்ன, மனதுடன் போராடுவது என்பது என்ன என்று அறிந்து கொள்ள இருக்கிறோம். ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டிய காரணத்தையும், பலலட்சம்(6500000÷20=325000) தலைமுறைகளில் ஆன்மா ஏற்படுத்திக் கொண்ட வினைப்பதிவுகள் மற்றும் அதன் அழுத்தத்தையும், அது விளக்கப்பதிவை வெற்றி கொள்ளாமல் இருக்க எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    Science of Consciousness – அறிவு இயல்/அறிவியல்/அறிவின் இயல்

       Let us know what is Science? Science is the concerted human effort to understand, or to understand better, the history of the natural world and how the natural world works, with observable physical evidence as the basis of that understanding. The word science comes from the Latin “scientia,” meaning knowledge. … obtained and tested through scientific method [and] concerned with the physical world.

         Science is the study, description, experimental investigation and theoretical explanation of the nature and behaviour of phenomena in the physical and natural world. A branch of systematised knowledge as an object of study.

       ‘Science’ என்பது என்ன? ‘Science’ என்பது இயற்கையைப்பற்றியும், எவ்வாறு இயற்கை இயங்குகின்றது, இயற்கையிலுள்ள பொருட்கள் எவ்வாறு தோன்றின என்பது பற்றியும் அறிவு பூர்வமாக அறிவது.   இயற்கையிலுள்ள பொருட்கள் எவ்வாறு தோன்றின என அறிய வேண்டுமானால், பொருட்களுக்கு அடிப்படையாக உள்ளதை அறியவேண்டும். ஆகவே பொருட்களுக்கு அடிப்படையாகவுள்ள அணுக்களின்(விண்) இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இயற்கை இயங்குகின்ற தன்மைகளை அறிந்து கொள்ளும் விளக்கமே விஞ்ஞானமாகும். விண்+ஞானம்=விஞ்ஞானம்.

       அணுவின் அசைவு நிகழ்ச்சியாகும். அதிலிருந்து அணுக்கள் கூடி இணைந்த பல்வேறு நிகழ்ச்சிகளைக் காலம், தூரம், பருமன், வேகம் என்கின்ற 4 அளவைகளால்(measurements) கணிப்பது விஞ்ஞானமாகும். அந்த நிகழ்ச்சிகளால் மனித வாழ்வில் ஏற்படுகின்ற விளைவுகளை யூகித்து தன்னுடைய விருப்பத்திற்கும், தேவைக்கும், ஏற்றபடி அவ்விளைவுகளைப் பயன்படுத்தவும், இந்த நோக்கமும், செயலும் வெற்றி பெற உடல் கருவிகட்குத் துணைக் கருவிகளாக இயந்திரங்களையும், நுட்ப அளவைக் கருவிகளையும் உற்பத்தி செய்து பயன் கொள்வதும் விஞ்ஞானத்தின் சிறப்புக்கள்.

    ‘Science’ என்கின்ற ஆங்கில வார்த்தை தமிழில் `விஞ்ஞானம்’(விண்+ஞானம்=விஞ்ஞானம்) என்று சொல்லப்பட்டு வந்தது. இப்போது ‘Science’ என்கின்ற ஆங்கில வார்த்தை தமிழில் அறிவியல் என அழைக்கப்பட்டு வருகின்றது. ‘விஞ்ஞானம்’, ‘அறிவியல்’ ஆகிய இரண்டு சொற்களின் பொருளை கவனிப்போம்.

       விஞ்ஞானம் என்பது விண்ணைப்பற்றிய ஞானம்; ஞானம் என்றால் அறிவு, தெளிவு என்று பொருள். விஞ்ஞானம் என்றால் விண்ணைப்பற்றிய அறிவு. அதாவது அணு, அதன் துணை அணுக்களான புரோட்டான், நியுட்ரான், எலக்ட்ரான் ஆகியவைகளைப்பற்றிய அறிவு. ஆகவே அது விஞ்ஞானம் எனக்கூறப்பட்டு வந்தது.

       அறிவியல் என்கின்ற சொல் ஒரே சொல்லல்ல. அது இரண்டு சொற்களைக் கொண்டதாக உள்ளது. அதாவது அறிவு மற்றும் இயல் என்கின்ற சொற்களைக் கொண்டது. இந்த இரண்டு சொற்களைச் சேர்த்துத்தான் அறிவியல் என அழைக்கப்படுகின்றது. (மருத்துவம்+இயல்=மருத்துவவியல்) மருத்துவ இயல் (Medical Science) என்றால் அதில் மருத்துவம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மருத்துவம் பற்றி ஆராயப்படும். அதுபோன்று ‘Science’-அறிவியல்(அறிவு+இயல்=அறிவியல்) என்றால் அறிவைப்பற்றி ஆராய்ச்சி செய்யப்படவேண்டும். ஆனால் இதுவரை அது இடம் பெறவில்லையே. அறிவை பற்றி ஆராய்ச்சி இருக்கும் இயல்தானே அறிவியல் எனப்படவேண்டும். தற்போது ‘Science’ ஐ அறிவியல் என்று வழக்கத்தில் பொதுவாக கூறிவருவதால்,அறிவு பற்றிய அறிவியலை– ‘Science of Consciousness’ஐ நாம் ‘Medical Science’, ‘Physical Science’ என்று கூறுவது                   போல் அறிவின்-–அறிவியல் என்கிறோம். அறிவை ஐயமின்றி நுணுகி ஆராய்ந்துஅறிந்தவரை அறிவின் முதல் அறிவியலாளர் (First Scientist of Consciousness) என்கிறோம்.

        ‘பாவம், புண்ணியம்’ என்பது மதச்சார்புடைய வார்த்தைகள் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், ‘பாவம், புண்ணியம்’ என்பதனை அறிவியலாக்கி பாவம் என்பது ஒழுக்கமின்மையாகவும், தீயொழுக்கமாகவும், புண்ணியத்தை ஒழுக்கமாகவும் அறிவியல் ரீதியாகக் கூறுகிறார் மகரிஷி அவா்கள்.

         ஒழுக்கத்திற்கு மகரிஷி அவர்கள் கூறும் வரையறை என்ன? எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் விளைவால் தனக்கோ, பிறர்க்கோ, சமுதாயத்திற்கோ, எந்தவகையிலும் நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ தீங்கு நிகழாமல், நன்மையே இருந்தால் அது ஒழுக்கமாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே ஒழுக்கத்தின் விளைவு நன்மையாகின்றது. ஆகவே ஒழுக்கம் எப்போதும் நன்மையைத் தருவதால் அது புண்ணியச் செயலாகின்றது. தீங்கு நிகழ்ந்தால் அது ஒழுக்கமின்மை- தீயொழுக்கம் என்றாகின்றது. ஒழுக்கமின்மை தீங்கைத் தருவதால் அது பாவமாகின்றது.

       அறிஞர் ரூஸோ, சுவாமி விவேகானந்தர், திருவள்ளுவர், மகரிஷி அவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி கூறியுள்ள கூற்றுகளைப் பார்த்தோம். இந்த நான்கு கூற்றுகளையும் இணைத்து நாம் சிந்திக்க வேண்டியது என்ன? அறிஞர்கள் நன்றாக கூறியுள்ளார்கள் என்று கூறிவிட்டு விட்டு, அதோடு சென்று விடுவதா? இதற்காகத்தானா இந்த நான்கு அறிஞா்களும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறியுள்ளனர்?! சமுதாயம், ஒழுக்க வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக, சமுதாய அக்கறையோடு சொல்லி இருக்கிறார்கள் நான்கு அறிஞர்களும்.

       ‘ஒழுக்கம் போர்க்களம் போன்றது’ என்று ரூஸோ சொல்வதால் ஒழுக்கம் கடைபிடிப்பது கடினம் என்று ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் இருந்து விடுவதா? திருவள்ளுவர் ஒழுக்கத்ததைப்பற்றிக் கூறி 2046 வருடங்கள் கழிந்து விட்டன. இது வரை வந்துள்ள அறநூல்களே போதும் என்கிறார் மகரிஷி அவர்கள். இனிமேலும் புதிய அறநூல்கள் ஏதும் அவசியம் இல்லை என்கிறார். அறம்பிறழா நெறி நின்று வாழ, அவசியமான பொருட்களுடன் கல்வி கிட்டுவதற்கு அறவோர்களை திட்டமிட்டு அமல்  செய்ய வேண்டுகோள் விடுக்கிறார் அறநெறியாளரும், உலகநலத் தொண்டருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள். இங்கே சாதனையே அறநெறி(21.12.1961) என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை நினைவு கூர்வோம்.

    சாதனையே அறநெறி(21.12.1961)

    “அறநெறியைப் போதிக்க புதிய நூல்கள்

        அவசியமே இல்லைஇனி; மேலும் மேலும்

     அறநூல்கள் எத்தனையோ இந்நாள் மட்டும்

      அறிஞர் பலர் அளித்துள்ளார்; அவையே போதும்!

    அறம்பிறழா நெறிநின்று, மக்கள் வாழ

       அவசியமாம் பொருட்களோடு கல்வி கிட்ட,

    அறவோரே திட்டமிட்டு அமுல் செய்வீரே!

       அதன்மூலம் அறம்வளரும்; உலகம் உய்யும்.”  .. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    “ஒழுக்கம் போர்க்களம் போன்றது”, என்று அறிஞர் ரூஸோ சொல்வதால், போரிட்டுத்தான் ஒழுக்கத்தை வெல்ல வேண்டும் என்றாகின்றது. ஒழுக்க வாழ்வு வாழ வேண்டுமெனில் ஓயாமல் (இடை விடாது – தொடர்ந்து– consistent effort) மனதோடு போராட வேண்டும் என்கிறார் அறிஞர். ‘ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்’ என்பதால் கடைசி மூச்சு வரை மனப்போராட்டம் செய்து கொண்டு போராட்ட வாழ்க்கைதான் வாழ வேண்டுமா? அப்படியில்லை. எவ்வளவு சீக்கிரம், ஒழுக்க வாழ்க்கை வாழ்வது பழக்கத்திற்கு வந்து வழக்கமாகி விடுகிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் போராட்டம் நின்று விடும். விளைவு — ஒழுக்க வாழ்வு அமைதியினைத் தரும்.

