சிந்தனையைத் தொடர்வோம். வள்ளலார் அவர்கள் தனது பூதல உடலின் மறைவிற்குப்(1874 ஆம் வருடம்) பிறகு நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, அவர் சுமாா் 42 வயது இருக்கும் போது அருள்பாலித்தார். அதாவது 1953(1911+42=1953) ஆண்டில் அருள்பாலித்துள்ளார் என அறியமுடிகின்றது. அருள்பாலித்ததிலிருந்து பத்து ஆண்டு காலத்துக்குள் தான் எழுதியக் கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயம் என்கிறார் மகரிஷி அவர்கள். வள்ளலார் தம் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம், தனது உடலைக் கொண்டு வள்ளலார் முடித்துக் கொண்டார் என மகரிஷி அவர்கள் ‘எனது வாழ்க்கை விளக்கம்’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். வள்ளலார் பல சந்தர்ப்பங்களில் தன்னோடு இருந்து வழிகாட்டி, செயலாற்றியிருக்கிறார் என்று மகரிஷி அவர்கள் கூறுகிறார்.
மகரிஷி அவர்கள் 05-12-1986 அன்று அருளியுள்ள கவியினை இங்கே நினைவு கூர்வோம்.
வள்ளலார் அருள்(05-12-1986)
“என்று என்னை இராமலிங்க வள்ளற்பெரு மானார்
எதிர் நின்று காட்சிதந்து அருளைப் பொழிந்தாரோ
அன்றுமுதல், உடல் உயிரோடறிவை அருட்பணிக்கே
அர்ப்பணித்து விட்டேன்என் வினைத் தூய்மை யாச்சு
இன்றுஎந்தன் மனநிலையோ, வள்ளற் பெருமானார்
எந்தச்செயல் செய்யென்று உணர்த்து வாரோ, அதுவே
நன்றுஎனக் கொண்டவற்றை, நான்முடிக்கும் பேற்றால்
நல்லறிஞர் பலர் எனக்கு நட்பை அளிக்கின்றார்.” (ஞா.க.க.எண் 711)
… வேதாத்திரி மகரிஷி.
அதாவது வள்ளல் பெருமகனார் தனது பூதஉடலின் மறைவிற்குப் பிறகு சுமார் 80 வருடங்களுக்குப் பிறகு (1953-1874=79) தனது கடைசிச் செய்தியின்படி மகரிஷி அவர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
இதிலிருந்து அறியவேண்டியது யாதெனில் மரணத்திற்குப் பின் உயிரின் நிலை பற்றி அறிய முடிகின்றது. மகரிஷி அவர்களின் மற்றோர் கவியினையும் நினைவு கூர்வோம்.
பேரறிஞர் வழி செல்வோம்(10.08.1981)
“அருவுருவாம் அகத்ததனை விளக்கி வாழ்வில்
அல்லல் கலைந்து அமைதிபெற்று மக்கள்உய்யக்
கருவிளக்கி மனவளத்தைப் பெருக்கிக் காக்கும்
கலையதனைக் கவி மூலம் விரித்துரைத்த
திருமூலர், வள்ளுவனார், இராம லிங்கர்
திருவருளார், மணிமொழியார், தாயு மானார்,
பெருநோக்கப் பயன்விளக்கி உலகம் உய்யப்
பேரறமாம் அருட்தொண்டில் பங்கு கொள்வோம்.”…(ஞா.க.க.எண் 13)
… வேதாத்திரி மகரிஷி.
அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய பேரறிஞர்கள் வழி சென்று அருட்தொண்டில் பங்கு கொள்வோம் என்கிறார் மகரிஷி அவர்கள். நாமும் அவ்வகையில் வள்ளல் பெருமகனார் கூறிய கடைசிச் செய்தியை நினைவில் கொள்வோம். ‘ தானே தனது செயல்களைச் சோதனை செய்து விளைவைக் கணித்து திருத்தம் பெறும் வெற்றியே அகத்தாய்வு’ என்கிறார் மகரிஷி அவர்கள். அதுபோன்று நம்மையும் திருத்திக் கொண்டு, அதே வேளையில் உலக சகோதர – மக்களையும் திருத்துவதற்கு அறிவுத்தொண்டு செய்து வாழ்வோம்.
இதுமட்டுமின்றி மேலும் சிந்தித்து செயல்பட வேண்டியதை அவரவர் நிலைக்கேற்ப அவரவர் சிந்தித்துப் பயன்பெறுவோமாக!
எல்லாம் வல்ல தெய்வமது. எங்கும் உள்ளது நீக்க மற. சொல்லால் மட்டும் நம்பாதே. சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்!”
— வேதாத்திரி மகரிஷி
பயிற்சி—
1. தெய்வம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதை அப்படியே நம்புவது சரியில்லையா?
2. மகரிஷி அவர்கள் கூறுவதை நம்பவேண்டாம் என்று அவரே எச்சரிப்பது வியப்பாக இருக்கின்றதல்லவா?ஏன் அவ்வாறு கூறுகின்றார்?
3. காரணம் இல்லாமலா இருக்கும், சிந்திப்போம். அந்தக் காரணத்தை அறிவதற்கும் சிந்திப்போம் என்றுதான் கூறுகிறோம்! ஆறாம் அறிவின் உச்சமான சிறப்பான சிந்தனை ஆற்றல் தடத்தை(pondering channel) திறக்கச் சொல்கிறாரா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?!
4. தெய்வம் பற்றி கூறிவிட்டு ஏன் சுயமாக சிந்தித்துத் தெளிவு பெறச்சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
5. சிந்தித்தல் என்றால் எவ்வாறு சிந்திக்க வேண்டும்? அதனைக் கூறவில்லையே! எங்கிருந்து சிந்தித்தலை ஆரம்பிக்க வேண்டும்? எங்கு முடிக்க வேண்டும்?
6. முதலில் சிந்தித்தல் மீது தீராத ஆர்வம் கொள்ள வேண்டுமல்லவா?
7. அன்னமய கோசம், மனோமய கோசம் ஆகிய இரண்டில் மட்டுமே இயங்கும் எண்ணத்தை பிராணமயகோசத்திற்கு கொண்டு வந்து பிறகு விஞ்ஞாணமயகோசத்திற்கு கொண்டு வருவதற்கு சுயமாய்ச் சிந்திக்கச் சொல்கிறாரா?
7. சிந்தித்தலை அவர் எவ்வாறு ஆரம்பித்தார் என்பதனைக் கவனித்தால் நாமும் சிந்தித்தலை அவ்வாறே ஆரம்பிக்கலாம் அல்லவா?
8. சிறு வயதிலேயே அவருக்குள் எழுந்த மகானாக்கிய நான்கு மகோன்னத கேள்விகள் இருக்கின்றனவே. அவற்றையே நாம் சிந்தித்தலுக்கு ஆரம்பமாக வைத்துக் கொள்ளலாமன்றோ?
9. சிந்தித்தலால் தெளிவு பெறச்சொல்கிறார். நம்பிக்கை வேறு, தெளிவு வேறா? தெளிவு என்றால் என்ன? தெளிவின் பயன் என்ன?
10. தெய்வம் பற்றி அறிவதற்கு மட்டுமா சிந்தித்தலை பயன்படுத்த வேண்டும்? மானுடவியலைப் பற்றி அவர் கூறியவற்றை உறுதிபடுத்துவதற்கும் பயன் படுத்தவேண்டுமா?
11. சிந்தித்தலை எவ்வாறு அவரிடமிருந்து கற்றுக்கொள்வது? அவருடன் இணைந்தால் கற்றுக்கொள்ள முடியுமா?
12. இப்போது அவர் இல்லையே இப்புவியில்! எவ்வாறு அவருடன் இணைந்துகொள்வது?
13. அவருடைய சிந்தனை ஆற்றலைப் போற்றி, மகிழ்வுற்றால் அவருடன் இணைப்பு கிடைத்துவிடுமா?
14. தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் வாழ்ந்த காலத்தில் பிறவாத மகரிஷி அவர்கள் எப்படி அம் மூவரையும் குருமார்களாகக் கொண்டார்?
15. அதே யுக்தியை நாமும் பயன்படுத்தலாமன்றோ?!
16.எவ்வளவு காலம் தேவை தெய்வத்தைப் பற்றி சுயமாய்ச் சிந்திக்க ஆரம்பித்து சிந்தித்தல் முடிந்து தெளிவு பெறுவதற்கு? சிந்தித்தலுக்கு முடிவு என்று ஒன்று இருக்கின்றதா?
16.1.ஒரு நொடி போதுமா?
16.2. ஒரு மணித்துளி போதுமா?
16.3. ஒரு வாரம் போதுமா?
16.4. ஒரு மாதம் போதுமா?
16.5. ஒரு வருடம் போதுமா?
16.6. இந்தப்பிறவிக்காலம் போதுமா?
16.7. செயலற்று/உறங்குகின்ற(dormant) சிந்தினை ஆற்றல் தூண்டப்பட்டு விழித்தெழுவதைப் பொருத்து கால அவகாசம் மாறுபடுமா?
என்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருள் மொழியின்படி “அவனில்தான் நீ! உன்னில் அவன்! அவன்யார்? நீயார்? பிரிவேது? என்றாகிவிட்ட பிறகு, எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறையில் நடக்கின்ற எல்லாப்புகழ் தருகின்ற நிகழ்வுகளுக்கும்/நிகழ்ச்சிகளுக்கும் இறைதானே காரணமாக இருக்க முடியும். என்று சிந்தித்து வருகிறோம்.
இதுவரை
பேரானந்தத்தின் திறவுகோல்கள் எவை,
மகரிஷி அவர்கள் பேரானந்தத்தை எவ்வாறு நான்கு படிகளில் எய்தினார்,
வேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண், இயற்கையின் இரகசியம் எது என்றும்,
அதனை அறிய வேண்டிய அவசியத்தையும்,
திருவள்ளுவர் ஏன் எந்தப்பொருளானும். அதன் உண்மைப் பொருளை அறிய வேண்டும் என்று கூறுகிறார்,
என்று அறிந்து கொண்டோம்.
எந்த ஒரு பொருளானாலும், இயக்கமானாலும், தூலம், சூக்குமம், காரணம் ஆகிய மூன்றடுக்குகளைக் கொண்டிருப்பதால், அதில் இரகசியமான சூக்குமம், காரண நிலைகைள அறிவதே அறிவு, என்பதனால் மனிதன் விரும்புகின்ற ‘இன்பத்தையே’ நம் சிந்தனைக்கு எடுத்துக் கொண்டு ‘இன்பம் துய்த்தலில்’ உள்ள சூக்குமத்தையும் காரணத்தையும் அறிவோம்.
இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்கின்றது வேதம். லட்டு சாப்பிடுகிறோம். லட்டிலுள்ள இனிப்பு இன்பத்தைத் தருகின்றது. அந்த இன்பம் எதில் இருக்கின்றது என்றால் புறப்பொருளான லட்டில் உள்ளது என்போம். ஆனால் வேதம், இன்பம் புறப்பொருளில் இல்லை என்பதால் லட்டு அருந்துவதால் வரும் இன்பம் லட்டில் இல்லை என்றாகின்றது. வேதாத்திரியமும் அவ்வாறே இன்பம் பற்றி வேதம் கூறும் உண்மையையே கூறுகின்றது. ஆனால் இன்பம் – துய்த்தல் நிகழ்ச்சியில் உள்ள சூக்குமம், காரண நிலைகளை விளக்கி இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்கின்ற உண்மையைக் கூறுகின்றது.
அதாவது லட்டு உண்பதில் எதனை இன்பமாக அறிவு உணர்கின்றது என்று வேதாத்திரியம்கூறுகின்றது?
லட்டு என்பது தூலமாக உள்ளது. அதில் கடலை மாவு, சர்க்கரை, நெய் ஆகியன உள்ளன. இந்த மூன்றும் அணுக்களால் ஆனது. அந்த அணுக்கள் இறைத்துகள்களைக் கொண்டது, அதிலிருந்து வருவது காந்தம். லட்டிலிருந்து வரும் காந்த அளவிற்கு, சீவகாந்தம் உயர்ந்து செலவாகி மாறி (conversion and consumption) இன்பமாக உணரப்படுகின்றது. இன்பத்தின் இந்த காரண நிலையை உணர்த்தி இன்பம் என்பதில் உள்ள உட்பொருளை விளக்குகின்றது வேதாத்திரியம்.
நாக்கு என்கின்ற புலனின் செல்கள் தாங்கும் அளவு வரை சீவகாந்தம் உயா்ந்தால் அது இன்பமாக இருக்கும். நாக்கு என்கின்ற புலனின் செல்கள் தாங்கும் அளவிற்கு மேல் சீவ காந்தம் உயர்ந்தால் அது துன்பமாக இருக்கும் என்கின்றது. எனவே இன்பமே துன்பமாக மாறுவதை அறிய முடிகின்றது. அதனால்தான் இன்பம் துய்ப்பதில் பொருந்தா உணர்வான சலிப்பு ஏற்படுகின்றது.
இந்த உண்மையைக் கண்டுபிடித்ததால் இன்பம் துய்ப்பதில்‘அளவும், முறையும்’என்கின்ற சாம்யம் கிடைத்தது மனித குலத்திற்கு. இது தத்துவமாக இல்லாமல், விஞ்ஞான அடிப்படையில் உள்ளது. எனவே ‘இன்பம் துய்த்தல்’ என்பதில் நம்முடைய சீவகாந்தத்தின் செலவே இன்பமாக உணரப்படுகின்றது. ஆகவே இன்பம் தருகின்றது என்பதால் இன்பத்தையே துய்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் நம்முடைய சீவ காந்தமேதான் செலவாகிக் கொண்டிருக்கின்றது. சீவகாந்தம் அதிகம் செலவானால் அதன் இருப்பு குறைந்து விடும். உணவு உண்பதால் சீவகாந்த இருப்பு குறைகின்றது என்பதால் உணவே உட்கொள்ளக்கூடாதா என கேள்வி எழலாம். உடலுக்கு வேண்டிய சத்துப் பொருள் உணவின் மூலம்தான் கிடைக்கின்றது. எனவே போதுமான சத்து கிடைக்கும் அளவிற்கு உணவு உண்டுதான் ஆக வேண்டும். அந்த உணவின் சுவையை உணர்வதற்காக சீவகாந்தம் செலவாவது தவிர்க்கமுடியாது. அதனால்தான் அளவும், முறையும் காக்கப்பட வேண்டும் என்கின்ற சாம்யம் இயற்கை/இறை தந்துள்ளது.
எனவே எந்த இயக்கத்திலும் புறமேன்மையை உணர்வதோடு மட்டுமல்லாது அதனுள்ளடங்கிய உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார். அதாவது இன்பம் துய்த்தல் என்கின்ற நிகழ்ச்சியில் புறமேன்மையான இன்பத்தை உணா்வதோடு, அதனுள்ளடங்கிய உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையினை அறிந்து கொண்டால்தான் இன்பம் துய்த்தலில் பொறுப்புணர்ச்சி ஏற்படும். அளவு, முறை என்கின்ற சாம்யம் பின்பற்றப்படும். இல்லாவிடில் திருவள்ளுவர் கூறுவது போல் பிறவி துன்பப்பிறவியாகிவிடும். இன்பம் துய்த்தலிலுள்ள சூக்கும, காரண நிலைகளை அறிந்ததால் பிறர்க்கு தெரிவிக்கும் கவியான “இன்பம் துன்பம்” என்கின்ற கவி உருவாயிற்று. அக்கவியினை நினைவு கூர்வோம்.
இன்பம் துன்பம்
இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்
எங்கிருந்து தோன்றுகின்ற தென ஆராய்ந்தேன்;
இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்
எங்கும் நிறைந்துள்ளது; அனு போகத்திற்கு
இன்பத்தின் அளவுமுறை மாறும்போது,
ஏற்படும்ஓர் பொருத்தமிலா உணர்ச்சியே தான்,
இன்பத்தின் மறுபெயராம் துன்பமாயும்,
இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்.
….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
லட்டு மட்டுமல்ல, ஐாங்கிரி, குலோப்ஜாம், மைசூர்பாக்கு, அதிரசம் போன்ற எந்த இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக் கொண்டாலும் புறத்தே பார்க்கும் போது அவைகள் வெவ்வேறாக உள்ளதாக தோன்றினாலும். அதற்கு காரணம் மட்டும் ஒன்றேதான். அதாவது அதில் உள்ள இனிப்பு மற்றும் சுவைக்கு காரணம், உண்பவரின் சீவகாந்தம் இனிப்பு பதார்த்தத்தில் இருந்து வரும் காந்த அலைகளின் அளவிற்கு உயர்ந்து, மாறி செலவாவதுதான்.
உப்புமா சாப்பிடுகிறோம். உப்புமாவில் காரச் சுவைக்காக பச்சைமிளகாய் சேர்க்கப்படுகின்றது. சாப்பிடும்போது பச்சை மிளகாயை கவனமாக அப்புறப்படுத்தி விட்டு உப்புமாவை மட்டும் உண்கிறோம். தெரியாமல் பச்சை மிளகாய் வாய்க்குள் சென்று விட்டால் நாவிற்கு எரிச்சல் என்கின்ற பொருந்தா உணர்வு ஏற்படுகின்றது. உடனே நீர் அருந்துகிறோம். குழந்தைகளாக இருந்தால் சிறிது சர்க்கரையைக் கொடுத்து அந்த துன்ப உணர்விலிருந்து விடுபடச்செய்கிறோம். இதற்குக் காரணம் என்ன?
