i) யாரை முழு மனிதன் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
ii) முழு மனிதன் என்கின்றபோது குறைமனிதர்களும் இருக்கின்றனரா?
iii) மனிதனுக்கு வரையறை/வரையறைகள் ஏதேனும் உள்ளனவா? அவற்றில் மிகப்பொருத்தமான வரையறை என்று எதனைக் கூறலாம்?
iv) பொதுவாக மனிதனுக்கு வரையறை வகுத்தால் முழுமனிதனுக்குத் தனியாக வரையறை வகுக்க வேண்டுமா?
v) எப்போது குறைமனிதன் அல்லது சாதாரண மனிதன் முழுமனிதனாக முடியும்?
vi) குறைமனிதர்களும் முழுமனிதர்களும் தற்போது எந்த விகிதாசாரத்தில் இருக்கின்றனர்?
vii) இப்போதுள்ள விகிதாசாரமே இருந்துவிட்டால் என்ன?
viii) முழுமனிதனாக வேண்டிய அவசியம் என்ன?
ix) சாதாரண மனிதன் முழுமனிதனாக என்ன செய்ய வேண்டும்?
x) முழுமனிதனாவதற்கான கலை ஏதேனும் தற்போது உள்ளதா? அல்லது அந்தக் கலை இனிமேல்தான் ஏற்படவேண்டுமா? அந்தக் கலை இயற்கையின்/இறையின் தன்மாற்ற சரித்திரத்தில் ஏற்கனவே உருவாகிவிட்டதா? அந்தக்கலை முழுமனிதனாவதற்கு எவ்வாறு உதவியாக உள்ளது?
xi) எதனை வைத்து முழுமனிதன், குறைமனிதன் என்று பிரித்துப்பார்க்க முடியும்?
xii) யார் முழுமனிதன் என்று கூறும் திருவேதாத்திரிய மந்திரத்தினை (கவியினை) நினைவு கூறவும்.
மகரிஷி அவர்கள் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? ஏன் அதனை அவ்வாறு கூறுகிறார்?
விடை:
‘சிந்திக்க வினாக்கள் பயிற்சியில்’ வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூலாகக் கூறுவது எது எனக் கேட்கப்பட்டிருந்தது. மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்த நூல் எதுவாக இருக்கும் என அறிந்து கொள்வது மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கடமை ஆகும். கடமை என்று கூறுவது நமது நன்மைக்காகத்தான்.
எதற்காக இயற்கை/இறை நமக்கு இந்த நூற்றாண்டிலே கிடைத்தற்கரிய குருவான வேதாத்திரி மகரிஷியிடம் புனித உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது?
பல்லாயிரம் பிறவிகள் எடுத்து,
ஆனால் பிறவியின் நோக்கமும் ஆறாம் அறிவின் ஒரே பயனுமான, அறிவாகிய தெய்வத்தை அறிந்து கொள்ளாமல்,
அனைத்துப் பிறவிகளையும் பிறப்பது–இறப்பது என்பதனையேதான் சாதனை வாழ்க்கையாகக் கொண்டு, சாதாரணப் பிறவிகளாகவே வீணாக்கிவிட்ட நிலையில்,
இப்பிறவியில், நம்முடைய மாதாவும், பிதாவும் செய்த புண்ணியத்தால், நம்முடைய குடும்பத்திலேயே மற்றவர்களுக்கு (ஒரு வேளை உடன்பிறப்புகளுக்கு குரு-சீடா் உறவு கிடைக்காத) கிடைக்காத நிலையில்,
நெடுங்காலமாக பல்லாயிரம் பிறவிகளாகத் தொடர்புகொண்டுள்ள கருமையம் ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை இந்த ஒரு பிறவிகாலத்திலேயே மாற்றி அமைத்துப், பயனடைய அகத்தாய்வும், அகத்தவமும் இறையுணர்பாதையிலே விழிப்புடன் வாழ்ந்து,
நம்முடனே வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களுக்கும் இறைத்தூதுவர்களாக இறைத் தொண்டு-அறிவுத்தொண்டு செய்து வாழ்வாங்கு வாழ்வதற்கேயாம்.
வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.
நம்முடைய சத்சங்கத்தில் வேதாத்தரி மகரிஷி அவர்கள் உள்பட எல்லா அருளாளர்களும் எப்போதும் சூக்குமமாக எழுந்தருளி நமக்கெல்லாம் உற்ற வழிகாட்டிட வேண்டும்.
ஆகவே இன்றைய சிந்தனை, மனிதனின் சொத்தாகிய முழுப்பண்பேற்றத்தையும் விரைவில் இப்பிறவியிலேயே அடைவதற்காக இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நமது குருபிரான் வேதாத்திரி மகரிஷியின் அரிய பெருமைகளை அறிந்து கொள்வதற்காக அமையட்டும்.
குரு-சீடா் உறவு நிரந்தரமில்லா இவ்வுலகில், இழந்த நிரந்தர மற்றும் மூல உறவை மீட்டெடுத்து சீடருக்குத் தரும் தெய்வீக இணைப்பை இயற்கை ஏற்படுத்தித் தரும் புனித உறவு ஆகும் குரு-சீடா் உறவு.
மகரிஷி அவர்கள் எல்லா அருளாளர்களையும் வணங்கி ஆசி பெற்றுக் கொண்டவர். இதனை அவர், தன்னுடைய சீடர்கள் எவ்வாறு குருவணக்கம் செய்ய வேண்டும் என இயற்றிய பாடலிலுள்ள கடைசி இரண்டு வரிகளான,
‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர், அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.’
என்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.
அப்படியிருக்கும்போது எந்த அருளாரின் நூல் அவரைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுவார்? அதற்கான விடையை குருவணக்கப்பாடலில் உள்ள முதல் ஆறுவரிகளிருந்து யூகிக்க முடிகின்றது. அப்பாடலின் முதல் ஆறு வரிகளில் நான்கு குருமார்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அந்த அருளாளர்கள் தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கா் ஆகியவர்களே ஆவார்கள்.
இவர்களில் எந்த அருளாளர் அருளிய நூல் மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்ததாக இருக்க முடியும்? மகரிஷி அவர்கள் சிறுவனாக இருந்தபோது பக்தி சிரத்தையோடு கலந்து கொண்ட பஜனையில் பாடப்பட்ட பாடல்களில் ஒன்றான ‘அங்கிங்கெனாதபடி’ எனத் தொடங்கும் பாடலால் தனது உள்ளம் லயித்துவிடும் என்று தனது வாழ்க்கை விளக்கம் எனும் நூலில் குறிப்பிடுகிறார். அதன் மூலம் உணர்ந்த முடிவே, கடவுள் அரூபம் என்கின்ற தெளிவு என்கிறார். இந்தப்பாடலே அவரது உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து. இறைநிலையை உணர உதவியதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். எனவே அப்பாடல் அருளிய அருளாளர் தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்.
அடுத்ததாக அகத்துதான் மெய்பொருள் என்று எடுத்துக்காட்டி அறிவதனை அறிவித்தார் என்று கூறி திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார், மூன்றாவதாக திருவள்ளுவர் அறிவித்த அறிவை அறிவதற்கு வழிகள் சொன்ன அறிஞா் திருமூலர் அவர்களையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார். நான்காவதாக, தன்னுள் வள்ளாரின் ஆன்மா பத்துவருடங்கள் தங்கி வழிகாட்டியதால், அவரை குருவாக வணங்குகிறார் மகரிஷி அவர்கள்.
இந்த நான்கு அருளாளர்கள் இயற்றியுள்ள நூல்களில் ஒன்றைத்தானே மகரிஷி அவர்களைக் கவர்ந்த ஒரு பெருநூலாக மகரிஷி அவர்கள் கூறியிருக்க முடியும்?
அறிவைக் கவர்ந்த என்று சொல்வதானால் அது எந்த நூலாக இருக்க முடியும்?