       வினைப் பதிவே பிறவியாகத் தொடர்வதால் அதனைப்போக்க ஒவ்வொருவரும், வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும் என்கிறார்வேதாத்திரி மகரிஷி அவர்கள். (சிந்திக்க வினாக்கள்—76–28-05-2015–வியாழன்)தொண்ணூறு வயது முதியவர் கூடகடைசி மூச்சு வரை ஒழுக்க வாழ்வு வாழ்ந்தேதான் ஆக வேண்டும்.

        இங்கே மகரிஷி அவர்கள் கூறும் மனிதனைப்பற்றிய வரையறையை கவனிப்போம்   “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் மனிதன்”, என்கிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்களின் இந்தக் கூற்று ரூஸோ அவர்கள் கூறும் ஒழுக்கத்தைப் பற்றியா? ஆம். ஒழுக்கமில்லாமல் அறியாமையாலோ அல்லது அலட்சியத்தாலோ அல்லது உணர்ச்சி வயத்தாலோ, அல்லது இம்மூன்றும் சேர்ந்த அறிவின் குறைபாடுகளாலோ

           முழுமையான ஒழுக்கமில்லாமல்,

           பல தலைமுறைகள் வாழ்ந்து விட்ட ஆன்மாவிற்கு,

           இன்று ஒழுக்கவாழ்வின் மேன்மையை அறிந்து கொண்டு,

           நாளை முதல் ஒழுக்க வாழ்வு வாழ்வதென்பது,

         ஏற்கனவே ஒழுக்க நெறியில், வாழ்ந்து வரும், கருவில் திருஉடையவர்களைத்தவிர மற்றவர்களுக்கு சிரமம்தான் என்கின்ற எதார்த்தத்தை எடுத்துச் சொல்வதுதான் மகரிஷி அவர்கள் மனிதனைப் பற்றிக் கூறும் அந்த வரையறை. சிரமம் என்கின்ற எதார்த்த நிலையைக் கூறினாலும் பல்லாயிரம் பிறவிகளாக பழிச்செயல்களை செய்திருந்தாலும், ஒரு பிறவியிலேயே அதனை மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றலை இயற்கை கருணையோடு கொடுத்துள்ளது என்கிறார் மகரிஷி அவர்கள். அதுதான் தவமும், அறநெறிவாழ்க்கையுமாகும்.

    மனிதனுக்கான பொதுவான வரையறைகள் என்ன?

     Man is a bundle of thoughts. ——————— மனிதன் எண்ணங்களின் தொகுப்பு.

    Man is a social animal.———————————–மனிதன் ஒரு சமுதாயப் பிராணி.

    Man is a living being endowed with sixth sense. — மனிதன் ஆறாம் அறிவுடைய ஒரு உயிரினம்.

    மகரிஷி அவர்கள் கூறும் மனிதனுக்கான வரையறை என்ன? மகரிஷி அவா்கள் மனிதனுக்குக் கூறும் வரையறையாவது — “ பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்”

         மகரிஷி அவர்கள் கூறும் மனிதனுக்கான இந்த வரையறை, அறிஞர் ரூஸோ, “ழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” (சிந்திக்க அமுதமொழி – 49 – 20-02-2015—வெள்ளிக்கிழமை) என்று கூறுவதோடு ஒத்துப் போகின்றது. இரண்டு பொன்மொழிகளும் ஒத்துப் போகின்றது என்றால் இரண்டு பொன்மொழிகளும் ஒரே உண்மையைக் கூறுகின்றன.

       இரண்டு பொன் மொழிகளிலும் போராட்டம் என்பது பொதுவாக உள்ளது.

       ஆகவே போராட்டம் என்பதற்கான பொருள் அறிய வேண்டும்.

       மனதுடன் போராட வேண்டும் என்கிறார் அறிஞர் ரூஸோ. எவ்வாறு மனதுடன் போராடுவது?

       மனவளக்கலைஞா்களாகிய நாம் மனதைப் பற்றி அறிவோம். மனதை செம்மைப்படுத்தும் தெய்வீகப் பயிற்சியான அகத்தாய்வு பயிற்சியையும் செய்யத் தெரியும் நமக்கு.

       இந்த இரண்டு பொன் மொழிகளும் ஒரே உண்மையினை தெரிவிக்கின்றதுன்பதால், ஒழுக்கத்தைப்பற்றியே இரு அறிஞர்களும் கூறுகிறார்கள். அறிஞர் ரூஸோ, ஒழுக்கத்தைப் பற்றி நேரிடையாகவே கூறுவதற்கு, ‘ஒழுக்கம் கடைபிடிக்க போராட வேண்டும்’ என்கிறார்.  

       மகரிஷி அவர்கள் ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்பதால், மகரிஷி அவர்கள் ‘பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடுவது என்று கூறுவதும், அறிஞர் ரூஸோ ‘ஒழுக்க வாழ்க்கை வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்’ என்று கூறுவதும் ஒன்றே.   இருவருமே ஒழுக்கம் கடைபிடிப்பது பற்றி கூறுகிறார்கள்.

       சென்ற விருந்தில், ஏழுதலைமுறைகளில், 127 ஆன்மாக்களின் தொடர்பை அட்டவணையின் மூலமும்(Chart) அறியலாம் என்று கூறிஇருந்தோம். இச்சிந்தனை விருந்து நீண்டு கொண்டே இருக்கும் காரணத்தால், அதனை இவ்விருந்தில் கூற இயலவில்லை.

    அடுத்த விருந்தில் (11-05-2016—புதன்) அதனை அறிவோம்.  தொடரும். வாழ்க வளமுடன்.

     

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 2/?

    வாழ்க மனித அறிவு                                  வளர்க மனித அறிவு

    FEAST FOR CONSCIOUSNESS – FFC – 186
    அறிவிற்கு விருந்து – அ.வி. -186

     O4-05-02016—புதன்.

    FFC-186-Sub Title

     

     

    Amazing_Guru

    Scientist of Consciousness அறிவின் அறிவியலாளர்

     

    FFC-186-NE2-பெசெய்-ஒழுக்வாழ்போர ஏன்

    ஒழுக்க நெறி பற்றியும், ஒழுக்கத்தை வாழ்வில் உறுதியாகக் கடைபிடிப்பதிற்கு, மனதுடன் அறிவு போராட வேண்டியுள்ளதற்கான காரணம் என்ன, அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற வழி என்ன என்று சென்ற அறிவிற்கு விருந்தில் சிந்திக்க ஆரம்பித்தோம். அச்சிந்தனையில், இது வரை புண்ணியம், பாவம் என்கின்ற ஆன்மீகச் சொற்களுக்கு முறையே நல்லொழுக்கம், தீயொழுக்கம் ஆகியன எவ்வாறு விஞ்ஞானச் சொற்களாக அமைகின்றன என்று பார்த்தோம்.
    இன்றைய சிந்தனையில்,
    தடம் புரண்ட மனிதவாழ்க்கை எனும் ரயில் என்ஜினை(derailed man’s life—rail engine) எவ்வாறு போராடி, ஒழுக்க நெறி தண்டவாளப்பாதையில் (rail track), அதாவது வாழ்க்கை எனும் ரெயில் என்ஜினை தூக்கி வைத்து, வாழ்க்கை பயணத்தை
    செம்மையாகவும் சிறப்பாகவும் முடிக்கும் வழியில் வாழ்ந்து,
    தினந்தோறும் சங்கல்பம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் உயர் புகழை அடைந்து, நாம் இப்புவிக்கு வந்து போனதற்கான அடையாளத்தை (trace of this precious human birth) இப்பிறவியிலாவது, பதிப்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    இச்சிந்தனையில் அறிவு தன்னைப் பற்றி சொல் என்று அறிவுறுத்தியதால், அறிவு பற்றி சுருக்கமாக அறிவின்–அறிவியல் மற்றும் முதல் அறிவின்–-அறிவியாலாளர் யார் என்பது பற்றியும் அறிய இருக்கிறோம். ஆகவே, இன்றைய சிந்தனையான ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்கின்ற தலைப்பிலிருந்து வெளியே சென்று விட்டதாகக் கருத வேண்டாம். இச்சிந்தனையைச் செய்து கொண்டிருக்கும் அறிவே, தன்னை மேம்படுத்திக் கொள்ள முழுமை அடைய விரும்பித்தான் இச் சத்சங்கத்தில் அறிவு பங்கு கொண்டுள்ளது.
    ஒழுக்க வாழ்வு வாழ வேண்டும் என்கின்ற விளக்கத்தை பெற வேண்டும் என்று எண்ணுவது அறிவுதானே! ஆகவே அதனைப் பற்றி தெரிந்து கொள்வதும் பொருத்தமாக இருக்கின்றதல்லவா?! சந்தர்ப்பம் வரும்போது கூடுதலாகத் தெரிந்து கொள்ளப்பட வேண்டியது இருப்பதால் தெரிந்து கொள்வது நலம்தானே. கல்விக்கூடங்களில், நடத்தப்படும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக பாடத்திட்டம்(Syllabus) ஏற்படுத்தப்பட்டு, அதற்குமேல் அதிகமாக அந்த பாடத்தை படிக்க வேண்டிய அவசியமிருக்காது. அப்படி ஏதாவது அந்த பாடத்திட்டத்தையும் கடந்து, தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டால் அது ‘out of syllabus’ என்று கூறுவர். அதுபோல் அல்ல அறிவின் தரத்தை மேம்படுத்தி, அறிவை முழுமை செய்விக்கின்ற பாடம். எப்பொழுதெல்லாம் கூடுதலாக தகவல்கள் கிடைக்கின்றதோ, அதனை உள்வாங்கி வைத்துக் கொண்டால் நம்முடைய தொடர் சிந்தனைக்கு உதவியாக இருக்கும்.

    ஒழுக்க வாழ்விற்கு போராடவேண்டியிருப்பதால், எப்போது அப்போராட்டம் முடிவிற்கு வரும் என்பதனை  அறிவோம். யாரும் போராட்டத்தை விரும்புவதில்லை. அமைதியைத்தான் விரும்புவா். தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்காமல், அமைதியை இழக்கவைக்கும் போராட்டத்தை இன்னமும் எத்தனை நாள்தான் நடத்தி வாழ்க்கையையே வீணடிப்பது? ஆகவே ஒழுக்க வாழ்விற்காக, மனதுடன் நடத்துகின்ற போராட்டம் எப்போது முடிவிற்கு வரும் என்கின்ற ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அகவே போராட்டத்தின் முடிவு எப்போது வரும் என்கின்ற ஐய-வினாவிற்கு விடையை அறிவோம்.

