இன்றைய விருந்து

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 2/?

    வாழ்க மனித அறிவு                                  வளர்க மனித அறிவு

    FEAST FOR CONSCIOUSNESS – FFC – 186
    அறிவிற்கு விருந்து – அ.வி. -186

     O4-05-02016—புதன்.

    FFC-186-Sub Title

     

     

    Amazing_Guru

    Scientist of Consciousness அறிவின் அறிவியலாளர்

     

    FFC-186-NE2-பெசெய்-ஒழுக்வாழ்போர ஏன்

    ஒழுக்க நெறி பற்றியும், ஒழுக்கத்தை வாழ்வில் உறுதியாகக் கடைபிடிப்பதிற்கு, மனதுடன் அறிவு போராட வேண்டியுள்ளதற்கான காரணம் என்ன, அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற வழி என்ன என்று சென்ற அறிவிற்கு விருந்தில் சிந்திக்க ஆரம்பித்தோம். அச்சிந்தனையில், இது வரை புண்ணியம், பாவம் என்கின்ற ஆன்மீகச் சொற்களுக்கு முறையே நல்லொழுக்கம், தீயொழுக்கம் ஆகியன எவ்வாறு விஞ்ஞானச் சொற்களாக அமைகின்றன என்று பார்த்தோம்.
    இன்றைய சிந்தனையில்,
    தடம் புரண்ட மனிதவாழ்க்கை எனும் ரயில் என்ஜினை(derailed man’s life—rail engine) எவ்வாறு போராடி, ஒழுக்க நெறி தண்டவாளப்பாதையில் (rail track), அதாவது வாழ்க்கை எனும் ரெயில் என்ஜினை தூக்கி வைத்து, வாழ்க்கை பயணத்தை
    செம்மையாகவும் சிறப்பாகவும் முடிக்கும் வழியில் வாழ்ந்து,
    தினந்தோறும் சங்கல்பம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் உயர் புகழை அடைந்து, நாம் இப்புவிக்கு வந்து போனதற்கான அடையாளத்தை (trace of this precious human birth) இப்பிறவியிலாவது, பதிப்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    இச்சிந்தனையில் அறிவு தன்னைப் பற்றி சொல் என்று அறிவுறுத்தியதால், அறிவு பற்றி சுருக்கமாக அறிவின்–அறிவியல் மற்றும் முதல் அறிவின்–-அறிவியாலாளர் யார் என்பது பற்றியும் அறிய இருக்கிறோம். ஆகவே, இன்றைய சிந்தனையான ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்கின்ற தலைப்பிலிருந்து வெளியே சென்று விட்டதாகக் கருத வேண்டாம். இச்சிந்தனையைச் செய்து கொண்டிருக்கும் அறிவே, தன்னை மேம்படுத்திக் கொள்ள முழுமை அடைய விரும்பித்தான் இச் சத்சங்கத்தில் அறிவு பங்கு கொண்டுள்ளது.
    ஒழுக்க வாழ்வு வாழ வேண்டும் என்கின்ற விளக்கத்தை பெற வேண்டும் என்று எண்ணுவது அறிவுதானே! ஆகவே அதனைப் பற்றி தெரிந்து கொள்வதும் பொருத்தமாக இருக்கின்றதல்லவா?! சந்தர்ப்பம் வரும்போது கூடுதலாகத் தெரிந்து கொள்ளப்பட வேண்டியது இருப்பதால் தெரிந்து கொள்வது நலம்தானே. கல்விக்கூடங்களில், நடத்தப்படும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக பாடத்திட்டம்(Syllabus) ஏற்படுத்தப்பட்டு, அதற்குமேல் அதிகமாக அந்த பாடத்தை படிக்க வேண்டிய அவசியமிருக்காது. அப்படி ஏதாவது அந்த பாடத்திட்டத்தையும் கடந்து, தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டால் அது ‘out of syllabus’ என்று கூறுவர். அதுபோல் அல்ல அறிவின் தரத்தை மேம்படுத்தி, அறிவை முழுமை செய்விக்கின்ற பாடம். எப்பொழுதெல்லாம் கூடுதலாக தகவல்கள் கிடைக்கின்றதோ, அதனை உள்வாங்கி வைத்துக் கொண்டால் நம்முடைய தொடர் சிந்தனைக்கு உதவியாக இருக்கும்.

    ஒழுக்க வாழ்விற்கு போராடவேண்டியிருப்பதால், எப்போது அப்போராட்டம் முடிவிற்கு வரும் என்பதனை  அறிவோம். யாரும் போராட்டத்தை விரும்புவதில்லை. அமைதியைத்தான் விரும்புவா். தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்காமல், அமைதியை இழக்கவைக்கும் போராட்டத்தை இன்னமும் எத்தனை நாள்தான் நடத்தி வாழ்க்கையையே வீணடிப்பது? ஆகவே ஒழுக்க வாழ்விற்காக, மனதுடன் நடத்துகின்ற போராட்டம் எப்போது முடிவிற்கு வரும் என்கின்ற ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அகவே போராட்டத்தின் முடிவு எப்போது வரும் என்கின்ற ஐய-வினாவிற்கு விடையை அறிவோம்.

    FFC-186-ஒழுக்க வாழ்விற்கு பெட்டிச் செய்தி

    அடுத்ததாக, 2046 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த – உலக பொது மறையை அருளிய அறிஞர் திருவள்ளுவர், ஒழுக்கம் பற்றி கூறுவதனை ஆராய்வோம்.
    திருவள்ளுவர், ஒழுக்கம் உயிரைவிட மேலானதாகக் கருதப்பட வேண்டும் என்று கூறி ஒழுக்கத்திற்கு ஓர் அதிகாரத்தையே ஒதுக்கி அதற்கு ஒழுக்கமுடைமை(ஒழுக்கம்+உடைமை) எனப் பெயரிட்டு பத்து குறட்பாக்களை அருளியுள்ளார். ‘உடமை’ என்றால் ‘ஒருவருடையது’ என்பதாகும், ‘ஒருவருடையது’ என்கின்றபோது, அது அவரது செல்வமாகிவிடுகின்றது. ஆகவே ஒழுக்கமுடைமை என்று கூறுவதால் ஒழுக்கத்தைச் செல்வமாகக் கருதுகிறார் அறிஞர் திருவள்ளுவர்
    செல்வம் சோ்ப்பது எதற்காக? தேவை ஏற்படும் போது செலவழிப்பதற்காக. தேவையைப் பூர்த்தி செய்தால் மனம் இன்புறும். செல்வம் இல்லை எனில், தேவையைப் பூா்த்தி செய்ய முடியாது. தேவையைப் பூர்த்தி செய்ய வில்லையென்றால், அப்போது மனிதனுக்குத் துன்பம் தானே வரும்? பொருட்செல்வம், தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள உதவுவது போல், ஒழுக்கச்செல்வம் மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும். ஆகவே ஒழுக்கமுடைமை மனிதனுக்கு இன்பத்தைத் தரவல்லது. ஒழுக்கச் செல்வம் மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்கின்றபோது மனிதனின் எந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும்?
    மனிதனின் பொதுவான தேவைகள் என்ன? மனிதனின் இன்றியமையாத் தேவைகள் மூன்றாகும். அவை உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம். இந்த மூன்றுத் தேவைகளையும் பூா்த்தி செய்து கொள்வதற்கு மனிதனுக்கு பொருட்செல்வம் தேவையாக உள்ளது. அதற்காக மனிதன் உழைத்து பொருளீட்டுகிறான். அதில் ஒரு பகுதியை சேமித்து வைக்கிறான். ஒழுக்கச் செல்வம் பூா்த்தி செய்யும் அந்த தேவை என்ன? மூன்று இன்றியமையாத் தேவைகளும் மனிதனுக்கு எதற்காகத் தேவை? மூன்று இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியாகவில்லையெனில் இன்பமாக வாழமுடியுமா?  முடியாது.
    அப்படியானால் மூன்று இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் மனிதன் இன்பமாக வாழ்கின்றானா? வாழ முடிகின்றதா மனிதனால்? எதார்த்த நிலை என்ன? எதார்த்தத்தில், இரு தரப்பினருமே, அதாவது மூன்று இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியானவர்களும், பூர்த்தியாகாதவர்களும் அமைதி இழந்து துன்ப வாழ்வு வாழ்கின்றனர். காரணம் என்ன?
    மூன்று இன்றியமையாத தேவைகள் பூர்த்தியானவர்கள் ‘இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்’ என்கின்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனர். சிக்கிக் கொண்டால் வாழ்க்கை சிக்கலாகத்தானே ஆகிவிடும். சமுதாய அமைப்பும் ‘இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்’ என்கின்ற வலையில் சுலபமாகச் சிக்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலையாகவும், முரணான பேராசையை தூண்டிவிடுவதற்கு மேற்கொண்டு தூபம் போடுவதாகவும் உள்ளது.

    FFC-186- ஒழுக்கச் செல்வம்

    மனிதன் மனிதனாகத்தானே வாழ்கிறான். வாழ முடியும். இயற்கை எவ்வாறு படைக்கின்றதோ அவ்வாறாகத்தானே(வேதாத்திரிய கருத்து படைப்புக் கருத்து அல்ல) வாழ முடியும் என ஐயங்கள் பல எழலாம்.

         மனிதர்கள் யாரும்,  விரும்பி பிறப்பதில்லை. இயற்கையின் தன்மாற்ற நந்தவனத்தில் வண்ணமும், நறுமணமும் கொண்டு இறுதியாகப் பூத்த மலர் தான் மனிதன். மனிதனின் பிறப்பு என்பது இயற்கையின் நிகழ்ச்சி. ஆகவே மூன்று இன்றியமையாத் தேவைகள் பூா்த்தியாகிவிட்ட பிறகு, மனிதன் மனிதனாக வாழ்வது என்பதுதான் அந்தத் தேவை.

        மனிதன் மனிதனாக வாழ்வது ஒரு தேவையா? இயற்கையில், மற்ற உயிரினங்கள் எதற்காக பிறவி எடுத்ததோ அதற்காகவே வாழ்கின்றன.

    உதாரணத்திற்கு, நல்ல பாம்பு படம் எடுத்து ஆடி சீறி விரோதியை பயமுறுத்தும். அது இயற்கை கொடுத்த தற்காப்புத் திறன். மற்றொரு உதாரணம் பூனை. இரையைத் தேடும் பூனை, இரையை நோக்கி நடந்து செல்லும் போது, தான் நடக்கும் சப்தத்தை இரையாகவிருக்கும் உயிர், அதாவது இரையாகிய எலி அறிந்து ஓடிவிடாமல் இருக்க கால்நகங்களை மடக்கி வைத்துக் கொண்டு நடந்து, இரை மீது பாய்ந்து இரையான எலியைக் கவ்விப் பிடிக்கும்.