தாயுமானவர் ‘அறிவே தெய்வம்’ என்பது அவரைக் கவர்ந்திருக்கின்றது.
அடுத்ததாக அகமாக உள்ளதுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி அதுவே அறிவு என்று திருவள்ளுவர் தனக்கு உணர்த்தியதாகக் மகரிஷி அவர்கள் கூறுகிறார்.
அறிஞா் திருமூலர் அவ்வறிவை அறிவதற்கு வழிகள் சொல்லியதாகக் கூறுகிறார்.
நான்காவதாக அருளார்கள் எது தெய்வம் என்று கூறிய அறிவில் ஆழ்ந்து ஆனந்தக்கவியாத்தார் வள்ளார் என்பதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள் .
இந்த நான்கு அருளார்களின் ஒருவரான திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்தான் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று குறிப்பிடுகிறார். காரணம் என்ன?
திருக்குறளை அறிவுக் கடல் என்கிறார்.
நாம் மகரிஷி அவர்களை அருட்தந்தை என்று அழைப்பதுபோல். மகிரிஷி அவர்கள் திருவள்ளுவரை தெய்வத்தந்தை என்று அழைக்கிறார். எளிதில் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத ஐம்பது பாக்களுக்கு மட்டும் உரிய பொருளை திருக்குறள் உட்பொருள் விளக்கம் என்னும் நூலில் விளக்கியுள்ளார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்திருக்கக் கூடிய ஒரு சில பாக்களை நாம் யூகத்தால் அறிந்து கொண்டதை நினைவு கூர்வோம் இத்தருணத்தில்.
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி, அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர் என குருவணக்கப்பாடலில் மொழிந்துள்ளதால் குறள் எண் 702 ஐ நினைவு கூர்வோம்.
இக்குறளுக்கு சாதாரணமாகக் கூறப்படும் பொருள் யாதெனில், சந்தேகமின்றி மனதில் உள்ளதை உணரவல்லவனை, அவன் மனிதனே ஆனாலும் தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும் என்பது.
ஆனால் நம்குருதேவர் கூறும் உட்பொருள் விளக்கத்தினை அறிந்து மகிழ்வோம். எவர் ஒருவா் ஆன்மாவை உணர்கின்றாரோ அவர் ஆன்மாவில் இயங்கும் அறிவை தெய்வமாகவே உணர்ந்தவராவார். ஆகவே ஆன்மாவை அதன் இயல்பு, இயக்கம், விளைவு இவைகளை சிறிதுகூட ஐயமின்றி உணர்ந்து கொள்ள வல்லவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர் என்று திருவள்ளுவர் கூறுவதாக நம்முடைய மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் அறிவினுடைய மதிப்பையும் அதனை அறிய வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார் அக்குறளின் வாயிலாக என்கிறார் மகரிஷி அவர்கள்.
மேலும் மூன்று குறட்பாக்களை அறிந்து விட்டு இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம்.
“எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.“ குறள் எண் 355
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் எண் 423
மேற்குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள் பொருள்நிலை, மற்றும் நிகழ்ச்சி நிலை இரண்டையும் இறைஉணர் ஆன்மீகப்பயிற்சியில் வெற்றி பெற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியத் தெளிவை,இன்று நமக்கெல்லாம் எளிமையாக எடுத்துக்கூறுவதற்கு மகரிஷி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கலாம்.
மேற்குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள் பொருள்நிலை, மற்றும் நிகழ்ச்சி நிலை இரண்டையும் இன்று நமக்கெல்லாம் தெளிவாக கூறுவதற்கு உதவியாக இருந்திருக்கலாம்.
மேலும் இது பற்றி விரிவாக அறிய இந்த இணையதள ஆசிரியர் இயற்றிய “நான் யார்?” எனும் நூலில், இறைவன் ஏன் மெய்ப்பொருள் என அழைக்கப்படுகிறான்? என்கின்ற பத்தாவது அத்தியாயத்தில், மெய்ப்பொருள் பற்றி வள்ளுவமும், வேதாத்திரியமும் என்ன கூறுகின்றன என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளதனை வாசித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
இப்போது தெய்வப்புலவர் திருவள்ளுவரை வணங்குவோம். திருவள்ளுவரை உலகமே போற்றுவதாலும், திருக்குறள் உலகப் பொதுமறை நூல் எனப்போற்றப்படுவதாலும், திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதிலிருந்தும் திருவள்ளுவரின் அரிய பெருமைகள் தெரிய வந்தாலும், திருவள்ளுவரின் அறிவாற்றலை நினைத்துப்போற்றுவதாலும், இயல்பூக்க நியதியின் பயனை அடைய முடியும் என்பதற்காக, நம் குருதேவர் வழியாக திருவள்ளுவர் பற்றி அறிவது சிறப்புடையதாகும்.
திருக்குறளை அறிவுக்கடல் என்கிறார் நம் மகரிஷி அவர்கள். அதனை நாம் ஆராய்ச்சி செய்து அதனை ஏற்றுக்கொள்ளலாமே.
இறைஉணர் பயிற்சியாளர்கள் பயிற்சியில் எவ்வாறு வெற்றி பெறுவது?
முதல் படி:
ஆராய்ச்சியாகும்.
1) முதலில் இறை என்பது எது,
2) இறை எவ்வாறு இப்பிரபஞ்சமாகியது,
3) இறை எவ்வாறு நாமாக ஆகியுள்ளது அல்லது இறைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன,
4) கண்களால் காணமுடியாத ஒன்று எவ்வாறு இறையாக இருக்கமுடியும்,
5) அப்படியானால் இறையைக் கண்டதாக அருளாளர்கள் கூறுவது என்ன
போன்ற வினாக்களின் மூலமாக ஆராய்ச்சியினைத் தொடங்க வேண்டும்.
இரண்டாவது படி: தெளிவு பெறுதலாகும்.
இவ்வளவு ஆராய்ச்சி செய்ததன் முடிவு என்னவாக இருக்க வேண்டும்? தெளிவு பெறவேண்டும் என்பதேயாகும். என்ன தெளிவு அது?
1) இறை என்பது எது,
2) அதற்கும் நமக்கும் உள்ள உறவு என்ன,
3) பிறந்து இறக்கப்போகின்ற இவ்வாழ்க்கையின் பொருள் என்ன,
4) புலன்இன்பங்களில் அளவு மீறி, முறையையும் மாற்றி, மயக்கமுற்று புலன்களுக்கு அடிமையாகிய அறிவை மீட்டு விடுதலை செய்து (Liberation) தன்னையே உணர்வது ஒன்றேதான் என்கின்ற தெளிவுதான் முதற்படியான ஆராய்ச்சியின் முடிவு அது.
5) இதனைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்பதனை உறுதியாக கருத்தில் கொண்டு கடமை ஆற்றுவதே மனித வாழ்க்கையின் பொருள், அர்த்தம், நோக்கம், பயன், பேரின்பம். மரணமிலா பெறுவாழ்வு வாழ்தல் என்கின்ற தெளிவு.
மூன்றாவது படி: பயிற்சியாகும்.
ஆராய்ச்சி செய்து, தெளிவு பெற்ற பிறகு செய்யவேண்டியது பயிற்சியாகும். ‘கற்க கசடறக் கற்பவை; கற்ற பின் நிற்க அதற்குத் தக’ என்பதற்கேற்ப, முறையான பயிற்சியாகிய மனவளக்கலையை மேற்கொள்ள வேண்டும்.
நான்காவது படி: வெற்றி பெறுவதாகும்.
வெற்றி பெறுவது. இது கர்மயோக வாழ்வு வாழ்ந்து மரணமிலா பெறுவாழ்வு வாழ்வதாகும்.