    FFC-186-ஒழுக்க வாழ்விற்கு பெட்டிச் செய்தி

    அடுத்ததாக, 2046 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த – உலக பொது மறையை அருளிய அறிஞர் திருவள்ளுவர், ஒழுக்கம் பற்றி கூறுவதனை ஆராய்வோம்.
    திருவள்ளுவர், ஒழுக்கம் உயிரைவிட மேலானதாகக் கருதப்பட வேண்டும் என்று கூறி ஒழுக்கத்திற்கு ஓர் அதிகாரத்தையே ஒதுக்கி அதற்கு ஒழுக்கமுடைமை(ஒழுக்கம்+உடைமை) எனப் பெயரிட்டு பத்து குறட்பாக்களை அருளியுள்ளார். ‘உடமை’ என்றால் ‘ஒருவருடையது’ என்பதாகும், ‘ஒருவருடையது’ என்கின்றபோது, அது அவரது செல்வமாகிவிடுகின்றது. ஆகவே ஒழுக்கமுடைமை என்று கூறுவதால் ஒழுக்கத்தைச் செல்வமாகக் கருதுகிறார் அறிஞர் திருவள்ளுவர்
    செல்வம் சோ்ப்பது எதற்காக? தேவை ஏற்படும் போது செலவழிப்பதற்காக. தேவையைப் பூர்த்தி செய்தால் மனம் இன்புறும். செல்வம் இல்லை எனில், தேவையைப் பூா்த்தி செய்ய முடியாது. தேவையைப் பூர்த்தி செய்ய வில்லையென்றால், அப்போது மனிதனுக்குத் துன்பம் தானே வரும்? பொருட்செல்வம், தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள உதவுவது போல், ஒழுக்கச்செல்வம் மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும். ஆகவே ஒழுக்கமுடைமை மனிதனுக்கு இன்பத்தைத் தரவல்லது. ஒழுக்கச் செல்வம் மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்கின்றபோது மனிதனின் எந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும்?
    மனிதனின் பொதுவான தேவைகள் என்ன? மனிதனின் இன்றியமையாத் தேவைகள் மூன்றாகும். அவை உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம். இந்த மூன்றுத் தேவைகளையும் பூா்த்தி செய்து கொள்வதற்கு மனிதனுக்கு பொருட்செல்வம் தேவையாக உள்ளது. அதற்காக மனிதன் உழைத்து பொருளீட்டுகிறான். அதில் ஒரு பகுதியை சேமித்து வைக்கிறான். ஒழுக்கச் செல்வம் பூா்த்தி செய்யும் அந்த தேவை என்ன? மூன்று இன்றியமையாத் தேவைகளும் மனிதனுக்கு எதற்காகத் தேவை? மூன்று இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியாகவில்லையெனில் இன்பமாக வாழமுடியுமா?  முடியாது.
    அப்படியானால் மூன்று இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் மனிதன் இன்பமாக வாழ்கின்றானா? வாழ முடிகின்றதா மனிதனால்? எதார்த்த நிலை என்ன? எதார்த்தத்தில், இரு தரப்பினருமே, அதாவது மூன்று இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியானவர்களும், பூர்த்தியாகாதவர்களும் அமைதி இழந்து துன்ப வாழ்வு வாழ்கின்றனர். காரணம் என்ன?
    மூன்று இன்றியமையாத தேவைகள் பூர்த்தியானவர்கள் ‘இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்’ என்கின்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனர். சிக்கிக் கொண்டால் வாழ்க்கை சிக்கலாகத்தானே ஆகிவிடும். சமுதாய அமைப்பும் ‘இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்’ என்கின்ற வலையில் சுலபமாகச் சிக்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலையாகவும், முரணான பேராசையை தூண்டிவிடுவதற்கு மேற்கொண்டு தூபம் போடுவதாகவும் உள்ளது.

    FFC-186- ஒழுக்கச் செல்வம்

    மனிதன் மனிதனாகத்தானே வாழ்கிறான். வாழ முடியும். இயற்கை எவ்வாறு படைக்கின்றதோ அவ்வாறாகத்தானே(வேதாத்திரிய கருத்து படைப்புக் கருத்து அல்ல) வாழ முடியும் என ஐயங்கள் பல எழலாம்.

         மனிதர்கள் யாரும்,  விரும்பி பிறப்பதில்லை. இயற்கையின் தன்மாற்ற நந்தவனத்தில் வண்ணமும், நறுமணமும் கொண்டு இறுதியாகப் பூத்த மலர் தான் மனிதன். மனிதனின் பிறப்பு என்பது இயற்கையின் நிகழ்ச்சி. ஆகவே மூன்று இன்றியமையாத் தேவைகள் பூா்த்தியாகிவிட்ட பிறகு, மனிதன் மனிதனாக வாழ்வது என்பதுதான் அந்தத் தேவை.

        மனிதன் மனிதனாக வாழ்வது ஒரு தேவையா? இயற்கையில், மற்ற உயிரினங்கள் எதற்காக பிறவி எடுத்ததோ அதற்காகவே வாழ்கின்றன.

    உதாரணத்திற்கு, நல்ல பாம்பு படம் எடுத்து ஆடி சீறி விரோதியை பயமுறுத்தும். அது இயற்கை கொடுத்த தற்காப்புத் திறன். மற்றொரு உதாரணம் பூனை. இரையைத் தேடும் பூனை, இரையை நோக்கி நடந்து செல்லும் போது, தான் நடக்கும் சப்தத்தை இரையாகவிருக்கும் உயிர், அதாவது இரையாகிய எலி அறிந்து ஓடிவிடாமல் இருக்க கால்நகங்களை மடக்கி வைத்துக் கொண்டு நடந்து, இரை மீது பாய்ந்து இரையான எலியைக் கவ்விப் பிடிக்கும்.

    ஆனால், மனிதன் மட்டும், ஆறாம் அறிவிருந்தும், மனிதனாக வாழவில்லை. அப்படியென்றால் என்ன பொருள்? மனிதன் ஆடை அணிந்து கொள்கிறான். தன்னை அழகு படுத்திக் கொள்கிறான். இன்னும் எவ்வாறு மனிதனாக வாழ வேண்டும் என ஐயம் எழலாம் ஆறாம் அறிவிற்கு.

         இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தில், மனிதஇனம் விலங்கினத்திலிருந்து வந்தது. எதற்காக? மீண்டும் விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டு வாழ்வதற்காகவா?

          இயற்கை/இறை அன்பும் கருணையுமானது. இயற்கை/இறை மனிதனிடம் தான் சிறப்புறுகின்றது.

       இயற்கை/இறை தன்னுடைய தன்மாற்றப் பயணத்தில் மனிதனோடு உருமாற்றத்தை நிறுத்திக் கொண்டது. இதற்கு மேலும் அதற்கு உருமாற்றம் தேவையில்லை. உருவத்தில், அழகில் சிறந்து விளங்குகிறான் மனிதன். ஆனால் அறிவில் சிறந்து விளங்குவதில் தவறிவிடுகிறான். மனிதன் மனிததரத்தில் சிறந்து விளங்க வேண்டும்.

         எனவேதான் முன்னாள் இந்திய ஜனாதிபதியும் தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள், “இன்னமும் பரிணாமம் பூர்த்தியாகவில்லை” என்கிறார்.
     ஒழுக்கத்தைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவது என்ன? – “மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்று இயல்புகளால் உருவாக்கப்படுகிறான் மனிதன். இதில் தெய்வீக இயல்பு வளர்ப்பது ஒழுக்கமாகும்.“ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

          மனிதனின் மூன்று நிலைகளில் மூன்றாவதும் கடைசியுமான, உன்னதமுமான நிலைக்கு தெய்வீக இயல்பை வளர்ப்பதுதான் ஒழுக்கம் என்று சுவாமி விவேகானந்தர் கூறுவதனை கூர்ந்து கவனிக்க வேண்டும். மனிதனாகிவிட்டால் மட்டும் போதாது, அவ்வையார் கூறும் அரிதாகிய மனிதப் பிறவி எடுத்தமையின் பயனாகிய ஞானத்தை அடைய வேண்டும். ஞானம் பெற்றால்தான் விவேகானந்த சுவாமிகள் கூறும் – விரும்பும் தெய்வீக இயல்பை அடைய முடியும்.
    ஒழுக்கத்தைப் பற்றி முதல் அறிவின் – அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன? ‘அறிவின் – அறிவியலாளர்’ என்றால் என்ன? அறிவின் – அறிவியலைக் கண்டுபிடித்தவர் அறிவின் – அறிவியலாளர். அறிவின் – அறிவியல் என்பது என்ன? அறிவைப்பற்றிய விளக்கங்களைத் தெரிவிக்கும் இயல்-அறிவியல். அறிவின் – அறிவியல் முதன்முதலில் தந்தவர் மகரிஷி என்பதால் அவர்களை முதல் அறிவின் – அறிவியலாளர் என்கிறோம்.

    இயல் என்பது என்ன என்று சாக்ரடீஸ் கூறுவது:- “இயல்வழியாக அறிவைப் புகட்டுவதால் அது அறிவியல் எனப்படுகின்றது. ஏன், எதற்கு, எப்படி எனக்கூறுவது இயல். எதன் வழியாக, எத்துறையைப்பற்றி அறிவு புகட்டப்படுகின்றதோ, அவ்வழி அத்துறையின் இயல் எனப்படுகின்றது”. உதாரணத்திற்கு மருத்துவத்தைப் பற்றிய அறிவு புகட்டும் இயல் மருத்துவ இயல் எனப்படுகின்றது, அதுபோல் ‘அறிவைப்’ பற்றிய அறிவை புகட்டுவதால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவைப் பற்றி ஏற்படுத்திய இயலை அறிவின்—அறிவியல் என்கிறோம்.

