சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 198

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    23-07-2016—சனி

    ‘மனிதன் நல்ல எண்ணத்தோடும், முயற்சியோடும் ஒரு அடி எடுத்து வைத்தால், இறைவன் பத்து அடி எடுத்து வைப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது’

    …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) இதன் பொருளாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?
    2) மனிதனின் ஒரு அடிக்கு இறைவன் பத்து அடி எடுத்து வைப்பான் என்பது எல்லோருக்கும் தானே?! சோதித்துப் பார்க்கலாமே! அடிகளை எடுத்து வைக்கலாமே!!
    3) இது இயற்கையியலில்/இறையியலில் எவ்வாறு சாத்தியமாகின்றது? அறிவுப் பூர்வமான தெளிவு என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 197

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

     

    22-07-2016 — வெள்ளி

    ‘புகழ் பூவைப் போன்றது. பூவின் வாசனையை நுகரலாம். பூவையே சாப்பிடக் கூடாது.’

    …. ஸ்பேக் கேட்டல்

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர் ஸ்பேக் கேட்டல்?
    2) ஏன் புகழை பூவோடு இணைத்துக் கூறுகிறார்?
    3) ‘வாசனையை நுகரலாம்’ என்பதற்கான பொருள் என்ன?
    4) ‘பூவையே சாப்பிடக்கூடாது’ என்பதன் உட்பொருள் என்ன?
    5) உட்பொருளை நேரிடையாகச் சொல்லாமல் ஏன் அறிஞர்கள் புதிராகவும், இலை மறை காய் மறையாகவும் இயம்புகின்றனர்?

    வாழ்க அறிவுச் செல்வம்             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 196

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    16-07-2016 — சனி

    ‘கல்வி என்பது ஒருவன் அறியாத பொருளை அறியவைப்பது அல்ல, ஒருவனுக்குத் தெரியாத  பண்புகளைத் தெரியவைப்பது.’

    ….. ரஸ்கின்.

    பயிற்சி—
    1) கல்வி பற்றி மற்ற அறிஞர்கள் கூறுவதோடு ரஸ்கின் அவர்களின் இந்தக் கூற்றை ஒப்பிட்டுப் பார்த்து அக்கல்வி விரைவில் மலர்ந்திட உங்களின் மௌன ஊடகத்தை பயன்படுத்தலாமே! இது இப்போது சமுதாயத்தின் தேவையாக உள்ளதன்றோ! வாழ்க வளமுடன்.
    2) சமுதாய அக்கறை என்பது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு  

     08-07-2016-வெள்ளி

    வாழ்க வளமுடன்.

                       செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம்.

    வாழ்க வளமுடன்.

    www.prosperspiritually.com

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
    நன்றி,
    வாழ்க வளமுடன்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 195

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

     

    15-07-2015 — வெள்ளி

    ‘ஒரு நாடு அந்த நாட்டின் கல்வி நிறுவனங்களில்தான் உருவாக்கப்படுகின்றது.

    ….. Dr. இராதாகிருஷ்ணன்.

    பயிற்சி—
    1) எதனை எதிர்பார்த்து அவ்வாறு கூறுகிறார் அறிஞர்?
    2) கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவதென்ன?
    3) மகரிஷி அவர்கள்  கல்வியின் அங்கங்களாக கூறுவதென்ன?
    4) ஏன், இவற்றையெல்லாம் நினைவு படுத்தி இணைத்து ஒன்றுபடுத்திப் பார்க்க வேண்டும்? அவசியம் என்ன?
    5) அருளாளர்கள் உலகம் என்பது என்ன? இக்கேள்வி இவ்விடத்தில் பொருத்தமாக உள்ளதா? எவ்வாறு பொருத்தமாக உள்ளது?

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளா்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு  

     08-07-2016-வெள்ளி

    வாழ்க வளமுடன்.

                       செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம்.