    ஆனால், மனிதன் மட்டும், ஆறாம் அறிவிருந்தும், மனிதனாக வாழவில்லை. அப்படியென்றால் என்ன பொருள்? மனிதன் ஆடை அணிந்து கொள்கிறான். தன்னை அழகு படுத்திக் கொள்கிறான். இன்னும் எவ்வாறு மனிதனாக வாழ வேண்டும் என ஐயம் எழலாம் ஆறாம் அறிவிற்கு.

         இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தில், மனிதஇனம் விலங்கினத்திலிருந்து வந்தது. எதற்காக? மீண்டும் விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டு வாழ்வதற்காகவா?

          இயற்கை/இறை அன்பும் கருணையுமானது. இயற்கை/இறை மனிதனிடம் தான் சிறப்புறுகின்றது.

       இயற்கை/இறை தன்னுடைய தன்மாற்றப் பயணத்தில் மனிதனோடு உருமாற்றத்தை நிறுத்திக் கொண்டது. இதற்கு மேலும் அதற்கு உருமாற்றம் தேவையில்லை. உருவத்தில், அழகில் சிறந்து விளங்குகிறான் மனிதன். ஆனால் அறிவில் சிறந்து விளங்குவதில் தவறிவிடுகிறான். மனிதன் மனிததரத்தில் சிறந்து விளங்க வேண்டும்.

         எனவேதான் முன்னாள் இந்திய ஜனாதிபதியும் தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள், “இன்னமும் பரிணாமம் பூர்த்தியாகவில்லை” என்கிறார்.
     ஒழுக்கத்தைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவது என்ன? – “மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்று இயல்புகளால் உருவாக்கப்படுகிறான் மனிதன். இதில் தெய்வீக இயல்பு வளர்ப்பது ஒழுக்கமாகும்.“ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

          மனிதனின் மூன்று நிலைகளில் மூன்றாவதும் கடைசியுமான, உன்னதமுமான நிலைக்கு தெய்வீக இயல்பை வளர்ப்பதுதான் ஒழுக்கம் என்று சுவாமி விவேகானந்தர் கூறுவதனை கூர்ந்து கவனிக்க வேண்டும். மனிதனாகிவிட்டால் மட்டும் போதாது, அவ்வையார் கூறும் அரிதாகிய மனிதப் பிறவி எடுத்தமையின் பயனாகிய ஞானத்தை அடைய வேண்டும். ஞானம் பெற்றால்தான் விவேகானந்த சுவாமிகள் கூறும் – விரும்பும் தெய்வீக இயல்பை அடைய முடியும்.
    ஒழுக்கத்தைப் பற்றி முதல் அறிவின் – அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன? ‘அறிவின் – அறிவியலாளர்’ என்றால் என்ன? அறிவின் – அறிவியலைக் கண்டுபிடித்தவர் அறிவின் – அறிவியலாளர். அறிவின் – அறிவியல் என்பது என்ன? அறிவைப்பற்றிய விளக்கங்களைத் தெரிவிக்கும் இயல்-அறிவியல். அறிவின் – அறிவியல் முதன்முதலில் தந்தவர் மகரிஷி என்பதால் அவர்களை முதல் அறிவின் – அறிவியலாளர் என்கிறோம்.

    இயல் என்பது என்ன என்று சாக்ரடீஸ் கூறுவது:- “இயல்வழியாக அறிவைப் புகட்டுவதால் அது அறிவியல் எனப்படுகின்றது. ஏன், எதற்கு, எப்படி எனக்கூறுவது இயல். எதன் வழியாக, எத்துறையைப்பற்றி அறிவு புகட்டப்படுகின்றதோ, அவ்வழி அத்துறையின் இயல் எனப்படுகின்றது”. உதாரணத்திற்கு மருத்துவத்தைப் பற்றிய அறிவு புகட்டும் இயல் மருத்துவ இயல் எனப்படுகின்றது, அதுபோல் ‘அறிவைப்’ பற்றிய அறிவை புகட்டுவதால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவைப் பற்றி ஏற்படுத்திய இயலை அறிவின்—அறிவியல் என்கிறோம்.

    அறிவைப்பற்றிய விளக்கங்கள், அதாவது,

    1) உயிர்களின் அறிவினது மூலம் (பேரறிவு ஆதியும் அந்தமும் இல்லாதது.. அது தொடக்கமில்லாதது-அனாதியானது. எனவே அதற்கு மூலமில்லை)
    2) அறிவின் ஆரம்பம்,
    3) அறிவின் இருப்பிடம்,
    4) செந்நெறி,
    5) மற்றும் அறிவின் ஏழுவகை செயல்பாடுகள், (அமைப்பு, துல்லியம், ஒழுங்கு, உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல், தன்னையே அறிதல்)
    6) ஆட்சியின்றி ஆளுகின்ற செந்திறமை,
    7) மனிதன் அறிவை முழுமைப்படுத்த வேண்டிய அவசியமும், அதற்கான வழிகளும்,
    8) செயலுக்கு எற்ற விளைவினைத் தரும் செங்கோலாட்சி.
    9) அறிவை ஆட்சி செய்து பெறுகின்ற அறிவாட்சித்தரம்(personality) பெறுவதற்கான பயிற்சிகள்,
    10) அறிவின் பூரண அமைதியான மனிதகுலத்தின் பூர்வீகசெல்வத்தை அனுபவிக்க வழிகள் – திட்டங்கள் கொண்ட உலக சமாதான திட்டம்.

    ஆகியவைப் பற்றிய அறிவுப்பூர்வமான(விஞ்ஞானமாக) விளக்கங்கள் கொடுத்துள்ளதை அறிவின்—அறிவியல்(Science of Consciousness) என்றும், அதனை அறிவுடைய எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் கண்டுபிடித்து உலகுக்கு, முதலில் சொன்ன(explorer of Consciousness) வேதாத்திரி மகரிஷி அவர்களை அறிவின் முதல் அறிவியலாளர்(First Scientist of Consciousness), என்று கூறுவது, அவருடைய கண்டுபிடிப்பின் சிறப்பை அறிந்த மகிழ்ச்சி பூரிப்பில் கூறும் போற்றுதலாகும். மேலும் நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே” என்று அவ்வையார், தான் அருளிய ‘நல்வழி’ யில் மொழிந்துள்ளார். இதே போன்று மகரிஷி அவர்கள் கூறும் கவியினை நினைவு கூர்வோம்.

    FFC-87எப்பொருளை-to-post-on-31-05-15

    நல்லோர் குணங்களை எப்போது எடுத்துரைக்க முடியும்?

    அவ்வையார் கூறும் அந்த ‘நன்று’ தான் என்ன?

    இங்கே பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் பொன் மொழியான ‘தான் உயராது – மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது. ரசிக்கவும் முடியாது.’ என்பதனை கூர்ந்து நோக்க வேண்டும்.

    கூர்ந்து நோக்கினால், அவ்வையார் கூறும் ‘நல்லோர் குணங்களுரைப்பதுவும் நன்றே’ என்பது, மகரிஷி அவர்கள் கூறுவது போல் ‘அந்த நல்லோர் குணங்களை ரசிப்பதாலும், மதிப்பதாலும் நாமும் நல்லோர் கூறும் பாதையில் உயர்ந்து வருகிறோம் என்பதில் உறுதிப்பாடு கிடைக்கப்பெற்று ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

    அடுத்த விருந்தில்(08-05-2016) அறிவியல் மற்றும் விஞ்ஞானம் பற்றியும், மனிதனுக்கான வரையறைகளில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள மனிதனுக்கான வரையறைப் பற்றியும், எண்ணிலடங்கா பிறவித் தொடரில், இப்பிறவியோடு கூடிய முந்தையை, ஏழு தலைமுறைகளில், 127 ஆன்மாக்களின் தொடர்பை அட்டவணையின் மூலமும்(Chart) அறிய இருக்கிறோம். தொடரும்– 08-05-2016

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 1/?

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    FFC – 185

    01-05-2016—புதன்

    FFC-185-ததிருவள்ளுவர் படம்with kural

    FFC-185-sub title-ஒழக்கவாழ்விற்கு போராட்டம் ஏன்-

    இரண்டாயிரத்து நாற்பத்தோறு வருடங்களுக்கு முன்னரே திருவள்ளுவர் ஒழுக்கத்தை செல்வமாகக் கருதி, ஒழுக்கமுடைமை எனும் அதிகாரத்தை இயற்றி, அதில் பத்து கோணங்களில் ஒழுக்கத்தை பற்றி தெளிவுபடுத்த. குறட்பாக்களை அருளியுள்ளார். அதில் முதல் குறள், ஒழுக்கம் சிறப்பைத் தருவதால், ஒழுக்கம் உயிரைவிட மேலானதாகக் கருதப்படுகின்றது என்கிறார் திருவள்ளுவர். அறிஞர் ரூஸோ “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்கிறார். ஒழுக்கத்தில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும் என்று அறிஞர் ரூஸோ கூறுவதால் ஒழுக்கத்தில் வாழ்வதை விட்டு விடமுடியுமா? முடியாது. மீண்டும் திருவள்ளுவர் கூறுவதனை கவனத்தில் கொள்ள வேண்டும். திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் இரண்டாவது குறளில் என்ன கூறுகிறார்?

    பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்துஓம்பித்

    தேரினும் அஃதே துணை.                              குறள் எண். 133

    பொருள்: ஒழுக்கத்தைக் காத்தால் அவ்வொழுக்கமே துணையாக இருக்கும்.

    எதற்காக ஒழுங்காற்றலாக திகழ்கின்ற இயற்கையின்/இறையின் அருள் வேண்டப்படுகின்றது? மனிதன் தனக்கு பாதுகாப்பு, துணை வேண்டி ஒழுங்காற்றலாகத் திகழும் இயற்கையின்/இறையின் அருளை வேண்டுகிறான். ஆகவே திருவள்ளுவர் கூறும், துணையாக இருக்கும் ஒழுக்கத்தைக் காக்க வேண்டியது அவசியமாகின்றது அன்றோ!

    அறிஞர் ரூஸோ கூறும் ஒழுக்கத்திற்கான போராட்டம் பிறருடன் அல்ல. ஒழுக்க வாழ்வு என்பது திருந்தி வாழ்வது. ஒழுக்க வாழ்விற்காக நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டியிருப்பதால், ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் என்பது நம்மோடு தான் நடைபெற வேண்டும்? போராட்டம் இல்லாமல் திருந்துவது என்பது எல்லோருக்கும் எளிதல்ல. இதுவரை அவரவர் பழகிய பழக்கப்பதிவின் அழுத்தத்தைப் பொருத்தது. போராட்டம் நம்மோடு என்றால் நம்மனதோடுதான் போராட்டம் நடைபெற வேண்டும். இங்கே நம் மனமேதான் குற்றவாளியாகவும், நீதிபதியாகவும் செயல் புரிந்து தண்டனை அளித்துக் கொண்டு திருந்துவதற்கு பெரும் முயற்சி செய்ய வேண்டும்.