    அறிவைப்பற்றிய விளக்கங்கள், அதாவது,

    1) உயிர்களின் அறிவினது மூலம் (பேரறிவு ஆதியும் அந்தமும் இல்லாதது.. அது தொடக்கமில்லாதது-அனாதியானது. எனவே அதற்கு மூலமில்லை)
    2) அறிவின் ஆரம்பம்,
    3) அறிவின் இருப்பிடம்,
    4) செந்நெறி,
    5) மற்றும் அறிவின் ஏழுவகை செயல்பாடுகள், (அமைப்பு, துல்லியம், ஒழுங்கு, உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல், தன்னையே அறிதல்)
    6) ஆட்சியின்றி ஆளுகின்ற செந்திறமை,
    7) மனிதன் அறிவை முழுமைப்படுத்த வேண்டிய அவசியமும், அதற்கான வழிகளும்,
    8) செயலுக்கு எற்ற விளைவினைத் தரும் செங்கோலாட்சி.
    9) அறிவை ஆட்சி செய்து பெறுகின்ற அறிவாட்சித்தரம்(personality) பெறுவதற்கான பயிற்சிகள்,
    10) அறிவின் பூரண அமைதியான மனிதகுலத்தின் பூர்வீகசெல்வத்தை அனுபவிக்க வழிகள் – திட்டங்கள் கொண்ட உலக சமாதான திட்டம்.

    ஆகியவைப் பற்றிய அறிவுப்பூர்வமான(விஞ்ஞானமாக) விளக்கங்கள் கொடுத்துள்ளதை அறிவின்—அறிவியல்(Science of Consciousness) என்றும், அதனை அறிவுடைய எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் கண்டுபிடித்து உலகுக்கு, முதலில் சொன்ன(explorer of Consciousness) வேதாத்திரி மகரிஷி அவர்களை அறிவின் முதல் அறிவியலாளர்(First Scientist of Consciousness), என்று கூறுவது, அவருடைய கண்டுபிடிப்பின் சிறப்பை அறிந்த மகிழ்ச்சி பூரிப்பில் கூறும் போற்றுதலாகும். மேலும் நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே” என்று அவ்வையார், தான் அருளிய ‘நல்வழி’ யில் மொழிந்துள்ளார். இதே போன்று மகரிஷி அவர்கள் கூறும் கவியினை நினைவு கூர்வோம்.

    FFC-87எப்பொருளை-to-post-on-31-05-15

    நல்லோர் குணங்களை எப்போது எடுத்துரைக்க முடியும்?

    அவ்வையார் கூறும் அந்த ‘நன்று’ தான் என்ன?

    இங்கே பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் பொன் மொழியான ‘தான் உயராது – மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது. ரசிக்கவும் முடியாது.’ என்பதனை கூர்ந்து நோக்க வேண்டும்.

    கூர்ந்து நோக்கினால், அவ்வையார் கூறும் ‘நல்லோர் குணங்களுரைப்பதுவும் நன்றே’ என்பது, மகரிஷி அவர்கள் கூறுவது போல் ‘அந்த நல்லோர் குணங்களை ரசிப்பதாலும், மதிப்பதாலும் நாமும் நல்லோர் கூறும் பாதையில் உயர்ந்து வருகிறோம் என்பதில் உறுதிப்பாடு கிடைக்கப்பெற்று ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

    அடுத்த விருந்தில்(08-05-2016) அறிவியல் மற்றும் விஞ்ஞானம் பற்றியும், மனிதனுக்கான வரையறைகளில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள மனிதனுக்கான வரையறைப் பற்றியும், எண்ணிலடங்கா பிறவித் தொடரில், இப்பிறவியோடு கூடிய முந்தையை, ஏழு தலைமுறைகளில், 127 ஆன்மாக்களின் தொடர்பை அட்டவணையின் மூலமும்(Chart) அறிய இருக்கிறோம். தொடரும்– 08-05-2016

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 1/?

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    FFC – 185

    01-05-2016—புதன்

    FFC-185-ததிருவள்ளுவர் படம்with kural

    FFC-185-sub title-ஒழக்கவாழ்விற்கு போராட்டம் ஏன்-

    இரண்டாயிரத்து நாற்பத்தோறு வருடங்களுக்கு முன்னரே திருவள்ளுவர் ஒழுக்கத்தை செல்வமாகக் கருதி, ஒழுக்கமுடைமை எனும் அதிகாரத்தை இயற்றி, அதில் பத்து கோணங்களில் ஒழுக்கத்தை பற்றி தெளிவுபடுத்த. குறட்பாக்களை அருளியுள்ளார். அதில் முதல் குறள், ஒழுக்கம் சிறப்பைத் தருவதால், ஒழுக்கம் உயிரைவிட மேலானதாகக் கருதப்படுகின்றது என்கிறார் திருவள்ளுவர். அறிஞர் ரூஸோ “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்கிறார். ஒழுக்கத்தில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும் என்று அறிஞர் ரூஸோ கூறுவதால் ஒழுக்கத்தில் வாழ்வதை விட்டு விடமுடியுமா? முடியாது. மீண்டும் திருவள்ளுவர் கூறுவதனை கவனத்தில் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் இரண்டாவது குறளில் என்ன கூறுகிறார்?

    பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்துஓம்பித்

    தேரினும் அஃதே துணை.                              குறள் எண். 133

    பொருள்: ஒழுக்கத்தைக் காத்தால் அவ்வொழுக்கமே துணையாக இருக்கும்.

    எதற்காக ஒழுங்காற்றலாக திகழ்கின்ற இயற்கையின்/இறையின் அருள் வேண்டப்படுகின்றது? மனிதன் தனக்கு பாதுகாப்பு, துணை வேண்டி ஒழுங்காற்றலாகத் திகழும் இயற்கையின்/இறையின் அருளை வேண்டுகிறான். ஆகவே திருவள்ளுவர் கூறும், துணையாக இருக்கும் ஒழுக்கத்தைக் காக்க வேண்டியது அவசியமாகின்றது அன்றோ!

    அறிஞர் ரூஸோ கூறும் ஒழுக்கத்திற்கான போராட்டம் பிறருடன் அல்ல. ஒழுக்க வாழ்வு என்பது திருந்தி வாழ்வது. ஒழுக்க வாழ்விற்காக நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டியிருப்பதால், ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் என்பது நம்மோடு தான் நடைபெற வேண்டும்? போராட்டம் இல்லாமல் திருந்துவது என்பது எல்லோருக்கும் எளிதல்ல. இதுவரை அவரவர் பழகிய பழக்கப்பதிவின் அழுத்தத்தைப் பொருத்தது. போராட்டம் நம்மோடு என்றால் நம்மனதோடுதான் போராட்டம் நடைபெற வேண்டும். இங்கே நம் மனமேதான் குற்றவாளியாகவும், நீதிபதியாகவும் செயல் புரிந்து தண்டனை அளித்துக் கொண்டு திருந்துவதற்கு பெரும் முயற்சி செய்ய வேண்டும்.

    ஒழுக்கத்திற்கு தன்னை மாற்றிக் கொள்வதற்கு போராட வேண்டியுள்ளது என்பதால் ஒழுக்க வாழ்வை விட்டுவிடுவது என்பது புண்ணியத்தையல்லவா இழப்பதாகிவிடும். நல்லொழுக்கம் என்பதற்கான ஆன்மீகச் சொல் ‘புண்ணியம்’. தீயொழுக்கம் என்பதற்கான ஆன்மீகச் சொல் ‘பாவம்’. ‘புண்ணியம்‘, ‘புண்ணியம்’, ‘பாவம்’ என்கின்ற ஆன்மீகச் சொற்களுக்கான விஞ்ஞானச் சொற்கள் முறையே நல்லொழுக்கம், தீயொழுக்கம் ஆகும். விஞ்ஞானச் சொற்கள் என்பது என்ன? நல்லொழுக்கமுள்ள எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகிய மூன்றின் விளைவுகள் நல்லபயன்களாகத்தானே இருக்கும். தீயொழுக்கமுள்ள எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் தீயபயன்களையல்லவா கொடுக்கும். இக்கூற்றில் விஞ்ஞானம் இல்லையா? நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்பதனை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளாதா? இதில் ஏதும் மூடநம்பிக்கையுள்ளதா? நல்லொழுக்கம் நல்ல பயன்களையும், தீயொழுக்கம் தீய பயன்களைத்தரும் என்பது விஞ்ஞான அடிப்படையில்தான் உள்ளது. ஆகவே நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் ஆகிய சொற்களை விஞ்ஞானச் சொற்கள் என்கிறோம். நாம் computer உலகில் இருக்கிறோம். Computerல் உள்ள Chipset, memory registers மற்றும் ALU(arithmetic and logic unit) போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் நாம் அனைவரும் நம் கருமையம் என்கின்ற Chipset ல் பதியப்பெற்ற நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கப்பதிவுகளை விஞ்ஞான கண்ணோட்டத்தோடே அணுகி, விஞ்ஞான சொற்களாக ஏற்றுக்கொண்டேதான் ஆகவேண்டும்.

    அறிஞர் ரூஸோ கூறும் போராட்டத்தைத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்கிறார். ஒழுக்கம் பின்பற்றாது வாழ்ந்தது பல பிறவிகளில் பழக்கப்பதிவுகளாகி அழுத்தம் பெற்றுவிட்டது. இப்பிறவியில் ஒழுக்கத்திற்கான விளக்கம் பெற்றுள்ள கருமையப் பதிவில் வலிமை குறைவாக உள்ளது. ஒழுங்காற்றலாக திகழவேண்டிய அறிவிற்கு ஒழுக்க-விளக்கத்தை விடவும் முடியவில்லை. ஆனால் ஆதே நேரத்தில் ஒழுக்கமற்ற செயல்பதிவுகளின் பதிவுகள் வலிமையோடு இருப்பதால் விளக்கப்பதிவுகள், பழக்கப்பதிவுகளுடன் போராட வேண்டியிருக்கின்றது. இதனைத்தான் அறிஞர் ரூஸோ போராட்டம் என்கின்றார். மகரிஷி அவர்கள், ‘போராடிக் கொண்டிருக்கம் சீவன் மனிதன்’ என்கிறார்.