உப்புமாவிற்கு காரச்சுவையை ஊட்டுவதற்கு போதுமான பச்சைமிளகாய் சேர்க்கப்படுகின்றது. பச்சைமிளகாயிலுள்ள காரச்சுவை (காந்தம்) உப்புமாவில் கலந்து போதுமான காரச்சுவையோடு உப்புமா இருக்கின்றது. அதனால் உப்புமாவை மட்டும் சாப்பிடும் போது உப்புமாவில் கலந்துள்ள காரச்சுவை நாவிற்கு பொருத்தமாக இருந்து எரிச்சல் எடுப்பதில்லை. ஆனால் காரச்சுவையின் மூலமான பச்சைமிளகாயை நேரிடையாக வாய்க்குள் சென்றதால் பச்சைமிளகாயிலுள்ள காரம் அளவிற்கு(காந்தம்) சீவகாந்தம் திடீரென உயர்ந்ததால், நாவிலுள்ள அணுஅடுக்குகள் தாங்கும் அளவிற்கு மேல் சென்றதால் எரிச்சல் என்கின்ற துன்ப உணர்வு உண்டாயிற்று.
வேதாத்திரிய மெய்ப்பொருள்-இறைஞான விளக்கம் தெளிவாகவும், சிறப்புடையதாகவும் அமைந்துள்ளது. இதுவரை சித்தர்கள் வெட்டவெளியே தெய்வம் என கூறியிருந்தாலும், வேதாத்திரிய மெய்ப்பொருள் விளக்கம் வெட்டவெளிக்கு உள்ளடங்கியத் திறன்களையும், தரங்களையும் கூறுகின்றது. மேன்மைக்கு காரணமான உள்ளடங்கியதைக் குறிக்கும் சொல் ‘உண்மை’ என்பதற்கிணங்க, மெய்ப்பொருளின் மேன்மைக்குக் காரணமான உள்ளடங்கிய திறன்களையும், தரங்களையும் கூறுவதால், மெய்ப்பொருள்-இறைஞானத்தை, மனவளக்கலைஞர்கள் அனுபவிக்க முடிகின்றது.
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது அறிஞரின்—இயற்கையின் விருப்ப – எண்ண-, வாழ்த்தாக உள்ளதால் அதனை நிறைவேற்றுவதில் தெளிந்த ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும்.
இந்த விருந்தை முடித்தவுடன், ஞானக்களஞ்சியம் (பகுதி இரண்டு) நூலினை எடுத்து, ‘மலர் வழியே விளங்கும் மறை பொருள் விளக்கம்-1982’ என்கின்ற 1649 வது பாடலை ஒரிருமுறை ரசித்துப்பாடி இன்புறவும். அறிவிற்கு சுத்தஅத்வைத விஞ்ஞானத் தெளிவு ஏற்படுவதற்கு நலம் பயக்கும்.
மலரில் எத்தனை அணுக்கள் இருக்கும் என்று சொல்ல முடியுமா? விஞ்ஞானத்தாலும் சொல்ல முடியாது. எனவே மலரில் பல கோடி அணுக்கள் இருப்பதாகக் கூறுகிறார். அந்த அணுக்கள் எல்லாம் மலராக ஆவதற்கு முன்னர் எங்கே இருந்தன? தனித்தனியாக தோற்றமில்லாமல் அந்தச் செடியில் இருந்திருக்கும். மலராகும் போது ஒழுங்காக(பண்பாய்க்கூடி) கூடி ஒரு நாடகத்தை நடத்தும் போது அவை மலராகக் காட்சி அளிக்கின்றன. அரூபமான இறையே அணுக்களாகி, பல கோடி அணுக்கள் பண்பாய்க் கூடி தோற்றம் அளிக்கின்ற நாடகத்தில் ஒரு கட்டம் மலருடைய தோற்றம்.
ரோஜா, மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, மரிக்கொழுந்துஎதுவானாலும் அவை புறத்தே வெவ்வாறகத் தோற்றமளித்தாலும், அவற்றிலிருந்து வரும் வாசம் வெவ்வேறாக இருந்தாலும்வாசம் நுகர்வதற்கு காரணமாக இருப்பது ஒரே நிகழ்ச்சிதான். அதாவது பூக்களிலிருந்து வரும் வாசமாகிய காந்த (அலைகளின்) அளவிற்கு நுகருபவரின் சீவகாந்தம் உயர்ந்து, மாறி, செலவாவதேதான் காரணம். அதிகமாக வாசத்தை நுகர்ந்தால் அதிகமான சீவகாந்தம் செலவாகும்.
அதே போன்றுதான் மனிதன் என்கின்ற நிகழ்ச்சியும். அணுவின் கூட்டுப்பக்குவமாக உருவத்தை எடுத்துப் பிறக்கிறான்(ஆன்மா). அணுக்கள் பிரிந்து உருவத்தை இழந்து விடுகின்றது ஆன்மா. அதாவது மறைகிறான். மனிதன் என்கின்ற பாத்திரம் முடிந்து விடுகின்றது. அவ்வளவுதான் வாழ்க்கை. மலர் மட்டும்நிகழ்ச்சி அல்ல. மனிதனும் நிகழ்ச்சிதான். இதில் தன்முனைப்பிற்கு எங்கே இடமிருக்கின்றது? புகழிற்கு எங்கே இடமிருக்கின்றது? ஆனால் உயர்புகழிற்கு இடமும் இருக்கின்றது. தேவையும் இருக்கின்றது. அதனை இனிவரும் அறிவிற்கு விருந்தில் விரிவாக பார்க்க உள்ளோம்.
உலக மக்கள் 740 கோடி உருவங்களாக புறத்தே வேறுபட்டிருந்தாலும் உருவத்தின்(தூலம்) சூக்குமம், காரணம் நிலைகளில் ஒன்றாகத்தான் உள்ளோம். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் உள்ள விஞ்ஞானம். இந்த மெய்யான விளக்கத்திற்காக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை நினைவு கூர்வோம்.
மெய் விளக்கம்
நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே
நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்.
ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில் எல்லை
உண்டாக்கி வரையறுத்து வேறுபடுகின்றோம்;
ஏனெங்கே, எப்போது, எவ்வளவு, எவ்வாறு
என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல
வானறிவோம் உயிர்விளங்கும் வரை கடந்து நிற்கும்
வழிதெரியும் வளம்பெறுவோம் வாழ்வு நிறைவாகும்.
— வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
இன்றைய விருந்தின் சுருக்கம்:
1) இன்பம் புறப்பொருளில் இல்லை என்கின்ற வேதத்தின் கூற்று உண்மை என அறியப்பட்டது.
2) இன்பத்தின் அடிப்படை உண்மை அறியப்பட்டது.
3) ‘அளவு, முறை’ என்கின்ற இன்பம் துய்த்தலின் சாம்யம் கிடைத்தது.
4) வேற்றுமையில் ஒற்றுமையில் உள்ள மெய்ஞான-விஞ்ஞானம் அறியப்பட்டது.
என்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருள் மொழியின்படி “அவனில்தான் நீ! உன்னில் அவன்! அவன்யார்? நீயார்? பிரிவேது? என்றாகிவிட்ட பிறகு, எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறையில் நடக்கின்ற எல்லாப்புகழ் தருகின்ற நிகழ்வுகளுக்கும்/நிகழ்ச்சிகளுக்கும் இறைதானே காரணமாக இருக்க முடியும். என்று சிந்தித்து வருகிறோம்.
இதுவரை
பேரானந்தத்தின் திறவுகோல்கள் எவை,
மகரிஷி அவர்கள் பேரானந்தத்தை எவ்வாறு நான்கு படிகளில் எய்தினார்,
வேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண், இயற்கையின் இரகசியம் எது என்றும்,
அதனை அறிய வேண்டிய அவசியத்தையும்,
திருவள்ளுவர் ஏன் எந்தப்பொருளானும். அதன் உண்மைப் பொருளை அறிய வேண்டும் என்று கூறுகிறார்,
என்று அறிந்து கொண்டோம்.
எந்த ஒரு பொருளானாலும், இயக்கமானாலும், தூலம், சூக்குமம், காரணம் ஆகிய மூன்றடுக்குகளைக் கொண்டிருப்பதால், அதில் இரகசியமான சூக்குமம், காரண நிலைகைள அறிவதே அறிவு, என்பதனால் மனிதன் விரும்புகின்ற ‘இன்பத்தையே’ நம் சிந்தனைக்கு எடுத்துக் கொண்டு ‘இன்பம் துய்த்தலில்’ உள்ள சூக்குமத்தையும் காரணத்தையும் அறிவோம்.
இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்கின்றது வேதம். லட்டு சாப்பிடுகிறோம். லட்டிலுள்ள இனிப்பு இன்பத்தைத் தருகின்றது. அந்த இன்பம் எதில் இருக்கின்றது என்றால் புறப்பொருளான லட்டில் உள்ளது என்போம். ஆனால் வேதம், இன்பம் புறப்பொருளில் இல்லை என்பதால் லட்டு அருந்துவதால் வரும் இன்பம் லட்டில் இல்லை என்றாகின்றது. வேதாத்திரியமும் அவ்வாறே இன்பம் பற்றி வேதம் கூறும் உண்மையையே கூறுகின்றது. ஆனால் இன்பம் – துய்த்தல் நிகழ்ச்சியில் உள்ள சூக்குமம், காரண நிலைகளை விளக்கி இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்கின்ற உண்மையைக் கூறுகின்றது.
அதாவது லட்டு உண்பதில் எதனை இன்பமாக அறிவு உணர்கின்றது என்று வேதாத்திரியம்கூறுகின்றது?
லட்டு என்பது தூலமாக உள்ளது. அதில் கடலை மாவு, சர்க்கரை, நெய் ஆகியன உள்ளன. இந்த மூன்றும் அணுக்களால் ஆனது. அந்த அணுக்கள் இறைத்துகள்களைக் கொண்டது, அதிலிருந்து வருவது காந்தம். லட்டிலிருந்து வரும் காந்த அளவிற்கு, சீவகாந்தம் உயர்ந்து செலவாகி மாறி (conversion and consumption) இன்பமாக உணரப்படுகின்றது. இன்பத்தின் இந்த காரண நிலையை உணர்த்தி இன்பம் என்பதில் உள்ள உட்பொருளை விளக்குகின்றது வேதாத்திரியம்.
நாக்கு என்கின்ற புலனின் செல்கள் தாங்கும் அளவு வரை சீவகாந்தம் உயா்ந்தால் அது இன்பமாக இருக்கும். நாக்கு என்கின்ற புலனின் செல்கள் தாங்கும் அளவிற்கு மேல் சீவ காந்தம் உயர்ந்தால் அது துன்பமாக இருக்கும் என்கின்றது. எனவே இன்பமே துன்பமாக மாறுவதை அறிய முடிகின்றது. அதனால்தான் இன்பம் துய்ப்பதில் பொருந்தா உணர்வான சலிப்பு ஏற்படுகின்றது.
இந்த உண்மையைக் கண்டுபிடித்ததால் இன்பம் துய்ப்பதில்‘அளவும், முறையும்’என்கின்ற சாம்யம் கிடைத்தது மனித குலத்திற்கு. இது தத்துவமாக இல்லாமல், விஞ்ஞான அடிப்படையில் உள்ளது. எனவே ‘இன்பம் துய்த்தல்’ என்பதில் நம்முடைய சீவகாந்தத்தின் செலவே இன்பமாக உணரப்படுகின்றது. ஆகவே இன்பம் தருகின்றது என்பதால் இன்பத்தையே துய்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் நம்முடைய சீவ காந்தமேதான் செலவாகிக் கொண்டிருக்கின்றது. சீவகாந்தம் அதிகம் செலவானால் அதன் இருப்பு குறைந்து விடும். உணவு உண்பதால் சீவகாந்த இருப்பு குறைகின்றது என்பதால் உணவே உட்கொள்ளக்கூடாதா என கேள்வி எழலாம். உடலுக்கு வேண்டிய சத்துப் பொருள் உணவின் மூலம்தான் கிடைக்கின்றது. எனவே போதுமான சத்து கிடைக்கும் அளவிற்கு உணவு உண்டுதான் ஆக வேண்டும். அந்த உணவின் சுவையை உணர்வதற்காக சீவகாந்தம் செலவாவது தவிர்க்கமுடியாது. அதனால்தான் அளவும், முறையும் காக்கப்பட வேண்டும் என்கின்ற சாம்யம் இயற்கை/இறை தந்துள்ளது.
எனவே எந்த இயக்கத்திலும் புறமேன்மையை உணர்வதோடு மட்டுமல்லாது அதனுள்ளடங்கிய உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார். அதாவது இன்பம் துய்த்தல் என்கின்ற நிகழ்ச்சியில் புறமேன்மையான இன்பத்தை உணா்வதோடு, அதனுள்ளடங்கிய உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையினை அறிந்து கொண்டால்தான் இன்பம் துய்த்தலில் பொறுப்புணர்ச்சி ஏற்படும். அளவு, முறை என்கின்ற சாம்யம் பின்பற்றப்படும். இல்லாவிடில் திருவள்ளுவர் கூறுவது போல் பிறவி துன்பப்பிறவியாகிவிடும். இன்பம் துய்த்தலிலுள்ள சூக்கும, காரண நிலைகளை அறிந்ததால் பிறர்க்கு தெரிவிக்கும் கவியான “இன்பம் துன்பம்” என்கின்ற கவி உருவாயிற்று. அக்கவியினை நினைவு கூர்வோம்.
இன்பம் துன்பம்
இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்
எங்கிருந்து தோன்றுகின்ற தென ஆராய்ந்தேன்;
இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்
எங்கும் நிறைந்துள்ளது; அனு போகத்திற்கு
இன்பத்தின் அளவுமுறை மாறும்போது,
ஏற்படும்ஓர் பொருத்தமிலா உணர்ச்சியே தான்,
இன்பத்தின் மறுபெயராம் துன்பமாயும்,
இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்.
….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
லட்டு மட்டுமல்ல, ஐாங்கிரி, குலோப்ஜாம், மைசூர்பாக்கு, அதிரசம் போன்ற எந்த இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக் கொண்டாலும் புறத்தே பார்க்கும் போது அவைகள் வெவ்வேறாக உள்ளதாக தோன்றினாலும். அதற்கு காரணம் மட்டும் ஒன்றேதான். அதாவது அதில் உள்ள இனிப்பு மற்றும் சுவைக்கு காரணம், உண்பவரின் சீவகாந்தம் இனிப்பு பதார்த்தத்தில் இருந்து வரும் காந்த அலைகளின் அளவிற்கு உயர்ந்து, மாறி செலவாவதுதான்.
உப்புமா சாப்பிடுகிறோம். உப்புமாவில் காரச் சுவைக்காக பச்சைமிளகாய் சேர்க்கப்படுகின்றது. சாப்பிடும்போது பச்சை மிளகாயை கவனமாக அப்புறப்படுத்தி விட்டு உப்புமாவை மட்டும் உண்கிறோம். தெரியாமல் பச்சை மிளகாய் வாய்க்குள் சென்று விட்டால் நாவிற்கு எரிச்சல்என்கின்ற பொருந்தா உணர்வு ஏற்படுகின்றது. உடனே நீர் அருந்துகிறோம். குழந்தைகளாக இருந்தால் சிறிது சர்க்கரையைக் கொடுத்து அந்த துன்ப உணர்விலிருந்து விடுபடச்செய்கிறோம். இதற்குக் காரணம் என்ன?
உப்புமாவிற்கு காரச்சுவையை ஊட்டுவதற்கு போதுமான பச்சைமிளகாய் சேர்க்கப்படுகின்றது. பச்சைமிளகாயிலுள்ள காரச்சுவை (காந்தம்) உப்புமாவில் கலந்து போதுமான காரச்சுவையோடு உப்புமா இருக்கின்றது. அதனால் உப்புமாவை மட்டும் சாப்பிடும் போது உப்புமாவில் கலந்துள்ள காரச்சுவை நாவிற்கு பொருத்தமாக இருந்து எரிச்சல் எடுப்பதில்லை. ஆனால் காரச்சுவையின் மூலமான பச்சைமிளகாயை நேரிடையாக வாய்க்குள் சென்றதால் பச்சைமிளகாயிலுள்ள காரம் அளவிற்கு(காந்தம்) சீவகாந்தம் திடீரென உயர்ந்ததால், நாவிலுள்ள அணுஅடுக்குகள் தாங்கும் அளவிற்கு மேல் சென்றதால் எரிச்சல் என்கின்ற துன்ப உணர்வு உண்டாயிற்று.
வேதாத்திரிய மெய்ப்பொருள்-இறைஞான விளக்கம் தெளிவாகவும், சிறப்புடையதாகவும் அமைந்துள்ளது. இதுவரை சித்தர்கள் வெட்டவெளியே தெய்வம் என கூறியிருந்தாலும், வேதாத்திரிய மெய்ப்பொருள் விளக்கம் வெட்டவெளிக்கு உள்ளடங்கியத் திறன்களையும், தரங்களையும் கூறுகின்றது. மேன்மைக்கு காரணமான உள்ளடங்கியதைக் குறிக்கும் சொல் ‘உண்மை’ என்பதற்கிணங்க, மெய்ப்பொருளின் மேன்மைக்குக் காரணமான உள்ளடங்கிய திறன்களையும், தரங்களையும் கூறுவதால், மெய்ப்பொருள்-இறைஞானத்தை, மனவளக்கலைஞர்கள் அனுபவிக்க முடிகின்றது.