    ஒழுக்கத்திற்கு தன்னை மாற்றிக் கொள்வதற்கு போராட வேண்டியுள்ளது என்பதால் ஒழுக்க வாழ்வை விட்டுவிடுவது என்பது புண்ணியத்தையல்லவா இழப்பதாகிவிடும். நல்லொழுக்கம் என்பதற்கான ஆன்மீகச் சொல் ‘புண்ணியம்’. தீயொழுக்கம் என்பதற்கான ஆன்மீகச் சொல் ‘பாவம்’. ‘புண்ணியம்‘, ‘புண்ணியம்’, ‘பாவம்’ என்கின்ற ஆன்மீகச் சொற்களுக்கான விஞ்ஞானச் சொற்கள் முறையே நல்லொழுக்கம், தீயொழுக்கம் ஆகும். விஞ்ஞானச் சொற்கள் என்பது என்ன? நல்லொழுக்கமுள்ள எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகிய மூன்றின் விளைவுகள் நல்லபயன்களாகத்தானே இருக்கும். தீயொழுக்கமுள்ள எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் தீயபயன்களையல்லவா கொடுக்கும். இக்கூற்றில் விஞ்ஞானம் இல்லையா? நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்பதனை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளாதா? இதில் ஏதும் மூடநம்பிக்கையுள்ளதா? நல்லொழுக்கம் நல்ல பயன்களையும், தீயொழுக்கம் தீய பயன்களைத்தரும் என்பது விஞ்ஞான அடிப்படையில்தான் உள்ளது. ஆகவே நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் ஆகிய சொற்களை விஞ்ஞானச் சொற்கள் என்கிறோம். நாம் computer உலகில் இருக்கிறோம். Computerல் உள்ள Chipset, memory registers மற்றும் ALU(arithmetic and logic unit) போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் நாம் அனைவரும் நம் கருமையம் என்கின்ற Chipset ல் பதியப்பெற்ற நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கப்பதிவுகளை விஞ்ஞான கண்ணோட்டத்தோடே அணுகி, விஞ்ஞான சொற்களாக ஏற்றுக்கொண்டேதான் ஆகவேண்டும்.

    அறிஞர் ரூஸோ கூறும் போராட்டத்தைத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்’ என்கிறார். ஒழுக்கம் பின்பற்றாது வாழ்ந்தது பல பிறவிகளில் பழக்கப்பதிவுகளாகி அழுத்தம் பெற்றுவிட்டது. இப்பிறவியில் ஒழுக்கத்திற்கான விளக்கம் பெற்றுள்ள கருமையப் பதிவில் வலிமை குறைவாக உள்ளது. ஒழுங்காற்றலாக திகழவேண்டிய அறிவிற்கு ஒழுக்க-விளக்கத்தை விடவும் முடியவில்லை. ஆனால் ஆதே நேரத்தில் ஒழுக்கமற்ற செயல்பதிவுகளின் பதிவுகள் வலிமையோடு இருப்பதால் விளக்கப்பதிவுகள், பழக்கப்பதிவுகளுடன் போராட வேண்டியிருக்கின்றது. இதனைத்தான் அறிஞர் ரூஸோ போராட்டம் என்கின்றார். மகரிஷி அவர்கள், ‘போராடிக் கொண்டிருக்கம் சீவன் மனிதன்’ என்கிறார்.

    அறிஞர்கள், தாங்கள் கூறுவது அமுத மொழிகள் என்று அவர்களே சொல்லிக்கொள்வதில்லை. எந்த சமுதாயத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அந்த சமுதாயம்தான் அறிஞர்களின் கூற்றுக்களை அமுத மொழி என அழைக்கின்றது. மக்கள் பாராட்ட வேண்டுமென்று என்பதற்காக, அறிஞர்கள் அமுத மொழிகளை எழுதுவது இல்லை. அவற்றைச் சிந்தித்து உணர்ந்து அன்றாட வாழ்க்கைக்கு இச்சமுதாயம் பயன்படுத்தி வாழ வேண்டும் என்று விரும்பியே, இயற்கை அறிஞர்களின் வாயிலாக அறநெறி அறிவுரைகளை அமுதமொழிகளாக வழங்கி வருகின்றது.

    அறிஞர்களின் அமுதமொழிகளோ, கவிகளோ, எப்போது பயனாகும் என்றால், அவற்றை கண்ணுறுகின்ற மனிதன், அந்த அறவுரைகளை மதித்து நடக்கும்போது போதுதான். அமுத மொழிகளை, வெறுமனே வாசிப்பதானால் அது மூளை அளவில் செல்வதோடு நின்று விடுவதில் மட்டும் பயனில்லை. மூளை வழியாகச் சென்று அது கருமையத்திற்குள் அழுத்தமாக பதிய வேண்டும். பிறகு மனம் அதனை விரும்பி மனதில் உருவகப்படுத்த வேண்டும்(contemplate). பின்னர் அமுத கூறியபடி மாற வேண்டும்.

    அழுத்தமாக பதிதல் என்பது ஆழ்ந்து விரிந்து சிந்தனை செய்தலின் பதிவுகளே. மீண்டும் மீண்டும் அதனை நினைவிற்கு கொண்டு வந்து ஆராய வேண்டும்.

    இப்புவி மீது அறிஞரும் வாழ்கிறார், நாமும் வாழ்கிறோம். அறிஞர் கூறும் அமுத மொழிகள் அவர் வாழ்க்கையில், தான் பெற்ற அனுபவம், அல்லது பிறரது வாழ்க்கையில் நடப்பதைக் கூர்ந்து கவனித்து அதில் கண்ட வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் கூறுவதாகும். அறிஞரும் நம்மைப் போன்று தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்து பிறந்தவர்தானே. வாழ்வியல் உண்மைகளை அறிந்து அறிஞரால் கூறுவது நமக்கு ஏன் முன்னரே தெரியாமல் போய்விட்டது? அறிஞர் எடுத்துக் கூறிய பிறகுதானே நமக்கு அந்த வாழ்வியல் உண்மை நமக்கு தெரிய வருகின்றது. அப்படியே தெரிய வந்தாலும் நாமோ, இந்த சமுதாயமோ அதனை சிந்தித்து உணர்ந்து உறுதிப்படுத்தி வாழ்வதில்லை. ஏன்? அவ்வாறாக இச்சமுதாயம் வாழ்ந்திருந்தால் தனது பூர்வீகச் சொத்தான அமைதியை இழந்து தவிக்க வேண்டிய நிலை இருந்திருக்காது. ஏதார்த்தத்தில் அவ்வாறு இல்லை. அதனை சிந்திக்கவே தான் இன்றைய விருந்து.

    இப்பொழுதாவது. வாழ்வியல் உண்மைகளைக் கூறும் விடிவெள்ளியான திருவேதாத்திரியத்தை உலகசமுதாயம், மதித்து போற்றி, பின்பற்றி வாழ்வதுதான் உலக சமுதாயத்திற்கு விடிவு. அதற்காகத்தான், உலக சமுதாயத்திற்கு சேவை செய்யவே உலக சமுதாயச் சேவா சங்கத்தை தோற்றுவித்துள்ளார் பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஒழுங்காற்றலாகிய இயற்கை/இறை மனித உடலில் ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டு உடலை சீராக இயக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், மனித மனதிலும், சீராக ஒழுங்குடன் இயங்கி வாழ்வில் ஒழுக்கம் மலர, மனிதன் எவ்வாறு அதற்கு வழிவிட வேண்டும் என்பது பற்றிய, சிந்தனையை இன்றைய அறிவிற்கு விருந்தாக அருந்த இருக்கிறோம். அறிஞர் ரூஸோ, திருவள்ளுவர், சுவாமி விவோகனந்தர், வேதாத்திரி மகரிஷி அவர்கள் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியுள்ள அத்துனை அறிஞர்களின் அறிவாற்றல் துணையுடன் இச்சிந்தனையை தொடங்குகிறோம்.

    குருவணக்கம்

    FFC-185-அறிவேதான் தெய்வம்-

    என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கவி இயற்றி சூசகமாக அவ்வையார் கூறிய அறிவினராகிய நல்லோர் இணக்கத்தை பெற்றுக் கொள்ளச் செய்து, ஒழுக்கவியலைப் போதிக்க, இரண்டாம் உலகப் பொது மறையான திருவேதாத்திரியத்தைத் தந்த அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களையும் நினைவு கூர்வோம். அகவினத்தார்க்கு சாகா வரமும், மற்றவர்களுக்கு பரிபக்குவ நிலையும், தருவதாகவும், திருத்திடுவோம் என்று, திருகாப்பிட்டுக் கொள்ளும் போது அளித்த வள்ளலாரின் உறுதிமொழியும் நமக்கு வெகுவாக துணை நின்றே நம்மை எல்லாம் வழிநடத்துகின்றது. அந்த வழிநடத்துவதில் இடம் பெற்றது இன்றைய சிந்தனையும்.

    முதலில் அறிஞர் ரூஸோ ஒழுக்கம் பற்றி கூறுவதனை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.

    “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்கிறார் அறிஞர் ரூஸோ. இங்கே எழுகின்ற வினா ‘ஏன் ஒழுக்கத்தை போர்க்களத்தோடு ஒப்பிடுகிறார்’ என்பது. ஒழுக்க நெறியில் வாழ வேண்டும் என முடிவு செய்து அதற்காக, ஆன்மீகப் பயிற்சிகளை விடாது செய்து வருபவர்கள், ஒழுக்கம் போர்க்களம் போன்றது என்று அறிஞர் ரூஸோ கூறுவதனை அனுபவித்திருப்பர். மற்றவர்களுக்கு அறிஞர் ரூஸோவின் இந்த வேத வாக்கு எந்த வித சலனத்தையும் ஏற்படுத்துவது கடினம்.

    ஒழுக்கத்தில் வாழ வேண்டுமானால் ஓயாமல் மனதோடு போராட வேண்டும் என்கிறார் அறிஞர் ரூஸோ. அப்படியானால் ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டுமெனில் வாழ்க்கை முழுவதும் மனதோடு போராடிக் கொண்டிருக்க வேண்டுமா? மனப் போராட்டத்திற்கு முடிவு என்பது கிடையாதா? ஒழுக்கத்திற்கான போராட்டமேதான் வாழ்க்கையாகிவிடுமே என்று ஒழுக்கத்திற்கான போராட்டத்தை கைவிட்டு விடலாமா என்று கூடத் தோன்றலாம். எந்த ஒரு பயிற்சிக்கும் முடிவு என்பது உண்டு. அதுபோல் ஒழுக்கப் பயிற்சிக்கான முடிவினை, தெய்வீகப் பயிற்சியான தற்சோதனையின் வழியாக விரைவில் பெற்று விட்டால் ஒழுக்கத்திற்கான போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். பின்னர் வாழ்நாள் முழுவதும் ஆனந்த வாழ்வு வாழலாம்.

