August 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 202

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    06-08-2016 — சனி

    தோல்வியில் இருவிதம். ஒன்று சிந்தித்தும் செயல் புரியாதவர்கள். மற்றொன்று சிந்திக்காமலே செயல்புரிபவர்கள்.

    . . . சான்றோர் வாக்கு

    பயிற்சி:–
    1) தோல்விக்கும் சிந்தனைக்கும் தொடர்புள்ளதா? எவ்வாறு தொடர்புள்ளது?
    2) தோல்வி அடையும்போதேல்லாம் சிந்திக்க வில்லைஎன்று பொருளா?
    3) சிந்தித்தும் செயல் புரியாமை பற்றியும், சிந்திக்காமலே செயல் புரிவது பற்றியும் என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
    நன்றி,
    வாழ்க வளமுடன்

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 201

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     

    05-08-2016 — வெள்ளி

    வாழ்க்கை எனும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றிவீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்குத் தேவை.

    . . . சுவாமி விவேகானந்தர்.

     .
    பயிற்சி—
    1) வாழ்க்கையை ஏன் போர்க்களத்தோடு ஒப்பிடுகிறார் சுவாமி விவேகானந்தர்?
    2) அஞ்சாது எதிர்த்து நிற்க வேண்டும் என்று சொல்வதன் மூலம் என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
    3) வேறு எந்த அருளாளர்கள் என்ன கூறுகின்றனர் இது பற்றி?

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-200

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    04-08-2016 – வியாழன்

    (அ) ஐந்தறிவு சீவ இனத்தின் அறிவிற்கு அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய குறைபாடுகள் உள்ளனவா?
    (ஆ) குறைபாடு இருந்தால் எவ்வாறு உள்ளது? என்ன நடக்கின்றது குறைபாட்டால்? குறைபாடுகள் இருந்தால், அதனை அவற்றால் சரிசெய்யமுடியுமா?
    (இ) குறைபாடுகள் இல்லாத பட்சத்தில், ஆறறிவாக தன்மாற்றம் அடைந்தபோது மட்டும் எப்படி குறைபாடுகள் வந்தன?
    குறிப்பு: எல்லா வினாக்களுக்கும் விடைகளை சிந்தித்து தொகுத்து விடைகளை எழுதிப் பார்க்கலாமே. வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading