சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 80  

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

        06-06-2015—சனி

     

    “ அற்பருக்கு ஆண்டவன் அளித்த வரமே அகம்பாவம்” 

    ……. அறிஞர். பர்ட்டன் புரூஸ்.

         

    பயிற்சி— 1) அகம்பாவம் உடையவரை அற்பருடன் ஒப்பிடுகிறாரே அறிஞா் பர்ட்டன் புரூஸ்.  இது எவ்வாறு சரி?

      2) மேலும் சிந்திக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 79

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

     

    05-06-2015—வெள்ளி

                                        மூதூரை
    ”நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
    நல்லார் சொல் கேட்பதும் நன்றே – நல்லார்
    குணங்கள் உரைப்பதும் நன்றே; அவரோடு
    இணங்கி இருப்பதும் நன்று.”                                   …… அவ்வையார்.

     

    பயிற்சி— 1) இக்கவியில் கூறப்படும் நான்கும் எந்த நியதியின் கீழ் நன்மையைத் தருகின்றன?
    2) அவ்வையாரின் இக்கவியின் பொருளுடன், மகரிஷி அவர்களின் கவியினை ஒப்பிட்டுப்பார்க்கவும்.
    3) நல்லாரின் குணங்களை(சிறப்புக்களை) எடுத்துக் கூறுவது சிறந்த நன்மையைத் தரும். இதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 78

    வாழ்க மனித அறிவு           வளர்க மனித அறிவு

    30-05-2015—சனி

     

    வெளிச்சத்திலே இருள் ஒளிந்திருப்பதுபோல அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கின்றது.

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    பயிற்சி—
    1) தெய்வ நிலையைப் பற்றிக் கூறுவதற்கு ஏன் ‘வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பதை’ உவமானம் கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 77

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    29-05-2015—வெள்ளி

     

    நம்பிக்கை என்பது பூஜ்ஜியம் மாதிரி. அது தனித்து இருந்தால் பயன் இல்லை. உழைப்பு என்ற ஒன்றுடன் சேர்ந்து இருந்தால் அதன் மதிப்பே எல்லாவற்றையும் விட உயர்வானது.

    …..டெஸ்கார்ட்ஸ்

    பயிற்சி—
    1) திருவள்ளுவர் முயற்சி பற்றி கூறுவது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 76

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    23-05-2015— சனி

    பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றனர்.

                                                                                                                                                                   …..லிண்டல்

    பயிற்சி—
    1) வாழ்க்கையைப் படிப்பது என்றால் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 75

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    22-05-2015— வெள்ளி

    தன்னைத்தான் அறிந்து கொள்ளாதவன் நடமாடும் பிணமாவான்

    …..ஸ்ரீசாந்தானந்தர்.

    பயிற்சி—
    1) ஏன் அவ்வாறு கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 74

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

     

    16-05-2015— சனி

    எல்லாப்பற்றுகளையும் விட்டொழித்து, பிரம்மம் ஒன்றையேப் பற்றிக் கொள்.

    …..முண்டக உபநிடதம்.

    பயிற்சி—
    1)பற்றைப் பற்றி,  திருவள்ளுவர் கூறும் குறட்பாக்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 73

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    15-05-2015— வெள்ளி 

    நல்லதைப் படிக்கலாம், பேசலாம், கேட்கலாம் என்று ஏன் சொல்லப்படுகிறது தெரியுமா? எந்த தடத்தில் சிந்திக்கிறோமோ அதைப் பொருத்து நம் எதிர்கால வாழ்க்கை அமையும்.

    …… வாரியார் சுவாமிகள்

    பயிற்சி—
    1) இந்த உண்மையைப் போன்று வேறு மகான்கள் கூறிய பொன் மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 72

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    09-05-2015— சனி

    வாழ்க்கையின் ஒரே சட்டம் அன்புதான். அன்பின்மைக்கு மறு பெயர் அழிவு.
                                                                                                                                                         …..ஒரு மகான்.

    பயிற்சி—
    1) இந்த அமுத மொழி பற்றி மேலும் கூறவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 71

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

     08-05-2015— வெள்ளி

    ஒன்றை மனதில் எண்ணி அதையே சிந்தனை செய்து கொண்டிருந்தால் அவனது உள்ளம் அதே வழியைச் சென்று அடைந்துவிடும்.

    …..புத்தர்.

    பயிற்சி—
    1) இவ்வுண்மையில், புத்தருடன் மகரிஷி அவர்கள் எவ்வாறு ஒன்று படுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 70

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    02-05-2015— சனி

    சிந்திக்காதவன் முட்டாள் ; சிந்திக்கத் துணியாதவன் கோழை; சிந்தித்ததை செயல்படுத்துபவனே புத்திசாலி.

    ……டிரமண்ட்

    பயிற்சி—
    1) மூன்று நிலைகளைப் பற்றி சிந்திக்கவும்.
    2) சிந்திக்க ஏன் தைரியம் அவசியமாகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 69

    வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

    01-05-2015— வெள்ளி

    செல்வமும், அந்தஸ்தும் மகிழ்ச்சியைத் தராது.     தூய மனமே மகிழ்ச்சியின் இருப்பிடம்.

                                                                                                                                      ….. ஓர் அறிஞர்.

    பயிற்சி—
    1) இது எவ்வாறு சரியாக இருக்கும்?

    வாழ்க அறிவுச் செல்வம்       வளா்க அறிவுச் செல்வம்

    Loading