    இப்பொழுது வேண்டியது யாதெனில், ‘மனிதஇனம் ஒழுக்க வாழ்வு வாழவில்லை எனில், வேறு எந்த உயிரினம் ஒழுக்க வாழ்வு வாழமுடியும்’ என்பதனை விளங்கிக் கொண்டு, ஒழுக்கத்திற்கான சரியான வரையறையைத் தெரிந்து கொண்டு, ஒழுக்கத்திற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, அதற்கான எளிய பயிற்சிகளையும் செய்து வருவதுதான் தேவை.

    இயற்கை வகுத்துள்ள ஒழுக்கத்தைப்பற்றி அறியாதவர்கள் ஏராளம்! ஏராளம்!. சரியான ஒழுக்கத்தைப் பற்றி கவலைப்படாதவர்களே அதிகம். ஒழுக்கப்பயிற்சியில் அது போராட்டமாக உள்ளது என மனம் தளர்வடைந்து, ஒழுக்கப்பயிற்சியினைக் கைவிட்டவா்களும் இருக்கின்றனா். ஒழுக்கத்திற்கான போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள்தான் அறிஞர்கள், ஞானிகள், நெறிசார்ந்த சான்றோர்களாவார்கள். நெறியைச் சார்ந்து இருப்பதால் அவர்கள் சான்றோர்களாகிறார்கள்.

    ஒழுக்கம் போர்க்களம் என்றால், யார் யாரிடம் போரிட வேண்டும்? மனிதன், தான், தன்னுடனேயே போராட வேண்டும். “மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்” என்று உலக நீதியில், உலகநாதர் கூறிய வேதவாக்கினை நினைவில் கொண்டு, மனம் சொற்படி போகாமல் அறிவு சொல்லும் வழியில் சென்று கொண்டு போராட்டத்தில் வெல்ல வேண்டும். போராட்டம் என்றால் இருவருக்கிடையே நடப்பது. ஒரு மனிதன் தன்னுடன் போராட வேண்டும் என்றால் இன்னொரு மனிதன் யார்? ஒரு மனிதனுக்குள் இன்னொரு மனிதன் இருப்பதாக அல்லவா அர்த்தம் ஆகின்றது. ஒழுக்கத்தைப் பற்றி, வேறு சில அறிஞர்கள் கூறுவதனை ஆராய்ந்து இதற்கான பொருள் என்ன என்று அறிவோம். போராட்டம் என்பது ஒரு செயல். எனவே எந்த ஒரு செயலுக்கும் விளைவு உண்டு என்பதால், ஒழுக்கத்திற்கான மனப்போராட்டத்திற்கும் முடிவு உண்டு. அந்த முடிவு எப்போது கிட்டும்? அடுத்த விருந்தில் அறிவோம். அடுத்த விருந்தில் அறிவின்-–அறிவியல், மற்றும் முதல் அறிவின்-அறிவியலாளர் யார் என்பது பற்றியும் அறிய இருக்கிறோம். தொடரும் 04-05-2015–புதன் அன்று தொடரும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 11/?

     

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    FFC – 184

    27-04-2016—புதன்

    FFC-SUB_title

    FFC-166-dheaivappulavar

    வாழ்க வளமுடன்.

    கடந்த அறிவிற்கு விருந்தில், செம்பொருளாகிய மெய்ப்பொருளை அறிந்து, அறிவை முழுமை அடையச் செய்து கொண்டிருக்கின்ற மனவளக்கலைஞர்களாகிய நாம், எது அறிவு என்று திருவள்ளுவர் கூறுவதனை அறிந்து கொண்டோம். இன்றும் ‘எது அறிவு’ என்று கூறுகின்ற மற்றுமொரு குறளையும் அறிந்து கொள்வோம்.
    மெய் உணர்தல்
    “பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
    செம்பொருள் காண்பது அறிவு”                            குறள் எண் 358

    பொருள்: ‘பிறவித்துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு, முக்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு’ என அறிஞர்கள் இக்குறளுக்குப் பொருள் கூறுகின்றனர்.

    இங்கு ஆய்வு செய்ய வேண்டியவைகள் மூன்று உள்ளன. அவையாவன:

    1) பிறவியே துன்பமாவது,
    2) அதற்குக்காரணமான பேதைமை—அறியாமை,
    3) முக்தி.

    இக்குறளில் ‘பிறப்பு என்னும் பேதைமை’ என்றுதான் உள்ளது. ‘துன்பம்’ என்கின்ற வார்த்தையே காணப்படவில்லை. இருப்பினும் இக்குறளுக்குப் பொருள் கூறும்போது பிறவியைத் துன்பமாகக் கருதி ‘பிறவித்துன்பத்திற்குக் காரணமான அறியாமை’ என்கின்றனர் பொருள் கூறும் அறிஞர்கள். எனவே பிறவி எவ்வாறு துன்பமாகும் என ஐயம் நமக்கு எழலாம்.
    ‘பிறவியைத் துன்பமாகக் கருதுவது’ உலகியல் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூறுகின்ற கூற்றாகவல்லவா இருக்கின்றது என்று மற்றுமொரு ஐயமும் எழலாம்.

    விரக்தி என்பது என்ன?

    விரக்தி என்பது, வாழ்க்கையில் துக்கம், இழப்பு, கவலை, ஆகியவைகள் ஏற்படும்போது, அம்மூன்றிற்கும்
    என்ன காரணம் என்று அறியாமலே இருக்கும்போதும்,
    மேலும் காரணம் என்ன என்று எளிதில் அறிய முடியாமல் இருக்கும்போதும்,
    காரணம் அறிந்து கொள்ளும் திறன் இல்லாமல் இருக்கும்போதும்,
    தன்மேலேயே, ஒருவகை கற்பனையான மனோநிலையில் ஏற்படும் வெறுப்பு.

    முன்வினை மற்றும் இப்பிறவியில் அறிந்தோ, அறியாமலோ செய்துள்ள பாவச்செயல்களின் விளைவால், துன்பங்கள் அதிகமாகி, அதற்கானக் காரணம் முன்வினையும், தான் இதுவரையில் செய்துள்ள தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவச் செயல்களே என்று அறியமாமல் தவிக்கும்போது வருவது ஒருவகை விரக்தி.

    ஆனால் ‘பிறவியே துன்பம்’ என்று திருவள்ளுவர் கூறுவது விரக்தியால் அல்ல. மாறாக பேரறிவின் தன்மையான விவேகத்தால் கூறப்படும் கூற்றாகும். ‘விவேகத்தால் கூறப்படும் கூற்று என்பது எவ்வாறு’ என்கின்ற மூன்றாவது ஐயம் எழலாம்.

         விவேகம்(Wisdom) என்பது ஒன்றின் நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் அறிவு. இயற்கையின் ஆதிநிலையாகிய/இறைநிலையாகிய மெய்ப்பொருள் வேகத்தையும்(Force), விவேகத்தையும்(Consciousness)தானே கொண்டுள்ளது.

    எனவே, மெய்ப்பொருளை அறியும் நோக்கத்தில், பயணித்துக் கொண்டிருக்கும் அறிவிற்கு, இறுதி  பிறவியில் ஏற்படுகின்ற, எதார்த்த நிலையை புரிந்து கொள்கின்ற தெளிவே விவேகத்தின் வெளிப்பாடாகும்.

    பிறவி என்பது துன்பமாகத்தானே உள்ளது!? எதற்கு துன்பமாக உள்ளது? துன்பம் என்பது உணர்வு என்பதால், உணர்வை அறிந்துகொள்ளும் அறிவிற்கு பிறவி துன்பமாக இருக்கின்றது. அதாவது ஆன்மாவில் இருக்கும் அறிவுதான் பிறவியைத் துன்பமாக உணர்கின்றது. ஏனெனில்,
    பேரறிவே தன்னையே அறிந்து கொண்டு(சுத்த அத்வைதம்) இன்புற எடுத்துக் கொண்ட
    மனிதஉரு தன்மாற்ற பயணத்தில்,
    அறிவு தன்னை அறியாமலேயே இருப்பதும்,
    தன்னை அறிய முயலும்போதும் ஏற்படுகின்ற தடைகளும் துன்பங்களாகவேத்தானே இருக்க முடியும்?

    மாற்றாக இவ்வாறாகவும் புரிந்து கொள்ளலாம். எப்படி? மனித அறிவு மெய்ப்பொருளை, பேரறிவை அறிந்து கொள்வது என்பது எப்போது சாத்தியமாகும்? ஆன்மா தன்னை முழுவதுமாகத் தூய்மை செய்து கொள்ளும்போதுதான் சாத்தியமாகும். தூய்மை செய்வது என்பது,

    ஏற்கனவே உள்ள அழுக்கை நீக்கினால்தானே சாத்தியாமாகும்!
    ஏற்கனவே பல பிறவிகளில், அறிவு, அறியாமையால்
    ஆணவம்(தன்முனைப்பு), கன்மம்(பாவப்பதிவுகள்), மாயை(எதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாமல் இருத்தல், அறிய வேண்டியதை அறியாதிருத்தல், பொருளல்லவற்றை பொருள் எனக் கொள்ளுதல்) ஆகிய மும்மலங்களால் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற
    தீய வினைகளின் பதிவுகளே ஆன்மாவில் உள்ள அழுக்குகளாகும்.
    ஆகவே தீய வினைகளின் பதிவுகள் செயலிழக்கச் செய்வது என்பது ‘செயலுக்குரிய விளைவு உண்டு’ என்கின்ற இயற்கை/இறை நீதியின்படி தீயச்செயல் பதிவுகளுக்கு, விளைவுகள் வரும்போது அது துன்பங்களாகவே வந்துதானே தீர வேண்டும்.

    FFC-184- எனவே ஆன்மாவிற்கு-

    எனவே ஆன்மாவிற்கு பிறவி என்பது, இயற்கையின் நியதியின்படி, தன்னிடம் பதிந்துள்ள செயல் பதிவுகளுக்கேற்ப விளைவுகளைத் தருகின்ற ஒரு சாதனம்(Medium). மேலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம், வாழ்க்கை என்பது என்ன என்று எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறோமா?! சற்குருவின் அருளால் அறிவுக்கண்–சிந்தனைக்கண் திறந்தபிறகுதானே இப்போது சிந்தித்துப் பார்க்கிறோம்.

    வாழ்க்கை என்பது என்ன?

    வாழ்க்கை என்பது இன்ப—துன்ப அனுபவங்களே அன்றி வேறு ஏதும் அல்ல! யாருக்குமே துன்பமில்லாமல் வாழ்நாள் முடிந்து விடுவதில்லை.
    சிலருக்கு இன்பம் அதிகமாகவும், துன்பம் குறைவாகவும் இருக்கலாம்.
    அல்லது
    இன்பம் குறைவாகவும், துன்பம் மிகுதியாகவும் இருக்கலாம்.

    துன்பம் வரும்போது, இன்பம் வந்தபோது அனுபவித்த நினைவுகளைக் கொண்டு துன்பத்தை சரிசெய்து கொள்ள முடிகின்றதா மனிதனால்?! இல்லையே! துன்பம் வரும்போது மனிதன் துவண்டு விடுகின்றானே!

