வாழ்க திருவேதாத்திரியம் ! வளர்க திருவேதாத்திரியம்!!
சிந்திக்க வினாக்கள் – 336
நாள்- 14-06-2024
உ.ச.ஆ.-14-06-39
பிரதான வினா(Main Question)
‘நான் யார்?’ எனும் வினாவிற்கு ‘உடல்’ விடை என்பது எவ்வாறு தவறானது?
துணை வினாக்கள் (Sub questions):
- வினா என்பது பிறரிடம் கேட்பது. ஆனால் ’நான் யார்?’ என்பது தன்னிடமே வினவுவது; விசித்திரமானதாக இல்லையா?
- மனிதனை புனிதனாக்கும் இவ்வினா ஆறாம் அறிவிற்கு வாழ்க்கையில் எப்போது எழும்? எல்லோருக்கும் இவ்வினா எழவில்லையே! ஏன்? எண்ணங்கள் செயல்படும் ஐந்துகோசங்களின் தலையீடு ஏதேனும் உள்ளதா?
- இவ்வினா எழவில்லையானால் மனிதனின் நிலை என்ன? மனிதன் புனிதனாக முடியாதா?
- இவ்வினா எழும் வரை மனிதன் புனிதனில்லையா? பின்னர் என்ன அவன்? எப்படி இவ்வினா மனிதனைபுனிதனாக்குகின்றது?
- தேர்வில் வினாவிற்கு தவறான விடை அளித்தால் அதற்கு பூச்சியம் மதிப்பெண் வழங்கப்படுகின்றது. இந்த சுயதேர்வில் இவ்வினாவிற்கு தவறான பதிலை சரி என நினைத்துக்கொண்டிருந்தால் நாம் பெறும் மதிப்பெண் என்ன? விளைவு என்ன?
- திருவள்ளுவருக்கு முன்னர் தோன்றிய கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் கி.மு. 500 நூற்றாண்டிலேயே இளைஞர்களிடம் என்ன கூறினார்?
- ஸ்ரீ ரமணரிடம் பக்தர்கள் தங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று வேண்டியதற்கு எப்படி ஆசிர்வாதம் அளித்தார்?
- ஸ்ரீ ரமணரின் ஆசிர்வாதம் எப்போது பலன் அளிக்க ஆரம்பித்தது?
- நான் யாா் என்கின்ற கேள்விக்கு சரியான விடையை அனுபவ பூர்வமாகப் பெறுதலின் பலன்கள் என்ன?(Click here)
- மனநிறைவிற்கும்(satisfaction in life), அறிவின் முழுமைப்பேற்றிற்கும் ’நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு கருத்தியலாக பெற்ற விடையை(theoretical answer) செயல்முறையில்(practical) உறுதிபடுத்துவதற்கும் என்ன தொடர்பு? என்ன உறவு?
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!