மனித வாழ்வில் முழுப்பயனளிக்கக்கூடிய, எக்காலத்திற்கும், எவ்விடத்திற்கும், பொருத்தமானவையாக இருக்கும் நூல்கள் எது எனக்கூறுகிறார் மகரிஷி அவர்கள். அவை, ஆய்வு, தெளிவு, பயிற்சி, வெற்றி என்கின்ற நான்கு படிகளின் வழியாக திறமை அடைந்த அறிஞர்கள் எழுதும் நூல்களே என்கிறார் மகரிஷி அவர்கள். அத்தகைய நூல்களில் மிகச் சிலவே உள்ளதாகவும் கூறுகிறார். அவற்றில் ஓர் சிறந்த உயர்வைப் பெற்று மிளிர்வதுதான் திருக்குறள் என்கிறார்.
அத்தகைய நூலாசிரியரின் திறமை எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
1) மெய்ப்பொருள் விளக்க நிலை பெற்று முழுமை பெற்றிருக்க வேண்டும் அந்த நூலாசிரியர் என்கிறார்.
2) மேலும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்:– விரிந்த அறிவோடு வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
3) சிறப்புற்று வாழ்வதற்கான நெறிகளை வகுத்திருக்கப்பட வேண்டும் அந்த நூலில் என்கிறார் மகரிஷி அவர்கள்.
அத்தகைய சிறப்புக்களுடைய ஒரு நூல் திருக்குறள் என்கிறார் மகரிஷி அவர்கள். இனிமேல் திருவள்ளுவர் அல்லது திருக்குறள் என்கின்ற பெயரைச் உச்சரிக்கும்போதே இத்தனை சிறப்புக்களும் காதுகளில் வந்து ஒலிக்க வேண்டும். மகரிஷி அவர்கள் தான் அடைந்த பயனின் நன்றி உணர்வாக தன்னுடைய மானசீகக்குருவாகிய திருவள்ளுரை போற்றுகிறார்.
நம் நம்குருவிடம் பெற்று வருகின்ற கிடைத்தற்கரிய பயனை அடைந்து வருவதால், நாம் போற்ற வேண்டியது, மேற்கண்ட சிறப்புகள் அத்தனையும் பெற்ற ஒரு நூலாசிரியரும், நூலும் முறையே வேதாத்திரி மகரிஷி அவர்களும், அவர் அருளியுள்ள நூலான திருவேதாத்திரியமும் ஆகும் என நினைந்து நினைந்து பணிவுகலந்த பெருமையினால் மனம் குளிர்ந்து, குளிர்ந்து, குருவின் காணிக்கையாக அறுகுணங்களிலிருந்து விடுதலை பெற்று, நாம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே பெற்று விடுவதேயாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.
ஆகவே ஆன்மீகப் பயிற்சியில் விரைவில் பண்பேற்றம் பெறுவதற்கு மகரிஷி அவர்கள் கூறியபடி இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழியான‘எப்பொருளை, எச்செயலை, எவ்வுயிரை, எக்குணத்தை அடிக்கடி நினைந்து வந்தால் நினைப்பவரின் ஆற்றல் அப்பொருளினுடைய தன்மையினை அறிவிலும் உடலிலும் மாற்றம் பெறக்காணலாம்’ என்கின்ற சூட்சுமத்தை பயன்படுத்திய வகையில்இன்றைய அறிவிற்கு விருந்து, தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மாக்கள், செயல்கள், குணங்களைப்பற்றியும் ஆழ்ந்து சிந்திப்பதற்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குருவருளும், திருவருளும் என்பதனை நினைக்கும்போது உள்ளம் பூரிக்கின்றது.
வாழ்க திரு பொருந்திய திருவேதாத்திரியம், வளர்க திரு பொருந்திய திருவேதாத்திரியம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
2) ஏன் உணர்ச்சிவயம் மனிதஅறிவின் குறைபாடாகக் கருதப்படுகின்றது?
3) அறிவு உணர்ச்சிகளை உணர்வதற்காகத்தானே உள்ளது! அவ்வாறு இருக்கும்போது ஏன் அறிவு உணர்ச்சி வயமாகக்கூடாது?
4) விழிப்புணர்விற்கும் உணர்ச்சிவயத்திற்கும் என்ன தொடர்பு? அது விரும்பத்தக்கதா?
5) அயரா விழிப்புணர்வே இறை எனப்படும்போது, உணர்ச்சிவயம்???
6) அமைதி பூர்வீக சொத்து எனப்படும்போது, உணர்ச்சிவயம் பூர்வீகச்சொத்தை அனுபவிக்க அனுமதிக்குமா?
7) உணர்ச்சிவயத்திற்கு எதிர்சொல் உண்டா?
8) மனவளக்கலை இயம்புகின்ற அறிவின் ஐந்து சிறப்புகள் என்னென்ன?அறிவு உணர்ச்சிவயப்பட்டால் ஏதேனும் ஒன்றாவது மலருமா?
9) அதேபோன்று அறிவு பெறவேண்டிய ஐந்து பேறுகள் என்னென்ன? அவற்றினை அடைய முடியுமா?
10) ஆன்ம பலம் என்றால் என்ன? ஆன்ம பலத்திற்கும் உணர்ச்சிவயத்திற்கும் தொடர்பு உள்ளதா? உள்ளது எனில் அது எவ்வாறு தொடர்புள்ளது?
11) i)ஆன்ம பலம், உலகியல் வாழ்க்கை வாழ்கின்றவர்களுக்கும், இறைஉணர் சாதகர்களுக்கும் அவசியம் தானே?!
ii) அவசியம் எனில் எவ்வாறு அவசியமாகி்ன்றது?
iii) இயற்கையில்/இறை ஆற்றலில் நடந்துகொண்டிருக்கின்ற தன்மாற்ற நிகழ்வில் இரு தரப்பினர் என்று இருக்கின்றனரா?
12) மனிதனுக்குத் தேவையான மற்ற பலங்களோடு ஒப்பிடுகையில் ஆன்ம பலத்தின் சிறப்பு என்ன? ஆன்ம பலமே சிறந்ததா?
13) இறையே மனித அறிவாக இருக்கும்போது மனிதஅறிவு உணர்ச்சிவயத்தில் இருந்தால் இறை அருளை எவ்வாறு பெறமுடியும்?
14) அறிவு எப்போது முழுமை பெறுவது? வீடுபேறு பெறுவது எப்போது? ஒவ்வொரு மனிதனும் வீடுபேறு அடையும் படலம் தொடங்கியாகிவிட்டது என்பதனை நினைவில் கொள்ளவேணடும். மகா கவி பாரதியார் “ எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன்” என்றுரைத்தான் கண்ணபிரான் என்று கூறி “எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் – ஆம் இந்தியா உலகிற்களிக்கும் – ஆம் இந்தியா உலகிற்களிக்கும் ” என அழுத்தமாகவும் தீர்க்கதரிசனமாகவும், சத்தியவாக்காகவும் கூறியுள்ளார். நான் யார் என்கின்ற வினா அளிக்கும் அறிவிற்கானத் தெளிவினை மனவளக்கலை மூலமாக ஆன்மீகத்தில் ஏற்பட்டுள்ள சடுதிமாற்றத் திருப்புமுனையாக இயற்கை/இறை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றதல்லா? அறிவிற்கு ஏற்படும் தெளிவு – விழிப்புணர்வு உணர்ச்சி வயத்திற்கு இடமளிக்குமா?
இந்தப் பயிற்சியில் இதுவரை 14 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. இவ்வளவு வினாக்கள் மட்டும் தான் உள்ளனவா இப்பயிற்சியில் சிந்திப்பதற்கு என ஐயம் எழலாம். இதற்கு மேலும் வினாக்கள் இருக்கும்/இருக்கலாம்/இருக்கின்றன! ஒவ்வொரு வினாக்களுக்குள்ளும் பல துணைக்கேள்விகள் மறைந்திருக்கலாம் (hidden questions). இப்பயிற்சியினை செய்யும்போது மேலும் ஏதேனும் மறைந்துள்ள துணை வினாக்கள் தங்களுக்குள் எழுந்தால் அவற்றையும் சேர்த்து சிந்தித்து விடை கண்டு மகிழவும். சிந்தனைத் திறனை மேலும் மேலும் தினந்தோறும், நொடிதோறும் வளர்த்துக் கொள்ள அன்பு வேண்டுகோள். வாழ்க வளமுடன்!
1) ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்கின்ற ஆன்றோர் மொழி என்ன தெரிவிக்கின்றது?
2) மேற்கண்ட ஆன்றோர் மொழியின்படி, அதில் கூறப்பட்டுள்ள நிகழ்வு சமுதாயத்தில் இப்போது நிகழ்கின்றதா? நிகழவில்லை என்றால் ஏன் நிகழ்வதில்லை? எந்நிகழ்வு அது? எப்போது இந்நிகழ்வு நிகழ்ந்திருக்கும்? இந்நிகழ்வு நிகழாமையின் விளைவு என்ன?
3) இந்த நூற்றாண்டிலாவது அந்நிகழ்வு புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளதா இயற்கையால்/இறையால்? அதாவது மீண்டும் அந்நிகழ்வு நிலைநிறுத்தப்பட்டுள்ளதா(revive, redeem)?
4) ஆம் என்றால், எவ்வகையில் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது?
5) அதனால் நீங்கள் அடைந்த பயன் என்ன?
6) இப்போது குருவருள் பற்றிய சிந்தனைக்குள் செல்வோம். குருவருள் என்றால் என்ன?
7) ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்பதன் பொருள் என்ன?
8) குரு சீடர் உறவின் அவசியத்தைப் பற்றிக் கூறும் கவியினை நினைவு படுத்திக் கொள்ளவும். (ஞா.க. பாகம்-2—க.எண் 1586 அல்லது ஞா. வாழ்வும்- கவி. 148)
9) அக்கவியில் ‘இருளே மிஞ்சும்’என்று கடைசி வரியில் கூறும் எச்சரிக்கை என்ன?
10) உறவுகள் பல உள்ளன. அவற்றில் குரு-சீடர் உறவு என்றால் என்ன? அந்த உறவு எவ்விதத்தில் அவசியமாக உள்ளது? அதன் பயன் என்ன?
11) குரு-சீடர் உறவின் பயனை எவ்வாறு அடைவது? குரு-சீடர் உறவின் பயன் எந்த விதியின் கீழ் நடைபெறுகின்றது? அவ்விதி என்ன கூறுகின்றது?
12) எப்படி பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சடுதிமாற்றத்தில் மனிதஇனம் தோன்றலாயிற்றோ, அதுபோன்றே இருபதாம் நூற்றாண்டில், ஆன்மீக உலகில் இயற்கை/இறை ஏற்படுத்திய சடுதிமாற்ற திருப்புமுனை வரிசையில், உலகை உய்விக்க முதலாம் கருவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நம் குருதேவர் ஜகத்குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் குரு-சீடர் உறவின் பயனை ஏற்படுத்தும் விதி பற்றி அருளியுள்ள கவியினை நினைவு கூர்ந்து சொல்லொணா ஆனந்தமடைந்து பிறவிப்பயனை அடைவோம்.
13) பயிற்சி என்பதால், மேற்கண்ட வினாக்களுக்கான விடைகளை முறைப்படுத்தி ‘குருவருள்’ என்கின்ற தலைப்பில் எழுதி பயன் பெறலாமே!
தலைப்பு ‘வயிற்றுப்பசியும் அறிவுப் பசியும்’ என்றிருக்கின்றது. பசி என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். புதிதானது அல்ல. எல்லோரும் அனுபவித்திருக்கின்ற ஒன்றுதான். ஆனால் தலைப்பு, வயிற்றுப்பசியுடன் அறிவுப்பசி என்று சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பசியில் இரண்டு வகைகள் உள்ளன, அந்த இரண்டைப்பற்றியும் சிந்திக்கப் பணிக்கப்பட்டுள்ளது இயற்கையால்/இறையால் இன்று. மகிழ்ச்சியுடன் சிந்திப்போம். இத்தலைப்பை ஏற்றுக்கொண்டு சிந்திப்பதன் வாயிலாக, இயற்கைக்கு/இறைக்கு உள்ளப்பூர்வமான நன்றியினை அகத்திலிருந்து செலுத்துகின்றோம்.
முதலில் பசியின் இரண்டு வகைகள் என்னென்ன என்று பார்ப்போம்.
ஒன்று வயிற்றுப்பசி.
மற்றொன்று அறிவுப்பசி.
வயிற்றுப் பசி எல்லா சீவன்களுக்கும் பொதுவானது. ஆனால் அறிவுப்பசி என்பது ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக மலர்ந்த மனிதனுக்கு மட்டுமே பிரதானமாக இருக்கக் கூடியது. ஆன்மா ஐந்து கோசங்கள் (போர்வைகள்) கொண்டிருந்தாலும் ஐந்தறிவு சீவன்களின் வாழ்க்கை முதல் இரண்டு கோசங்களான அன்னமய கோசம் மற்றும் மனோமய கோசத்திலேயே புலன்வழி இச்சையோடு முடிந்து விடுகின்றது. அவ்வளவுதான் அவற்றின் வாழ்க்கை. இந்த புலன்வழி இச்சைக்கான வாழ்க்கை வாழ்வதற்காகவா பேரறிவு நாமாக(மனிதனாக) தன்மாற்றம் அடைந்துள்ளது?! சிந்திக்கலாமே! சிந்தித்தாலே பிறவியின் நோக்கம் அறியும் முயற்சியிலோ, இறைத்தேடலிலோ விரைவில் வெற்றி பெற்றிடலாம்!
‘இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்?’
இச்சையைப்பற்றி 80 வரிகள் கொண்ட கவியில் இருபத்தைந்தாவது வரி ‘இச்சையின்றேல் ஏது இப்பிரபஞ்சம்?’ என்பது. அக்கவியின் எல்லா வரிகளுமே உலகியல் வாழ்க்கையை மட்டும் பிரதானமாக நடத்தும் மனிதர்களுக்கும் உலகியல் வாழ்க்கையையும் இறையுணர்வு ஆன்மீகத்தையும் இணைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆன்ம சாதகர்களுக்கும் பொதுவானதுதான். இருந்தாலும், மேலும் அக்கவியின் மற்றொரு வரியினையும் இத்தருணத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது உசிதமானது. அதாவது 63-வது வரியில் “இச்சையின்றேல் உயர் ஞானந்தான் ஏது?” என வினவுகிறார் இன்ப-துன்ப அறிவியளாலரான ஜகமே போற்றுவதற்கு உரியவரான இருபதாம் நூற்றாண்டின் ஜகத்குருவாக அவதரித்த நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். சிந்தித்தால், மனிதனின் வாழ்க்கை மிக மிகச் சிறப்புடையது என்பதனை நன்கு உணரலாம்; அறியலாம் அனுபவப்பூர்வமாக. மனிதனின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘மனிதனின் சிறப்பு’ (1955) என்கின்ற தலைப்பில் 100 வரிகளில் கவி ஒன்றை அருளியுள்ளார். வாசித்து இன்புறலாம்.
மனிதனின் சிறப்பை அறிந்து ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக மலர்ந்துள்ள மனிதனால் மற்ற மூன்று கோசங்களிலும் வாழ்க்கையை நடத்தாமல் வாழ்க்கை வாழ்வது சரியா என்பதனை அறிந்துகொள்ள முடியும். நடைமுறையில் ஐந்து கோசங்களிலும் ஆன்மா செயல்படுவதில்லையே! ஏன்?
கடினமானதா?