    ஒரு வேளை உதாரணத்திற்கு, ஒருவருக்குப் பிறந்ததிலிருந்து துன்பம் என்று சொல்லும் அளவிற்குத் துன்பமே வந்ததில்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் முற்பிறவிக் கருமையப் பதிவுகளை யார் அறிவார்?! ஆகவே துன்பம் இல்லாமல் இருக்கும் ஒருவர், இனிமேலும் தமக்குத் துன்பம் வராது என நினைக்கவோ/சொல்லவோ முடியுமா? முடியாது. இதனை மற்றவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்தும்கூட அறிந்து கொள்ளலாம்.

    FFC-184- ஆகவே பிறவி என்பது-

    பிறவி எடுப்பதே புலன்களின் வழியாக இன்பம் அனுபவிப்பது மட்டுமே அல்ல. இது சாதாரண இன்பம். சற்றேறக்குறைய மூன்று லட்சத்து இருத்தைந்தாயிரம் (65,00000÷ 20=3,25,000) பிறவிகளில், ‘தின்றுத் திரிந்து உறங்கி அனுபவித்ததுதானே இந்த சாதாரண இன்பம்! மகரிஷி அவர்கள் அழைப்புக்கவியில் ‘தின்றுத் திரிந்து உறங்கவா பிறந்தோம்’ என அன்புடன் வினவி அறிவுறுத்துவதனை நினைவில் கொள்ள வேண்டும்.

    FFC-184- சலிப்பை ஏற்படுத்துகின்ற-

    புலன்களின் உதவியின்றி அனுபவிக்கின்ற இன்பம் ஒன்று உள்ளது மனிதப்பிறவிக்கு. அந்த இன்பத்தை ஏற்கனவே முற்பிறவியில் அனுபவித்திருந்தால் இப்போது இந்தப் பிறவி எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அது என்ன இன்பம்? அதற்கு என்ன பெயர். பொருள், மெய்ப்பொருள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது போன்றாதா அது? ஆம்! மனம் நான்கு நிலைகளை அனுபவிக்கக்கூடியது என்றும், இதுவரை மனதைப் பற்றிய தெளிவான கருத்துக்கள் வெளியாகாத நிலையில் ‘மனம் உயிரின் படர்க்கை நிலை‘ என்றும் கூறுகிறார், மனதை வளப்படுத்தும் கலையை வகுத்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    புலன்களின் துணையில்லாமல் அனுபவிக்கும் இன்பம் பேரின்பம்(ecstasy) என்பது அமைதியும் திருப்தியும் கலந்த இன்பம் என்கிறார் மகரிஷி அவர்கள். பேரின்பத்தில் அமைதியும் இருக்கும். திருப்தியும் இருக்கும். ஆனால் புலனின்பத்தில், அறிவின் அறியாமையால், திருப்தி வாராமல், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என அவா நீடித்துக் கொண்டே, ‘அளவு கடைப்பிடித்தலும், முறையை மாற்றாமையும்’ என்கின்ற இன்பத்தின் சாம்யத்திற்கு (formuala for pleasure—to follow implicitly limit and method)உட்படாமல்போய், புலன்களின் செல்களுக்குப் பொருந்தா உணர்வு ஏற்பட்டு, விளைவு, இன்பமே துன்பமாகிவிடுகின்றது. ஆனால் பேரின்பம் என்பது அறிவின் அறியாமை நீங்கிய நிலையில் அனுபவிக்கப்படுவதால், புலன் இன்பங்களை அளவு, முறையோடு அனுபவித்தும், பேரின்ப நிலையை அனுபவிப்பதால் அங்கே புலன்களுக்கு பொருந்தா நிலை ஏற்படுவதில்லை. மாறாக பேரின்ப போதையில் திளைக்கலாம்.

    ஆகவே பிறவி ஆன்மாவிற்கு துன்பமே என்கின்றனர்

    ஆன்றோர்கள்.  அதனால்தான் ‘மீண்டும் பிறவா வரம்

    வேண்டும்’ என்கின்றனர் பக்தியில் திளைத்தவர்கள்.

    எவ்வாறு கடல் நீர் ஆவியாகி மேகமாகி, ஆறவாரமிட்டுக் கொண்டு, ஆறாகவும், நதியாகவும் ஓடி மீண்டும் கடலை சென்றடைந்ததும் அமைதியடைகின்றதோ, அதேபோன்று ஆன்மா எங்கிருந்து புறப்பட்டதோ, மீண்டும் அங்கேயே சேர்வதற்காகத்தான் மனிதப்பிறவி எடுக்கின்றது. இஃதன்றி, ஆன்மா மாறான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால்(புலன்மயக்கம் கொண்டு, பிறவியின் நோக்கம் அறியாமல்), ‘பிறவியே துன்பம்’ என மனிதனுக்குத் தெரியாமல் போனாலும், .இயற்கையின்படி மனிதனுக்கு பிறவி துன்பமே. துன்பம் வருகின்றபோது ஏன் துன்பம் வந்தது/வருகின்றது என்று சிந்திக்க வேண்டாமா மனிதன்? துன்பம் என்பது என்ன, ஏன் வருகின்றது என்கின்ற கேள்வி எழுந்துவிட்டால் அது மனிதனை இறை உணர்விற்கு அழைத்துச் செல்லும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இளைஞர் ஸ்ரீ வேதாத்திரியை பின்னர் மகானாக்கிய,  அவருள் இளமையிலேயே எழுந்த உன்னத வினாக்களில் ஒன்றுதான் ‘துன்பம் என்பது என்ன, ஏன் வருகின்றது’ என்பது. இதே போன்றுதான் இளவரசராக இருந்த புத்தருக்கும் துன்பம் பற்றிய வினா எழுந்ததால்தான் பின்னர் போதிமரத்தடியில் ஞானம் பெற்றார்.

    அதாவது ‘துன்பம் என்பது என்ன, ஏன் வருகின்றது’ என்பதற்கு ‘இறை உணர்விற்கும்’ தொடர்பு உள்ளதே இதற்கானக் காரணம். ‘மனிதப் பிறவியில் இறை உணர்வு பெற்றிட வேண்டும்’ என்பது இயற்கையின் நோக்கமாக உள்ளதால், அதனை அறியாமலோ அல்லது மறந்தோ அல்லது அலட்சியப்படுத்தியோ வாழ்வது இயற்கைக்கு முரணான வாழ்க்கையாகத்தானே அமையும். இயற்கைக்கு முரண்பட்டு வாழ்ந்தால், விளைவு துன்பம் தானே!?

        எனவே துன்பத்திற்கான காரணத்தை அறிந்து அதனைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் ஆழ்மனதிலிருந்து(மனதின் மறுமுனையிலிருந்து) வந்துவிட்டால், அதற்கான ஒரே தீர்வான ‘இறை உணர்வு பெறுவதே’ என்பதனை அறிவு கண்பிடிக்கின்றது. மேலும், இதற்கு இயற்கையே/இறையே துணையாகவும், காப்பாகவும் அமைகின்றது. எனவேதான் மகரிஷி அவர்கள் ‘துன்பம் ஏன் வருகின்றது’ என்கின்ற வினா வந்துவிட்டால் அது இறை உணர்விற்கு கொண்டு செல்லும் என்கிறார்.

    அறிவு தன்னை அறியாத அறியாமையின் காரணமாக துன்பம் தரக்கூடிய மீண்டும் மீண்டும் பிறப்பு—இறப்பு என்கின்ற, ஓயாத சுழற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளும் அறியாமை நீங்கிய அறிவால்தான் முடியும் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். அந்த அறிவுதான் ‘அறிவு’ என அறிவிற்கு வரையறையை கூறுகிறார் அறிஞர் திருவள்ளுவர்.

    மேலும் முக்தி என்பதும் வள்ளுவர் கூறும் அறிவின் நிலையே அது. இதனையே நம் குருதேவர் அவர்கள் ‘அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை, அது முக்தி என்கிறார். ‘அவன் நீ ஒன்றாய் அறிவது’ என்பது எப்போது சாத்தியமாகின்றது? ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற திறனை அறிவு பெறும் நிலையில்தான் சாத்தியமாகின்றது.

    மனிதன் பண்பாட்டில் உயர்வதற்கு பண்பேற்றம் பெறவேண்டும். அதற்கு மனிதப்பிறவியின் நோக்கமான இறை உணர்வு பெறவேண்டும். அதாவது ஆறறிவுடன் வாழ்கின்ற மனிதன், அதற்கு பொருத்தமாக, இறை உணர்வு பெற்று பிறவிப்பயனை பெற்றிடல் வேண்டும் என்று ‘மலர் வழியே விளங்கும் மறைபொருள்’ என்கின்ற தலைப்பில், சுத்த அத்வைத வி்ஞ்ஞானத்தை எளிமையாக விளக்க விரும்பிய மகரிஷி அவர்கள் அக்கவியின் கடைசி வரிகளில் கூறுகிறார்.

    இந்த நிலை என்பது மனிதகுலத்தில் இயற்கையின் ஆதிநிலையின்/இறைவெளியின் இயல்பூக்க நியதியின்படி நடந்தே ஆக வேண்டியதே! இருப்பினும், ‘Fraction demands Totality Supplies’ என்பதனையும் கண்டுபிடித்த மகரிஷி அவர்கள், இறை உணர்வால் மலர வேண்டிய ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய நெறிகளைக் கொண்ட அற உணர்வு மலர்ந்திட அறிவு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்கின்ற திறனைப் பெற்றிட வேண்டும் என்கின்ற சங்கல்பத்தை வாழ்த்தாக அமைத்துள்ளார் உலகநல வாழ்த்துப்பாவில். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    இத்துடன் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற உலகை வாழ்த்தும் மகா மந்திரத்தின் உட்பொருளை விரிவாக பதினோறு விருந்துகளில் அருந்தினோம். இதனை மீண்டும், மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்து, கொண்டு வந்து,  ஆழ்ந்து விரிந்து சிந்தித்து உலகை வாழ்த்தும் புனித எண்ணமான மகா மந்திரத்திற்கு ஆற்றலையும், திணிவையும் அளிப்போம்.

    வாழ்க உலக சமாதானம். மலரட்டும் விரைவில் உலக சமாதானம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 10/?

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    FFC – 183

    24-04-2016—ஞாயிறு

    FFC-183-sub titlle-Untitled

      FFC-166-dheaivappulavar

    வாழ்க வளமுடன்.

         ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா மந்திர வாழ்த்து பற்றி பல துணைத்தலைப்புகளில் சிந்தித்து வருகிறோம். மகரிஷி அவர்கள்  ‘தன்னைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் திருக்குறள் ஆகும்’ என்கிறார்.  ஒரு மனிதன் அறிவின் முழுமையை அடைய அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கு வாழ்க்கைத்துறைகள் பற்றிய தெளிவுடன் இருக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். அறிவின் முழுமையில்தான் மனிதன் தனது தீயவினைப்பதிவுகளை முழுமையாகப் போக்கிக் கொள்ள முடியும்.  மீண்டும் பிறவா நிலை எய்த முடியும்.  அறிவின் முழுமைப்பேற்றில்தான் ஆன்மா பிறவி எடுத்ததற்கான காரணம் நிறைவேறிவிடுகின்றது. அதாவது, அறிவு வாழ்நாளில், உணர்கின்ற எல்லாவற்றிலும் சிறப்பானதும், முதன்மையானதுமாகிய ‘தன்னையே உணர்ந்து கொள்ள முடிகின்றது.  இந்தப்பேறு தான் வீடுபேறு. பிரபஞ்சத்திற்கே வீடுமாகவும், அதே நேரத்தில் இப்பிரபஞ்சத்தில் மனிதன் எழுப்பியுள்ள வீடுகளுக்கெல்லாம் வீடாகவும் உள்ள இயற்கையின் ஆதிநிலையை/இறைவெளியை உணர்ந்துகொள்வதனைப் பேறாகக் கருதி, அது வீடுபேறு என அழைக்கலாகின்றது.

         ஞானநெறியைக் காட்டிய சான்றோர்களில் ஒரு சிறந்த பேரறிஞர் திருவள்ளுவர் என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் கூறுகிறார்: திருவள்ளுவர் ‘படைப்பு’ எனும் கற்பனையிலிருந்து விடுபட்டு, ‘தன்மாற்றம்’(பரிணாமம்) என்கின்ற உண்மை வழியிலே முழுமை பெற்ற மெய்ஞ்ஞானி ஆகிறார் என்கிறார் மகரிஷி அவர்கள்.  இதுவரை திருவள்ளுவரை இவ்வாறு அறிந்து வெளிப்படுத்தியவர் வேறு யார் உள்ளனர் எனத் தெரியவில்லை. எனவேதான் திருவள்ளுவர் அவதரித்த பிறகு, பத்தொன்பது நூற்றாண்டுகள் சென்ற பிறகு அவதரித்த மகரிஷி அவர்கள், திருவள்ளுவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஆன்மீக–இயல்பூக்க நியதியின்படி தானும் பண்பேற்றத்தில் ஏற்றம் பெற்று, நம் எல்லோரையும் உள்ளடக்கிய உலக சமுதாயத்தையும்  பண்பில் ஏற்றம் பெறச்செய்யவல்ல மனவளக்கலையை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

    sudhtha advaitham

            எனவே இன்று திருவள்ளுவர் வழியில் ‘மெய்பொருள் காண்பது அறிவு’ என்கின்ற துணை தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.  இன்று மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா வாழ்த்து மந்திரம் திருவள்ளுவரின் எந்த கண்டுபிடிப்புடன் இணைகின்றது என்பதனை அறிவோம்.

        மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான தெய்வப் புலவர் திருவள்ளுவர் அறிவாற்றல் பற்றி   ஏதாவது  கூறியிருக்கின்றாரா என சிந்தித்தால், ‘கூறுகின்றார்’ என்கின்ற பதிலே வருகின்றது.

        ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பதனை ஒன்றுபடுத்திப் பார்ப்பதற்கு,  தெய்வப்புலவர் கூறும் குறட்பாக்கள் என்னென்ன?  மெய்உணர்தல் என்கின்ற அதிகாரத்திலும், அறிவுடைமை எனும் அதிகாரத்திலும் அக்குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன.

     அதிகாரம் – 36 – மெய் உணர்தல்

     எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு.               குறள் எண். 355.

          இக்குறள் மெய் உணர்தல் அதிகாரத்தில் இடம் பெற்று, அறிவு பற்றி கூறுகின்றது. எது அறிவு என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். ஆறாம் அறிவிற்கான வரையறையைக்  கூறுகின்றார். ஆகவே மெய்யை/மெய்ப்பொருளை/இறையை உணரவிருக்கின்ற ஒவ்வொருடைய அறிவும் எந்த பரிபக்குவ நிலைக்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.  மெய்உணர்வு/இறைஉணர்வு பெறுதலுக்கான வரையறையையும் இக்குறளில் காணமுடிகின்றது.  மெய்ப்பொருள் என்பது என்ன?  பெயரிலிருந்தே தெரிகின்றது அதுதான் மெய்யான பொருள் என்று.  ஆகவே மற்றப் பொருட்கள் பொய்யானவை; பொருட்களல்ல என்றாகின்றது.  இருப்பது எவ்வாறு பொய்யாக அல்லது இல்லாததாக முடியும் என்கின்ற நியாயமான ஐயமும் எழுகின்றது.  நியாயமான ஐயம் நீங்க இன்றைய சிந்தனை துணைபுரியட்டும்.

    eadhu meypporul

     ‘மெய்உணர்வு’ என்றால் என்ன பொருள்? 

    மெய்ப் பொருளை உணர்வது மெய் உணர்வு.  

    மெய்ப்பொருளின் தன்மையை உணர்வது மெய் உணர்வு. 

    மெய்ப்பொருள் தன்மை என்பது என்ன? 

    மெய்ப்பொருள் ஒன்றே எல்லாமாகவும் ஆகியுள்ளது என்பதுதான் மெய்ப்பொருளின் தன்மையாகும்.

     எனவே பேரறிவே பின்னப்பட்டு தனது தன்மாற்ற பயணத்தில் மனிதனிடம் வந்து, தன்னையே/தனது மூலநிலையாகிய மெய்ப்பொருளையே அறியும்போதுதான் ஆறாம் அறிவாகின்றது.  அதாவது மனித அறிவு முழுமையாகி மெய்ப்பொருளாகிவிடுகின்றது.  

      அடுத்ததாக அறிவுடைமை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள குறளைக் கவனிப்போம்.

     அதிகாரம்-43- அறிவு உடைமை

     எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு.                  …. குறள் எண் 423

     ‘மெய் உணர்தல்’  அதிகாரத்தில் எது அறிவு என்று கூறிய அறிஞர் திருவள்ளுவர், மீண்டும் அறிவுடைமை எனும் அதிகாரத்திலும் எது அறிவு என்று கூறுவதனைக் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆறாம் அறிவின் கடமையும், பொறுப்புமாக உள்ளது.

            ஒருமனிதனுக்கு இருக்க வேண்டிய பத்து உடைமைகளில் ஒன்றாக அறிவைக் கருதி அறிவு உடைமை எனும் அதிகாரத்தை வகுத்துள்ளார் திருவள்ளுவர். மனிதர்கள் என்றால் எல்லோருக்குமேதான் அறிவு இருப்பதால்   எல்லோருமே அறிவை உடைமையாக, அதாவது தனது செல்வமாகக் கொண்டிருப்பதில்லை என்கின்ற எதார்த்த நிலையைக் கருதி  ‘அறிவை’, தனது உடைமையாக–செல்வமாக ஆக்கிக்கொள்வதற்காக அறிவுடைமை என்கின்ற அதிகாரத்தை வைத்துள்ளார்.  வாழ்க அறிவுச் செல்வம்.  வளர்க அறிவுச் செல்வம்.

         அறிவு என்றாலே அறிந்து கொள்ளும் இயல்புடையது அறிவு.  அறிந்து கொள்வது தானாகவும் அறிந்து கொள்ளலாம்.  அல்லது யாராவது சொல்லக் கேட்டும் அறிந்து கொள்ளலாம்  எவ்வாறாக இருந்தாலும் ஒன்றைப் பற்றி அறியும்போது அதன் உண்மைப் பொருளை அறிந்து கொள்ளும் அறிவே அறிவு என வரையறுக்கிறார்(Defines what is Consciousness) திருவள்ளுவர்.

         திருவள்ளுவர் அறிவைப்பற்றி கூறும் அடிப்படையிலிருந்துதான்,  ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா மந்திர வாழ்த்தை உருவாக்கிய  மகரிஷி அவர்களிள் அறிவுகூர்மையை நாம் அறிந்து மகிழ முடிகின்றது/வேண்டியுள்ளது.  எனவேதான் ‘தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் திருக்குறள்’ என மகரிஷி அவர்கள் கூறுவதற்கானக் காரணத்தையும் அறிய முடிகின்றது.  மெய்ப்பொருளை அறிந்த அறிவுதான் அறிவு (ஆறாம்) என்கிறார் திருவள்ளுவர். 

        மெய்ப்பொருளை அறிந்த அறிவுதான் மனிதஇனம் பண்பாட்டில் உயர்ந்திருக்க முடியுமன்றோ!  மெய்ப்பொருள் அறிந்த அறிவுதான் முழுமை அடைகின்றது.  சமுதாயத்தில் இன்னும் பண்பாடு உயரவேண்டும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.  பண்பாடு உயர்வதற்குத் தேவையானது, உலகமக்கள் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ பெறும் திறமையைப் பெறவேண்டும்.  எனவே ‘பகுத்துணர்வில் பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா வாழ்த்தினை எண்ண அலைகளாக பரப்ப ஏற்படுத்தியதுதான் உலகநல வாழ்த்துப்பா.

          ஏன் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற சொற்றொடரை புனிதச் சொற்றொடர் என்கிறோம்?  அச்சொற்றொடர் கூறும்  நிலையினை மனிதன் அடைவானாகில் அவன் புனிதம் அடைகிறான்.  அதாவது மெய்ப்பொருள் உணர்ந்த நிலை அது.  மேலும் கூறுவதென்றால், ஐயப்படாது அகத்தை உணர்ந்த நிலை அது.  அந்த நிலையை அடைந்த மனிதனை தெய்வத்தோடு ஒப்புக் கொள்ளலாம். அறிவாகிய தெய்வத்தையே-தெய்வீகம் தன்னுள் இருந்து பூரித்து மலர்வதை உடைமையாக்கிக் கொண்ட நிலை அது.

         ஆகவே புனிதச் சொற்றொடரான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பது என்ன என்கின்ற விளக்கத்தை மகரிஷி அவர்களின் வழியாக நேரிடையாகவும் அதற்கு மேலும் சான்றளிக்கும் வகையில் செந்நாப்புலவர் திருவள்ளுவரையும் நமது சத்சங்கத்தில் இப்போது எழுந்தருளச் செய்து கொண்டோம். இந்த பிரபஞ்சமே இயற்கையின்/இறையின் உடலாக நினைக்க வேண்டியது இப்போது எளிதாகிவிட்டது.

         மெய் உணர்வு பெறுதல்-இறை உணர்வு பெறுதல்-தன்னிலை உணர்தல்-நான் யார் என்கின்ற  வினாவிற்கான புனித விடையை பெறுவதற்கான செய்முறைத் தேர்வில் வெற்றி பெற்றமை ஆகியன என்பது என்ன?  இயற்கையின் ஆதிநிலையே/இறையே/தெய்வமே நானாகவும், நானே மற்றவர்களாகவும், மற்ற உயிரினங்களாகவும், எல்லாப்பொருட்களாகவும் உள்ளேன் என்று அறிதலே ஆகும். 

