இன்றைய விருந்து

  • மகானாக்கும் மகோன்னத வினாக்கள்(நேற்றையத் தொடர்ச்சி)

    வாழ்க மனித அறிவு                                                                           வளர்க மனித அறிவு

    மகானாக்கும் மகோன்னத வினாக்கள்(நேற்றையத் தொடர்ச்சி)

    FFC – 23

     

    19-11-2014

    ஆறாம் அறிவு வாழ்க்கையில் உற்ற வயதில் கேட்க வேண்டிய வினாக்கள் உள்ளன. அவ்வினாக்களை உற்ற வயதில் கேட்டு விடைகளை அறிவுபூர்வமாகப் பெற்று அதன்படி வாழ்ந்தால்தான் அவன் வாழும் காலம் முழுமைக்கும் மகிழ்ச்சியாக வாழலாம். அவன் வாழும் சமுதாயத்தையும் வாழ வைத்து மகிழலாம். வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில்(உதாரணத்திற்கு ஐம்பது வயதில்) அவ்வினாக்கள் எழுந்து எப்போது விடைகளை அறிந்து அதற்கேற்ப வாழ்ந்து மகிழ்ச்சியை அனுபவிக்க எஞ்சியுள்ள வாழ்நாள் போதுமானதாக இருக்காது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வினாக்களை எல்லோரும் கேட்பதில்லை என்று நேற்றுப் பார்த்தோம். இன்றைய விருந்தில்

     அவ்வினாக்கள் என்ன,
     அவைகளுக்கு என்ன விடைகள், எவ்வாறு விடைகள் கிடைக்கும்,
     அவைகள் எவ்வாறு மகானாக்கும் என்று பார்க்க இருக்கிறோம்.

    எல்லோருமே இன்பத்தைத்தான் விரும்புவர். இதில் தவறில்லை. ஆனால் துன்பமும் வந்துவிடுகின்றது. அதனை அவ்வாறே ஏற்று இன்ப-துன்ப பிறவிப்பிணியிலேயே வாழ் நாள் முழுவதும் வாழ்வது என்பது பழக்கமாகிவிட்டது. அதாவது சிந்திப்பது இல்லை. சிந்தித்தால் வரும் முதல் வினாதான்

    1) இன்பம், துன்பம் என்பது என்ன? அவைகள் எவ்வாறு வருகின்றன?

    அடுத்த வினாவினைப் பார்ப்போம். இன்ப துன்பத்தை அனுபவிப்பது உயிர்தான். மனிதனுக்கு ஆசைகள் ஏராளமாக உள்ளன. மனிதன் ஆசைப்படுகிறான் என்றால் அவனது உயிர்தானே ஆசைப்படுகின்றது. உயிர் போனப் பிணத்திற்கு ஏது ஆசை? உயிருக்குள்ள முதல் ஆசை தன் மீதுதான். உயிர் மதிப்பற்றது என்கிறோம். உயிரை யாரும் துறப்பதற்கு விரும்புவதில்லை. எவ்வாறு கறந்த பால் மீண்டும் முளை புகாவோ அதுபோல் உடலைவிட்டு வெளியேறிய உயிர் மீண்டும் உடலில் நுழைய முடியாது.

    உற்றார் உறவினரின் உயிர் இழப்பு பெரும் பாதிப்பையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. உயிர் போய்விட்டால் உடலுக்கேது மதிப்பு? உடல் அழுகிவிடும். துர்நாற்றம் வீசும். அப்படியிருக்கின்ற உயிரை யாராவது இதுவரை பார்த்திருக்கிறார்களா, ஏன் உயிரைப் பார்க்க முடியவில்லை என்கின்ற சிந்தனை பரவலாக மனிதர்களிடம் வந்திருக்க வேண்டும். உயிரைப் பற்றிய அறிவு பரவலாக பரவவில்லை. ஆகவே அடுத்து எழ வேண்டிய இரண்டாவது வினா

    2) உயிர் என்பது என்ன?

    அடுத்ததாக எழ வேண்டிய வினாவினைப் பார்ப்போம். இறைமீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிகம். இறைமீது நம்பிக்கை இல்லாதவர்கள் இறை மறுப்புக் கொள்கை உடையவர்கள் வெகு சிலரே. அவர்கள் மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள். எனவே கண்களால் காணமுடியாத, காட்ட முடியாத இறையை அவர்கள் இல்லை என்கின்றனர். இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருதுவது மூடநம்பிக்கை என்கின்றனர். அது அவர்களின் சிந்தனைச் சுதந்திரம்.

    மனிதனின் செயலுக்கு ஏற்ற விளைவினைத் தரவல்லது இயற்கை என்பதனை இருதரப்பினருமே
    அறிந்து அறவாழ்வு வாழ்வது மனிதம் என்று அறிந்து விழிப்புநிலையில் வாழ வேண்டும். இருதரப்பினருக்குமே வாழ்வதற்கு காற்றை,ஒளியை, நீரை, உணவைத் தருவது ஒரே இயற்கைதான்.

