November 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 230

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 230

    12-11-2016 — சனி

    “நிலையாமையைப் பற்றிச் சிந்தித்தால் தற்பெருமை அழிந்துவிடும்”

    . . . புத்தர்

    பயிற்சி—
    1) இக்கூற்றிலிருந்து முதலில் அறிய வேண்டியது தற்பெருமை கொள்ளக் கூடாது என்பது. ஏன் தற்பெருமை கொள்ளக் கூடாது?
    2) தற்பெருமை கொள்வது பழக்கமாகிவிட்டதால் என்ன செய்வது?
    3) தற்பெருமை கொள்வதால் என்ன தீமைகள் வரும்?
    4) தற்பெருமைக்கும் நிலையாமையை அறிவதற்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரீதியானதா?
    5) நிலையாமையை அறிவாதால் தற்பெருமை எவ்வாறு நீங்கும்? அதிலுள்ள அறிவியல் என்ன?
    6) இவ்வுண்மையைப்பற்றி மகரிஷி அவர்கள் கூறியுள்ளது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 229

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 229

    11-11-2016 — வெள்ளி

    பகுத்தறிவால் திட்டமிட்டுவதைக் காட்டிலும் தெய்வீகப் பார்வையால் திட்டங்களை வகுத்துக்கொள்வது சிறப்பாகும். ஏனென்றால் மனித முயற்சியைக் காட்டிலும் தெய்வீக சக்தி நம்மை விரைவில் கரை சேர்க்க வல்லாதாகும்.

    . . . அரவிந்தர்

    பயிற்சி—
    1) ‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று திருவள்ளுவர் கூறுவதற்கும் அரவிந்தர் கூறுவதற்கும் ஏதேனும் முரண்பாடுகள் உள்ளதுபோல் தெரிகின்றதா?
    2) அப்படியானால் இக்கூற்றிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-227

    வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-227

    10-11-2016 – வியாழன்

    தோற்றங்கள் தோன்றா முன்னர் இருந்தது அரூபம். அதற்கு மகரிஷி அவர்கள் கூறுகின்ற உவமானம் என்ன? தோற்றங்கள் தோன்றா முன்னர் இருந்தது அரூபம் என்பது கருத்தியலாக உறுதிபடுத்தப்பட்டுவிட்டதா? கருத்தியலாக அறிந்ததை செயல்முறையில் எவ்வாறு உறுதி படுத்துவது?

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

    Loading