        மேலும் ஏதாவது குறள் நம்முடைய இன்றையச் சிந்தனைக்கு உதவுகின்றதா என்றால், ஆம் மற்றுமொரு குறளை எடுத்துக் கொண்டு  அடுத்த அறிவிற்கு விருந்தில் (27-04-2016-புதன்) ஆராய்வோம்.

     வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 9/?

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    FFC – 182

    20-04-2016—புதன்

    FFC_167-பாரதியார் படம்

    ffc-182-sub-heading

    வாழ்க வளமுடன்.

    ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற, ‘உலகத்தை உய்விக்க வல்ல மகாமந்திரத்தைப்’ பற்றி சிந்தித்து வருகிறோம். ஒன்பதாவது நாளாக இன்று சிந்திக்க சத்சங்கத்தில் குழுமியிருக்கிறோம். இன்று சிந்திக்க வேண்டிய துணைத்தலைப்பு ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை!’ என்கின்ற ஆச்சரியத்துடன் கூடிய உண்மையாக உள்ளது. ஏன் இந்த தலைப்பைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்று அறிந்துவிட்டு தலைப்பிற்குள் செல்வோம்.

    பிரதான தலைப்பு(main title) ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது. இதனை வாழ்த்தாக உலகநலவாழ்த்துப்பாவில் அமைத்துள்ளார் மகரிஷி அவர்கள். 

    ஒன்றேயான அருவமே எல்லாமாகியுள்ள உண்மையினை விளங்க வைப்பது ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ காண்பதுதான்.

    மனிதகுலம் உருவத்தில் பேதங்களைக் கொண்டிருந்தாலும் ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்கின்ற உண்மையினை விளங்கவைத்து,   மனிதகுலத்தை உய்விக்க முடியும் என்பதனைக் கண்டுபிடித்துள்ளார் மகரிஷி அவர்கள்.

    அதாவது தெய்வத்திடமிருந்து வந்த மனிதன் மீண்டும் தெய்வநிலைக்கு உயர்ந்து வரும் போதுதான் மெல்ல மெல்ல பண்பேற்றம் பெற்று வர, வர, முடிவாக தெய்வநிலை உணரும்போது, முற்றிலுமாக பண்பேற்றம் அடைய முடியும்.

    பண்பேற்றமும் தெய்வநிலையை உணர்வதும் வேறு வேறல்லவே! .இரண்டும் ஒன்றுதானே!?.

    ஆறாம் அறிவிற்குரிய பேறு ‘இறைஉணர்வு’ என்பதால் மட்டும் மனிதன் இறை உணர்வு பெறவேண்டும் என்பதில்லை. பண்பேற்றம் பெறவே மனிதனுக்கு இறைஉணர்வு முதன்மை அவசியமாகின்றது.

    பண்பேற்றம் பெற்று வரும்போது, தெளிவின் உச்ச கட்டத்தில் இறைவன் தடுத்தாட்கொள்ளும்போது நடப்பதுதான் இறை உணர்வு எனும் ஞான ஒளி.

    இறைவனை பற்றி, அறிவை அறிந்த அறிஞர்கள் கூறுவது என்ன? அவற்றினை ஆராய்வோம்.

    இறைவனுக்கு உருவம் ஏதுமில்லை. இறைவன் அரூபமானவன்.
    எனவே அவன் எங்கும் எதிலும் நிறைந்திருக்கின்றான். அவன் இல்லாத இடமில்லை.
    இறைவன் எங்கும் நீக்கமற (நீக்கம்+அற) நிறைந்துள்ளான்.
    நீக்கமற (நீக்கம்+அற) என்றால் ஒரு இடம் கூடவிடாமல், எங்கும்(everywhere; omnipresent) என்று பொருள்.
    எனவே சர்வ வியாபியாகிய இறைவன் நம்மிடத்தும் இருப்பான் அன்றோ?!
    அதேபோன்று மற்றவர்களிடமும் இருப்பானன்றோ?!
    காணுகின்ற உருவங்களில் எல்லாம் இருப்பானன்றோ?!

    நம்மைச் சுற்றியும் (360°) இருப்பானன்றோ? அதனைத்தான் மகான் மகா கவி பாரதியார் ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை!’ என அழுத்தமாக, உறுதியுடன் கூறுகிறார்.

    சற்றுமுன்னர் அறிந்த இறைக்கான அறிஞர்களின் கூற்றுக்களின்படி, ’நோக்கும் திசையெல்லாம் இறையன்றி வேறில்லை’ என்று மகான் மகா கவி பாரதியார் கூறியிருந்தால் சரி. மாறாக, நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ என்று கூறுகிறாரே என ஐயம் எழலாம்.
    அதாவது, ‘நாமன்றி’ என்கின்ற வார்த்தைக்குப் பதிலாக ‘இறை’ என்கின்ற வார்த்தையைச் சொல்லியிருக்கலாமே என்கின்ற ஐயம். அப்படியானால் ‘நாமும்’ ‘இறையும்’ ஒன்று என்றுதானே பொருளாகின்றது. ஆம். ஒன்றுதான். இதுதானே ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைவதற்கான, பகவான் ஸ்ரீரமணர் எழுப்பிய மிகச்சிறந்த கேள்வியான ‘நான் யார்?’ என்பதற்கான பதில். இருப்பினும் நாம் மட்டும் இறை அல்ல, எல்லாமே இறை தானே? எல்லாம் இறைமயம். ‘நோக்கும் திசையெல்லாம் ஒன்றேதான் உள்ளது, ஒன்றைத்தவிர அன்னியம் என்பது கிடையாது’ என்பதனை வலியுறுத்தவே ‘நாமன்றி வேறில்லை’ என்கிறார் மகான் மகா கவி பாரதியார்.

    இறையே நானாக உள்ளது. இறையேதான் நாமாக உள்ளது. இறையேதான் எல்லாமாகவும் உள்ளது. எனவே இங்கே ஒரு சமன்பாடு வருவதனைக் காணமுடிகின்றது. அது என்ன?

    இறை=நான்=நாம்=எல்லாம்.

    இப்போது மகரிஷி அவர்களின் பொருத்தமான கவி ஒன்றினை நினைவிற்கொள்வோம்.

     

     

     57. “நான்” என்ற தத்துவமே நாம்

    நான் என்ற தத்துவமே நாமாய் உள்ளோம்
    நாடுகள் பலவற்றில் வாழுகின்றோம்
    ஊன் உருவம் வரை அறிவை எல்லையாக்கி
    ஒருவருக்கொருவர் இன, தேச, ஜாதி,
    தான் – தனது எனும் பேதம் கொண்டு வாழ்வில்
    தனித்தியங்கித் துன்புற்று ஆழ்ந்தாராய்ந்தோம்.
    ஆன்ம நிலையறிந்து ஆராய்ந்து கண்ட
    ஆட்சி முறை உலக சமாதானத் திட்டம்.”
                                                     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    FFC-182- இப்பாடல்- BOX MessageUntitled

     

    ‘நானேதான் நாமாக உள்ளோம்’, ‘நானேதான் மற்றவர்களாக உள்ளேன்’, ‘நானேதான் எல்லாமாகவும் உள்ளது’ ‘எல்லாமாக உள்ளது நானே!’ என்கின்ற, இந்த தெளிவுதானே பிரம்ம ஞானத்தின் சாரம். இந்தத் தெளிவு பேரின்பமாக இருக்கும் என்கிறார் மகான் மகா கவி பாரதியார். எனவே அதனைக் கூறும் அவருடைய பாடல் ஒன்றினை ஆய்வோம்.

    மகான் மகா கவி பாரதியார் கூறும் பாப்பா பாட்டு ஒன்றை நினைவு கூர்வோம்.

    cat_song_bharathiyar

    இந்தக் கவியினைச் சற்று உற்று நோக்கினால், முரசு என்கின்ற தலைப்பில் 31 பாடல்களை இயற்றியுள்ளார் மகான் மகா கவி பாரதியார். ஆரம்ப வரியே ‘வெற்றி’ என்றுதான் உள்ளது. அதாவது தான் கண்டுபிடித்த உண்மை இவ்வுலகம் உய்வதற்கானத் தீர்வாக இருப்பதால் அதனை வெற்றியாகக்(கண்டுபிடிப்பு வெற்றிதானே) கருதி, ஆனந்தத்தில் முரசு கொட்டி அறிவிக்கச் சொல்கிறார்.

    எனவே அந்த உண்மையினை எடுத்துச் சொல்ல விரும்பிய மகா கவி இவ்வையகத்திற்கு நல்லதாகிய உண்மையை சொல்வேன் என ஆரம்பித்து இயற்கையிலுள்ள எடுத்துக்காட்டினையே கொண்டு, பூனையை வைத்தே வேற்றுமையில் ஒற்றுமை இருக்கின்றது என்கின்ற உண்மையைக்கூறி முடிவில் அந்த உண்மையால் அன்பு ஓங்குவது தான் இந்த வையகத்திற்கு நல்லது எனக் கூறுவதனை அறிந்து மகான் மகா கவி பாரதியாரின் ஆழ்ந்து விரிந்த சிந்தனையை வியந்தும் போற்றியும், மதித்தும், ரசித்தும் மகிழ்கின்றோம். இது எதன் அடிப்படையில் அமைந்துள்ளது? இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்ற அடிப்படையில் அமைந்துள்ளது. கிளைத்தேற்றம் என்ன கூறுகின்றது? தான் உயராது மற்றவர்களின் உயர்வை மதிக்கவும் ரசிக்கவும் முடியாது என்பதே கிளைத்தேற்றம்.

    ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ எனத் தெளிவு பெறுவதால் என்ன நன்மை? அதுதானே ஆறாம் அறிவின் பயன்! என்ன நன்மை என்பதனை விளங்கிக் கொள்வோம்.

    மெய் உணர்வு பெறுதல்-இறை உணர்வு பெறுதல்-தன்னிலை உணர்தல் ஆகியவற்றிற்கு மூலமான ‘நான் யார்?’ என்கின்ற புனித வினாவிற்கான விடையை செய்முறைத் தேர்வில்(தெளிவுடன் கூடிய தியானம்— Meditation and clarity) வெற்றி பெறும் போதுதான் உறுதிப்படுத்தி, முழுமையானப் பயனை பெற முடியும்.

    இயற்கையின் ஆதிநிலையே/இறையே/தெய்வமே நானாகவும், நானே மற்றவர்களாகவும், மற்ற உயிரினங்களாகவும், எல்லாப்பொருட்களாகவும் உள்ளேன் என்று அறிதலே ஆகும்.

    இப்போது நமது சத்சங்கத்தில் எழுந்தருளி வாழ்த்தச் செய்வதற்கு, மகான் மகா கவி பாரதியாரையும் இறைஞ்சுவோம். எப்படி? அவரது பாடல்களின் வரிகளை நினைகூர்வதன் வாயிலாக மகா கவி பாரதியாரை சூக்குமாக நமது சத்சங்கத்தில் இப்போது எழுந்தருளுமாறு வேண்டுவோம்.