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது அறிஞரின்—இயற்கையின் விருப்ப – எண்ண-, வாழ்த்தாக உள்ளதால் அதனை நிறைவேற்றுவதில் தெளிந்த ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும்.
இந்த விருந்தை முடித்தவுடன், ஞானக்களஞ்சியம் (பகுதி இரண்டு) நூலினை எடுத்து, ‘மலர் வழியே விளங்கும் மறை பொருள் விளக்கம்-1982’ என்கின்ற 1649 வது பாடலை ஒரிருமுறை ரசித்துப்பாடி இன்புறவும். அறிவிற்கு சுத்தஅத்வைத விஞ்ஞானத் தெளிவு ஏற்படுவதற்கு நலம் பயக்கும்.
மலரில் எத்தனை அணுக்கள் இருக்கும் என்று சொல்ல முடியுமா? விஞ்ஞானத்தாலும் சொல்ல முடியாது. எனவே மலரில் பல கோடி அணுக்கள் இருப்பதாகக் கூறுகிறார். அந்த அணுக்கள் எல்லாம் மலராக ஆவதற்கு முன்னர் எங்கே இருந்தன? தனித்தனியாக தோற்றமில்லாமல் அந்தச் செடியில் இருந்திருக்கும். மலராகும் போது ஒழுங்காக(பண்பாய்க்கூடி) கூடி ஒரு நாடகத்தை நடத்தும் போது அவை மலராகக் காட்சி அளிக்கின்றன. அரூபமான இறையே அணுக்களாகி, பல கோடி அணுக்கள் பண்பாய்க் கூடி தோற்றம் அளிக்கின்ற நாடகத்தில் ஒரு கட்டம் மலருடைய தோற்றம்.
ரோஜா, மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, மரிக்கொழுந்துஎதுவானாலும் அவை புறத்தே வெவ்வாறகத் தோற்றமளித்தாலும், அவற்றிலிருந்து வரும் வாசம் வெவ்வேறாக இருந்தாலும்வாசம் நுகர்வதற்கு காரணமாக இருப்பது ஒரே நிகழ்ச்சிதான். அதாவது பூக்களிலிருந்து வரும் வாசமாகிய காந்த (அலைகளின்) அளவிற்கு நுகருபவரின் சீவகாந்தம் உயர்ந்து, மாறி, செலவாவதேதான் காரணம். அதிகமாக வாசத்தை நுகர்ந்தால் அதிகமான சீவகாந்தம் செலவாகும்.
அதே போன்றுதான் மனிதன் என்கின்ற நிகழ்ச்சியும். அணுவின் கூட்டுப்பக்குவமாக உருவத்தை எடுத்துப் பிறக்கிறான்(ஆன்மா). அணுக்கள் பிரிந்து உருவத்தை இழந்து விடுகின்றது ஆன்மா. அதாவது மறைகிறான். மனிதன் என்கின்ற பாத்திரம் முடிந்து விடுகின்றது. அவ்வளவுதான் வாழ்க்கை. மலர் மட்டும்நிகழ்ச்சி அல்ல. மனிதனும் நிகழ்ச்சிதான். இதில் தன்முனைப்பிற்கு எங்கே இடமிருக்கின்றது? புகழிற்கு எங்கே இடமிருக்கின்றது? ஆனால் உயர்புகழிற்கு இடமும் இருக்கின்றது. தேவையும் இருக்கின்றது. அதனை இனிவரும் அறிவிற்கு விருந்தில் விரிவாக பார்க்க உள்ளோம்.
உலக மக்கள் 720 கோடி உருவங்களாக புறத்தே வேறுபட்டிருந்தாலும் உருவத்தின்(தூலம்) சூக்குமம், காரணம் நிலைகளில் ஒன்றாகத்தான் உள்ளோம். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் உள்ள விஞ்ஞானம். இந்த மெய்யான விளக்கத்திற்காக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை நினைவு கூர்வோம்.
மெய் விளக்கம்
நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே
நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்.
ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில் எல்லை
உண்டாக்கி வரையறுத்து வேறுபடுகின்றோம்;
ஏனெங்கே, எப்போது, எவ்வளவு, எவ்வாறு
என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல
வானறிவோம் உயிர்விளங்கும் வரை கடந்து நிற்கும்
வழிதெரியும் வளம்பெறுவோம் வாழ்வு நிறைவாகும்.
— வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
இன்றைய விருந்தின் சுருக்கம்:
1) இன்பம் புறப்பொருளில் இல்லை என்கின்ற வேதத்தின் கூற்று உண்மை என அறியப்பட்டது.
2) இன்பத்தின் அடிப்படை உண்மை அறியப்பட்டது.
3) ‘அளவு, முறை’ என்கின்ற இன்பம் துய்த்தலின் சாம்யம் கிடைத்தது.
4) வேற்றுமையில் ஒற்றுமையில் உள்ள மெய்ஞான-விஞ்ஞானம் அறியப்பட்டது.
அடுத்த விருந்திற்காக 06-12-2015 ஞாயிறன்னு கூடுவோம்.
அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியவர்கள் அனைவரையும் குருபூர்ணிமா கொண்டாடும் இந்த தினத்தில் நினைவு கூர்வோம்.
வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமாவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழா வியாசமுனிவரை நினைவுகூர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விழாவாகும்.வியாச முனிவர் நான்கு வேதங்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். பதினெட்டு புராணங்களை வழங்கியுள்ளார். மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத்பாகவதம் அருளியுள்ளார். வியாசமுனிவரை நினைவு கூறும் இவ்வேளையில் ஆன்மீக சாதகர்கள் அவரவர்களுடைய நேரிடை குருவினையும் நினைவு கூர்தல் நலம் பயக்கும்.
எனவே இத்தருணத்தில் நமது குருவாகிய அருட்தந்தை அவர்களை நினைவு கூர்வோம். அப்படியென்றால் மற்ற நாட்களில் நமது குருவை மறந்து விட்டிருக்கிறோம் என்று பொருளல்ல.என்றைக்கு அவருடைய உயிராற்றல் நம்முடன் கலப்புற்றதோ அன்றைய தினத்திலிருந்து அவருடன் நாம் இணைந்தேதான் உள்ளோம்.
எப்படியெனில் அருட்தந்தை அவர்கள் நமக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்து, அதற்கான பொருளையும், நமக்கு அறிமுகப்படுத்தி விட்டார். மூச்சு விடுவதுபோல் சிந்திப்பதும் நமக்கு சகஜமாகிவிட்டதால் சிந்திக்கும் போதெல்லாம் நம்முடைய குருவின் அறிவாற்றலுடன் தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது, சிந்திப்பதற்கு அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த பொருளுடனும்(மெய்ப்பொருளுடனும்) தொடர்பு கொண்டு இணைந்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் மூச்சு விடுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது போல், சகஜ நிஷ்டை போல் எப்போதுமே சிந்தனையோடு இருப்பதால் எப்போதுமே குருவின் நினைவோடும் அதே நேரத்தில் அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த சிந்தனைக்குரிய பொருளுடனே(மெய்ப்பொருள்) இணைந்தேதான் வாழ்கிறோம்.
குருவோடு தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது அவரையும்(எப்பொருளை), அவரது செயலையும்(எச்செயலை), அவரது குணத்தையும்(எக்குணத்தை) அவரது உயிரையும்(எவ்வுயிரை) எப்போதும் (அடிக்கடி) நினைந்து கொண்டேதான் இருக்கிறோம். விளைவு இயல்பூக்க நியதிப்படி நம்முடைய அறிவினிலும் உடலினும் மாற்றங்கள் ஏற்பட்டு நம்முடைய மனிதப் பண்பேற்றம் நடை பெற்றுக் கொண்டு வருவதை நாம் உணர்ந்து கொண்டு வருவதில் ஆனந்தம் அடைகிறோம்.பிறவிப்பயனாகிய லட்சியம் நிறை வேற அந்த லட்சிய நாளுக்கு ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
அவரது செயலாலும் குணத்தாலும் அடைந்த உயர் புகழையும் நாம் மேலும் மேலும் நினைக்கிறோம். அறிந்து மகிழ்கிறோம். அவருடைய சூக்கும உடலுக்கு உளம் கனிந்த நன்றியினையும் அவரது அறிவாற்றலை சிரம் தாழ்த்தி வணங்கி போற்றுகிறோம். பாராட்டுகிறோம்.
அருட்தந்தை அவர்கள் அருளுவதாவது: “ வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளேயே பேராற்றல் புதையல் கண்டோர் தக்கவழி அருட்குருவின் தாள் பணிந்து தவம் பயின்று தனை உணர்தல்’ என்றும் “எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும் தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத் தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்”என்றும் அருள்கூர்ந்து தெரிவிக்கிறார் நமக்கு.