    அறிஞர்கள், தாங்கள் கூறுவது அமுத மொழிகள் என்று அவர்களே சொல்லிக்கொள்வதில்லை. எந்த சமுதாயத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அந்த சமுதாயம்தான் அறிஞர்களின் கூற்றுக்களை அமுத மொழி என அழைக்கின்றது. மக்கள் பாராட்ட வேண்டுமென்று என்பதற்காக, அறிஞர்கள் அமுத மொழிகளை எழுதுவது இல்லை. அவற்றைச் சிந்தித்து உணர்ந்து அன்றாட வாழ்க்கைக்கு இச்சமுதாயம் பயன்படுத்தி வாழ வேண்டும் என்று விரும்பியே, இயற்கை அறிஞர்களின் வாயிலாக அறநெறி அறிவுரைகளை அமுதமொழிகளாக வழங்கி வருகின்றது.

    அறிஞர்களின் அமுதமொழிகளோ, கவிகளோ, எப்போது பயனாகும் என்றால், அவற்றை கண்ணுறுகின்ற மனிதன், அந்த அறவுரைகளை மதித்து நடக்கும்போது போதுதான். அமுத மொழிகளை, வெறுமனே வாசிப்பதானால் அது மூளை அளவில் செல்வதோடு நின்று விடுவதில் மட்டும் பயனில்லை. மூளை வழியாகச் சென்று அது கருமையத்திற்குள் அழுத்தமாக பதிய வேண்டும். பிறகு மனம் அதனை விரும்பி மனதில் உருவகப்படுத்த வேண்டும்(contemplate). பின்னர் அமுத கூறியபடி மாற வேண்டும்.

    அழுத்தமாக பதிதல் என்பது ஆழ்ந்து விரிந்து சிந்தனை செய்தலின் பதிவுகளே. மீண்டும் மீண்டும் அதனை நினைவிற்கு கொண்டு வந்து ஆராய வேண்டும்.

    இப்புவி மீது அறிஞரும் வாழ்கிறார், நாமும் வாழ்கிறோம். அறிஞர் கூறும் அமுத மொழிகள் அவர் வாழ்க்கையில், தான் பெற்ற அனுபவம், அல்லது பிறரது வாழ்க்கையில் நடப்பதைக் கூர்ந்து கவனித்து அதில் கண்ட வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் கூறுவதாகும். அறிஞரும் நம்மைப் போன்று தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்து பிறந்தவர்தானே. வாழ்வியல் உண்மைகளை அறிந்து அறிஞரால் கூறுவது நமக்கு ஏன் முன்னரே தெரியாமல் போய்விட்டது? அறிஞர் எடுத்துக் கூறிய பிறகுதானே நமக்கு அந்த வாழ்வியல் உண்மை நமக்கு தெரிய வருகின்றது. அப்படியே தெரிய வந்தாலும் நாமோ, இந்த சமுதாயமோ அதனை சிந்தித்து உணர்ந்து உறுதிப்படுத்தி வாழ்வதில்லை. ஏன்? அவ்வாறாக இச்சமுதாயம் வாழ்ந்திருந்தால் தனது பூர்வீகச் சொத்தான அமைதியை இழந்து தவிக்க வேண்டிய நிலை இருந்திருக்காது. ஏதார்த்தத்தில் அவ்வாறு இல்லை. அதனை சிந்திக்கவே தான் இன்றைய விருந்து.

    இப்பொழுதாவது. வாழ்வியல் உண்மைகளைக் கூறும் விடிவெள்ளியான திருவேதாத்திரியத்தை உலகசமுதாயம், மதித்து போற்றி, பின்பற்றி வாழ்வதுதான் உலக சமுதாயத்திற்கு விடிவு. அதற்காகத்தான், உலக சமுதாயத்திற்கு சேவை செய்யவே உலக சமுதாயச் சேவா சங்கத்தை தோற்றுவித்துள்ளார் பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஒழுங்காற்றலாகிய இயற்கை/இறை மனித உடலில் ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டு உடலை சீராக இயக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், மனித மனதிலும், சீராக ஒழுங்குடன் இயங்கி வாழ்வில் ஒழுக்கம் மலர, மனிதன் எவ்வாறு அதற்கு வழிவிட வேண்டும் என்பது பற்றிய, சிந்தனையை இன்றைய அறிவிற்கு விருந்தாக அருந்த இருக்கிறோம். அறிஞர் ரூஸோ, திருவள்ளுவர், சுவாமி விவோகனந்தர், வேதாத்திரி மகரிஷி அவர்கள் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியுள்ள அத்துனை அறிஞர்களின் அறிவாற்றல் துணையுடன் இச்சிந்தனையை தொடங்குகிறோம்.

    குருவணக்கம்

    FFC-185-அறிவேதான் தெய்வம்-

    என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கவி இயற்றி சூசகமாக அவ்வையார் கூறிய அறிவினராகிய நல்லோர் இணக்கத்தை பெற்றுக் கொள்ளச் செய்து, ஒழுக்கவியலைப் போதிக்க, இரண்டாம் உலகப் பொது மறையான திருவேதாத்திரியத்தைத் தந்த அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களையும் நினைவு கூர்வோம். அகவினத்தார்க்கு சாகா வரமும், மற்றவர்களுக்கு பரிபக்குவ நிலையும், தருவதாகவும், திருத்திடுவோம் என்று, திருகாப்பிட்டுக் கொள்ளும் போது அளித்த வள்ளலாரின் உறுதிமொழியும் நமக்கு வெகுவாக துணை நின்றே நம்மை எல்லாம் வழிநடத்துகின்றது. அந்த வழிநடத்துவதில் இடம் பெற்றது இன்றைய சிந்தனையும்.

    முதலில் அறிஞர் ரூஸோ ஒழுக்கம் பற்றி கூறுவதனை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.

    “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்கிறார் அறிஞர் ரூஸோ. இங்கே எழுகின்ற வினா ‘ஏன் ஒழுக்கத்தை போர்க்களத்தோடு ஒப்பிடுகிறார்’ என்பது. ஒழுக்க நெறியில் வாழ வேண்டும் என முடிவு செய்து அதற்காக, ஆன்மீகப் பயிற்சிகளை விடாது செய்து வருபவர்கள், ஒழுக்கம் போர்க்களம் போன்றது என்று அறிஞர் ரூஸோ கூறுவதனை அனுபவித்திருப்பர். மற்றவர்களுக்கு அறிஞர் ரூஸோவின் இந்த வேத வாக்கு எந்த வித சலனத்தையும் ஏற்படுத்துவது கடினம்.

    ஒழுக்கத்தில் வாழ வேண்டுமானால் ஓயாமல் மனதோடு போராட வேண்டும் என்கிறார் அறிஞர் ரூஸோ. அப்படியானால் ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டுமெனில் வாழ்க்கை முழுவதும் மனதோடு போராடிக் கொண்டிருக்க வேண்டுமா? மனப் போராட்டத்திற்கு முடிவு என்பது கிடையாதா? ஒழுக்கத்திற்கான போராட்டமேதான் வாழ்க்கையாகிவிடுமே என்று ஒழுக்கத்திற்கான போராட்டத்தை கைவிட்டு விடலாமா என்று கூடத் தோன்றலாம். எந்த ஒரு பயிற்சிக்கும் முடிவு என்பது உண்டு. அதுபோல் ஒழுக்கப் பயிற்சிக்கான முடிவினை, தெய்வீகப் பயிற்சியான தற்சோதனையின் வழியாக விரைவில் பெற்று விட்டால் ஒழுக்கத்திற்கான போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். பின்னர் வாழ்நாள் முழுவதும் ஆனந்த வாழ்வு வாழலாம்.

    இப்பொழுது வேண்டியது யாதெனில், ‘மனிதஇனம் ஒழுக்க வாழ்வு வாழவில்லை எனில், வேறு எந்த உயிரினம் ஒழுக்க வாழ்வு வாழமுடியும்’ என்பதனை விளங்கிக் கொண்டு, ஒழுக்கத்திற்கான சரியான வரையறையைத் தெரிந்து கொண்டு, ஒழுக்கத்திற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, அதற்கான எளிய பயிற்சிகளையும் செய்து வருவதுதான் தேவை.

    இயற்கை வகுத்துள்ள ஒழுக்கத்தைப்பற்றி அறியாதவர்கள் ஏராளம்! ஏராளம்!. சரியான ஒழுக்கத்தைப் பற்றி கவலைப்படாதவர்களே அதிகம். ஒழுக்கப்பயிற்சியில் அது போராட்டமாக உள்ளது என மனம் தளர்வடைந்து, ஒழுக்கப்பயிற்சியினைக் கைவிட்டவா்களும் இருக்கின்றனா். ஒழுக்கத்திற்கான போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள்தான் அறிஞர்கள், ஞானிகள், நெறிசார்ந்த சான்றோர்களாவார்கள். நெறியைச் சார்ந்து இருப்பதால் அவர்கள் சான்றோர்களாகிறார்கள்.

    ஒழுக்கம் போர்க்களம் என்றால், யார் யாரிடம் போரிட வேண்டும்? மனிதன், தான், தன்னுடனேயே போராட வேண்டும். “மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்” என்று உலக நீதியில், உலகநாதர் கூறிய வேதவாக்கினை நினைவில் கொண்டு, மனம் சொற்படி போகாமல் அறிவு சொல்லும் வழியில் சென்று கொண்டு போராட்டத்தில் வெல்ல வேண்டும். போராட்டம் என்றால் இருவருக்கிடையே நடப்பது. ஒரு மனிதன் தன்னுடன் போராட வேண்டும் என்றால் இன்னொரு மனிதன் யார்? ஒரு மனிதனுக்குள் இன்னொரு மனிதன் இருப்பதாக அல்லவா அர்த்தம் ஆகின்றது. ஒழுக்கத்தைப் பற்றி, வேறு சில அறிஞர்கள் கூறுவதனை ஆராய்ந்து இதற்கான பொருள் என்ன என்று அறிவோம். போராட்டம் என்பது ஒரு செயல். எனவே எந்த ஒரு செயலுக்கும் விளைவு உண்டு என்பதால், ஒழுக்கத்திற்கான மனப்போராட்டத்திற்கும் முடிவு உண்டு. அந்த முடிவு எப்போது கிட்டும்? அடுத்த விருந்தில் அறிவோம். அடுத்த விருந்தில் அறிவின்-–அறிவியல், மற்றும் முதல் அறிவின்-அறிவியலாளர் யார் என்பது பற்றியும் அறிய இருக்கிறோம். தொடரும் 04-05-2015–புதன் அன்று தொடரும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 11/?