    இறை மீது நம்பிக்கைக் கொண்டு இறைவழிபாடு செய்து வருபவர்கள் யாரும் அவா்கள் வாழ்நாளில், இறையைக் காணாமலேயே வாழ்நாள் முடிந்து விடுகின்றது. இச்சூழலில் எழ வேண்டிய அடுத்த வினா:

    3) இறைவன் என்பவர் யார்? அவர் ஏன் இந்த பிரபஞ்சத்தைப்(universe) படைத்தார்?

    அடுத்ததாக எழ வேண்டிய வினாவினைப் பார்ப்போம். யாரும் விரும்பிப் பிறப்பதில்லை. ஒருநாள் பிறந்தவர் இறந்தே தீர வேண்டும். ஆகவே இறக்கவேப் பிறக்கிறான் மனிதன். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்டக் காலம் அவனது வாழ்நாள் எனப்படுகின்றது. மனிதர்கள் வாழ்நாளில் எல்லோருக்கும் எல்லாம் சமமாகக் கிடைப்பதில்லை. குறைந்த பட்சம் இன்றியமையாத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடமாவது எல்லோருக்கும் கிடைக்க வேண்டாமா? இம்முன்றும் கிடைக்காமல் போனால் அதனை என்ன என்று அழைக்கிறான் மனிதன்? ஏழ்மை என்கிறான். வறுமை என்கிறான்.   இது பற்றிய கேள்வி எழவேண்டாமா  மனிதனுக்கு ! ஆகவே இந்த கேள்விதான் நான்காவதாகும். ஆகவே நான்காவது வினா.
    4) வறுமை ஏன் வருகின்றது?
    இந்த நான்கு வினாக்களுமே தான் மகோன்னத வினாக்கள் என்கிறோம் நாம். இந்த நான்கு வினாக்களும் எவ்வாறு மகானாக்கும் மகோன்னத வினாக்கள், யாரை மகானாக்கியுள்ளது என நாளைப் பார்ப்போம். நாளைத் தொடரும்…….

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                       வளர்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

    மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

    FFC – 22

    18-11-2014

    உயிரினங்களியே மிகச் சிறந்தது மனித இனம். காரணம் ஆறாம் அறிவுடையவன் மனிதன்.

     இயற்கையேதான் ஆறாம் அறிவாக மலர்ந்துள்ளதாலும்,
    ஆறாம் அறிவோடு இயற்கை தானே மாறும், தன்மாற்றத்தை நிறுத்திக் கொண்டதாலும்,
    ஆறாம் அறிவைத்தவிர வேறு அறிவு ஏதும் இல்லை என்பதாலும்
    ஆறாம் அறிவுடைய மனிதன் மட்டுமேதான் இயற்கையின் இரகசியங்களை அறிந்து மகிழ முடியும்

     ஆறாம் அறிவுதான் இயற்கையின் மறைந்துள்ள ஆற்றல்களைக் கண்டுபிடித்து வாழ்க்கை வளமாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. அதற்கு விஞ்ஞானம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

     எல்லையில்லாதது இயற்கை. முடிவற்றது இயற்கை. ஆகவே இயற்கையில் ஆயிரமாயிரம் இரகசியங்கள் உள்ளன. எல்லாவற்றையும் எல்லையுடைய ஆறாம் அறிவு கண்டுபிடிப்பது என்பது முடியாததுதான் என்றாலும் விஞ்ஞானம் இயற்கையின் இரகசியங்களை ஏராளமாகக் கண்டு பிடித்து வருகின்றது. ஆனால் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கான இரகசியங்களை இன்னமும் இரகசியமாகவே இருந்து வருகின்றன.

     மனித குலம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று உலகமக்கள் தொகை எழுநூற்று இருபது கோடி. ஆதிமனிதனிலிருந்து இன்றுவரைத் தோன்றி மறைந்த மக்கள் தொகை கணக்கு இல்லை. கடலிலுள்ள நீர்த்துளிகள் எத்தனை என்று சொல்ல முடியாதோ அதுபோல் இதுவரைத் தோன்றி மறைந்துள்ள மக்கள் தொகையையும் சொல்ல முடியாது,

     விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சியினை அடைந்து மனித வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளைப் பெருக்கி வந்தாலும் அதனால் மனிதனின் பூர்வீகச் சொத்தான அமைதியைக் கொண்டுவர முடியவில்லை. விஞ்ஞானத்தை நேர் வழியில் பயனாய்க் கொள்ளும் அறிவு நிலை மலரவில்லை.