    ஜயபேரிகை_பாரதியார்

    பேரிகை என்றால் முரசு என்று பொருள். முரசு என்றால் முற்காலத்தில் அரசர் தனது ஆணையை மக்களுக்கு அறிவிக்கப் பயன் படுத்திய கருவி. ஆகவே தெய்வத்தின் உண்மைநிலையினை கண்டுபிடித்துவிட்டதால், அதனை தெய்வத்தின் ஆணையாகக் கருதி முரசைக் கொட்டி மக்களுக்கு அறிவிக்குமாறு உள்ளப் பூரிப்பில், ஆனந்தத்தில் குலுங்கி அவ்வாறு பாட்டினை அருளியுள்ளார் மகான் மகா கவி பாரதியார்.

    ‘பேரிகை கொட்டடா!’ என்று மட்டும் சொல்லவில்லை. ‘ஜய’ என்கின்ற சொல்லை சேர்த்து ‘ஜய பேரிகை கொட்டடா’ என்கிறார். ஏன்? ‘ஜயம்’ என்றால் வெற்றி என்று பொருள். அவரது உள்ள பூரிப்பால் தன் சக அன்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்கின்ற விரிந்த மனம் ஒரு காரணம், மற்றும் அவரது அக்கண்டுபிடிப்பு மெய்ஞ்ஞானத்திற்கு கிடைத்த வெற்றி என்பதால் வெற்றிச் செய்தியினை முரசு கொட்டி சொல்லச் சொல்கிறார். என்னே அருளாளர்களின் உள்ளம்! இதுவன்றோ இறையும் மனிதனும் ஒன்றான நிறைவு. அவ்வாறு இந்த ஆன்மீக சரித்திரத்தில் இது வரை தோன்றியுள்ள எல்லா அருளாளா்களையும் நாம் அழைத்து பயன்படுத்திக் கொள்ளும் யுக்தியினை அறிந்திருக்கிறோம் மனவளக்கலைஞர்களாகிய நாம்.

    அடுத்ததாக ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.’ என்கின்ற வரிகளை கவனிக்கவும். மகான் மகா கவி பாரதியார் தன் அடைந்த பேரின்ப அனுபவத்தை வெளியிட்டு மற்றவர்களும் அந்நிலையினை அனுபவிக்க, அதனை உலகுக்கு ஜய பேரிகை கொட்டி அழைக்குமாறு அறிவிக்கிறார் மகான் மகா கவி பாரதியார். இது எவ்வாறு இருக்கின்றது என்றால் நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அழைப்புக் கவியில்,அழைப்பது போல் உள்ளது.

    anbargale vaareer-THAI

    மகான் மகா கவி பாரதியாரின் புனித வரிகளான ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம். – நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.’ என்பதனை மீண்டும் மீண்டும் மனதிற்குள் உச்சரித்துப் பாருங்கள். அந்நிலையினை அடைய முடியும். இதுதானே பிரம்மஞானியின் நிலையாக இருக்கும், இருக்க வேண்டும். பிரம்ம ஞானம் என்பது என்ன? ஞானம் என்பது என்ன? ‘ஞானம் என்பது அறிவை அறிந்த தெளிவு’ என்பது சிறப்பான விளக்கம்’ என்கிறார் நம் குருதேவர் அவர்கள். அறிவை அறிந்த தெளிவில் தான் ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.’ என்கின்ற மகா கவி பாரதியாரின் பேரின்ப மந்திரம் செயலுக்கு வரமுடியும்.

    மகான் மகா கவி பாரதியாரின் பேரின்பத்தின் மந்திரமான ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம். என்பதில் இரண்டு நிலைகளைக் குறிப்பிடுகிறார் மகான் மகா கவி.

    ஒன்று – நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை,
    மற்றொன்று – நோக்க நோக்கக் களியாட்டம்.

    ‘நோக்க நோக்க களியாட்டம்’ என்பது மனதின் எந்த நிலையைக் காட்டுகின்றது? மனம் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகிய நான்கு நிலைகளில் இயங்க வல்லது எனத் தெரியும். அவற்றில் மகான் மகா கவி பாரதியார் கூறுகின்ற

    ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ என்பது ஐயமின்றி மனதின் நான்காவது நிலையான பேரின்ப நிலையைக் குறி்க்கின்றது.

    எப்போது ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ ஏற்படுகின்றது மனதிற்கு என்கிறார் மகான் மகா கவி பாரதியார்? அதனையும் கவனிக்க வேண்டும் நாம். ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ என்கின்ற தெளிவு அறிவிற்கு கிடைக்கும்போது ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ ஏற்படுகின்றது என்கிறார். அதாவது பார்க்க பார்க்க களியாட்டம் என்கிறார்.
    அப்படியானால் களியாட்டம் என்பது என்ன? களியாட்டம் என்றால் களிநடம், ஆனந்தக்கூத்து என்று பொருள். தில்லையில் களிநடனம் புரிகிறான் இறைவன் என்கிறோம். களி என்றால் பார்ப்பது. கேட்பது முதலியவற்றால் மகிழ்தல்(rejoice) என்று பொருள்.

    FFC-182-box message- களியாட்டத்திற்கு காரணம்Untitled

     

    இங்கே நாம் நம் குருநாதரை அழைத்துக் கொள்வோம். எப்படி? அதற்கான அவர் அருளியுள்ள பாடலை நினைவு கூர்வோம்.

    FFC-168-பகுத்து-மறைவாய்

     

    .

    ‘இறைவெளி காட்சியாக, எல்லோரும் பார்த்துக் கொண்டே, மறைவாய் உள்ளாய் நீயென்று, மாற்றுரை பகர்கின்றார்!’ என்று கூறுவதன் மூலம் மகான் மகா கவி பாரதியாரின் பேரின்ப கண்டுபிடிப்பான ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்.’ என்பதோடு பாரதியாரின் இளவளான மகரிஷி அவர்கள் இணைகிறார் அன்றோ!

    ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ என்று மகான் மகா கவி பாரதியார் கூறுவதனை, மகரிஷி அவர்கள், ‘இறைவெளி காட்சியாக’ உள்ளான் என்கிறார். இரண்டும் பிரம்மநிலையை உணர்ந்த வார்த்தைகள்தான். கண்கள் பார்க்கின்ற காட்சிகளெல்லாம் இறையேதான் என்றிருந்தாலும் மக்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டே இறைவன் மறைவாய் உள்ளான் என்று மாற்றிச் சொல்கின்றனர் என்று ஆதங்கப்படுகின்றார். மனிதனுக்குள்ள குறையறிவை விரித்தால் இறையை தனதுள் கொள்ள முடியும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    இன்றைய சிந்தனையை நிறைவு செய்ய இருக்கின்றோம். பகுத்துணர்வில் பண்பாட்டை உயர்த்தட்டும் என்று ‘உலகை வாழ்த்தும் மகா மந்திரத்தைப்’ பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

    ஆகவே பகுத்துணர்வு, தொகுத்துணர்வு என்கின்ற சொற்களுக்கானத் தனித்தனி பொருளென்ன, ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பதற்கான பொருளென்ன, பகுத்துணர்வில் தொகுத்துணர்வு எவ்வாறு மனிதகுலப் பண்பாட்டினை உயர்த்த முடிகின்றது என்பனவற்றை எல்லாம் இந்த சத்சங்கத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சத்சங்கத்திற்கு மகான் மகா கவி பாரதியாரையும் எழுந்தருளி ஆசீர்வதிக்க நாம் எண்ணியதால்தான் பாரதியார் அருளிய பாடல்களில் இரண்டு பாடல்களை நினைவிற் கொண்டு மகான் மகா கவி பாரதியாரின் பேரின்ப அனுபவங்களை அவரே நேரிடையாகவே வந்து கூறுவதுபோல் பொருள் விளங்கிக் கொண்டோம்.

    “நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை” என மகான் மகா கவி பாரதியார் கூறுவது, மகரிஷி அவர்கள் “பகுத்துணர்வில் தொகுத்துணர்வு” என்பதும் ஒன்றே. பகுத்துணர்வில் தொகுத்துணர்வு வந்துவிட்டால் நோக்கும் திசையெல்லாம்/நாம் காண்பதெல்லாம் அன்னியமே அல்ல. பிறகு என்ன அது என்றால் நாமன்றி வேறில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காணுகின்ற தெளிவு பிறக்கும். மேலும் அவ்வாறு காண்பது இயல்பாகிவிட்டால் அதுதானே பேரின்பம். இந்த நிலைக்கு அறிவு வருவதற்கு, விருப்பு, வெறுப்பு இன்றி எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் பண்பாட்டில் உயர வேண்டும்.

    எனவே ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வுதான்’, நானேதான் நாமாக இருந்தும், உருவம் என்கின்ற வரையில் எல்லைக்கட்டிக்கொண்டு, பேதங்களைக் கற்பித்துக் கொண்டு, தனித்து இயங்கி துன்புற்று வாழ்கின்ற நிலையில் இருக்கும் உலகை வாழ்த்துவதற்கான ஏற்ற மகா மந்திரமாக உள்ளது என்பதனை அறிந்து மகிழ்கிறோம். எனவே பிரம்மஞானத்தின் பயனான நோக்க நோக்கக் களியாட்டம் என்கின்ற பேரின்ப நிலையினை அனுபவிப்போமாக. வாழ்க உலக சமாதானம். வரட்டும் விரைவில் உலக சமாதானம்.

    மேலும் அன்றாட வாழ்வில் எப்போதும் பேரின்ப நிலையை அனுபவிக்கும் முகந்தான் பேரின்பம் என்பது எதார்த்தத்தில் என்ன என்று மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். Logical Solutions for the Problems of Humanity என்கின்ற நூலில் பக்கம் 30 இல் 19-22 வரிகளை(lines) வாசித்து பேரின்பம் என்ன அறிந்து கொண்டு சிந்தித்து சிந்தித்து பேரின்பத்தை பருகவும். இதே போன்று சமுதாயச் சிக்கல்களுக்கான ஆய்வுத் தீர்வுகள் என்கின்ற நூலில் பக்கம் 23 இல் வருகின்ற 7-12 வரிகளை வாசித்து அறிந்து மகிழவும். சிந்திப்பதே நம்முள் உறைகின்ற இறையுடன் நடத்தும் சத்சங்கமாகும். அந்த இறையுடன் நடத்தும் சத்சங்கம் பேரின்பமாக இராதா என்ன?! சிந்திப்பதும் விடை கண்டு தெளிவு பெறுவதும் பேரின்பமாகும். வாழ்க சத்சங்கங்கள். வளர்க சத்சங்கங்கள்.

    FFC-182- அருட்தந்தை-சங்கல்பம்

    இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(24-04-2016-ஞாயிறு)  ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற சிந்தனையை, திருவள்ளுவர் அணுகுமுறையில் தொடர்வோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்.

    Loading