     

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    FFC – 184

    27-04-2016—புதன்

    FFC-SUB_title

    FFC-166-dheaivappulavar

    வாழ்க வளமுடன்.

    கடந்த அறிவிற்கு விருந்தில், செம்பொருளாகிய மெய்ப்பொருளை அறிந்து, அறிவை முழுமை அடையச் செய்து கொண்டிருக்கின்ற மனவளக்கலைஞர்களாகிய நாம், எது அறிவு என்று திருவள்ளுவர் கூறுவதனை அறிந்து கொண்டோம். இன்றும் ‘எது அறிவு’ என்று கூறுகின்ற மற்றுமொரு குறளையும் அறிந்து கொள்வோம்.
    மெய் உணர்தல்
    “பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
    செம்பொருள் காண்பது அறிவு”                            குறள் எண் 358

    பொருள்: ‘பிறவித்துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு, முக்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு’ என அறிஞர்கள் இக்குறளுக்குப் பொருள் கூறுகின்றனர்.

    இங்கு ஆய்வு செய்ய வேண்டியவைகள் மூன்று உள்ளன. அவையாவன:

    1) பிறவியே துன்பமாவது,
    2) அதற்குக்காரணமான பேதைமை—அறியாமை,
    3) முக்தி.

    இக்குறளில் ‘பிறப்பு என்னும் பேதைமை’ என்றுதான் உள்ளது. ‘துன்பம்’ என்கின்ற வார்த்தையே காணப்படவில்லை. இருப்பினும் இக்குறளுக்குப் பொருள் கூறும்போது பிறவியைத் துன்பமாகக் கருதி ‘பிறவித்துன்பத்திற்குக் காரணமான அறியாமை’ என்கின்றனர் பொருள் கூறும் அறிஞர்கள். எனவே பிறவி எவ்வாறு துன்பமாகும் என ஐயம் நமக்கு எழலாம்.
    ‘பிறவியைத் துன்பமாகக் கருதுவது’ உலகியல் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூறுகின்ற கூற்றாகவல்லவா இருக்கின்றது என்று மற்றுமொரு ஐயமும் எழலாம்.

    விரக்தி என்பது என்ன?

    விரக்தி என்பது, வாழ்க்கையில் துக்கம், இழப்பு, கவலை, ஆகியவைகள் ஏற்படும்போது, அம்மூன்றிற்கும்
    என்ன காரணம் என்று அறியாமலே இருக்கும்போதும்,
    மேலும் காரணம் என்ன என்று எளிதில் அறிய முடியாமல் இருக்கும்போதும்,
    காரணம் அறிந்து கொள்ளும் திறன் இல்லாமல் இருக்கும்போதும்,
    தன்மேலேயே, ஒருவகை கற்பனையான மனோநிலையில் ஏற்படும் வெறுப்பு.

    முன்வினை மற்றும் இப்பிறவியில் அறிந்தோ, அறியாமலோ செய்துள்ள பாவச்செயல்களின் விளைவால், துன்பங்கள் அதிகமாகி, அதற்கானக் காரணம் முன்வினையும், தான் இதுவரையில் செய்துள்ள தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவச் செயல்களே என்று அறியமாமல் தவிக்கும்போது வருவது ஒருவகை விரக்தி.

    ஆனால் ‘பிறவியே துன்பம்’ என்று திருவள்ளுவர் கூறுவது விரக்தியால் அல்ல. மாறாக பேரறிவின் தன்மையான விவேகத்தால் கூறப்படும் கூற்றாகும். ‘விவேகத்தால் கூறப்படும் கூற்று என்பது எவ்வாறு’ என்கின்ற மூன்றாவது ஐயம் எழலாம்.

         விவேகம்(Wisdom) என்பது ஒன்றின் நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் அறிவு. இயற்கையின் ஆதிநிலையாகிய/இறைநிலையாகிய மெய்ப்பொருள் வேகத்தையும்(Force), விவேகத்தையும்(Consciousness)தானே கொண்டுள்ளது.

    எனவே, மெய்ப்பொருளை அறியும் நோக்கத்தில், பயணித்துக் கொண்டிருக்கும் அறிவிற்கு, இறுதி  பிறவியில் ஏற்படுகின்ற, எதார்த்த நிலையை புரிந்து கொள்கின்ற தெளிவே விவேகத்தின் வெளிப்பாடாகும்.

    பிறவி என்பது துன்பமாகத்தானே உள்ளது!? எதற்கு துன்பமாக உள்ளது? துன்பம் என்பது உணர்வு என்பதால், உணர்வை அறிந்துகொள்ளும் அறிவிற்கு பிறவி துன்பமாக இருக்கின்றது. அதாவது ஆன்மாவில் இருக்கும் அறிவுதான் பிறவியைத் துன்பமாக உணர்கின்றது. ஏனெனில்,
    பேரறிவே தன்னையே அறிந்து கொண்டு(சுத்த அத்வைதம்) இன்புற எடுத்துக் கொண்ட
    மனிதஉரு தன்மாற்ற பயணத்தில்,
    அறிவு தன்னை அறியாமலேயே இருப்பதும்,
    தன்னை அறிய முயலும்போதும் ஏற்படுகின்ற தடைகளும் துன்பங்களாகவேத்தானே இருக்க முடியும்?

    மாற்றாக இவ்வாறாகவும் புரிந்து கொள்ளலாம். எப்படி? மனித அறிவு மெய்ப்பொருளை, பேரறிவை அறிந்து கொள்வது என்பது எப்போது சாத்தியமாகும்? ஆன்மா தன்னை முழுவதுமாகத் தூய்மை செய்து கொள்ளும்போதுதான் சாத்தியமாகும். தூய்மை செய்வது என்பது,

    ஏற்கனவே உள்ள அழுக்கை நீக்கினால்தானே சாத்தியாமாகும்!
    ஏற்கனவே பல பிறவிகளில், அறிவு, அறியாமையால்
    ஆணவம்(தன்முனைப்பு), கன்மம்(பாவப்பதிவுகள்), மாயை(எதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாமல் இருத்தல், அறிய வேண்டியதை அறியாதிருத்தல், பொருளல்லவற்றை பொருள் எனக் கொள்ளுதல்) ஆகிய மும்மலங்களால் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற
    தீய வினைகளின் பதிவுகளே ஆன்மாவில் உள்ள அழுக்குகளாகும்.
    ஆகவே தீய வினைகளின் பதிவுகள் செயலிழக்கச் செய்வது என்பது ‘செயலுக்குரிய விளைவு உண்டு’ என்கின்ற இயற்கை/இறை நீதியின்படி தீயச்செயல் பதிவுகளுக்கு, விளைவுகள் வரும்போது அது துன்பங்களாகவே வந்துதானே தீர வேண்டும்.

    FFC-184- எனவே ஆன்மாவிற்கு-

    எனவே ஆன்மாவிற்கு பிறவி என்பது, இயற்கையின் நியதியின்படி, தன்னிடம் பதிந்துள்ள செயல் பதிவுகளுக்கேற்ப விளைவுகளைத் தருகின்ற ஒரு சாதனம்(Medium). மேலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம், வாழ்க்கை என்பது என்ன என்று எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறோமா?! சற்குருவின் அருளால் அறிவுக்கண்–சிந்தனைக்கண் திறந்தபிறகுதானே இப்போது சிந்தித்துப் பார்க்கிறோம்.

    வாழ்க்கை என்பது என்ன?

    வாழ்க்கை என்பது இன்ப—துன்ப அனுபவங்களே அன்றி வேறு ஏதும் அல்ல! யாருக்குமே துன்பமில்லாமல் வாழ்நாள் முடிந்து விடுவதில்லை.
    சிலருக்கு இன்பம் அதிகமாகவும், துன்பம் குறைவாகவும் இருக்கலாம்.
    அல்லது
    இன்பம் குறைவாகவும், துன்பம் மிகுதியாகவும் இருக்கலாம்.

    துன்பம் வரும்போது, இன்பம் வந்தபோது அனுபவித்த நினைவுகளைக் கொண்டு துன்பத்தை சரிசெய்து கொள்ள முடிகின்றதா மனிதனால்?! இல்லையே! துன்பம் வரும்போது மனிதன் துவண்டு விடுகின்றானே!

    ஒரு வேளை உதாரணத்திற்கு, ஒருவருக்குப் பிறந்ததிலிருந்து துன்பம் என்று சொல்லும் அளவிற்குத் துன்பமே வந்ததில்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் முற்பிறவிக் கருமையப் பதிவுகளை யார் அறிவார்?! ஆகவே துன்பம் இல்லாமல் இருக்கும் ஒருவர், இனிமேலும் தமக்குத் துன்பம் வராது என நினைக்கவோ/சொல்லவோ முடியுமா? முடியாது. இதனை மற்றவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்தும்கூட அறிந்து கொள்ளலாம்.

    FFC-184- ஆகவே பிறவி என்பது-

    பிறவி எடுப்பதே புலன்களின் வழியாக இன்பம் அனுபவிப்பது மட்டுமே அல்ல. இது சாதாரண இன்பம். சற்றேறக்குறைய மூன்று லட்சத்து இருத்தைந்தாயிரம் (65,00000÷ 20=3,25,000) பிறவிகளில், ‘தின்றுத் திரிந்து உறங்கி அனுபவித்ததுதானே இந்த சாதாரண இன்பம்! மகரிஷி அவர்கள் அழைப்புக்கவியில் ‘தின்றுத் திரிந்து உறங்கவா பிறந்தோம்’ என அன்புடன் வினவி அறிவுறுத்துவதனை நினைவில் கொள்ள வேண்டும்.