     வாழ்க்கையை இயற்கைக்கு ஒத்த முறையில் சரியாக வாழும் முறை இன்னும் இரகசியமாகவே இருந்து வருகின்றது. ஆறாம் அறிவின் திறன் அதன் சிந்தனையில்தான் வெளிப்படும். அதற்கு என்ன, ஏன், எவ்வாறு ஆகிய வினாக்களை அறிவுக் கேட்டால்தான் அறிவின் சிந்தனைத்திறன் வளர்ச்சி பெறும்.

     மனிதப் பிறவியை எடுத்தப் பயனை இந்தப் பிறவியிலேயே milஅடைவதற்கான திறன் படைத்தது ஆறாம் அறிவு. ஆகவே ஆறாம் அறிவு என்ன, ஏன், எதற்கு, எவ்வாறு எனக் கேள்விகளைக்கேட்டு, அவைகளுக்கான விடைகளையும் அறிவுபூர்வமாகப் பெற்று அவ்வாறு வாழ வேண்டும்.. வாழ்க்கையில் அறிவு எவ்வளவோ வினாக்களைக் கேட்கின்றது. ஆனால் அறிவு கேட்க வேண்டிய மகோன்னத கேள்விகள் உள்ளன. ஆனால் எல்லோரும் அவ்வினாக்களைக் கேட்பதில்லை. அந்த வினாவினைக் கேட்டு விடைகளைப் பெற்று அவ்வாறு வாழும்போது அந்த ஆன்மா மகானாகின்றது. சரித்திரம் படைக்கின்றது.

     அதற்கு அறிவு, வாழ்க்கையில், உற்ற வயதில் கேட்க வேண்டிய வினாக்கள் என்னென்ன, அந்த வினாக்கள் எவ்வாறு மகோன்னத வினாக்கள் என்றும், இதுவரை யாராவது அந்த வினாக்களைக் கேட்டு விடைகளைப் பெற்று மகானாகி இருக்கிறார்களா என்று நாளை விருந்தில் பார்ப்போம். வாழ்க வளமுடன், நாளைத் தொடரும்……

    *****

    Loading

  • இன்றைய விருந்து – வினாக்கள்

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

                                                       17-11-2014

     

    1)   பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே ஏன் மனிதன் போராடுகிறான்?

     

    2)   அறிவின் குறைபாடுகள் என்ன?

    *****

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                 வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

    இன்றைய விருந்து – வினாக்கள்

                                                       16-11-2014

     

     

    1)   மனித அறிவு, வாழ்க்கையில் கேட்க வேண்டிய முக்கியக் கேள்விகள் என்ன?

     

    2)   அக்கேள்விகளுக்கு விடைகள் அறிபூர்வமாக கிடைத்தலின் விளைவு என்னவாக

     

    இருக்கும்?

     

    *****

     

     

     

     

    Loading

  • தவறானஅடையாளமும், அதன் துன்பங்களும். (நேற்றையத் தொடர்ச்சி)2/2

    தவறானஅடையாளமும், அதன் துன்பங்களும். (நேற்றையத் தொடர்ச்சி)2/2

    வாழ்க மனித அறிவு                                                                          வளர்க மனித அறிவு

    FFC – 19

                                                                                                                   

    15-11-2014.

     (Mistaken Identiy and its sufferings)

         எனவே இறை உணர் ஆன்மீகப் பயிற்சியில் தன்னை அறிவுடன் (ஆன்மா) சரியாக அடையாளம் கொள்ள வேண்டும். ”பிரக்ஞானம் பிரம்மம்” என்று அறிவே தெய்வம் என்கின்றது வேதம்.

           அகநோக்குப் பயிற்சித் தோ்வின் முடிவு (end result of inner travel — meditation) என்னவாக இருக்க வேண்டும்? ஒன்றேயான இறை எங்கும், எல்லாமாகவும், தானுமாகவும், அறிவாகவும் உள்ளது என தானே அறிவதாகும்(understanding practically). எனவே தேர்விற்கு முன்பே வினாத்தாள் வெளியாகிவிட்டதுபோல் அக நோக்குப் பயிற்சித் தேர்வின் முடிவில் என்ன அறியவிருக்கிறோம் என்பதனை முன் கூட்டியே அறிந்த கருத்தியல் செய்தி (theoretical understanding – no it is only theoretical information) தான் ”அறிவே (ஆன்மா) நான்” என்பது.

    அக நோக்குப் பயிற்சியினை மேற்கொண்டு வரும்போது முடிவில்தான் இறையே எவ்வாறு எல்லாமாகவும், தானுமாகவும் இருக்கின்றது என அறிந்து மகிழ்கின்ற பழைய நிலை இப்போது மாறிவிட்டது,                     இப்போது பயிற்சியின் முடிவில் அறியவிருப்பது முன்னரேத் தெளிவாகி பயிற்சியின் முடிவில் அதனை உறுதி செய்கின்ற காலமாகிவிட்டது. இந்த ஆன்மீக முன்னேற்றத்திற்கும், ஆன்மீக அறிவு வளர்ந்து வருவதற்கும் காரணம் வேதாத்திரியத்ததின் தோற்றமே.