    வாழ்க வளமுடன்.

    www.prosperspiritually.com

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய,‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையிறை அறிய click here.

    https://www.prosperspiritually.com/category/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

                                                                                  அல்லது

    நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல

     click here 

    https://www.prosperspiritually.com/contact-us/

     

    நன்றி,
    வாழ்க வளமுடன்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 194

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    09-07-2016 — சனி

    ‘முயற்சி வெறும் உந்து சக்தி மட்டுமல்ல. ஆற்றலை வெளிக்கொணரும் கருவி.

    ….. இரவீந்திரநாத் தாகூர்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் அறிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள்?
    2) முயற்சி என்பது தெய்வீகப்பண்பு என்று சொல்லமா? சரியா? சரியானால் எவ்வாறு?
    3) முயற்சி பற்றி திருவள்ளுவர் எந்த அதிகாரத்தில் விளக்கியுள்ளார்?
    4) முயற்சி பற்றி கூறும் அதிகாரத்திற்கு ஏன் அவ்வாறு பெயர் வைத்துள்ளார்?
    5) அந்த அதிகாரம் எந்த அதிகாரத்திற்கு அடுத்ததாக வைக்கப்பட்டுள்ளது?

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு  

     08-07-2016-வெள்ளி

    வாழ்க வளமுடன்.

                       செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம்.

    வாழ்க வளமுடன்.

    www.prosperspiritually.com

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
    நன்றி,
    வாழ்க வளமுடன்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 193

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    08-07-2016 — வெள்ளி

    கடவுள் கோயிலில் இருப்பதாக நினைப்பவனைவிட  ஏழை, எளியவர்களிடம் தன்னை காண்பவனையே கடவுள் அதிகம் நேசிப்பார்.

     ….. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி:–
    1) இதனை வேறு அறிஞர்கள் எவ்வாறு கூறியுள்ளனர்?
    2) குறிப்பாக அறிஞர் திருமூலர் இதனை எவ்வாறு கூறியுள்ளார்?
    3) இந்நினைப்பு இயல்பாவதற்கு மகரிஷி அவர்கள் ஏற்படுத்தியுள்ள யுக்தி என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு  

     08-07-2016-வெள்ளி

    வாழ்க வளமுடன்.

                       செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம்.

    வாழ்க வளமுடன்.

    www.prosperspiritually.com

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
    நன்றி,
    வாழ்க வளமுடன்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 192

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    02-07-2016 — சனி

    ‘வெற்றி உருவாகக் காலம் பிடிக்கும். காத்திருக்கப் பொறுமையின்றி முயற்சியினைக் கைவிடாதீர்கள்.’
                                                                                                            …. ரோஸி போப்.
    பயிற்சி—
    1) இவ்வறிவுரை எல்லாத்துறையிலும் இருப்பவர்களுக்கும் தானே?!
    2) நம்மைப் பொருத்த வரை, குறிப்பாக யாருக்கு?
    3) இறை உணர் ஆன்மீக சாதகர்களுக்கு இவ்வறிவுரையின்படி ‘வெற்றி’ என்பது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    முன்அறிவிப்பு

                01-07-2016

    வாழ்க வளமுடன்.

    வருகின்ற ஞாயிறன்று(03-07-2016) அறிவிற்கு விருந்தில் படைக்கப்படவிருகின்ற விருந்து . . .

    இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்!

                                           … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    FFC – 203

                                                                                                                                                                                     03-07-2016-ஞாயிறு

    புதிய முன்னறிவிப்பு -FFC-203-1-7-16

    அன்புடையீர்  

    வாழ்க வளமுடன். பயன் பெற வாழ்த்துக்கள்.

    தங்களின் மேலான கருத்துக்களை இணைய தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றது.