    FFC-184- சலிப்பை ஏற்படுத்துகின்ற-

    புலன்களின் உதவியின்றி அனுபவிக்கின்ற இன்பம் ஒன்று உள்ளது மனிதப்பிறவிக்கு. அந்த இன்பத்தை ஏற்கனவே முற்பிறவியில் அனுபவித்திருந்தால் இப்போது இந்தப் பிறவி எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அது என்ன இன்பம்? அதற்கு என்ன பெயர். பொருள், மெய்ப்பொருள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது போன்றாதா அது? ஆம்! மனம் நான்கு நிலைகளை அனுபவிக்கக்கூடியது என்றும், இதுவரை மனதைப் பற்றிய தெளிவான கருத்துக்கள் வெளியாகாத நிலையில் ‘மனம் உயிரின் படர்க்கை நிலை‘ என்றும் கூறுகிறார், மனதை வளப்படுத்தும் கலையை வகுத்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    புலன்களின் துணையில்லாமல் அனுபவிக்கும் இன்பம் பேரின்பம்(ecstasy) என்பது அமைதியும் திருப்தியும் கலந்த இன்பம் என்கிறார் மகரிஷி அவர்கள். பேரின்பத்தில் அமைதியும் இருக்கும். திருப்தியும் இருக்கும். ஆனால் புலனின்பத்தில், அறிவின் அறியாமையால், திருப்தி வாராமல், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என அவா நீடித்துக் கொண்டே, ‘அளவு கடைப்பிடித்தலும், முறையை மாற்றாமையும்’ என்கின்ற இன்பத்தின் சாம்யத்திற்கு (formuala for pleasure—to follow implicitly limit and method)உட்படாமல்போய், புலன்களின் செல்களுக்குப் பொருந்தா உணர்வு ஏற்பட்டு, விளைவு, இன்பமே துன்பமாகிவிடுகின்றது. ஆனால் பேரின்பம் என்பது அறிவின் அறியாமை நீங்கிய நிலையில் அனுபவிக்கப்படுவதால், புலன் இன்பங்களை அளவு, முறையோடு அனுபவித்தும், பேரின்ப நிலையை அனுபவிப்பதால் அங்கே புலன்களுக்கு பொருந்தா நிலை ஏற்படுவதில்லை. மாறாக பேரின்ப போதையில் திளைக்கலாம்.

    ஆகவே பிறவி ஆன்மாவிற்கு துன்பமே என்கின்றனர்

    ஆன்றோர்கள்.  அதனால்தான் ‘மீண்டும் பிறவா வரம்

    வேண்டும்’ என்கின்றனர் பக்தியில் திளைத்தவர்கள்.

    எவ்வாறு கடல் நீர் ஆவியாகி மேகமாகி, ஆறவாரமிட்டுக் கொண்டு, ஆறாகவும், நதியாகவும் ஓடி மீண்டும் கடலை சென்றடைந்ததும் அமைதியடைகின்றதோ, அதேபோன்று ஆன்மா எங்கிருந்து புறப்பட்டதோ, மீண்டும் அங்கேயே சேர்வதற்காகத்தான் மனிதப்பிறவி எடுக்கின்றது. இஃதன்றி, ஆன்மா மாறான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால்(புலன்மயக்கம் கொண்டு, பிறவியின் நோக்கம் அறியாமல்), ‘பிறவியே துன்பம்’ என மனிதனுக்குத் தெரியாமல் போனாலும், .இயற்கையின்படி மனிதனுக்கு பிறவி துன்பமே. துன்பம் வருகின்றபோது ஏன் துன்பம் வந்தது/வருகின்றது என்று சிந்திக்க வேண்டாமா மனிதன்? துன்பம் என்பது என்ன, ஏன் வருகின்றது என்கின்ற கேள்வி எழுந்துவிட்டால் அது மனிதனை இறை உணர்விற்கு அழைத்துச் செல்லும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இளைஞர் ஸ்ரீ வேதாத்திரியை பின்னர் மகானாக்கிய,  அவருள் இளமையிலேயே எழுந்த உன்னத வினாக்களில் ஒன்றுதான் ‘துன்பம் என்பது என்ன, ஏன் வருகின்றது’ என்பது. இதே போன்றுதான் இளவரசராக இருந்த புத்தருக்கும் துன்பம் பற்றிய வினா எழுந்ததால்தான் பின்னர் போதிமரத்தடியில் ஞானம் பெற்றார்.

    அதாவது ‘துன்பம் என்பது என்ன, ஏன் வருகின்றது’ என்பதற்கு ‘இறை உணர்விற்கும்’ தொடர்பு உள்ளதே இதற்கானக் காரணம். ‘மனிதப் பிறவியில் இறை உணர்வு பெற்றிட வேண்டும்’ என்பது இயற்கையின் நோக்கமாக உள்ளதால், அதனை அறியாமலோ அல்லது மறந்தோ அல்லது அலட்சியப்படுத்தியோ வாழ்வது இயற்கைக்கு முரணான வாழ்க்கையாகத்தானே அமையும். இயற்கைக்கு முரண்பட்டு வாழ்ந்தால், விளைவு துன்பம் தானே!?

        எனவே துன்பத்திற்கான காரணத்தை அறிந்து அதனைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் ஆழ்மனதிலிருந்து(மனதின் மறுமுனையிலிருந்து) வந்துவிட்டால், அதற்கான ஒரே தீர்வான ‘இறை உணர்வு பெறுவதே’ என்பதனை அறிவு கண்பிடிக்கின்றது. மேலும், இதற்கு இயற்கையே/இறையே துணையாகவும், காப்பாகவும் அமைகின்றது. எனவேதான் மகரிஷி அவர்கள் ‘துன்பம் ஏன் வருகின்றது’ என்கின்ற வினா வந்துவிட்டால் அது இறை உணர்விற்கு கொண்டு செல்லும் என்கிறார்.

    அறிவு தன்னை அறியாத அறியாமையின் காரணமாக துன்பம் தரக்கூடிய மீண்டும் மீண்டும் பிறப்பு—இறப்பு என்கின்ற, ஓயாத சுழற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளும் அறியாமை நீங்கிய அறிவால்தான் முடியும் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். அந்த அறிவுதான் ‘அறிவு’ என அறிவிற்கு வரையறையை கூறுகிறார் அறிஞர் திருவள்ளுவர்.

    மேலும் முக்தி என்பதும் வள்ளுவர் கூறும் அறிவின் நிலையே அது. இதனையே நம் குருதேவர் அவர்கள் ‘அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை, அது முக்தி என்கிறார். ‘அவன் நீ ஒன்றாய் அறிவது’ என்பது எப்போது சாத்தியமாகின்றது? ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற திறனை அறிவு பெறும் நிலையில்தான் சாத்தியமாகின்றது.

    மனிதன் பண்பாட்டில் உயர்வதற்கு பண்பேற்றம் பெறவேண்டும். அதற்கு மனிதப்பிறவியின் நோக்கமான இறை உணர்வு பெறவேண்டும். அதாவது ஆறறிவுடன் வாழ்கின்ற மனிதன், அதற்கு பொருத்தமாக, இறை உணர்வு பெற்று பிறவிப்பயனை பெற்றிடல் வேண்டும் என்று ‘மலர் வழியே விளங்கும் மறைபொருள்’ என்கின்ற தலைப்பில், சுத்த அத்வைத வி்ஞ்ஞானத்தை எளிமையாக விளக்க விரும்பிய மகரிஷி அவர்கள் அக்கவியின் கடைசி வரிகளில் கூறுகிறார்.

    இந்த நிலை என்பது மனிதகுலத்தில் இயற்கையின் ஆதிநிலையின்/இறைவெளியின் இயல்பூக்க நியதியின்படி நடந்தே ஆக வேண்டியதே! இருப்பினும், ‘Fraction demands Totality Supplies’ என்பதனையும் கண்டுபிடித்த மகரிஷி அவர்கள், இறை உணர்வால் மலர வேண்டிய ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய நெறிகளைக் கொண்ட அற உணர்வு மலர்ந்திட அறிவு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்கின்ற திறனைப் பெற்றிட வேண்டும் என்கின்ற சங்கல்பத்தை வாழ்த்தாக அமைத்துள்ளார் உலகநல வாழ்த்துப்பாவில். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    இத்துடன் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற உலகை வாழ்த்தும் மகா மந்திரத்தின் உட்பொருளை விரிவாக பதினோறு விருந்துகளில் அருந்தினோம். இதனை மீண்டும், மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்து, கொண்டு வந்து,  ஆழ்ந்து விரிந்து சிந்தித்து உலகை வாழ்த்தும் புனித எண்ணமான மகா மந்திரத்திற்கு ஆற்றலையும், திணிவையும் அளிப்போம்.

    வாழ்க உலக சமாதானம். மலரட்டும் விரைவில் உலக சமாதானம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 10/?

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    FFC – 183

    24-04-2016—ஞாயிறு

    FFC-183-sub titlle-Untitled

      FFC-166-dheaivappulavar

    வாழ்க வளமுடன்.

         ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா மந்திர வாழ்த்து பற்றி பல துணைத்தலைப்புகளில் சிந்தித்து வருகிறோம். மகரிஷி அவர்கள்  ‘தன்னைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் திருக்குறள் ஆகும்’ என்கிறார்.  ஒரு மனிதன் அறிவின் முழுமையை அடைய அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கு வாழ்க்கைத்துறைகள் பற்றிய தெளிவுடன் இருக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். அறிவின் முழுமையில்தான் மனிதன் தனது தீயவினைப்பதிவுகளை முழுமையாகப் போக்கிக் கொள்ள முடியும்.  மீண்டும் பிறவா நிலை எய்த முடியும்.  அறிவின் முழுமைப்பேற்றில்தான் ஆன்மா பிறவி எடுத்ததற்கான காரணம் நிறைவேறிவிடுகின்றது. அதாவது, அறிவு வாழ்நாளில், உணர்கின்ற எல்லாவற்றிலும் சிறப்பானதும், முதன்மையானதுமாகிய ‘தன்னையே உணர்ந்து கொள்ள முடிகின்றது.  இந்தப்பேறு தான் வீடுபேறு. பிரபஞ்சத்திற்கே வீடுமாகவும், அதே நேரத்தில் இப்பிரபஞ்சத்தில் மனிதன் எழுப்பியுள்ள வீடுகளுக்கெல்லாம் வீடாகவும் உள்ள இயற்கையின் ஆதிநிலையை/இறைவெளியை உணர்ந்துகொள்வதனைப் பேறாகக் கருதி, அது வீடுபேறு என அழைக்கலாகின்றது.

