சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 268

                                  வாழ்க மனித அறிவு                                  lotus  வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 268

    25-11-2017—சனி

    மனிதத் தன்மை, மேன்மை கைக்கு எட்டாத வானமல்ல. நாம் விரும்பினால் கைக்கு எட்டக்கூடியதே!

                                                                           . . .   கன்பூசியஸ்

     பயிற்சி—

    1)    என்ன கூறுகிறார்  சீன அறிஞர் கன்பூசியஸ்?

    2)    பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கன்பூசியஸ் எண்ணியது இப்போது நிறைவேறி வருகின்றதா?

    3)    எண்ணத்தின் வலிமை என்னே!  நாமும் அது போன்ற சமுதாயநல எண்ணங்களை பிரயோகிப்போமே!

    4)    அன்று  கன்பூசியஸ் கூறிய  ‘விருப்பம் கைகூடக்கூடியது’  என்பதனை இந்த நூற்றாண்டில் நிறைவேற்றிக் கொண்டிருப்பது எது?

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                              வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 267

    வாழ்க மனித அறிவு                                                 வளர்க மனித அறிவு

      lotus 

    சிந்திக்க அமுத மொழிகள்- 267

    24-11-2017—வெள்ளி

    Jun2004-17a

    தான்’ என்ற அதிகாரப் பற்று, ‘தனது’ எனது என்கின்ற பொருள் பற்று இவற்றிலிருந்து விடுவிக்கும்  முறையே யோகம் ஆகும்.

             ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) பொதுவாக யோகம் என்றால் என்ன?
    2) யோகத்திற்கு தான், தனது என்கின்ற இரு பற்றுக்களையும் விடுவது அவசியம் என்கிறாரே! ஏன்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 266

    வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 266

    18-11-2017—சனி

    தேவைகள் குறையும் அளவிற்கே தெய்வத்தன்மை அடைவோம்’

                                                                                                                                                ….. சாக்ரடீஸ்

    பயிற்சி—
    1) தேவைகள் குறைவதற்கும் தெய்வத்தன்மை அடைவதற்கும் என்ன தொடர்பு?
    2) சிக்கனம் வாழ்க்கைக்கு அவசியம்தான். தெய்வ அருளை பெறுவதற்கும் சிக்கனம் அவசியமா?
    3) இது பற்றி திருவேதாத்திரியம் என்ன கூறுகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                                        வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 265

    வாழ்க மனித அறிவு                                                               வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 265

    17-11-2017—வெள்ளி

    நான் யார்? என்கின்ற கேள்வியைக் கேட்டுக்கொள். பதிலைத் தேடிச்செல். வழி புலப்படும்’

    ….. பகவான் ஸ்ரீரமணர்.

    பயிற்சி—
    1) என்ன வழி புலப்படும்?
    2) ‘நான் யார்?’ என்கின்ற கேள்வி கேட்டு கருத்தியலாகவும். செய்முறையாகவும் பதில் பெறுவது எதனால் இந்த நூற்றாண்டில் சாத்தியமாகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                         வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 264

    வாழ்க மனித அறிவு                                                    வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 264

    11-11-2017—சனி

    “யாரிடத்தில் தயவு அதிகமாக இருக்கின்றதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார்”

    ….. வள்ளலார் அவர்கள்.

    பயிற்சி—
    1) தயவு என்பது என்ன?
    2) என்ன அறிவுறுத்துகிறார் வள்ளலார் அவர்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 263

    வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளா்க அறிவுச் செல்வம்

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 263

    10-11-2017—வெள்ளி

     

    இவ்வுலகில் எக்காலத்துக்கும் பகைமை, பகைமையால் தணிவதில்லை; பகைமை

    அன்பினாலேயே  தணியும்.

    …… புத்தர்.

    பயிற்சி—

    1)  பகைமையை போக்க திருவேதாத்திரியம் கூறும் யுக்தி என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 262

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 262

    04-11-2017 — சனி

    பாம்பும் அதன் மேற்சட்டையும் வெவ்வேறானவை. அதுபோலவே ஆத்மாவும் சரீரமும்  வெவ்வேறானவை.

    —ஸ்ரீராமகிருஷ்ணர்.

    1) ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை – எப்படி?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 261

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    lotus

    [rev_slider home-slider-1]

    சிந்திக்க அமுத மொழிகள்- 261

    03-11-2017 — வெள்ளி

    கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது. தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருந்து ஆன்மா   விழித்தெழுகின்றது.”

                                                                                                                  . . . சுவாமி விவேகானந்தர்

    பயிற்சி—

    1) தன்னம்பிக்கை என்பது என்ன?
    2) எத்தகைய கல்வியால் தன்னம்பிக்கை வளரும்?
    3) தன்னம்பிக்கையால் ஆன்மா விழித்தெழச்செய்வது என்றால் என்ன?
    4) ஆன்மா விழித்தெழுந்தால் என்ன பயன்?
    5) சுவாமி விவேகானந்தர் கல்வி பற்றி கூறியுள்ளதை இந்த பொன் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 260

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 260

    28-10-2017 — சனி

    உழைப்பது சன்மானம் பெறுவதற்கு என்று நினைத்தால் அந்த உழைப்பு கடினமாகத்தான் இருக்கும்      சுவாமி விவேகானந்தர்.

     பயிற்சி: 

    1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?

    2) உழைப்பது பற்றி பகவத் கீதையில் கண்ணபிரான் சொன்னதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா?


    குறிப்பு: இணையதள பராமரிப்பின் போது விடுபட்ட சிந்திக்க வினாக்கள்-250 முதல் 252 வரை மற்றும் சிந்திக்க-அமுதமொழிகள் 254 முதல் 256 வரை தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. சிந்தித்து இன்புறுக!

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 259

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 259

    27-10-2017 — வெள்ளி

    ஒருவர் தன்னிடம் தானே நம்பிக்கை இழப்பது, இறைவனிடம் நம்பிக்கை இழப்பதாகும்  —     சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி: 

    1)  தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும் ஒன்றா?

    2)  எவ்வாறு?

    3) இக்கூற்றின் மூலம் சுவாமி விவேகானந்தர் என்ன வலியுறுத்த விரும்புகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 258

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 258

    21-10-2017 — சனி

    மகிழ்ச்சி என்பது ஒரு நல்ல வங்கிக் கணக்கு, நல்ல சமையல்காரன், நல்ல ஜீரண சக்தி.

    ….. ரூஸோ.

    பயிற்சி—
    1) மகிழ்ச்சியை வங்கிக் கணக்கோடு ஒப்பிடுவதன் பொருள் என்ன?
    2) இந்த வங்கிக்கணக்கை எப்போது எவ்வாறு துவங்குவது?
    3) மகிழ்ச்சியை சமையல்காரனோடு ஒப்பிட்டுக் கூறுவது ஏன்?
    4) மகிழ்ச்சியை ஜீரண சக்தியோடு ஒப்பிடுவதன் பொருள் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 257

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 257

    20-10-2017 — வெள்ளி

    நீதிநெறியைப்போன்ற உயர்ந்த, தெய்வீகமான நற்பண்பு வேறொன்றும் கிடையாது. — எடிசன்.

    பயிற்சி:–
    1) நீதிநெறி என்றால் என்ன?
    2) ஒழுக்கம் என்பது என்ன?
    3) ஒழுக்க வாழ்வு எதற்கு ஒப்பாகும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


    Loading