அருள் துறையில் நுழைவதற்கே ஆர்வமில்லாமலும் வாய்ப்பில்லாமலும் இருக்கும் இச்சமுதாயத்தில், நாம் விரும்பி வாய்ப்புக் கிடைத்து, அருட்தந்தையின் சீடர்களாக வந்துள்ள நமக்கு, பயிற்சியின் வெற்றி தள்ளிப்போகும் போது நம்பிக்கை இழந்து பயிற்சியில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நம்பிக்கை ஊட்டும் வகையில் அருட்தந்தை அவர்கள் மேலும் அருளுவதாவது “பலஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்”என்கிறார்.
இந்த தெய்வீக வரிகள் வாயிலாக நமக்கு உற்சாகத்தையும் உறுதியையும் அளிக்கின்றார். அதற்கு வழி கருமையத்தூய்மையாகும் என்கிறார். அதற்கு தவமும் அறமும் தேவை என்கிறார். மேலும் இறையுணர் பாதையிலே என்றும் விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி என்கிறார்.
மேலும் “உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது”என்கின்ற அவரது கருணை மொழி ‘பயணம் முடியாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றதே, எப்போது வரும் அந்தநாள்’ என்கின்ற தீரா ஆன்மீக தாகத்திற்கு தெய்வீக நீரை அளிப்பது போல் உள்ளது.மேலும் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது.
மேலும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. தரம் உயர்த்துவது என்பது:– விலங்கினத்திலிருந்து சடுதிமாற்றமாக வந்த ஆதிமனிதனின் கருத்தொடர்தான் இன்றுள்ள நாமும். எனவே நாம் நம்மிடம் உள்ள விலங்கினப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்து பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்தி மனதை புண்ணாக்கிக் கொள்ளாமல் எப்போதும் விழிப்பிலே இருந்து கொண்டு மனிதப் பண்பான அன்பும் கருணையும் வழிந்தோடும் அன்பிற்கும், கருணைக்கும் பாத்திரமாக திகழ்ந்து அறிவுத் தொண்டு செய்து வருவதாகும். “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”என்று அருளிய தெய்வத்தாய் அவ்வையை மதித்து தந்தைகளுக்கெல்லாம் தந்தையாக விளங்கும் நம்முடைய அறிவுக் கண்களையெல்லாம், திறந்து அறிவொளி வீசச் செய்துள்ள அருட்தந்தை அவர்களின் சொற்களையெல்லாம் மந்திரங்களாகக் கொண்டு எப்போதும் நினைந்து மதித்து நடந்து இப்பிறவியிலேயே பிறவிப்பயனை எய்துவோம். நம்முடன் வாழும் சக மனிதர்களையும் உய்விக்க அறிவுத் தொண்டாற்றி மகிழ்ந்து குருவின் சூக்கும சரீரத்திற்கு நன்றியினை செலுத்திப் பூரிப்படைவோம். அவரது கனவான ஓர் உலக ஆட்சியும் உலக அமைதியும் விரைவில் நிஜமாக, அழுத்தமான எண்ண அலைகளை அழுத்தமாக பரப்புவோம். இதுவல்லவோ பிறவிப்பயன். மனிதப்பிறவியின் பயனில் இரண்டு அங்கங்கள் உள்ளன.ஒன்று மனிதப் பிறவி எடுத்த நோக்கத்தையும் நிறை வேற்றிக் கொள்ள வேண்டும். மற்றொன்று மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறிய பிறகு நோக்கம் நிறைவேறிய பிறவி சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அறிவுத்தொண்டாற்றுவது.
இங்குதான் பிறவியின் நோக்கமும் நிறைவேறுகின்றது.
நோக்கம் அறிந்த பிறவியும் சமுதாயத்திற்கும் பயனாகின்றது.
ஆலயத்தில் ஆன்மா லயமாக வேண்டும் என்று சென்ற விருந்தில் அறிந்து கொண்டோம். அப்படியானால் ஆன்மா எதனுடன் லயமாக வேண்டும் என்று இப்போது தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதற்கு உயிர், ஆன்மா, மனம், அறிவு ஆகியவைகளைப்பற்றியும் சிறிதளவிலாவது புரிந்து கொள்ளுதல் அவசியமாகின்றது மனவளக்கலைஞர்கள் அல்லாத பிற அன்பர்களில் சிலருக்கு. அப்போதுதான் இன்றையச் சிந்தனையான அறிவுத் திருக்கோயில் பற்றி தெரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.
உயிர் என்பது ஆற்றல்.
எனவே உயிர் கண்களுக்குப் புலப்படாது.
ஆனால் அகத்தவப் பயிற்சியாளர்கள் தங்களது அறிவால் உயிரை உணர்ந்துள்ளனர்.
உயிரை உணரமுடியுமே தவிர அதனை கண்களால் பார்க்க முடியாது.
அதனை ஆன்மா என்றும் சொல்வது உண்டு. உயிரினம் என்பதற்கு சாட்சியே உணர்வு.
உணர்வதற்கு வேண்டியது அறிவு.
அறிவு இல்லாமல் உணரமுடியாது.
ஆகவே அறிவு என்பது உணர்வதற்குக் காரணமானது. அறிவு எங்கிருக்கின்றது?
உயிர் இருக்கும் வரைதான் உணர்வு உண்டு என்பதால்,
உயிர் உடலைவிட்டு வெளியேறிவிட்டால் உணர்வு இல்லை.
ஆகவே உயிர் வெளியேறும் போதுஉடலைஆண்டுகொண்டிருந்த அறிவும் வெளியேறிவிடுகின்றது.
இந்த நிகழ்விலிருந்து அறிவு உயிரிலேயே இருக்கின்றது என்கின்ற முடிவுக்கு வரலாம்.
அறிவுதான் உணர்கின்றது என்றாலும் அது நேரிடையாக உணர்வதில்லை. இயற்கையாகிய அறிவு, மனம் என்கின்ற self made mechanism – த்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக உணர்கின்ற செயலை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆகவே உயிர் உடலுக்குள் இருந்து கொண்டு தனது காந்த அலை ஆற்றலை(magnetic wave-energy) புலன்கள் வழியாக வெளியிலிருக்கும் புறப்பொருட்கள் மீது செலுத்தி(படர்க்கை எய்தி— extended activity) உணர்கின்ற நிகழ்வுதான் மனம் எனப்படுகின்றது. அதாவது உயிரின் படர்க்கை நிலைதான் மனம்.
மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் வருகின்றன. மனதில் பல எண்ணங்கள் தொடர்ந்து வரும் போது மனம் அலைகின்றது என்கிறோம். ஆகவே ஆன்மா லயமாக வேண்டுமென்றால், ஒன்றுபட வேண்டுமென்றால், அலைகின்ற மனம் அது பிறக்கும் இடமாகிய உயிரில் ஒன்றுபடவேண்டும்.
ஆகவே ஆலயத்தில் ஆன்மா லயம் ஆகவேண்டுமென்றால் வெளியே செல்லும் மனதை உள்முகமாகத் திருப்பிச் செலுத்துதல் வேண்டும். அதற்காகத்தான் ஆலயத்தில் சில பக்தர்கள் கடவுள் சிலையைப் பார்த்து வணங்கிவிட்டு சிறிது நேரம் கண்களை மூடி, புலன்கள் வழியாக வெளியே சென்று கொண்டிருந்த மனதை திருப்பி, உள்ளே செலுத்தி அந்த சிலையை மனதில் இருத்தி தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில ஆலயங்களில் தியான அறைகளும் இப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஆலயத்தில் சிலைவணக்கம் செய்யப்பட்டாலும், அங்கும் அறிவுதான் வணங்கப்படுகின்றது. இங்கு, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் கவியினை உற்று நோக்குவோம்.
சிலை வடிவத்தில் கடவுளை வணங்கினாலும் அறிவைத் தான் வணங்குகின்றனர் என்கிறார் மகரிஷி அவர்கள். சிலையைக் கண்கள் பார்க்கும் போது அறிவு தான் சிலையின் வடிவம் எடுக்கின்றது. சிலை வடிவத்தை வணங்குகிறோம் என்றால் சிலை வடிவம் எடுத்த நம் அறிவைத்தான் வணங்குகிறோம் என்கிறார். யார் எந்த வடிவில் தெய்வத்தை வணங்கினாலும் அவர்கள் வணங்குவது அவர்களுடைய அறிவைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் மகரிஷி அவர்கள். அறிவே தெய்வமாக உள்ளதால் எல்லோரும் ஒரு தெய்வத்தையே வணங்குகிறார்கள் என்கிறார். “ஒன்றே குலம். ஒருவனே தேவன்”என்கின்ற திருமூலர்வாக்கு எப்படி சரி என அறிந்து கொள்ள முடிகின்றது.