மற்ற மூன்று கோசங்களில் வாழ்க்கையை நடத்துவது கடினமானதா? மற்ற மூன்று கோசங்கள் என்னென்ன? அவற்றில் பெரும்பாலோர் கடைசி மூன்று கோசங்களில் வாழ்வதில்லை; வாழ முடிவதில்லை? ‘வாழ்வதில்லை’ என்றால் அது தனிமனிதனின் பொறுப்பின்மையையாகின்றது. ‘வாழ முடிவதில்லை’ என்றால் அதற்குக் காரணம் சமுதாயம். பாரதியார் மொழிந்துள்ளதுபோல் ‘வாழவேண்டிய நன்முறையை’ சமுதாயமோ, விஞ்ஞானமோ மனிதர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த நன்முறையினை சமுதாயத்தின் சார்பாகவும் விஞ்ஞானத்தின் சார்பாகவும் திருவேதாத்திரியம் செய்துகொண்டிருக்கின்றது என்பது மிகையே அன்று.
கடைசி மூன்று கோசங்கள் என்னென்ன?
அவையாவன:
3) பிராணமய கோசம்
4) விஞ்ஞானமய கோசம்
5) ஆனந்தமய கோசம் (முழுமை பெற்று நிறைவாக நிற்கின்றது மனம்)
முதல் இரண்டு கோசங்களையும் சேர்த்துத்தான் ஐந்து கோசங்களிலும் ஆன்மா செயல்படவேண்டியுள்ளது. ஆனால் முதல் இரண்டு கோசங்களிலேயே வாழ்வது என்பது
அறியாமையின் காரணமாகவோ
அல்லது
அறிந்தும் அலட்சியப்படுத்தி வாழ்வதன் காரணமாகவோ
அல்லது
தக்க வழிகாட்டுதல் கிடைக்காமலோ மனிதர்கள் அல்லலுறுவதைக் கண்கூடாகப் பார்க்கும்போது சகமனிதர்களாகிய மனவளக்கலைஞர்களுக்கெல்லாம் கவலை ஏற்படுகின்றது. கவலை ஏற்பட்டாலும், அந்நிலையினை மாற்றி அமைக்க மகரிஷி அவர்களின் வழியில், தொண்டுகளிலே சிறந்ததான அறிவுத் தொண்டாற்றி இன்பம் கண்டு வருகிறோம். இன்றைய ‘அறிவிற்கு விருந்து’ (FFC: Feast For Consciousness) – க்கான முன்னுரையை (like starter served in Dinner to create appetite) இத்துடன் முடித்துக் கொண்டு நேரிடையாக தலைப்பிற்குள் செல்வோமாக.
பசி என்பது என்ன?
‘பசி’ என்பதனை எல்லோரும் அறிவர். பசி என்பது அறிவிற்கு ஏற்படும் ஒரு துன்ப உணர்வு. அது தோன்றுமிடம் வயிறு. நான் பசியுடன் இருக்கிறேன். I am hungry என்போம். அல்லது வயிறு பசிக்கின்றது என்போம். உடல் இயக்கத்திற்கு சக்தி தீர்ந்ததும், சக்தி தேவை என்கின்ற நிலையை அறிவிப்பது பசி என்கின்ற துன்ப உணர்வு. அந்தப் பசிக்கு ‘வயிற்றுப் பசி’ எனப் பெயர் வைத்துள்ளோம்.
வயிற்றுப் பசியைப் போக்க உணவு உட்கொள்வோம். அந்த உணவு வயிற்றுக்குள் சென்று சீரணிக்கப்பட்டு உடலுக்கு வேண்டிய ரசம், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழு வித தாதுக்களாகி பிறகு எது எது, எந்தெந்த உடல் உறுப்புகளுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அங்கு போய்ச் சேரும். இதனை செய்வது யார்? நாமா? இல்லையே! இயற்கைதான்/இறைதான் செய்கின்றது. வாயிலிருக்கும் உணவை நாக்கால் உணவுக் குழாய்க்குள் தள்ளும் வரை நமது வேலை முடிந்துவிடுகின்றது. உண்ணும் உணவை சீரணம் செய்து ஏழு வித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்புவது யார் அல்லது எது அனுப்புகின்றது? இது இயற்கையாக நடக்கின்றது என்போம். ஆனால் இயற்கை செய்கின்றது என்று சொல்ல மாட்டோம்.
காரணம் என்ன?
காரணம் 1911 வரை அவ்வாறெல்லாம் சிந்தித்ததில்லை மனிதஅறிவு. சிந்தித்துப் பழக்கமில்லை. ஆனால் 1911 ற்குப் பிறகு மனிதஇனத் தன்மாற்றத்தில் அல்லது ஆன்மீகத்தில் ஒரு புதிய திருப்பத்தை சடுதிமாற்றமாக எட்டியிருக்கின்றது இயற்கை/இறை. எனவே இப்போது சீரணம் செய்யவைத்து ஏழுவித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்புவதை இயற்கை என்கின்றது 1911 ல் ஏற்பட்டுள்ள சடுதிமாற்றத்திற்குள் வந்த மனிதஅறிவு. இதில் யாருக்கும் கருத்து வித்தியாசம் இருக்க முடியாது. இது கருத்து என்றுகூட சொல்ல முடியாது. இதுவே உண்மை. எனவே உண்மையை ஏற்றுக் கொள்வதில் கருத்து வித்தியாசத்திற்கே இடமில்லை.
விந்தையை நினைத்து மகிழலாமன்றோ!
மனிதன் உண்ட உணவு சீரணிக்கப்பட்டு ஏழு வித தாதுக்களாகப் பிரித்து அந்தந்த உடலுறுப்புகளுக்கு அனுப்பப்படும் விந்தையை நினைத்து மகிழலாமன்றோ? இயற்கையை/இறையை* நினைவில் கொண்டோ அல்லது முன் வைத்து ஒருமை இயலில் (in advaidic sense or in Oneness Science) பேசப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நான், தான், தனது என்கின்ற தன்முனைப்பில்(Ego = Edging God Out=E + G+ O = EGO) மூழ்கிவிடும் அறிவு. தன்முனைப்பு வந்துவிட்டால் அறிவு தடுமாற்றம் அடைந்து தடமாற்றத்தில் சென்றுவிடும். விழிப்புணர்வு அயர்ந்துவிடும். அயராவிழிப்புணர்வேதான் இயற்கையின் ஆதிநிலையான பேரறிவு. பேரறிவேதான் இப்போது ஆறாமறிவாக தன்மாற்றம் அடைந்துவிட்டாலும், மனிதஅறிவு விழிப்புநிலையில் அயர்ந்துவிட்டதால் அது மயக்கத்தில்- மாயையில்(புலன்மயக்கத்தில்) சிக்கித் தவித்துக்கொண்டு வாழ்கின்றது. காரணம் பேரறிவு நேரிடையாக மனிதனாக தன்மாற்றம் அடையவில்லை என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுவும்கூட ஒருவகை விழிப்புணர்வைச்சார்ந்ததே! பேரறிவு நேரிடையாக மனிதஅறிவாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஓரறிவிலிருந்து ஐந்தறிவாகி மனிதனாகி வந்துள்ளதால் பேரறிவின் பின்னமான மனிதஅறிவு விழிப்புணர்வில் ஏற்பட்டுள்ள அயர்ச்சியைப் போக்கி அயராநிலைக்கு வந்து அயராவிழிப்புணர்வாகிய பேரறிவோடு கரைந்து ஆனந்தமயகோசத்தில் இன்புறவேண்டும். இதுவேதான் மனிதப்பிறவியின் நோக்கங்களிலே பெரும் நோக்கமானதாகவும் உன்னதமானதாகவும் உள்ளது. இந்த அறிவு பற்றிய அறிவியல் உண்மையை மனவளக்கலையின் வழியாக மலரச்செய்து கொண்டிருக்கின்றது திருவேதாத்திரியம்.
(*திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் ஐயப்படாது அகத்தினை உணர்ந்தவர்கள் இயற்கையை இறை என்றனர். ‘இயற்கையை’ இயற்கை என்று சொல்லாமல் ஏன் இறை என்கின்றனர்? காரணப் பெயராக இயற்கையை இறை என்கின்றனர். இயற்கை எனும் பேராற்றல் எங்கும் இருப்பதால், அதாவது இறைந்து கிடப்பதால் அதனை இறை என்று கூறுகின்றனர்.)