         ஞானநெறியைக் காட்டிய சான்றோர்களில் ஒரு சிறந்த பேரறிஞர் திருவள்ளுவர் என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் கூறுகிறார்: திருவள்ளுவர் ‘படைப்பு’ எனும் கற்பனையிலிருந்து விடுபட்டு, ‘தன்மாற்றம்’(பரிணாமம்) என்கின்ற உண்மை வழியிலே முழுமை பெற்ற மெய்ஞ்ஞானி ஆகிறார் என்கிறார் மகரிஷி அவர்கள்.  இதுவரை திருவள்ளுவரை இவ்வாறு அறிந்து வெளிப்படுத்தியவர் வேறு யார் உள்ளனர் எனத் தெரியவில்லை. எனவேதான் திருவள்ளுவர் அவதரித்த பிறகு, பத்தொன்பது நூற்றாண்டுகள் சென்ற பிறகு அவதரித்த மகரிஷி அவர்கள், திருவள்ளுவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஆன்மீக–இயல்பூக்க நியதியின்படி தானும் பண்பேற்றத்தில் ஏற்றம் பெற்று, நம் எல்லோரையும் உள்ளடக்கிய உலக சமுதாயத்தையும்  பண்பில் ஏற்றம் பெறச்செய்யவல்ல மனவளக்கலையை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

    sudhtha advaitham

            எனவே இன்று திருவள்ளுவர் வழியில் ‘மெய்பொருள் காண்பது அறிவு’ என்கின்ற துணை தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.  இன்று மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா வாழ்த்து மந்திரம் திருவள்ளுவரின் எந்த கண்டுபிடிப்புடன் இணைகின்றது என்பதனை அறிவோம்.

        மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான தெய்வப் புலவர் திருவள்ளுவர் அறிவாற்றல் பற்றி   ஏதாவது  கூறியிருக்கின்றாரா என சிந்தித்தால், ‘கூறுகின்றார்’ என்கின்ற பதிலே வருகின்றது.

        ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பதனை ஒன்றுபடுத்திப் பார்ப்பதற்கு,  தெய்வப்புலவர் கூறும் குறட்பாக்கள் என்னென்ன?  மெய்உணர்தல் என்கின்ற அதிகாரத்திலும், அறிவுடைமை எனும் அதிகாரத்திலும் அக்குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன.

     அதிகாரம் – 36 – மெய் உணர்தல்

     எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு.               குறள் எண். 355.

          இக்குறள் மெய் உணர்தல் அதிகாரத்தில் இடம் பெற்று, அறிவு பற்றி கூறுகின்றது. எது அறிவு என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். ஆறாம் அறிவிற்கான வரையறையைக்  கூறுகின்றார். ஆகவே மெய்யை/மெய்ப்பொருளை/இறையை உணரவிருக்கின்ற ஒவ்வொருடைய அறிவும் எந்த பரிபக்குவ நிலைக்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.  மெய்உணர்வு/இறைஉணர்வு பெறுதலுக்கான வரையறையையும் இக்குறளில் காணமுடிகின்றது.  மெய்ப்பொருள் என்பது என்ன?  பெயரிலிருந்தே தெரிகின்றது அதுதான் மெய்யான பொருள் என்று.  ஆகவே மற்றப் பொருட்கள் பொய்யானவை; பொருட்களல்ல என்றாகின்றது.  இருப்பது எவ்வாறு பொய்யாக அல்லது இல்லாததாக முடியும் என்கின்ற நியாயமான ஐயமும் எழுகின்றது.  நியாயமான ஐயம் நீங்க இன்றைய சிந்தனை துணைபுரியட்டும்.

    eadhu meypporul

     ‘மெய்உணர்வு’ என்றால் என்ன பொருள்? 

    மெய்ப் பொருளை உணர்வது மெய் உணர்வு.  

    மெய்ப்பொருளின் தன்மையை உணர்வது மெய் உணர்வு. 

    மெய்ப்பொருள் தன்மை என்பது என்ன? 

    மெய்ப்பொருள் ஒன்றே எல்லாமாகவும் ஆகியுள்ளது என்பதுதான் மெய்ப்பொருளின் தன்மையாகும்.

     எனவே பேரறிவே பின்னப்பட்டு தனது தன்மாற்ற பயணத்தில் மனிதனிடம் வந்து, தன்னையே/தனது மூலநிலையாகிய மெய்ப்பொருளையே அறியும்போதுதான் ஆறாம் அறிவாகின்றது.  அதாவது மனித அறிவு முழுமையாகி மெய்ப்பொருளாகிவிடுகின்றது.  

      அடுத்ததாக அறிவுடைமை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள குறளைக் கவனிப்போம்.

     அதிகாரம்-43- அறிவு உடைமை

     எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு.                  …. குறள் எண் 423

     ‘மெய் உணர்தல்’  அதிகாரத்தில் எது அறிவு என்று கூறிய அறிஞர் திருவள்ளுவர், மீண்டும் அறிவுடைமை எனும் அதிகாரத்திலும் எது அறிவு என்று கூறுவதனைக் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆறாம் அறிவின் கடமையும், பொறுப்புமாக உள்ளது.

            ஒருமனிதனுக்கு இருக்க வேண்டிய பத்து உடைமைகளில் ஒன்றாக அறிவைக் கருதி அறிவு உடைமை எனும் அதிகாரத்தை வகுத்துள்ளார் திருவள்ளுவர். மனிதர்கள் என்றால் எல்லோருக்குமேதான் அறிவு இருப்பதால்   எல்லோருமே அறிவை உடைமையாக, அதாவது தனது செல்வமாகக் கொண்டிருப்பதில்லை என்கின்ற எதார்த்த நிலையைக் கருதி  ‘அறிவை’, தனது உடைமையாக–செல்வமாக ஆக்கிக்கொள்வதற்காக அறிவுடைமை என்கின்ற அதிகாரத்தை வைத்துள்ளார்.  வாழ்க அறிவுச் செல்வம்.  வளர்க அறிவுச் செல்வம்.

         அறிவு என்றாலே அறிந்து கொள்ளும் இயல்புடையது அறிவு.  அறிந்து கொள்வது தானாகவும் அறிந்து கொள்ளலாம்.  அல்லது யாராவது சொல்லக் கேட்டும் அறிந்து கொள்ளலாம்  எவ்வாறாக இருந்தாலும் ஒன்றைப் பற்றி அறியும்போது அதன் உண்மைப் பொருளை அறிந்து கொள்ளும் அறிவே அறிவு என வரையறுக்கிறார்(Defines what is Consciousness) திருவள்ளுவர்.

         திருவள்ளுவர் அறிவைப்பற்றி கூறும் அடிப்படையிலிருந்துதான்,  ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா மந்திர வாழ்த்தை உருவாக்கிய  மகரிஷி அவர்களிள் அறிவுகூர்மையை நாம் அறிந்து மகிழ முடிகின்றது/வேண்டியுள்ளது.  எனவேதான் ‘தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் திருக்குறள்’ என மகரிஷி அவர்கள் கூறுவதற்கானக் காரணத்தையும் அறிய முடிகின்றது.  மெய்ப்பொருளை அறிந்த அறிவுதான் அறிவு (ஆறாம்) என்கிறார் திருவள்ளுவர். 

        மெய்ப்பொருளை அறிந்த அறிவுதான் மனிதஇனம் பண்பாட்டில் உயர்ந்திருக்க முடியுமன்றோ!  மெய்ப்பொருள் அறிந்த அறிவுதான் முழுமை அடைகின்றது.  சமுதாயத்தில் இன்னும் பண்பாடு உயரவேண்டும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.  பண்பாடு உயர்வதற்குத் தேவையானது, உலகமக்கள் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ பெறும் திறமையைப் பெறவேண்டும்.  எனவே ‘பகுத்துணர்வில் பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா வாழ்த்தினை எண்ண அலைகளாக பரப்ப ஏற்படுத்தியதுதான் உலகநல வாழ்த்துப்பா.

          ஏன் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற சொற்றொடரை புனிதச் சொற்றொடர் என்கிறோம்?  அச்சொற்றொடர் கூறும்  நிலையினை மனிதன் அடைவானாகில் அவன் புனிதம் அடைகிறான்.  அதாவது மெய்ப்பொருள் உணர்ந்த நிலை அது.  மேலும் கூறுவதென்றால், ஐயப்படாது அகத்தை உணர்ந்த நிலை அது.  அந்த நிலையை அடைந்த மனிதனை தெய்வத்தோடு ஒப்புக் கொள்ளலாம். அறிவாகிய தெய்வத்தையே-தெய்வீகம் தன்னுள் இருந்து பூரித்து மலர்வதை உடைமையாக்கிக் கொண்ட நிலை அது.

         ஆகவே புனிதச் சொற்றொடரான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பது என்ன என்கின்ற விளக்கத்தை மகரிஷி அவர்களின் வழியாக நேரிடையாகவும் அதற்கு மேலும் சான்றளிக்கும் வகையில் செந்நாப்புலவர் திருவள்ளுவரையும் நமது சத்சங்கத்தில் இப்போது எழுந்தருளச் செய்து கொண்டோம். இந்த பிரபஞ்சமே இயற்கையின்/இறையின் உடலாக நினைக்க வேண்டியது இப்போது எளிதாகிவிட்டது.

         மெய் உணர்வு பெறுதல்-இறை உணர்வு பெறுதல்-தன்னிலை உணர்தல்-நான் யார் என்கின்ற  வினாவிற்கான புனித விடையை பெறுவதற்கான செய்முறைத் தேர்வில் வெற்றி பெற்றமை ஆகியன என்பது என்ன?  இயற்கையின் ஆதிநிலையே/இறையே/தெய்வமே நானாகவும், நானே மற்றவர்களாகவும், மற்ற உயிரினங்களாகவும், எல்லாப்பொருட்களாகவும் உள்ளேன் என்று அறிதலே ஆகும். 

        மேலும் ஏதாவது குறள் நம்முடைய இன்றையச் சிந்தனைக்கு உதவுகின்றதா என்றால், ஆம் மற்றுமொரு குறளை எடுத்துக் கொண்டு  அடுத்த அறிவிற்கு விருந்தில் (27-04-2016-புதன்) ஆராய்வோம்.

     வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.

    Loading