சிலை வணக்கம் பக்தி மார்க்கம் எனப்படுகின்றது. அகவழிபாடு ஞானமார்க்கம் எனப்படுகின்றது. எந்த மார்க்கமாக இருந்தாலும் அறம் தழைக்க வேண்டும் இந்த சமுதாயத்தில்.
இயற்கை மனிதனுக்கு இரு கண்களை கொடுத்துள்ளதுபோல், மனிதன் வாழ்விற்கான இருநெறிகளை அறம் தழைக்க ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒன்று அன்பு, மற்றொன்று கருணையுமாகும்.
1) அனைவரிடத்திலும் உள்ள ஆத்மா ஒன்றிலிருந்து உருவான ஒன்றே என உணர்ந்து, பிறர்க்கு துன்பம் நேர்ந்துவிடக் கூடாது எனும் அளவிற்கு அன்பு மலரவேண்டும்.
2) அந்த அன்பு மலர்ந்த நிலையில் பிறர் படும் துயரைத் தன்துயராக எண்ணி அத்துயரில் இருந்து அவர் விடுபட்டு நலமடைய உதவி புரியுமளவிற்கு மனம் கனிந்து கருணை வெளிப்படவேண்டும்.
இந்த இரண்டு நெறிகளைவளரச் செய்வதும் நிலைக்கச் செய்வதும்ஒவ்வொருவரின் முயற்சியாகஇருக்க வேண்டும்.முயற்சிக்கு பயிற்சி அவசியம். அந்தப் புனிதப் பயிற்சியினை அளிக்க, இயற்கையின் ஏற்படுத்தியதுதான் கருத்தியலும், செய்முறையும் ஒருங்கே இணைந்துள்ள, அறிவுத்திருக்கோயிலில் கற்றுத் தரப்படும் மனவளக்கலையாகும்.
மனித மனம் பண்பட வேண்டும், மனித மனம் பண்படுவதற்கான கல்விதான். அறிவுத்திருக்கோயில்களில் கற்றுத்தரப்படுகின்றது. இறை அருள் வேண்டுகிற மனிதன், இறையே அவனின் அறிவாகவே இருந்தும், அதனை பயன்படுத்தாமல் போனால் என்னென்று சொல்வது? வாழ்க்கை, துன்பம் நிறைந்ததாகத் தான் இருக்கும். இறையாகிய அறிவைப் பயன்படுத்துவதற்கு, அறிவு புலன்களுக்கு அடிமையாகாமல் இருந்துஆட்சி செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வம் ஆட்சி செய்ய வேண்டும். அப்போதுதான் மனிதகுலத்தின் அறிவாட்சித்தரம் உயரும்.
நாகரீகம் என்பது உடை உடுத்துவதாலேயே வந்திடாது. நாகரீகம் என்பது வாழும்முறை, பண்பாடு ஆகியவைகளைப் பொருத்தது. மனிதவாழ்வின் பண்பாட்டின் உச்சமே நாகரீகம். நாக்கு, உள்ளம், மனம் ஆகிய மூன்று சொற்களை இணைத்து வந்த தொடர் சொல் — நா+அக(உள்ளம்)+இரிகம்(மனம்)=நாகரீகம். உள்மனம், புறமனம், பேச்சு ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று முரண்படாமல் இயக்கி வாழும் உயர்ந்த பண்பாட்டை நாகரீகம் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே எந்த அளவிற்கு அறிவாட்சித்தரம் உயா்ந்து வந்துள்ளதோ அந்த அளவிற்கு நாகரீகம் வளா்ந்து உயர்ந்துள்ளது எனலாம். அதனை நிறைவேற்றவே இயற்கை/இறை விரும்பி, ஏற்படுத்தி வருவதுதான் அறிவுத்திருக்கோயில்கள். அறிவுத்திருக்கோயில்களின் மகத்துவத்தையும், புனிதத்தையும் ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொண்டு அறிவுத்திருக்கோயில்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆதிமனிதனிலிருந்து தொடங்கிய மனிதகுல வரலாற்றில், மனித மனம் மேன்மை அடைந்து வருகின்றது. அவ்வாறு மனித மனம் மேன்மை அடைந்து வரும் சரித்திரத்தில், அறிவுத்திருக்கோயில்களின் தோற்றம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்கிறார் உலகின் முதல் அறிவின்-அறிவியலாளராகியதால்,உலகில் முதன்முதலில் அறிவுத்திருக்கோயில் நிறுவிய வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
மற்ற கோயில்கள் அந்தந்த மதத்தினருக்கென்று உருவாக்கப்பட்டன. ஆனால் அறிவுத்திருக்கோயில்களோ எல்லோருக்கும் பொதுவானது. எவ்வாறு பொதுவானது என்று பார்ப்போம்.
இன்று உலக மக்கள் தொகை 720 கோடி என்கின்றனர். 720 கோடி உலக மக்களுக்கு எத்தனை கண்கள் என வினவினால் 1440(720×2=1440) கோடி கண்கள் என பதில் வரும். எத்தனை கைகள் என்றால் 1440 கோடி கைகள் என அதே பதில் வரும். ஆனால் 720 கோடி மக்களுக்கும் எத்தனை அறிவுகள் என்று கேட்கமுடியுமா? கேட்டால், 1440 கோடி அறிவுகள் என பதில் வருமா? எத்தனை அறிவுகள் என பன்மையில் கேட்க முடியுமா? முடியாது. ஏன் பன்மையில் கேட்க முடியாது? கண்கள், கைகள் போன்று அறிவிற்கு உருவம் கிடையாது. உருவம் இருந்தால் ஒன்றிற்கு மேல் எண்ணிக்கை வரும். அப்படியானால் உருவமற்ற அரூபமாகிய அறிவிற்கு ஒன்றிற்கு மேல் எண்ணிக்கை உண்டா? இல்லை. அப்படியானால் 720 கோடி மக்களுக்கும் இருக்கும் அறிவுஅரூபமான ஒரே அறிவுதான். 720 கோடி உலக மக்களுக்கு உள்ள கண்கள் வெவ்வேறானவை என்று கூறுவதுபோல் 720 கோடி மக்களுக்கும் வெவ்வேறான அறிவுகள் என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது! ஏனெனில் அறிவு அரூபமாக இருப்பதால் அவை அனைத்தும் ஒன்றேதான். அருவத்தில் எண்ணிக்கை கிடையாது.
அடுத்த விருந்தில்(28-06-2015 ஞாயிறு) எவ்வாறு 720 கோடி உலக மக்களின் அறிவும் ஒன்றே என்று மீண்டும் உறுபடுத்தியும், ஆகவே அறிவுத்திருக்கோயில்கள் உலக மக்கள் எம்மதத்தைச் சார்ந்திருந்தாலும், அனைவருக்கும் பொதுவானவை என்றும், தெய்வம் எவ்வாறு அறிவு என்றும், அதன் மூலம் ஒன்றே தெய்வம் என்றும் ஒன்றே குலம் என்றும் ,அறிவுத்திருக்கோயில்களின் பணி என்ன என்பதையும் அறிய இருக்கிறோம்.
எண்ணமே இயற்கையின் சிகரம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எவ்வாறு எண்ணம் இயற்கையின் சிகரமாகும்? இயற்கை வேறு, இறை வேறு அல்ல. இறையின் மறு விஞ்ஞானப் பெயர்தான் இயற்கை. எண்ணமே இயற்கையின் சிகரம் என்கின்ற போது எண்ணமே இறை என்றுதானே பொருள். எண்ணம் எவ்வாறு இயற்கையின் சிகரமாகும் என்கின்ற வினாவிற்கானப் பதிலைப் பார்ப்போம்.
இயற்கையின் ஆரம்ப நிலை எது? இயற்கையின் ஆரம்ப நிலை வெளி. அந்த வெளியைத்தான் இறைவெளி என்கின்றனர் மெய்ஞானிகள். இறைவெளியின் நான்கு தரங்களாவன: வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம். நான்கு தரங்களில் மூன்றாவதாக பேரறிவு இருந்தாலும் சுத்த அத்வைதிகள் அறிவே தெய்வம் என்கின்றனர். ஏன்? மீண்டும் வினா எழுந்துள்ளது.
இறைவெளி வற்றாயிருப்பாகவும், பேராற்றலாகவும், இருந்தாலும், பேரறிவு மட்டும் அதற்கு இல்லையானால் அது ஒன்றுமில்லாததாகத்தான் இருந்திருக்க வேண்டும். இறை வெளி தன்னிருக்கத்தால், துகள்களாகி பஞ்ச பூதங்களாகி பின்னர் பலகோடி நட்சத்திரங்களாகி அதில் நாம் வாழும் பூமியைக் கொண்ட ஒரு சூரியக் குடும்பமும் உருவாகியிருக்க முடியாது. அறிவு இல்லை என்றால் உயிரினங்களே தோன்றியிருக்க முடியாது? எனவே பிரதானமாக உள்ளது அறிவுதான்.