அளவும் முறையும் அவசியம்
உணவில் சாதாரண உணவும் உண்டு. விருந்தும் உண்டு. சாதாரண உணவும் பசியினைப் போக்கும். விருந்தும் பசியினைப் போக்கும். விருந்தில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். விருந்தில், உணவு செயற்கையாக ருசியைக்கூட்டித் தயாரிக்கப்படும். உணவு கிடைக்கின்ற பெரும்பாலோருக்கும் சாதாரண உணவுதான் கிடைக்கின்றது. இந்த சாதாரண உணவு கூடக் கிடைக்காத வறுமை நிலையும் உள்ளது இந்த சமுதாயத்தில் என்பது மிக மிக வருத்தத்திற்குரியது. வறுமை என்பது சமுதாயத்தின் ஒரு பெரிய கொடும் துன்பம். கருணையாலும், சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக “தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினையே அழித்திடுவோம்” என்று கூறுகிறார் மகாகவி – பன்முகமாக சிந்தித்த மாமனிதர் (multifaceted Personality). அதாவது உலகில் வாழும் ஒருமனிதனுக்குக்கூட உணவு இல்லை என்கின்ற நிலை இருக்கக்கூடாது எனக்கருதியே அவ்வாறு கூறி அதற்காக “இனியொரு விதி செய்வோம். அதனை எந்தநாளும் காப்போம்” என்கிறார் மகா கவி பாரதியார்.
விருந்து ஒரு சிலருக்குத்தான் எப்போதாவது கிடைக்கின்றது. சாதாரண உணவே போதுமானது. ருசி இருந்தால் தான் நாக்கு, உணவை உணவுக்குழாய்க்குள் தள்ளும் என்பது உண்மைதான். இருந்தாலும் பசிக்காகத்தான் உணவு. ருசிக்காக உணவு இல்லை என்பதனையும் மறந்து விடக்கூடாது, ருசியை செயற்கையாக அதிகமாக்கினால் சில நேரங்களில் தீமையையும் விளைவிக்கும்.
எனவே வயிற்றுப் பசிக்கு சாதாரண உணவே போதுமானது. விருந்து கிடைப்பதாக வைத்துக்கொண்டாலும் தினந்தோறும் விருந்தை உண்ண முடியாது. சலிப்பு ஏற்படும். விருந்து என்பது தேவைக்கு அதிகமான உணவுதானே? தினந்தோறும் விருந்து உண்பது வயிற்றுக்குத் தீங்கையும் விளைவிக்கும். உணவு உண்பதில் “அளவும்” (limit) முறையும் (method) அவசியம். அளவு என்பது அதிகமாகவோ, குறைவாகவோ, அனுபவிக்கக் கூடாது. முறை என்பது இயற்கைக்கு முரண்படாமல் ஒத்த முறையில் அனுபவிப்பதாகும். இன்பம் துய்த்தலில் அளவும் மீறி, முறையும் மாறினால் இன்பமே துன்பமாக மாறும் என்கின்ற இயற்கை நியதியைக் கவனிக்க வேண்டும்.
வயிற்றுப் பசியைப் பற்றி அறிந்து கொண்டோம். மூன்று முக்கியமான உண்மைகளைத் தெரிந்து கொண்டோம்.
உணவு சீரணமாகி உடலுக்கு வேண்டிய சக்தியாக மாற்றுவது இயற்கை அல்லது மறுபெயரைக்கொண்ட இறை என்றும்,
உணவு உட்கொள்வதில் அளவும் முறையும் கடைபிடிக்க வேண்டும் என்றும்,
இல்லையெனில் இயற்கையின் நீதி மீறப்பட்டு இன்பமே துன்பமாக மாறிவிடும் என்பதனை அறிந்து கொண்டோம்.
அறிவுப் பசி என்பது என்ன?
இப்போது அறிவுப்பசி பற்றி அறிந்து கொள்வோம். வயிற்றுப் பசி என்பது சரி. அறிவுப் பசி என்பது வார்த்தை ஜாலமா? உண்மையில் அறிவிற்குப் பசி இருக்குமா என ஐயம் எழலாம். அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. உருவமில்லா அறிவிற்குப் பசி எவ்வாறு ஏற்பட முடியும் என ஐயம் எழலாம்? அறியவேண்டியதை அறியவேண்டும் என்கின்ற அவா எழுந்தால் அதுவே அறிவிற்கானப் பசி ஆகும். அந்த அறிவுப்பசியினைப் போக்குவதுதான் மனவளக்கலை எனும் விருந்து. மனவளக்கலை அறிவை அறியும் பயிற்சியாயிற்றே! அது அறிவிற்கு ஆனந்தத்தைத்தான் தரும். அதுதான் அறிவு முழுமை பெற்று நிறைவாக இருக்கின்ற நிலை. வயிற்றுப் பசியின் போது வயிற்றில் ஏற்படும் பசியாகிய துன்ப உணர்வை அறிவது அறிவு. அதேபோல் மற்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் துன்ப உணர்வுகளையும் அறிந்து கொள்கின்றது அறிவு. அப்படி இருக்கும்போது தனக்கேகூட(அறிவிற்கேகூட) துன்ப உணர்வு ஏற்படுமா? பசி என்பது துன்ப உணர்வு என்பதால் அறிவுப்பசி என்பது அறிவிற்கு ஏற்படும் துன்பம் என்றுதானே பொருள்?
அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். வயிற்றுப் பசியில் பசி என்கின்ற துன்ப உணர்வை, உணவை உட்கொண்டு சரி செய்து கொள்கிறோம். வயிறு ஓர் உறுப்பு. உருவமுள்ளது. வயிற்றில் இரைப்பை உள்ளது. நாம் அருந்தும் உணவு இரைப்பையில் நிறைகின்றது. வயிறும் பருப்பொருள். உணவும் பருப்பொருள்(கெட்டிப் பொருளாகவோ அல்லது நீர்ப்பொருளாகவோ இருக்கும்) வகையைச் சார்ந்தது. ஆனால் அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. அப்படி இருக்கும்போது உருவமில்லா அறிவிற்கு ஏற்படும் பசியை எவ்வகையான உணவுப் பொருளைக் கொண்டு அறிவு தனது பசியைப் போக்கிக் கொள்ள முடியும்?
எத்தகைய உணவு அறிவிற்கு விருந்து?
உருவத்தைக் கொண்ட வயிறு பருப்பொருள்(உருவமுள்ள) உணவைக் உட்கொண்டு பசியைப் போக்கிக் கொள்வதுபோல் அறிவு தன் பசியை போக்கிக் கொள்வதற்கு பருப்பொருள் உணவு ஏதும் கிடையாது. உருவமில்லா உணவைக் கொண்டுதான் அறிவு தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் சிந்தனை. எனவேதான் சிந்தனையை சிந்தனை விருந்து என்றும் அறிவிற்கு விருந்து என்றும் சொல்கிறோம். அறிவு ஐம்புலன்கள் வாயிலாக புற நிகழ்ச்சிகளை உணர்கின்றது. இன்பதுன்பங்களை உணர்கின்றது. இதுமட்டுமேவா அறிவின் வேலை? இது மட்டுமே அறிவிற்கு இன்பம் தரமுடியுமா?
அறிவு அறிய வேண்டியது எது?
அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன? அறிவது அறிவு. அறிய வேண்டிய இறுதியானதை(அதாவது தன்னையே) அறியவேண்டும் அறிவு. உடலுக்கு ஏற்படுகின்ற இன்பதுன்ப உணர்வுகளை அறிந்து கொள்வது எதுவோ அது அறிவு. புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அறிகின்றது. இவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக, அறிய வேண்டி இறுதியானதை அறியக் கூடியது அறிவு(Capable). அப்படியானால் அறிவு அறிய வேண்டியது எது? அறிவு ‘தான் யார்’ என்றும், ‘தன் இருப்பிடம்’ எது என்றும் அறிய வேண்டும். உயிரினங்களிலேயே இந்தச் சிறப்பை உடையது மனிதஇனம். தன்னை உணரும்போதுதான் அறிவு முழுமை பெறும். மகாகவி கூறும் தெளிந்த நல்லறிவாகும் அறிவு.
அறிவுப்பசிக்கான விருந்துதான் திருவேதாத்திரியம்
அறிவு தனது பூர்வீகத்தை அறிய வேண்டும். இது வரை அறிவைப்பற்றிய விஞ்ஞான பூர்வமான தகவல் ஏதும் இல்லாதபோது அறிவைப்பற்றிய(Consciousness) தகவல்களை எங்கிருந்து அறிவது என்கின்ற ஐயம் எழலாம். அறிவுப்பசியைப் போக்கிட இயற்கை/இறை தயாரித்துள்ள விருந்துதான் திருவேதாத்திரியம். இயற்கையின்/இறையின் தன்மாற்றப்படி பேரறிவிற்கு எது பிரியமோ அதனை மனிதஅறிவு அறிய வேண்டும். அப்போதுதான் மனிதஅறிவிற்கு பேரின்பம். இந்த நிலை மனிதஅறிவிற்கு இல்லாதபோது மனிதஅறிவு அல்லலுறுகின்றது. அல்லலைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற வேட்கை மனிதஅறிவிற்கு வந்துவிட்டால் அதுவே அறிவுப்பசியாகிவிடுகின்றது. தனக்குப்(அறிவிற்கு) பிரியமானதை அறியாமல், அறிந்தாலும் அதற்கான வழியும் தெரியாமல் காலம் கடத்துவது அறிவிற்குத் துன்பம்தான். எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.
அறிவிற்கு ஓய்வேது?
அறிவிற்கு தன்னை அறிவதில் விருப்பம் வந்துவிட்டால் தன்னை அறிகின்ற வரை அதற்கு ஓய்வே கிடையாது என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எப்போது தன்னை உணா்கின்றதோ அன்றுதான் அறிவிற்கு ஓய்வு. அன்றுதான் அறிவின் பசி முழுவதுமாகத் தீரும். அன்றுதான் அறிவிற்கு முழு விருந்துமாகும். அதுவே அறிவின் முழுமைப்பேறு. ஆகவே ஆறாம் அறிவுடைய மனிதன் சிந்திக்க வேண்டும். சிந்தித்தலின் வாயிலாக வாழ்வின் நோக்கத்தை தானே அறிந்து, அதுபோல் வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் புண்ணியக் கடமையை ஆற்றும் போதுதான் அறிவிற்குப் பசி தீரும். இப்பூமியில் வந்து போனதற்கான சுவட்டினை விட்டுவிட்டுச் செல்லவேண்டும். வயிற்றுக்குப் பசி இருப்பதுபோன்று அறிவிற்கும் பசி உண்டு என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். சிந்தனை விருந்துதான் அறிவின் பசியினைப் போக்க முடியும்.அறிவு அன்னமய கோசத்தைக் கடந்து விஞ்ஞானமய கோசத்திற்குள்ளும், ஆனந்தமய கோசத்திற்குள்ளும் பயணிக்க வேண்டும்.
இதுவரை அறிந்து கொண்டது என்ன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.
எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.
சிந்தனைதான் அறிவுப் பசியைத் தீர்க்கும்.
அறிய வேண்டிய இறுதியானதை அறியாத அறியாமையால் வருவது துன்பம்..
அறிவுப் பசியைத் தீர்க்க இயற்கை தயாரித்துள்ள விருந்துதான் திருவேதாத்திரியம்.
மனதைப் பற்றிக் கூறும்போது வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒரு முறை “I am not telling out of ego. Nobody else except myself has given explanation about mind” எனக் கூறியுள்ளார். இக்கூற்றினை நினைவில் கொண்டு மனதைப் பற்றியும் மனதின் இயக்கத்தைப் பற்றியும் மகரிஷி அவர்கள் கூறுவதனை இப்போது நினைவில் கொண்டு வந்து மகிழ்ந்து பார்ப்போமே! வாழ்க வளமுடன்!
அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியவர்கள் அனைவரையும் குருபூர்ணிமா கொண்டாடும் இந்த தினத்தில் நினைவு கூர்வோம்.
வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமாவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழா வியாசமுனிவரை நினைவுகூர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விழாவாகும்.வியாச முனிவர் நான்கு வேதங்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். பதினெட்டு புராணங்களை வழங்கியுள்ளார். மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத்பாகவதம் அருளியுள்ளார். வியாசமுனிவரை நினைவு கூறும் இவ்வேளையில் ஆன்மீக சாதகர்கள் அவரவர்களுடைய நேரிடை குருவினையும் நினைவு கூர்தல் நலம் பயக்கும்.
எனவே இத்தருணத்தில் நமது குருவாகிய அருட்தந்தை அவர்களை நினைவு கூர்வோம். அப்படியென்றால் மற்ற நாட்களில் நமது குருவை மறந்து விட்டிருக்கிறோம் என்று பொருளல்ல.என்றைக்கு அவருடைய உயிராற்றல் நம்முடன் கலப்புற்றதோ அன்றைய தினத்திலிருந்து அவருடன் நாம் இணைந்தேதான் உள்ளோம்.
எப்படியெனில் அருட்தந்தை அவர்கள் நமக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்து, அதற்கான பொருளையும், நமக்கு அறிமுகப்படுத்தி விட்டார். மூச்சு விடுவதுபோல் சிந்திப்பதும் நமக்கு சகஜமாகிவிட்டதால் சிந்திக்கும் போதெல்லாம் நம்முடைய குருவின் அறிவாற்றலுடன் தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது, சிந்திப்பதற்கு அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த பொருளுடனும்(மெய்ப்பொருளுடனும்) தொடர்பு கொண்டு இணைந்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் மூச்சு விடுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது போல், சகஜ நிஷ்டை போல் எப்போதுமே சிந்தனையோடு இருப்பதால் எப்போதுமே குருவின் நினைவோடும் அதே நேரத்தில் அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த சிந்தனைக்குரிய பொருளுடனே(மெய்ப்பொருள்) இணைந்தேதான் வாழ்கிறோம்.
குருவோடு தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது அவரையும்(எப்பொருளை), அவரது செயலையும்(எச்செயலை), அவரது குணத்தையும்(எக்குணத்தை) அவரது உயிரையும்(எவ்வுயிரை) எப்போதும் (அடிக்கடி) நினைந்து கொண்டேதான் இருக்கிறோம். விளைவு இயல்பூக்க நியதிப்படி நம்முடைய அறிவினிலும் உடலினும் மாற்றங்கள் ஏற்பட்டு நம்முடைய மனிதப் பண்பேற்றம் நடை பெற்றுக் கொண்டு வருவதை நாம் உணர்ந்து கொண்டு வருவதில் ஆனந்தம் அடைகிறோம்.பிறவிப்பயனாகிய லட்சியம் நிறை வேற அந்த லட்சிய நாளுக்கு ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
அவரது செயலாலும் குணத்தாலும் அடைந்த உயர் புகழையும் நாம் மேலும் மேலும் நினைக்கிறோம். அறிந்து மகிழ்கிறோம். அவருடைய சூக்கும உடலுக்கு உளம் கனிந்த நன்றியினையும் அவரது அறிவாற்றலை சிரம் தாழ்த்தி வணங்கி போற்றுகிறோம். பாராட்டுகிறோம்.
அருட்தந்தை அவர்கள் அருளுவதாவது:
வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளேயே பேராற்றல் புதையல் கண்டோர் தக்கவழி அருட்குருவின் தாள் பணிந்து தவம் பயின்று தனை உணர்தல்”
அருள் துறையில் நுழைவதற்கே ஆர்வமில்லாமலும் வாய்ப்பில்லாமலும் இருக்கும் இச்சமுதாயத்தில், நாம் விரும்பி வாய்ப்புக் கிடைத்து, அருட்தந்தையின் சீடர்களாக வந்துள்ள நமக்கு, பயிற்சியின் வெற்றி தள்ளிப்போகும் போது நம்பிக்கை இழந்து பயிற்சியில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நம்பிக்கை ஊட்டும் வகையில் அருட்தந்தை அவர்கள் மேலும் அருளுவதாவது
“பலஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்”என்கிறார்.