    அறிவேதான் (ஆன்மா)       நான் என சரியென நினைத்துக் கொண்டு வரும்போது, அக நோக்குப் பயிற்சியில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும். தான் உணரவிருப்பதை எளிதாக உறுதி செய்ய முடியும்.

    மனிதனின் சரியான அடையாளம் அவனது அறிவு அல்லது ஆன்மா அல்லது தெய்வத்தின் ஒரு சிறு பொறி. . இந்த சரியான அடையாளம்தான்

          உலக சகோதரத்துவம் என்பது வெறும் வார்த்தையல்ல, உண்மையென உறுதி படுத்துகின்றது.

    வேற்றுமையில் ஒற்றுமை (unity in Diversity)என்பதும் சரி என்கின்ற முடிவுக்கு வரவைக்கின்றது.

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எவ்வாறு சரி என நிரூபிக்கின்றது.

    போரில்லா நல்லுலகம் விரைவில் மலர வேண்டும் என அவா கொள்ள முடிகின்றது.

    இன்று உலகமக்கள் தொகை எழுநூற்று இருபது கோடி. இந்த எழுநூற்று இருபது கோடி மக்களுக்கும் அடையாளம் ஒன்றுதான். அதுதான் தெய்வத்தின் சிறு பொறி ஒவ்வொரு மனிதனும். தெய்வம் ஒன்று என்கின்ற போது அந்த தெய்வத்தின் பொறிகளான ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே அடையாளம்தான். பார்த்தசாரதி சதகத்தில் வரும்

    ”உற்றுப் பார்த்தால் எல்லா உயிர்களும் ஒன்றாமே”  என்கின்ற வரி கூறுவது எவ்வளவு உண்மை எனத்தெரிகின்றது. மனிதனின் உயிர் விலங்கினத்திலிருந்து வந்துள்ளதால் எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்பது விஞ்ஞான ரீதியாகவும் சரி என அறிந்தாலும் அதன் பயனை இதுவரை அனுபவிக்க முடியாமல் உள்ளது.

    அதுபோல் மகாகவி பாரதியார் கூறுவதனைக் கவனிப்போம்.

    ”காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்

    கடலும் எங்கள் கூட்டம்

    நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை

    நோக்க நோக்கக் களியாட்டம்”   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்கிறார் மகாகவி பாரதியார்.

    பொதுவாக மனிதனின் அடையாளம் அவனுடைய பெற்றோர்களின் மகன் என்றாலும், அது இந்த உடலைப் பொருத்த வரை சரியாக இருந்தாலும், அதுவே அவனது உண்மையான அடையாளம் அல்ல. அவனது சரியான உண்மையான அடையாளம் அவன் தெய்வமகன் என்பது தான் சரி. பரம பிதாவின் குழந்தைகளே இந்த உலக மக்கள் அனைவரும்.

    மக்கள் அனைவரும் அறிவு நிலையைில் ஒன்று. வினைப்பதிவில்தான் வேறு வேறாக இருக்கின்றனர். இந்த மெய்விளக்கத்திற்கான(உண்மையான விளக்கம் என்று பொருள் கொண்டாலும் சரி) வேதாத்திரி மதரிஷி அவர்களின் பாடலோடு இன்றைய விருந்தை நிறைவு செய்கிறோம். அதுவே அவ்வையார் கூறும் நான்கு இனியவைகளில் கடைசியும் அளவில் அதிகமானதுமான “அறிவினரை கனவிலும் நனவிலும் காண்பது இனிது“ என்பதாகும்.

    மெய்விளக்கம்

    நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே

    நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்.

    ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில் எல்லை

    உண்டாக்கி வரையறுத்து வேறுபடுகி்ன்றோம்;

    ஏனெங்கே, எப்போது, எவ்வளவு, எவ்வாறு

    என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல

    வானறிவோம் உயிர்விளங்கும் வரைகடந்து நிற்கும்

    வழிதெரியும் வளம்பெறுவோம் வாழ்வு நிறைவாகும்  ……வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    இப்பாடலுக்கான விளக்கத்தை விரிவாக மற்றொரு விருந்தாக வைத்துக் கொள்வோம்.

     தன்னை இறையுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா?அல்லது அழிகின்ற உடலுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? எது சிறப்பு? நீங்களே சிந்தித்துப் பாருங்களேன்!  

    வாழ்க உலக அமைதி. வருக உலக அமைதி விரைவில். வாழ்க வையகம்.     ,

                   வாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம்.                                                            .

    *****

    வாழ்கமனித அறிவு                                                                                   வளர்கமனிதஅறிவு

    Loading