ஆயிரம் நபர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் அவர்களைக் கண்காணிக்க எத்தனை மேற்பார்வையாளர்கள் தேவையிருக்கின்றது?. அத்துனை மேற்பார்வையாளர்களுடைய அறிவுதானே கண்காணிக்கின்றது. அதுபோல் இத்துனைப் பெரிய பிரபஞ்சமாகி கோடானுகோடி உயிரினங்களாகி இறுதியில் மனித அறிவாக பரிணமிக்கின்றது என்றால் அதற்கு யார் காரணம்? இது மூன்றாவது வினாவாகிவிட்டது. பேரறிவு தான் காரணம் என்பது விடை.
அந்த பேரறிவுதான் இப்போது நீங்களுமாகி அடியேனுமாகி சிந்திக்கின்றது. ஆகவே அறிவே இயற்கையின் ஆதிநிலையில், இறைவெளியில் அறிவாக இருந்துள்ளது. எண்ணம் என்பது என்ன? எது எண்ணுகின்றது? அறிவின் பணிகள் என்னென்ன? எண்ணுவது, உணர்வது, ஒழுங்கு படுத்துவது ஆகியவைகளாகும். ஆகவே எண்ணக்கூடிய அறிவை, இயற்கை, கொண்டுள்ளதால் எண்ணம் என்பது இயற்கையின் சிகரமாகின்றது. மலையின் உச்சியைச் சிகரம் என்போம். சிகரம் என்கின்ற சொல்லிற்கு சிறப்பு, உன்னதம் என்றும் பொருளுண்டு. ஆகவே எண்ணமே இயற்கையின் சிகரம் என்பது சரியே என்கின்ற முடிவிற்கு வருகிறோம். .இறையும் இயற்கையும் ஒன்றே என்பதால் எண்ணம் இயற்கையின் சிகரமாக இருப்பது போன்று இறையின் சிகரமும் மனிதனிடம் உள்ள அறிவாகிய இறையேதான் எண்ணுகின்றது என்று பொருளாகின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மனிதன் ஏன் இறை அருள் பெறமுடியாமல் துன்பப்பட வேண்டியுள்ளது? மனிதன் எண்ணுகிறான் என்றால் அவனுள் இருக்கின்ற பின்னப்பட்ட(Fractioned) இறையே தான் எண்ணுகின்றது. பின்னர் என்ன குறைவு மனிதனுக்கு? சில சுத்த அத்வைதிகள் பொருள். மெய்ப்பொருள் என்றுப் பிரித்துக் கூறுவதுபோல். அறிவாகிய இறையையும் மனித அறிவையும் வித்தியாசப்படுத்துவதற்காக கலங்கமிலாப் பேரறிவை சுத்த அறிவு என்கின்றனர். அப்படியானால் மனித அறிவு அசுத்தமாகிவிட்டது என்று பொருளாகின்றது. அதாவது பின்னப்பட்ட சுத்த அறிவுடன் கலங்கங்கள் சேர்ந்து விட்டன என்றாகின்றது. பேரறிவு கலங்கமில்லாதது. அது மனித அறிவாக வரும்போது அதனுடன் பரிணாமக் கசடுகளும் சோ்ந்து வந்துவிட்டன. இங்கே இறை அருளைப் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள வாசகம் இந்த இணைய தளத்தின் வாயில் பக்கத்தை(Homepage) அலங்கரித்து இருந்தாலும் அதனை மீண்டும் இங்கே நினைவு படுத்திக் கொள்வோம்.
”நல்ல பயனுள்ள அறச் செயல்களும், அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம் இயங்குகின்றனவோ, அவரைச் சுற்றிலும், நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும். அனுபவத்தைக் கண்டு இன்புறுவீர்களாக.” என்று இறைஅருள் பெறுவது பற்றி அருளியுள்ளார் ரிஷிகளில் பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள். வெட்டவெளியாகியப் பிரம்மத்தை வெளிச்சமாக்கி விட்டார் பிரம்ம ரிஷி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
அறச்செயல்கள் இருக்க வேண்டும். அறச் செயல்கள் நல்ல பயனுள்ளதாக இருக்க வேண்டும் என மிகக் கவனமாகக் கூறுகிறார் இக்காலப் பிரம்ம ரிஷி. அறம் என்றாலே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றையும் கொண்டதுதான் அறம் என்பது இக்காலப் பிரம்ம ரிஷியின் அறத்திற்கான வரையறை. அப்படி இருக்கும்போது அறம் என்பது நல்ல பயனுள்ளதைத்தானேக் கொடுக்கும்! இருப்பினும் நல்ல பயனுள்ள அறச்செயல்கள் இருக்க வேண்டும் என்கிறார் இக்காலப் பிரம்ம ரிஷி அவர்கள்.
இரண்டாவதாக அதற்கேற்ற எண்ணங்கள் இருக்க வேண்டும் என்கிறார் இக்காலப் பிரம்ம ரிஷி அவா்கள். எண்ணம்தான் எல்லா செயல்களுக்கும் வித்து. எனவே நல்லபயனுள்ள அறச்செயல்களும் அதற்கேற்ற எண்ணங்கள் எண்ணுபவரைச் சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் என்கிறார். அருட் பேராற்றல் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் ”லும்” என்று சேர்த்து அருட்பேராற்றலும் என்று கூறுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். இது இறை அருளில்லையா? இத்தகைய தன்மையுடைய அருளைத் தவிர வேறு என்ன இறைஅருள் வேண்டும் மனிதனுக்கு? என்னவெல்லாம் தருகின்றது இக்காலப் பிரம்ம ரிஷி கூறும் இறையருள்.
முதலில் காப்பளிக்கிறது நுண்ணலையாகிய அருட்பேராற்றல். தோன்றாத்துணையாகவும் இருக்கலாம் ஒரு சிலருக்கு. வேறு சிலருக்கு அது கேளா ஒலி போல் தோன்றியத் துணையாகவும் இருக்கலாம்.
அடுத்ததாக வெற்றியளிக்கிறது.
அடுத்ததாக மகிழ்ச்சியளிக்கின்றது.
அதற்கும் அடுத்ததாக நிறைவை அளிக்கின்றது.
அதற்கும் மேலாக இந்த அனுபவத்தால் இன்புறச் செய்கின்றது.
வேறு என்ன வேண்டும் இறை அருளினால்? மனிதப் பிறவியின் பயன் இறையுணர்வு பெருதலாயிற்றே. அதனை இந்த இறை அருள் தரவில்லையே என ஐயம் உள்ளதா? ஏன் இறையுணர்வைத் தரவில்லை இந்த இறை அருள்? இறையுணர்வு என்பது என்ன? இக்காலப் பிரம்ம ரிஷி அவர்கள் கூறும் இறையுணர்விற்கான வரையறையை நினைவில் கொண்டு வந்தால் இந்த ஐயம் தீர்ந்துவிடும்.
” அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி, அறம் காக்கும் தகமையே இறையுணர்வு” என்கிறாரே நம் பிரம்ம ரிஷி அவர்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறையருளில் அவர் கூறும் இறையுணர்வு கிடைக்க வில்லையா? நல்ல பயனுள்ள அறச்செயல்கள் என்றுதான் ஆரம்பித்திருக்கிறார்.
சரி. உலகியல் வாழ்க்கைக்கு என்ன தரும் இந்த இறையருள் என ஐயம் உள்ளதா? இந்த ஐந்தையும் வைத்து உலகியல் வாழ்க்கை நடத்த முடியாதா? செல்வம் அளிக்கவில்லையே இவர் கூறும் இறை அருள் என்று நினைக்கீறீர்களா! உலகியல் வாழ்க்கைக்கு வேண்டியதை இந்த இறை அருள் தரவில்லையே என நினைக்க வேண்டாம். காப்பு, வெற்றி, மகிழ்ச்சி, நிறைவு ஆகியவைகளெல்லாம் உலகியல் வாழ்க்கைக்குத் தேவைதானே. செல்வம் ஈட்ட வேண்டுமானால் உழைக்க வேண்டும். அங்கே இக்காலப் பிரம்ம ரிஷி கூறும் இறையருள் வெற்றியைத் தருவதால் நிறைசெல்வம் வந்துவிடுகின்றது. பிரம்ம ரிஷி அவர்கள் கூறுவது போல், உலகியல் வாழ்க்கையில் கடைசிவரை, ஓயாது, இன்னும் இன்னும் வேண்டும் என பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பத்தில் புகுந்தழுந்தி புண்ணாக்கிவிட்ட மனதிற்கு நிறைவைத் தந்து மனதை ஆற்றுமே நல்ல பயனுள்ளச் செயல்களும் அதற்கேற்ற எண்ணங்களுக்கான விளைவுகளும். ஆகவே இந்த விளைவு இறை அருள் கொடுத்ததில்லையா? நிறைமனமும் இறைமனமும் ஒன்றுதானே! நிறைமனமே இறைமனம்.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de