இந்த தெய்வீக வரிகள் வாயிலாக நமக்கு உற்சாகத்தையும் உறுதியையும் அளிக்கின்றார். அதற்கு வழி கருமையத்தூய்மையாகும் என்கிறார். அதற்கு தவமும் அறமும் தேவை என்கிறார். மேலும் இறையுணர் பாதையிலே என்றும் விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி என்கிறார்.
மேலும் “உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது”என்கின்ற அவரது கருணை மொழி ‘பயணம் முடியாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றதே, எப்போது வரும் அந்தநாள்’ என்கின்ற தீரா ஆன்மீக தாகத்திற்கு தெய்வீக நீரை அளிப்பது போல் உள்ளது.மேலும் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது.
மேலும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. தரம் உயர்த்துவது என்பது:– விலங்கினத்திலிருந்து சடுதிமாற்றமாக வந்த ஆதிமனிதனின் கருத்தொடர்தான் இன்றுள்ள நாமும்.
எனவே
நம்மிடம் உள்ள விலங்கினப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்து,
பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்தி மனதை புண்ணாக்கிக் கொள்ளாமல் .
எப்போதும் அயராவிழிப்பிலே(Awareness is God) இருந்து கொண்டு,
மனிதப் பண்பான அன்பிற்கும், கருணைக்கும் பாத்திரமாக திகழ்ந்து அறிவுத் தொண்டினை செய்து வருதலே, கோடான கோடி மக்கள் வாழ்கின்ற இச்சமுதாயத்தில் நமக்கு மட்டும் குரு-சீடர் உறவு கிடைத்திருப்பதை நாள்தே்ாறும் நினைவு கொண்டு சுயதிருத்தம் பெற்று வருவதே நாம் நம் குருவிற்கும், அவர் வழியாக இறைக்கும் செலுத்தும் நன்றியாகும்.
“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”என்று அருளிய தெய்வத்தாய் அவ்வையை மதித்து தந்தைகளுக்கெல்லாம் தந்தையாக விளங்கும் நம்முடைய அறிவுக் கண்களையெல்லாம், திறந்து அறிவொளி வீசச் செய்துள்ள அருட்தந்தை அவர்களின் சொற்களையெல்லாம் மந்திரங்களாகக் கொண்டு எப்போதும் நினைந்து மதித்து நடந்து இப்பிறவியிலேயே பிறவிப்பயனை எய்துவோம். நம்முடன் வாழும் சக மனிதர்களையும் உய்விக்க அறிவுத் தொண்டாற்றி மகிழ்ந்து குருவின் சூக்கும சரீரத்திற்கு நன்றியினை செலுத்திப் பூரிப்படைவோம். அவரது கனவான ஓர் உலக ஆட்சியும், உலக அமைதியும் விரைவில் நிஜமாக, உறுதியான எண்ண அலைகளை அழுத்தமாக பரப்புவோம். இதுவல்லவோ பிறவிப்பயன். மனிதப்பிறவியின் பயனில் இரண்டு அங்கங்கள் உள்ளன.
ஒன்று, மனிதப் பிறவி எடுத்த நோக்கத்தையும் நிறை வேற்றிக் கொள்ள வேண்டும்.
மற்றொன்று மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறிய பிறகு,
நோக்கம் நிறைவேறிய பிறவிசமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அறிவுத்தொண்டாற்றுவது.
இங்குதான் பிறவியின் நோக்கமும் நிறைவேறுகின்றது.
நோக்கம் அறிந்த பிறவியும் சமுதாயத்திற்கும் பயனாகின்றது.
ஆறறிவு உடைய மனிதனை “மனிதன் என்ற உருவினிலே மாக்கள் உண்டு மக்கள் உண்டு*” என்பதனை எதன் அடிப்படையில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துள்ளார்?
விலங்குகளிலிருந்து மனிதன் வந்துள்ளதால் அவனிடம் விலங்குகளுக்கே உரிய பிறர் வளம் பரித்தல் குணம் தொடர்வதால் மனிதர்களை இரண்டாகப் பிரித்து அவ்வாறு கூறுகின்றாரா?
இந்தக் காரணமட்டுமன்றி வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?
அப்படி உண்டென்றால் அவை என்னென்ன?
அல்லது ஆன்மாவின் ஐந்து கோசங்களை வைத்து அவ்வாறு கூறுகின்றாரா?
அப்படி கூறுகின்றார் என்றால் ஐந்தறிவு சீவன்கள் எந்தெந்த கோசங்களில் மட்டும் இயங்குகின்றன? ஆறாம் அறிவு எந்தெந்த கோசங்களில் இயங்க வேண்டும்? பெரும்பாலும் மனித அறிவு எந்த கோசத்தில் இயங்குகின்றது?
கோசங்களில் கடைசி கோசம் என்ன? அந்த கோசத்தில் எந்த ஆன்மாவின் அறிவு இயங்குகின்றது?
ஏன் இந்த கோணத்தில் சிந்திக்க வேண்டும்? இவ்வாறு சிந்தித்தலின் பயன் என்ன?
என்ன கூறுகிறார் உலக நல தொண்டரான நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
வாழ்வு என்பது என்ன?
வாழ்வில் வளம் என்பது என்ன?
வினை, உயிர், மெய், அறிவதால் வளம் கிடைக்கின்றதா? இவற்றை அறிவதால் எவ்வாறு வளம் கிடைக்கும்?
பஞ்சதன்மாற்றங்களின் வகை தெரிவான் கட்டே உலகு என்று 20 நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் உரைத்தது போல அவரது 20 ஆம் நூற்றாண்டின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் வினை, உயிர், மெய் ஆகியவற்றின் வகை அறிய என்ன செய்தார்?
பகலிரவாய் எண்ணி எண்ணி என்றால் என்ன?
ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்தேன் என்பதற்கு என்ன பொருள்? உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது என்கின்ற உறுதியை நினைவில் கொண்டு மற்ற பணிகளுக்கும்-கடமைகளுக்கும் குந்தகம் ஏற்படாமல் சிந்தித்து ஆன்மபலன் பெறலாமே?
விடாமல் தொடர்ந்து ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்ததால் அவர் அடைந்த பலன்கள் என்ன? நாமும் அவ்வாறே பலன்களை அடையலாமே!
வினாக்கள் எல்லாம் விடையாயிற்று என்றால் என்ன பொருள்?
ஊழ் உணர்ந்தேன் என்றால் என்ன பொருள்?
ஊழ், உயிர், வினை உணர்ந்தால் வாழ்வில் வளம் பெருகும் என்கிறாரே! இது எளிமையாக உள்ளது அல்லவா?
உயர் தொண்டு என்றால் என்ன? என்ன வகையான தொண்டு மகரிஷி அவர்களுடையது?
தொண்டால் எப்படி மனநிறைவு உண்டாகும்? அந்த மனநிறைவை வரையறுக்க முடியுமா?
25.06.2020 அன்று சிந்திக்க வினாக்கள் பயிற்சியில் கலந்து கொண்டு கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வேதாத்திரி மகரிஷி அவர்களின் வைரமொழிகளை வாசித்து ஆனந்தம் அடைந்து இருப்பீர்கள். இன்றைய சத்சங்கத்தில் அவ்வினாக்களுக்கு விடைகள் தரப்பட்டுள்ளன. விடைகளை சரிபார்த்து மீண்டும் முழுமையாக மகரிஷி அவர்களின் வைர மொழிகளை வாசித்து, உள்வாங்கி, மீண்டும் ஆனந்தம் அடையலாம். வாழ்க வளமுடன்!
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து இன்புறலாமே!
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.