    நன்றி.

    www.prosperspiritually.com

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 191

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    01-07-2016—வெள்ளி

    ‘எந்த உயிரிடத்திலும் பேதமின்றி தம் உயிர் போன்று காண்பவன் உள்ளத்தில் இறைவனும் நடனமாடுகிறார்.’
                                                                               . . . இராமலிங்க அடிகள்.
    பயிற்சி—
    1) மற்றவர்கள் உள்ளத்தில் …. ?
    2) இந்த அருள் மொழியை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
    3) இறைவன் நடனமாடுகிறார் என்பது அவரது பேரின்ப அனுபவம்! இது எல்லோருக்கும் உரியதுதானே?
    4) இந்த உண்மையினை மகான் மகாகவி பாரதியார் எவ்வாறு கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

    முன்அறிவிப்பு

                01-07-2016

    வாழ்க வளமுடன்.

    வருகின்ற ஞாயிறன்று(03-07-2016) அறிவிற்கு விருந்தில் படைக்கப்படவிருகின்ற விருந்து . . .

    இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்!

                                           … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    FFC – 203

                                                                                                                                                                                     03-07-2016-ஞாயிறு

    புதிய முன்னறிவிப்பு -FFC-203-1-7-16

    அன்புடையீர்  

    வாழ்க வளமுடன். பயன் பெற வாழ்த்துக்கள்.

    தங்களின் மேலான கருத்துக்களை இணைய தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றது.

    நன்றி.

    www.prosperspiritually.com

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 190

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

     

    25-06-2016—சனி

    “தூய்மை உள்ளவர்களுக்குத்தான் பந்தங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்?”

    ….. சுவாமி விவேகானந்தர்

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
    2) இந்த அறிவுரை யோகம் பயில்பவர்கள், பயிலாதவர்கள் அனைவருக்குமேதானே?.
    3) தூய்மைக்கும் பந்தத்திற்கும் என்ன தொடர்பு?
    4) இது ஆன்மீகவாதிகளின் கருத்தா?
    5) இதில் விஞ்ஞானமுள்ளதா?
    6) பந்தங்களிலிருந்து விடுதலை அவசியமா?
    7) விடுதலை கிடைக்கும் என்றால் இப்போ சிறைப்பட்டிருக்கிறோமா?
    8) ‘தவம் மற்றும் தற்சோதனையின் இறுதிப்பயனான இறைஉணர்வு பெறுதலுக்கும்’ ‘பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?’

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 189

    வாழ்க மனித அறிவு                                வளர்க மனித அறிவு

     

    24-06-2016—வெள்ளி

    அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு
    அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு
                                                       . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    பயிற்சி—
    1) இக்கூற்று எதனைத் தெரிவிக்கின்றது?
    2) இயல்பு என்பதால் அதனை அவ்வாறே விட்டுவிடலாமா?
    3) இயல்பு என்பதால் அது மனிதனுக்கு நன்மையா, தீமையா?
    4) உயர்வு என்பதால் என்ன நன்மை மனிதனுக்கு?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 188

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

     

    18-06-2016 — சனி

    வேண்டியதற்கு படிகட்டி, வேண்டாததை வடிகட்டும் எண்ணமே உள்மன அமைதிக்கு உரம்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    2) மன அமைதி என்று சொல்லாமல் உள்மன அமைதி என்று சொல்வதால் இதன் பொருள் என்ன?
    3) உள்மன அமைதி புறமன அமைதி என்றுள்ளதா?
    4) ‘உள்மன அமைதிக்கு  உரம்’ என்பதன் பொருள் என்ன?
    5) இதற்கும் தவத்திற்கும் தொடர்பு உள்ளதா?
    6) பேரின்பநிலையை அடைவதற்கான வழியா இது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 187

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

    17-06-2016 — வெள்ளி

    “நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் உழைக்கும் திறன் இல்லை. வேதாந்தக் கோட்பாடு உள்ளது.   ஆனால் நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லை”

     
    . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி— 1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
    2) எதனை வலியுறுத்த இரண்டையும் ஒப்பிடுகிறார்?
    3) அவரின் ஒப்பிட்டுப் பார்க்கும் திறமை நமக்கு என்ன அறிவுறுத்துகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading